​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 14 January 2023

சித்தன் அருள் - 1268 - அகத்தியர் ராஜ்ஜியத்தில் அவர் திருநட்சத்திர விழா!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் ராஜ்ஜியம் என்கிற பாலராமபுரத்தில், லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில் நம் குருநாதரின் திருநட்சத்திர நாள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. அனைத்தையும், செய்ததும், செய்வித்ததும், ஏற்றுக்கொண்டதும் அகத்தியப்பெருமான். இவ்வுலகின் பல இடங்களிலும் பூஜை நடக்க, அவர் அங்கெல்லாம் சென்று அனைத்தையும் பெற்றுக்கொண்டு அனைவரையும் ஆசிர்வதித்து சென்றார் என பின்னர் நாடியில் உரைத்த பொழுது, மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. பாலராமபுரத்தில் 09/01/2023 அன்று அவருக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் அவர் அடியவர்களால், வெள்ளி கவசம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கான மேடையும், நாடகமும் எப்படி அமைந்தது என புரிந்து கொள்ள உங்களை ஒரு வருடம் பின்னே அழைத்து செல்கிறேன்.

எல்லா வியாழக்கிழமையும் மாலை, பாலராமபுரம் சென்று தரிசித்து, லோபாமுத்திரை சமேத குருநாதரின் தரிசனத்தை பெற்று, அருளை பெற்று கொள்வது அடியேனுக்கு வழக்கம். அநேகமாக, எப்பொழுதும், அடுத்த வாரம் வியாழன் அன்று தான் மறுபடியும் அவரை காண செல்வேன். சனிக்கிழமை அன்று, மாலை வீட்டில் விளக்கேற்றி, அவரை தியானித்து இருக்கையில், திடீர் என்று ஒரு உத்தரவு தெளிவாக கேட்டது.

"அப்பனே! ரொம்ப மார்பில் குத்துகிறது! ஏதேனும் செய்யக் கூடாதா?" என்றார்!

என்ன இது, பொதுவாக பெருமாள் தானே (வெங்கடாசலபதி) இப்படி கூறுவார். அலமேலு மங்கை தாயாரை சுமக்கிற பெருமாளின் மார்பில், ஒரு முறை, தாயாரின் ஆடையில் ஒரு ஊசி தவறுதலாக இருந்துவிட, அதை பூஜாரியும் கவனிக்காமல் சார்த்திவிட, அவர் மார்பில் அந்த ஊசி குத்திக்கொண்டே இருக்க, அன்று இரவு அந்த உடையை தைத்து கொடுத்தவரின் கனவில் வந்து, "என் மார்பில் ஊசி குத்திக்கொண்டே இருக்கின்றது" என பெருமாளே வந்து கூற, அவர் உள்ளே தெரிவிக்க, தாயாரின் உடையில் ஊசி இருந்ததை கண்டு பிடித்தனர். பின்னர் பெருமாளுக்கு சில நாட்கள் மூலிகை சார்த்து நடந்தது. ஆனா, இப்ப யார் வந்து கூறுவது? என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த பொழுது,

"நீ இன்று வந்து பார், அவனிடம் கேள்" என்று கேட்டது. சடுதியில், இது நம் குருநாதரின் அழைப்பு என்று புரிந்தது. பாலராமபுரம் கோவிலுக்கு விரைந்தேன். சென்று பார்த்தால், அன்று வெள்ளி கவசத்தில் இருந்தார்.

எப்பொழுதும் போல குருநாதரை கண்டு வணங்கி, குரு தக்ஷிணையாக அவர் கொடுத்த ஸ்லோகத்தை கூறி முடித்து அர்க்கியம் கொடுத்ததில், அவர் கேட்க சொன்ன விஷயம் மறந்து போனது. எப்போதும் போல,சற்று நேரத்துக்குப்பின் ஒவ்வொரு சன்னதியாக போய் மாலைகளை கழற்றி வாங்கி வைத்துக்கொள்ளும் பொழுது, ஏதோ பேசிக்கொண்டிருந்த பூஜாரி, இடையில் "கவசம்" என்ற வார்த்தையை விட்டார். ஒரு நொடியில் அனைத்தும் ஞாபகத்துக்கு வர,

"உங்களிடம் ஒரு விஷயத்தை கேட்க வேண்டும். உண்மையை சொல்லுங்கள் என்றேன்".

"கூறுங்கள்" என்றார்!

"அகத்தியப் பெருமானுக்கு சார்த்தியுள்ள வெள்ளி கவசம், அவர் மார்பு பகுதியில் உடைந்துள்ளதா?" என்றேன்.

சற்று நேரம் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தவர், "ஆம்!" என்றார். அவருக்கே ஆச்சரியம்! எப்படி இவருக்கு தெரிந்தது என்று!

நடந்த நிகழ்ச்சிகளை கூறி, "அதை ஏன் சரிபண்ணக் கூடாது? அவருக்கு மார்பில் குத்துவதாக கூறுகிறார்" என்றேன்.

"கவசம் மிக மெல்லிய தகட்டில் செய்யப்பட்டது. உடைந்த பகுதியை சரி செய்ய முடியாது. புது கவசம்தான் செய்ய வேண்டும். அதுவும் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்! அகத்தியப்பெருமானுக்கு மட்டும் செய்தால் போதாது, தாயாருக்கும் செய்ய வேண்டும்" என்றார்!

"சரி! அவரிடம் உத்தரவு கேட்டு புது கவசம் ஏற்பாடு செய்யலாம்! அதுவரை இந்த கவசத்தை சார்ந்தும் முன், எந்த இடத்தில் குத்தும் என்று தோன்றுகிறதோ, அங்கு ஒரு சின்ன பட்டு வஸ்த்திரத்தை மடக்கி வைத்து, உடைசல் அவர் மார்பில் படாமல் உபயோகித்து வாருங்கள்." என்றேன்.

எல்லா நாட்களும் செய்வதுபோல். பூ மாலையை பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவுடன், திரு ஜானகிராமனிடமிருந்து நாடி தகவல் வந்தது.

"அய்யா! அகத்தியர் உங்களிடம் கூறச்சொன்னார்! "எனக்காக, நீ யாரிடமும் கை நீட்டக்கூடாது!" என்கிறார். என்ன அய்யா நடக்கிறது அங்க?" என்றார்.

நடந்த விஷயத்தை கூறியதும், அவர் ஆச்சரியப்பட்டு போனார். கோவிலில் இருந்து திரும்பும் வழியில், இதை எப்படி முன்னுக்கு கொண்டு போகலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு வந்தேன். அடியேனுக்கு, "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூ வழி அனைத்து அகத்தியர் அடியவர்களையும் தெரிவித்து, அனைவருக்கும் பங்கு பெரும் வாய்ப்பை கொடுப்போம். பாரம் அதிகமாக இருக்காது என்று நினைத்தேன்.

அது வேண்டாம் என்பது அவரின் எண்ணம் என்று உணர்ந்தேன்.

நிறைய பிரச்சினைகள், அதிக திட்டமிடல் போன்றவை செய்து கொண்டு இருக்கும் பொழுது, ஒரு உத்தரவு வந்தது.

"எமக்கு கவசம் அங்கே நிற்கட்டும். முதலில் என் குருநாதன் முருகப்பெருமானுக்கு வெள்ளி கவசம் வரட்டும். அதற்குப்பின் இதை பார்ப்போம்" என்று கூறி அனைத்தையும் நிறுத்தினார்.

ஒன்று தெளிவாக புரிந்தது. முருகப்பெருமானின் வெள்ளி கவசத்தை வேறு யாரிடமோ ஒப்படைக்க விரும்புகிறார். அதில் ஒரு சிறு அளவு கூட பங்குபெறும் வாய்ப்பு அடியேனுக்கு இல்லை என்பது.

அனைத்தையும் நிறுத்திவிட்டு, பொறுமையாக காத்திருந்தேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஐயனே கோயில் லை சுத்தம் செய்ய பக்தர்கள் ளுக்கு அருளானையிடுங்கள் குருநாதா

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. எம்பெருமானே அகத்தீசா...குருவே சரணம்...நல்விதமாகவே மார்கழி பௌர்ணமி திருவிழாவும்...மகா ஆயில்யம் குரு பூஜைவிழாவும்... மடாதிபதி மூலமாக தாங்கள் வந்திருந்து பூஜையை ஏற்றுக்கொண்டதற்கு கோடானுகோடி நன்றிகள்... மிகவும் பாக்கியமாகவே கருதுகிறேன்...அடியவனையும் கண்டதற்கு...மிக்க மகிழ்ச்சி...அனைவரும் நலமுடன் வாழட்டும்...மேலும்...ஆதிவராகநல்லூர் வந்து தங்களுக்கும் அன்னைக்கும் அடியேனின் கரங்களால் திருவழிபாடு செய்தோமே கண்டீர்களோ!!! அப்புறம் பிறகு ஏன் நம் இருப்பிடம் பற்றி கூறவில்லை... சரி இருக்கட்டும்...நலம் நலமே தொடரும்...தொடரட்டும் எம்பெருமானே...அகத்தீசா...ஓம் அகத்தீசாய நமோ நம

    ReplyDelete
  4. Om Sri LopaMudra Thayar Sametha Agastheeswaraya Namaha .Humble Namaskarams

    ReplyDelete