​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 13 January 2023

சித்தன் அருள் - 1267 - அகத்தியர் வாக்கு - 13


கேள்வி: "நேற்று ஓரு கேள்வியை அடியேன் கேட்டேன்! அதற்கு தாங்கள் தந்த பதிலில் ஒரு சிறிய சந்தேகம்! பித்ருக்களுக்கு மந்திரம் சொல்லி பிண்டம் வைத்தால்தான் திதி கொடுத்ததாக ஆகுமா? அல்லது தினமும், ஆத்மார்த்தமாக, மனத்தால் நினைத்து திதி கொடுத்தால் போதுமா?

குருநாதர்: "அப்பனே, எதை எதை அன்று அறிய, அப்பனே! பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து சொல்லுகின்றேன். பலமனிதர்கள் இப்படி மந்திரங்களை சொல்லித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கட்டங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றது., எது என்று அறியாமல். ஆனால், உண்மையில் எது என்று அறிய! அறிய. மீண்டும், மீண்டும் இதைத்தான் சொல்லுவேன் அப்பனே! பின் எது என்று பேசமுடியாத ஜீவராசிகளுக்கு, உணவு இட்டாலும் போதும் அப்பனே! அவர்களும் திருப்தியாகி மகிழ்வார்கள் அப்பனே! அது மட்டுமல்லாமல், பிற உயிர்களுக்கு எது என்று உணர்ந்து உணவு கொடுத்தால், அவர்களும் எது என்று உணர்ந்து உணர்ந்து, பித்ருக்களே வந்து, உணவருந்துவார்கள் என்பதே மெய்! அப்பனே! பின் பித்ருக்களே  இது ஏன் என்று உணர்ந்து அவன் கட்டங்களை விலக்குவார்கள் அப்பனே! அத்தனையும் செய்து கட்டங்கள் விலகவில்லை என்றால், எந்த பித்ருக்களுக்காக திதி கொடுத்தானோ, அவர்கள் மறுபிறப்பெடுத்து வந்துவிட்டார்கள் என்று பொருள்.

அடியேன்: "சமீபத்தில் ராமேஸ்வரம் போயிருந்தேன். அடியேனுடைய உறவினர் ஒருவர் அங்கு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும், நீங்களும் வாருங்கள் என அழைத்து சென்றார்! அங்கு தர்ப்பணம் செய்து வைக்கிற பிராமணர்கள், "நீ யாரு, பிராமணனா? இல்லை பிராமணன் அல்லாதவனா? என கேட்டனர். பிராமணன் என்றோம். அப்படியென்றால், போய்விட்டு அமாவாசை அல்லது மாதப்பிறப்பன்று வா! இன்று தர்ப்பணம் பண்ணி தரமாட்டோம் என்றனர். அதே தர்ப்பணத்தை பிராமணர் அல்லாதவர்களுக்கு அன்று செய்து கொடுக்கிறார்கள், பிராமணர்களுக்கு செய்து கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். இப்படி இரண்டு வித நிலை உண்டா?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய அறிய! நிச்சயம் இல்லை என்பேன் அப்பனே! மன திருப்தியோடு செய்தாலே போதுமானது அப்பனே!

அடியேன்: "கடைசியில்! அடியேனுக்கு தெரிந்த மந்திரங்களை சொல்லி தருகிறேன், நீங்கள் கடலில் நின்று எள்ளும், நீரும் விட்டுவிடுங்கள் என சொல்லி அப்படியே கூட்டி சென்று அவர் மனதிருப்திக்காக பண்ணி வைத்து விட்டேன். அது சரியா! தவறா! என்பது அடியேனுக்கு தெரியவே தெரியாது.

குருநாதர்: "அப்பனே, எதை என்று அறிய! அறிய! அனைத்துக்கும் இறைவனே காரணமாகின்றான் அப்பனே! அதனால் எதை எதை என்று உணர்ந்து, உணர்ந்து, நிச்சயம், தவறில்லை என்பேன் அப்பனே! எந்த அளவுக்கு, நன்மைகளாக, இறைவா! உந்தனுக்கு செய்கின்றேன்! எந்தனுக்கு தெரியாது, நீயே அனைத்தையும் பார்த்துக்கொள்! என்று செய்தால், எப்படியாவது இறைவனே அறிந்து அறிந்து வந்து, பக்கத்தில் நின்று செய்வான். உண்மையாகவே!
 
கேள்வி: "ராமேஸ்வரம், காளஹஸ்தி, ரிஷிகேஷ் போன்ற புண்ணியத் தலங்கள், ஒரே நேர்கோட்டில் உள்ளதாக இப்பொழுது கண்டு பிடித்திருக்கிறார்கள். அது எப்படி ஒரே நேர்கோட்டில் அமைக்க சாத்தியமாயிற்று?

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய! அறிய! யான் சொன்னேன்! பின் யான் விஞ்ஞானி என்று கூட! விஞ்ஞான வாக்கு உரைக்கும் பொழுது இதை பற்றி கூறுகின்றேன்!

கேள்வி: "பாரத கண்டத்துக்கு மட்டும் இறைவன் ஏன் "கர்மா பூமி" என்று பெயர் கொடுத்தார்?

குருநாதர்: " அப்பனே! எதை என்று கூற! இதை உணர்ந்து, உணர்ந்து சொல்லியிருக்கிறான் புசுண்ட முனிவனே! எதை என்று அறிய! அறிய! தேவலோகத்துக்கு எதை என்று கூற, மிக அருகாமையில் இருக்கிறது. பின் கும்பகோணம் என்கிறார்களே, அந்த இடமும் கூட அப்பனே! அதனால் கீழ் நோக்கி இருக்கின்றனவே, அதை மேல் நோக்கி, தேவலோகத்தை நோக்கி அமைத்து விட்டார்கள் அப்பனே!

கேள்வி: "அதனால் தானோ! கர்மம் செய்ததற்கு பலன் கிடைக்க வேண்டும் என்றால், பாரத கண்டத்தில் வந்து செய்யவேண்டும் என பெரியவர்கள் சொல்கிறார்களோ?

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய அறிய! நிச்சயம்! உலகம் உருண்டை அப்பனே! நிச்சயம் வரவேண்டும் அப்பனே!

கேள்வி: "அய்யனே! ஒரு சிறு சந்தேகம்! திருவண்ணாமலையில், மலைக்கு உள்ளாக, இதே திருவண்ணாமலையைப்போல ஒரு உலகம் இருப்பதாக ரமணா மகரிஷி கூறியுள்ளார்!

குருநாதர்: "சத்தியம் என்பேன் அப்பனே! ஆனால், இதுபற்றி இப்பொழுது தேவை இல்லை அப்பனே!"

கேள்வி: " பழனி, செவ்வாய்க்கு, திருவண்ணாமலை சூரியனுக்கு, ஸ்ரீரங்கம் சுக்கிரனுக்கு பரிகார தலம் என்று எல்லாம் அமைந்துள்ளது. இந்த இடங்களில் அந்த கோவில்களை பிரதிஷ்டை செய்ய காரணம், என்ன என்று தேடி சென்றால், அந்த அந்த கிரகங்களின் நேர் பார்வை அந்த இடங்களில் விழுவதினால், பூமியை காப்பாற்ற வேண்டி செய்ததாக உள்ளது!

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! நிச்சயம் உண்மை என்பேன் அப்பனே! நீ சொல்லாததையும் கூட அப்பனே! ஆனால் திருநள்ளாறில் அப்பனே! சனியின் பார்வை பலமாக வீழ்கிறது! இன்னும் ஏராளமான வாக்குகளை, எங்கு செப்ப வேண்டுமோ, அங்கு செப்பினால் தான் நலம் என்பேன். அங்கே உரைக்கின்றேன்! பொறுத்திரு!

கேள்வி: "வள்ளியூர் முருகர் கோவிலில், பௌர்ணமி கிரிவலம் பற்றி!"

குருநாதர்: "அப்பனே! இப்பொழுது சொன்னாயே! அந்த நாளில் முருகன் அங்கு வருவான்! அவனை தரிசித்து அருள் பெற்றுக் கொள்ளலாம்!"

கேள்வி: "கழுகுமலை முருகரை பற்றி!"

குருநாதர்: "அப்பனே! அங்கு தினமும் கழுகாக உருவெடுத்து அந்த மலையை சுற்றிக் கொண்டு இருக்கிறான் முருகன்!

கேள்வி:"குருநாதா! ஒரு கேள்வி! அசைவம் சாப்பிட்ட ஒருவர், மற்றவர்களுக்கு, அதாவது சைவ சாப்பாடு பரிமாறினால், அந்த உணவில், அவர் சுமக்கிற கெட்ட கர்மா வருமா, வராதா?

குருநாதர்: "அப்பனே! நிச்சயம் உண்டு!"

கேள்வி: "அப்படியானால், இந்த காலத்தில் வெளியே செல்கிற பொழுது பல இடங்களில் சாப்பிடவேண்டி உள்ளது. என்ன செய்ய!"

குருநாதர்: "அப்பனே! ஏற்கனவே உரைத்துவிட்டேன் அப்பனே! தெரியாமல் செய்த கர்மாக்களுக்கு, யாங்கள் வந்து உதவுவோம், என்று."

கேள்வி: "அன்னத்தைப் பற்றி எளிதாக விளக்க முடியுமா?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! அன்னம் என்றால் பல வகைகள் கூட உண்டு அப்பனே! வாயில் சிறிதளவே சென்று விட்டாலும், அதன் அர்த்தம் கழிவுகள்தான் என்பேன் அப்பனே!"

கேள்வி: "மனிதர்கள், எந்த அளவுக்கு அன்னத்தை, மதிக்க வேண்டும்!"

குருநாதர்: "அன்னத்தை மதித்தவன், இறைவனை மதிக்கின்றான். அன்னத்தை மதிக்காதவன் பின் இறைவனும் ஏதும் என்று அறியா. பின் அன்னத்தை வைத்துக் கொண்டே, இவன் பக்தனா! ஏமாற்றுக்காரனா! என புரிந்து கொள்ளலாம். அப்பனே! அதுமட்டுமல்லாமல், யாருக்காவது அன்னத்தை கொடுத்து, அதன் பின் உண்டால் தான் மிக மதிப்பு அப்பா! தான் மட்டும் உண்டு, பின் உடலை பெருக்கிக் கொண்டால், நோய்கள்தான் ஏற்படும் அப்பனே!

கேள்வி: "இத்தனை திசைகள் இருப்பினும், கிழக்கு அல்லது மேற்கு நோக்கி மட்டும் உணவு உண்ணுங்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். இதன் தாத்பர்யம் என்ன?

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிந்து! அறிந்து! இதன் தன்மை எது என்று கிழக்கு, மேற்கு எது என்று அறிந்து, அறிந்து, இவற்றின் தன்மை அதாவது, ஒளியானது எது என்று அறிந்து அறிந்து, இதுவும் ஒரு கலை என்பேன் அப்பனே! எது என்று கூற, அவ்வுணவை அருந்தும்பொழுது, அவ் ஒளியானது  எது என்று புரிந்து புரிந்து அவ் ஒளியானது உணவில் கலந்து உள்ளே செல்லும். ஆனால் எது என்று அறிந்து அறிந்து, மற்ற திசையில் உண்டால் அப்பனே! உள்ளிருந்து அப்பனே வெளியே இழுத்துவிடும் அப்பனே! சில ஒளிகளால் தான் வேறு எதுவும் பற்றிக்கொள்ளாது அப்பனே! எதை என்று அறிந்து அறிந்து பின் கடைசியில் நோய்கள்தான் வரும் அப்பனே!

​கேள்வி: "முக்தி கிடைக்க மிக சுலபமான வழி என்ன?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! பின் இறப்புத்தான் என்பேன்!"

கேள்வி: "மௌன விரதம் என்பதென்ன?"

குருநாதர்: "அப்பனே, இவை எது என்று அறிந்து அறிந்து. ஒருவன் தின்று கொண்டே இருந்தால், முக்தியும் கிடைக்காது, மோட்சமும் கிடைக்காது. உள்ளுறுப்புக்கள் அனைத்தும் பழுதாகிவிடும் என்பேன்.  இதை பின் தடுக்கவே, ஏதாவது ஒரு நாளில் விரதமிருந்தனர். உண்டுக்கொண்டே இருந்தால் அத்தனை சுமைகளும் ஏற்றி விடும். அதனால் தான் வாரத்தில் ஒரு நாளாவது உடம்பு தன் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்பதற்காகத்தான் விரதங்கள் வந்தன!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

4 comments:

  1. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. ஐயா குருநாதசாமி கோயில் களில் விளக்கை ஏற்று பவர்கள் அங்கே உள்ள எண்ணை பிசின் அகற்றி சுத்தம் செய்து பின் விளக்குகளை ஏற்றுமாறு அருளிடவும் ஐயா 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  4. Om Sri LopaMudra Devi Sametha Agastheeswaraya Namaha .My Humble Namaskarams

    ReplyDelete