​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 1 January 2023

சித்தன் அருள் - 1253 - அகத்தியர் திருநட்சத்திரம் (2023) !


​வணக்கம் அகத்தியர் அடித்தவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திரம் இந்த மாதம் 09/01/2023 அன்று வருகிறது. ஒரு நீண்ட வருடத்திற்குப் பிறகு, அவரின் திருநட்சத்திர ஜெயந்தி வருவதால், அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு அகத்தியர் சன்னதியில் அபிஷேக ஆராதனைகளில் பங்குபெற்று, நம் குருநாதருக்கு மரியாதை செய்ய விருப்பப்படுவீர்கள்.

அகத்தியர் ராஜ்ஜியம் என்று அழைக்கப்படுகிற, பாலராமபுரத்தில், அன்றைய தினம், மிக சிறப்பாக அபிஷேக ஆராதனைகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம் என்பது மாலை 5 மணிக்கு தொடங்கும்.

அகத்தியர் உத்தரவின் பேரில், அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து குருநாதருக்கும் லோபாமுத்திரா தாய்க்கும் வெள்ளியில் கவசம் சமர்ப்பிக்கிறார்கள். [முன்னரே,சித்தன் அருளில், இதை பற்றி கூற வாய்ப்பு கிடைக்கவில்லை]. நம் வாழ்க்கையில் மிக அரிதாக கிடைக்கிற இந்த சமர்ப்பண வாய்ப்பை உருவாக்கித்தந்த அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக அன்றைய தினம் அனைத்து அகத்தியர் அடியவர்களையும் தெரிவித்து, பாலராமபுரம் வந்திருந்து அன்றைய அபிஷேக ஆராதனைகளில் பங்குபெற அழைக்கிறோம்.

இதைப்பற்றி அகத்தியப்பெருமானிடம் கேட்டபொழுது, "அது என் விஷயம்! அதை எப்படி நடத்திக்கொள்ள வேண்டும் என்பதை, யான் தீர்மானிப்பேன்" என்றார். ஆகவே, அன்றைய தினம் யார் யாரெல்லாம் அங்கு வந்து பங்கு பெறுகிறார்களோ, அவர்களெல்லாம், அகத்தியப்பெருமானின் நேர் பார்வையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அவருக்கான அபிஷேக, அலங்கார, பூஜை அன்று மாலை 5 மணிக்கு தொடங்கும். அதில் பங்கு பெற விரும்புகிறவர்கள், பாலராமபுரம் கோவிலில், திரு.ரதீஷ் அவர்களை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்து கொள்ளவும்.

அடியேனின் சிறிய வழிகாட்டுதல் என்னவென்றால், அன்றைய தினம் காலையில் நேராக திருவனந்தபுரம் வந்து தங்கி, ஸ்ரீ பத்மநாபர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, மதியம் ஒரு மணிக்கு கிளம்பி பாலராமபுரம் வந்துவிட்டால், இரண்டு மணி முதல் கோவிலில் அமர்ந்து உழவாரப்பணி ஏதேனும் செய்து, பூஜையில் கலந்து கொள்ளலாம். பூஜை முடிவுற்றதும் அன்னம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அன்னம் பாலித்துவிட்டு திரும்பி செல்லலாம். நாகர்கோயில் மார்கமாக வருபவர்கள், நெய்யாற்றின்கரை என்கிற ஊரில் இறங்கி, அங்கிருந்து 10 கீ.மீ ஆட்டோவில் பயணித்து கோவிலுக்கு வந்து விடலாம். திருவனந்தபுரத்திலிருந்து பாலராமபுரம் அதிகமாக 13 கி.மீ தூரத்தில் உள்ளது. தங்கும் வசதி திருவனந்தபுரத்தில் அதிகம்.

அகத்தியர் அடியவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வந்திருந்து பூஜையில் பங்கு பெற்று ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமானின் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன், அவர் சார்பாக அழைக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா ஓம் அகத்தீசாய நமக ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரா தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete