​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 31 December 2022

சித்தன் அருள் - 1252 - அகத்தியர் வாக்கு - 5


கேள்வி: "தெரிந்தவரையில் பூஜை என்பதை இறைவனுக்கு செய்கிற பொழுது, பஞ்ச பூதங்களுக்கும் பூஜை செய்வது எப்படி?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! எவை என்று உணர்ந்து! உணர்ந்து! அப்பனே! காற்றை போற்றுதல் வேண்டும் அப்பனே! அதாவது, எதை என்று உணர்ந்து உணர்ந்து! இறைவா! இலவசமாக கொடுத்திருக்கின்றாயே! பின் அதற்கும் நன்றி! இப்படியே தெரிவித்துக்கொள் அப்பனே! பார்ப்போம்!".

கேள்வி: "அடியேன், நீங்கள் சொன்ன இந்த கூற்றை எத்தனையோ முறை அனைவரிடமும் சொல்லிவிட்டேன்!".

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! இவ்வாறெல்லாம் சொன்னால், நீ பைத்தியக்காரன் என்பர்! கெட்டதை சொல், நீ நன்றாக பெயர் எடுத்துவிடலாம்! கெட்டதை சொல்கிறாயா என்ன?"

அடியேன்: "அது முடியாது! உங்கள் வழியில் வந்து, உங்கள் பாதத்தில் அமர்ந்து ஒரு விஷயத்தை கூறுகிற பொழுது........"

குருநாதர்: "கெட்டதை சொன்னால், நல்லவன் என்று பெயர் எடுக்கலாம்!"

அடியேன்: "அது வேண்டாம்! கோடி கோடியாக கொட்டினாலும், அடியேனுக்கு வேண்டாம்!"

இதை கேட்க காரணம் என்னவென்றால், "சித்தன் அருள்" வலைத்தொகுப்பு உங்களுடையது. குருதக்ஷிணை கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என வினவிய பொழுது, இறைவன் உத்தரவினால், சித்தர்கள் நாங்கள் வழிகாட்டுகிறோம். அதற்கு, இறைவனுக்கு நன்றி கூறு! அதை இறைவன் ஏற்றுக்கொண்டால், அதுவே எங்கள் குருதக்ஷிணை ஆகும் என்றீர்! ஆனால் மனிதர்களுக்கு, இத்தனை சொல்லித் தந்த உங்களுக்கு ஒரு நன்றியை கூட சொல்லத் தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களுக்காகவா நீங்கள் இத்தனை சிரமப்படுகிறீர்கள், என்ற ஒரு ஆதங்கம்தான்."

குருநாதர்: "நாங்கள் என்றுமே, மனிதர்களிடமிருந்து நன்றியை எதிர் பார்ப்பதில்லை. உனக்கு சரியாக புரியவில்லை. இதனை (வலைப்பூவில் வரும் அகத்தியர் அருளிய வாக்கினை) கூட பலவழிகளிலும் உயர் பெரியவர்கள் இதனையும் எடுத்துக் கொண்டு, சரியாக பயன்படுத்துகின்றார்கள். ஏனோ தானோ என்று இருப்பவர்கள்தான் முட்டாளாகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பேன், அப்பனே! எதை என்று அறிய! எவை என்று அறியாமலே, தெரியாமலே, எங்கள் அருளால்தான் அனைத்தும் நடக்கின்றது என்று வைத்துக் கொண்டால், உந்தனுக்கு கவலை இல்லை.

அடியேன்: "சரி! அப்படியே எடுத்துக்கொள்கிறேன்! ஏன் என்றால், குறைந்தது, உங்களுக்காவது அவர்கள் நன்றி கூற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்! அதனால் தான்"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! நான் நன்றியை எதிர் பார்ப்பதில்லை! எதை என்று கூற? மனிதன் பாவம் என்று தான் நானே இருக்கின்றேன்! இப்படியெல்லாம் வாழ்கின்றானே என்று கூட!"

அடியேன்: "உங்களுடைய குழந்தைகள், சிஷ்யர்கள், அடியவர்கள் அனைவரும் இறைவனை நோக்கி சென்றுவிடவேண்டும் என்று தானே நீங்கள் விரும்புகின்றீர்கள்! ஒன்றாம் வகுப்பில் வாய்ப்பாடு, ஒன்றும் ஒன்றும் இரண்டு என படிப்பது போலத்தானே, இப்படி படித்து/செய்து முன்னேற முடியும்?"

குருநாதர்: "அப்பனே! ஒரு ஆசிரியனுக்கு, தன் மாணவனை எப்படி பிடிக்கும் என்று தெரிந்து கொள் அப்பனே! அதுபோல்தான் அப்பனே! சரியாக இருந்தால், எங்களுக்கு பிடிக்கும், சுலபமாக உயர்த்திவிடுவேன், கிரகங்கள் எப்படி இருந்தாலும் சரி, கர்மாக்கள் எப்படி இருந்தாலும் சரி! ஆனால், தவறான வழியில், எதை என்று அறிந்து அறிந்து சென்று கொண்டிருந்தால்தான், கவலையும் கூட. அவனை, நாங்களே உதைப்போம் என்பேன் அப்பனே! இப்பொழுதும் கூட சொல்லிவிட்டேன்!"

அடியேன்: "மிக்க நன்றி!, நமஸ்காரம் குருநாதா!"

குருநாதர்: "ஆசிகள்! ஆசிகள்! அனைவருக்கும் எனது ஆசிகள் என்பேன்! நலமாகவே, நலமாகவே, எதை என்று உணர்ந்து உணர்ந்து, பின்னர் எது என்று தெரியாத  மனிதர்களுக்கு கூட, நன்மைகளாக முடியட்டும், இது கலியுகம் என்பேன். எது என்று கூற, பின் பித்தலாட்டம், எது என்று கூற! எதை என்று அறிய அறிய, பொய், களவு, அநியாயம்தான் ஓங்கி நிற்கும் என்பேன், ஆனாலும் எங்கள் அருளை பெற்றவர்களுக்கு, நிச்சயம் எதை என்று உணர்ந்து, யார் மூலம் எதை செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் யாங்களே செய்வோம் அப்பனே! முன்னின்று அப்பனே, ஆனால் சரியாக எங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!, சித்தனின் விளையாட்டு, கடைசியில் பின்பற்றித்தான் நடக்கும் என்று கூட மனிதன் உணர்வதே இல்லை அப்பனே! அவந்தனுக்கு எதை சொல்வது, எதை கொடுப்பது என்பதை, யங்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், மனிதனை நாங்கள் அடித்தால், ஒரு அடி கூட தாங்கமாட்டான், என்பதையும் யாங்கள் அறிவோம். ஆனால் மனிதன் அதை உணரவே இல்லை! அதனால்தான் மனிதனை பொய் வேடக்காரன் என்போம், மனிதனை!

அடியேன்: "நல்வாக்கு உரைத்ததற்கு நன்றி! நமஸ்காரம் குருநாதா!"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நம! இறைவா நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🙏

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரா தாய் திருவடிகள் போற்றி துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete