​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 22 December 2022

சித்தன் அருள் - 1244 - லோபாமுத்திரா தாயாரின் திருநட்சத்திரம்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப்பெருமானின் உத்தரவால், அவரது ஜீவநாடி, அகத்தியர் ராஜ்ஜியம் என்கிற பாலராமபுரம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. காகபுசுண்டர் சித்தர் வந்து வாக்குரைத்தார். அதன் பின்னர் அகத்தியப்பெருமான் வந்தமர்ந்து பொது கேள்விக்கான வாக்குகளை அளித்தார். பல கட்டங்களாக உரைக்கப்பட்ட அருள் வாக்குகளில், மிக முக்கியமான ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் அடியேனை மிக உற்சாகம் அடையச் செய்தது. அதை உங்கள் அனைவரிடமும் உடனேயே தெரிவிக்க நினைத்து இந்த ஒரு தொகுப்பு. கவனிக்க! இந்த வாக்கின் அடிப்படையில், அகத்தியர் அடியவர்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், அதிக நேரம் இல்லை. ஆகவே, அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு, இதை மட்டும் கூறுகிறேன்.

நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்வி:-

"உங்களுடைய திருநட்சத்திர ஜெயந்தி ஜனவரி 09ம் தேதி வருகிறது. உங்களுடைய குழந்தைகளாக இருக்கிற நாங்கள் எல்லோரும், மிக சிறப்பாக உங்களுக்கு அபிஷேக பூஜை செய்யவேண்டும் என விருப்பப்படுகிறோம். அதற்க்கு நீங்கள் அனுமதி/ஆசிர்வாதம் அளித்துவிட்டீர்கள். நீங்கள்தான் நடத்திக்கொள்ளப் போவதாகவும் சொல்லிவிட்டீர்கள். அது தொடர்பான ஒரு விஷயம் என்னவென்றால், இரண்டு செய்திகளை கூறுங்கள்.

லோபாமுத்திரா தாயார் பிறந்த தமிழ் மாதமும், நட்சத்திரமும் சொல்லிக் கொடுங்கள். அந்த தினத்திலும், உங்கள் சேய்கள், தாயாருக்கும் சிறப்பாக அபிஷேக பூஜை வருடத்தில் ஒரு நாளேனும் செய்ய விருப்பப்படுகிறார்கள். அதற்காகத்தான் கேட்கிறோம்."

அகத்தியப்பொருமானின் பதில் வாக்கு:-

"எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே. ஆனால், ஒன்றை மட்டும் யான் உறுதிப்படுத்துவேன். சித்தர்களுக்கும் எது என்று அறிய, நாள் இல்லை, நட்சத்திரம் இல்லை, ராசிகள் இல்லை. ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து செய்கின்றார்களோ, அதையும், யான் ஏற்றுக்கொள்வேன் அப்பனே.

ஆனாலும், எதை என்று அறிய, கூறுகிறேன், இவ் மார்கழி திங்களில், கும்பம் (ராசி), சதயம் (நட்சத்திரம்)." (அடியேன் விரிவான வாக்கினை பின்னர் தெரிவிக்கிறேன்).

உடனேயே, சதயம் நட்சத்திரம் என்று வருகிறது என பார்க்க, பஞ்சாங்கத்தை புரட்டினால் 28/12/2022, புதன் கிழமை அன்று வருகிறது. இது ஒரு மிகப்பெரிய தகவல். உடனேயே, பாலராமபுரம் கோவில் பூஜாரியிடம் பேசி அன்றைய தினம் மிக சிறப்பாக லோபாமுத்திரா தாயாருக்கு அபிஷேக பூஜைகளை செய்ய வேண்டும் என வேண்டினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

அடியவர்களே! உங்களால் இயன்றவரை அன்றைய தினம் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அகத்தியர் கோவிலில், இருவருக்கும் அபிஷேக பூஜைகளை செய்து, அம்மாவுக்கு சிறப்பான தினமாக மாற்ற வேண்டுகிறேன். எண்ணம் இருந்தும், அருகில் அகத்தியர் கோவில் இல்லை என்றால், பாலராமபுரம் கோவிலில் தொடர்பு கொள்ளுங்கள். பாலராமபுரம் கோவில் தொடர்பு விவரங்கள் "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வலை தளத்தில் வலதுபக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற விஷயங்கள் பின்னர் தெரிவிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. அகத்தீசாய நம.நன்றி அயயா

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🙏

    ReplyDelete
  4. அன்னை லோபமுத்ரா சமேத அகத்தியர் பொற்பாதங்களை வணங்கி
    சித்தர் காக புஜண்டர் மற்றும் அகத்தியர் உரைத்த வாக்குகளை படிக்க ஆவலுடன் காத்து இருக்கேன்.
    நன்றி!

    ReplyDelete
  5. தாயாரின் நட்சத்திரம் அறிந்தது மிக்க மகிழ்ச்சி!

    சென்னைக்கு அருகே பஞ்செட்டியில் இருக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷி கோவிலில் பிரதி மாதம் சதய நட்சத்திர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    28/12/2022, புதன் கிழமை அன்று அன்னை உலோபாமுத்திரை சமேத அகத்திய மகரிஷிக்கு சிறப்பான அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும். பூஜையில் கலந்து கொள்பவர்களின் துன்பம் தீர கூட்டு பிரார்த்தனை நடைபெறும்.
    பூஜை நேரம் மாலை 4 மணி முதல் 7 மணி வரை. கலந்து கொண்டு நல்லாசிகள் பெற்று, அன்னப்பிரசாதம் உண்டு செல்லவும்.

    கோவில் முகவரி.
    அருள்மிகு அனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில் பஞ்சேஷ்டி.
    ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு தனி சன்னதி உள்ளது.
    கூகிள் வரைபடம் : 13.288196575162226, 80.15096640437551
    உதவிக்கு, அரவிந்தன் 8886058058

    ReplyDelete
  6. ஓம்சிவசிவஓம் ஓம் லோபமுத்திரா அகத்தியர் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  7. நன்றிகள் ஐயா ... அப்படியே செய்கிறோம்

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

    ReplyDelete
  8. எம்பெருமானே அகத்தீசா...அடியவனின் சிரம் தாழ்ந்து வணக்கங்கள்... ஓம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வராய நமோ நம ஶ்ரீ...கண்டேன்...அறிந்தேன்...அய்யா...அன்று தங்கள் இருவரையும் காண திருவருள் வேண்டும்...அய்யனே...

    ReplyDelete
  9. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete