​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 8 December 2022

சித்தன் அருள் - 1239 - அன்புடன் அகத்தியர் - மனுதேவி ஆலய வாக்கு - 2




மனுதேவி ஆலய போகர் சித்த பெருமான்  உரைத்த பொதுவாக்கு பாகம் 2

ஆனாலும் யாங்கள் விட்டு விடுவதும் இல்லை!!! எவன் ஒருவன் இறைவன் இல்லை என்று சொல்கின்றானோ அவந்தனை சிறிது காலம் வாழட்டும் என்று விட்டு விடுவோம் ஆனாலும் ஒன்றும் எதை என்று அறிந்து!!... காலங்கள் ஒரே காலமாக இருக்காது என்பதை கூட யான் ஏற்கனவே அதாவது யான் சொல்லுவதை விட சித்தர்கள் பல பல வழிகளிலும் கூட உரைத்தும் விட்டார்கள்!!! எதனை நிமித்தம் உண்டு உண்டு உண்டடா !! மனிதா!! மனிதா!!!

மனிதா திருந்திக்கொள் என்ற பின்பும் நீ திருந்தாமல் செல்கின்றாயே!!! எதற்கு?? ஆனாலும் உண்ணாதே என்கின்ற மனிதா உண்ணுகின்றாயே  எதற்கு?? 
போகாதே என்று சொல்கின்ற மனிதா எதற்கு போகின்றாயே எதற்கு?
எதற்கு??

தலை குனி!!! நீதிக்கு நியாயத்திற்கு!!

இவ்வாறு நீ அமைதியாக சென்று கொண்டிருந்தாலே உந்தனுக்கு இறைவன் மனிதா நீ தேடி தேடி அலைந்தாலும் ஆனால் உன் நிலைமையை பார்த்து இறைவன் உன்னை தேடி வர வேண்டும்!!!!

அப்பொழுதுதான் உந்தனுக்கு அனைத்தும் நடக்குமே தவிர!!! நீ தேடிச்சென்று அலைந்து சென்று எதனால் ஆனாலும் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் நல்லோர்களை யாங்களே!!!! அழைப்போம் என்பதுதான் உண்மை!!!

ஆனால் மனதில் எதுவும் நினைக்க கூடாது இறைவன் எதை தந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்ற நிலைக்கு எவ் மனிதன் வருகின்றானோ!!!! அவன் தான் உத்தமன்!!!! அவந்தனுக்குத் தான் வாழ்வை கொடுப்போம் அவந்தனுக்குத் தான் அனைத்தும் செய்வோம்!!! மற்றபடி சுயம் அதாவது சுயமாகவே சுயநலமாக அதைச் செய்ய வேண்டும் போட்டியாக வரவேண்டும் என்று நடந்தால் நீ தான் அழிவாய்!!!!

அதனால் சித்தர்கள் எதை என்று எந்தனுக்கு சித்தர்கள் வழியே சென்றோமே இப்படியெல்லாம் கஷ்டங்களா!!! என்று எண்ணி வருந்தாதே!!!! வருந்தாதே!!

பொய்கள் பொய்களப்பா!! இவ்வுலகத்தில் அனைத்தும் பொய்களப்பா பொய்யை உண்மையாகுகின்றான் மனிதன்!! உண்மையை பொய்யாக்குகின்ற சக்தி மனிதனிடத்திலே இருக்கின்றது!!!

ஏனடா!!! புத்தி கெட்ட மனிதா உன்னையே பொய் ஆக்குகின்றாய் நீ!!!

ஆனால் நீ உண்மை இல்லாதவன் என்று உந்தனுக்கே தெரியும்!!!

அப்படி நீ உண்மை இல்லாதவன் என்று தெரிந்தும் பின் பொய் பேசுகின்றாயே!!! ஆனாலும் பொய் !! மனிதன் என்பவனே பொய்!!! வேடதாரி இதைதான் யான் சொல்வேன்!!! ஏனென்றால் பல பல யுகங்களாக மனிதனைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!

ஆனாலும் அனைத்தும் இழந்து ஆனாலும் அனைத்தும் கழிந்து பொடி பொடியாக்கி ஏதும் நடக்கவில்லை என்றால் வந்து பின் யான் தான் எதை என்று இறைவன் என்று சொல்லிவிடுவதா?

இதனை யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் தண்டனைகளும் பல வகையிலும் கொடுத்துவிட்டோம்!!! திருந்துங்கள்!! திருந்துங்கள்!!

ஆனாலும் எதை எதையோ நினைத்துக் கொண்டு மனிதன் சுற்றித் திரிகின்றான் ஆனாலும் அவையெல்லாம் பொய்!!! பக்தியை மட்டும் காட்டினால் மட்டுமா!!?????? உந்தனுக்கு அனைத்தும் கிட்டிவிடும்?????????

அன்பு !! பாசம்!!! பிறர் நிலை அறிந்து அறிந்து பின் இவ்வாறு பின் உயர்ந்த பக்திகளை யார்? யார்?? என்று கண்டுபிடித்து நிச்சயம் இறைவனை வணங்கினால் மட்டுமே நிச்சயம் உந்தனுக்கு இறைவன் வழி காண்பிப்பான்!!!!

பின் அதனை விட்டுவிட்டு பின் தீயவர்கள் பின் அதாவது இவ்வுலகத்தில் தீய பக்தர்கள் தான் நிச்சயம் தேடுவார்கள் தீய பக்தர்கள் எதை என்று கூற தீய பக்தர்களே உண்மையான பக்தர்களுக்கு நிச்சயம் உண்மையானவர்கள் கிட்டுவார்கள். இதுதான் விதியப்பா!!! இதுதான் சத்தியமுமப்பா!!!!

ஆனால் என்னதான் செய்கின்றாய்?? மனிதா!!!

மனிதா இன்னும் சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் இறக்கும்பொழுதும் ஒன்றும் இல்லை பின் பிறக்கும் போதும் ஒன்றும் இல்லை ஆனால் நடுவில் வந்து பின் ஈட்டுகின்றாய்!! 

ஆனால் அது உன்னுடையதா? இல்லை!!இறைவனுடையது!!!

அதனால் இறைவனே பிடுங்கி விடுவான்!!! ஆனால் மனிதன் இதையென்று அறியாமல் பின் எந்தன்!! எந்தன்!! எந்தனுடையது!! என்னுடையது!! எந்தனது என்று தேடி தேடி அலைகின்றான்!!!

இதுவும் அகத்தியன் ஏற்கனவே சொல்லிவிட்டான்!!!!
அதனால் புத்தி கெட்ட மனிதா!!!
இவ்வுலகத்தில் ஒன்று என்பது உந்தனுக்கு ஒன்றுமே கிடையாது!!

 நீ ஒரு அனாதை அவ்வளவுதான்!!!!!

சொல்லிவிட்டேன் எச்சரிக்கையாக இருங்கள்!!!

இவ்வுலகத்தில் எது எடுக்கப்பட்டதோ நிச்சயம் இறைவன் அதையும் பிடுங்கிக் கொள்வான் பின் எதை என்று கூற ஆனாலும் இவற்றினின்றும் ஏதுமில்லாமல் செல்கின்றாயே மனிதா!!! மனிதா!! மனிதா!!!

தெரிந்து கொள்!! புண்ணியங்கள் செய்!!! புண்ணியங்கள் செய்கின்ற பொழுது நிச்சயம் அப்புண்ணியத்திற்கு ஏற்ப அனைத்தும் உன்னிடமே வரும்!!!

ஆனால் புண்ணியம் இல்லாமல் சென்றால் ஏதும் மிஞ்சுவதுமில்லை கடைசியில் நரகம் சென்று என்னென்ன அனுபவிக்கப் போகின்றாயோ!!!!!!!!!!!!!????!!!!! மனிதா!!!!!!!!!!!

ஆனால் ஆன்மா அதாவது ஆன்மா உணரும்!!!

ஆனால் அங்கு சென்றாலும் உந்தனுக்கு உடம்பு ஒன்று கொடுக்கப்படும்!!!!
எதை இன்னும் சொல்கின்றேன் சித்தர்கள் எதற்றெதற்கு எவ்வெவ் தண்டனைகள் என்பதைக் கூட நாங்கள் பல பல வழிகளில் கூட எழுத்தாணி மூலம் எழுதி வைத்து விட்டோம்!!

ஆனால் மனிதன் அனைத்தையும் அழித்துவிட்டான்... அழிக்கவில்லை அதை என்று கூட யாங்களே பறித்துக் கொண்டோம் என்று கூட நினைத்து விடலாம்!!!

நினைக்கத் தெரிந்த மனிதனுக்கு வாழ தெரியவில்லையே!!!

வாழத் தெரிந்த மனிதனுக்கு இறைவனை பிடிக்க முடியவில்லையே!! 

இறைவனை பிடிக்க பின் பயந்து பயந்து சென்றாக வேண்டும் மனிதா!!!

மனிதா!! ஏன்?? மனிதா உன் மனசாட்சியை தொட்டு சொல்!!!

நீ உண்மையான பக்தனா!???

உண்மையாக இறைவனை வணங்குகின்றாயா!???

என்று கூட ஏன்? ஏன்? உண்மையான ஒருவனுக்கே அனைத்தும் கிட்டும் அனைத்தும் கிட்டும் சொல்லிவிட்டேன்!!!

ஆனாலும் இதை எவற்றில் இருந்து சித்தர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்கள்!!! யாங்கள் சாதாரணமானவர்கள் அல்ல!!!!

இறைவனுக்கு மீறிய சக்திகள் படைத்தவர்கள் யாங்கள் கூட என்பதைக் கூட இங்கிருந்து சொல்கின்றேன்!!!!

ஆனாலும் எங்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் சொல்லிவிட்டேன்!!

இதை எதிர்த்து நின்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை!! அதனால் தான் முன்னோர்கள் அழகாகவே!!!

குரு அருள் இருந்தால் தான் எதை என்று அறிந்து அறிந்து அறிந்து அறிந்து தெய்வ அருளும் கிடைக்கும் என்பது விதியப்பா!!!

ஆனாலும் எதனையும் அறிந்து குருவருள் எப்படி பெற வேண்டும் என்றால் நிச்சயம் மனதிலே இறைவனை நினைத்து நினைத்து நினைத்து தியானங்கள் செய்து கொண்டே இருந்தால் இறைவனே ஒரு குருவானவனை அனுப்புவான்!!

அனுப்புவான் அதுவும் ஒரு சூட்சும ரூபத்தில்!!! ஆனால் உடம்பு இருக்காது இதுதான் குருவின் தன்மையே தவிர மற்றவை எல்லாம் அழிந்து போகும் சொல்லிவிட்டேன்!!! சொல்லிவிட்டேன்!!!

ஏமாந்து ஏமாந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பொழுது கடைசியில் திரும்பவும் சொல்வார்கள் யான் பெரிய பெரிய சித்தர்களை எல்லாம் இப்படி வணங்கினேனே!!!

பெரிய பெரிய புண்ணியங்களையெல்லாம் செய்தேனே!!!!! என்றெல்லாம் மனிதா!! மனிதா!! அப்பொழுது உணர்ந்து விடாதே மனிதா உந்தனுக்கு அறிவுகள் பலமாகவே கொடுக்கப்பட்டு விட்டது ஏற்கனவே அதை எப்பொழுதும் நீ உபயோகத்தில் கொண்டு வருவது இல்லை!!!

அதனால்தான் அழிவுகள் இப்பொழுது கூட சொல்லுகின்றேன் அதனால் உண்மையான பக்தியை கடைப்பிடியுங்கள் மனிதா இதை என்றும் இன்னும் அறியாத அளவிற்கு கூட சித்தர்கள் பெயரைச் சொல்லி எதை என்று அறியாமலே சென்று கொண்டிருந்தால் யான் பின் காறியும் துப்புவேன் என்னென்ன செய்வேன் என்று கூட எனக்கும் தெரியாது!! அதை போல் செய்வேன்!!!

எதை என்று நிமித்தம் காட்டி அதனால் பின் எதை என்று கூட சித்தர் என்ற நிலைமைக்கு வருவது சாதாரணமானவை இல்லை!!! இறைவனே கொடுக்க வேண்டும் அனைத்தும் கூட!!!

எவை என்று அறிந்து யாங்கள் பல வகையிலும் சுற்றி சுற்றி!!........

ஆனாலும் மனிதா!!!! எந்தனுக்கு உடனே அனைத்தும் வர வேண்டும் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று எண்ணுகின்றாயே முட்டாள் மனிதா!!!!!!

அதுதான் நீ கீழே விழுகின்றாய்!!!!

எப்பொழுதும்  எங்கும் எதை என்றும்...... ஒன்றை வேண்டுமென்றால் நீ தேடித்தான் அலைய வேண்டும்!!! தேடித் தேடி அலைந்தால் தான் உந்தனுக்கு கிட்டுமே தவிர பின் நீ அமைதியாக உட்கார்ந்தால் உன்னை தேடி பணமும் வராது புண்ணியமும் வராது எதையன்றி எதுவும் வராது!!!

நீ அமைதியாக அப்படியே உட்கார்ந்து விட வேண்டியது தான் இது ஒரு பிறவியா??? ஈனப்பிறவி மனிதா!!! திருந்திக்கொள்!!

எதை என்று கூட எதையும் எதிர்பார்க்காமல் பின் எதை என்று கூட உயர்ந்த பக்தனாக ஆக வேண்டுமா நீ?? சுற்றித்திரி!!!

எதை என்று அறியாத அளவிற்கு கூட உன்னால் முடியவில்லையா!?? அமைதியாக உட்கார்ந்து தியானங்கள் செய்!!!!

யாங்கள் உன்னை அழகாகவே எதை என்று அறிந்து அறிந்து மேலோகத்திற்கு அழைத்துச் செல்வோம்!!!

ஆனால் உன் உடம்பு இங்கே தான் இருக்கும் உன் மனது அங்கங்கு கோயில்களுக்கு அலைய வைப்போம் யாங்கள்... இதுவும் தெரிந்த விஷயம் தான் எங்களுக்கு!!!!

அதனால் நிச்சயம் எதை என்று அறியாத அளவிற்கு கூட உண்மை நிலைகள் யாங்கள் வரும் காலங்களில் கூடு விட்டு கூடும் பாய்வோம்!!!! நிச்சயம் அழிப்போம்!!!

எவை என்று அறிந்து அறிந்து செயல்பாடுகள் தெரிந்து தெரிந்து அதனால் பல வழிகளிலும் கூட பல ஆண்டுகள் யான் இங்கேயே இருந்தவன் தான்!!!!

பல சித்தர்களும் இங்கே வந்து உணவை சமைத்து சமைத்து உண்டு பின் சென்று விட்டார்கள் பல ஞானியர்கள் வசிஷ்டனும் வந்து  விட்டான் அத்திரியும் வந்து விட்டான் இன்னும் பிரம்மரிஷி எதை என்று எவற்றை என்று கூட விசுவாமித்திரனும் இன்னும் இன்னும் ஏனைய பின் எதை என்று அறியாமல் இங்கு வந்து வந்து அமர்ந்து அமர்ந்து ஆனாலும் இதற்கு அறியாத அளவிற்கும் கூட விக்கிரமன்( விக்ரமாதித்தன்) அரசனும் நல்விதமாகவே இங்கு வணங்கி வணங்கி பல சாதனைகள் புரிந்தான்!!!

எதை என்று அறியாமல் ஆனால் கடைசியில் அவந்தனுக்கு விதி எங்கு உள்ளது? என்பதை தெரியாமல் ஆனாலும் இப்பொழுது கூட அவந்தன் எதை என்று கூற... மதத்தை காப்பாற்ற வேண்டும் என்று இங்கே பிறந்திருக்கின்றான் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான்!!!

யார் அறிவார் ?? இதை!!!

இதைப் போலத்தான் நல்லோர்களை யாங்கள் பிறக்க வைப்போம் இனிமேல்!!!

ஏனென்றால் பிறக்க வைக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் மனிதன் அழித்துக் கொண்டே சென்று கொண்டிருப்பான் அனைத்தையும் கூட!!!!

எதை என்றும் எவற்றை என்றும் புரியாத அளவிற்கும் கூட மனிதனுக்கு சிறிது காசுகள் வந்தால் யான் தான் பெரியவன் என்று பின் யூகித்துக் கொள்கின்றான்!!

பொய்!!  பொய் !! அதனால் சித்தர்கள் எதை என்று எதையும் எதிர்பார்க்காமல் அதனால் நல்லோரிடத்தில் தான் யாங்கள் வருவோம்!!!
யாங்கள் வருவோம்!!!

எதை என்று அறியாமல் என்னிடத்தில் வரவில்லையே!!!!?????

எதை என்று கூட யாங்கள் எதை என்று கூற என்னிடத்தில் ஏதும் இல்லையா!!?????

என்று பிதற்றினாலும் நிச்சயம் இல்லை!! இல்லை!!

உன் மனதால் அன்பை செலுத்தினால் மட்டுமே எங்கள் சித்தர்கள் ஆசிகள் கிடைக்கும்!!!! கிடைக்கும்!!!

திருடா!! மனிதா!! திருடா!!!
இதைத்தான் யான் உணர்த்துவேன் மீண்டும் மீண்டும்!!

மீண்டும் மீண்டும் இன்னும் ஞானியர்கள் பல வழிகளில் வாக்குகள் உரைப்பார்கள்!!

நன்று நன்று இவ்வாலயத்தின் சக்தி மிகுந்து காணப்படுகின்றது!!

இதனால் இங்கு எதை வேண்டினாலும் நிறைவேற்றப்படும் என்னுடைய ஆசிகளும் பரிபூரணமாக இங்கே கிடைக்கும்!!!!

பல சித்தர்கள் ஆசிகளும் நிச்சயம் இங்கே கிட்டும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட!!!

இன்னும் இன்னும் அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்வோம் எதற்காக எதற்காக ஓடுகின்றாய் சாவதற்கு ஓடுகின்றாய் மனிதா!!!!

இறைவனை தேடி ஓடுவதற்கு உந்தனுக்கு என்ன ?? குறை சொல்!!!

இறைவன் என்னதான் குறை வைத்தான்!!!!!!!!

ஆனால் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் எச்சரிக்கையாக இருங்கள் கலியுகம் முற்றிக் கொண்டே வருகின்றது மீண்டும் எப்படி எல்லாம் மனிதனை மீட்க வேண்டுமோ அப்படியெல்லாம் யாங்கள் மீட்டுக் கொள்வோம் கவலைகள் இல்லை எதை என்று கூட

கவலைகள் இல்லாமல் நிச்சயம் அகத்தியனும் உலா வந்து கொண்டே இருக்கின்றான்!!!

நலம் !! நலம்   மீண்டும் வாக்குகள் பரப்புகின்றேன் !!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ மனுதேவி ஆலயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டம் அதன் அற்புதமான கலாச்சார மற்றும் மத இடங்களுக்கு பெயர் பெற்றது.

தபி நதிக்கரையில், சத்புடா மலைகளின் பசுமையான தொடர்களில் அமைந்துள்ளது, ஸ்ரீ மனுதேவி கோவில். சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பல குடும்பங்களின் உச்ச குல தெய்வம் இது.

யாவல் சோப்தா மாநில நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி சாலை வழியாக கோயிலை அடையலாம். அட்கான்-காசர்கேடா வழியாக சென்ற பிறகு, கோயில் சுமார் 9 கிமீ தொலைவில் உள்ளது.

கோயில் 500 மீட்டர் உயரத்தில் உள்ளது மற்றும் இறுதி மலையேற்றம் பசுமையான சுற்றுப்புறங்கள் மற்றும் இயற்கையின் வழியாக இந்த நடைப்பயணம் மற்றும் மனுதேவியின் நாமத்தை உச்சரிப்பது ஒவ்வொரு யாத்ரீகருக்கும் அளவற்ற திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

பழங்கால கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பழமையான கோயில் . கோயிலுக்கு வருபவர்களை வரவேற்கும் வகையில் பெரிய பெரிய மரங்கள் உள்ளன. பரசுராமர் இந்த மரங்களில் காட்சியளிக்கிறார் என்றும், ஸ்ரீ மனுதேவியின் தரிசனத்திற்காக யாத்ரீகர்களை வரவேற்கிறார் என்றும் கூறுகின்றனர் .

சக்திபீடங்களில் கட்டைவிரல் பகுதி என்றும் கூறுகின்றனர். 

இந்த புனித ஸ்தலத்தைப் பற்றி பல நாட்டுப்புறக் கதைகள், உள்ளன. 

ஸ்ரீ மனுதேவியின் கதை
தேவி பகவத் புராணங்களில், விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகியோர்  ராட்சசர்களின் அச்சுறுத்தல் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் பூமியில் வசிக்கும் மக்கள் இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.என்று

சத்புதா மலைத்தொடரில் உள்ள ஒரு குகை இடத்தில் உச்ச தேவதைகளின் மும்மூர்த்திகள் சந்தித்தனர். இந்த இரகசிய இடம் இன்றைய ஸ்ரீ மனுதேவி ஆலயமும் அதன் சுற்றுப்புறமும் ஆகும்.

ராக்ஷஸர்களின் அச்சுறுத்தலுக்குத் தீர்வு காணும் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, ​​அவர்களின் சுவாசம் மற்றும் அவர்களின் இருப்பு மற்றும் தியானத்தால் குகையில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த சூழலால், சக்தியின் மிகவும் பிரகாசமான ஒளி தோன்றியது (அதாவது சக்தி மற்றும் ஆற்றல். தெய்வத்தின் உள்ளார்ந்த) மின்னல் வடிவில். இந்த ஒளிமயமான கதிர்கள் ஒருங்கிணைந்த வடிவமாக மனுதேவியாக மாறியது. 

தேவி மனுதேவி - ஒரு சக்திபீடம். உன்னதமான தேவி, பூஜை அர்ச்சனையை பக்தியுடன்  பக்தர்கள் தூபக் குச்சிகள் (தூப்) மற்றும் மண் விளக்குகள், உணவு மற்றும் பழப் பிரசாதங்களைக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்.

பூமியில், துர்க்கா, குமுதா, க்ருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி, ஈஷாயனி, சாரதா, அம்பிகா, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி என எண்ணற்ற பெயர்களில் உனக்காக கோயில்களை அலங்கரிப்பார்கள். மனதின் அனைத்து விருப்பங்களையும், மனதின் நல்ல எண்ணங்களையும் வழங்கும் தேவி, கோடிக்கணக்கான மக்களின் குலதெய்வமாக சத்புதத் தலங்களில் வசிப்பாள். இதை கிருஷ்ணர் முன்னறிவித்ததாக புத்தகங்கள் கூறுகின்றன.

கோவிலின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள்

இக்கோயில் மூன்று பக்கமும் குன்றுகளால் (சிறிய குன்றுகள்) சூழப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரே 400 அடி உயரம் வரை விழும் அழகிய நீர்வீழ்ச்சி உள்ளது. வருடத்தில் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை, இந்த நீர்வீழ்ச்சியானது சத்புடா மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள நிலத்தைத் தொடும் நீரினால் ஆசீர்வதிக்கப்படுகிறது.

இந்த இடத்தில் அரசு உதவியுடன் ஏரி கட்டப்பட்டது.

ஏரிக்கரையில் அழகான ஹனுமான் கோயில் உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டம் அதன் அற்புதமான கலாச்சார மற்றும் மத இடங்களுக்கு பெயர் பெற்றது. தபி நதிக்கரையில், சத்புடா மலைகளின் பசுமையான தொடர்களில் அமைந்துள்ளது, ஸ்ரீ மனுதேவி கோவில்.

சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பல குடும்பங்களின் உச்ச குல தெய்வம் இது.

யாவல் சோப்தா மாநில நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி சாலை வழியாக கோயிலை அடையலாம். அட்கான்-காசர்கேடா வழியாக சென்ற பிறகு, கோயில் சுமார் 9 கிமீ தொலைவில் உள்ளது. அறங்காவலர்களும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் 10 கிலோமீட்டர் சாலை, அதில் முக்கால்வாசி (75%) இரண்டு வழிப்பாதை வாகனம் செல்லக்கூடிய சாலை என்று பக்தர்களுக்குத் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறார்கள்.

அம்மன் திருவிழாக்கள்

ஒவ்வொரு ஆண்டும் நவச்சந்தி யாகம் 'சைத்ரா மற்றும் மக் ஷுத்த அஸ்தான்மி' அன்று நடத்தப்படுகிறது. "சிராவண" மாதத்தின் மார்கசிர்ஷா மற்றும் பெத்தோரி அமாவாசையில் அதாவது போலா-பண்டிகையில், தேவியின் ஊர்வலம் உள்ளது.

நவச்சந்தி யக்ஞம்

ஒவ்வொரு ஆண்டும் நவச்சந்தி யாகம் 'சைத்ரா மற்றும் மக் ஷுத்த அஸ்தான்மி' அன்று நடத்தப்படுகிறது.

பக்தர்கள் கோயிலில் பூஜை/அபிஷேகத்தைக் கோரலாம். கோரப்பட்ட பூஜை/அபிஷேகம் குறிப்பிட்ட தேதியில் பக்தர்களின் பெயரில் ஏற்பாடு செய்யப்படும்.

மனுதேவி கோயிலை எப்படி அடைவது?

பேருந்து மூலம்:

மனுதேவி கோயிலுக்குச் செல்வதற்காக ஜல்கான் பேருந்து நிலையத்தில் இருந்து புதிதாக தினசரி 3 மினி பேருந்துகள் இயக்கப்பட்டன .

ஜல்கான்-இத்கான்-தம்பூர்ணி-கிங்காவ்-அட்கான் முதல் மனுதேவி கோயில் வரை மனுதேவி கோயிலிலிருந்து அட்கான்-கிங்காவ்ன்-தம்பூர்ணி-இட்கான்-ஜல்கான் வரை

08:15am
11:15pm
03:30pm காலை 09:15 மணி
12:15 பிற்பகல்
04:30 மணிஜல்கான் முதல் மனுதேவி கோவிலின் தூரம் 35 கி.மீ.
யவல் அல்லது சோப்டாவிலிருந்து கிங்கானுக்கு பேருந்து மூலம் சென்றடையும், பின்னர் கிங்கானில் இருந்து மனுதேவி கோயிலுக்கு நேராக பேருந்து அட்டவணையைப் பின்பற்றவும்.

தனியார் போக்குவரத்து:

ஜல்கானிலிருந்து மனுதேவி கோவிலுக்கு செல்ல, நீங்கள் தனியார் டாக்ஸி அல்லது ஆட்டோரிக்ஷாவில் செல்லலாம். இதற்கு உங்களுக்கு தோராயமாக ரூ. 800-1000 திரும்பும் பயணம்.

குறிப்பு: தனியார் வாகனம் (ஜீப், கார், இரு சக்கர வாகனம்) கோயிலுக்கு அருகில் செல்லலாம்.

ஜல்கானில் இருந்து மனுதேவி கோயிலை அடைய மேலும் விவரங்கள்/வழிகாட்டுதல்களுக்கு பின்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்:

சஞ்சய் மகாஜன்
திஷா எண்டர்பிரைசஸ், ஜல்கான்
9422781892

கோவில் நேரங்கள் / தொடர்பு:
திங்கள் - ஞாயிறு (காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை)
தொடர்பு தொலைபேசி:

திரு. சாந்தாராம் பாபு பாட்டீல் (தலைவர்) 9923025944

திரு. என்.டி.சௌதரி (செயலாளர்) 9420789877

திரு. சுனில் மகாஜன் (அறங்காவலர்) 9422778775

பார்வையிட சிறந்த நேரம்:

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் அக்டோபர் முதல் டிசம்பருக்கு இடைப்பட்ட நேரமே சிறந்த நேரம். ஏனெனில் இந்த காலகட்டத்தில் நீங்கள் இயற்கை அழகையும் ஓடும் நீர்வீழ்ச்சியையும் காணலாம்.ஒவ்வொரு ஆண்டும் நவச்சந்தி யாகம் 'சைத்ரா மற்றும் மக் ஷுத்த அஸ்டமி' அன்று அஸ்வினி மாதத்தில் நவராத்ரா உற்சவ் மற்றும் ஊர்வலம் நடக்கிறது.

ஆலய முகவரி 

ஸ்ரீ மனுதேவி மாதா மந்திர், புஷ்பலதா பெண்டேல் சௌக், எதிரில். ஜில்லா பச்சத் பவன், ஜல்கான், மகாராஷ்டிரா 425101

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

2 comments:

  1. ஓம் அருணாச்சலேசுவராய நமக

    ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Kuldevata temple of whole khandesh region which is in deep forest of Satpuda mountain.
    Devotees throng here for darshan throughout the year.Serene nature and water falls calm the mind.
    The above address is not correctly given.
    Consider following address.

    Shri kshetra Manudevi temple,Adgaon,Tal:Yawal,Dist:Jalgaon,Maharshtra.Pin code:425302.
    https://goo.gl/maps/yVKuMrndcd9RUYNm7

    website:http://www.manudevi.com/index.html



    ReplyDelete