வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
குருநாதருடன் நாடியில் பேசியபோது கிடைத்த அருள்வாக்கு!
எம் வழியில் வருபவர்கள், கீழ்கண்டவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சித்தர்கள் வாக்கில் உண்மையே இருக்கும். சித்தர் உரைத்திருந்தால் அது நிச்சயமாக நடக்கும். நடக்கும் வரை பொறுமை தேவை.
எம் வாக்கில், இருபொருள், முப்பொருள் இருக்கும். ஆகவே சேய்கள் எம் வாக்கை உன்னிப்பாக கவனித்து, உள்வாங்கி, உணர்ந்து அதன் படியே செயல் பட வேண்டும். ஒருவன் கர்மா படி அவனே முடிவெடுத்து செயல் படட்டும் என்றுதான் இரு பொருள். முப்பொருள் கொண்ட வாக்கை உரைக்கின்றோம். தீர்மானிப்பதும், செயல்படுவதும், அதன் பலனை அனுபவிப்பதும் அந்த ஒருவன்தான்.
ஒரு செயலை, சித்தன் உரைத்ததை விட மேன்மையாக செய்தால், நாங்களே அடிக்கடி இறங்கி வந்து மேலும் நிறைய இறை சேவை செய்ய வாய்ப்பளிப்போம்.
சித்தனுடன் அமர்வது, அவர்களின் அருகாமை என்பது இறைவன் பாதத்தில் அமர்வதற்கு சமம்.
அவசர புத்தி, எதிலும் ஆபத்து. நிதானமும், கவனமும் ஒரு பொழுதும் இழக்ககூடாது.
இறைவனும், சித்தர்களும் உன்னை தேடி வரும்படி வாழ்க்கையில் நடந்து கொள்.
சித்தன் பார்வையே கர்மாவை சிதறடிக்கும்.
சித்தனிடம் வந்தால் வாங்கி வந்த கர்மாவை முதலில் அனுபவிக்கவிட்டு கரைத்து, பின்னரே எம் வழியில் சேர்ப்போம். அது எம் மைந்தனாக இருந்தாலும் சரி. பாரபட்சம் கிடையாது.
மனிதன் என்றாலே, கர்மாதான்.
சித்தன் என்றாலே இறைவனின் தூதுவர்கள். நேரமும், வெளிச்சமும் அவர்களுக்கு பொன்போன்றது. இதை முதலில் உணர்ந்து செயல்படுங்கள்.
நீ சம்பாதித்த சொத்து உன் கர்மாவைத்தான் கூட்டவோ குறைக்கவோ செய்யும். இறைவனுக்கும்/சித்தர்களுக்கும், உன் இதயத்தை தவிர வேறு எதுவும் தேவை இல்லை.
நல்ல செயலை செய்வதானால், உடனேயே செய்துவிடு. கெடுதலை செய்ய ஒரு போதும் நினைக்காதே.
எங்கும், எதிலும் தொடர்பு வைத்தால், கர்மா பங்கு வைக்கப்படும்!
மௌன விரதம் என்பது பேசாமல் மட்டும் இருப்பதல்ல, உள்ளே எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது.
ஏமாற்றுபவன் உன்னை பதட்டமடைய செய்து வெற்றி பெறுகிறான். உன்னிப்பாக கவனித்து நடந்து கொண்டால் இழப்பு இருக்காது.
இறைவன் ஏகன்/அனேகன், அதை முதலில் உணருங்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteமிக்க நன்றி ஐயா🙏🌹🙏
ஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமக
நன்றி ஐயா
அகத்தீசாய. நம நன்றி ஐயா
ReplyDeleteஅருமையான வார்த்தைகள்.
ReplyDeleteஅதை அப்படியே ஏற்று நடந்து கொள்ள அடியேனுக்கும் அகத்தியர் அருளட்டும்.
ஓம் அகத்தீசாய நம 🙏
நன்றி நன்றி நன்றி
குருநாதா, கர்ம வலி எல்லோருக்கும் அதிகம்.
ReplyDeleteஎனவே கர்ம வலி தாங்கும் சக்தியை அனைவருக்கும் கொடுங்கள்.
ஓம் அகத்தீசாய நமஹ
ஆசைகள் மேல் வைத்திருக்கும் இடது கை பிடியை விடுங்கள், தாங்கும் சக்தியை இறைவன் அருள்வான்.
Deleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteநாம் அனைவரும் கவனமாக அய்யன் உரைப்பதை கருத்தில் கொண்டு வாழ வேண்டும்
அவர் கூறுவது மிக எளிய விஷயங்கள், நிச்சயமாக நம் வாழ்க்கையில் தொடர முடியும்.
Deleteஎங்கும், எதிலும் தொடர்பு வைத்தால், கர்மா பங்கு வைக்கப்படும்!
ReplyDeleteஐயா இதன் பொருள் விளக்கம் கூறவும்...
நன்றீங்க..
ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..
அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி..
எங்கும், எதிலும் தொடர்பு வைத்தால், கர்மா பங்கு வைக்கப்படும்!
Deleteநல்ல விஷயங்களுக்காக யாருடனும் தொடர்பு வைத்தால்/பங்கு பெற்றால் நல்ல கர்மாவின் பங்கு கிடைக்கும். தீய விஷயங்களுக்கு ஒன்று சேர்ந்தால்/செய்தால் அதன் பங்கு வரும். இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். தெரியாமல் செய்தாலும்/தெரிந்து செய்தாலும்.
அதற்காகத்தான் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள, பெரியவர் நல்ல காரியத்தை உடனே செய், கெடுதலை மனதாலும் நினைக்காதே/செய்யாதே என்றார்.
அனைத்தும் உன் செயல் இறைவா என்று அவர் பாதத்தில் சமர்பித்து விடுபவர்களுக்கு, புண்ணியமும் சேராது, பாபமும் சேராது.