​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 20 December 2022

சித்தன் அருள் - 1243 - பாலராமபுரமே "அகத்தியர் ராஜ்ஜியம்"!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் திரு. ஜானகிராமன் அவர்கள் வாசிக்கும் அகத்தியப்பெருமானின் ஜீவநாடி, அவர் உத்தரவின் பேரில் பாலராமபுரத்திற்கு பூஜைக்காக கொண்டு வரப்பட்டது. அவர் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின்னர் அகத்தியப்பெருமானின் உத்தரவுடன் "பொது வாக்கு" வாசிக்கப்பட்டது.

அடியேனுக்கு, சில கேள்விகள் குருநாதரிடம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு கேள்வியும், அதற்கான அழகான பதிலும், அடியேனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. அதை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நாடியில் அகத்தியரிடம்

"வணக்கம் அய்யா! அடியேன் எங்கோ வாசித்தேன். பாலராமபுரத்தின் புராணப் பெயர் "அகத்தியர் ராஜ்ஜியம்" என்று. அது உண்மையா?"

அகத்தியப் பெருமானின் பதில்!

"ஆம்! உண்மையே! நீ படித்தது உண்மையே! தெரிந்த பின் கேட்கலாமா?"

உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதற்காக,

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நம 🙏
    பொது வாக்கை ஆவலுடன் எதிர் பார்த்து

    அன்புடன்
    G. K Sreenivasan
    தேவிகாபுரம்

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  3. எம்பெருமானே அகத்தீசா... அனைவருக்கும் நல்லருளாசி அளித்தருள்க... "அகத்தியர் ராஜ்ஜியம்" படிக்கவும்-கேட்கவும் இனிமையாக இருந்தது-இந்த அடியவனும்- "அகத்தியம் பெருமானோடு ஒருநாள்" மனம் விருப்பப்படுகிறது...கருணைவேண்(டி)டும் அய்யனே...அன்புடன் அடியவன்..

    ReplyDelete
  4. Om Agatheesaya Namah! Ayya, thanks for making us know the old names. Feel like real siddhar's rule is happening. When we read Siththanarul posts, we are definitely in a different world. Already for Agathiyar's devotees, we are not in this world of suffering but in heaven with God, siddhars/Gurus.

    ReplyDelete
  5. ஓம் அகத்தீசாய நமஹ.
    பாலராமபுரம் அகத்தியர் கோவில் பற்றி எழுதுமாறு வேண்டி கொள்கிறேன்.

    ReplyDelete
  6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    நன்றிகள் ஐயா எப்பொழுதும் அய்யன் ராஜ்ஜியம்

    பொது வாக்கு பதிவு தாருங்கள் ஐயா 🙏

    ReplyDelete