அய்யனே! உங்களின் திருநட்சத்திர ஜெயந்தி ஜனவரி 09ம் தேதி வருகிறது. உங்கள் சேய்கள் அனைவரும் மிக சிறப்பாக உங்களுக்கு பூஜை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறோம். அதற்கு நீங்கள் அனுமதியும் தந்துவிட்டீர்கள். நீங்கள்தான் நடத்திக்கொள்ள போகிறீர்கள் எனவும் சொல்லிவிட்டீர்கள். அது தொடர்பாக இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்துங்கள்.
லோபாமுத்திரா தாயார் பிறந்த தமிழ் மாதமும், நட்சத்திரமும் சொல்லுங்கள். அந்த திருநட்சத்திர நாள் அன்றும், அம்மாவுக்கும் அதே போல சிறப்பாக பூஜை அபிஷேகம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறோம். அதற்காகத்தான் கேட்கிறோம்!
குருநாதர்:- "எதை என்று உணர்ந்து உணர்ந்து, அறிய அறிய. ஆனால் ஒன்றை மட்டும் நான் இங்கு குறிப்பிடுவேன். சித்தர்களுக்கு நாள் இல்லை, நட்சத்திரம் இல்லை, ராசிகள் இல்லை, ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து செய்கின்றார்கள், அதையும் யான் ஏற்றுக் கொள்கிறேன், அப்பனே! நிச்சயம் இவ் மார்கழி திங்களிலே, சதயம் (நட்சத்திரம்), கும்பம் (ராசி). அப்பனே! அவளும் வந்தவள், நானும் வந்தவன், இப்போது புரிந்து கொண்டிருப்பாய் நீ!"
சித்தர்களுக்கு நாள் நட்சத்திரம் கிடையாதுதான்! ஆனாலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்மாவுக்கும் சிறப்பாக பூசை செய்யலாமே என்ற எண்ணத்தில் தான்.
குருநாதர்:- அப்பனே! நீயும் தீர்மானித்துக்கொள். யான் சொல்லிவிட்டேன்.
நிச்சயமாக நடத்திவிடலாம். இந்த வருடத்திலிருந்து, அம்மாவுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்ய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கு சொல்லிவிடலாம் அந்த பாக்கியத்தை கொடுத்துவிடலாம். அவர்களும் ஏதேனும் ஒரு சன்னதியில், எங்கெங்கு தாயாரோட குருநாதர் இருக்கிறாரோ அங்கு அவர்கள் அந்த தினத்தில் பூஜையில் பங்கு பெறுவார்கள். (28/12/2022 - புதன்கிழமை).
குருநாதர்:- அப்பனே! இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். அப்பனே! யான் பல பிறவிகளை கடந்தவன். எந்தனுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை அப்பனே! இவை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் குழப்பங்கள் ஆகிவிடும் அப்பனே! அதனால் 27 நட்சத்திரங்களுக்கும் யான் சொந்தக்காரன்.
உண்மைதான்! மனிதர்களாக இருப்பவர், ஏதேனும் ஒரு நட்சத்திரத்தை, உதாரணமாக சிவபெருமானுக்கு திருவாதிரை, முருகனுக்கு பூசம், பெருமாளுக்கு திருவோணம், உங்களுக்கு ஆயில்யம் என ஒரு குறிப்பிட்ட தினத்தில் சிறப்பு பூசை செய்வது போல், லோபாமுத்திரா தாயாருக்கும் சிறப்பாக அபிஷேக பூசை செய்யலாமே.
குருநாதர்:- அப்பனே! அது மட்டும் அல்லாமல், என் தகுதிகள் பல. லோபாமுத்திரையும் என்னைவிட சக்தி மிகுந்தவள் என்பேன். ஆனால் பொறுத்துக் கொண்டு இருக்கின்றாள் அனைத்தும். எதை என்று கூற. என் மணாளனை காட்டிலும் உயர்ந்தவள் இல்லை என்று கூற. அதனால்தான் அப்பனே! பெண்கள் எந்த உயர் நிலையில் இருந்தாலும், எந்தனுக்கு ஒன்றும் தெரியாது என்ற நிலையில் இருந்தால் அவர்கள் வாழ்க்கை பிரமிப்பாக இருக்கும்.
{அகத்தியர் அடியவர்களே! யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் கூறட்டும். இதுவல்ல, அது என்றோ, பிறப்பா? என்ன வேடிக்கையாக இருக்கிறதே! எனவெல்லாம் கூறினாலும், அனைத்தையும் விலக்கிவிட்டு, மார்கழி, சதயத்தன்று ஏதேனும் ஒரு சன்னதியில் ஒரு பூவேனும் சமர்ப்பியுங்கள். ஏன் என்றால், இதேபோல் கேலி செய்தவர்களை புறக்கணித்து ஒரு திருநட்சத்திரத்தன்று பூஜை செய்ய, இறைவனே தரிசனம் தந்து அருளவும் செய்தான். அதன் பின் அடியேனுக்கு வாழ்க்கையில் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமே வரவில்லை. உங்களுக்கு, புரியும் என்று நினைக்கிறேன்.}
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..... தொடரும்!
ஓம்சிவசிவஓம் ஓம் லோபமுத்திரா அகத்தியர் திருவடிகளே சரணம்
ReplyDeleteஅகத்தீசாய நம 🙇♂️🙏நன்றி ஐயா
ReplyDeleteஅதன் பின் அடியேனுக்கு வாழ்க்கையில் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமே வரவில்லை. உங்களுக்கு, புரியும் என்று நினைக்கிறேன்.} இதன் தாத்பரியம் அடியேனுக்கு விளங்க வில்லை சற்று விளக்கமாக கூறுவீர்களா
ReplyDeleteஎந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையுடன் செய்தால், இறை மனம் கனிந்து அருளும்.
Deleteவணக்கம் ஐயா தங்களுக்கு அன்று கிடைத்த இறை அருளை ஒரு பதிவாக கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்...
Deleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ReplyDeleteநன்றி ஐயா🙏🙏
அகத்தியர் ஐயா வை விட லோ பா அம்மாவுக்கு சக்தி அதிகம் என அகத்தியர் ஐயா வே கூறுவது மிகவும் ஆச்சரியம் மாக உள்ளது
ReplyDeleteஓம் அகத்தீசாய நம..
ReplyDeleteநன்றி ஐயா
28/12/2022 antru puram natchathiram ayya
ReplyDeleteWhich Month 28th you saw? In our panchangam it is Sadhayam. May be chandrashtamam is pooram!
Delete