வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நேற்றைய தினம் (09/01/2023) அன்று அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திரமாகையால் பல இடங்களிலும் அவருக்கு அபிஷேக பூசைகள், அடியவர்களால் நடத்தப்பட்டது. பின்னர் நாடியில் வந்த அகத்தியப்பெருமான், நமக்காக, திரு ஜானகி ராமனிடம் கீழ் கண்டவாறு உரைத்தார்.
"ஆதி ஈசனை பணிந்து செப்புகின்றேன் வாக்குகள், அகத்தியன். எம் ராஜ்ஜியத்தில் (பாலராமபுரம்) மிக சிறப்பாக அனைத்தும் செய்யப்பட்டது. அப்பனே! நலமாக எம்முடைய ஆசிகள். நேற்றைய பொழுதிலும் கூட பல திருத்தலங்களுக்கு யான் சென்றிருந்தேன் அப்பனே! நலமாகவே! அப்பனே எதை என்று அறிய அறிய! அப்பனே! சந்தோஷங்கள் எந்தனுக்கு காணப்பட்டது என்பேன், பின் லோபாமுத்திரைக்கும் எதனால் என்று ஆராய்ந்து ஆராய்ந்து பாசத்துடனே உணர்ந்து உணர்ந்து செய்ததை யானும் கேட்டுக்கொண்டேன்! நிச்சயம் பின் மனம் மகிழ்ந்து, லோபாமுத்திரையும் "நாதனே! எல்லோரும் மனம் மகிழ்ந்து பாசத்தோடு உந்தனுக்கு செய்கின்றனர். ஆனாலும் நிச்சயம், அனைத்தையும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றாய். ஆனாலும் சில சில மனிதர்களுக்கு கூட கட்டங்கள், மனக்குழப்பங்கள் ஏன் வருகின்றது என்பது, ஆனாலும் நிச்சயம்.
தேவியே! நிச்சயம் யான் உணர்ந்து உணர்ந்து எவை என்று யான் சொல்ல. ஆனாலும், எதை எதை என்று அறிய அறிய, மானிடப்பிறப்புக்கள் அனைவருமே, ஏற்கெனவே சொல்லி விட்டேன், பின் கர்மாக்களை சம்பாதிக்க செல்கின்றார்கள். அப்படிப்பட்டவருக்கு யான் எப்படித்தான் கொடுப்பது. ஆனாலும் மறைமுகமாக அவர்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். ஆனாலும் பின் தண்டனை வருகின்றதே என்று எண்ணாமல் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனால், பின் எதனை யான் ஏற்றுக் கொள்வது என்று கூட பின் தேவியிடம் சொல்லி விட்டேன்.
ஆனாலும் குறைகளில்லை. நலன்களாக அங்குள்ள அனைவருக்கும் எவை என்று உணர்ந்து, உணர்ந்து ஆசிர்வதித்துவிட்டேன். கந்தனும் பின் அங்கு வந்து "அகத்தியமாமுனிவரே! உனக்கு இப்படியெல்லாம் மனிதர்கள், உணர்ந்து, உணர்ந்து அதனால் நிச்சயம் யானும் வந்து பார்ப்பேன், எப்படித்தான் செய்கின்றார்கள் என்று கூட, ஏற்கனவே தெரிவித்துவிட்டார். அதனால், இங்கேயே, கந்தன் வந்து, நல் விதமாக ஆசிர்வதித்து விட்டான். அகத்திய மாமுனிவரே! இன்னும் என்ன வேண்டும், எதை என்று உணர்ந்து! உணர்ந்து! பின் நீயே செய்து கொள்கிறாயா என்ன? பின் நிச்சயம் முருகனே எதை என்று உணர்ந்து, உணர்ந்து! ஆனாலும், உந்தனுக்கே தெரியும் யான் எதையும் விரும்பவில்லை என்று, ஆனாலும் என் மக்கள் அனைவரும் பாசத்தோடு செய்கின்றதை, யான் எப்படி செய்வது என்று அறிய அறிய! வந்தேன்! ஆனாலும் முருகன் மனமகிழ்ந்து கொண்டு அங்குள்ள அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டான். முருகனும், வள்ளி தெய்வயானையுடன் நலமாகவே அங்கு வந்து அன்னத்தையும் உண்டு, அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டான். இதனால், அனைவருக்கும், மென்மேலும் புண்ணியங்கள் பெருகும். சரி இருக்கட்டும் என்று கூறி, ஆசீர்வாதங்கள் என்று கூறி முருகன் அவன் இடத்திற்கு சென்றான்.
அடுத்தமுறை, எது என்று அறிய! அறிய! தை மாதத்தில் முழுவதுமாக, பழனிதன்னில், நிச்சயமாய், தன் பக்தர்களுக்கு காட்சியளிப்பது மெய்யே! அனைத்து சித்தர்களும், அங்கே வருவார்கள், பழனிதன்னில் தைமாதம் தன்னில், பல சூட்சுமங்கள் காணப்படும். அவ் சூட்சுமங்கள் என்னவென்று, வரும் வாக்கில் சொல்லுகின்றேன், நலம், நலம்! ஆசிகள்!
நன்றி ஐயா
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
என்ன புண்ணியம் செய்தோம் ஐயா
ஓம் முருகா சரணம்🙏🙏🙏
ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteநன்றி ஐயா🙏🌹🙏
ஓம் அருள்மிகு அன்னை லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஅகத்தீசாய நம 🙇♂️🙏 நன்றி ஐயா
ReplyDeleteஓம்சிவசிவஓம் ஓம் அகத்தியர் திருவடிகளே சரணம் ஓம் லோபமுத்திரா தாயார் திருவடிகளே சரணம்.
ReplyDeleteOm LopaMudra Devi Sametha Agasthiya Perumane Namaha . Om Saravana Bhavaya Namaha
ReplyDelete