​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 10 January 2023

சித்தன் அருள் - 1264 - அகத்தியர் வாக்கு - 11

 

கேள்வி: "இயல்பாகவே அன்பாக, பக்தியோடு செய்தாலே, அது இறை பூஜை ஆகாதா?

குருநாதர்: "அப்பனே! நிச்சயம் ஆகும் என்பேன் அப்பனே! எவர் இல்லை என்று சொல்வது, அப்பனே! அப்பனே! தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே! பல பூஜைகள், பல பல சாத்திரங்கள், பலவித அன்னதானங்கள், இவை எல்லாம் இறைவனுக்கே எது என்று அறிய செய்து, அவனெல்லாம் எப்படி இருக்கின்றான் என்று யான் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன், ஏன் இது நிலைமை என்று."

கேள்வி: "பித்ருக்கள் விஷயத்தில், மந்திரத்துடன் அந்த செய்ய வேண்டிய தானங்களை செய்தால் தான் பலன் கிடைக்குமா, இல்லை அடியேன் செய்கிறமாதிரி, மூன்று நேரமும் உணவருந்தும் பொழுது, ஒரு பிடி சோறு குருநாதருக்கும், பித்ருக்களுக்கும் கொடுத்தால் (பின் உயிரினங்களுக்கு போட்டு), அதன் தாத்பர்யம் அவர்களை சென்று சேருமா?

குருநாதர்: "அப்பனே! நிச்சயம் (இரண்டாவதாக சொன்னாயே) அது தான் உண்மை. (அது போதும்! பித்ரு தோஷம் போகும்). அப்பனே எதற்காக சொன்னேன் என்றால், சிறு வயதிலிருந்து பின் செல்லமாக ஊட்டி ஊட்டி வளர்த்திருப்பார்கள் அப்பனே. பின் வயதான காலத்தில் அவர்களை மறந்துவிட்டால், என்னதான் லாபம். அதனால் நீங்களும், ஒரு பிடியாவது, வாருங்கள், உணவருந்துங்கள் அப்பனே என்று சொன்னால், அப்பனே! அவர்களுக்கும் சந்தோஷம். அப்பொழுதுதான், அனைத்துமே நடக்கும் தவிர, எதை என்று உணர்ந்து.

ஜானகி ராமன்: "ரொம்ப அசதியாகிவிட்டதைய்யா! மிச்சத்தை நாளை கேட்கலாமே!" என்றார்.

அடியேன்: "பார்த்தியா! எல்லா கேள்வியையும் கேளுங்கள் என்று விட்டு, இப்படி நாளை மற்ற கேள்வியை கேட்கலாம் என்றால் என்ன அர்த்தம்? ஒருவேளை, நாளை, கேள்வி கேட்கும் போது அகத்தியருக்கு பதிலாக காகபுசுண்டர் சித்தர் வந்துவிட்டால், அவர் மனிதனை திட்டுவதைத்தான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். கேள்வி எல்லாம் கேட்க முடியாது. அவர் நம் குருநாதர் அகத்தியப்பெருமான் மாதிரியில்லை. இப்பொழுதெல்லாம் ரொம்ப கோபமாகத் தான் பேசுகிறார்.

ஜானகி ராமன்: "சரி! இப்பொழுதே கேட்டுவிடுங்கள்!" என்றார்.

கேள்வி: "குருநாதா! நேற்று உங்கள் கோவிலில் வந்திருக்கும் பொழுதே இந்த கேள்வியை உங்களிடம் கேட்டேன். உங்களிடமே இந்த கேள்வியை வைப்பதை தவிர அடியேனுக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களுடனே இருந்து நாடியில் பேசுவதற்கு/பதில் பெறுவதற்கு கொஞ்ச நேரம்தான் கிடைக்கிறது. எங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு/நேரமே மிக குறைவு. மனிதர்கள் தவறு செய்கிறார்கள், இல்லை என்று கூறவில்லை. ஆனால் (மற்ற சித்தர்கள்) மொத்தமாக வந்து திட்டுவதை பார்த்தால், ஓரளவுக்கு மேல் மனம் சோர்ந்து போய் விடுகிறது!

குருநாதர்: "அப்பனே!  எதை என்று அறிந்து! அறிந்து! நிச்சயம்! இங்கு பத்து நபர்கள் இருக்கின்றார்கள் என்றால், அதில் ஒருவன் திருடனாக இருப்பான். அவனைப் பற்றித்தான் யாங்கள் எடுத்துரைப்போம் அப்பனே! மனசாட்சி சரியாக இருந்தால், நல்லவனாக இருந்தால், பின் தைரியமாக இருக்கலாமே.

கேள்வி:"அப்படித்தான் எடுத்துக் கொண்டோம், இருந்தும் கிடைத்த வாய்ப்பு என்பது மிக குறைவாக இருந்ததினால் வந்த ஆதங்கம் அய்யா!

குருநாதர்: "எதை என்று அறிந்து! அறிந்து! இதனால்தான் நல்லவர்கள் இருந்தால், அதன் மதிப்பு தனி. கெட்டவன் இருந்தால் அதன் மதிப்பும் தனி. ஆனால், நல்லவன், கெட்டவன் என்று மனிதன் தீர்மானிக்க கூடாது! அதையும், யாங்களே தீர்மானித்து, அழிப்போம்.

கேள்வி: "திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் பற்றி கூறுங்களேன்?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய. பெருமான் அங்கே இருக்கின்றான், இப்பொழுது சென்றாலும் உந்தனுக்கு தரிசனம் உண்டு! ஆனால் நீதான் போகமாட்டாய் என்பேன். அப்பனே! எதை என்று அறிய அறிய. ஒரு நாள் சொல்லுகின்றேன் அப்பனே! அதிசயம் இருக்கின்றது அப்பனே! அப்பனே! எவை என்று கூற, நிச்சயமாய் எவை என்று அறிந்து, அறிந்து! இப்பொழுது தேவை இல்லை என்பேன் அப்பனே! அத் திருத்தலத்தில் சொல்லுகின்றேன் அப்பனே! பெருமாள், அங்கே அப்படியே இருக்கின்றான் என்பேன் அப்பனே! ஸ்ரீதேவி, பூதேவியுடன்!

கேள்வி: "நான் கேட்கவேண்டிய கேள்வி வேறு. அத்திருத்தலத்தில் பெருமாளுக்காக இருந்த அத்தனை நகைகளும்/ஆபரணங்களும் திருடப்பட்டது. அது ஏன் இன்றுவரை திரும்பி கிடைக்கவில்லை?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து அறிந்து கூறுவது. நிச்சயம், இதனை பற்றியும், விவரமாக சொல்வேன் அப்பனே! அதனால்தான், எதை என்று உணர்ந்து யான் சொல்லிவிட்டேன். இப்பொழுது தேவை இல்லை என்று. ஆனாலும் சிறிதளவே சொல்லிவிட்டேன்."

கேள்வி: "இத்தனை மந்திரங்கள், யாகாதி கர்மங்கள், அபிஷேக பூஜைகள் போன்றவை இருக்கிறதே, இதெல்லாம் யாருக்கு தேவை?"

குருநாதர்: "அப்பனே! யாருக்கும் தேவை இல்லை என்பேன் அப்பனே. மனிதன் தான் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றான். அது செய்தால், இது நடக்கும், இவை செய்தால் அது நடக்கும் என்று. அதனால், மனிதன் பெரும் பித்தலாட்டம் அப்பா!

கேள்வி: "ஆனால், இது கலியுகம் என்பதினாலா, வாமாச்சாரம் இத்தனை பலம் பெற்றிருக்கிறது?"

குருநாதர்: "அப்பனே, எது என்று அறிய? இதனைப்பற்றி இப்பொழுது தேவை இல்லை என்பேன் அப்பனே!"

அப்பனே! எதை என்று அறிய அறிய! இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே, நலமாகவே. எதை என்று அறிய அறிய அப்பனே! அதனால் யான் சொல்லுகின்றேன். பின் மந்திரத்தை சொல் பார்ப்போம் அப்பனே. அதனால் சூரியனை தொட்டுவிடலாமா என்று கூறு? அனைத்தும் விடையளிக்கின்றேன் அப்பனே! இப்பொழுதே!

அடியேன்: "சூரியனை தொடுவது என்றால்! நீங்கள் சொல்லிக்கொடுத்த ஸ்லோகத்தை தான் சொல்ல வேண்டும்!"

குருநாதர்: "அப்பனே! நிச்சயம் முடியாது என்பேன். அனைத்தும், பின் மனதை கட்டுப்படுத்துவதற்குத்தான் அத்தனை மந்திரங்களும்.   இவ்வாறு கட்டுப்படுத்தினால் அப்பனே! மனம் என்பது எவை என்று அறிய சரியாக, அதாவது செம்மையாகிவிடும் என்பேன் அப்பனே. மேலும், மனதை எவன் ஒருவன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறானோ, அவன் தன் அனைத்திலும் வெற்றி அடையலாம் என்பேன் அப்பனே! ஆனால் நிச்சயம் எது என்று அறிய அறிய!

கேள்வி: "ஒரு மனிதனுக்குள் நடக்கிற அத்தனை நிகழ்ச்சியும் அதிர்வலைகள் தானே?"

குருநாதர்: "அப்பனே! இதை நிச்சயம் அறிவியல் பூர்வமாக விளக்குகின்றேன் அப்பனே! அப்பொழுதுதான் புரியும் என்பேன். ஆனாலும் உண்மையே!"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete