​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 12 January 2023

சித்தன் அருள் - 1266 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு!










9/1/2023 திங்கள் கிழமை ஆயில்யம் திருநாள் குருநாதர் அகத்திய பெருமான் குருபூசை தினத்தில் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு!!! 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே நலமாக என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே!!!  நல்விதமாக யானும் லோபா முத்திரையும் வந்து நல்லாசிகள் தந்துவிட்டேன் அப்பனே!!!! நலன்கள் தான் ஏற்படும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் ஒவ்வொரு பின் மனிதனின் வாழ்க்கையிலும் கூட அப்பனே சில சில வருத்தங்கள் எதை என்று தெரியாமலே வருவதுண்டு ஆனாலும் அவற்றுக்கெல்லாம் மூலாதாரம் எங்கு உள்ளது என்பதை எல்லாம் மனிதன் அறிவதில்லை அப்படி அறிந்து விட்டாலும் அப்பனே  நிச்சயம் பின் வெற்றி உண்டு என்பேன் அப்பனே!!!

அவ் அறியாமையில் தான் மனிதன் சுற்றித் திரிகின்றான் அப்பனே!!! இதனால் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன்!!!

இதனால் அப்பனே எதை எதை என்று அறிவதற்குள் அதை அறிந்து மனிதன் தெளிவடைவதற்கும் அப்பனே நிச்சயம் பக்திகள் என்ற ஆழமான அதாவது இன்னும் பக்திகள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே!!! அப்படி பின் நிச்சயம் பக்திகள் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே தெரிய தெரிய அப்பனே வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டு நாம் யார்   என்பதை கூட நிச்சயம் புரிந்து கொள்வான் மனிதன்!!!!

அப்படி புரிந்து கொண்டால் தான் அப்பனே தெய்வம் வந்து உதவிகள் செய்யும் அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் பின் ஆசைகளையும் பின் அதாவது ஆசையின் பின்னே போனால் எதை என்று அறிய அறிய பின்னே வரும் உன் கர்மா!!!!!

எதை என்று அறிந்து அறிந்து அதனால் தான் அப்பனே பின் அறிந்து அறிந்து இதனையும் கூட பல ஞானியர்கள் பின் செப்பிக்கொண்டே தான் வருகின்றார்கள் என்பேன் அப்பனே!!! 

ஆனால் மனிதனுக்கு புரிவதே இல்லை என்பேன் அப்பனே!!! இவ்வுலகம் விசித்திரமானது என்பேன் அப்பனே!!! கலியுகம் எதை என்பதையும் கூட பின் ஏற்கனவே யான் சொல்லியும் விட்டேன் அப்பனே எதை எதை என்று அறிவதற்கு !!!

அதனால் அப்பனே வாழ்க்கையின் பாதி அப்பனே மனிதன் தன் யோசனைகள் ஆகவே வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருவதால் ஒன்றும் லாபம் இல்லை என்பேன் அப்பனே

கடைசியில் இறைவனை பற்றிக் கொண்டு இருக்கும் பொழுது ஏன் இறைவனைப் பற்றிக் கொண்டான் எதை என்று அறிந்து என்றால் பயம் என்று ஒரு எதை என்று உள்ளுக்குள் வந்துவிடுகிறது என்பேன் அப்பனே!!!

பயத்தால் தான் அப்பனே இறைவனை பின் அவை அப்படி நடக்குமோ இப்படி நடக்குமோ என்றெல்லாம் பின் பயந்து ஒளிந்து இறைவனை சரணடைந்து விட்டால் அனைத்தும் செய்து விடுவான் என்ற எண்ணம்.

ஆனாலும் அப்பனே இவையன்றி அறிய அறிய இளம் வயதிலேயே இவ் பக்தி வந்து விட்டால் அவந்தனை ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே!!!

இளம் வயதில் செய்யும் தவறுகள் அப்பனே முதுமையில் நிச்சயம் கஷ்டங்கள் பட தூண்டுகின்றது என்பேன் அப்பனே!!

இதுதான் மனிதனின் நிதர்சனமான உண்மை!!!

அப்பனே அவை மட்டுமில்லாமல் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எந்தனுக்கும் பல வழிகளிலும் கூட பூசைகள் அப்பனே!!!! செய்கின்றார்கள்!!!

ஆனாலும் யான் எதையுமே விரும்புவதில்லை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் பின் செய்யட்டும் பின் ஆசிகள் கொடுத்துக் கொண்டே தான் வருகின்றேன்!!!

ஆனாலும் முதலில் என்ன செய்வது என்பதை கூட தெரியாமல் செய்து விடுகின்றார்கள் பின் யான் அகத்தியனுக்கு பூஜைகள் செய்தேன் இவ்வாறு செய்தேன் அனைத்தும் செய்தேன் எந்தனுக்கு ஒன்றுமே செய்யவில்லையே என்றெல்லாம் சொல்லி கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!

அதனால் முதலில் அப்பனே தாய் தந்தையரை வணங்காமல் எதை எவை என்று கூற அப்பனே என்னிடத்தில் வந்தாலும் ஏன் நீ இறைவனிடத்தில் சென்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே!!!

தாய் தந்தையரை முதலில் மதிக்க மதிக்க மதிக்க கோபங்கள் குறைந்து அப்பனே பொறுமை உண்டாகும் அப்பனே பொறாமை இவையெல்லாம் நீக்கி அப்பனே வந்தால் நிச்சயம் இறைவன் எதை என்று அறிந்து அறிந்து ஆசிகளும் யானும் ஆசிகளும் கொடுத்து அனுப்புவேன்!!

அப்படி இல்லை என்றாலும் கூட அப்பனே நிதானமாக எதை என்று அறிந்து அறிந்து நேரடியாக யான் அகத்தியனை வணங்குவேன் அனைத்தும் செய்வேன் என்றால் அப்பனே நிச்சயம் என்னுடைய ஆசிகள் இல்லையப்பா!!!!

நிச்சயம் பின் எதை என்று அறிந்து அறிந்து அதனால் தான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே தெளிவு பெறுங்கள் முதலில் அப்பனே!!! 

தெளிவு பெறாவிடில் அப்பனே இன்னும் எதையென்று அறிய அறிய பின் பூஜ்ஜியமே என்பேன் அப்பனே!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து பக்தி எப்படி செலுத்த வேண்டும் எப்படி எல்லாம் எண்ணங்கள் மாற வேண்டும் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து சொல்வதற்கு அப்பனே இன்னும் நீண்ட வார்த்தைகளும் கூட வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

இதனை சரியான வழியில்  பின்பற்றுபவர்களுக்கு வருத்தங்கள் இல்லை என்பேன் அப்பனே!!!

நலமாகவே ஈசனிடத்தில் எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஈசனின் அனுகிரகம் கூட அப்பனே கிடைத்தும் கொண்டே தான் இருக்கின்றது அப்பனே நலன்களாகவே இதனால் அனைத்தும் செய்து முடித்துக் கொள்வான் அப்பனே அவனே எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் என்பேன் அப்பனே நலமாகவே வெற்றிகள் பின் தொடரும் என்பேன் அப்பனே!!!

அதனால் எதையென்று அறிய அறிய மாணிக்க வாசக பெருமான் அங்கே இருந்து பல இன்னல்கள் எவை வந்தாலும் அவை தடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான் மனநிலையை மாற்றிக் கொண்டே தான் இருக்கின்றான் அத்திருத்தலத்திலே!!!! ( உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில் அணைகட்டு தாலுகா வேலூர் மாவட்டம்) அதனால் அப்பனே குறைகள் ஒன்றும் இல்லை பின் அவ்வளவு பாடிய பாடல்கள் எவை என்று அறிய அறிய  அங்கே இருப்பதாலும் காவலாளியாகவே இருக்கின்றான் அத் திருத்தலத்திலே!!! இதனால் எக்குறைகளும் வராது !!!

நலமாகவே நலமாகவே அப்பனை எதை எதை என்று அறிய அனைத்து திருத்தலங்களுக்கும் இன்றளவு யான் சென்றேன் அப்பனே!!!!

நலன்களாக ஆசிகள்!! ஆனாலும் ஒவ்வொருவரின் ஒவ்வொரு மனதை பார்த்தாலும் அப்பனே ஒவ்வொரு சோகங்களோடு தான் வணங்குகின்றார்கள் என்னை அப்பனே!!!

எதனை என்று அறிய அறிய யானும் பார்த்தேனப்பா!!!!

ஆனாலும் அப்பனே வரும் காலங்களில் அதாவது நிச்சயமாக கலியுகத்தில் அப்பனே பின் எதை என்று அறிந்து அறிந்து பின் கலியுகம் என்றாலே கஷ்டங்கள் என்று கூட யான் சொல்லிட்டேன் முன்பே!!!

ஆனாலும் நிச்சயம் சிறிது சிறிதாக மாற்றுவேன் என்பேன் அப்பனே!!!

ஆனால் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அதற்குப்பின் தகுதி நீங்கள்  வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!!

அத் தகுதியை நீங்கள் வளர்த்துக் கொண்டால் தான் அப்பனே யானும் பிரம்மாவிடம் போராடி வெற்றி காண முடியும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் விதியை கூட என்னால் மாற்ற முடியும் ஏனென்றால் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அனுப்பிவிட்டான் எதை என்று உணர்ந்து உணர்ந்து

அதனால் அப்பனே யாரிடம் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து தகுதி இருக்கின்றதோ அவனிடத்திலே முறையிட்டு அப்பனே பின் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே செய்தால்தான் அது நிச்சயம் அவந்தனுக்கும் தகுதி!!! எந்தனுக்கும் தகுதி!!!( பிரம்மாவுக்கும் மரியாதை அகத்தியருக்கும் மரியாதை) மதிப்பும் மரியாதையும் கூட!!!

அப்பனே அப்படி இல்லை என்றாலும் யானே கூட மாற்றி அமைத்தால் அப்பனே பின் அனைத்தும் பின் அகத்தியனே உந்தனுக்கென்ன?? உயர்ந்தவன் என்று நினைப்பா??!!!!!!

அனைத்தும் தெரியும் என்ற நினைப்பா???? என்றெல்லாம் எதை என்று அறிய அறிய அனைவரும் என்னை கேட்பார்கள்!!!!

ஆனாலும் நிச்சயம் அப்பனே எதை என்று உணர்ந்தும் உணர்ந்தும் அனைத்தும் தெரிந்தவன் நிச்சயம் அப்பனே!!! அதனால்தான் அப்பனே பொறுமையாக இருக்கின்றேன் அப்பனே!!!

அனைத்தும் தெரிந்தும் கூட பின் மனிதர்களுக்காக யான் போராடிக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!! அப்பனே!!! 

யார், யார் மூலம் எதைச் செய்ய வேண்டும் என்று கூட அப்பனே நிச்சயம் செய்வேன் அப்பனே நலன்களாக!!!

அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே நல்விதமாக அப்பனே

ஆதி வராக நல்லூரிலும் கூட இன்றளவு அப்பனே (ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில். ஆதிவராகநல்லூர். ஸ்ரீ முஷ்ணம். கடலூர் மாவட்டம்) நல்விதமாகவே கொடுத்து விட்டேன் ஆசீர்வாதங்கள் பல கோடி கொடுத்து விட்டேன் அப்பனே!!!

பின் எதை என்று அறிய அறிய ஓர் பெண்ணவளுக்கும் எம்முடைய ஆசிகள் அப்பனே!!!!அவள் தனை பார்க்கின்ற பொழுது நன்றகாகவே அப்பனே  எதையென்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அவள் தனக்கும் தலையின் மீது பின் கைவைத்து லோபாமுத்திரையும் கூட ஆசிர்வதித்து சென்று விட்டாள் என்பேன் அப்பனே!!!

நலன்களாக அங்கு இருக்கும் அனைவருக்கும் அவை மட்டும் இல்லாமல் படித்துறை (அம்பாசமுத்திரம் தாமிரபரணி படித்துறை) இருக்கும்  என்று அறிய அறிய அங்கேயும் ஆசீர்வாதங்கள் என்பேன் அப்பனே!!!

அவைமட்டுமில்லாமல் என்னுடைய தேசம்( பாலராமபுரம்) எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூற அப்பனே யானும் அங்கு வந்து நலன்களாகவே ஆசிகள் அனைவருக்கும் தந்து விட்டேன் அப்பனே!!!

நலன்களாகவே நலன்களாகவே இன்னும் ஏற்றங்கள் தான் உண்டு என்பேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஈசனின் ஆலயத்திலும் கூட அப்பனே நல்விதமான ஆசிகள் ஆசிகள் அப்பனே எவையென்று உணர்ந்து உணர்ந்து அப்பனே யான் அங்கும் இங்கும் அப்பனே என்று திரிந்து அப்பனே அனைவரையும் கூட எதை என்று அறிய அறிய யான் முன்னே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

பின் ராகுகாலம் இல்லை!!! எமகண்டம் இல்லை!!! அப்பனே!!! நாளில்லை!!! கோளில்லை!!! என்பது சித்தர்களுக்கு!!! 

ஆனாலும் அப்பனே மனிதன் எதை என்று கூற அப்பனே மனிதனுடைய ஆசைகள் அப்பனே இதைச்செய்வோம் என்று கூட பின் மனப்பூர்வமாக செய்தாலே அப்பனே யான் வருவேன் என்று கூட!!!....

அதனால் அப்பனே அனைவருக்கும் யான் ஆசிகள் வந்து தந்துவிட்டேன்!!!! 

ஆனாலும் ஒவ்வொரு நிலைமையும் பார்த்தால் கஷ்டங்களோடு தான் செய்கின்றார்கள் அப்பனே 

வேண்டாம் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால்  முழு மனதோடு """" அப்பனே அகத்தியப்பா """!!!!!!!! எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் நீயே!!!! என்று நிச்சயம் இருங்கள் அப்பனே!!!! 

நிச்சயம் எதை என்று அறிய அறிய உன் இல்லத்திற்கே வந்து எதை என்று அறிய அறிய அனைத்தும் யான் செய்து கொடுப்பேன் அப்பனே!!!! நலன்களாகவே!!!!  இது தான் உண்மை!!!  என்பேன் அப்பனே !!!

இன்னும் உலகம் எப்படியெல்லாம் போகின்றது எதையென்று அறிந்து அறிந்து அப்பனே எவற்றினின்று உணர்ந்து உணர்ந்து இக்கலியுகத்தில் எப்படியெல்லாம் நடக்கும்?? நல்லோர்களை எப்படியெல்லாம் மீட்டுக்கொள்வேன் என்பதைக்கூட வருங்காலங்களில் நிச்சயம் யான் செப்புவேன் அப்பனே!!! 

கவலைகள் இல்லை!!! 

எதையென்று அறிய அறிய ஏன்?  எதற்காக என்றால் அப்பனே இப்பொழுது கூட யான் பல வழிகளிலும் கூட இன்னும் இன்னும் அப்பனே பின் விஞ்ஞான முறையில் கூட விளக்கியுள்ளேன் அப்பனே!!!!! 

ஏனென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய தை மாதத்திற்கு முன்பே பின் அதாவது தை, மாசி பின் எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் நான்கு மாதத்திற்குள் எதை என்று அறிய அறிய அப்பனே சனியின் பின் எதை என்று அதாவது பின் அவந்தனும் எவை என்று அறிய அறிய கோள் பலமாக உமிழும் என்பேன் கதிர்கள் (சனிககிரகத்தின் கதிர்வீச்சு) 

அப்படி உமிழும் போது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே கஷ்டங்கள் தான் மனிதனுக்கு ஒவ்வொரு நிலைமையிலும் கூட கஷ்டங்கள் அப்பனே போராட்டங்கள் மனக்குழப்பம் தாழ்வுநிலை அடைதல் அப்பனே அதனால்தான் யான் எதை என்று அறிய அறிய அப்பனே எப்போது வாக்குகள் தர வேண்டும் என்பதையும் கூட யான் அறிந்தேன்!!!  சித்தர்களும் அறிவார்கள்!!!! 

அப்பொழுது தந்தால் தான் உயர்வுகள் நிலையை அடைவார்களே தவிர அப்பனே பின் யான் வாக்குகள் தந்தாலும் அகத்தியன் சொன்னானே!!! சொன்னானே!!! இன்னும் நடக்கவில்லையே என்றெல்லாம் கூறிக்கொண்டு இருப்பார்கள் அப்பனே!!! 

அதனால் தான் எப்பொழுது எதை எங்கே வாக்குகள் செப்ப வேண்டும் என்று நிச்சயம் எதை என்று சித்தர்களே அறிவார்கள் அப்பனே!!!! நலன்களாகவே அப்போது செப்புவேன் அப்பனே!!!!

அதனால் குறைகள் இல்லை!!! 

அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் எவ்வாறு எதை என்றும்..... 

உத்தரகோசமங்கையில் எதை என்று அறிய அறிய அங்கு ஈசனும் அன்றைய தினத்தில் (ஆருத்ரா தினம்)  எதை என்று அறிய அறிய வந்தான்!!!! அனைவருக்கும் ஆசிகள் எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே எவையென்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் ஓதிமலையிலும் கூட அப்பனே நிறைவாகவே அன்றைய தினத்தில் கூட அப்பனே முருகன் வந்து எதை என்று விளையாடி கொண்டு அனைவருக்கும் பின் மயில் வாகனத்தில் வந்து பார்த்தான் என்பேன் அப்பனே!!!! 

எவையென்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அப்பனே நல்முறையாக ஆசிகள் ஆசிகள் அப்பனே பலகோடிகள் உண்டு உண்டு என்பேன் அப்பனே 

இன்னும் மக்களுக்காக எதை என்று அறிந்து அறிந்து இன்னும் பின் எந்தனுக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் கூட மக்களுக்கு யான் தெரியப்படுத்துவேன் அப்பனே!!! 

ஏனென்றால் பிழைத்துக்கொள்ளட்டும் என்பேன் அப்பனே 

ஆனால் எதை என்று அறிய அறிய ஆனாலும் என் பெயரை சொல்லியும் ஏமாற்றுபவர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே அவர்களுக்கும் கூட தண்டனைகள் கொடுத்து கொண்டே தான்வருவேன் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய என்னை பயன்படுத்திக் கொண்டும் பின் யான் தான் பெரியவன் பெரியவன் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருப்பவனுக்கும் கூட யான் அடிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே!

அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய குருவுக்கு எதை என்று ஒரு சீடன் அப்பனே மிகுந்த அப்பனே எதை என்று அறிய அறிய பின் அப்பனே பெயரை பெற்று தர வேண்டுமே தவிர அப்பனே பெயரை கெடுக்கக் கூடாது என்பேன் கெடுக்கக்கூடாது என்பேன் அப்பனே!!!

இது அனைவருக்கும் பொருந்தும் என்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய இப்படியே யாங்கள் வாக்குகள் சொல்லாவிட்டாலும் அப்பனே பின் அகத்தியன் என்னிடத்தில் எதை என்று அறிந்து அறிந்து வருகின்றான் பின் சித்தர்கள் வருகின்றார்கள் என்று கூட பொய் சொல்லி வாக்குகள்!!!

நடைபெறவில்லையென்றால் நிச்சயம் மனிதன் சித்தர்களே இல்லை என்ற நிலைமைக்கு வந்து விட்டிருப்பான் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் யாங்கள் நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து இனிமேலும் மனிதனை விடப் போவதில்லை என்பேன் அப்பனே

நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே உண்மையுள்ளோர்கள் மட்டும் அப்பனே என் தந்தை அகத்தியன் என்று சொல்லுங்கள் அப்பனே!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து பொய்யானவர்கள் சொன்னால் அப்பனே அங்கேயே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே நிற்க வைத்து நிச்சயம் உதைப்பேன் என்பேன் அப்பனே!!!!

நலன்களாகவே நலன்களாகவே ஆசீர்வாதங்கள் உண்டு உண்டு என்பேன் அப்பனே!!

நலன்கள் ஆசிர்வாதங்கள் அப்பனே இன்றைய தினத்தில் அனைத்தும் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அனைத்து எவை என்று அறிய அறிய என்னை வணங்குபவர்கள் இடத்திற்கு எல்லாம் யான் சென்றிட்டு வந்தேன் அப்பனே!!!

நலன்கள் ஆசிகள் ஆசிகள் என்பேன் அப்பனே!!! 

எதையென்று உணர்ந்து உணர்ந்து ஆதிவராக நல்லூரில் கூட அப்பனே எந்தனுக்கு மனதிருப்தியாகவே இருந்தது என்பேன் அப்பனே  ஆசிகள்!!! ஆசிகள்!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!! நம் குருநாதரின் ஆயில்ய திருநாள் குருபூசை தினமன்று உலகமெங்கும் அகத்திய பக்தர்கள் குருபூசை விழாவினை  பக்தியோடு வழிபாடு செய்ததை ஏற்றுக் கொண்டு குருநாதர் வாக்குகள் மலர்ந்தருளினார். 

இவ்வாக்கில் குறிப்பிட்டு கூறிய ஆதிவராக நல்லூர் என்னும் கிராமத்தில் நடைபெற்ற பூசை எந்தனக்கு மிகவும் மன திருப்தியாக இருந்தது என்றும் உரைத்திருந்தார்.

நம் குருநாதர் திருவாய் மலர்ந்து அருளும் ஒவ்வொரு வார்த்தையும் இங்கே மிக முக்கியம்!!!! குருநாதர் ஒரு ஊரின் பெயரை குறிப்பிட்டு கூறுகின்றார் என்றால் அந்த ஊரை பற்றியும் அங்கு இருக்கும் ஆலயத்தை பற்றியும் குருநாதர் பொது உலகிற்கு வெளிப்படுத்த விரும்புகிறார் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!!!

தன்னுடைய வாக்கில் கூட வெளி உலகத்திற்கு வராத எத்தனையோ என்னுடைய பக்தர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் எந்தன்  ஆசிகள் கிடைத்துக் கொண்டே வருகின்றது என்றும்... நல்லோர்களை இணைத்து நல்விதமாகவே ஏற்றங்கள்  செய்வேன் என்றும் வாக்குகளில் கூறிக் கொண்டுதான் இருக்கின்றார்!!!

ஆதி வராக நல்லூர் குருநாதர் திருத்தலத்தை குறித்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது குருநாதரை அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார்!!!!

ஆதி வராக நல்லூர் கிராமத்தில் அகத்தியர் ஆலயம் 2020 ஆண்டு கட்டப்பட்ட ஒரு சிறிய எளிமையான ஆலயம்!!!

அந்த ஆலயத்தை கட்டி நிர்வகித்து வருபவர் திரு அகத்திய குமரன் ஐயா அவர்கள். அவர் ஜீவநாடி ஓலை சுவடி ஜானகிராமன் ஐயா அனுமதாசன் ஐயா நமது சித்தன் அருள் வலைத்தளம் என்று குருநாதருடைய பாதையை இயங்கிக் கொண்டு வருகின்றது என்று, இதுவரை அவர் அறிந்ததில்லை!!!!

இப்படி குருநாதர் அகத்திய பெருமாள் ஆலயத்தை பற்றி வாக்குகள் தந்திருந்ததை எடுத்துக் கூறிய போது மிகவும் அதிசயப்பட்டு ஆச்சரியப்பட்டு மனம் நெகிழ்ந்து போய்விட்டார்.

ஏனெனில் அகத்திய உலக வட்டாரத்தில் அவருக்கு யாரிடமும் தொடர்பு இல்லை. அவர் பணிக்கு செல்வது குருநாதரை வணங்குவது குரு ஆராதனை நினைத்து பாட்டுக்கள் எழுதுவது அதை வெளியிடுவது என்று அவர் வாழ்ந்து வருகின்றார்.

அவருக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணி.

அவர் படிப்பறிவு குறைவு என்றாலும் அகத்தியரை பற்றி பாடல் எழுதுவதற்கு ஞானத்தை குருநாதர் வழங்கியுள்ளார். குருநாதர் அகத்தியர் பெருமானை குறித்து பாடல்கள் எழுதி அதை ஆல்பமாகவும் வெளியிட்டுள்ளார். Youtube மூலமாகவும் பாடல்கள் வெளிவந்துள்ளது.

பொதிகை வாசனின் தரிசனம் காண வந்தோம் சுவாமியே!!!

தேடி அலைந்தேன் பொதிகை மலையிலே!!! போன்ற பாடல்கள் அகத்தியர் பக்தர்கள் இடையே மிகப் பரிச்சயமான ஒன்று இந்த பாடல்கள் ஆதிவராக நல்லூர் அகத்திய குமரன் ஐயா அவர்கள் மூலம் வெளியிடப்பட்டது.

மேலும் அவரிடம் பேசிய போது

9/01/2023 அன்று ஆயில்ய நட்சத்திர குருபூஜை மிக சிறப்பாக நடைபெற்றது குறிப்பாக திருவாசகம் முற்றோதல் கும்மி பாட்டு போன்றவை நம் குருநாதரை நினைத்து நாங்கள் கிராம மக்கள் மிகவும் பக்தியோடும் பாசத்தோடும் கொண்டாடினோம் என்று கூறியிருந்தார்.

குருநாதர் உரைத்த வாக்கினை அதிலும் குறிப்பாக ஒரு பெண்மணி அவருக்கு கிடைத்த ஆசீர்வாதத்தை எடுத்துக் கூறிய போது அவர் மிகவும் அசந்து போய்விட்டார்.

அவர் கூறியது என்னவென்றால் விருத்தாச்சலத்தில் இருந்து ஒரு பெண்மணி முற்றோதுதலுக்காக வந்திருந்தார். மிகச் சிறப்பான முறையில் பாடல்கள் பாடினார். அன்றைய தினத்தில் ஒரு சம்பவமும் அவருக்கு நடந்தது அவருடைய தங்க அணிகலன் ஒன்று காணாமல் போய்விட்டது.

அவ்வளவு கூட்டம் இருக்க தொலைந்த அந்த தங்க அணிகலன் மீண்டும் அவருடைய பார்வையிலே அத்தனை கூட்டங்கள் இருந்தாலும் அதை அவரே கண்டு எடுத்து குருநாதருக்கு நன்றி கூறி மகிழ்ந்தார்.

என்று கூறியிருந்தார்.... இதெல்லாம் குருநாதர் அகத்திய பெருமான்  லோப முத்திரை தாயின் விளையாட்டு என்று தான் தோன்றுகின்றது.. அந்தப் பெண்மணியின் தலையில் லோப முத்திரை தாய் கை வைத்து ஆசி வழங்கினார் என்று குருநாதர் வாக்கில் தந்த விஷயத்தை எடுத்துக் கூறிய போது அவரும் மீண்டும் ஆச்சரியப்பட்டு போனார்.

மேலும் ஆலயத்தை குறித்து அவர் கூறிய செய்திகள்.

அகத்தியர் ஆலயம் கொரோனா காலகட்டத்தில் அடியேன் மிகவும் கஷ்டப்பட்டு குருநாதர்க்காக இந்த ஆலயத்தை கட்டினேன்!!!

ஸ்ரீஆதிவராக நல்லூரில் சில்லிகாவனம் என்று சொல்ல கூடிய முருக சஞ்சீவி மலை உள்ளது. இந்த மலையில் தான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து உள்ளார்.

அவர் அவதரித்த ஒரு மைல் தொலைவில் தான் எனது தந்தை குருநாதனுக்கு அகத்தியர் பெருமான் காட்சி கொடுத்தார். அத்துடன் இரண்டு நிகழ்வுகளை செய்து உள்ளார். எங்களுக்கு சொந்தமான நிலத்தில் ஐம்பது அடி ஆழத்தில் கேணி உள்ளது. இந்த வழியாக நடந்து சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் தவறி கேணிக்குள் விழுந்து விட்டார். அப்போது மேலே எதுவும் கட்டமால் ஒரு கயிறு தொங்கிகொண்டு இருந்தது. அவர் பிடித்தார் அந்த கயிறு அப்படியே நின்றது. நானும் எனது சகோதரர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களை இழுத்து அவரை காப்பற்றினோம். அது வரையில் அந்த கயிறு எங்கும் கட்டமால் அப்படியே நின்றது. இந்த கேணியின் அருகைமாயில் தான் அகத்தியர் காட்சி கொடுத்த இடம்.

அதன்பிறகு ஒருநாள் எனது தந்தை தேவையில்லாத குப்பைகளை தீயிட்டு கொளுத்தி கொண்டு இருந்தர். திடீர் என்று தீ பக்கத்தில் உள்ள பனைமரத்தில் பரவி அந்த இடம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இது மற்றவர்களின் கரும்பு தோட்டத்திற்கும் பரவிடுமோ என்ற அச்சத்தில் கதறி அழுதார். திடீர் என்று ஒரு மழை பெய்தது அந்த தீ அனைத்தும் அணைந்தது. இந்த மழை வேறு எங்கும் பெய்யவில்லை. இதனை வியந்து பார்த்த நான் அன்றுமுதல் அகத்திய மகரிஷி மீது எனக்கு பக்தி வந்தது. அதன்பிறகு அவர் நின்று காட்சி கொடுத்த இடத்தில் ஒரு சிலை எழுப்பினேன் பிரதிஷ்டை செய்தபின் சிலையின் அருகாமையில் ஒரு நல்ல பாம்பு ஒரு நாள் முழுவதும் நின்று சென்றது. இன்று அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பினேன். இந்த ஆலயம் சுமார் 80 நாளில் முடிக்க பெற்று 90-வது நாளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு அகத்திய பெருமான் தம்பதியாக லேபாமூத்ராதேவி உடன் காட்சி கொடுக்கின்றார். இங்கு வருபவர்கள் ஆலயத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் ஓம் ஸ்ரீஅகத்திசாய நமஹ என்று சொல்லி தியானம் செய்தால் போதும் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து இன்னல்களும் தீரும் அத்தகையை வல்லமை படைத்தவர் இந்த அகத்தியபெருமான்

நன்றி! வணக்கம்.

குறிப்பு : இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை பூஜையும், மாதந்தோறும் பௌர்ணமியன்று பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு லோபமுத்ரா சமேத அகத்தியர் அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மார்கழி மாதத்தின் அகத்தியர் பிறந்த ஆயில்ய நட்சத்திரம் அன்று அகத்தியருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.  என்று .அகத்தியகுமரன் ஐயா அவர்கள் கூறினார்கள். 

பூசைகள் குறித்த விபரங்கள் 

வியாழன்தோறும் பூஜைகள்ஒவ்வொரு பௌர்ணமி நாளும் பூஜைகள்ஒவ்வொரு ஆண்டும் அகஸ்தியர் பிறந்தநாளை முன்னிட்டு. தமிழ்மாதம் மார்கழி நட்சத்திரத்துடன் கூடிய நாள் ஆயில்ய பூஜை முனிவருக்கு செய்யப்படுகிறது.

ஆலய முகவரி 

ப்ரபஞ்ச அகத்தியர் சித்தா சன்மார்க்க அறக்கட்டளை ஸ்ரீ ஆதிவராக நல்லூர், ஸ்ரீமுஷ்ண கடலூர்(மாவட்டம்), பின் - 608703

ஆதிவராக நல்லூர் ஆலயத்தின் சார்பாக வெளிவந்த குருநாதர் அகத்தியர் பெருமான் பக்தி பாடல்கள் youtube லிங்க்

SRI AGATHIYAR ATHIVARAGANALLUR @sriagathiyarathivaraganall2794.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: திரு அகத்தியகுமரன் ஐயா

09487268761

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அருள்மிகு அன்னை லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் திருவடிகள் துணை 🙏🙏🙏


    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  3. Om Sri LopaMudra Devi Sametha Agastheeswaraya Namaha. Thank you

    ReplyDelete