​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 8 January 2023

சித்தன் அருள் - 1259 - அகத்தியர் வாக்கு - 9


கேள்வி: "அனைத்தும் விதி என்றால், இறையருள், எப்படி வேலை செய்யும்?"

குருநாதர்: "அனைத்தும் பின் மதி என்றால், இறையருள் எப்படி வேலை செய்யும்?"

அடியேன்:"மதி என்பது, கர்மா வேலை செய்கிற நேரத்தில், ஒருவர் என்ன தீர்மானம் எடுக்கின்றார் என்பதை பொறுத்து வேலை செய்யும்."

குருநாதர்: "அப்பனே! விதியை கூட, பின் அறிந்து அறிந்து வெல்ல முடியும் என்பேன்! அப்பனே! எங்களால். எதை என்று உணர்ந்து, அதற்கு தகுந்தாற் போல் மனிதர்கள் இருந்தால், விதியை கூட மாற்றுவோம் அப்பனே! விதி என்று இருந்து, அதற்கு தகுந்தாற் போல் சில புண்ணியங்கள் இருந்தால், அவந்தனுக்கு விதியை கூட, தண்டனை, மதியினால் மாற்றுவோம். அவ் மதியினால், எங்கெங்கு செல்லவேண்டும் என்று கூட ஆராய்ந்து சொல்லி விடுவேன். பின் மதியினால், விதியும் மாறிவிடும்."

கேள்வி: "ஆன்மீக பாதையில் செல்லும் பொழுது, ஏன் குழப்பங்கள் வருகிறது?"

குருநாதர்: "அப்பனே! உண்மையான ஆன்மிகம் எது என்று அறிந்து அறிந்து செல்வதில்லை அப்பனே! அதனால்தான் குழப்பங்கள் என்பேன். திருடர்கள் அப்பா!"

கேள்வி:"ஆன்மீகத்தில் ஒருவர் முன்னேறிவிட்டார்,  என்பதற்கு, எது சாட்சியாகும்?"

குருநாதர்:"அப்பனே, எது என்று அறிய அறிய! எவை என்று உணர்ந்து, உணர்ந்து அப்பனே! இதுவரை முன்னேறவில்லை அப்பனே. முன்னேறினால், யான் சொல்வேன் அப்பனே!

கேள்வி:"இல்லை! ஒருவர் ஆன்மீக பாதையில், செல்லும் பொழுது, நீங்கள் சொல்கிறபடி  அனைத்தையும் செய்கிற பொழுது, அவர் சுய பரிசோதனையில், ஒரு முன்னேற்றத்தை பெற்று விட்டாரா? என்பதற்கு அளவுகோல் என்ன?"

குருநாதர்:"அப்பனே! எதை என்று அறிந்து, அறிந்து, யாரையுமே ஏற்றுக் கொள்ளவில்லை, ஈசனே! அப்பொழுது யான் என்னதான் பதில் கூறட்டும் சொல் மகனே!" [நாம் தான் என்னென்னவோ நினைத்துக் கொண்டு இருக்கிறோம்]

கேள்வி: "முக்தி, பிறவாநிலை என்பது என்ன?"

குருநாதர்: "அப்பனே! இதனை பற்றியும் கூட விளக்கம் இப்பொழுது தேவை இல்லை என்பேன் அப்பனே! இதனை பற்றியும் கூட முழுமையாக விளக்குகின்றேன், பொறுத்திருந்தால்! "

கேள்வி: "சமாதி நிலை பற்றி! சமாதி நிலை என்றால் என்ன?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து, அறிந்து! பின் உறங்கினாலே சமாதி நிலைதான் அப்பனே!"

கேள்வி:"அனைத்தும் மாயையா?"

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிந்து அறிந்து! அப்பனே! நிச்சயம் உண்மையே! அப்பனே! இன்று இருப்பவர்கள், நாளை இல்லையே!!"

கேள்வி:"தொழில் சார்ந்த பணிகள் மூலம் கர்மா சேருமா?"

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய! அறிய! கர்மா சேர்ப்பதற்காகவே, தொழில்கள் என்பேன். இப்படியும் சொல்லலாம்!"

கேள்வி: "பலமுறை, தொழிலில், தவறு என்று உள் மனம் சொன்னாலும், முதலாளி என்று ஒருவர் இருக்கிறார், அவர் சொல்கிறபடி, தவறென்றாலும், செய்யத்தான் வேண்டியுள்ளது. அதனால் கர்மா வருமா?"

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய! அறிய! எவற்றில் என்று அறியாத பட்சத்திலும், தந்தை தவறு செய்தால், பிள்ளைக்கும் வரும் என்பேன். எது என்று அறிந்து, அறிந்து, என் பிள்ளைக்கே சொல்லிவிட்டேன் அப்பனே! இதிலாவது தெரிந்து கொண்டிருக்கலாம் அப்பனே! அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து, நீ கேள்விகள் பல கேட்கலாம் அப்பனே! அதற்கும், யான் ஒன்றே ஒன்றைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அப்பனே! அதை நீ முதலில் உணர்வாயாக!"

கேள்வி: "இன்றைய சூழ்நிலையில், அதற்கு ஏற்ப வாழ்வது சாத்தியமா?"

குருநாதர்: "எதை என்று அறிந்து! அறிந்து! கலியுகத்தில் நிச்சயம் வாழ  முடியாது அப்பனே! எதை என்று உணர்ந்து! உணர்ந்து! அப்பனே! ஏதும் தேவை இல்லை என்று வந்தவனுக்கே, அப்பனே! வாழ்க்கை உண்டு என்பேன்." [இது உண்மை! எதுவும் வேண்டாம் என்றிருந்த பொழுது அனைத்தையும் கொண்டு கொட்டினார்கள்.]

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நம, நன்றி ஐயா🌹🌹🌹🙏🙏🙏

    ReplyDelete
  2. அகத்தீசாய நம 🙏🙇‍♂️ நன்றி ஐயா

    ReplyDelete