கேள்வி: "இதற்கு முன் ஒருவருக்கு பதிலளிக்கையில், 108 மணி நேரம் ஏதேனும் ஒரு திருத்தலத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தால், ஒருவரை நவகிரகங்கள் ஒன்றும் செய்ய முடியாது என கூறினீர்கள். அடியவர்கள் சென்று அமர ஏதேனும் ஒரு திருத்தலத்தை கூறுங்களேன்!"
குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! நீ இருக்கும் திருத்தலத்திலேயே இரு! அப்பனே! ஒரு திருதலத்தின் சக்தியானது, அது இருக்கும் இடத்திலிருந்து 100/200 (கீ/மி) வரை பரவி நிற்கும். அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து, நிச்சயமாக கோவிலுக்கு வெளியேயும் இருக்கலாம். வழியில், யாசகம் செய்பவனாகவும் சென்று அமரலாம்.
கேள்வி: "ஒருவர் ஞானியா? இல்லை அதுமாதிரி நடிக்கிறாரா என்று எப்படி கண்டு பிடிப்பது?
குருநாதர்: "ஒரு ஞானியிடம் சென்று, நான் எதையும் நம்ப மாட்டேன் என்று கூறு. இனிமேல், இதை தொடர்ந்து செய். அப்பனே! உண்மை எதுவென புரிந்து கொள்வாய் நீ!
கேள்வி: "லோபாமுத்திரா தாயினுடைய 108 அகவல் ஏதேனும் கிடைக்குமா?"
குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! ஏற்கனவே இருக்கிறது. அதையே நீ எடுத்துக்கொள்!"
கேள்வி: "அகத்தியப்பெருமானின் அஷ்டோத்திரம், ஏதேனும் கிடைக்குமா?"
குருநாதர்: "அப்பனே! அகத்தியன் வாழ்க! அவ்வளவுதான்!"
கேள்வி: "லலிதா சஹஸ்ரநாமத்தை தீக்ஷை பெற்றுத்தான் சொல்லலாம். அப்பொழுதுதான் பலனளிக்கும் என்று பலரும் கூறுகிறார்கள்! அப்படியானால், தீக்ஷை வாங்காதவர்கள், இதை கூறி பலனடைய முடியாதா?"
குருநாதர்: " அப்பனே! தீக்ஷை என்றால் என்னவென்று நீ கூறு?"
அடியவர்: "குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் மந்திர உபதேசமாக தருவது தீக்ஷை!"
குருநாதர்: "அப்பனே! அப்படி என்றால் மனித வடிவத்தில் யாரும் குரு இல்லை அப்பனே! மறைமுகமாக கொடுப்பவனே குரு! அப்பொழுது, என்னதான் நினைக்கிறாய் இது பற்றி!"
அடியவர்: "முதலில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டவுடன், ஒரு மந்திரத்தை உபதசித்தார்!"
குருநாதர்: "அப்பனே! அம்மந்திரத்தை கூறியும் எதுவுமே நடக்கவில்லையே அப்பனே! இது பற்றி என்ன கூறுகின்றாய் அப்பனே! அதனால், அன்போடு "அகத்தியா" என்று அழைத்துக் கொண்டு இரு. அது மட்டும் எமக்கு போதுமானது!"
கேள்வி: "பாலராமபுரத்தில், மஹாலக்ஷ்மியின் சாந்நித்யம் உள்ளதை உணர்கிறேன். அங்கு மகாலட்சுமிக்கு தனி சன்னதி வேண்டுமா?"
குருநாதர்: "அப்பனே! அங்கு லோபாமுத்திராவே மஹாலக்ஷ்மியாகத்தான் இருக்கின்றாள். அப்பனே! உனக்கு தேவையானதை எல்லாம் அவள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றாள். நலமாகவே, நீயும் அதை உண்டுவிட்டு நலமாகவே இருக்கின்றாய். அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! இன்னும் கொடுப்பாள் எதை எதை தரவேண்டுமோ அதை எல்லாம்."
கேள்வி: "இப்பொழுது பொதிகை மலையில் முன்னர் போல் இல்லாமல், அனைத்து பெண்களையும் மலை ஏற விடுகிறார்கள், உல்லாச பயணமாக. இது நல்லதில்லயே!"
குருநாதர்: "அப்பனே! ஒரு பழமொழி உண்டு. விதை விதைத்தவன், வினை அறுப்பான்! அவ்வளவுதான்! வரட்டும்! அனைத்தையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன், யான்!."
கேள்வி: "சம்பவார் வடகரை என்கிற கிராமத்தில், உங்களிடம் உத்தரவு வாங்கி, பொதிகையிலிருந்து பிடிமண் எடுத்து, உங்களுக்கு சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மேலே, பொதிகை மலை ஏறி வந்து தரிசனம் செய்ய முடியாதவர்கள், இங்கு தரிசிக்கலாம் என்கிறார்கள். அது பற்றி!"
குருநாதர்: "அப்பனே! யான் அங்கு, இங்குதான் இருக்கிறேன் என்று நினையாதீர்கள். யான் எங்கும் இருக்கின்றேன்!
கேள்வி: "உத்தர காவேரி நதிதீரத்தில், அகத்தியப்பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் அபிஷேக பூஜைகள் செய்தேன். அதை ஏற்றுக்கொண்டீர்களா? திருப்தி தானா?"
குருநாதர்: "அப்பனே! நீ செய்கின்றாய், நீ செய்கின்றாய் என்று கூறுகின்றாய்! உன்னை பூஜை செய்ய அழைத்ததே நான்தான்."
கேள்வி: ஒரு யாத்திரை செல்லும் போது, எந்த வித ஆபத்தும் வராமல், சென்று திரும்பி வர என்ன வழி?"
குருநாதர்: "அனைத்திற்கும் பாதுகாப்பு, இறைவன் தான் வழி. இறைவனை நினைத்துக்கொண்டு செல். நலமாகும்!"
கேள்வி: "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று எல்லோரும் கூறுகிறார்கள். அது பாரத தேசத்தின் தெற்குப்பகுதியை, அல்லது தமிழகத்தை குறிக்கிறதா?"
குருநாதர்" அப்பனே! எதை என்று அறிய! அறிய! பின் அனைத்திற்கும் ஒருவன், ஈசன்தான், என்பேன்!"
கேள்வி: "சேர மன்னர்கள், நாராயணருக்கு திருவட்டாறில் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களே பின் திருவனந்தபுரத்தில், பத்மநாபருக்கு கோவில் கட்டினார்கள். நாராயணருக்கு பூஜை செய்வதுதான் முக்கிய எண்ணமென்றால், இரண்டாவது கோவில் இங்கு எதற்கு?"
குருநாதர்:"அப்பனே! இதில் ரகசியம் உள்ளது என்பேன் அப்பனே! ஆனால் இப்பொழுதிற்கு இல்லை அப்பனே!
கேள்வி: "இரண்டு கோவில்களுக்கும் தொடர்பு இருக்கா?"
குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய! அறிய! நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே! அங்கும் இங்கும் ஒரு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது அப்பனே! ஆனாலும், அப்பனே! அச்சுரங்கப்பாதையில் என்னதான் இருக்கின்றது என்று தெரிந்து கொண்டால், தங்க நகைகள்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே! இன்னும் அறிய! அறிய! ஆனால், பூதங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றது அப்பனே! பாம்புகளும் காவல் காக்கின்றது அப்பனே! இதற்கு மேல் கூறாமல் இருப்பதே நல்லது அப்பனே!
கேள்வி: "பத்மநாபசுவாமி கோவிலில், தங்களுடைய மூலஸ்தானம் எங்கிருக்கிறது?"
குருநாதர்: "அப்பனே! அனைத்தும் என்னுடையதுதான்!"
கேள்வி கேட்க தாமதமானவுடன்.....
குருநாதர்: அப்பனே! நீங்கள் யோசித்துக்கொண்டுதான் இருப்பீர்கள். நாளை பொழுதும் வருகின்றேன். எதை என்று அறிய! அறிய. நாளை பொழுது (அமாவாசை) எது என்று அனைவருக்கும் தெரிந்ததே! எது என்று அறிய, த்யானத்தில் அமர்ந்து, எதை என்று உணர்ந்து, உணர்ந்து, எதனை என்று அறிய, அறிய, பல ஆன்மாக்களும் எம்மை நாடி வரும். அவைகளுக்கெல்லாம், எதை என்று அறிய! அறிய, பிறகு எங்கெல்லாம் பிறக்கப்போகின்றாய், எதை என்று அறிந்து, அறிந்து, அகத்தியன், எதை என்று உணர்ந்து, உணர்ந்து, இன்னும் பிறக்கப் போகின்றேனா? என்று அமாவாசை திதியில் அவ்வான்மாக்கள் கூறும் என்பேன். பாவப்பட்டு எதை என்று அறிந்து அறிந்து, மோக்ஷமும் கொடுக்க வேண்டும். அதனால், எது என்று அறிந்து, அறிந்து, நல்முறையாகவே, எம்முடைய ஆசிகள்! எமக்கும் வேலைகள் உண்டு. ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே! நலன்களாக, மீண்டும் ஆசிகள், இங்கு வந்தே உரைக்கின்றேன்!
அகத்தியர் சென்று விட்டார் என நினைத்து, ஜானகிராமனிடம் "பிறகு வந்து உரைக்கின்றேன் என கூறினார், எங்கு, எப்போ, எப்படி? என்று அவசரமாக கேட்டுவிட்டேன்.
நாடியில் இருந்த அகத்தியர் "அப்பனே! எங்கு, எப்பொழுது, எப்படி என்று கேட்கலாமா? எப்படி இவன் இங்கு வந்தான்? அது போலத்தான், இவன் இங்கு வருவான். யான் அழைத்துக் கொண்டு வருகின்றேன் அப்பனே! எது என்று அறிய! அறிய! பத்மநாபனும் கூட அதி விரைவில் அழைப்பான் என்பேன். அனைவருக்கும், எம்முடைய ஆசிகள் என்று கூறிவிட்டு. மற்றவை எல்லாம் பின்பு உரைக்கின்றேன்!
"அகத்தியப்பெருமானுக்கு நமஸ்காரம்!" என்று கைதொழுது அனைவரும் மரியாதை செய்தோம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
எம்பேருமானே அகத்தீசா...ஞானக்கடலே... தங்களின் திருவடியே சரணம். இன்னும் பிறக்கப் போகின்றேனா என்று அமாவாசை திதியில் அவ்வான்மாக்கள் கூறும் என்பேன் பாவப்பட்டு எதை என்று அறிந்து அறிந்து மோட்சமும் கொடுக்கவேண்டும் என்று கூறியது போல் இப்பூவுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும் (தண்டிக்காமல்,கோபப்படாமல்) பாவப்பட்டு இரக்கம் காட்டி மனிதகுலத்தை வழிகாட்டி வாழ வகை செய்யும் அய்யனே...இதைத்தான் (சித்தன் அருள் வலைப்பூவில்) தங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன். (உத்தரவு அல்ல ) எம்பெருமானே அருள்செய் ஞானக்கடலே. ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் நமசிவாய
குழந்தை பேரு அமைய பரிகாரம் அகத்தியரிடம் வாக்கு கேட்டு சொல்லுங்கள் ஐயா அனைவருக்கும் பயன்பெறும்
ReplyDeleteவணக்கம்! பலருக்காகவும் அகத்தியப்பெருமானிடம் குழந்தை பேறு அமையக் கேட்ட பொழுது, அது அவரவர் பூர்வ கர்மாவும், பிறப்பும் சம்பந்தப்பட்டது. பிறப்பு என்பது தெய்வ ரகசியம். அதை தீர்மானிக்கும் உரிமை இறைவனிடம் தான் உள்ளது. இருப்பினும், சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு சிறு சிறு பரிகாரங்கள் மூலமாகவும் பூர்வ ஜென்ம பாபத்தை குறைத்துக் கொள்வதாலும் அமைகிறது. ஜாதகத்தில் அல்லது பூர்வ ஜென்மங்களில் பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் சற்று தாமதிக்கும். ஆயினும் செய்கிற பரிகாரங்களை ஆத்மார்த்தமாக செய்து, விதி விலகி வழிவிட காத்திருக்கத்தான் வேண்டும். ஒரு போதும் மனம் தளர்வது கூடாது. தாயும், தந்தையாகவும் விரும்புகிறவர்கள், பொறுமையாக இருக்கவும் வேண்டும், மிக மிக உயர்ந்த பக்தியோடு இருக்க வேண்டும், என்றார்.
Deleteநாடியில் பொதுவாக்கு படிக்கும் பொழுது, இதை பற்றி மீண்டும் கேட்க்கிறேன்.
https://siththanarul.blogspot.com/2023/01/1272-15.html
Deleteஓம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வராய நமோ நம ஶ்ரீ
ReplyDelete