​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 11 January 2023

சித்தன் அருள் - 1265 - அகத்தியர் வாக்கு - 12


​கேள்வி: "பொதுவாகவே, சித்தர்கள் சிலை அல்லது உருவ வழிபாட்டுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து உண்டு. அப்படி இருக்க, இத்தனை கோவில்களை உருவாக்கி மனிதர்களுக்காக கொடுத்தது ஏன்?

குருநாதர்: "அப்பனே எதை என்று அறிய! அறிய! நிச்சயம் உணர்ந்து சொல்கின்றேன் அப்பனே! உண்மை தான் அப்பனே. "நட்டக்கல்லும் பேசுமா?" என்று ஒரு பாடல் கூட இருக்கின்றது. அதையும் நீ உணர்வாய் அப்பனே! அதில் ஒரு சூட்சுமம் உள்ளது அப்பனே! இப்படி சொல்லிவிட்டாலே உந்தனுக்கும் அனைவருக்கும் குழப்பமாகிவிடும். ஒன்றை மட்டும் சொல்லுகின்றேன் அப்பனே! ஒரு தலத்தில், இறைவனை வா வா என்று சொன்னார்கள். ஆனால் இறைவனும் வந்து விட்டான். ஆனாலும் அவன் மீது பக்திகள் அதிகம். நீ இங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால், அப்படியே நின்றுவிட்டு அவன் ஆன்மாவோடு பறந்துவிட்டான்.

கேள்வி: "திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும் என்று கூறுவார்கள்! அதனுடைய எளிய அர்த்தம் என்ன?"

குருநாதர்: "அப்பனே! பெருமாளை பார்த்திட்டு பின்னே, அதாவது, பெருமாளை பார்த்துவிட்டு அப்படியே திரும்பி பார்த்தால் அதன் சூட்சுமம் புரியும் என்பேன். அதுதான் உண்மை! அப்பனே! எதை என்று உணர்ந்து, உணர்ந்து! ஆனாலும் பின் கேட்டதே தவறு என்பேன், "பெருமாள்" என்று கூட. அப்பனே! பின் "முருகன்" என்பேன்.

கேள்வி: "வேளி மலையில் முருகப்பெருமான், உங்களுக்கு வர்மம் கற்பித்ததாக கூறுகிறார்கள். அது உண்மையா?

குருநாதர்: "எது என்று அறிய, யான் தான் கற்பித்தேன் அனைவருக்கும்!"

கேள்வி: "அப்படியாயின்! முருகர் உங்களுக்கு எங்கு வைத்து சொல்லிக் கொடுத்தார்?"

குருநாதர்: "அப்பனே அனைத்தும் உணர்ந்தவன் யான். அப்பொழுது, எந்தனுக்கே சிறு வித்தைகளா என்ன?"

கேள்வி: "உங்களுக்கு, தமிழை, திருத்தணியில் வைத்து போதித்தாரா?"

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய! தமிழே யான்தான்! அப்பனே! எதை என்று அறிந்து அறிந்து! அனைத்தும் கற்பித்துத்தான் நீ தெரிந்து கொண்டாயா என்ன? அப்பனே! சில விஷயங்களை எண்ணிக்கொள்.

கேள்வி: "வேளி மலை சென்றபொழுது, கோவிலுக்குப் பின்னால் ஒரு இடத்தில் அமர்ந்த பொழுது, நல்ல சக்தி/அருள் குவியல் ஒரு இடத்தில் உள்ளதை உணர்ந்தேன். தியானம் செய்ய உகந்த இடமாக, ஏன் இந்த இடம் மட்டும் இப்படியும் இருக்கிறது, இதற்கு முன் வந்திருந்து பார்த்தது போல் உள்ளதே என உணர்ந்தேன். அதற்கான காரணத்தை தேடிப்போகும் பொழுது, அந்த கோவில் பற்றிய தகவலில், முருகப்பெருமான் உங்களுக்கு வர்ம கலையை போதித்ததாகவும், நீங்கள் பொதிகையில் வைத்து மற்ற சித்தர்களுக்கு இதை கற்பித்ததாகவும் உள்ளது. அதனால் தான் கேட்டேன்?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! இதெல்லாம் மனிதன், பின் காசுகளுக்காக எதை எதையோ சொல்லி, கூறிக் கொண்டிருக்கின்றான். அனைத்தும் ஏமாற்று வேலைகள். திருடர்களப்பா! என்று பலமுறை யான் சொல்லிவிட்டேன் அப்பா! அதாவது, எதை என்று அறிய! அறிய! சித்தர்களுள், பாகுபாடு இல்லை அப்பனே! அனைத்தும் உணர்ந்தவர்கள் யாங்கள். அப்பனே! கூடுவிட்டு, கூடு பாயும் திறமை எங்களுக்கு உண்டு. அப்பனே! மழை வா என்றால் வந்துவிடும். அப்பனே! பின் கடலில் யாங்கள் நடப்போம். உலகமே எது என்று அறிய, நீரை என் கையில் வைத்துவிடுவேன். நீ சொல்வதெல்லாம் ஒரு தூசி என்பேன். அப்பனே! தியானங்கள் செய்தாயே! அப்பனே. இன்னும் ஆழ்ந்த தியானங்கள் செய்திருந்தால், அனைத்தும் உந்தனுக்கு புரிந்திருக்கும் அப்பனே! புரிய வைக்கின்றேன்!"

கேள்வி: "விஞ்சானத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று ஒரு கூற்றுள்ளது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இவர்களால், ஒரு நிலைக்குமேல் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லையே !"

குருநாதர்: "நிச்சயம் எது என்று அறிய அறிய! மனிதர்களால், ஒன்றையும் சாதிக்க முடியாது என்பேன். என்னை மீறிய விஞ்சானமா? சொல்! அப்பனே! எதை என்று அறிந்து அறிந்து, பல கண்டுபிடிப்புகளை, உலகத்துக்கு யானே தெரிவித்துவிட்டேன். ஆனால், என் பெயர் வரவில்லை அப்பனே!"

கேள்வி: "எல்லா மருத்துவமுறைகளும் உங்கள் அனுமதியுடன்தான் இந்த பூமியில் வந்ததா?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! என்னுடைய அனுமதி இருந்தால், உடனடியாக அனைத்தும் சரியாகிவிடுமே! கூறு இதற்கு பதில்! அப்பனே! கர்மத்துக்கு தகுந்தவாரே, அனைத்தும் நடக்கிறது என்பேன்."

கேள்வி: "மருத்துவத்துறை மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும், பிரம்மஹத்தி தோஷம் வருவதற்கான வாய்ப்புண்டா?"

குருநாதர்:"அப்பனே! எதை என்று அறிய! அறிய! நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே!"

கேள்வி: "இப்போது, ஒருவர் ஒரு உணவு விடுதி நடத்துகிறார் என வைத்துக் கொள்ளுங்கள்! அவருக்கே தெரியாமல் ஒரு தவறு நடக்கிறது! அந்த உணவு விடுதியில் சாப்பிட்ட ஒருவருக்கு உடல் பாதிப்பு வந்தால்,  இல்லை அவருக்கு கீழே வேலை பார்க்கிறவர்கள், தெரிந்தோ/தெரியாமலோ தவறு செய்தாலும், அந்த உணவு விடுதியை நடத்துபவருக்கு அந்த தோஷங்கள் வருமா?

குருநாதர்: "அப்பனே! தெரிந்தே செய்தால், குற்றம் குற்றமே! தெரியாமல் செய்தால், அப்பனே! யாங்களே ஏதோ ஒரு ரூபத்தில் வந்து, அந்த பாபத்தை/கர்மாவை ஒரு வழியில் அழித்து விடுவோம் அப்பனே! பின் யோசித்து செய்!

கேள்வி: "இல்லை! அப்படி சேருகிற கர்மாவை, உடன் உடனேயே கழித்துவிட ஏதேனும் வழி உள்ளதா?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! ஆனாலும் கர்மா எவரையும் விட்டதில்லை. நேற்றைய பொழுதே யான் சொன்னேன். அப்படி சொல்லும் போதுதான் யான் சொன்னேன்! மனிதன் என்றால் கர்மா, என்று! இதை நீ புரிந்து கொள்ள வேண்டும் முதலில்."

கேள்வி: "மனித எண்ணங்கள்/சிந்தனை, "தான் யார்" என்று நிலைக்கு செல்லும் பொழுது, மேலும் உணர என்ன செய்ய வேண்டும்?"

குருநாதர்: "அப்பனே! முதலில் சொன்னாயே! அப்பொழுதுதான் முதல் வகுப்பில் வருகின்றான், அப்பனே! மனிதன்."

கேள்வி: "எண்ணம் என்பது பாதிப்பை உருவாக்குமா?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! அப்பனே! தெரிந்து கேட்கின்றாயா? தெரியாமல் கேட்கின்றாயா? உருவாக்கும் என்பேன்!"

கேள்வி: "எதற்காக கேட்கிறேன் என்றால், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை/சிரமப்படுகிறார் என்று தெரிந்து, இறைவனிடம் நாம் வேண்டிக் கொண்டால் கூட, சிலருக்கு அது பலனளிக்கிறது, பலருக்கு அது போய் சேருவதே இல்லை."

குருநாதர்: "அப்பனே! அனைத்திற்கும் காரணம்! மீண்டும், மீண்டும் கூறுகின்றேன்! கர்மா தான் காரணம்!" (ஒவ்வொரு மனிதனும் கர்மாவை குறைத்துக் கொள்ள வேண்டும்!]

கேள்வி: "பத்மநாப சுவாமி கோவிலை பற்றி சொல்லும் பொழுது, "தவறு செய்தால், கொல்லும்/தண்டிக்கும் தெய்வம்" என, நீங்கள் கூறியதாக உள்ளதே! அது உண்மை தானா?"

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! கொடுப்பது ஏழுமலையான்! அப்பனே! எடுப்பதும் அதே ஏழுமலையான்தான்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் தத் புருஷாய வித்மஹே சிவபுத்ராய தீமஹீ தந்நோ அகஸ்திய சித்த ப்ரஜோதயாத்
    ஓம் அகத்தியர் திருவடிகளில் சரணம்
    ஓம் அகதீசாய நம

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Agastheeswaraya Namaha. My Humble Namaskarams to Agasthiya Peruman and Thank you very much Agnilingam Aiyya

    ReplyDelete