​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 20 January 2023

சித்தன் அருள் - 1273 - அகத்தியர் வாக்கு - 16


கேள்வி: "உப்பின்மேல் உள்ள ஆசையினால் தானே ஒரு மனிதனுக்கு கர்மா சேருகிறது?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! அறிந்துதான் நீயும் கேள்விகள் கேட்கின்றாய் அப்பனே! அறிந்துதான் சொல்கின்றேன் அதற்கு பதில்,  உன்னிடத்தில் உள்ளது!"

கேள்வி: " எளிய முறையில் பித்ரு தோஷம் விலகுவதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?"

குருநாதர்: "அப்பனே! நிச்சயம்! எது என்றுஅறிய! அறிய! இதனை பல வாக்குகளில் யான் செப்பிக்கொண்டே வருகின்றேன் அப்பனே! வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டே வாருங்கள் என்பேன் அப்பனே! இதனால், ஏதோ ஒரு ரூபத்தில், நிச்சயம் முன்னோர்கள் வந்து உட்கொள்வார்கள் என்பதையும் கூட. கூறிக்கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே! எதை என்று அறிய! அறிய!"

கேள்வி: "என் நண்பர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. அவருக்காக, கோடகநல்லூர் பெருமாளிடம் போய் மஞ்சள் மருந்து வாங்கி கொடுக்கலாம் என்று மனதுள் ஒரு சிறு எண்ணம். போகலாமா?"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய அறிய! ஆனாலும் அப்பனே! இப்பொழுதுதான் சொன்னேன், எதை என்று அறிய! அறிய! கர்மா, யாரைத்தான் விட்டது? ஆனால், நிச்சயம் முயற்சி செய்துகொள், பார்ப்போம் யானும் துணை நிற்கின்றேன்!".

கேள்வி: "எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ்ந்து விடு என்று பல முறை மனிதர்களுக்கு நீங்கள் சொல்லிவிட்டீர்கள். அதை கொஞ்சம் எளிய முறையில் விளக்க முடியுமா? மற்றவர்களுக்கு சொல்வதற்காக!"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! இவற்றின் உண்மைகளை புரிந்து! புரிந்து! அப்பனே! சரியான வழியில் சென்று கொண்டிருந்தாலே, இறைவன், நல்விதமாக, அவந்தனுக்கு பிடித்துவிடும் என்பேன். இதனால், இவன் சரியான வழியில் சென்று கொண்டிருக்கின்றான்! நலம்! மீண்டும், பின் இவந்தானுக்கும் பல வழிகளிலும் நன்மைகள் செய்வோம் என்று. அதனால்தான், பின் இறைவனுக்கும், மனிதனை பிடிக்க வேண்டும் அப்பனே! அப்பொழுதுதான் அனைத்தும் செய்வான், என்று கூட. இது மறைமுகமான பேச்சே!

கேள்வி: "ஆனால், நிறைய மனிதர்கள் அந்த வழியில் செல்லும் பொழுது, ஆணவம், அகங்காரம், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம், எல்லாமே அவர்களுக்குள் அமைந்து விடுகிறதே!"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! முதலில், இறைவனை வணங்குவது, பின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அப்பனே! பின் இப்படி இருந்தால், எப்படித்தான்?"

குறிப்பிட்ட அகத்தியர் வாக்கு!

  1. "சிறு எறும்புத்தான் அனைவரும் எந்தனுக்கு"
  2. "எந்தனிடத்தில் இருப்பவருக்கு என்ன தேவையோ அதை யாமே பார்த்துப் பார்த்து கொடுப்போம். எனவே, உன் சேவையை தொடரு!"
  3. "என்னிடத்தில் வந்துவிட்டால், முதலில் யான் கர்மாவைத்தான் நீக்குவேன்."
  4. "பாபங்கள் விலகிட திருக்கடையூர் சென்று வா!"
  5. "மனதை இருத்தி, த்யானத்தில் இறைவனை அழைத்தால், அவனே வருவான்!"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. அப்பனே துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🌹🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Thayar Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete