10/2/2024 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் குலதெய்வமான படே தேவ்காளி மந்திர். அயோத்தி.
அம்பலத்தோனை மனதில் எண்ணி பரப்புகின்றேன் புசுண்ட முனி!!!!
எண்ணற்ற கோடிகள் மனிதனை யான் பின் கோடி கோடிகளாகவே மனிதன் பிறக்கின்றான் பிறக்கின்றான்!!!
ஆனால் பின் அறிந்தும் இறந்தும் பின் பிறக்கின்றான் ஆனால் அறியாமலும் கூட வாழ்ந்து வாழ்ந்து இப்படியா ஒரு பிறவி?????
ஆனாலும் அதில் கூட பல பல எண்ணற்ற தவறுகள் ஆனாலும் அதில் கூட சில புண்ணியங்கள்!!!
ஆனால் புண்ணியங்களை விட தவறுகள் அதாவது பாவங்கள் தான் மிஞ்சி மிஞ்சி காணப்படுகின்றது!!
இதனால் தான் மிகவும் துன்பங்கள் துன்பங்கள்
இதனால் மனிதன் பின் திருந்திக்கொள்ளவில்லை என்றால் அழிவுகள் ஏற்படுவது நிச்சயம்!!!
வந்து கொண்டே இருக்கின்றது இன்னும் பூகம்பங்கள்!!!! இன்னும் பெண்களால் அழிவு!!!
இன்னும் இன்னும் பின் அறிந்தும் கூட கிரகங்களை மாற்றி அமைப்பான் இடைக்காடனே!!!!
அவ்வாறு மாற்றி அமைக்கும் பொழுது இவ்வுலகத்தில் ஜோதிடர்கள்!!! ஜோதிடர்கள்!!! என்கின்றார்களே அவர்கள் சொல்லும் நிச்சயம் பின் பொய்யாகும்!!!!!
ஏனென்றால் பின் இடைக்காடனுக்கு அறிந்தும் கூட ஈசன் உத்தரவு இட்டு விட்டான்!!!!!
உடனடியாக மாற்று !!!! கிரகங்களை மாற்று!!! சரி இல்லாத நிலையில் அதாவது சரியாக இருந்தாலும் அதை மாற்றி அமைத்து நிச்சயம் பின் மனிதன் திருந்தவில்லை என்றால் பின் அழி!!!!!
என்றெல்லாம் ஈசனின் கட்டளையும் கூட!!!!
(மனிதர்களுடைய ஜாதகத்தில் கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும் அவை நன்மை செய்யும் என்ற நிலையில் இருந்தாலும் மனிதன் திருந்தவில்லை என்றால் புண்ணியங்கள் இல்லை என்றால் ஈசனுடைய கட்டளைப்படி அந்த கிரக சூழ்நிலையை இடைக்காடர் சித்தர் மாற்றி நன்மை தரும் கிரகங்களை எல்லாம் கெடு பலன்கள் தரும்படி செய்து மாற்றி அமைத்து அழித்துவிடுவார் இது ஈசனின் கட்டளை)
இதனால் அழகாகவே ஈசன் கருணை உள்ளவன் மிக்க மிக்க கருணை உள்ளவன்!!!
ஆனால் மனிதன் மீது இப்பொழுது ஈசனே கோபம் கொள்கின்றான்!!!...... என்றால் அப்பொழுது நீங்கள் சிந்தியுங்கள் எவ்வளவு பெரிய திருடர்கள் என்று!!!!
இதனால் யான் சாடிடுவேன் மனிதன் நிச்சயம் திருடன்!!
ஏனென்றால் மனிதன் நிச்சயம் மனதை மாற்ற என்னென்ன வித்தியாசங்கள் என்னென்ன பல பல வழிகளிலும் கூட பின் படங்கள் காட்டுவான்!!!
இன்னும் இதைச் செய்தால் அவை என்றெல்லாம் அவை செய்தால் இவை என்றெல்லாம் ஆனால் நிச்சயம் பின் கடைசியில் அழியப் போகின்றது அவனை விட அதாவது சொல்கின்றானே அவந்தனுக்கு பின் அவன் வாழ்ந்து விடுவான் ஆனால் இப்பொழுது அறிந்தும் அறிந்தும் இவ்வாறு செய்!! அவ்வாறு செய்!! என்று சொல்கின்றானே அவந்தனுக்கு ஆயுள் பங்கம்!!! இந்த நோய்கள்!!! இன்னும் ஏராளம் வந்துவிடும்.
ஏனென்றால் அறிந்தும் பிறர் கர்மங்களை கூட சுமந்து சுமந்து சுமந்து!!!!
யார் ஒருவனுக்கு அதாவது இறைவனாலேயே நிச்சயிக்கப்பட்டு மனிதன் இவ்வாறு தான் சொல்ல வேண்டும் என்று...அவ் அனுக்கிரகங்கள் இருந்தால் தான் சொல்ல வேண்டுமே தவிர!!!!!!
(ஒருவருக்கு பிரச்சினைகள் தீர வழிகள் பரிகாரங்கள் உபதேசங்கள் செய்வதற்கும் இறைவனால் தேர்ந்தெடுக்க பட்டிருக்க வேண்டும்!! இறைவனுடைய அனுமதி வேண்டும். அப்படி இறைவனுடைய அனுமதியில்லாமல் கண் இஷ்டத்திற்கு அதை செய் என்று உபதேசமாக கூறினால் அந்த கர்மா சொல்பவர்களுக்கு வந்து சேரும்)
ஆனால் இப்பொழுது காசுகளுக்கு ஆசைப்பட்டு யான் அதை இவை செய்கின்றேன் திருத்தலம் கட்டுகின்றேன் இன்னும் குலதெய்வத்திற்கு பல வழிகளில் கூட அன்னத்தை ஈகின்றேன் என்றெல்லாம்!!!
இதுவே ஒரு வேலையாகி விட்டது!!!!
பிழைப்பு பிழைப்பாகிவிட்டது!!!!
மனிதா!!!! கஷ்டங்கள் பட தெரியாத மனிதனுக்கு இவைதன் இவ்வாறு சுலபமாக சம்பாதிக்கலாம் என்றெல்லாம் எண்ணம்!!!
அடடா !!!அடடடா!!!! அழியும் மனிதா!!!!!!! இன்னும் உன்னையும் அழித்துக் கொண்டு!!!!!!!!
ஆனாலும் கஷ்டங்கள் பட்டு அதில் நீ (திருத்) தலத்தை அமை!!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!!
(இறைவனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்றால் சுயமாக உழைத்து சொந்தமாக சம்பாதித்து அந்த பணத்தில் கோயிலை கட்ட வேண்டும் அதை விட்டுவிட்டு அனைவரிடமும் பணத்தை வாங்கி திருத்தலத்தை அமைக்க கூடாது)
ஆனால் நிச்சயம் அமைக்க மாட்டேன் அமைக்க மாட்டேன் நிச்சயம் இவ்வாறு இதுதான் சுலபமான வழி!!!!
அனைவரிடத்திலும் கை ஏந்துவது தான் சுலபமான வழி!!!!...... அமர்ந்து கொண்டே உண்டு விடலாம் என்று!!!!
ஆனால் மனிதா!!!! நிச்சயம் இவை இப்பொழுது சந்தோசமாக இருக்கலாம்!!
கடைசியில் நீ அமர்ந்து விடுவாய்!!
எவ்வாறு அமர்ந்து விடுவாய்??..... நோய்கள் எல்லாம் பற்றி கொண்டு கடைசியாக பின் அமர்ந்து விடுவாய்!!!
அதனால் பின் இறைவன் சரியாக தான் உந்தனுக்கு தண்டனை கொடுத்திருக்கின்றான்!!!
ஏனென்றால் நீ தான் கேட்டாயல்லவா!?!!!!!!!!!!!
யான் அமர்ந்து கொண்டே உண்ண வேண்டும் அமர்ந்து கொண்டே நிச்சயம் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று!!!
அதை நிச்சயம் இறைவன் உந்தனுக்கு பரிசளித்து விட்டான்!!!!
இது தவறா???? இல்லை சரியா????
நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!!!!!
இப்பொழுதெல்லாம் அப்படித்தான் மனிதனுக்கு பின் அடியோடு அடித்து அமைதியாக உட்கார்ந்து நிலையில் ஏற்பாடு ஏற்பாடு!!
இன்னும் அதற்கு கூட நிச்சயம் அகத்தியன் மாற்றிக் கொண்டே வருவான்!!!! இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட
இதனால் வெவ்வேறு இன்னும் எதை என்று அறிய அறிய அதனால் பின் வாயில் வருவதெல்லாம் பக்தி என்ற நிலைக்கு வந்துவிட்டு பொய்கள் எல்லாம் உளறிக் கொண்டிருக்கின்றான் மனிதன்!!!! அதை இதை என்றெல்லாம்!!!
ஆனால் தன் உளறலை தன் புலம்பலை யான் அதையும் நிறுத்தி நிறுத்தி விட்டால் ஒன்றும் லாபம் இல்லை!!!
இதனால் என்ன லாபம்???
பக்தி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் அறிந்தும் அறியாமலும் கூட
அதாவது இங்கேயே ஒருவன் அதாவது ராமனை நோக்கி அதாவது இதுவும் நடந்து சில காலங்களே ஆயிற்று!!!!
அவன் ராமா!! ராமா !! ராமா !! ராமா !!! என்றெல்லாம்!!!!!
ஆனாலும் அவந்தன் அறிந்தும் அறிந்தும்!!! இத்திருத்தலத்திற்கு வருவார்கள்!!!! ஆனாலும் அனைவருமே அனைவருமே இறைவனை வேண்டிக்கொண்டு செல்வார்கள்!!! இவ்வாறு அறிவது அறிவது என்றெல்லாம்!!!
ஆனாலும் ராமா ராமா ராமா ராமா ராமா ராமா என்றெல்லாம் அவனுடைய நாமம்!!! உச்சரித்துக் கொண்டே!!!!!
இவ்வாறு சரி!!! இவன் ராமா ராமா என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றானே இவந்தனுக்கு சில சோதனைகள் கொடுப்போம்!!!!! என்றெல்லாம் நிச்சயம் அனுமானும் அனுமானும் மறைமுகமாக!!!!
அறிந்தும் கூட இவ்வாறு ராமா ராமா என்கின்றாயே!!! அதாவது அனுமான் மனித ரூபத்தில் வந்து!!!!
நீ ராமா ராமா என்கின்றாயே !!!! இவ் ராமன்... என்னதான் உந்தனுக்கு செய்தான்?????
இவ்வாறே அறிந்தும் இவ்வாறே சொல்லிக் கொண்டிருப்பாயா என்று
ஆனால் நிச்சயம் பின் இவ் பக்தன் சிரித்தான்!!!!
ராமனை பற்றி உந்தனுக்கு என்ன தெரியும்??? என்று!!!
ஆனாலும் அனுமானும் சிரித்தான் மனதில் எண்ணி!! ராமனைப் பற்றி உந்தனுக்கு என்ன தெரியும் ?? என்று!!!!
அறிந்தும் கூட இவ்வாறே இருவரும் கூட!!!!
இதனால் நிச்சயம் யான் ராமா ராமா என்று சொல்கின்றேன் எந்தனுக்கு பலமா?? இல்லை உந்தனுக்கு பலமா?? என்று பார்க்கலாமா என்று!!!!பக்தன்!!!
ஆனாலும் அனுமானும் அப்படியா !!!!! யானும் பார்த்து விடுகிறேன் என்று!!!!
அதாவது இக் குளத்தில்!!!
( ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குலதெய்வமான படே காளி ஆலயத்தில் எதிரிலேயே அதாவது ஆலய வாசல் முகப்பிலேயே பெரிய குளம் ஒன்று உள்ளது அந்த குளத்தில் தான் இந்த திருவிளையாடல் நடந்தது)
அதாவது இக் குளத்தில் குதித்தால் நிச்சயம் அறிந்தும் கூட யான் பின் ராமா ராமா என்று சொன்னால் இவ் குளத்தின் நீரே நிச்சயம் அறிந்தும் கூட என்னை அழகாகவே இங்கேயே மேலே வரவைத்து உட்கார வைத்து விடும்!!!!
அதனால் நிச்சயம் முதலில் யான் இறங்குகின்றேன்...ராமா ராமா என்று சொல்லி!!!!!
ஆனாலும் சரியாகவே ஆனாலும் இதையும் கூட பின் அறிந்தும் கூட ராமன்!!!! ராமனும் பார்த்துக் கொண்டிருக்க அறிந்தும் எதை என்று கூட!!!!
இதனால் நிச்சயம் இவையன்றி அறிய பின் பக்தனும் நீரில் அதாவது பின் குதித்தே விட்டான்!!!
ஆனாலும் அழகாகவே பின் அடி பலமாகவே இவ்வாறு அறிந்தும் எதை என்றும் அறிந்தும் மேல் நோக்கி தாமரைப் போல் நிச்சயம் அழகாகவே நிச்சயம் அவந்தனை உட்கார அதாவது தரையின் மீது!!!!
ஆனாலும் பின் அனுமானும் நகைத்தான்!!!!!
இவ்வாறா!!!!! அறிந்தும் அறிந்தும் கூட பக்தன்!!!???
எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அனுமானும் யான் ஒப்புக்கொள்கின்றேன் நீ நிச்சயம் ராமனின் பக்தன் என்று!!!!
ஆனாலும் பக்திக்கு இவ்வளவு சிறப்பா என்று!!!!
ஆனாலும் அனுமான் அனைத்தும் அறிந்தவனே!!!!
ஆனாலும் மீண்டும் அறிந்தும் கூட ஆனாலும் பின் ஏன் எதற்கு என்றெல்லாம் அறிந்தும் அறியாமலும் கூட ஏன் எதை என்றும் புரிய புரிய!!!!
ஆனாலும் பக்தனும் சொன்னான்!!!!
பார்த்தாயா!!!! ராமனுக்கு அதாவது ராமா ராமா எனும் நாமத்திற்கு எவ்வளவு சக்திகள்????
அறிந்தும் கூட அதேபோல் நீயும் செய் என்று!!!!
ஆனாலும் சிறிது நேரத்தில் எங்கேயோ பட பட படவென்று மள மள மளவென்று அறிந்தும் கூட தண்ணீர் (குளத்தின் நீர்) எங்கேயோ சென்றுவிட்டது!!!
( அனுமார் குதிக்கும் போது குளத்தின் நீர் திடீரென வற்றி வறண்டு விட்டது நீரெல்லாம் சென்று விட்டது)
ஆனாலும் அனுமான் யோசித்தான் சிறிது நேரத்திலே ஆனால் அனுமானுக்கு அனைத்தும் தெரியும் பின் நீரை திரும்பவும் வரவழைக்க முடியும்!!!
ராமா!!! ஏன் இவ்வாறு சோதனை!!! எதை எவை என்று அறிந்த பிறகும் கூட இவ்பக்தன் ஜெயித்து விட்டான் ஆனால் இவனிடத்தில் யான் ஜெயிக்க வேண்டும்......யானும் பக்தனல்லவா!!!!!
அதாவது உன்னிடத்தில் பல மடங்கு பக்திகள் செலுத்திக் கொண்டே இருக்கின்றேன் அல்லவா!!!! ஏன் இந்த நிலைமை?????? என்றெல்லாம்!!!
ஆனாலும் அறிந்தும் பின் பக்தன் பின் சிரித்தான்!!!!!!!ஓஹோ!!!!! என்று சிரித்தான்!!!! இப்போது பார்த்தாயா?!!!! யார் இங்கு பக்தன் என்று!!!....... நீயும் கூட பக்தன் என்று அறிந்தும் அறிந்தும் கூட!!!
ஆனாலும் அனுமானுக்கு கோபம் வந்துவிட்டது!!!! அறிந்தும் எவை என்றும் தெரியாமலே நகைத்துக் கொண்டிருக்கின்றாய்!!!
பின் பக்தனே!!!! யானும் நிச்சயமாய் இராமனுடைய பக்தன் ஆனால் இங்கு ஒரு நாள் நிச்சயம் நீர் வரும் அப்பொழுது காட்டுகின்றேன் பின் அறிந்தும் இங்கேயே தங்குகின்றேன் ராமனை நினைத்து என்று அனுமானும் இங்கேயே தங்கினான்!!!!
பல வருடங்கள் ஆயின!!!!
ஆனாலும் குளத்தில் நீரே வரவில்லை ஆனாலும் இவந்தனும் அதாவது பக்தனும்... ராமா ராமா என்று சொல்லிக் கொண்டே இருந்தான்!!!!
ஆனாலும் என்ன சோதனை?? இவை அறிந்தும் அறிந்தும் கூட பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய நேரடியாகவே அதாவது அனுமான் பின் சீதாதேவி இடத்திற்கு சென்றான்.
ஆனாலும் ராமன் செய்வது இவ்வாறு பின் கண்ணீரில் அதாவது கண்களில் கண்ணீர் மல்க!!!.......
சீதா தேவியே!!!!!!!! யானும் இன்னும் பரமபக்தன் ராமனுக்கு!!!!!
ஆனாலும் அறிந்தும் ஏன் எதை என்றும் கூறமுடியாமல் பின் ஒரு பக்தன் ராமா ராமா என்று சொல்லிக் கொண்டிருந்தான் ஆனால் அவந்தன் வெற்றி பெற்று விட்டான்!!!!
ஆனால் யானும் அவனிடத்தில் மண்டியிட்டு நிச்சயம் நீர் வரும் வரை அதாவது இங்கே தங்கி விடுகின்றேன் என்று சொல்லிவிட்டேன்!!!!
ஆனால் என்னுடைய வேதனைகள் எங்கு ??!!.........
யான் தான் நிச்சயம் பக்தன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்னை விட மீறிய பக்தன் ஒருவன் இருக்கின்றானே!!!.........
யான் என்ன எப்பொழுது?? எதை சொல்வது??? என்று!!!
ஆனால் சீதா தேவியோ பின் கலங்காதே!!!!!!அனுமாரே!!!!!!! கலங்காதே!!!! நிச்சயம் அவ் பக்கனுக்கு கதிகள் இல்லை எதை என்று அறிய யாரிடமும் சொல்வதற்கு!!!!
ஆனால் இவ் வெற்றியை கண்டு அவந்தன் மகிழ்ந்து ராமன் தம் அருகிலே இருக்கின்றான் ராமன் தான் சொந்த பந்தங்கள் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் !!!!!!
இதனால் தான் ராமனும் அவந்தனுக்கு உதவி புரிந்தான் என்றெல்லாம்!!!!
ஆனாலும் நிச்சயம் தெரிந்து கொண்டான் அனுமானே!!!!
இதனால்தானா என்று!!!!!
ஆனாலும் அமைதி பொருத்தான் ஆனாலும் மீண்டும் இவ் பக்தனிடம் வந்தான்!!!!!!! நீயும் ஜெயித்து விட்டாய்!!!!
யானும் அறிந்தும் இங்கிருந்து கிளம்ப போகின்றேன் நீதான் வெற்றி பெற்று விட்டாய்!!!! நீதான் பக்தன் என்று!!!!!!
ஆனாலும் பக்தனோ அனுமானை விடவில்லை!!!! இங்கேயே நிச்சயம் தங்கி நீ வேண்டும் ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம்!!!!
இதனால் அதற்கு தகுந்தார் போல் நீ நிச்சயம் தோல்வியை ஒப்புக்கொண்டாய்!!!!
ஆனாலும் நிச்சயம் யான் ராமனிடம் கூறி பின் குளத்தில் நீரை நிரப்புகின்றேன் அதில் நீ வெற்றி பெற்று விடு!!!!!
யான் தோல்வி..... ஆனால் தோல்வியை யானே ஒப்புக்கொள்கின்றேன். என்று பக்தன்!!!
ஆனால் அனுமானுக்கு!!!! கலகலவென்று கண்ணீர் மல்கியது.!!!
இப்படியும் ஒரு பக்தனா??? என்றெல்லாம்!!!!!
இப்படித்தான் பக்தி இருக்க வேண்டுமே தவிர,!!!
ஆனால் இன்றளவு எங்கே பக்திகள் சென்றுவிட்டது?
(அடியவர்கள் பக்திகள் செலுத்தும் பொழுது வெற்றி தோல்வி என்ற மனநிலை எப்பொழுதும் இருக்கக் கூடாது பக்தி மார்க்கத்தில் சமமாக பாவிக்கும் மனநிலையும்...இருக்க வேண்டும்!!!
வெற்றி பெற்றிருந்தால் மமதை கொள்ளாமல் பக்தியில் அனைவரும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்!!!! பக்தியில் போட்டிகளோ பொறாமைகளோ இல்லாமல் அனைவரும் பக்தியில் உயர்வடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்பதை காகபுஜண்டர் இந்த பக்தன் வாயிலாக நமக்கு தெளிவாக வலியுறுத்துகின்றார் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்... யார் பெரியவர் ??யார் பெரிய பக்தியை காட்டுகின்றார்?? யார் பெரிய பக்திமான்!??? என்ற எண்ணமே இருக்கக்கூடாது)
பக்திகள் இல்லை அப்பா பொய்கள் அப்பா.
அதனால் தான் மனிதனை திட்டி தீர்த்து கொண்டே இருக்கின்றோம் !!!
இவ்வாறு மனிதன் திருந்தவில்லை என்றால் இன்னும் அடிப்போம்.
சொல்லிவிட்டோம்.
சித்தர்கள் யார் என்பதை இன்னும் காட்டுவோம்.
சித்தனை நெருங்கினால் நிச்சயம் உண்மையாக இருங்கள். உண்மை உணர்வாகவே இருங்கள். அப்படி இல்லை என்றால் ஒதுங்கியே இருங்கள் சொல்லி விட்டேன்.
உண்மை உள்ளவனாக இருந்தால் யாங்களே நிச்சயம் அறிந்தும் அனைத்தும் செய்வோம்.
அப்படி இல்லை என்றால் நிச்சயம் அறிந்தும் எதை எதையோ பயன்படுத்தி கொண்டு எதில் எதிலோ ஈடுபடுத்திக் கொண்டு கடைசியில் கஷ்டங்கள் இன்றளவும் அதைப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்.
தெளிவு வரவில்லையே.
இவ்வாறு பக்திகள் இன்றளவும் இருக்கின்றதா??? என்றால் நிச்சயம் இல்லையே.
மனிதா!!! அப்பொழுது எண்ணிக்கொள்!!! பக்தி என்ற நிலைமையை நீ அதை வைத்து நிச்சயம் திருடி திருடி!!!
இன்னும்.
இதனால் அவ் பக்தனும் பின் ராமா ராமா....இக் குளத்தை நிரப்பி விடு என்று!!!!
ஆனால் வந்தது அனுமான் என்று தெரியாமல் போய்விட்டது.
ராமா குளத்தில் நீரை நிரப்பி விடு ஏனென்றால் எனக்கு நீ இருக்கிறாய். ஆனால் இவந்தனுக்கு யார் இருக்கின்றார்??? என்று!!! யார் இருக்கின்றார்? என்று!!!!
இதுவும் ஒரு நாடகம். போலே பின் நடித்து நடித்து!!!
ஏன் எதனால் என்பவையெல்லாம்
அப்பொழுது உடனடியாக ராமன் ஏதோ ஒரு மழையின் தன்னில் பலத்த மழையால் நிச்சயம் குளத்தையே நிரப்பிவிட்டான்!!
அப்பொழுது அனுமானும் ஆனாலும் தெரிந்து கொண்டான் அனுமான்!!!!!
அனைத்தும் பின் விளையாட்டே என்று !!!!
பரமனின் விளையாட்டே என்று!!!!
இதனால் பக்தனோ
நிச்சயம் இதில் நீ அறிந்தும் எதை என்றும் அறிய அறிய குதி !!! என்று !!!
ஆனாலும் அறிந்தும் அனுமான் கூட குதித்து விட்டான்
ஆனாலும் அவ் பக்தன் அறிந்து அறிந்து ராமா ராமா இவனை காப்பாற்று!!! இவந்தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று !!!
ஆனால் அழகாகவே பின் ராமனும் நினைத்தான் அனைத்தும் தெரியும். இவந்தனுக்கு!!!
இவனே மேலே எழும்புவானென்று!!!
இதனால் அனுமானே அழகாக இவ் பக்தனை சந்தோஷப்படுத்த அழகாகவே ஒரு தாமரை மேல் பின் எழுந்து நின்றான்!!!
அப்பொழுது நீ தான் பக்தன் என்று அறிந்தும் அறிந்தும்!!!!
இவ் பக்தன் பின் நீ தான் பெரிய பக்தன் என்று சொல்லிவிட்டான்.
அதே போலவே இன்னும் பின் பெரிய பக்தனாகவே இங்கும்.அறிந்தும் அறிந்தும்!!!
இதனால் நிச்சயம் பின் அனுமானும் பின் வெளி வேசத்தை காட்டினான்!!!!
யானே பின் ராமனின் சீடன்!!!
உனக்கு என்ன தேவை என்று ???
ஆகா!!!!!! அறிந்தும் இப்படியா பின் அறிந்தும் அறிந்தும் கூட!!!
ஆனாலும் அனுமானின் பின் காலில் விழுந்தான் அவ் பக்தன்!!!
இப்படியும் ஒரு அன்பா !!!! இப்படியும் ஒரு மனமா !!!! நிச்சயம் உந்தனக்கு என்ன தேவை? என்று கூறு என்று!!! அனுமான் கூற !!!
பக்தனும் இங்கேயே இரு!!! பல மனிதர்களுக்கு சேவை செய்!!!
எப்பொழுது இங்கு வந்தாலும் அனைவருக்கும். நல்லதையே செய் என்று!!!
அப்படியே செய்கிறேன் என்று பக்தனுக்கு இணங்க அனுமானும் இங்கே அடிக்கடி வந்து சென்று கொண்டே இருக்கின்றான் !!!! பக்தர்களின் குறை தீர்த்து கொண்டிருக்கின்றான்.
அவ் அதாவது பக்தன் என்று சொல்கின்றான் என்று அறிந்தும்.
அவ் பக்தன் என்று சொன்னேனே அவந்தன் இப்பொழுது ஒரு பெரிய பதவியில் அமர்ந்து விட்டான். அனைவருக்குமே பல உதவிகள் செய்து கொண்டிருக்கிறான். இதுதான் தர்மம் என்று அறிந்து கூட !!!
இவ் ஆன்மா எதை நோக்கி செல்கின்றதோ அதையே பின் தீர்மானிக்கும்.
இதனால் தான் உயர்ந்த எண்ணங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம்!!!
நிச்சயம் மானிட ஜென்மங்களே !!! பின் மனிதன் அதாவது இறந்துவிட்டால் பின் அதனை பின் மனிதன் மனிதன் பின் அமர்ந்து கொண்டு சுற்றி வளைத்து பின் அழுகின்றார்கள்.
ஆனால் அவன் ஆன்மாவோ சிரிக்கும்!!!!! என்பவை எல்லாம் யாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம்!!!
ஏனென்றால் மனிதனுக்கு.
புத்திகளே இல்லையப்பா.
புத்திகளே இல்லை.
அதனாலதான் திருடன் என்று சொல்கின்றோம்!!!
ஏனென்றால் இறப்பு என்பது அடுத்த முறை பின் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் பதவி உயர்வு பெறுவதற்கு சமம் என்பேன். !!!
ஆனால் மனிதன் அதாவது பதவி உயர்வு பெற்றால் சந்தோஷமடைகின்றான். இனிப்புகள் பரிமாறி கொள்கின்றான்
ஆனால் இறந்தால் மட்டும் என்ன?
ஆனால் அவ் ஆன்மா இன்னும் உயர் பதவிக்கு செல்கின்றது என்று அர்த்தம்.
அதை புரியாமல் மனிதன் வீணாக அலைந்து கொண்டிருக்கின்றான்!!!
ஆனால் அவ் ஆன்மாவோ சிரிக்கும்!!! சிரிக்கும்!!!
போதுமடா சொந்த பந்தங்கள் !!!!
இவ்வாறு கஷ்டங்கள் பட்டவை.
நீங்கள் ஏன் அழுகின்றீர்கள். பின் அறிந்தும் ஏன் எதை என்று அறிய அறிய!!! இருக்கும்போது!!! அழவில்லையே!!!!!
இல்லாதபோது நீங்கள் அழுகின்றீர்களே???? இவை என்ன? பின் நாடகமா என்ன????
காரி காரித்துப்பும் மனிதனை அவ் ஆன்மா!!!
இதனால்தான் பல சாபம் உங்களுக்கு!!!!
அதனால் தான் இருக்கும் போது நல்லதை செய்யுங்கள்!!!!
இல்லாத போது பின் அழுது நடித்தாலும் அவ் ஆன்மா காரி துப்பும் பொழுது உந்தனக்கு இன்னும் கஷ்டங்கள் மனிதா மனிதா!!!
அதை மனிதா அதை தெரிந்து கொள்வதையே இல்லை!!! ஏன் எதற்கு என்றெல்லாம் இன்னும் இன்னும் விளக்கங்கள் தரத்தான் போகின்றார்கள் சித்தர்கள்.
இதை உணர்ந்து கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி வெற்றி இன்னும் வாக்குகள் உரைப்பேன்!!!
இன்னும். அகத்தியனின் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க!!!!
நலன்கள்!!! ஆசிகள் !!!!.
ஆலய முகவரி
ஸ்ரீ படே தேவ்காளி மந்திர்
ஆதர்ஷ் நகர், சக்தி நகர் காலனி, அயோத்யா பைசாபாத், உத்தரப் பிரதேசம் 224001
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..... தொடரும்!
அகத்தீசாய நம நன்றி ஐயா 🙇♂️🙏
ReplyDeleteஅகத்தீசாய நம நன்றி ஐயா 🙇♂️🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOm Agatheesaya Namaha
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete