வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இதென்ன தலைப்பு வித்யாசமாக இருக்கிறதே என தோன்றலாம். ஆம். இத்தனை வருட சித்த மார்க பாதையில் நடந்து வந்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள், குறிப்பிட்ட மனிதர்களை பற்றி மிக உயர்வாக கூறிய விஷயத்தை "இவர்" என்கிற தலைப்பில் உங்கள் முன் சமர்ப்பிக்கலாம் என்று ஒரு எண்ணம். அவர்களின் மனநிலை, அந்த உயரத்துக்கு வர காரணமாக இருந்த எண்ணம்/செயல் ஆகியவற்றை கவனியுங்கள். ஞாபகத்தில் இருப்பதிலிருந்து பகிர்கிறேன்! நிச்சயமாக பெயர். ஊர் போன்றவை தெரிவிக்கப் பட மாட்டாது!
மிக எளிமையாக தோற்றம் கொண்ட ஒருவர் வந்து, அகத்தியப் பெருமானுக்கு சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு ஒரு ஓரமாக அமர்ந்தார். பேசிக் கொண்டிருந்த மற்ற அனைவரையும் விலக்கி விட்டு அகத்தியப் பெருமான், இவரை அழைத்தார்..
"என்னப்பா? பெருமாளை பார்த்து விட்டாயா? என்ன கேட்டாய்? என்ன சொன்னார்?" என்றார்.
"நான் எதுவும் கேட்கவில்லை, அவரும் ஏதும் கூறியது போல் தெரியவில்லை" என்று அவர் அகத்தியப் பெருமானுக்கு பதிலளித்தார்.
"என்றுதான் கேட்டிருக்கிறாய், இன்று கேட்பதற்கு" என்று கூறிய அகத்தியப் பெருமான் விவரிக்கத் தொடங்கினார்.
"இவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? என்ன அருள் பெற்றவன் தெரியுமா? தினமும் வந்து பெருமாளை தரிசித்து, அவர் மார்பில் இருக்கும் துளசி/புஷ்பத்தை வீட்டிற்கு வாங்கிச் செல்வான். எதுவும் பெருமாளிடம் கேட்பதில்லை. வாங்கிச் செல்கிற பிரசாதத்தை தன் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் காலடியில் சமர்ப்பிப்பான். அங்கு தினமும் ஒரு அதிசயம் நடக்கிறது.
இவன் கோவிலிலிருந்து வீட்டுக்கு செல்லும் முன்னரே, தினமும் பெருமாள், இவன் வீட்டு பூஜை அறையில் வந்து அமர்ந்து இவன் கொண்டுவரும் பிரசாதத்தை பெற்றுக்கொள்ள காத்திருப்பார். இவன் சமர்ப்பித்த அந்த துளசியை பெற்றுக் கொண்ட பின்னரே, அங்கிருந்து ஆசீர்வதித்துவிட்டு செல்வார்.
கவலை வேண்டாம்! பெருமாள் உங்கள் இருவரையும் தன் பெற்றோர்களாக வரித்துக் கொண்டுவிட்டார். உங்களுக்கு வேண்டியதை அவர் அருளுவார். சென்றுவா! எம் ஆசிகள்" என்று வாழ்த்தினார்.
கோவிலில் தரப்படும் பூ/இலை பிரசாதம் எப்படி எல்லாம் வேலை பார்க்கும் என்று உணர்க!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Heartfelt thanks.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete