​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 March 2024

சித்தன் அருள் - 1569 - அகத்தியப் பெருமானுடன் ஒரு அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கடந்த ஒரு மாதம், எந்த பதிவும் சித்தன் அருளில் தராமல், விலகி நின்றது, திடீர் உடல் நிலை பாதிப்புதான் காரணம்! திடீர் என இருதயம் பாதிப்பு அடைய, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, ""ஓபன் ஹார்ட் பைபாஸ்" சிகிர்ச்சைக்கு உடன் பட வேண்டிவந்தது. அவசரமாக, அகத்தியப்பெருமானிடம் உத்தரவு கேட்ட பொழுது, "சிகிர்ச்சையை எடுத்துக் கொள்ளச் சொல். அந்நேரத்தில் யாம் அங்கிருப்போம்" என்று உறுதி அளித்தார்.

இப்பூமியில் இருக்கும் பொழுதே "நரகம்" என்றால் என்ன, எப்படி இருக்கும் என்று இந்த அறுவை சிகிர்ச்சை வெகுவாக உணர்த்தியது.

அதற்கு முன்,

பொதுவாக மனிதனாய் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் "இரு மனம்" உண்டு. ஒன்று - ஆத்மாவின் மனம், இது தீர்மானிப்பதை மனிதன் அறிவதில்லை. இதை புரிந்து கொள்வது மிக சிரமம். இரண்டாவதாக - மனிதனின் எண்ணங்கள், வாசனைகளால் உருவாக்கப்பட்ட மனம். அனைத்து உடல் உணர்வுகளையும் உணர்கிற மனித மனம்.  

இரண்டு மனமும் ஒருவக்கோருவர் போட்டி போட்டு கொண்டு ஒரு தீர்மானம் எடுக்கையில், இன்னும் வாழவேண்டுமா என்கிற விஷயத்தில், ஆத்மாவின் மனம் என்ன தீர்மானிக்கின்றதோ, அதுவே வெற்றி பெறும்.  

அறுவை சிகிச்சை அன்று, நினைவின்றி,  வாய் வழியாக மூன்று குழல்கள், மார்புக்கு கீழே 2 குழல்கள், தங்கள் வேலையை செய்து கொண்டிருக்கும் போது, அடியேனின் ஆத்மா,  வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்து கிளம்ப தயார் ஆனது.  பிறகு நடந்தது, 

மறுநாள் காலை பிரம்ம முஹூர்த்தம்.   ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த திரு. ஜானகிராமனை தட்டி உணர்த்திய அகத்திய பெருமான் " என் மைந்தனுக்கு ஒரு செய்தி உள்ளது.  அதை தெரிவிக்கவும்" என்று கூறி கீழ் கண்ட விவரங்களை தெரிவித்தார்.

"அறுவை சிகிச்சையின் முடிவில், வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்து புறப்பட்ட ஆத்மாவை யாமே ஊதி உள்ளே தள்ளி மறுவாழ்வு கொடுத்துள்ளோம்.   இனி, உடல் நிலை நல்லபடியாக மாறும்" என தெரிவிக்கவும் என்றார்.   அகத்தியப் பெருமான், ஊதி உள்ளடக்கிய ஆத்மாவின் சக்தியில் தற்போது உடல் நன்றாக தேறி வருகிறது.

எதற்காக, அகத்தியப் பெருமான், அடியேனை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்  என்பது, இன்று வரை ஒரு விடை இல்லா கேள்வியாக என்னுள் இருக்கிறது.

எதுவரை இந்த பயணம் என்பதும், அவருக்கே வெளிச்சம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

15 comments:

  1. அகத்தீசாய நம 🙏🙏 🙇‍♂️🙇‍♂️ நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி இப்பதிவிற்கு

    ReplyDelete
  2. Anbu Iyaa, Anaithum avaradhu arul. Neengal meendu vandhadhu engal palarukkum mikka magilvai thandhuladhu. Aiiya arul nammodu endrum irukka vendukirom.

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய அய்யா
    இத்தனை சிரமங்களுக்கு இடையில் தாங்கள் "சித்தன் அருள் " வலைத்தள த்தில் அகத்திய பெருமானின் வாக்குகளை பதி விடுவது மிகுந்த மகிழ்ச்சி யை நெகிழ்ச்சியை தருகிறது. வாழ்க்கை எனும் மாய வலையில் சிக்குண்டு வழி தெரியாது தவிக்கும் எம் போன்றோருக்கு கலங்கரை விளக்கமாக ஒளியை கொடுப்பது உங்கள் முயற்சி. அகத்திய பெருமானி ற்கும் அவர்தம் சேய்கட்கும் பாலமாக இருக்கும் தாங்கள் அம்மையப்பன் அருளால் நீண்ட ஆயுளையும் நல் ஆரோக்கியத்தையும் பெற்று தங்கள் நற் தொண்டு மேன்மேலும் சிறக்க தழைக்க எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  4. ஐயா நீங்கள் என்றும் அகத்தியர் அருள் பெற்ற பிள்ளை, அவரின் கருணைக்கு எல்லை தான் உண்டா... விரைவில் பூரண நலம் பெற்று தங்கள் தன்னலம் இல்லா பணி தொடர வேண்டும்.. ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கருணை அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  5. ஐயா அற்புதம்...குருநாதரின் அன்பு மிகவும் பெரியது...நீங்கள் முழுமையாக குணமடைந்து நன்றாக இருங்கள் ஐயா

    ReplyDelete
  6. உங்களின் ஆன்மிக சேவை எங்களுக்கு தேவை. எல்லாம் அகத்தியர் செயல்.

    ReplyDelete
  7. Namaskaram Agnilingam Aiyya i recollect all the incidents where Agasthiya Peruman has always protected you and took care of your well being ( from all the messages that has been published) . Through Siddan Arul you are doing the highest service to humanity and God . Every message in Siddhan Arul has got meanings to lead a most correct way of attaining god. Hence Agasthiya peruman knows that through you only it can be delivered . My Namaskarams to you and my prayers to Mahamuni for your complete well being

    ReplyDelete
  8. குரு நாதர் அருளும் எங்களின் prarthanaium ungalukaga entrum ullathu. Ungalathu சேவை engalathu தேவை. உம் போன்ற உள்ளங்கள் needodi வாழ வேண்டும் ayya

    ReplyDelete
  9. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள், ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  10. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. குரு அன்றி ஒரு நிகழ்வும் இல்லை. எல்லா நிகழ்வுக்கும் பின்னால் குருவின் உடைய அருள் இருக்கிறது. தங்களின் மூலமாக அகத்தியர் பெருமான் உலக மக்களுக்கு பல்வேறு அருளாசிகள் வழங்க வேண்டிய உள்ளது.மனித குலத்திற்க்கு பல உண்மைகளை தெரிவிக்க வேண்டி உள்ளது .தாங்கள் இந்த உலகத்தில் தன்னை மறைத்துக் கொண்டு இறைபணியாற்றி வருகிறீர்கள். குரு சேவை செய்கிறீர்கள். உங்களுடைய சேவையின் உடைய பலன் என்ன என்பது லட்சக்கணக்கான அகத்தியர் அடியவர்களுக்கு தெரியும். நீங்கள் நலம் பெற்று குருவின் அருளால் நீண்ட நாட்கள் சேவை செய்ய வேண்டும் ஐயா.

    ReplyDelete
  11. அப்பன் அகத்தியரின் கருணைக்கு கோடான கோடி நன்றிகள் ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  12. அகஸ்தியரின் பரிபூரண அருள் பெற்று மீண்டும் சித்தன் அருள் வலைத்தளத்தில் பதிவுகளைத் தருவதற்கு நன்றி ஐயா. வாழ்த்துக்கள். பூரண உடல் நலம் பெற பிரார்த்திக்கிறோம் ஐயா.

    ReplyDelete
  13. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    தங்கள் அகத்தியர் அய்யனின் பிள்ளை.... தங்கள் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் நல்வாழ்வு பெற்று வாழ்கின்றனர்... தங்களின் சேவை மென்மேலும் தொடர இறைவன் அகத்தியர் அய்யன் துணை இருப்பார்....சித்தனருள் எங்கள் வாழ்க்கையின் உயிர்மூச்சு ஐயா.
    தங்களின் உடல் குணமடைய அகத்தியர் அய்யன் துணை இருப்பார்.

    ReplyDelete
  14. Om Agatheesaya Namaha! When the posts did not come for one month, it taught the value of each and every post. Sometimes, I have followed and sometimes, read and moved on. But in that one month, it taught me to value every minute and second and follow Agathiyar's messages. If something is lost, we may not get back. If Agathiyar ayya has given you back, we have to start following each and every sentence from his vaakugal. Thanks ayya to start posting again.

    ReplyDelete
  15. குருநாதருக்கு நன்றி! குருவருளும் திருவருளும் தங்களைக் காக்கட்டும்!தங்கள் உடல் வேதனை குறைய குருநாதரிடம் வேண்டுகின்றேன்!

    ReplyDelete