​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 27 March 2024

சித்தன் அருள் - 1575 - இவர்!


இவருக்கு முன்னரே வந்து நின்ற அனைவரையும் பொறுத்திருக்க சொல்லிவிட்டு, இவருக்கு ப்ரச்னம் பார்த்து சொல்லத் தொடங்கினார்.

"பிரார்த்தனை பண்ணி முதல் சோழியை பரப்பி பார்த்தவர், எழுந்து சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம்" செய்தார். பின்னர் இவரிடம் கூறாத தொடங்கினார்.

வீட்டுல சிவலிங்கத்தை வைத்து தினமும் விமர்சையாக அபிஷேக பூஜைகள் செய்வதில், சிவபெருமான் மயங்கி, உங்கள் தெருவில் இருக்கும் கோவிலை விட்டுவிட்டு, உன் பூசை அறையில் வந்து அமர்ந்துவிட்டார்.அர்த்த ஜாமத்தில், அம்பாள் இறைவனை வந்து பார்க்க, கோவில் சன்னதியில் இல்லாததை கண்டு, இறைவனை தேடி வந்துவிட்டாள். உன் வீட்டு பூசை அறையில் வந்து அமர்ந்து அர்த்த ஜாம பூசையை இறைவனுக்கு செய்து, பணிவிடைகள் செய்து பிரம்ம முகூர்த்தம் வரை இருவரும் அங்கே அமர்ந்துவிட்டு செல்கின்றனர். அர்த்த ஜாமத்தில் அம்பாள் நடந்து வரும் பொழுது கேட்கும் கொலுசு சத்தம்தான் அது. மனிதர்களால் பார்க்கவோ, கேட்கவோ முடியாது. உனக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது" என்றார்.

"இனிமேல், நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார் இவர்.

"உனக்குப்பின் இந்த பூசையை தொடர உனக்கு குடும்பமோ, சந்ததியோ கிடையாது. லிங்கம் இருக்க பூஜை நின்று போனால், அது மிகப்பெரிய பாபத்தை உன் தலையில் இறக்கும். ஆகவே, விக்கிரகங்களை ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு கொடுத்து விடு, அல்லது நீர் நிறைய இருக்கும் ஒரு கிணற்றுக்குள் இறக்கி விடு. அதுதான் உனக்கு நல்லது" என்றார்.

இந்த வார்த்தைகளால் கலக்கமுற்று, மேலும் இரண்டு பேரிடம் கேட்கலாம் என ஒரு ஜோதிடனிடமும், இன்னொரு ப்ரச்னம் பார்ப்பவரிடமும் கேட்கப் போக, அவர்களும் அதே போல் கூறி, குளம், நதி, கடலை கைகாட்டினார்கள்.

நடந்தவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நான் "சரி! இப்ப கடைசியா என்ன ஆச்சு? எதுவும் யோசிக்காமல் என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் நித்ய பூஜையில் வைத்து பார்த்துக் கொள்கிறேன்" என்றேன்.

"மன்னிக்கணும். இரண்டு நாட்களுக்கு முன் கன்யாகுமரி சென்று, அங்கு கடலில் சேர்த்துவிட்டேன். எதுவும் யோசிக்கவில்லை என்றார்.

"தப்பு பண்ணிட்டீங்க. ஒரு மனுஷன் சொல்வதை கேட்டு, இறையை மறுதலிப்பது கூடாது. அவராக விரும்பி வந்தது. அவர் வழி காட்ட மாட்டாரா? ஏன் இதைப்பற்றி யோசிக்கவில்லை? ஒவ்வொருவரும் அவர் கடை கண் பார்வை கிடைக்குமா என்று அலைகிறார்கள். இங்கு இப்படி!" என்றேன்.

இதன் பின்னர், நன்றாக போய்க் கொண்டிருந்த அவர் வியாபாரம் சுருங்கிப் போனது. இன்றும், சாதாரண மனிதனாக, பெருமாள் கோயில் முன் அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்.

இங்கு கூற வருவது ஒன்றுதான். சாதாரண மனிதனாலும் இறைவனை மயக்க முடியும். நேர்மையாக இருந்தால், சித்தர்களும், தெய்வமும், இறங்கி வந்துதான் ஆக வேண்டும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙇‍♂️🙏

    ReplyDelete
  2. அன்பு ஐயா,
    கடந்த 2021-ல் இருந்து ஆன்மீக பயிற்சி செய்து பலன் பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான பயிற்சி. குருநாதரின் அருளால் வெளியிடப்படுகிறது.🙏🙏🙏

    https://fireprem.blogspot.com/2021/10/1.html?m=1

    ReplyDelete
  3. ஐயா, இது போன்ற சம்பவம் என் வாழ்விலும் நிகழ்ந்தது. என் அப்பா மிகவும் பாசத்துடன் கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதுவது போல் ஒரு சிலையை வாங்கி கொடுத்தார். பின்னர் ரங்கநாதர் பெருமாள் சிலை ஒன்றையும் வாங்கி வந்து பூஜை எனக்கு தெரிந்த முறையில் செய்து வந்தேன். நான் கல்லூரியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன் அப்பொழுது. அப்போது ஒருவர் கூறுகையில் விக்ரகம் வைத்து வழிபாடு செய்தால் அபிசேகம் நிவேத்தியம் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னார். நானோ பெண். வீட்டில் உள்ள உணவு பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் மனதில் வைத்து பெருமாளிடம் கூறிவிட்டு தூங்கி விட்டேன். கனவில் வந்து பெருமாளே எனக்கு உணர்த்தினார் சிவாலயத்தில் இரு அர்ச்சகர் இருப்பது போலவும் பிள்ளையார் அருகில் இருப்பவரிடம் கொடுத்து விடு என்று உணர்த்தவே என்ன கனவு என்று நான் வழக்கம் போல் கோவில் சென்றேன் கனவில் கண்டது போல இரு அர்ச்சகர் ஒருவர் பிள்ளையார் அருகில் மற்றவர் சிவ பெருமான் அருகில். அப்போது நான் ஒன்றும் செய்ய வில்லை. பின்னர் தான் தெரிகிறது அவர் பெருமாள் கோவில் அர்ச்சகர் என்று. பிறகு அவரிடம் விசயத்தை கூறினேன் அவர் என்னிடம் கொண்டு வந்து கொடுத்து விடு என்று கூற நானும் ஒப்படைத்து விட்டு post office முலம் விற்பனை செய்த கங்கை நதி நீரையும் பெருமாளுக்கு கொடுத்து நன்றி கூறி வீடூ திரும்பினேன்
    .

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா🙏🙏🙏...தாங்கள் உடல் நலம் ஆரோக்கியம் பெற்று இன்புற்று வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்...தங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றிகள் ஐயா...கன்னியாகுமரி கடலில் ஈஸ்வரப்பாவை அவர் சேர்த்துவிட்டதாக கூறியிருக்கிறார்...எமக்கு மனம் மிகுந்த பாரமாகிற்று ஏற்றுக்கொள்ள முடியிவில்லை...ஈஸ்வரப்பாவின் மீது உயிரே வைத்திருக்கிறேன்...தயைகூர்ந்து திரு ஜானகிராமன் ஐய்யாவிடம் கேட்டு கூறுங்கள்🙏🙏🙏 ..ஈஸ்வரப்பா அங்கேதான் உள்ளாரா?? அல்லது யாரேனும் புன்னிய ஆத்மாவிடம் உள்ளாரா??வேண்டிக்கொள்கிறேன் ஈஸ்வரப்பா எப்படி இருக்கின்றார் என்று கூறுங்கள்...மனம் கலங்கி இருக்கிறேன் ...🙏🙏🙏

    ReplyDelete
  5. Really so sad, leading to tears . Might have taken the decision after his period
    Let us pray for him. Hope God would forgive and uplift him. Let us pray for the pure soul.
    Please.
    Thank You.

    ReplyDelete
  6. We should not blindly follow astrolers. Heart is paining like anything. Let us pray for him. Please.

    ReplyDelete
  7. Sir,
    Om Agatheesaya Namaha.
    How to handle old wornout photos of gods? People say we should not have in puja. Even bags and calendars have god images printed on them? We feel bad when it ends up in dustbin or tornout
    Regards
    Chitra

    ReplyDelete
  8. Om Agatheesaya Namaha! Ayya, my personal thought after reading this.

    As lord shiva has gone to his house from temple, this is the universal mother's drama to bring Shiva back to temple. Otherwise, other people will suffer. If mother does not want to grow his business too, it is her blessing that he may move out of spirituality if his business grows well.

    I recently read about Adi Shankara getting Soundarya Lahiri from Lord Shiva but Nandheeshwarar grabs it from Adi Shankara and out of 100 stothras, only 41 will be in Shankara's hand. Mahaperiyava has explained in Deivathin Kural that it is mother's wish that Shankara writes the remaining but she does this drama of Nandeeswarar grabbing. So, my view about this incident is that it is mother's wish and astrologers are all her drama to get Shiva back to temple.

    ReplyDelete
  9. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete