17/6/2023 அன்று அஷ்ட விநாயகர் திருத்தலங்களில் ஒன்றான மயூரேஷ்வர் கணபதி ஆலயத்தில் குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் .மயூரேஷ்வர் கணபதி ஆலயம். மோர்காவ் புனே மகாராஷ்டிரா.
ஆனை முகத்தோனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே எண்ணற்ற திருத்தலங்கள் அப்பனே ஆனாலும் அப்பனே அவற்றிற்கெல்லாம் சக்திகள் மிகுந்தே காணப்படுகின்றது !!!!
ஆனாலும் அப்பனே அவைதன் எதை என்று கூட.... ஆனாலும் அப்பனே புண்ணியங்கள் அதிகமாக அதிகமாக திருத்தலங்களுக்கு அப்பனே நிச்சயம் இறைவனே அழைத்துச் செல்வான் என்பது தான் மெய்!!!!!
அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் பின் ஞானியர்களின் ரகசியத்தை பற்றி இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!
தற்பொழுது கூட அப்பனே பின் பிள்ளையோன் பற்றி பிள்ளையோனை பற்றி என்றே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது பின் அவ்வூரே!!!!
பிள்ளையோனை பற்றி
பிள்ளையோனை பற்றி= பிள்ளையோன் பட்டி =பிள்ளையார் பட்டி
மருவிய சொல்!
(தற்பொழுது அழைக்கப்படுவது பிள்ளையார்பட்டி என்று சிவகங்கை மாவட்டம் உண்மையில் குருநாதருடைய வாக்கின்படி பிள்ளையோனை பற்றி அதாவது பிள்ளையாரை பற்றிக் கொள்ளுதல் !!!!!
பிள்ளையோனை பற்றி !!
என்ற பெயர் மருவி தற்பொழுது பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகின்றது எப்படி? காக்கும் சிவன் என்ற சொல் காசி என்று அறியப்படுகின்றது!!!
இதுபோன்ற இவ்ரகசியங்கள் எல்லாம் அதாவது திருத்தலத்தின் ஊர் பெயரில் இருக்கும் ரகசியம் கூட நம் குருநாதர் வாக்குகளில் கூறுவதால் தான் தெரிய வருகின்றது )
அவ்வூரில் அப்பனே பின் இரட்டை குழந்தைகள் பிறந்தது அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பின் ஆனாலும் அப்பனே ஒரு ஜோதிடன் அப்பனே இவ் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இவ் குடும்பத்திற்கே அழிவு என்பது பொய் கூறி விட்டான்.
பொய் கூறி அப்பனே ஆனால் அப்பனே இறைவனுக்கு தெரியும் அனைத்தும் கூட என்று கூட
அப்பனே ஆணித்தரமாக ஜோதிடன் அப்பனே பின் இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டால் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவ் ஜோதிடம் எதை எதையோ சொல்லிட்டு மனம் பின் குழப்பம் அடையச் செய்து விட்டான் அப்பனே
அதனால் இவ் அதாவது ஜோதிடன் சொன்னான் இவ் இரு குழந்தைகளையும் எங்கேயாவது விட்டு வந்து விடுங்கள்!!!!
இதனால் உங்கள் குடும்பமே செழிக்கும் என்பதை எல்லாம்!!!!
அதனால் நிச்சயம் அதாவது சரி பரவாயில்லை என்பதையெல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து நிச்சயம் பின் அதாவது ஆனால் அவ் இல்லத்தோர்
(இரட்டைக் குழந்தைகளின் குடும்பத்தினர்) ஜோதிடனிடம் நிச்சயமாய் சிறிது அளவே நிச்சயம் இவர்கள் (குழந்தைகள்) பெரியவர்கள் ஆகட்டும் பின்பு யாங்கள் விட்டுவிடுவோம் என்று!!!
ஆனாலும் ஓர் வயது இரு வயது மூன்று வயது ஆகிவிட்டது பின்பு ஆனாலும் இவ் இரட்டையர்கள் இருந்தால் நிச்சயம் தொல்லைகளே!!! என்று உணர்ந்தனர்.
ஆனாலும் அன்றி அன்றி ஆனாலும் இவர்கள் மேன்மையானவர்கள் என்பதை எல்லாம் பின் தெரியவில்லை அவ் இல்லத்தவர்களுக்கு!!!
இதனால் பின் அதாவது இப்பொழுது பக்கத்திலே பிள்ளையோன்பட்டி எதை என்று அறிய அறிய அவர்களும் கூட தாய் தந்தையரும் கூட அடித்து குழந்தைகளே நீங்கள் வெளியே செல்லுங்கள் என்றெல்லாம்!!!!!!
ஆனாலும் அக்குழந்தைகள் அழுது விட்டன!!!! அழுது அழுது புலம்பின!!!!
அதனால் பிள்ளையோன்!!!!
நிச்சயம் நம்மிடத்தில் இருந்து கொண்டு இவ்வாறா??????
என்ன செய்வது??? என்றெல்லாம் !!!!!
என்பதையெல்லாம் ஓர் எதை என்று உபாயம்!!!
அழைத்து பிள்ளையோனே நிச்சயமாய் அறிந்து அறிந்து எதை என்றும் கூற பின் நிச்சயமாய் மானிட ரூபத்தில் அதாவது கிழவன் ரூபத்தில் நிச்சயமாய் சென்று அவர்கள் இருவரையும் யான் வளர்த்திக் கொள்கின்றேன் என்று!!!
ஆனாலும் அதாவது இவ் ஊரிலே பிள்ளையோன் பட்டி என்றே!!!! நிச்சயம் பின் இவ்வூரிலே நிச்சயம் அதாவது திருத்தலம் இருக்கின்றது விநாயகப் பெருமானின் திருத்தலம்
( பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரை கோயில்)
அங்கேயே பார்த்துக் கொள்கின்றேன் !!!( கோயிலிலே தங்க வைத்து குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றேன் என்று கிழவன் ரூபத்தில் வந்த விநாயகர்)
அங்கேயும் கூட சில சில அன்னங்கள்!!!! சில சில மனிதர்கள் எடுத்து வந்து கொடுப்பார்கள்!!!
(சில மனிதர்கள் கோயில் வாசலில் அன்னதானங்கள்)அதனையெல்லாம் இவர்களுக்கு கொடுத்து கொடுத்து யானே பார்த்துக் கொள்கின்றேன் எந்தனுக்கும் வயதாகிவிட்டது என்று விநாயக பெருமானே!!!!
ஆனாலும் இவைதன் உணர உணர அங்கேயே நிச்சயம்!!!
ஆனாலும் வந்தது விநாயகப் பெருமான் என்பது யாருக்கும் புரியவில்லை!!!
இதனால் அங்கேயே எவை என்று அறிந்து அறிந்து பிள்ளையோன் விட்டு விட்டான்.
இதனால் பின் பிள்ளையோன் எதை என்று அறிய அறிய அவர்களுக்காக பின் இன்னும் வயது ஆக ஆக பின் முதியவன் வேடத்திலேயே இருந்து!!!
ஆனாலும் முதியவன் வேடம் அணிந்தவன் பிள்ளையோன் என்று தான் யாருக்கும் தெரியவில்லை தெரிவதுமில்லை.
பின்பு அங்கு இருக்கும் இறைவனை பிள்ளையோனை வணங்கி சென்று கொண்டிருந்தார்கள்.
ஆனாலும் பிள்ளையோன் நினைத்தான்!!!
இப்படியும் ஒரு மனிதர்களா??? இப்படியும் பிறவிகளா??
ஈசனை நினைத்து தன் தந்தையை நினைத்து எவை அறிந்து அறிந்து மீண்டும் மீண்டும் இதனால் அங்கேயே தங்கி!!!
ஆனாலும் எவை என்று அறிய அறிய பிள்ளையோனும் உட்கார்ந்து விட்டான் சரியாகவே.அப் பிள்ளைகளுக்கு ஏதாவது கொடுத்து கொடுத்து!!!
ஆனாலும் அனைவருமே இவந்தன் பின்பு பிச்சைக்காரன் என்றெல்லாம் பின் திட்டி தீர்த்தனர்.
ஆனால் பிச்சைக்காரன் யார்?????? என்பதை கூட தெரிவதில்லை!!!!!
விநாயக பெருமானே அமர்ந்து நிச்சயம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான் இரு பிள்ளைகளை காக்க வேண்டுமே என்று!!!
ஏனென்றால் அறிந்து அறிந்து அப்பனே கேட்டுக் கொள்ளுங்கள் இதே போலத்தான் இறைவன் மிகப் பெரியவன் உலகத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளையும் கூட காத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!
ஆனால் மனிதனோ எதை என்று அறிய அறிய இறைவன் காக்கவில்லை ஏன் இவ்வாறு கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றான்???? என்பதெல்லாம்!!!
தெரிவதே இல்லை ஏனென்றால் அப்பனே கஷ்டங்கள் எதற்கு கொடுக்கின்றான் என்றால் அப்பனே இறைவன் எதை என்றும் அறிய அறிய பிறவிகள் வேண்டாம் என்பதே தீர்ப்பு அப்பனே!!!
பிறவிகள் பிறந்து பிறந்து கஷ்டப்படுவதை விட அப்பனே இவ் ஆன்மா இறைவனிடத்தில் சரண் அடைந்து விடும்!!
அதனால் தான் கஷ்டங்கள் அப்பனே!!!
கஷ்டங்கள் எதற்காக வருகின்றது???
இறைவன் தன் பக்கத்தில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அப்பனே!!!
அவ் கர்மா நீங்கினால் தான் அப்பனே இறைவன் பக்கத்தில் செல்ல முடியும் அப்பனே!!!
இதையெல்லாம் விஞ்ஞான பூர்வமாகவே விளக்குகின்றேன் அப்பனே!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!
நலன்கள்!!!!
ஆனாலும் அப்பனே இதற்காகவே அப்பனே பின் அதாவது மனிதனுக்கு எப்படி பக்திகள் செலுத்துவது என்பதை கூட தெரியாமல் செலுத்தி வருகின்றான் அப்பனே
ஆனால் பிள்ளையோன் இருப்பது அப்பனே கிழவன் ரூபத்தில் அப்பனே
ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்!!!
ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் ஒருவன் கேட்டான்!!!!
நீ பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டுமா????????
அதற்கு சாக வேண்டியதுதானே !!!!!! என்று!!!!! பிள்ளையோனை பார்த்து!!!!
ஆனாலும் பிள்ளையோன் அமைதி காத்திருந்தான் அப்பனே!!!
இதனால் அப்பனே பிள்ளையோன் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அத் திருத்தலத்தில் இருந்து அப்பனே ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே
ஈசனார்!!!!!!!!
மகனே!!!!
( பிள்ளையாரை பார்த்து)
இவ்வாறே நீ சென்று கொண்டிருந்தால் எவ்வாறு???????
அதனால் நீ இருக்கும் இடத்தில் அமர்ந்தால்தான் நலம்!!!!
அதாவது யார் எங்கு இருப்பார்? எதை என்றும் அறிந்து அறிந்து எங்கு எவை என்று கூட தகுதிக்கு ஏற்ப அங்கே இருந்தால் தான் மதிப்பு!!!
அதனால் உன்னிடத்திலே நீ சென்று அமர் !!!!
(கோயிலுக்குள்ளே கருவறையில் சென்று உட்காரு என்று ஈசன் பிள்ளையாருக்கு கட்டளை)
இக் குழந்தைகள் எப்படித்தான் எதை என்று அறிய அறிய ஞானக் குழந்தைகளாக மாறிவிடுவார்கள் என்று!!!
( பிள்ளையார் ஈசனைப் பார்த்து)
இதனால் நிச்சயம் சரி தந்தையே!!!!!
பாசங்கள் நேசங்கள் இவையெல்லாம் நிச்சயம் யாருக்கும் செலுத்தலாகாது!!! இதனால் அமர்ந்தான்.
பிள்ளைகள் எல்லாம் அழுது புலம்பியது!!!!
ஏனென்றால் கிழவன் ரூபத்தில் வந்தவன் ஆனால் எங்கேயோ சென்று விட்டானே என்று கூட அழுது அழுது புலம்பியது.
ஆனால் மீண்டும் உண்ண வழி இல்லை!!!!
இதனால் நிச்சயம் ஆனாலும் ஏதோ உண்டு அறிந்தும் அறிந்தும் கூட இதனால் பெரியவர்கள் ஆனார்கள்.
ஆனால் பிள்ளையோன் ஆனாலும் இவர்கள் அறிந்தும் அறிந்தும் கூட!!!
பின் ஈசனே இவர்கள் ஞானிகள் ஆக தான் ஆக வேண்டும் பல பேர்களுக்கு நிச்சயம் நல்லதை செய்ய வேண்டும்!!!!
அதனால் கஷ்டப்பட்டுத்தான் நிச்சயம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதெல்லாம் தீர்ப்பு!!!!
இதனால் பின் கணபதியே விட்டு விட்டான்!!!!
இதனால் நிச்சயம் கஷ்டங்கள் பட்டு பட்டு உண்ண வழியில்லாமல் அப்படியே திரிந்து எதை என்றும் கூற பல ஆலயங்களுக்கு சென்றனர்.
பல ஆலயங்களுக்கு சென்று சென்று சென்று எங்கேயும் அறிந்தும் அறிந்தும் கூட கடைசியில் பார்த்தால் அண்ணாமலையில் உட்கார்ந்து விட்டார்கள்!!!!
""திருவண்ணாமலை!!!
அண்ணாமலையில் உட்கார்ந்து என்னதான் செய்வது ???என்று கூட இருவருமே உட்கார்ந்து அறிந்தும் அறிந்தும் கூட!!
இதனால் நிச்சயமாய் எவை என்றும் புரியாமலே!!!
ஆனாலும் அங்கு ஏதோ கொடுக்கும் பின் மனிதர்கள் எதை என்றும் அறிய அறிய இவர்கள் அவையெல்லாம் உட்கொண்டு வந்தனர்.
இதனால் அங்கும் கூட சில கூட்டங்கள் இருந்தது அறிந்தும் அறிந்தும் கூட
யாராவது பக்தர்கள் என்று சொன்னால் அடித்து நொறுக்குபவர்கள் கூட!!!
அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இங்கே பக்தர்கள் இருந்ததை கூட கற்களை வீசி பின் எதை என்றும் அறிய அறிய வெளியே துரத்தினர்!!!
அது ஒரு பெரிய மழை அப்பா சூழ்ந்ததப்பா அங்கெல்லாம் நிச்சயம் சில சில அப்பனே எவை என்றும் அறியாமல் குடிசையில் வாழ்ந்தனர் பக்தர்கள் மிகுந்த பக்தர்கள்.
ஆனாலும் அப்பனே சில அரசு சம்பந்தப்பட்டவர்களால் அப்பனே அடித்து நொறுக்க அப்பனே மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட இவர்கள் அங்கு இருக்கையில் மீண்டும் உயிருக்கு எதை என்று அறிய அறிய அப்பனே உயிர் போகக் கூடியது அப்பனே அடியும் உதையும் வாங்கி அப்பனே
ஆனாலும் இங்கு தேவை இல்லை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அங்கிருந்து திருத்தலம் அப்பனே அதாவது ஏழுமலையான் (திருப்பதி) இன்னும் பல பல ஆலயங்களுக்கு சென்று அப்பனே கடைசியில் இங்கு வந்தார்களப்பா!!!!!
(மயூரேஷ்வர் (எ) மோரேஷ்வர் ஆலய பகுதிக்கு புனே மகாராஷ்டிரா)
அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே இங்கே கூட அமர்ந்து!!!
ஆனாலும் அப்பனே உண்ண உணவுகள் கூட இல்லை இங்கு!!!!
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல பல வழிகளில் கூட ஏதோ ஒன்றை எதை என்றும் அறிய அறிய!!!
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் இறைவன் அதாவது ஈசன் தேவி பார்த்தார்கள்!!!!
ஈசனை பார்த்து தேவியார்
ஈசனே உந்தனுக்கு இவ்வாறு சோதிப்பதே கடமையாகி விட்டது!!!
இதனால் இக் குழந்தைகளை கூட எவ்வளவு சோதித்தீர்கள்!!!!
ஆனாலும் இவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை நீங்கள்!!
ஏதாவது செய்யுங்கள் என்று தேவியார்!!!
ஆனாலும் ஈசன்!!!
தேவியாரை பார்த்து!!!
தேவியே நில்லும்!!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அனைத்து உயிர்களுக்கும் யான் பொறுப்பு!!!!!
இதனால் இவர்கள் மற்றவர்களுக்காக நிச்சயம் பாடுபட்டு மற்றவர்களை திருத்துவதற்காகவே பிறந்துள்ளனர்.
அதனால் இப்பிறப்பில் நிச்சயம் இவ்வாறு கஷ்டங்கள் பட்டால் தான் இவர்கள் மற்றவர்களை திருத்துவார்கள்!!!
இவ்வாறு திருத்தி இவர்களுக்கு கடைநாள் வரையிலும் கூட அதாவது கலியுகத்திலும் கூட இவர்கள் பல நபர்களுக்கு கூட ஆசிகள் வழங்குவார்கள்!!!!
பின் அப்படி என்றால் பின் அதாவது தேவி கேட்டாள்!!!!
அப்படி என்றால் பின் நிச்சயம் இவ்வாறு கஷ்டப்படுபவர்கள் தான் மற்றவர்களுக்கு உதவியாக ஆக முடியுமா????
ஈசனார்!!!!
தேவியே கேள்!!!!
நிச்சயம் கஷ்டங்கள் பட்டுப்பட்டு எவன் ஒருவன் எழுகின்றானோ அவந்தனுக்கு பின் அனைத்தும் யான் கொடுப்பேன்
எவன் ஒருவன் அதை தனக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு ஈகின்றானோ அவந்தனுக்கு இன்னும் அருள்கள் கூடும் இன்னும் பணங்கள் சேரும் இன்னும் எது எதுவோ சேரும்!!!!
அப்பொழுது நிச்சயம் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய தான் மட்டும் வாழ வேண்டும் தன் குடும்பம் இனம் வாழ வேண்டும் என்று யார் நினைக்கின்றானோ அவந்தனுக்கு நிச்சயம் இறைவன் கொடுக்கவே மாட்டான் அப்பனே!!!
வாழ்ந்து விட்டு செல்லுங்கள் என்று கூறி விட்டுச் செல்வான் அப்பனே!!!
இதை ஏற்கனவே யான் உரைத்து விட்டேன் அப்பனே...
எப்பொழுதும் மற்றவர்களை நோக்கியே நாம் கண்காணிக்க வேண்டும் அப்பனே!!!
அப்படி கண்காணித்தால் தான் அப்பனே இறைவனும் நம்மை கண்காணிப்பான் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
எவை என்று புரியாமலே இதனால் அப்பனே அவர்களுக்கு பின் ஈசன் அப்பனே திடீரென்று வந்தான் மனித ரூபத்தில்!!!!
ஆனாலும் பின் இருவரும் கூட இங்கே யாரும் இல்லையப்பா அப்பொழுது!!
(ஆலயம் தற்போது இருக்கும் இடம் அப்பொழுது காலியாக இருந்தது பொட்டல்காடாக இருந்தது)
அறிந்தும் அறிந்தும் கூட உங்களுக்கு என்ன தேவை???
இவ்வாறு நீங்கள் கஷ்டங்கள் பட்டுப்பட்டு எங்கிருந்து வந்தீர்கள்? ஏன் இந்த நிலைமை என்றெல்லாம்!!!!
ஆனால் ஈசனுக்கு அனைத்துமே தெரிந்தது
ஆனாலும் அவர்கள் சொன்னார்கள்!!!! எங்களுக்கும் யாரும் இல்லை யாங்கள் அனாதைகளே!!!!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட யாங்கள் ஒன்றுமே தவறுகள் செய்யவில்லை..... ஆனாலும் கஷ்டங்கள் என்றெல்லாம்
ஆனாலும் அப்பனே இப்பொழுது கூட அவ் இருவர்கள் இங்கேதான் இருக்கின்றார்கள் அப்பனே
பிள்ளையோன் அருகிலே தான் இருக்கின்றார்கள் அப்பனே.
அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்
அப்பனே அதனால் அவர்களும் இவ்வாறு சொன்னார்கள் அதனால் நிச்சயம் நீங்கள் பின் அனாதைகள் இல்லை யான் இருக்கின்றேன் என்று கூட!!!( மனித வடிவத்தில் வந்த ஈசனார்)
ஆனாலும் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று கூட எவை என்றும் அறிய அறிய
ஆனால் இதே போல தான் நாங்கள் சிறுவயதில் இருந்த பொழுது ஒரு முதியவன் எங்களை காப்பாற்றினார் ஆனாலும் பாசத்திற்கு அடிமையாகி விட்டு அவர் எங்கேயோ எங்களைப் பிரிந்து சென்று விட்டார்!!!!
அதனால் நீங்கள் வந்துள்ளீர்களா? நீங்கள் எங்கள் மீது பாசமழை பொழிய தேவையில்லை.
யாங்களே இதுவரை வாழ்ந்திட்டோம் இன்னும் சிறிது காலமே இருக்கின்றது வாழ்ந்து விட்டு செல்கின்றோம்
உங்கள் வேலையை பாருங்கள் என்று!!!!!
அப்பனே புரிகின்றதா இப்படித்தான் ஒரு ஞானியவன் பேச வேண்டுமே தவிர !!!
எதை என்று வா!!!!! நீ!!!! வா!!! எங்களுக்கு அனைத்தும் கொடு எங்களுக்கு அவை கொடு !!! இவை கொடு !! என்றெல்லாம் ஞானத்திற்கு செல்லலாகாது என்பேன் அப்பனே!!!!!!!
(ஞான வழியில் ஞானப் பாதையில் வருபவர்கள் அது வேண்டும் இது வேண்டும் அதை கொடு இதை கொடு என்று கேட்கக் கூடாது)
இப்படித்தான் அப்பனே மனிதர்கள் ஞானப் பாதைக்கு போக வேண்டும் போக வேண்டும் அப்பனே என்று எண்ணங்கள்!!!!
ஆனால் அப்பனே மனதில் அப்பனே ஆசைகள்.... தீராத பேராசைகளப்பா!!!!
இவ்வாறு பேராசைகளை வைத்துக்கொண்டு ஞானம் எவ்வாறு தித்திக்கும் ????? அப்பனே!!!!!
சொல்லுங்கள் அப்பனே!!!!!
எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே அவ் இருவரும் இங்கேயே தங்கி அப்பனே எதையோ ஆனாலும் சரியாகவே!!!!
ஆனாலும் ஈசன் உணர்ந்து விட்டான் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதையெல்லாம்.
ஆனாலும் நிச்சயம் உண்ண வழிகளை ஏற்படுத்தினான்
அப்பனே இங்கு உள்ளவர்களை கூட அனைவருக்கும் ஆசிகள் வழங்கிக் கொண்டே வந்தார்கள் இவ் இருவர்கள் அப்பனே!!!
ஆனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் இவர்களே சமைத்து உண்ணுவது அப்பனே மற்றவர்களுக்கும் கொடுப்பது... இங்கு வருபவர்களுக்கு!!!
இவையெல்லாம் அதாவது இங்கு பல விலங்குகளும் இருந்தது பல பல அப்பனே எவை என்றும் அறிய அறிய அவைகளுக்கெல்லாம் கூட அன்பு பாசங்கள் இவர்கள் மீது அப்பனே.... எதை என்று அறிய அறிய இவர்கள் உண்ணுவார்கள் அப்பனே ஆனால் தெரிந்து கொண்டார்கள் இன்னும் பலமாக அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே பின் செய்தால் பல உயிர்களும் வந்து உட்கொள்ளும் என்று இதனால் அப்பனே பன் மடங்கு அப்பனே எதை என்று அறிய அறிய ஈசன் கொடுத்தான் அப்பனே.
பல மடங்கு அப்பனே பின் உணவை எல்லாம் சமைத்து எதை என்று அறிய அறிய மீதி பின் இருப்பதை எல்லாம் பல உயிரினங்கள் உண்டு உண்டு மகிழ்ந்தன அப்பனே இங்கேயே தங்கி விட்டன அப்பனே!!!!
இதனால் அப்பனே புண்ணியங்கள் இன்னும் பெருகிற்று!!!! அப்பனே
இதுதான் அப்பனே புண்ணியங்கள் நிச்சயம் அப்பனே நீங்கள் தகுதிக்கு ஏற்பவே அப்பனே இறைவனே ஏற்படுத்துவான் இது சத்தியம் அப்பனே!!!!!
என்னால் புண்ணியங்கள் செய்ய முடியவில்லையே எதையும் செய்ய முடியவில்லை என்றெல்லாம் பிதற்ற கூடாது என்பேன் அப்பனே
நீங்கள் செல்கின்ற பாதை சரியாக இருந்தால் அப்பனே புண்ணியங்கள் நிச்சயமாய் சத்தியமாய் இறைவனே எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதெல்லாம் வழிகளை காட்டுவான் அப்பனே!!!!
புண்ணியங்கள் பெருகிற்று அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இவர்களுக்கு சமைப்பதே வேலையாயிற்று!!!! அப்பனே!!!
அப்பனே எதை என்று கூட அதாவது உயிர்களுக்கெல்லாம்.
(மயில்கள் அதிகம் இருக்கும் பகுதியாக இந்த இடம் இருந்தது...வடமொழியில் மயிலுக்கு மயூர்.மோர் என்று பெயர் உள்ளது....... அதனால் இந்த கோயில் மயூரேஸ்வர் கணபதி மோரேஷ்வர் எனவும் அழைக்கப்படுகிறது.
முருகனை மயூர வாகனன்.என அழைக்கப்படுவது மயில் வாகனனே என்று பொருள்.)
குருநாதர் குறிப்பிடும் உயிரினங்கள் ஞானியர் அன்னமளித்த உயிரினங்களில் மயில்களும் அதிகம் இடம் பெற்றுள்ளது)
இதனால் அப்பனே பின் ஆனாலும் விநாயகப் பெருமான் மீது ஒரு பக்தி கொண்டோன் இங்கு அப்பனே.... விநாயகப் பெருமானுக்கும் அவந்தனும் பின் ஆராதனை செய்து கொண்டே இருந்தான்.
ஒரு நாள் பாம்பு தீண்டியது அவந்தனை!!!!
தீண்டிற்று!!!!! ஆனாலும் அதற்கு மருந்துகள் இல்லையப்பா இங்கு.
அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே அவன் கூட அழுது புலம்பினான்!!!
விநாயகப் பெருமானே !!!!!
உந்தனுக்கே!!!! சேவைகள் செய்து கொண்டிருந்தேனே!!!!!............
இப்படி எந்தனுக்கு ஆகிவிட்டதே!!!!!.......
என் குழந்தைகள் பின் மனைவி எவை என்று கூட பின் எதை என்றும் அறிய அறிய தாய் தந்தையர் எவ்வாறெல்லாம் அழுது புலம்புவார்கள்!!!!!
யான் தான் உன்னை நம்பி!!!! ஆனால் இங்கு வந்து உங்களுக்கு சேவைகள் செய்து செய்து ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அவர்களுக்கு யார் உணவை கொடுப்பார்கள் என்று அழுது புலம்பினான்!!!
ஆனால் இவர்கள் இருவரும் அறிந்தும் அறிந்தும் இவ்வாறு நாம் தான் அனாதைகள்!!!!
இவனாவது நன்றாக இருக்கட்டுமே என்று பின் கால்களை எதை என்றும் அறிய அறிய
( பாம்பு தீண்டிய கால்களை)
எவை என்று புரிய புரிய நிச்சயம் ஒரு கம்பை அதாவது எடுத்துக்கொண்டு ஓங்கி அடித்தான்!!!!
(இரட்டை ஞானிகளில் ஒருவர் பூசாரியின் கால்களில் அதாவது பாம்பு தீண்டிய இடத்தில் அடித்தார்)
விஷங்கள் அடித்த நொடியிலே போய்விட்டது!!!!
இதனால் நிச்சயம் அவன் பிழைத்துக் கொண்டான்.
இதனால் பின் அவ் எதை என்று அறிய அறிய பூஜைகள் செய்பவன் ஊருக்கெல்லாம் தெரிவித்தான்!!!
இங்கு ஓர் எதை என்றும் அறிய அறிய இருவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் கை பட்டாலே அடித்தாலே அனைத்தும் சரியாக விடுகின்றது என்று !!!
கர்மங்கள் போய்விடும் என்று ஓடோடி வந்தார்கள் நிச்சயம் ஓர் ஓர் அடி கொடுத்தார்கள் அறிந்தும் அறிந்தும் கூட பின் அடி கொடுத்து அடி கொடுத்து பக்குவங்கள் பட்டு பட்டு அனைத்து கர்மாவும் சென்று விட்டது அப்பனே.
அப்பனே இப்பொழுது கூட எதை என்றும் அறிய அறிய விநாயகப் பெருமானை நீங்கள் தரிசித்தீர்களே!!!
அப்பனே இப்பொழுது கூட அனைவருக்கும் தெரியாமலே ஓர் அடி கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் உங்களுக்கும் அடி விழுந்தது !!! (யாத்திரை சென்ற அடியவர்களுக்கும்)
ஆனால் நீங்கள் உணரவில்லை!!! அப்பனே
ஏனென்றால் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அப்பனே இதெல்லாம் உதவாதப்பா அப்பனே தெரியாதப்பா!!!!!
அப்பனே ஆனால் பின் இறைவன் கண்ணுக்கு தெரிந்தவனாக தான் இருக்கின்றான் அப்பனே
ஆனால் நீங்கள் தான் அப்பனே மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே
மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!!!! இரவில்(இருட்டில்) சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!! அவ் இரவில் சிக்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு எப்படித்தான்??? இறைவன் தெரிவான்??? அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!
அதனால் வெளிச்சத்துக்கு வாருங்கள் அப்பனே!!!
எப்பொழுது நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்களென்றால்!!!
அப்பனே எவையும் அனைத்தும் மாயை பின் எவை என்று அறிய அறிய பிள்ளைகள் பின் பாசங்கள் பந்தங்கள் இவையெல்லாம் விட்டொழித்தால் தான் அப்பனே வெளிச்சத்திற்கு வருவீர்கள்!!!
அங்கு இறைவனை கண்டு விடுவீர்கள் அப்பனே
அப்பனே இவையெல்லாம் மனித முட்டாளுக்கு தெரியாது அப்பனே!!! அறிந்தும் அறிந்தும்.
அதனால் தான் சொல்கின்றோம் அப்பனே!!!
கேட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இனி மேலும் எங்களுடைய வாக்குகள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே புரிய வைப்போம்!!!
அப்படி புரியாவிடிலும் அடித்து புரிய வைப்போம் அப்பனே!!!!! இவ்வளவுதான் வாழ்க்கை என்பதை கூட அப்பனே....
இறைவனை சாடிக் (திட்டிக்) கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!
இறைவன் என்ன செய்தான் ??? அப்பனே
பின் நன்றாகத்தான் உங்களுக்கு அனைத்தும் கொடுத்து இவ்வுலகத்திற்கு அனுப்பினான்!!!
ஆனால் நீ செய்யும் தவறினால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் நிகழ்கின்றது என்பது தெரியாமல் விளையாடுகின்றான் பின்பு நீயே அனைத்து கர்மாக்களையும் சேர்த்து விட்டு இறைவன் எதை என்றும் அறிய அறிய மீண்டும் இறைவனிடத்திற்கு வந்தால் இறைவன் எவை செய்வானப்பா????
கேளுங்களப்பா!!!!
இதனால் அப்பனே இவ் ஞானியவர்கள் இன்னும் கூட அப்பனே பின் மறைமுகமாக அப்பனே எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே பின் தலையில் அக் கொம்பை (தடியை) எடுத்து கொட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்.
இதனால் அப்படியே ஒவ்வொருவரையும் கூட ஞானத்தை நோக்கியே செல்கின்றார்கள் அப்பனே!!!
ஒரு ஞானியானவன் எப்படி இருக்க வேண்டும் என்றால் அப்பனே..... இருப்பது அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய கிடைப்பதை உண்டுவிட்டு அப்பனே அலைந்து திரிந்து பரதேசி அதாவது பிச்சைக்காரன் போல் அப்பனே சென்றடைய வேண்டும் அவன் தான் ஞானியாக முடியுமே தவிர
மற்றவர் எல்லாம் ஞானியாக முடியாது பொய்தான் கூறிக் கொள்ள வேண்டும்!!!!
யான் ஞானி ருத்ராட்சம் அணிந்து இருக்கின்றேன் யான் ₹திருநீறு) பட்டையை தீட்டு இருக்கின்றேன் யான் இன்னும் இன்னும் எதையெதையோ செய்திருக்கின்றேன் என்றெல்லாம் பின் விபூதியை கொடுப்பது!!!!!
இவையெல்லாம் வீணப்பா பொய்யப்பா!!!!!!
இவனால் ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!!
ஆனால் நிச்சயம் ஞானியர்கள் கூட உடம்பில்லாமல் அப்பனே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகவே சொல்லிவிட்டேன் இங்கு
அப்பனே அதனால் தான் வரச் சொன்னேன் இவ் அமாவாசையில் எதை என்று அறிய அறிய அப்பனே
இவ் அமாவாசையில் அப்பனே அஷ்ட எதை என்று அறிய அறிய அப்பனே அஷ்ட விநாயகர் பெருமானின் தரிசித்தால் அப்பனே சக்திகள் கூடும் அப்பனே!!!
அவை மட்டும் அல்ல அப்பனே இவை ஆண்ட அப்பனே தற்பொழுது எதை என்று அறிய அறிய வீரசிவாஜியே ( மராட்டிய பேரரசன் சத்ரபதி சிவாஜி) என்று அப்பனே அவந்தனும்
அலைந்து அலைந்து சுற்றினான் அப்பனே... பின் சித்திகள் பெற விநாயகப் பெருமானை எங்கெங்கெல்லாம் பின் சுற்றித்திரிந்தான் அப்பனே
காளிகா தேவி எங்கெல்லாம் இருக்கின்றாளோ அங்கெல்லாம் சுற்றித்திரிந்தான் அப்பனே
அங்கெல்லாம் சென்று அப்பனே அவந்தனக்கு சூட்சுமங்கள் கூடியது அப்பனே!!!!
இன்னும் எதை என்று அறிய அறிய இங்கு தான் பல பல வித்தைகள் தெரிந்தது அப்பனே....அவ் வித்தைகளை வைத்துக்கொண்டு நல்லதை செய்தான் அப்பனே
ஆனால் கடைசியில் அப்பனே விதி ஆனால் உலகத்தில் அப்பனே சிறிது காலமே விட்டொழிப்பான் அப்பனே இறைவன்... என்னதான் செய்கின்றான் என்று!!!!
அவ் வேலை முடிந்து விட்டால் பின் இனத்திற்கு அதாவது அவனிடத்திற்கே இறைவன் அழைத்துக் கொள்வான்... இதுதான் அப்பனே!!!!
நீங்களும் அப்பனே தேடுங்கள் மற்றவர்களுக்காக தேடுங்கள் அப்பனே!!!!
உங்களுக்காக தேடாதீர்கள் அப்பனே.
உங்களுக்காக நீங்கள் தேடுகின்றீர்கள் என்றால் அப்பனே ஒன்றும் கிட்டப் போவதில்லை அப்பனே
நிச்சயம் கடைசியில் சாவுதான் அப்பனே
சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே!!!
இன்னும் ஆசிகள் கோடிகளப்பா !!! நலன்கள் ஆசிகள்!! அப்பனே இன்னும் அப்பனே உரைக்கின்றேன் ஆசிகள் !!ஆசிகள் !!! அப்பனே!!!
மயூரேஸ்வர் கணபதி ஆலயத்தில் அடியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் அகத்திய பெருமான் தந்த பதில்கள்!!!!
குருவே சரணம் நமஸ்காரங்கள்!!!!!!
குருவே திரு ஞானப் புதல்வன் விநாயகப் பெருமானின் வாக்குகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
அப்பனே நிச்சயம் ஒரு பெரிய திருத்தலத்தில் வரச் சொல்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே நிச்சயம் நீங்கள் என்னென்ன நினைக்கின்றாயோ அவையெல்லாம் நிச்சயம் நிச்சயம் கணபதி வந்தால் அப்பனே இன்னும் தாங்க முடியாத அளவிற்கு கூட அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே வாக்குகள் சொல்வான் என்பேன் அப்பனே நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே!!!
முதலில் அப்பனே பக்குவங்கள் படுத்தி அவன் தானாக வந்து செப்புவான் அப்பனே!!!
நீங்களும் கேட்பீர்கள் அப்பனே பொறுத்திருக!! அப்பனே !!!!
குருவை சரணம்
இந்த உலகத்திற்கு நல்லது செய்வதற்கு சில அபூர்வ சக்திகளை நல் மனிதர்களுக்கு தந்தால் அதை வைத்துக்கொண்டு நல்லதை செய்ய முடியும் அல்லவா
அப்பனே அதை யான் செய்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே நீங்கள் என் அருகில் தான் இருக்கின்றீர்கள் அப்பனே போதுமா!!!!
அப்பனே அனைவரும் என் பிள்ளைகள் தானப்பா பிள்ளைகள் தவறு செய்தாலும் அப்பனே தந்தை திருத்தி நல்வழியில் அப்பனே எடுத்துச் செல்வார்கள் அதுபோலத்தான் நான் உங்களை அனைவரையும் எடுத்துச் செல்கின்றேன் அப்பனே!!!
நீங்கள் அனைவரும் எதை என்று அறிய அறிய என் அருகிலே இருக்கின்றீர்கள் அப்பனே எங்கள் புண்ணியம் செய்தவர்களே அப்பனே அதனால் தான் யான் வைத்துக் கொண்டிருக்கிறேன் என் அருகிலே!!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய யானே உங்களுடன் இருக்கும் பொழுது கஷ்டங்கள் அப்பனே
ஆனாலும் அப்பனே இன்னும் உங்கள் நிலைமைக்கு கீழானவர்கள் அதாவது என்னை நெருங்க முடியாதவர்கள் நிலைமை எவ்வளவு கஷ்டங்கள் என்று அப்பனே சிறிது யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே
அப்பனே அதனால் இருப்பதை சரியாக பயன்படுத்துங்கள் அப்பனே!!
யான் உங்களை கைவிட மாட்டேன் என்பேன் அப்பனே!!!
தக்க சமயத்தில் அப்பனே அகத்தியன் மாற்றி விடுவான்.
அகத்தியனை பற்றி போகப் போக தெரியும்!!!!
அப்பனே எதை என்று அறிய உரைத்துக்கொண்டே தான் வருகின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எந்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே அமைதி பொறுத்து இருங்கள் அப்பனே!!!!
குருவே சரணம் தாங்கள் வாக்கு தந்து கொண்டிருந்த பொழுது ஒரு வயதான தம்பதியினர் சுவடி வாசிக்கும் இடத்திற்கு அருகில் வந்து பார்த்து சிரித்து விட்டு சென்றனர் அவர்களைப் பற்றி கூறுங்கள்!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அது இப்பொழுது தேவையில்லை என்பேன். அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய நான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே கடைசியில் சொல்கிறேன் அப்பனே அவர்கள் யார் என்று இப்பொழுது சொல்லிவிட்டால் நீங்கள் பைத்தியம் ஆகிவிடுவீர்கள் திரிந்து அலைவீர்கள் என்பேன்.... அமைதிப் பொருத்திருக!!!!!
ஆசிகள்! ஆசிகள்!! அப்பனே!!
மயூரேஷ்வர் கணபதியின் முகவரி: ஸ்ரீ மயூரேஷ்வர் கணபதி கோயில், மோர்கான், தாலுகா பாராமதி, புனே மாவட்டம், மகாராஷ்டிரா 412304
யூரேஷ்வர் கணபதி கோயில் பக்த நிவாஸ்: ஸ்ரீ க்ஷேத்ரா மோர்கான் மேலாளர், ஸ்ரீ மயூரேஷ்வரா கோயில், சின்ச்வாட் தேவஸ்தான அறக்கட்டளை அலுவலகம், பி.ஓ. மோர்கான், தாலுகா பாராமதி, புனே மாவட்டம், மகாராஷ்டிரா, பின் - 412304
தொலைபேசி/மொபைல் எண். 02112279986, 09657254563
இருப்பிடம்/கிராமம்: மோர்கான்
தாலுகா: பாராமதி
மாவட்டம்: புனே
மாநிலம்: மகாராஷ்டிரா
நாடு: இந்தியா
பின் குறியீடு: 412304
அருகிலுள்ள நகரம்: புனே
மயூரேஷ்வர் மோர்கான் கோயில் நேரம்: காலை 5:00 மற்றும் இரவு 10:00 மணிக்கு மூடப்படும்
மயூரேஷ்வர் கோவில்
ஸ்ரீ மோரேஷ்வர் கணபதி கோயில் அல்லது ஸ்ரீ மயூரேஷ்வர் கணபதி . இது புனே மாவட்டத்தில் உள்ள மோர்கானில் (மயில்களின் கிராமம்), ஜெஜூரி-மோர்கான்-பாரமதி சாலை மற்றும் சாஸ்வாட் - போப்தேவ் - புனே சாலை வழியாக சுமார் 66.3 கிமீ (1 மணிநேரம் 53 நிமிடம்) அமைந்துள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரத்திலிருந்து தொலைவில் உள்ளது. அஷ்டவிநாயக் யாத்ரா/சுற்றுலா என அழைக்கப்படும் எட்டு மதிப்பிற்குரிய விநாயகர் கோயில்களின் யாத்திரையின் தொடக்க மற்றும் முடிவுப் புள்ளியாக இந்தக் கோயில் உள்ளது. இக்கோயில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஷ்டவிநாயகா, விநாயகரின் எட்டு வழிபாட்டு தலங்களில் ஒன்றாகும். கோயிலின் பதினொரு (11) படிக்கட்டுகள் கோயிலின் முன் உள்ள 'நந்தி'க்கும் முக்கியத்துவம் உண்டு.
மயூரேஷ்வர் கணபதி கோவில் மோர்கான் தினசரி பூஜை அட்டவணை
பிரக்ஷால பூஜை காலை 5:00 மணிக்கு மற்றும் நிறைவு இரவு 10:00 மணிக்கு
ஷோடஷோபச்சார் பூஜை காலை 7:00 மணிக்கு
மதியம் 12:00 மணிக்கு ஷோடசோபச்சார் பூஜை
இரவு 08:00 மணிக்கு பஞ்சோபசார பூஜை
மாலை ஆரத்தி 7:30 PM
இரவு 10:00 மணிக்கு ஷேஜ் ஆரத்தி
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அற்புதம் ஐயா...குருவின் புனிதமான பதிவுகளை தினமும் வாசிக்க மனம் நிறைவாக உள்ளது...குருநாதரின் குருகுலத்தில் கற்பது போன்று சிறப்பு உணர்வு... 🙏🙏🙏
ReplyDeleteஓம் அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete