வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இவர் என்கிற தலைப்பில், 1573/1575 தொகுப்புகளில் ஒரு சிவனடியாரை பற்றி விளக்கியிருந்தேன்.
இன்று அகத்தியப்பெருமான், அவரின் ஜீவநாடி, திரு ஜானகிராமன் ஆகியோர் பொதிகை சென்று விட்டு திரும்பி போகும் வழியில், அடியேனை பார்க்க வந்திருந்தனர்.
நலம் விசாரித்து, ஆசிகள் தந்தார்.
அடியேனுக்கு நண்பரின் எண்ணம் உதிக்கவே, அவரை வீட்டுக்கு வரச்சொன்னேன். அகத்தியப்பெருமானின் நாடியில் ஏதேனும் கேட்கலாம் என்றுரைத்தேன்.
வந்தவர் அகத்தியப் பெருமானை வணங்கிவிட்டு அமர்ந்தார். வந்தவர் யார் என யாருக்கும் தெரிவிக்கவில்லை.
"இவர் என் நண்பர். இவருக்கு ஏதேனும் வாக்கு உள்ளதா, என அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று கூறி முடிப்பதற்குள் அகத்தியப் பெருமான் நாடியில், ஒரு வரியில், அவரை பற்றி விளக்கி முடித்துக் கொண்டார்.
"இவனைப் பற்றி என்ன சொல்ல! வாழ்க்கையில், அனைத்தையும் உணர்ந்து, அனுபவித்து வந்தவன்" என்றார்.
ஏன் இந்த நிகழ்ச்சியை இங்கு தெரிவிக்கிறேன் என்றால், ஒருவன் செய்த நல்லது, எத்தனை வருடமானாலும், சித்தர்களால் போற்றப்படும். இது போல் வாழ்க்கையை வாழப் பாருங்கள். சித்தர்கள் அருள், என்றும் துணை நிற்கும்.
நேற்றுதான் இவரைப்பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிவித்தேன், இன்று அவர் அகத்தியப்பெருமானின் வாக்குகளை பெறுகிறார். கடைசியில், நாடியை வாங்கி கையில் வைத்து அகத்தியப் பெருமானை வணங்கி, கண்ணில் ஒற்றிக் கொண்டுவிட்டு சென்றார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நல்லதுங்க ஐயா...மிக்க நன்றி🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete