​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 27 March 2024

சித்தன் அருள் - 1574 - அன்புடன் அகத்தியர் - அஷ்ட விநாயகர் திருத்தலங்கள்!







வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புனே மற்றும் ராய்காட் அகமது நகர் மாவட்டங்களில் அமைந்திருக்கும் அஷ்ட விநாயகர் திருத்தலங்களை பற்றி குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்.

சித்தன் அருள் 1240.

மற்றும் இந்த அஷ்ட விநாயகர் ஆலயங்களுக்கு எந்த நாளில் செல்வது அங்கு சென்றால் என்ன சிறப்பு என்பதை சிவனேரி கோட்டையில் குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்.

சித்தன் அருள். 1321.

அதாவது அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் ஒரே நாளில் அதாவது அமாவாசை திதியில் செய்வது மிகவும் சிறப்பு கணபதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும் என்பதை பற்றி சிவனேரி கோட்டையில் வைத்து வாக்குகள் தந்திருந்தார்.

அதன்படியே அடியவர்கள் குழு அமாவாசை திதி அதாவது இரண்டு நாட்கள் வரும்படியான அமாவாசை திதியினை கணக்கிட்டு யாத்திரை செய்ய முடிவு செய்து குருநாதரை வணங்கி யாத்திரை செய்தனர்.

அஷ்ட விநாயகர் தல யாத்திரையில் குருநாதர் வாக்குகள் நல்கியிருந்தார் அதன் தொகுப்பு.

1 சிந்தாமணி விநாயகர். 
தேயூர். புனே மாவட்டம். மகாராஷ்டிரா.

ஆனைமுகன் அறுமுகன் பாதம் பணிந்தே செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே நலன்கள் அப்பனே எதை என்று எதை எதை என்று நோக்கி நோக்கி மனிதன் சென்று கொண்டே இருக்கின்றான்!!

ஆனாலும் இறைவன் தன் பால் ஈர்த்துக் கொண்டாலும் நிச்சயம் மனிதன் தன் பால் தான் செல்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றான்!!!!

அப்படி இருக்கையில் அப்பனே நிச்சயம் இறைவன் தண்டனை கொடுத்துத்தான் அப்பனே நன்றாக ஆக்குவான் இதை நிச்சயம் நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

ஒவ்வொருவரையும் கூட அப்பனே அதாவது இறைவன் படைத்தான் அப்பனே!!!

ஆனால் இறைவன் படைத்தவனுக்கு அதை எடுக்கவும் தெரியும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதை யாரும் உணர்வதே இல்லை என்பேன் அப்பனே!!!!

இறைவன் எடுத்துக் கொண்டானே பின்  இவ்வாறு இருந்தானே இவ்வாறு எல்லாம் புலம்பி அழுதும் நிச்சயம் பயனில்லை என்பேன் அப்பனே!!!

இறைவன் அதாவது இவ் உயிரையும் கொடுத்துள்ளான்!!! பின் இவ் உடம்பிற்கு அப்பனே எதை என்று அறிய அறிய அதை மீண்டும் எடுத்துக் கொள்ள இறைவனுக்கும் தெரியும் அப்பனே!!!

எப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே இவை யாருக்கும் தெரியாது என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே ஒரு ஞானி இருந்தானப்பா!!!!

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அவந்தனுக்கே இதுவும் புரியுமப்பா!!!!! 

அப்பனே யார் ஒருவன் எதை என்றும் அறிய அறிய அப்பனே யான் ஞானியாக வேண்டும் யான் எதை என்றும் அறிய அறிய இறைவன் அருகில் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் பல ஆசைகள்!!!!

அவை மட்டும் இல்லாமல் திருத்தலங்களை அமைக்க வேண்டும் நிச்சயம் அனைவருக்கும் எவை எவையோ செய்ய வேண்டும் என்பவையெல்லாம் அப்பனே மனிதனின் நினைப்பு அப்பனே!!!!

ஆனாலும் இறைவனின் நினைப்புதான் அப்பனே நடக்குமே தவிர நீ யார் என்பது சரியாகவே இறைவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் ஓர் படி மேலாகச் சென்று அப்பனே திருத்தலம் கட்டி அப்பனே இன்னும்....இத் திருத்தலம் புகழ் பெற வேண்டும் என்றெல்லாம் அப்பனே மாந்திரீகத்தை எல்லாம் பயன்படுத்தி அப்பனே ஈசன் எதை என்று அறிய அறிய கோபித்துக் கொண்டு நிச்சயம் அங்கிருந்து சென்று விடுகின்றான் என்பேன் அப்பனே!!!!

அப்பொழுது அத் திருத்தலம் எப்படியப்பா ????அமையும்!!!! 

அப்பனே இவ்வாறு தான் உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே

அதனால் ஈசனுக்கு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஈசனே நிச்சயம் அமைத்துக் கொள்வான் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே!!

ஆனால் ஈசனை காசுக்காக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே

அப்படி இருக்க நிச்சயம் தண்டனைகள் அப்பனே அதாவது இவ் விநாயகப் பெருமானே கொடுப்பானப்பா!!!!

அப்பனே விநாயகப் பெருமான் அப்பனே அலைந்து திரிந்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே ஞானங்களை வாரி வாரி வழங்குவதற்கு!!!!

ஆனால் அப்பனே மனிதனின் நினைப்பையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!


இதனால் அப்பனே மனிதனின் நினைப்பு சுக போகங்களில் பின் ஏறி ஏறி செல்கின்றான் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து!!!

அதனால் அப்பனே அதுவாகவே மாறு அதுவாகவே மாறு என்றெல்லாம் நிச்சயம் பிள்ளையோன் வரங்கள் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே

அதனால் அப்பனே அதுவாக மாறிவிட்டால் அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய பின் சுகங்கள் எவை என்று அறிந்தும் அறிந்தும் குதித்து குதித்து மீண்டும் இறைவன் பாதையில் வருவதற்கு சில கஷ்டங்கள் அப்பா!!!!

அதனால் ஞானத்தை கொடு கொடு என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தாலே போதுமானதப்பா அனைத்தும் நடந்து விடும் என்பேன் அப்பனே!!!

அதனால் மாய உலகத்தில் அப்பனே எதையும் கேட்டு விடாதீர்கள் என்பேன் அப்பனே!!! 

சித்தனுக்கு ஏதும் தேவையில்லை என்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய மனிதனுக்குத் தான் அனைத்தும் தேவை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அனைத்தும் தேவை என்று கர்மாவை சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றான் பலமாக பலமாக அப்பனே!!!


இவ்வாறு பலமாக பலமாக அப்பனே சேர்த்து வைத்து அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பா

பிரயோஜனம் இல்லை அப்பா!! எதனை என்றும் அறிந்தும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே

இவ்வாறு சேர்த்து வைத்தது அப்பனே உந்தனுக்கே அது வட்டியாக வருகின்றது அப்பனே!!!

இதுதான் உண்மையப்பா!!!

அவ் வட்டியை நீ தான் அனுபவிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே இளமையில் இறைவனை நாடு நாடு என்றெல்லாம் அப்பனே!!!

பின்  நாடிட்டால் அப்பனே அது பத்திரமாக அப்பனே அவ் பக்தி எங்கும் செல்லாதப்பா இறைவனின் அன்பும் எங்கும் செல்லாதப்பா!!!!

மீண்டும் பன்மடங்கு அப்பனே மீண்டும் கடைசியில் கடைசி காலங்களில் அப்பனே உன் பிள்ளைகள் உன் மனைவி அப்பனே உன் குடும்பத்திற்கே வட்டியும் முதலுமாக வரும் அப்பா!!!

இதுதான் அப்பனே நீ எதைச் செய்கின்றாயோ அது நிச்சயம் வட்டியாக மாறும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய சுகங்களை தேடி தேடி செல்கின்றாயா, அப்பனே நிச்சயம் அப்பனே கடைசி காலத்தில் அப்பனே அவ் சுகங்களே உந்தனுக்கு வினையாக போகும் என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய பிள்ளைகள் வேண்டும் வேண்டும் என்று சொல்லிட்டு எவை என்று அறிய அறிய போகின்றாயா அவைகளே உந்தனுக்கு தக்க எதிரியாக கடைநாளில் ஆகும் அப்பா!!!

அப்பனே எதை நீ விரும்புகின்றாயோ அதுவே கடைசியில் எதிரியாகுமப்பா!!!! 

அப்பனே எதை என்று அறிய அறிய உண்மை நிலைகளை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே உண்மை நிலைகளை தெரியாத அளவிற்கும் கூட அப்பனே பின் பல பல மனிதர்கள் அப்பனே அதாவது இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே 

யான் அகத்தியன் பக்தன் யான் முருகன் பக்தன் என்றெல்லாம் அவன் வாயில் வந்ததை எல்லாம் பின் வாதாடிட்டு இதையும் மக்களுக்கு பரப்பி விட்டார்கள்!!!! அதனால்தான் மக்கள் அப்பனே மூடநம்பிக்கையிலே மூழ்கியுள்ளார்கள் அப்பனே

அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே...  பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள் அப்பனே அது கடைசி காலத்தில் அப்பனே எதை என்றும் அறிய அறிய தீயதாக முடியும் என்பேன் அப்பனே

இதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

எதை என்று இன்னும் குழந்தை பாக்கியங்கள் வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகின்றீர்கள் அப்பனே!!!

இறைவனும் கொடுக்கின்றான் அப்பனே ஆனால் அதனாலே வரும் காலத்தில் கடைசி காலத்தில் உங்களுக்கு பிரச்சனை அப்பா!!!

அவை மட்டும் இல்லாமல் உங்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அவர்களுக்கும் (வாரிசுகள்) பிரச்சனையப்பா!!!

இன்னும் கணவன் வேண்டும் மனைவி வேண்டும் அப்பனே ஆசைப்படுகின்றீர்கள் அப்பனே

ஆனால் அதுவும் இறைவன் கொடுத்து விடுகின்றான் அப்பனே ஆனால் அதுவே அப்பனே எதை என்று கூட கடைநாளில் தொந்தரவாக போய்விடும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எங்கள் அருள் பெற்று விட்டால் இறைவன் ஆசிகள் பலமாக பெற்றுவிட்டால் அப்பனே நிச்சயம் அதை யாங்கள் நிச்சயம் மாற்றி விடுவோம் அப்பனே 

இதுதான் உண்மை அப்பா!!!

மற்றவை எல்லாம் பொய்களப்பா பொய்கள்!!

அப்பனே இன்னும் மனிதனுக்கு வாழ தெரியவில்லை பக்திகள் செலுத்தவே தெரியவில்லை அப்பனே

அப்படி இருக்க மனிதனுக்கு எவ்வாறு கஷ்டங்கள் நீங்கும்?? என்பேன் அப்பனே

அப்பனே மனதை பின் ஒரு நிலை படுத்த வேண்டும் அப்பனே!!!

மனதை ஒருநிலைப்படுத்தினால் அப்பனே இவ்வுலகத்தை நீ ஒரு நிலை படுத்தலாம் என்பேன். அப்பனே

ஆனால் உன் மனமே சரியில்லை என்றால் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய ஒரு நிலையும் படுத்த முடியாது தியானங்களும் செய்ய முடியாது அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே தீயதை நோக்கித்தான் மனம் சென்று கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே

இதனால் ஒன்றும் பயனில்லை அப்பனே

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து

அதனால் அப்பனே உங்களுக்கெல்லாம் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஞானப் பாதையை தான் யான் காட்டுவேன் சொல்லிவிட்டேன் அப்பனே

மீண்டும் மீண்டும் எதை கேட்டாலும் அப்பனே நிச்சயம் யான் எதை என்று அறிய அறிய என்னை வந்தும் நம்பி விட்டீர்கள் அப்பனே.....

அதனால் யான் என்ன கொடுக்கின்றேனோ அப்பனே அதைத்தான் நீங்கள் வாங்க வேண்டுமே தவிர மற்றவை எல்லாம் நிச்சயம் செல்லாது

ஏனென்றால் ஒரு தந்தைக்குத் தெரியும் தன் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று அப்பனே!!!


அடியும் கொடுப்பேன் உதையும் கொடுப்பேன் எதை என்று அறிய அறிய இவை இரண்டிற்கும் சம்பந்தம் உண்டா என்பதை கூட அனைத்தும் ஒன்று என்றே!!!

ஆனால் !!!! அடி வேறு!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட அதனால் அப்படியே நீங்கள் விரும்பியது எல்லாம் யான் நிச்சயம் கொடுத்து விட மாட்டேன் அப்பனே!!!

பின்பு நீங்கள் வேண்டுமானால் அகத்தியன் தேவையில்லை என்று ஒதுங்கிவிடலாம் அப்பனே

இதுதான் நிச்சயம் உண்மையான உண்மை அப்பனே!!!

அகத்தியன் கொடுக்கவில்லையே அகத்தியன் கொடுக்கவில்லையே

எதனால்????? கொடுக்கவில்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

உங்களுக்கு நல்லதாகத்தான் யான் செய்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

இது அனைவருக்குமே பொருந்தும் என் பக்தர்களுக்கு அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

ஒரு வரியில் பல ரகசியங்களை யான் தெரிவிப்பேன் அப்பனே

இன்னும் வரும் காலங்களில் அப்பனே அழியக்கூடிய நேரங்கள் அப்பனே

ஆனால் உங்களுக்கு பணம் எதை என்று அறிய அறிய யான் கொடுப்பேன் அப்பனே கவலைகள் இல்லை

அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே ஞானம் பெறுவதற்கு இவ்வுலகத்தில் ஏதும் தேவையில்லை அப்பா!!!!

அன்பு தான் தேவை அப்பனே!!!!

எதன் மூலம் நீங்கள் எதை என்று அறிய அறிய யார் மீது அன்பு செலுத்துகின்றீர்களோ அப்பனே அதன் மூலமே ஞானம் பெறுவீர்கள் அப்பனே

பொதுவாக அப்பனே வேலையில் எதை என்று கூட ஏதோ வேலை வேண்டுமென்று அப்பனே அதன் மூலமே அன்பு செலுத்தினால் அப்பனே அதன் மூலமே அழிவு ஏற்படும் அப்பா

திருமணம் வேண்டும் அப்பனே ஆனால் எவை என்று தவறில்லை அப்பனே ஆனால் யாங்கள் தான் கொடுக்க வேண்டும்

நீங்களே எடுத்துக் கொண்டால் அப்பனே அதன் மூலமே அழிவப்பா!!!

எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே மருந்துகள் எவை என்றும் அறிய அறிய எவை என்று அறியாமலே அப்பனே ஆனாலும் அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே

இயற்கையான மூலிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று

ஆனாலும் எவரும் கேட்பதில்லை!!!

பின் செயற்கைகளையே பின்பற்றுகின்றார்கள் அப்பனே.

அதனாலும் அழிவுகள் தானப்பா!!!

இன்னும் எதையெதையோ கேட்கின்றார்கள் அப்பனே

ஆனால் அதனால் தான் அழிவுகள் என்பதை கூட அவந்தனுக்கு தெரியாமல் கேட்டு விடுகின்றான் அப்பனே

அப்பொழுது யான் எதை கொடுக்க வேண்டும்?? எதை என்றும் அறிய அறிய அப்பனே

அதனால் பின் அப்பனே அழிவில்லாதவனை தேடு அப்பனே நிச்சயம் நீயும் அழிவில்லாதவனாக மாறுவாய் என்பேன் அப்பனே!!!!

யார் ஒருவனாவது அப்பனே எந்தனுக்கு எதுவும் தேவையில்லை இறைவன் தான் தேவை என்று சொல்கின்றானா??????? அப்பனே!!! 

இல்லை அப்பனே!!!

அப்பனே யானே பார்த்திருக்கின்றேன் அப்பனே
பூஜைகள் செய்பவனே எந்தனுக்கு அது வேண்டும் என் பிள்ளைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று!!! 

அப்பனே தெரியாமலே கேட்கின்றேன் !!!!

படைத்தவன் இறைவன் அவந்தனக்கு எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பது தெரியாதா????? என்ன !!!!!!


அப்பனே அப்பொழுது உன் பக்திகள் அங்கே கீழ்நோக்கிப் போய்விட்டது அப்பனே!!!!

அப்பொழுது எப்படியப்பா??!
நீ எதை என்று அறிய அறிய யான் பக்தன் என்று!!!

ஆனாலும் ருத்ராட்சம் அணிந்து கொள்வது அப்பனே இன்னும் இன்னும் எதை எதையோ செய்து கொண்டு அப்பனே யான் பக்தன் என்று அமைதியாக நின்று கொள்வது!!!

அப்பனே ஆனால் அவன் என்னென்ன செய்கின்றான் என்பது அப்பனே எந்தனுக்கே தெரியும்!!!! 

போதைக்கு அடிமையாகி இன்னும் சில மனிதர்கள் பெண்களுக்கு அடிமையாகி அப்பனே என்னென்ன அப்பனே !!!

அப்பனே இதனால் அகத்தியன் தண்டனைகள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே

ஆனால் நிச்சயம் அகத்தியனை வணங்கினேனே சித்தர்களை வணங்கினேனே எந்தனுக்கு ஒன்றுமே நடக்கவில்லையே என்று!!! 

அப்பனே நிச்சயம் நடக்காது சொல்லிவிட்டேன்!!!

அப்பனே நீங்கள் சரியில்லை அப்பனே

அதனால் நிச்சயம் உங்களை அடிக்கத்தான் யாங்கள் செய்வோம் அப்பனே!!!!

சித்தர்களுக்கு கோபம் வந்தால் அப்பனே அனைத்தையும் அழித்துவிட்டு செல்வோம் அப்பனே!!!!

எங்களுக்கும் தெரியும் அப்பனே அதனால்தான் விட்டு விட்டு பார்ப்போம் அப்பனே!!!

அப்படி திருந்தாவிடில் அப்பனே நிச்சயம் எதை என்று கூட அப்பனே பின் கெட்டுத்தான் கொடுக்க வேண்டும் என்று இருந்தால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து.

இன்றளவும் கூட அப்பனே அனைவரையும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

ஒரு பெண்மணி என்னை பார்த்து அகத்தியா !!!!
எனக்கு ஒன்றுமே கொடுக்கவில்லையே என்று என் தலை மீது கொட்டினாள் அப்பனே!!!

இது நியாயமா???

அவள் செய்தது புண்ணியமா ????  தர்மமா???...

அப்பனே இன்னொருவன் என்ன கேட்கின்றான் என்னை பார்த்து!!!!!

அகத்தியனே உந்தனுக்கு பூஜைகள் செய்தேனே!!!!!

எந்தனுக்கு எதைத்தான் கொடுத்தீர்கள்????

ஏதாவது பணம் தா !!  என்று!!

அப்பனே இன்னொருவன் அப்பனே எந்தனுக்கு பெண்கள் பின் பல வகையான  பெண்கள் வேண்டுமென்று இன்னொருவன்!!

 அப்பனே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

ஆனால் அவர்களுக்கெல்லாம் தண்டனைகளும் உண்டு என்பேன் அப்பனே!!!!


இவ்வாறெல்லாம் கேட்டு கேட்டு மனிதன் வரங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய

அது ஈசனிடம் நடக்கலாம் ஆனால் சித்தர்கள் கையில் நடக்காதப்பா நடக்காது!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

பின் ஒருவனை சோதித்து சோதித்து தான் அப்பனே யாங்கள் அனைத்தும் கொடுப்போம் என்பேன் அப்பனே!!!

அனைவரையும் யான் சோதித்து விட்டேன் அப்பனே!!!!! இன்னும் கூட சிறிது சோதிப்பேன் அப்பனே!!!

அதில் தேர்ச்சி பெற்று விட்டால் ஞானங்கள் அள்ளித் தந்து விடுவேன் அப்பனே

எதை என்று அறிய அறிய இது அனைவருக்குமே பொருந்தும் என்பேன் அப்பனே சமமாகத்தான் சொல்கின்றேன் அப்பனே

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய என் பேச்சை கேளாதவனுக்கு அப்பனே நிச்சயம் அப்பனே தண்டனைகள் உண்டு சொல்லி விட்டேன் அப்பனே

பல பேர்களுக்கும் எதை என்று அறிய அறிய அப்பனே தண்டனைகள் கொடுத்துவிட்டேன் அப்பனே!!!


 அதனால்தான் அப்பனே தேடித்தேடி வாருங்கள் வாக்குகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன் அப்பனே

ஏதோ கேட்பது...ஏதோ. எவை என்று அகத்தியன் சொல்லிவிட்டானே என்று அமைதியாக பொறுத்துக் கொள்வது அப்பனே....

 அப்படி நீ செய்யாவிட்டால் யானே தண்டனைகள் அப்பனே இதுபோல் பல பேர்கள் அப்பனே நிச்சயம் செய்துவிட்டார்கள்!!!!

( அதாவது குருநாதருடைய வாக்குகள் வேண்டும் வேண்டும் என முயற்சி எடுத்து வாக்குகள் கேட்டுவிட்டு குருநாதர் என்ன வாக்குகளில் கூறியிருக்கின்றார் என்பதை அதை பொருட்படுத்தாமல் ஏனோதானோ என்று உதாசீனம் செய்துவிட்டு இருப்பதை குருநாதர் இங்கே குறிப்பிடுகின்றார்)

 அதனால் தான் யார் ? யாருக்கு ??வாக்குகள் தேவையோ!!!!!!!!

""" யான் தான் முடிவெடுப்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

இதனால் வாக்குகள் வரவில்லையே எதை என்றும் அறிய அறிய யார் மீதும் குற்றம் சொல்லியும் இங்கு பிரயோஜனம் இல்லை அப்பா!!!!!

உன் மீது தான் குற்றம் அப்பனே...

நீ என்னென்ன தவறுகள் செய்கின்றாய் அப்பனே எதை என்று கூட உண்மை நிலைகளை சொல்லி விட்டால் கோபங்கள் வருகின்றதாம் மனிதனுக்கு

அப்பனே வரட்டும் அப்பனே அக்கோபம் ஒன்றும் செய்யாது அப்பனே எங்களை!!!!

எங்களுக்கு கோபம் வந்தால் அப்பனே யான் ஏற்கனவே உங்களை நிச்சயம் எதை என்றும் அறிந்து அறிந்து அனைவருக்குமே தெரிவித்து விட்டேன் அப்பனே!!!!!

அதனால் எதற்காகப்பா????
ஓடுகின்றீர்கள் ?? அப்பனே!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓடாதீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய தேயாதீர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய.....

இறைவனுக்காக தேயுங்கள் அப்பனே!!!!

இறைவன் உங்களுக்காக தேய்வான் அப்பனே!!!!

அப்பொழுதுதான் உண்மை நிலைகள் புரியும் ஞானப் பாதை தெரியும் !!!

அப்பனே இறைவனும் கண்களுக்கு புலப்படுவான் அப்பனே !!!

அப்பனே இறைவன் சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!

ஆனால் இறைவனை பார்க்க முடியவில்லையே???? 

ஏன் பார்க்க முடியவில்லை????

அப்பனே ஆசைகளப்பா ஆசைகள்!!!!

அப்பனே ஆசைகள் மனம் போல் சென்று விடும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் பல பாகங்கள் உள்ளது அப்பனே!!!

அதை அக்குவேராக அப்பனே யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

எங்கெல்லாம் சில கதிரியக்கங்கள் படுகின்றது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே நிச்சயம்....அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!! 


எண்ணற்ற புத்தகங்கள் அப்பனே யான் எழுதி இருக்கின்றேன் அப்பனே ஆனாலும் அவற்றையெல்லாம் மனிதன் எதை என்று அறிய அறிய அப்பனே மனித வாழ்க்கை இன்னும் முன்னேறக்கூடாது என்றெல்லாம் நினைத்து அழித்து விட்டான் அப்பனே

ஆனாலும் இனிமேலும் அவையெல்லாம் எப்படி எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டுமோ அப்படி யாங்கள் எடுத்துச் செல்வோம் அப்பனே

அதனால் சித்தர்கள் விசித்திரமானவர்கள் அப்பனே!!!! சித்தர்களைப் பற்றி யார் ஒருவன் சரியாக தெரிந்து கொண்டிருக்கிறானோ அவன் மடிந்து போவான்.

ஆனால் நிச்சயம் தெரியாதப்பா!!!

ஏமாற்றி சுற்றிக் கொண்டிருக்கின்றான் அவ்வளவுதான்!!!! அப்பனே 

( சித்தர்களைப் பற்றி யாரும் ஆராய்ந்து கொள்ள முடியாது சித்தர்களைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ள முடியாது என்பதை குறித்து குருநாத அகத்தியப் பெருமானும் காகபுஜண்டர் ரிஷியும்  ஏற்கனவே வாக்குகளில் கூறியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள் சித்தர்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது அப்படி அறிந்து கொண்டால் அது மரணத்தில்தான் போய் முடியும்!! ஆனால் சித்தர்கள் பற்றி எனக்கு தெரியும் நான் சித்தர்கள் வழியில் வந்தவன் என்று தற்போது உள்ள போலி சாமியார்கள் ஏமாற்றி சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றார்கள்)

இப்பொழுது (ஏமாற்றி) சுற்றலாம் அப்பனே!!!! சிறிது காலமே அப்பனே!!!

அப்பனே தாகத்திற்கு தண்ணீர் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஆனால் குடித்து விடலாம் ஆனால் மீண்டும் தாகம் எடுக்கும் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதேபோலத்தான் அப்பனே இப்பொழுது எவை என்று அறிய அறிய தாகம் எடுக்கலாம் ஆனால் யாங்கள் கொடுப்போம்

ஆனால் மறுபடியும் நிச்சயம் அப்பனே தாகம் எடுக்கும் அப்பனே அப்பொழுது தெரிந்துவிடும் உன் லீலை அப்பனே!!!!

நீ என்னென்ன செய்கின்றாய் என்பதை எல்லாம் அப்பனே அதனால் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை எல்லாம் பல பழமொழிகளும் உண்டு என்பேன் அப்பனே

நல் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன் இக் கணபதியிடம் எதை என்று அறிய அறிய இங்கு வந்து யான் வாக்குகள் பரப்ப வேண்டும்!!???! என்றெல்லாம் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய கணபதி அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே பல பல வழிகளிலும் கூட  அஷ்ட(மா)  அப்பனே சித்துக்களை பெற்றுள்ளார்கள் என்பேன் அப்பனே!!! கணபதியை கூட வலங்கள் 
வந்து வந்து !!!

அஷ்ட கணபதியையும் சுற்றி சுற்றி வந்து தரிசனம் செய்து அஷ்டமா சித்துக்களையும் பெற்றுள்ளார்கள் இதில் சிவநேரி கோட்டையில் சத்ரபதி சிவாஜி அவர்களும் அஷ்ட விநாயகரையும் தரிசனம் செய்து சித்துக்களை பெற்றதை குருநாதர் வாக்கில் கூறியிருந்தார்)

அதனால்தான் அப்பனே முதலில் ஞானங்கள் பெற வேண்டும் என்பதே முக்கியம்!!!

 அப்பனே பணங்கள் வந்துவிடும் ஆனால் போய்விடும் அப்பனே 

இவையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் அப்பனே பக்திகள் அன்புகள் ஞானங்கள் வந்துவிட்டால் அப்பனே மீண்டும் (திரும்பி) செல்லாதப்பா!!! அதன் மூலம் பொருள்கள் ஈட்டிக் கொள்ளலாம் அப்பனே!!!

இதுதான் உண்மை அப்பா அதனால் பலத்த பலத்த எதை என்று அறிய அப்பனே எதிர்கொள்ளுங்கள் அப்பனே எவ்வித கஷ்டங்களையும் கூட அப்பனே

அவ் கஷ்டங்களை எல்லாம் எதிர்கொள்ளும் பொழுது அப்பனே பின் சக்திகளும் உன்னுள் புகும் அப்பா!!!

புகுந்து புகுந்து எதை என்று அறிய அறிய ஒரு பக்குவ நிலைக்கு வந்து விடுவாய்!!!

அனைத்தும் பொய் என்று அப்பொழுது அனைத்தும் பொய் என்று எவன் ஒருவன் உணர்கின்றானோ அவன் அருகிலேயே இறைவன் வந்து விட்டான் என்பது பொருந்தும்!!!!

இறைவன் நிச்சயம் காட்சிகள் அருள்வான் என்பது புரியும் அப்பா!!!

இதனால் அப்பனே அவை செய் இவை செய் அப்பனே எவை என்று அறிய அறிய அங்கு செல் இங்கு செல் என்றெல்லாம்!!!!

நடக்காதப்பா நடக்காது!!!

ஏனென்றால் எங்கெல்லாம் அப்பனே பல சக்திகள் விழுகின்றது அப்பனே மேலிருந்து எவை என்று கூட அதாவது அப்பனே

இந்திரலோகம் சந்திரலோகம் இன்னும் என்னென்ன லோகங்களை பற்றியும் கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே அறிவியல் ரீதியாகவே!!!

அப்பொழுது நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அப்பனே அங்கிருந்து யார் கண்ணோக்கி எவை என்று அறிய அறிய பார்க்கின்றார்கள் அது எங்கு விழுகின்றது என்பதை எல்லாம் யான் அறிந்து தான் சித்தர்கள் அறிந்து தான் திருத்தலங்களை கூட அமைத்தோம் என்பேன் அப்பனே!!!

 பல பல ஞானிகளும் கூட அமைத்தார்கள் அப்பனே!! அங்கெல்லாம் சென்றால் அப்பனே சில வினைகள் தீருமப்பா!!  சில கஷ்டங்கள் வரும் அப்பா ஆனாலும் கடைசியில் நன்றாக முடியும் அப்பா!!!!

இதுதான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே உங்கள் அனைவருக்குமே கணபதியின் அருள் கிட்டிற்று !!! அப்பனே நலம் ஆசிகள்!!!! மற்றொரு திருத்தலத்திலும் உரைக்கின்றேன் அப்பனே !!!

அஷ்டவிநாயகர் சிந்தாமணி கணபதி கோயில் தேர் தரிசனம் செய்யப்படுகிறது. இது புனே நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது புனே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகாவில் உள்ளது. தேயூர் சிந்தாமணி கணபதி கோவில் சங்கம் அல்லது முலா மற்றும் முத்தா நதிகள் மற்றும் பீமா நதியுடன் இணைந்த இடத்தில் உள்ளது.

சிந்தாமணி கணபதி கோவில் தேர் - நேரங்கள்
நேரங்கள் முதல் வரை

காலை தரிசனம் 6 AM மதியம் 1 மணி

மாலை தரிசனம் 2 PM 10 PM

அங்கார்கி சதுர்த்தி அன்று தரிசன நேரம் 4 AM 11 PM

மகா ஆரத்தி நேரம் காலை 7:30 மணி

மகா பிரசாதம் நேரம் 10 AM மதியம் 1 மணி

மத்தியான ஆரத்தி நேரம் 12 மணி

ஷேஜார்த்தி நேரம் இரவு 10 மணி.

சாலை வழியாக

சொன்னது போல், சிந்தாமணி கணபதி கோவில் தேயூர் புனேவில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. புனே மற்றும் மும்பையில் இருந்து அரசுப் பேருந்துகளைப் பெறலாம். அதுமட்டுமின்றி, ஏராளமான தனியார் பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளன. மக்கள் தங்கள் வாகனங்களிலும் அங்கு செல்கின்றனர். காரில் அஷ்டவிநாயகர் யாத்திரை செல்லும் போது மும்பை-கந்தாலா சாலையில் செல்ல வேண்டும் . போர் காட் பிறகு, தேூர் நகரம் அமைந்துள்ளது.

சிந்தாமணி கணபதி 
புனேவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தேயூர் கோயில் உள்ளது.

3 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. குருநாதர் அருளால் ஒரு அனுபவ பதிவு.

    https://fireprem.blogspot.com/2024/03/1.html?m=1

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete