மெலிந்த தேகம். காவி உடை தரித்து, தோளில் வெள்ளை துண்டுடன் நாடியின் முன் வந்தமர்ந்தார். கைகூப்பி வணக்கம் சொல்லி அமைதியானார். எதுவும் கேட்கவில்லை.
"உனக்கு என்னப்பா வேண்டும்?"என குருநாதர் நாடியில் கேட்க, மறுபடியும் கைகூப்பி வணங்கியவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
"இவனுக்கு என்று எதுவும் இதுவரை கேட்டதில்லை, கேட்கவும் தெரியாது. இங்கேயே இரு என்று கூறிவிட்டு சென்ற குரு வரக்காணமே, ஒருவேளை எங்கேனும் போய் சமாதியில் அமர்ந்துவிட்டாரோ?" என்று மன உளைச்சல். இதுவரை அமர்ந்த இடத்திலேயே இருந்து, என்ன செய்து வந்தாயோ அதை தொடர்ந்து செய்!" காலம் கனியும் பொழுது உன் குருநாதர் வந்து அழைத்து செல்வார்!" என்றார்.
அவரை பார்த்த பொழுது, இவரால் என்ன நல்லது நடக்கின்றது? என தோன்றியது.
அதற்கும் குருநாதர் நாடியில் வந்து உரைத்தார்.
"இவன் பார்ப்பதற்கு, மிக எளிமையாக, என்ன நல்லது செய்து விட முடியும் என்று இருப்பான். ஆனால் இவன் செய்து வந்ததை, இறைவனே ஏற்று ஆசீர்வதித்துள்ளான். ஆம், இவன் ஒரு மரத்தடியில் அமர்ந்து 24 மணி நேரமும் இறைவன் நாமத்தை உருவேற்றி சித்தத்தில் நிலைத்து நிற்பான். இவன் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். யார் வந்து தன் குறைகளை கூறினாலும், அனைத்தையும், இறைவா, நீயே உள்ளிருந்து கேட்டு அவர்களுக்கு நல்லதை செய்துவிடு" என பிரார்த்தனையை சமர்ப்பிப்பான். சமீப காலமாக இவன் அருளை புரிந்து கொண்டவர்கள் கூட்டம் அதிகமாக, நிறைய தொந்தரவு வந்ததுதான் அதிகம். அதனால், இடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான். சமீபத்தில், உள் வனத்துள் ஒரு மரத்தை கண்டு பிடித்து, அதன் மறைவில் வாழ்ந்து வருகிறான், குருவை எதிர்பார்த்து."
இங்கு தெரிவிக்க விரும்புவது ஒன்றுதான். அவரின் பிரார்த்தனை முறையை கவனியுங்கள்! நம்மில் யார் இப்படி பிரார்த்தித்து வாழ்கிறோம்?
கடைசியாக இவரை அந்த மரத்தடியில் கண்டார்கள். பின்னர் அவர் காணாமலே போய்விட்டார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஐயா குருநாதரின் வாக்குகள் தங்கள் பதிவுகளின் மூலம் பல அற்புதமான நிகழ்வுகளை நாங்களும் கடவுளின் கருணையுடன் தெரிந்துகொள்கின்றோம்...மிக்க நன்றிகள் பல 🙏🙏🙏
ReplyDeleteஅந்த சாது எந்த ஊரில், எவ்விடத்தில் வசிக்கிறார் ஐயா
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete