​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 7 January 2024

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு!







30/12/2023  மார்கழி ஆயில்யம் திருநாள் அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு -  வாக்குரைத்த ஸ்தலம் -  திருமலை திருப்பதி 

உலகத்தை தன் கையில் பிடித்திருக்கும் ஈசா !!! போற்றி !!!!

போற்றியே மனதில் எண்ணி எண்ணி உரைக்கின்றேன் புசண்டனவன்!!!!

அப்பா!!!!!!!!!!!! 

அப்பப்பா!!!!!!!!!!! எதை என்று அறியும் பொழுது கூட அறியாத வகையில் மனிதன் எண்ணங்கள் உள்ளது!!!!

உள்ளது என்பேன் மானிட மானிட ஜென்மங்களுக்கு!!

அறிந்தும் பின் சித்தர்கள் ஏதேதோ சொல்லி!! சொல்லி!!

ஆனாலும் மனிதன் தன் பாதையை வகுத்து வகுத்து ஆனாலும் உண்மைதனை உணராமலே சென்று சென்று கொண்டிருக்கின்றான்

ஆனால் அகத்தியனோ எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட மனிதனை எப்படியாவது பின் திருத்த வேண்டும் என்றெல்லாம் எண்ணி எண்ணி அனைவரின் மனதிலும் குடிகொண்டு குடிகொண்டு மனம் மாற்றங்கள் நிச்சயம் வருங்காலத்தில் செய்தருள்வான்

இன்னும் அதாவது இன்றைய நாளில் ( மார்கழி ஆயில்யம் அகத்திய பெருமான் குருபூசை நாள்) கூட பல வழிகளில் கூட என்னால் முடியவில்லையே

அகத்திய மாமுனிவரே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் இல்லத்திலே கூட பின் நிச்சயம் மனதாலே அன்பாலே வணங்கி அறிந்தும் அறிந்தும் கூட அனைவரின் இல்லத்திற்கும் கூட 

இதனால் பல பல வழிகளில் கூட பின் திரிந்து கொண்டிருக்கின்றான் இன்றைய நாளில் ஆசிர்வாதங்களை கொடுக்க !!! கொடுக்க !!!

இதுதான் அகத்தியனின் கருணை!!!!

அகத்தியனின் கருணைக்கு இவ்வுலகத்தில் ஈடு இணை!!! எதை என்று அறிய அறிய இல்லை!!! 

இவைதன் உணர்ந்து கொண்டே சென்றாலும் நிச்சயம் மனிதனுக்கு இன்னும் இன்னும் புத்திகள் வர வேண்டும் என்பதே அகத்தியனின் பின் எண்ணங்கள்!!!!

ஆனால் மனிதனோ பின் ஏதோ அறிந்தும் கூட எதை என்றும் அறிந்தும் கூட பணத்திற்காகவே அனைத்தும் செய்து வருகின்றான்!!!!

உண்மை பக்தி எங்கே போனது ?????

பக்தி என்று எண்ணாமல்!!?!?!?!

 பக்தி தான் இவ்வுலகத்தில் சிறந்தது!!!

ஆனாலும் பக்தி என்ற பாதையில் சென்றால் அனைவரும் உயர்ந்து விடலாம் 

ஆனால் அதை தன் மனிதன் பொய்யாக்கி திரிகின்றான்!!!

அதனால்தான் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் விடப்போவதில்லை!!!!!

இவ்வுலகத்தில் முதல் படி பக்தியே!!!!!

இவ் பக்தியில் யார் ஒருவன் சிறந்த சிறந்து விளங்கி விட்டால் அவந்தனை நிச்சயம் அறிந்தும் கூட இறைவன் அருகிலே இருந்தது அனைத்தும் இறைவனே செய்வான்.

ஆனால் பக்தி என்ற சொல்லுக்கு அறிந்தும் கூட இப்பொழுதெல்லாம் பொய்கள் பொய்கள் என்றெல்லாம்!!!!!

ஆனால் யான் அவை செய்கின்றேன் இவை செய்கின்றேன் என்றெல்லாம்!!!!

ஆனால் உண்மையான பக்திக்கு ஈடு இணை ஏது????

எவை என்று அறியும் பொழுது கூட..... அதனால்தான் அகத்தியனே இன்று நிச்சயம் அங்கெங்கெல்லாம் பின் என்னதான்?? செய்கின்றார்கள்?? என்றெல்லாம் பின் பார்த்திட்டு பார்த்திட்டு வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!!! அறிந்தும் கூட!!! 

அதனால்தான் சித்தர்களையும் கூட பின் அருகிலே கொங்கணனும் கூட கொங்கணனும் போகணும் கோரக்கனும் இன்னும் இன்னும் ஏனைய சித்தர்களையும் கூட அகத்தியன் பின் அருகிலே!!! அறிந்தும் அறிந்தும்!!! 

இதனால்  நல்லாசிகள் அனைவருக்குமே!!!!!! 

ஆனால் அதை சரியாக பயன்படுத்துவது மனிதனின் கடமையாக இருந்து விட்டால் நிச்சயம் எண்ணற்றவை அகத்தியன் எளிதில் செய்து விடுவான்!!!

இதற்கு அதாவது சிறந்த உதாரணமாக ஆனாலும் பின் அதாவது ஓர் அன்னை அறிந்தும் அறிந்தும் கூட பின் பிள்ளையை அறிந்தும் கூட !!!

ஆனாலும் அப் பிள்ளையோ அகத்தியனின் அறிந்தும் அறிந்தும் கூட இக்கலி யுகத்திலே இதைத்தான் யான் சொல்கின்றேன்!!!

ஆனால் கவலைகள் பன்மடங்கு!!

ஆனால் உண்ணுவதற்கே வழியில்லாமல்!!! ஆனாலும் அறிந்தும் கூட பின் அதாவது அகத்தியன் இவந்தனுக்கு கொடுப்போம் அதாவது...அவனும் பின் அகத்தியன் பெயரைச் சொல்லி சொல்லி !!!

 ஆனாலும் அவந்தனுக்கும்  அகத்தியன் கொடுத்தான் 

ஆனாலும் பின் அறிந்தும் அறிந்தும் அனைத்தும் வந்து கொண்டே இருந்தது!!!

 ஆனாலும் இதன் அடிமை  அதாவது பின் போதைக்கு அடிமையாகி விட்டான்!!!

அடிமை ஆகி அதை அறிந்து ஆனால் பொய்களை எல்லாம் அதாவது அகத்தியன் சொன்னான் இதைச் செய்தால் நன்று கனவில் அதாவது அகத்தியன் என் கனவில் வந்தான் அகத்தியன் அதை செய்தால் நன்று என்றெல்லாம் பொய்கள் கூற ஆரம்பித்தான்!!!!!

ஆனால் அகத்தியன் தான் அறிந்தும் கூட அனைத்தும் செய்வித்தான் என்பதை எல்லாம் மறந்து விட்டான்!!

இதனால் அதாவது நண்பர்களையும் கூட்டு சேர்த்தான்!! 

கூட்டு சேர்த்து அறிந்தும் கூட ஆனாலும் இன்னும் அதாவது போதைக்கு அடிமையாகி இன்னும் பல வகையிலும் கூட எதை என்றும் தெரியாமலே இன்னும் இன்னும் பல வழிகளிலும் கூட எதை என்றும் உணர்ந்து!!!

இதனால் பல மக்களுக்கு எவை என்றும் அறிய பொய்களை எடுத்துரைத்து காசுகளை பறிக்க தீர்மானித்தான்!!!

ஆனாலும் பின் சிறிதே காசுகளை பறித்தான்.

ஆனால் நிச்சயம் அகத்தியன் விடுவானா !!!! என்ன ?????

அப்படியே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய பின் ஆசிகளை நிறுத்திவிட்டான்!!!!

இப்பொழுது கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருக்கின்றான்!!!

அதனால் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் எங்கள் இடத்தில் எதை என்றும் அறிய பின் அன்போடு விளையாடுங்கள்!!!!

மற்றவையோடு விளையாடினால் நிச்சயம் சிறிது!!!!!!........... விடுவோம்!!! 

அதாவது சிறிது தொலைவு விடுவோம்

 (சரி போகட்டும் என்று) 

அனைத்தும் நீக்கி விடுவோம்!!! அறிந்தும் எதை என்றும் அறிய அறிய

சித்தர்கள் ஏன் எதற்காக மனிதர்களுக்காக வருவது எதை என்று அறிய அறிய மனிதனை திருத்துவதற்காகவே மனிதனிடத்தில் உள்ள மூட நம்பிக்கையை அவையெல்லாம் பின் அடியோடு அழித்து நிச்சயம் இறை பாக்கியத்தை கொடுக்கவே யாங்களும் வாக்குகளாக ஈகின்றோம்!!

ஆனாலும் பின் அறிந்தும் கூட

பின் மனிதா மனிதா அறிந்தும் எதை என்றும் தெரியாமலே எதை என்றும் பின் அறியாமலே வளர்ந்து மீண்டும் இறந்து மீண்டும் மீண்டும் பிறக்கின்ற மனிதனுக்கு என்னென்ன இதனால் அவசியங்கள்

ஆனால் இவ் ஆன்மா இங்கு என்னென்ன?? தவறுகள் செய்கின்றது என்பதை உணர்ந்து எங்களை நோக்கித்தான் நிச்சயம் செல்ல வேண்டும் அப்பொழுது ஒவ்வொரு ஆன்மாவும் அழுது புலம்பிக் கொண்டே போகும்!!!

இவ்வாறு புண்ணியங்கள் செய்யவில்லையே புண்ணியங்கள் !!! செய்யவில்லையே !!!

இறைவன் பின் அனைத்தும் கொடுத்தானே!!!

அதை எல்லாம் தவறாக பயன்படுத்தினோமே!!!! இன்னும் என்னென்ன செய்தோமே என்றெல்லாம் அழுது புலம்பிக் கொண்டே போகும்!!

ஆனாலும் யாங்களும் அதை பார்த்து.....ஏனப்பா????? 

அறிந்தும் எதை என்றும் அறிய அறிய என்னதான்?? வேண்டும் என்று??

துணை தாருங்கள்!! துணை தாருங்கள் !! என்றெல்லாம் அவ் ஆன்மாக்கள் எல்லாம் கூட!!!

நிச்சயம் பிறவியை தா எந்தனுக்கு!!

நிச்சயம் யான் பாவங்கள் பல செய்து விட்டேன்!!! நல்லவன் போல் நடித்தேன் அதாவது புவிதன்னில்!!! 

ஆனால் இப்பொழுது தான் தெரிகின்றது!!  பின் மறுபிறவி இருந்தால் எங்களுக்கு உதவிகள் செய்யுங்கள் என்றெல்லாம் அவ் ஆன்மா அப்பனே எங்களை நோக்கித்தான் பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே வரிசையில் நிற்குமப்பா!!!!!!! 

அதனால் எங்களை மீறி ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

தெரியாமல் பல விஷயங்கள் இருக்கின்றதப்பா அறிந்தும் கூட ஆனாலும் எவனும் அதை தன் உணரவே இல்லை!!!ஏன்?  எதற்கு?? என்றெல்லாம் உணரவே இல்லை!!!

ஆனால் பின் பாவப்பட்ட ஜென்மமாகவே எதை என்று அறிய அறிய மனிதன் பின் வாழ்வான் வாழ்வான் என்றெல்லாம் நிச்சயம் பின் பல வகைகளிலும் கூட பல பல வாக்குகளிலும் கூட பின் எடுத்துரைத்து விட்டோம்!!!!! சித்தர்கள்!!!!

இன்னும் இன்னும் பின் உரைத்து பின் நல்வழி படுத்துவோம் என்பதையெல்லாம் நிச்சயம் நல்வழி அப்படி அறிந்தும் கூட பின் எவை என்று கூட பின் நல்வழியில் செல்லாமல் விட்டு விட்டால் நிச்சயம் யாங்கள் அடித்து அறிந்தும் கூட.

இதனால் பின் அதாவது பக்திக்குள் நுழைந்து விட்டு பின் யான் பெரியவன்  எவையென்று அறிய அறிய அவன் பெரியவனா????! அவனிடத்தில் எதை என்று அறியறிய

என்னிடத்தில் இறைவன் இருக்கின்றான் அவனிடத்தில் இல்லை என்னிடத்தில் சித்தர்கள் இருக்கின்றார்கள் என்றெல்லாம் எதை என்று அறிய அறிய

 விளையாட்டு பொருளாகவே மாறிவிட்டார்களா சித்தர்கள் ???????

அதனால்தான் நிச்சயம் சிறிது விளையாடுங்கள் பின் அடிப்போம்.

அறிந்தால் எதை என்று அறிய அறிய அடி அடித்தால் நீங்களும் எதை என்று அறிய அறிய பின் தாங்கவும் மாட்டீர்கள் என்பதையும் கூட உங்களுக்கே தெரியும்

ஆனால் எதை என்று அறிய அறிய சித்தனை பின் சித்தன் என்னதான் செய்யப் போகின்றான்??? என்ற எண்ணம்

ஆனால் ஒருவருக்கு ஒருவர் அடிகள் பலமாகவே விழுந்த விழுந்த வண்ணம்!!!....... ஆனால் அப்பொழுது தான் புரிகின்றது!!!

இன்னும் யாங்கள் விளையாடுவோம்!!!!!

நீங்கள் விளையாடினால் யாங்கள் பன்மடங்கு உங்களிடத்தில் விளையாடுவோம்!!!!

அடியோடு விளையாடுவோம் பலமாக கஷ்டங்களோடு விளையாடுவோம்!!!

சொல்லிவிட்டோம்!!!

நல் மனதாக பின் உயர்ந்த எண்ணங்களாக இருங்கள்!!!!

யாங்கள் உங்கள் வாழ்க்கையின் பாதையை கூட மாற்றுகின்றோம்!!! ஆனால் அறிந்தும் கூட!!!

இதை இவையும் பின் இதில் ஒருவன் அறிந்தும் கூட நாங்கள் நல் மனதாக தான் இருக்கின்றோம் என்று சொல்வான்!!!!!

அப்பா!!!!!! திருடனப்பா மனிதன்!!!!

ஆனால் நல் மனதாக உள்ளவன் இப்படி எல்லாம் கூற மாட்டான் அப்பா!!! என்றெல்லாம் நிச்சயம் இன்னும் இன்னும் ஒவ்வொருவருக்கொருவர் குறை....

அதாவது அவந்தன்!! இவந்தன்!!! இப்படி செய்தான் அப்படி செய்தான் என்றெல்லாம் தன்னிடத்தில் குறைகள் என்ன உள்ளது என்பதை கூட முதலில் நீ யோசிக்க நன்று!!!!!

பின் குறைகளை கூறிக் கொண்டே வாழ்ந்தால் அவந்தனுக்கு பக்தி... என்னவென்று கூற!!!

பக்தி பின் அதாவது பக்தி என்பது என்னவென்று தெரியுமா!??

நல்விதமாக தர்மம் தானங்கள்!!! பிறர் மனம் நோகாமல்!!!!!.......

அவை மட்டுமல்ல பின் காமம் நீக்குதல் பொறாமை போட்டிகள் நீக்குதல்.... அனைவருமே பின் ஒன்றே!!!

அதாவது அனைவருமே அதாவது உலகத்தில் பிறந்து இறைவனுடைய குழந்தைகள்!!! அதனால் ஒரு தாய் வீட்டு குழந்தைகள் என்று எண்ணுவதே முதல் பக்தி!!!!

ஆனால் அப்படி எண்ணுவதே இல்லையே!!!!

பின் யான் பெரியவன் நீ பெரியவன் என்று இருக்கும் பொழுது இங்கு பக்தி எங்கு சென்று விட்டது!???????

இன்னும் பொறாமைகள் அவன் பொய் இவன் பொய் என்றெல்லாம் இவையெல்லாம் பக்திகளா?????

பக்திகளே இல்லையடா!!!!

எதை என்று அறிய அறிய ஆனால் நீ நடித்துக் கொள்ளலாம் யான் பக்தன் என்று!!! யான் அகத்தியனை வணங்கினேனே என்று சித்தர்களை வணங்கினேன் என்று கூறிக்கொண்டு திரியலாமே தவிர!!!!

ஆனால்??!!.... யாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!!!

தன் நிலைமை பார்த்தல் தம் தன் சொந்தங்கள் பந்தங்கள் என்று பார்த்தல் ஆனால் இவர்களும் பக்திக்குள் பின் நுழைவது இல்லை!!! தன் சுயநலத்திற்காகவே பயங்கள் இன்னும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!!

இதனால் நிச்சயம் தர்மத்தை நிலை நாட்டுவோம் என்றெல்லாம் நிச்சயம் அகத்தியனே!!!!!

அதனால்தான்  அனைவரின் இல்லத்திற்கும் இன்று செல்வான்!!!

நிச்சயம் அங்கும் எதை என்று கூட அனைத்து திருத்தலங்களுக்கும் கூட இன்று செல்வான் அகத்தியன் நிச்சயம் பார்ப்பான் ஒவ்வொருவரின் மனதையும் கூட!!!!

இதனால் எதையும் எதிர்பார்க்காமல் செய்கின்றவர்களுக்கே அகத்தியன் கருணை ஈடில்லாதது!!!!!

நன்று !! நன்று!! 

ஏன் எதற்கு என்றெல்லாம் ஆனாலும் இதற்கு சிறந்த உதாரணமாகவே நாராயணனை பற்றி எடுத்துரைக்கின்றேன் இப்பொழுது!!!!!!

அறிந்தும் கூட இதனால் நாராயணனின்  பக்தர்கள் அதாவது இவ் மலையில் பின் வந்து கொண்டே இருந்தார்கள்

( திருமலை திருப்பதி யாத்திரை)

ஆனாலும் அறிந்தும் எதை எதை என்று அறிய அறிய நாராயணன் உடனுக்குடன் உடனுக்குடன் நிச்சயம் மனிதன் எதை கேட்டு கேட்டு அதாவது கேட்கின்றானோ அதை உடனடியாக நாராயணன் தந்து கொண்டிருந்தான்!!!!

ஆனாலும் மக்களோ நல்விதமாகவே வாழ்ந்து வந்தார்கள்!!!! ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய ஆனாலும் இதன் கீழே அதாவது இவ் மலையின் அடிவாரத்திலே (திருப்பதியில்) 

ஒரு அதாவது ஒரு நோயாளி பின் அவனை தொட்டாலே தரித்திரம் என்று!!!

எவை என்று அறிய அறிய அந் நோய் அதாவது தொழு நோய் என்று கூட அதனை குறிப்பார்கள் அறிந்தும் கூட

ஆனாலும் அவனை நோக்கி நோக்கி மனிதர்கள் சென்று வந்தனர் ஆனாலும் அவனை யாருமே கண்டுகொள்ளவில்லை!!!

ஆனாலும் இவந்தன் அதாவது உண்மையான பக்தனே!!!!!

அதாவது நாராயணா நாராயணா நாராயணா கோவிந்தா கோவிந்தா கோபாலா கோபாலா இவைதான் இவன் வாயில் வரும்!!!

ஆனாலும் பின் வருவோர் எல்லாம் அவனை கண்டுகொள்ளவே இல்லை

 ஏதாவது செய்யலாம் என்றெல்லாம்!!! ஆனாலும் நாராயணனும் உணர்ந்தான்!!! இப்படிப்பட்ட பக்தனா? என்றெல்லாம்!!!

ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும்  நாராயணா பின் மனிதர்கள்  கூட எதை என்று என்னை ஏற்க மறுக்கின்றார்கள்!!!! 

அதாவது பல வழியிலும் கூட அவந்தனை!!!! அதாவது நடக்க கூட முடியவில்லை!!!

இதனால் பல பக்தர்களை பார்த்து என்னை நாராயணனிடத்தில் சேர்த்து விடுங்கள் என்னை நாராயணன் இடத்தில் சேர்த்து விடுங்கள் என்றெல்லாம்!!!

ஆனாலும் நிச்சயம் மனிதர்கள் சொன்னார்கள்!!

உந்தனுக்கெல்லாம் நாராயணன் ஆசிகளே தரமாட்டான்!!!! எதை என்று அறிய அறிய செய்த பாவங்கள் இப்படி உனக்கு இருக்கின்றது என்றெல்லாம் தெரிவித்து விட்டு சென்றார்கள்.

ஆனாலும் யாராவது ஒருவன் நிச்சயம் அதாவது பார்த்துக் கொண்டே இருந்தான் இவ் நாராயணன் கூட இங்கிருந்தே!!!!( திருமலையில் இருந்து)

யாராவது ஒருவன் இவந்தனுக்கு நன்மைகளை அறிந்து அறிந்து கூட செய்கின்றானா என்று கூட

ஆனால் யாருமே செய்யவில்லை இதுதான் இன்றைய காலகட்டத்தில் கூட!!!

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இப்படி இருந்தால் என்ன பயன் என்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம் அறிந்தும் கூட ஏன் மனித முட்டாளே அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட இப்படி  இப்படியேதான் மனிதன் இருக்கின்றான் ஒருவன் மீது ஒருவன் குற்றம் சாட்டி அவனா?????

அவந்தனுக்கு இறைவன் நிச்சயம் ஒன்றும் செய்ய மாட்டான் எங்களுக்குத்தான் செய்வான் என்றெல்லாம்!!!

ஆனால் நாராயணனோ நிச்சயம் வரங்களை கொடுப்பது அதாவது நிறுத்தினான்.
ஏன் எதற்காக என்றெல்லாம்!!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட மீண்டும் அழுது கொண்டே தொழு நோய் உள்ள மனிதன் பின் நாராயணா!!!!!!!!!!

மனசாட்சி இல்லையா உந்தனுக்கு ?????

எதை என்று இப்படியா ஆனால் உன்னையே பின் அதாவது பல பல வகைகளிலும் கூட பின் நாராயணனை அறிந்தும் கூட நாராயணா நாராயணா கோவிந்தா என்றெல்லாம் வேடங்கள் போட்டுக்கொண்டு ஆனாலும் திரிந்து வருகின்றார்கள்!!!

அவர்களுக்கு மட்டும் ஆசிகளா????

இவ் ஏழையை கண்டு கொள்ளவே இல்லையே என்று!!!

நாராயணனுக்கு மிகுந்த கோபங்கள் கோபங்கள் ஓடோடி வந்தான் கீழே!!!

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அருகில் வந்தான்!!!!

அருகில் வந்து அறிந்தும் கூட பின் ஆனாலும் பின் பார்த்தான் இவ் அதாவது நோயாளி பார்த்தான். 

எதை அறிவித்து நின்று கண்களைப் பார்த்தான் நாராயணன்!!!!!

ஏனடா????  அறிந்தும் எவை என்றும் புரிய புரிய உந்தனுக்கு என்ன தான் தேவை ???! என்று நாராயணன் கூற!!!! 

எந்தனுக்கு ஒன்றுமே தேவையில்லை!!!! ஒரு மனிதன் கூட நிச்சயம் என்னை தொட முன் வரமாட்டான் எதை என்று கூட... அவை இவை எவை என்று அறிய அறிய இப்படி அதாவது இவ் நோய்!!! அறிந்தும் கூட என்னை தாக்கி விட்டது!! ஏதோ ஒரு கர்மத்தால் என்று.

ஆனாலும் நாராயணனும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பக்கத்தில் வந்தான்!!!!

ஆனாலும் அவ் நோயாளியோ!!!!!!! பின் விலகி விடு!!! பின் விலகி விடு!!!!

அனைத்து மனிதர்களும் கூட அறிவுள்ளவர்களாக இருக்கின்றார்கள் ஆனால் நீயோ அறிவில்லாதவனாக இருக்கின்றாயே !!!!

என்னை தொட்டாலே பாவம் என்று ஒதுங்கி விடுகின்றார்கள் என்னை தொட்டாலே நோய் வந்துவிடும் என்று ஒதுங்கி விட்டு சென்று விடுகின்றார்கள்!!!!

ஆனால் நீயோ !!??!!!

வேண்டாம்!!!!! பிழைத்துக்கொள் போ என்று!!!!

ஆனால் நாராயணன் கூட ஆனாலும் அறிந்தும் கூட இங்கு மனநிலையை பார்த்தான் நாராயணனே

அறிந்தும் இதைதன் செய்கைகளால் உண்டு ஏற்றங்கள்!!! என்பதை உணர்ந்து உணர்ந்து மீண்டும் மெதுவாக அவ் நோயாளியை தொட்டான்!!! 

அவனோ அறிந்தும் கூட தொடாதே !!!தொடாதே என்னை தொடாதே !!! என்னை தொட்டால் உன்னை கூட இவ்நோய் பிடித்து...... அறிந்தும் கூட மீண்டும் என்னிடத்திலே உட்கார வேண்டியதுதான் நீ

( அதாவது உனக்கும் தொழுநோய் தொற்றிக்கொண்டு நீயும் என்னைப் போல இங்கே சாலை ஓரமாக யாராலும் பார்க்கப்படாமல் சீண்டப்படாமல் என் அருகிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்)

ஆனாலும் மனிதன் அறிந்தும் கூட பக்தன் என்பான் ஆனால் எவரையும் காப்பாற்ற மாட்டான்!!!!

எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய  புரிய ஆனாலும் எவை என்றும் அறிய அறிய புரிந்து புரிந்து நாராயணனும் அறிந்தும் கூட

இவ் உயிரோடு இருக்கும் மனிதனை பார்க்காமல் நிச்சயம் இன்னும் பல வகையிலும் கூட பணத்தை சம்பாதித்து மனிதன் அதை இதை என்றெல்லாம் செய்து கொள்வான்

ஆனால் அறிந்தும் கூட உண்மையானவன் எதை என்று அறிய யாருக்கும் துரோகம் இல்லாமல் நன்மைகள் செய்பவன் தான் !!

ஆனாலும் அறிந்தும் கூட நாராயணன் சொன்னான் அப்பப்பா அறிந்தும் அறிந்தும் கூட உன் நோய் விலகப் போகின்றது என்று சொன்னான் நாராயணனும்

அப்படியா!!! எப்படி விலகும்???? அறிந்தும் கூட நீ என்ன மருத்துவரா????! என்றெல்லாம் நாராயணனை பார்த்து கூற

நிச்சயம் விலகும் அப்பா முன் ஜென்மத்தில் நீ மருத்துவமனையை அமைத்து மிக பெரிய செல்வந்தனாகி அறிந்தும் அறிந்தும் கூட அதாவது செல்வந்தனாக இருந்து பல மனிதர்களுக்கும் கூட பின் பணத்தின் மேல் ஆசைகள் கொண்டு அறிந்தும் எதை என்றும் அறியாமலும் பல வகையிலும் கூட இன்னும் பொய்யான மருந்துகளை எல்லாம் கொடுத்து பல நோய்களை கூட உருவாக்கினாய்.

இதனால் உந்தனுக்கு இப்பிறப்பு இங்கே அறிந்தும்!!!

ஆனாலும் அதுகூட எவை என்று அறிய அறிய பாவமாகிவிட்டது ஆனால் அப்பாவம் நிச்சயம் அதனை உணர்ந்து எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட அனைத்தும் பின் அதாவது இவ் நாராயணனுக்கே எழுதி விட்டாய்!!!! ( சொத்துக்கள் எல்லாம்)

அறிந்து கூட!!!! 

அது புண்ணியம் ஆகிவிட்டது இன்னும் அறிந்தும் கூட உடனடியாக இவ்நோய் உந்தனுக்கு தீரப் போகின்றது என்று நாராயணனும் கூற

அப்படியா !!!!அறிந்தும் கூட நீ யார்?? என்பதை எல்லாம் உணர்ந்து உணர்ந்து என்று நீ யார் இப்படி சொல்கின்றாயே என்று!!!!

ஆனாலும் நாராயணனும் கூட மனதாலே

 யானும் நாராயணன் பக்தனே என்று.

உண்மை அறிந்தும் அறிந்தும் கூட

அப்படியா!!!!! நிச்சயம் அறிந்தும் கூட என்னை நாராயணனிடத்தில் சேர்த்து விடு!!! உந்தனுக்கு இன்னும் கோடி புண்ணியங்கள்!! யான் செய்தேனே புண்ணியங்கள்...அப் புண்ணியங்கள் கூட உன்னை அடையட்டும் என்று அறிந்தும் கூட!!! 

அப்படியா எதை என்றும் புரிந்து புரிந்து ஆனாலும் நாராயணனும் காட்சிகள் தந்து தந்து எதை என்றும் அறியாமல் எவை என்றும் பின் எதை என்று தொடர்ந்து தொடர்ந்து!!! 

இதனால் நாராயணன் அழகாக காட்சி அளித்தான்!!! பின் சொர்ணங்களோடு!!!! இன்னும் வைரங்களோடு!!! பின் கட்டி அணைத்து கொண்டான்!!!! 

எதை என்று அறிய அறிய நோய்களும் குணமாயிற்று!!!! 

எதை என்று அறிய அறிய அதனால் தான் எவை என்று அறிய அறிய பாவங்களோடு பின் அதாவது இருக்கின்றவனுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் 

அதையும் மீறி பக்தியையும் எவன் ஒருவன் செலுத்துகின்றானே அவந்தன் பின் எதை என்று அறிய அறிய அவன் தான் மனிதன்!!! 

பின் அதாவது பின் ஏங்கி ஏங்கி இறைவனுக்கு அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட அறியாமலும் கூட எதை என்றும் புரியாமலும் கூட பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று சொல்கின்றானே அவந்தன் உண்மையான பக்தனே இல்லை

இதனால் எவ் வகையான துன்பங்கள் வந்தாலும் நிச்சயம் இறைவன் இருக்கின்றான் இறைவன் காத்துக் கொள்வான் என்று எவன் ஒருவன் இறைவன் மீது பின் அன்பு கொண்டு உள்ளானோ அவந்தனுக்கு நிச்சயம் இறைவனே வந்து உதவிகள் செய்வான்!!!

இதுதான் பாவங்கள் கரைந்திட வேண்டும் என்பவை எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட

இதனால் பாவங்களும் கரைந்தது எதை என்றும் அறிய அறிய  நாராயணனுக்கு பல சேவைகளும் செய்தான்!!! எதை என்றும் அறிய அறிய

இதனால் நிச்சயம் இவ்வாறு தான் பின் அதாவது நன்றாக ஆகிவிட்டான் அவ் நோயாளி!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் நாராயணனே இப்படி எல்லாம் ஆக்கிவிட்டாயே இன்னும் அதாவது செல்வோம் அறிந்தும் கூட மனிதன் எப்படி எல்லாம் இருக்கின்றான் என்று

ஆனாலும் நாராயணனும் அவனும் இங்கு வருவோர்களிடம் எல்லாம் எதை என்று அறிய அறிய.... பிச்சை ஏந்தினர்!!!! அதாவது தர்மம் ஏந்தினர் எதை என்று அறிய அறிய!!! அனைவரிடத்திலும்.

ஆனாலும் அனைவரிடத்திலும் ஏந்தி !!! ஏந்தி!!!

ஆனால் ஒருவர் கூட !! ஒருவர் கூட !! பின் எவை என்று அறியாமலே இவர்களுக்கு கொடுக்கவே இல்லை!!!

வந்து விட்டார்கள் எதை என்றும் அறிய அறிய ஆனால் நிச்சயம் தர்மம் எதை என்பது எதையும் சாராமல் ஏதோ ஒன்றை தன்னிடத்தில் இருந்து கூட எவை என்று கூட பின் இல்லாமல் எவை என்று அறிய அறிய அறிந்தும் கூட பின் கொடுக்கின்றானோ அவன் மிகப்பெரியவன் அறிந்தும் கூட!!!!

( எதையும் எதிர்பார்க்காமல் தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று  நினைக்காமல் தன்னிடம் அதிகம் இருக்கின்றதோ இல்லையோ அதையும் கூட நினைக்காமல் இருப்பதை மனம் உவந்து கொடுக்கும் மனிதர் மிகப் பெரியவர் ஆவார்)

இதனால் அனைவரிடத்திலும் தர்மம் ஏந்த நிச்சயம் திட்டி தீர்த்தார்கள்!! அறிவுகள் இல்லையா??? புத்திகள் இல்லையா???

பின் உடம்பு நன்றாகத்தானே இருக்கின்றது ஏன்?? எதற்காக?? இவ்வாறு எல்லாம்??? என்றெல்லாம்!!!

ஆனால் அப்படியே அறிந்தும் அறிந்தும் ஆனாலும் பெருமானும் மௌனம் சாதித்தான்

அடடா!!!!!!!!  எத்தனை பேர்கள்???  எத்தனை பேர்களுக்கு வரங்கள் தந்து விட்டேன்!!!!

ஆனாலும் அவன் கூட பின் வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டு இல்லை என்று சொல்கின்றானே!!!..............

ஆகா!!!!!!!! எதை என்று அறிய அறிய இதனால் அவ் நோயாளியும் அதாவது நன்றாக ஆகிவிட்டான் இருந்தாலும் யான் நோயாளி என்றே குறிப்பிடுவேன்!!!!!

ஏனென்றால் இப்பொழுதும் அதாவது இப்பிறப்பு எதை என்று அறிய அறிய இப்பொழுதே பிறந்துவிட்டு அறிந்தும் கூட ஒரு அரசியலில் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய மனிதனாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் சில நோய்களும் அவனை தாக்கி !!! தாக்கி !!!

ஏனென்றால் இப்பிறவிலேயே அவனும் பின் செய்த தரித்திரங்கள் அவந்தனை நோய்கள் ஆக்கி................ ஆனாலும் நாராயணனின் அருள் மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட!!!! இப்பிறப்பு கடை பிறப்பாக அவந்தனுக்கு....!!!!

இங்கே திருமலை திருப்பதி )அவந்தன் வந்து வந்து சென்று  கொண்டே இருக்கின்றான்!!!! இன்னும் பன்மடங்கு அதாவது இவ் மலைக்கு அவன் செய்வான் என்பதை நிச்சயம் யான் அறிவேன்!!!

அறிந்தும் இன்னும் அவர்கள் பெயர்களை இட்டு இட்டு சொன்னாலும் ஆனாலும்...ஏன் எதற்கு என்றெல்லாம் நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு பின் சில சறுக்கல்கள் ஏற்படும்.

அதனால்தான் பெயரையும் கூட யான்!!! சொல்லவில்லை !!!

அறிந்தும் கூட ஆனால் வரிசைப்படுத்தி சொல்கின்றேன் சித்தர்கள் சொல்வார்கள் வரும் காலங்களில்!!!

எதை என்று அறிய அறிய இதனால் நிச்சயம் அறிந்தும் கூட பல வகையிலும் கூட பின் நாராயணன் திரிந்து !!திரிந்து !!

( தர்மம் ஏந்துவதற்கு அங்கு இங்கும் அலைந்து திரிந்து ஆனாலும் யாரும் தர்மம் இடவில்லை நாராயணனுக்கு)

இதனால்..... நிச்சயம் நாராயணனே கோபம் கொண்டு வரங்கள் நிச்சயம் தரக்கூடாது!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய என்றெல்லாம்.

பின் இன்னும் இன்னும் என்றெல்லாம் இதனால் அமைதியாக நிச்சயம் ஓரிடத்தில் அமர்ந்து விட்டான்!!!!

அறிந்தும் கூட அதாவது இவ் அகத்தியன் கூட அங்கே ஆசிரமத்தை அமைத்திருந்தான்!!!!

அறிந்தும் கூட கீழே அதாவது இப்பொழுது கூட அதை எவை என்று அறிய அறிய நல்ல விதமாகவே முக்கோடி என்றே பின் கூற!!!!! 

அறிந்தும் கூட இங்கே ஆசிரமத்தை அமைத்து எதை என்று அறிய அறிய வருவோருக்கெல்லாம் அதாவது பின் (திருமலை) மேலே ஏறுபவர்களுக்கெல்லாம்

( திருப்பதி திருமலையை கால்நடையாக ஏறிச் சென்று அடைய இரண்டு பாதைகள் உள்ளது ஒன்று அலிப்பிரி இரண்டாவது பாதை ஸ்ரீவாரி மெட்டு ஸ்ரீவாரி மெட்டு செல்லும் வழியில் பக்கத்தில் தான் முக்கோடி அகத்தியர் ஆசிரமம் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது)

அங்கு அன்னத்தை நிச்சயம் அள்ளித் தந்து கொண்டே இருந்தான்!!!!

அள்ளி தந்து!! அள்ளி தந்து!!! எதை என்று அறிய இதனால் அங்கேயே அமர்ந்திட்டான்!!!!! பின் நாராயணனும் கூட

ஆனாலும் அகத்தியனும் அறிந்தும் கூட பின் நாராயணனே!!! ஏன்? இங்கு!! வந்து விட்டீர்கள் எதற்காக இவ் ஆசிரமத்திற்கு பின் வந்ததே நீங்கள் அறிந்தும் கூட என்றெல்லாம்!!!

ஆனாலும் நாராயணனோ!!! 

அப்பப்பா!!!!!!!!!! எதை என்று அறிய அறிய யான் வரங்களை கொடுத்து கொடுத்து!!!!!

ஆனால் வரங்களை யானே கொடுத்தேன்!!! யானே பின் அதாவது தர்மமும் ஏந்தும் பொழுது எதை என்று இல்லை என்று பொய் வாயில் பொய் கூறுகின்றானே இவையெல்லாம் எவை என்று அறிய அறிய பின் இதெல்லாம் பக்தனுக்கு சரியானதா??? என்றெல்லாம்!!!

யான் நிச்சயம் இங்கே தான் இருக்கப் போகின்றேன்!!!! நிச்சயம் இதுவே போதும்!!!! என்றெல்லாம்!!!!

(அதாவது இனிமேல் நான் திருப்பதி திருமலையில் இருக்கப் போவதில்லை!!

யான் இங்கேயே முக்கோடியில் உன்னுடைய ஆசிரமத்திலேயே இருந்து கொள்கின்றேன் என்று அகத்தியர் இடம் நாராயணன் கூறிவிட்டார்)

ஆனாலும் அகத்தியனும்!!!

அப்படியெல்லாம் இல்லையப்பா!!! நிச்சயம் உந்தனுக்கும் இன்னும் பல வகையிலும் கூட பின் பல பல வழிகளிலும் கூட பின் எதை செய்ய வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட யான் உந்தனுக்கு செய்யப் போகின்றேன்!!!!

அதனால் நீ அங்கேயே அமர்ந்திடு!!!! ( திருமலையில் ஆனந்த நிலையத்தில்)

 கலியுகத்தில் பல வழிகளிலும் கூட வருவோர்கள் மனதை எண்ணு!!!!! 

அவர்கள் மனதை எண்ணி பின் தா!!!!!!

( வருகின்றவர்கள் மனதில் என்ன இருக்கின்றது???? என்பதை பார்த்து வரங்கள்)

நிச்சயம் உன்னால் பல பேர்கள் பிழைப்பார்கள் இதனால் பல வகையிலும் கூட என்னுடைய ஆசிகள்!!!

(நாராயணன்) 
அகத்திய மாமுனிவரே!!!!
எப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கின்றார்கள்???

 அள்ளி அள்ளி தந்தேனே !!!

பின் மனிதனுக்கு நன்றிகள் இல்லையே என்று!!!

(அகத்தியர்) 

நிச்சயம் செல்!!!!! அறிந்தும் கூட பின் ஆனாலும் பின் எச்சரிக்கையாக!!!!!! (வரங்களை தருவதற்கு)
 எவை என்றும் அறிய அறிய!!!!

( நாராயணன்) 
 இன்னும் இன்னும் பின் ஆனாலும் அகத்திய மாமுனிவரே!!!!!! இன்னும் வரங்கள் யான் தர வேண்டுமா!!!!!!

பின் இப்படி மனிதன் இருக்கின்றானே!!!!! என்றெல்லாம் யோசிக்கும் பொழுது நிச்சயம் அறிந்தும் கூட!!!!

(அகத்தியர்) 

இல்லை இல்லை நிச்சயம் அறிந்தும் கூட நீ அங்கே ( திருமலையில் ஆனந்த நிலையத்தில்) இரு!!! எதை என்று உணர்கின்ற பொழுது !!!

யான் இங்கேயே தடுத்து விடுகின்றேன்!!!!! அறிந்தும் கூட உன்னிடத்தில் நல்லோர்கள் பின் அதாவது நல்மனதாக மாற்றி அங்கே அனுப்புகின்றேன் என்று 
அகத்தியனும் அறிந்தும் கூட!!!!

இதனால் அப்பொழுது தைரியமாகிவிட்டது நாராயணனுக்கு!!!

சரி !! அகத்திய முனிவரே!! நிச்சயம் செல்கின்றேன் !!!

ஆனாலும் அறிந்தும் நீ என்ன சொல்கின்றாயோ அதை யான் கேட்பேன் என்று!!! நாராயணன் கூறினான்.

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பல வகையிலும் கூட உதவிகள் இதனால் நாராயணன் கூட அறிந்தும் கூட பல வகையில் கூட பல வகையிலும் கூட பின் கன்னிப் பெண்கள் எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய பின் நாராயணனை கூட யான் மணந்து கொள்ள வேண்டும் என்று!!!!! 

ஆனால் பின் அகத்தியனோ நிச்சயம் இப் பிறப்பில் மனைவி நீ இல்லை என்றெல்லாம் நிச்சயம் பின் அவந்தனை (நாராயணனை) குழந்தையாக ஏற்றுக்கொள்!! அண்ணனாக ஏற்றுக் கொள்!!! இன்னும் எவை என்று அறிய அறிய தம்பியாக ஏற்றுக் கொள்!!!! இன்னும் எதை என்று அறிய அன்னையும் தந்தையும் ஆக ஏற்றுக்கொள்!!!! என்றெல்லாம் கன்னி பெண்களிடம் சொல்லி சொல்லி அறிவித்தான்!!!!

ஆனாலும் ஓடோடி அறிந்தும் அறிந்தும் எதை என்று கூட மீண்டும் நாராயணனும் பின் கீழே இறங்கி!!!!

பின் அகத்திய மாமுனிவரே!!! அறிந்தும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் பல நன்மைகள் எவை என்று அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய நிச்சயம்!!!! நீ சொல்வதெல்லாம் எவை என்றும் அறிய அறிய மனிதர்களுக்கு நிச்சயம் விளங்கட்டும் என்றெல்லாம்!!!

பின் நாராயணனும் அகத்தியனை கட்டி அணைத்து கொண்டான்!!! 

நிச்சயம் பின் நாராயணனே இங்கு வந்து பின் வருபவர்களுக்கு என்னிடத்தில் நிச்சயம் பின் யான் கண்டு கொள்வேன்!!! அகத்தியனின் பின் பிள்ளைகள் என்று நிச்சயம் ஆசிகள் தந்து உயர்த்துகின்றேன்!!!!! என்றெல்லாம்!!!!

நிச்சயம் அறிந்தும் கூட அப்படியே அறிந்தும் அறிந்தும் இன்னும் எதை என்று அறிய அறிய அப்படியே பேசிக்கொண்டு அகத்தியனும் நாராயணனும் இன்னும் சில சில பின் வழிகளிலும் கூட பின் அப்படியே எதை என்று அறிய அறிய அங்கு நீராட !!!நிச்சயம்

( முக்கோடியில் இருக்கும் அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு அருகே இருக்கும் சொர்ணமுகி தமிழில் பொன்முகழி புனித நதியில் நீராட வேண்டும்) 

அங்கும் ஈசனும் பார்வதி தேவியும்!!!!! வந்து அறிந்து எதை என்று அறிய அறிய அப்படியே  ஆகட்டும்!!!!

நிச்சயம் அகத்திய மாமுனிவரே!!!!!!! எப்பொழுதும் அதாவது இவ்வுலகம் இருக்கும் வரை அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் உன் வாக்குகள் நிச்சயம் ஓங்கட்டும்!!!!!! வாக்குகள் பலிக்கட்டும்!!!!!! அனைவருக்கும் நன்மை செய்!!!!!!!!

என்றெல்லாம் ஈசனும்  பார்வதியும்!!!!!! குழந்தாய் என்று எதை என்று அறிய அறிய கட்டி அணைத்துக் கொண்டனர் அகத்தியனை!!!!

எதை என்றும் அறிந்தும் அறியாமலும் ஆனாலும் இறைவன் ஒன்று என்பதை எல்லாம் யாங்கள் இப்பொழுது நிச்சயம் ஏன் எதற்கு என்றெல்லாம் நிச்சயம் எடுத்துரைப்போம் பின் கடைக்காலங்களில் கூட!!!

அப்பொழுது தான் மனிதன் நம்புவான் ஏனென்றால் உடனடியாக அனைத்தும் சொல்லிவிட்டாலும் பின் குழப்பங்கள் ஆகிவிடும்!!! எதனை என்றும் அறிந்தும் கூட!!!

இதனால் பல உதவிகளை கூட பின் எவை என்று கூட தன் ஆசிரமத்தில் இருந்து அகத்தியன் நல்லவிதமாக நாராயணனுக்கு உதவிகள் செய்து செய்து இன்றளவும் கூட உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றான் மறைமுகமாகவே அகத்தியன்!!!!

அகத்தியனின் கருணை இன்னும் நீடூழி நிற்கும்!! நல்லாசிகள்!! நல்லாசிகள்!!

இன்னும் பின் ஏனைய வாக்குகளையும் கூட சித்தர்களே செப்பி செப்பி!!!

இங்கு பல அதிசயங்கள் காத்துக்கொண்டிருக்கின்றது!!! இவ் மலையில்!!! நிச்சயம் இம்மலையைப் பற்றியும் (திருப்பதி ஏழுமலையான்) நிச்சயம் அகத்தியன் எடுத்துரைப்பான்!!!

நல்லாசிகள்!! நல்லாசிகள்!!

(சந்திரகிரியில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் தொண்டவடா என்ற ஊரில் முக்கோட்டி எனும் இடத்தில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த இடத்தில் குருநாதர் அகத்திய பெருமானின் ஆசிரமம் இருந்தது

குருநாதர் அகத்திய பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம் அகத்தீஸ்வரசுவாமி என்று அழைக்கப்படுகின்றது 

கோவில் - தொண்டவாடா அகஸ்தீஸ்வர சுவாமி கோவில், தொண்டவாடா பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும்,

ஸ்வர்ணமுகி மற்றும் கல்யாணி நதிகளின் கரையில் சிவன் அகத்தீஸ்வரர் பார்வதிதேவி ஆனந்தவல்லியாக வழிபடப்படுகிறார்.

வரலாறு புராணங்களின் படி, ஸ்ரீனிவாச பகவான் பத்மாவதி தேவியை திருமணம் செய்த பிறகு, இருவரும் அகஸ்திய முனி ,  ஆசிரமத்தில் தங்கினர்.

சீனிவாசன் இத்தலத்தில் சிவபெருமானுக்கு நித்யபூஜைகள் செய்தார், அது இன்றைய "முக்கொடி அகஸ்தீஸ்வர சுவாமி கோவில்".என்று அழைக்கப்படுகின்றது

அகஸ்திய முனிவர் இங்கு சிவபெருமானை வேண்டி தவம் செய்து "ஸ்வர்ணமுகி" என்ற நதியைத் தோற்றுவித்தார்.


கோவில் நேரங்கள்
காலை: 6 முதல் மதியம் 1:30 வரை
மாலை: 3:30 PM முதல் 7:30 PM வரை


சேவா நேரங்கள்
பரிவார தெய்வங்களுக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரை அபிஷேகம்
காலை 7 மணி முதல் 9 மணி வரை சுவாமிக்கும்

அம்மாவுக்கும் அபிஷேகம்
நைவேத்யம் காலை 11:30 மணி
தீபாராதனை, நைவேத்தியம் மாலை 4:30 மணி
நைவேத்தியம், ஏகாந்த சேவை இரவு 7:30 மணி

தூரம்
இது திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சந்திரகிரி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ.

எப்படி அடைவது

திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நீங்கள் ரேணிகுண்டா - சந்திரகிரி டவுன் சேவையைப் பிடித்து தொண்டவாடாவில் இறங்கலாம்.

முகவரி
ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி கோவில், முக்கோடி (தொண்டவாடா கிராமத்திற்கு அருகில்), திருப்பதி (கிராமப்புறம்), சித்தூர் (Dst.), ஆந்திரப் பிரதேசம்.

மிகவும் அமைதியாக சுற்றுப்புறங்கள் முழுவதும் மரங்கள் சூழ சொர்ணமுகி நதிக்கரை ஓரமாக மிகவும் புனிதமான ராமர் பாண்டவர்கள்  வந்து தங்கி வழிபட்டு சென்ற அகத்தியரின் ஆசிரமக் கோயில் இங்கு உள்ளது.

அடியவர்கள் திருப்பதி செல்லும் பொழுது இங்கு சென்று குருநாதரையும் அகத்தீஸ்வர ஸ்வாமியையும் தரிசனம் செய்து சொர்ணமுகி ஆற்றில் நீராடி வர வேண்டும் )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. முகவரி
    ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி கோவில், முக்கோடி (தொண்டவாடா கிராமத்திற்கு அருகில்), திருப்பதி (கிராமப்புறம்), சித்தூர் (Dst.), ஆந்திரப் பிரதேசம்.

    https://maps.app.goo.gl/7t4L1DPFJxjVsQZD8

    ReplyDelete
  3. நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  5. இறைவா!!!!! அனைத்தும் நீ

    வணக்கம் அடியவர்களே ,

    நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த இவ் திருப்பதி ஏழுமலையான் அனைத்தும் வாரி வழங்கும் ரகசியங்களை கீழ்காணும் youtube பதிவில் கண்டு அனைவர்க்கும் பகிர்க. அனைவரும் நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய வழியில் சென்று பலன் அடையட்டும்.

    https://www.youtube.com/watch?v=vFq7f2pWj7o

    ஓம் ஶ்ரீ அன்னை லோபாமுத்ரா சமேத அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


    சர்வம் சிவார்ப்பணம்

    ReplyDelete
  6. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    விதியின் தன்மையும், ஆலய வழிபாட்டு ரகசியங்களும்.

    https://youtu.be/hBtWWjn6jDc

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete