​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 15 January 2024

சித்தன் அருள் - 1557 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் - 1








2/12/2023 சஷ்டி அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு!! பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம் ஓதிமலை ஓதியப்பர் சன்னதி அன்னூர். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! 
   
அப்பனே எண்ணற்ற கோடிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே உணர்ந்து உணர்ந்து ஞானிகள் வாழ்ந்து பின் முக்திக்கும் சென்றார்களப்பா!!!!

ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதர்கள் எதை என்றும் தெரியாமலும் கூட அலைந்தும் திரிந்தும் அப்பனே கர்மத்தை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே முதுகில் அப்பனே சுமந்தவாறே உள்ளார்கள்.. 

எப்படியப்பா எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அப்பனே உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் தான் அப்பனே நிச்சயம் வெற்றிகளும் உண்டு!!

அவை மட்டும் இல்லாமல் போகனின் அருள்களும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அதனால் நோய் தீர்ப்பதற்கு அப்பனே போகனின் உதவியையே பின் நாடி நாடி... ஏன் எதற்காக அப்பனே எவன் ஒருவன் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே யான் எதை என்றும் அறிய அறிய பின் பல வாக்குகளில் கூட சொல்லி விட்டேன் அப்பனே!!!!

அதாவது அதிகாலையிலே நான்கு மணி அளவில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் இப்பொழுது எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இங்கே அப்பனே (ஓதிமலையில்) நிச்சயம் எதை என்றும் புரியாமலும் கூட இருந்தாலும் கூட புரிந்து கொள்ளுங்கள்!!!

அப்பனே அதிகாலையிலே பின் எதை என்று அறிய அறிய அப்பனே இங்கிருந்து அதாவது முருகன் அழகாகவே எதை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே பின் சரியாகவே போகன் நிச்சயமாய் பின் ஓதுவான்!!!!! அப்பனே எதனை ஓதுவான் என்பதை எல்லாம் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சங்கு சப்தத்தையும் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் உணராமலும் கூட பின் நமச்சிவாயா !!!!!! முருகா!!!!!  என்று அப்பனே இப்படி பின் எதை என்று அறிய அப்பனே... ஓதி எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய

அப்பனே இவ்வாறு நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது அப்பனே புரிந்து கொண்ட பிறகு ஏன் இந்த மாற்றங்கள் என்றாயினும் இதனால் அப்பனே இவ்வாறு அப்பனே (சங்கு) ஊதுவதால் அப்பனே இதை நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய

அப்பனே அமர்நாதனிடமே செல்லும் என்பேன் அப்பனே

( ஓதி மலையில் போகர் சித்தர் எழுப்பும் சங்கின் ஒலி அமர்நாத் வரை கேட்கும்)

அங்கு எதை என்றும் அறிய பல ஞானிகளும் கூட தவம் செய்து கொண்டு இருப்பார்கள் என்பேன் அப்பனே!!!

எழுந்திடுவார்கள் என்பேன் அப்பனே!!!

இதனால் அங்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே கண்ணை விழிக்கும் ழுது அப்பனே நிச்சயம் அப்பனே பின் ஓர் சொட்டு ( ஞானியர்களின் கண்ணீர்) எதை என்றும் அறிய அறிய நேராகவே அப்பனே இங்கு வந்து விழுமப்பா!!!!

அப்பனே அப்படி விழும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியாமல் கூட அப்பனே சக்திகள் மனிதனுக்கு கிடைத்துவிடுமப்பா!!!

அப்பனே எண்ணற்ற நலன்கள் நடந்து விடும் அப்பா!!!

அப்பனே இதை அறியாமலும் புரியாமலும் அப்பனே எதை என்று அறிய அறிய சரியாகவே கணித்தாலும் அப்பனே இங்கிருந்து நேராகவே பின் அப்பனே அமர்நாதனே!! எதை என்றும் அறிந்தும் கூட

(ஓதி மலையில் இருந்து நேர்கோடாக அமர்நாத் அங்கு இருக்கின்றார்)

இதனால் அப்பனே பல ஞானிகள் கூட அப்பனே மறைமுகமாக தவங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே அறிந்தும் அறியாமலும் கூட அப்பனே நிச்சயமாய் அங்கு இருந்து அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே பின் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே

அதாவது எதை என்று அறிய அறிய ஒரு எவை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால் அங்கிருந்து அப்படியே இங்கு விழும் பொழுது அப்பனே இதை தன் அப்பனே பின் இங்கு விழுந்து அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு சிறிய துளி அப்பனே பழனி தன்னில் விழும் அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே இன்னும் இவை உணர்ந்து அப்பனே சிறு துளி பூம்பாறை எதை என்று அறிய அறிய அப்பனே 

(முருகன் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட குழந்தை வேலப்பர் பூம்பாறை முருகன் கொடைக்கானல்)

எதை என்று புரிய புரிய இன்னும் அப்பனே இங்கு எதை என்று அறியாமலும் அப்பனே இன்னும் அப்பனே கீழ் நோக்கி சென்று அப்பனே..... சிங்காரவேலன் சிக்கல் அப்பா

(சிக்கல் சிங்காரவேலன் நாகப்பட்டினம்)

எதை என்றும் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே பின்பு அப்பனே பின் வடக்கும் அப்பனே  எதை என்று அறிய அறிய தெற்கும் நோக்கி பின் பாய்கின்ற பொழுது அப்பொழுதுதான் அப்பனே அறிந்தும் கூட அறியாததும் கூட எண்ணற்ற எதை என்றும் புரிந்தும் கூட மனிதனுக்கு வாழ தெரியாமல் கர்மாவில் புகுந்து அப்பனே அழிந்து நிற்கின்றது உலகம்.

எதை என்றும் புரிய  புரிய அதனால்தான் அப்பனே இங்கிருந்து மேல் நோக்கி அப்பனே பாருங்கள் அப்பனே!!!!

நேரடியாகவே பின் சொர்க்கத்தை அடைந்து விடலாம் அப்பனே பாருங்கள் அறிந்தும் அறிந்தும் கூட 

(இவ்வாக்கினை குருநாதர் நல்கும் பொழுது ஓதியப்பர் சன்னதியில் இருந்து கௌளி கட்டியம் கூறியது (பல்லி சப்தம் எழுப்பியது)

இப்படிப் பார்த்தால் அப்பனே எண்ணற்ற கோடிகளைப்பா

அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய இறைவனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் விளக்கங்கள் புரிய வைக்கின்றேன் அப்பனே

புரிந்துகொண்டு அப்பனே வாழ்ந்தால் தான் உண்மை நிலை அப்பனே புரியுமப்பா

புரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே பல ஞானிகளையும் யான் பார்த்துள்ளேன் அப்பனே 

இங்கு தங்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் உயர்நிலை ஆகியுள்ளார்கள் என்பேன் அப்பனே

ஆனால் போகன் நிச்சயம் விடமாட்டானப்பா

எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி விட்டாலும் அனைத்தையும் கெடுத்து விடுவார்களப்பா!!!

எந்தனுக்கு அவ் சக்திகள் வேண்டும்!!!!

இவ் சக்திகள் வேண்டும் என்றெல்லாம் அப்பனே பின் இரவில் தங்கி தங்கி அனைத்தும் அழித்துவிடுவார்களப்பா!!!!

அதனால்தான் அப்பனே யார் யார் மனதில் என்ன செப்ப வேண்டும்????? என்ன செப்ப கூடாது ?? என்று எண்ணி எண்ணி அப்பனே இங்கு முருகன் அனுமதிப்பதே இல்லை!!!!

அதனால் அப்பனே போகனின் எதை என்று அறியாத அளவிற்கும் கூட சரியான தீர்ப்புகள் அப்பனே!!!!

இதனால் அப்பனே ஒரு துளி பின் எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் பிரதிபலிக்கின்றது அப்பனே சென்று பார்த்தீர்கள் என்றால் அப்பனே ஒன்றும் இல்லாமல் எதை என்றும் அறிய அறிய அப்பனே 

அதேபோல் அப்பனே ஒரு நேர்கோட்டில் இடுங்கள் அப்பனே 

எதையென்று இங்கிருந்து அப்பனே நேரடியாகவே எங்கு செல்கின்றது என்பது நீங்களே பாருங்கள் அப்பனே!!!

அப்படி செல்கின்றபோது எல்லாம் அப்பனே இடை இடையே அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் இதனை நோக்கி அதாவது எதை என்று அறிய அறிய

இக் கோட்டினை....(கோட்டின் இடையே) அப்பனே குறுக்கு மறுக்கலாகவே நதிகள் ஓடுகின்றனப்பா!!! 

(கீழிருந்து காவிரி தொடங்கி கோதாவரி நர்மதா கங்கா மந்தாகினி பாகீரதி என பெரிய ஆறுகள் உள்ளிட்ட சிறு நதிகளும் கூட)

அப்பனே அவ் நதிகளில் மூழ்கினாலே மோட்சங்கள் தானப்பா!!!!!

பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே!!!!!!!

உங்களுக்கு ஒரு வேலையே வைத்திருக்கின்றேன் அப்பனே !!!

இதை சரியாக அப்பனே பின் எதை என்று யார் உணர்ந்து அப்பனே அதாவது கூட்டல் குறியாகவே அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இட்டால் புரியுமப்பா !! உலகத்தைப் பற்றி அப்பனே

இதனால் அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ முடியாதப்பா

வாழ்ந்து எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே

பக்திக்குள் வந்து விட்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே இறைவன் ஆசிகளும் அன்பும் கிடைத்து உயர்வான இடத்திற்கு செல்வீர்கள்!!!

அப்பனே அப்படி இல்லை என்றால் அப்பனே மீண்டும் மீண்டும் தாழ்வுகள் ஏற்படுத்தி அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனை வணங்கினேனே சித்தர்களை வணங்கினேனே ஒன்றும் நடைபெறவில்லையே என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய 

அதனால்தான் அப்பனே நிச்சயம் அதனால் தான் நிச்சயம் அப்பனே நல்வழிப்படுத்தவே பல உரைகள் உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே

அதை யார் ஒருவன் சரியாக கடைபிடிக்கின்றானோ? அவன் உயர்ந்தவன் ஆகிவிடுவான் என்பேன் அப்பனே

இன்னும் அப்பனே இவைதன் வாக்குகளாக அப்பனே இன்னும் இன்னும் வரும் சந்ததிகளுக்கு பயன்படும் என்பேன் அப்பனே!!!!

சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பொழுது அப்பனே உயர்ந்து விடுவார்கள் அப்பனே

அப்பனே யாங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய தெரியாமல் உரைக்கவில்லை என்பேன் அப்பனே!!!!

நிச்சயம் தெரிந்தும் கூட!!! பின் உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!!

இதனால் அப்பனே இங்கு அப்பனே எதை என்று அறிய அறிய நேர்கோடு இடும்பொழுது அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய

அப்பனே """"மராத்தியம்""""""

( மகாராஷ்டிரா)

எதை என்று அறிய அறிய குறிக்கின்ற மாநிலத்தில் அப்பனே எதை என்று கூட ஒரு மலையில் எதை என்று அறிய அறிய ஈசனும் பார்வதி தேவியும் தங்கி எதை என்று அறிய அறிய இருப்பார்களப்பா!!!! அங்கு சென்று விட்டால் நிச்சயம் அப்பனே அனைத்தும் கிட்டிவிடும் அப்பனே... இவைதன் நீங்களே யோசிக்க வேண்டும் அப்பனே!!!

(குருநாதர் இந்த வாக்கில் குறிப்பிட்டுள்ள ஓதி மலையில் இருந்து செல்லும் பொழுது நேர்கோடாக செல்லும் பொழுது மகாராஷ்டிராவில் ஒரு மலை மீது அம்மையும் அப்பனும் இருப்பார்கள் என்று கூறியிருந்தார் அந்த ஆலயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு கடும் முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருந்து குருநாதரிடம் சில ஆலயங்களை குறிப்பிட்டு கேட்ட பொழுது

குருநாதன் அப்பனே எதை என்று அறிய அறிய  இதை உங்களுக்கு ஒரு தேர்வாகவே வைக்கின்றேன். நீங்களே கண்டுபிடிங்கள் நீங்களே கண்டுபிடித்து சென்றால்தான் மதிப்பு என்று கூறியிருந்தார்

அதன்படியே அந்த ஆலயத்தை கிட்டத்தட்ட நெருங்கி அந்த நேர்கோட்டில் இருக்கும் ஆலயங்களை எல்லாம் பட்டியலிட்டு சுருக்கி சுருக்கி வந்து ஒரு குறிப்பிட்ட ஆலயத்தின் பெயரை குருநாதரிடம் கூறிய பொழுது 

ஏனென்றால் அதன் அருகிலேயே சக்தி பீடமும் உள்ளது என்று கூறியிருந்தார் யோகேஸ்வரி எனும் சக்தி பீடத்திற்கு அருகே அமைந்திருக்கும் ஏடேஸ்வரி ஆலயத்தை குறிப்பிட்டு கூறிய பொழுது

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் நேர்கோட்டில் வரும் பொழுது அப்பனே மூன்றுமே சக்திகள் மிகுந்தவை தான் அப்பனே

இதனையும் கூட கூர்ந்து பார்த்தால் பார்வதி தேவியின் பெயர் அப்பனே

என்று மறைமுகமாக பிடி கொடுக்காமல் நீங்களே உணர வேண்டும் என்று கூறியிருந்தார்

ஜோகேஸ்வரி ஏடேஸ்வரி
கோலாப்பூர் மகாலட்சுமி

என மூன்று ஆலயங்கள் வரிசையில் இருக்கின்றன இதில் ஏடேஸ்வரி ஆலயம் பார்வதி தேவியின் பெயரோடு சம்பந்தப்பட்டுள்ளது என்று குருநாதரிடம் கூறிய பொழுது

அப்பனே எவை என்று அறிய அறிய பக்கத்தில் நெருங்கி வந்து விட்டீர்கள் அப்பனே நீங்களே எதை என்று அறிய அறிய அப்பனே

பின் அப்பனே ஏக !!! (ஏகன் !!! ) எதை என்று அறிய அறிய அப்பனே அது தான் அப்பனே ஆனால் மாறி விட்டது.

(அதாவது ஏகன் ஏகம் ஏக முகம் ஏகாம்பரம் என ஈசனுக்கு மறு பெயர் இருப்பது போல் ஏகேஸ்வரி எனும் பெயர் பார்வதி தேவிக்கு உள்ளது)

ஏகேஸ்வரி எனும் பெயர் ஏடேஸ்வரி என பெயர் மருவி விட்டது)

அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சந்திரன் எவை என்று அறிய அறிய அங்கு பிரகாசிக்கும் என்பேன் அப்பனே இரவில் கூட அப்பனே!!!!!!

என்று அந்த ஆலயத்தை பற்றி குருநாதர் கூறிவிட்டார்.

ஆலய விபரக்குறிப்பு 

ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவி, யெர்மலா, மகாராஷ்டிரா மகாராஷ்டிராவின் யெர்மலாவில் அமைந்துள்ளது முகவரி 9VCM+87M, Yermala, மகாராஷ்டிரா 413525, இந்தியா. இது பாங்க்ரி ரயில் நிலையத்திலிருந்து 5.56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மகாராஷ்டிராவின் யெர்மலாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவியிலிருந்து அருகிலுள்ள இரயில் நிலையம் மகாராஷ்டிராவின் யெர்மலாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் பாங்க்ரி ரயில் நிலையம். இது கிட்டத்தட்ட 5.56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

பாலகட் மலையில் 500அடி உயரத்தில் மலை கோயிலாக அமைந்துள்ளது )

இன்னும் அதிலிருந்து நேர்கோடு இட்டால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே சிறிது பக்க தொலைவிலே அப்பனே எதை என்று கூட இன்னும் இன்னும் அப்பனே ஏற்கனவே வாக்குகளில் உரைத்து விட்டேன் அப்பனே நிச்சயம் சக்தி பீடங்கள் அப்பா!!!!  (ஜோகேஸ்வரி )

எதை என்றும் புரியப் புரிய அப்பனே புரிந்து கொண்டால் அப்பனே!!!

இவ்வாறு இன்னும் அப்பனே இன்னும் இன்னும் எதையென்று நோக்கினோக்கி அப்பனே என்று கூட அப்பனே சாதாரணமில்லை அப்பனே

நட்சத்திரம் எதை என்று கூட எதை என்று அறிய அறிய நட்சத்திரம் இட்டால் அப்பனே எங்கெல்லாம் எதை என்றும் அறிய அறிய அப்பனே புரிந்துவிடும் அப்பனே!!!!!!

அதற்கு மேல் தான் சூட்சமம் உள்ளது அப்பனே அங்கு சென்று அப்பனே தேடினால் அப்பனே அனைத்தும் கிட்டும் அப்பா!!

அப்பனே பின் அனைத்தும் சாதிக்கக் கூடிய வல்லமைகள் வந்து விடும் அப்பா

ஆனாலும் அப்பனே இவை புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

(இவ்விடத்தில் மீண்டும் கௌளி சத்தம்) 

புரிந்து கொண்டு நடந்தால் அப்பனே வெற்றிகள் கிட்டும் அப்பா

அப்பனே பின் உயர் நிலைக்கு அப்பனே செல்வது சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!!

இதனால் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இப்படி சென்று சரியாகவே அங்கு உட்கார்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே இறப்பு என்பதே கிடையாது அப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

ஆனால் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட அப்படியென்றால் ஒவ்வொரு ரகசியத்தையும் கூட நிச்சயம் ஒவ்வொரு தலத்தையும் தலத்திலும் யான் செப்புவேன் அப்பனே

எதை என்று அறிய அறிய பூரணமாக அப்பனே அங்கு சென்று வழிபட்டால் கர்ம வினைகள் நீங்குமப்பா!!!

இதனால் அப்பனே இறைவன் விடுவானா ?????? என்ன !!!! அப்பனே!!! 

ஆனாலும் அப்பனே முழு முயற்சியோடு அப்பனே தான தர்மங்கள் செய்து கொண்டு அப்பனே இவ்வாறு எதை என்று கூட தன் கடமையை சரியாக செய்து கொண்டு அப்பனே சென்றாலே இறைவன் அழைத்துச் செல்வான் அப்பனே

மற்றவை எல்லாம் வீணப்பா!!!! பொய்கள் தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் யான் அட்டமா சித்திகளை பெற்று விட்டேன் அனைத்தும் பெற்று விட்டேன் என்று!!!

நிச்சயம் இல்லை அப்பா எதை என்றும் புரியப் புரிய

இதனால் அப்பனே பல வகையிலும் கூட இதனால் அப்பனே இவ்வாறு எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சரியாகவே பின் எவை என்றும் புரிய புரிய இங்கிருந்து அப்பனே நேர்கோடாகவே அப்பனே பின் நேராகவே எதை என்று கூட சொர்க்கத்தை நோக்கி எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய

அப்பனே அங்கு தான் அப்பனே வீற்றிருக்கின்றானப்பா!!!! எதை என்று கூட இறைவனும் இறைவியும் கூட!!!!

அப்பனே அவந்தன் எப்படி வருவான் என்பதையும் கூட நிச்சயம் பின் அறிவியல் வழியாகவே உரைக்கின்றேன் அப்பனே!!!

தெளிவுகள் பெற்று வாழுங்கள்!!!!

தெளிவுகள் பெறாமல் வாழ்ந்தால் அப்பனே எப்படியப்பா?????????? 

உருப்படாதப்பா!!!!! 

இதனால் அப்பனே நிச்சயம் பின் அவ்வாறு எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இதனால்தான் அப்பனே அதாவது பின் பார்வதி தேவி சரியாகவே இங்கு பின் இரண்டு கால்களையும் வைத்து அப்பனே பின் தலையும் அப்பனே அமர்நாதனிடத்தில் அப்பனே!!!! 

பார்த்தால் சரியாகவே அப்பனே நின்று கொண்டிருப்பாள் அப்பனே!!! 

புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!!

இதை அப்பனே புரிந்து கொள்வதற்கும் சக்திகள் வேண்டும் அப்பா!!!!

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே சிறிது பின் எவை என்று அறிய அறிய அறிவுக்கும் வேலை கொடுங்கள் அப்பனே !!! பின் எதையெதையோ பின் செய்வதற்கு அதாவது மற்றவர்கள் மீது குறைகள் சொல்வது இன்னும் போட்டி பொறாமைகள் எவை என்றும் அறியாமல் அவன் இப்படி என்றெல்லாம் பின் பயன்படுத்துவதற்கு பதிலாக... யான் சொல்லியதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே உண்மை நிலை புரியவரும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே இதற்கு சிறப்பும் உண்டு என்பேன் அப்பனே!!!

அதனால் இதன் அடியில் எதை என்று அறிய அறிய அப்பனே சென்று விட்டால் அப்பனே மற்றொரு எதை என்று அறிய உலகமும் கூட!!!

(ஓதி மலைக்கு அடியில் மற்றொரு உலகமும் உண்டு இதே போல திருவண்ணாமலை கஞ்சமலை என குறித்தும் குருநாதர் கூறியதை இங்கு நினைவுபடுத்துகின்றோம் மனிதர்கள் நம் கண்களால் பார்க்கின்ற உலகங்கள் வேறு இறைவனுடைய அனுக்கிரகம் சித்தர்களுடைய ஆட்சி ஒவ்வொரு திருத்தலங்களுக்கு அடியிலும் நாகங்கள் தவழ்ந்து கொண்டிருப்பது சித்தர்கள் தவ யோகிகள் தவங்கள் செய்து கொண்டிருப்பது வேறொரு உலகம் நமக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டிருப்பது என பல்வேறு அதிசயங்கள் ரகசியங்கள் இருக்கின்றன)

அதை யான் இப்பொழுது செப்பவில்லை என்பேன். அப்பனே

பின் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து இன்னும் இன்னும் புரிந்து கொண்டால் நன்று என்பேன். அப்பனே

அதனால்தான் அப்பனே பாசத்தோடு இங்கு விளையாட வருவார்களப்பா அறிந்தும் கூட அப்பனே!!!!

(கார்த்திகை மாத கடைசி சஷ்டியின் போது விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் வந்து விளையாடிவிட்டு செல்வார்கள் என்பதை பற்றி குருநாதர் கூறியதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்)

இங்கிருந்து நேரடியாக சென்று விட்டாலும் அப்பனே எதை என்று அறிய அறிய கைலாயத்தையும் கூட அடைந்து விடலாம் என்பேன். அப்பனே!!!

புரிகின்றதா அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே வரைபடத்தின் வழியாகவே அப்பனே பின் நேர்கோடு இங்கு இருந்து அப்பனே நேரடியாக இட்டால் அனைத்தும் தெரியவரும் அப்பனே!!!!

பின்பு நடுவில் கூட அப்பனே அதாவது கூட்டல் குறியிட்டால் அனைத்தும் தெரிய வந்துவிடும் என்பேன் அப்பனே 

பின் நடுவில் கூட எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய பிரித்தால் பொருள் தருவது என்ன??? பிரியாதது பின் பொருள் தராதது  அப்பனே எதை என்று உணர்ந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே!!!!

இதனால் பூஜ்ஜியத்தில் அடங்கியுள்ளது உலகம் அப்பனே இதை புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே

இதனால் அவை இவை என ஓடி ஓடி உழைத்து கடைசியில் பார்த்தால் பூஜ்ஜியமே மிஞ்சுகின்றது அப்பனே அதுதான் ஆன்மா அப்பா..... எதை என்றும் அறிய அறிய பின் எவையும் எதையும் நிச்சயம் அப்பனே பார்த்தால் ஒன்றும் இல்லை என்பேன் அப்பனே அவ்வளவுதான் சென்று விட வேண்டியது தான் அப்பனே

எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இதனால் தான் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின் வரைபடம் இட்டு எதை என்று அறிய அறிய அப்பனே பின் இங்கிருந்து நேர்கோடு இட்டால் அப்பனே இன்னும் திருத்தலங்கள் தங்கி நிற்குமப்பா!!!!!

அங்கு சென்றால் அப்பனே பல தரித்திரங்கள் நீங்கும் அப்பா!!!!

ஆனால்  ?????? ஈசன் விட்டு விடுவானா ????? என்ன !!???

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய ஏனென்றால் கர்மா !!!!!

கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தால் அப்பனே ஈசன் கூட அனுமதிக்க மாட்டான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அதனால் அனுபவித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அப்பனே ஆனாலும் பின் விதியினை மதியால் வெல்லலாம் அல்லவா அப்பனே சொல்லியிருக்கின்றார்கள் அப்பனே பின் அவ் மதியும் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே இவ்விதியினை கூட அப்பனே நேர்கோடாக இட்டால் அப்பனே அங்கெல்லாம் சென்று வந்தால் அப்பனே மதி வென்றுவிடும் அப்பனே!!!!

இப்பொழுது புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!

அப்பனே சாதாரணமானவன் இல்லை முருகன் எதை என்றும் புரிய புரிய!!!

அப்பனே இவந்தனுக்கு ஏன் இவ்வளவு எதை என்று அறிய அறிய தலைகள்???

( ஆறுமுகம் ஆறு தலைகள்)

(ஓதியப்பனுக்கு ஐந்து முகம் 5 தலைகள்)

யோசித்தது உண்டா????

அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பார்த்தீர்களென்றால் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய தெரிந்து கொள்வீர்கள் அப்பனே

இதற்கும் எதை என்று அறிய அறிய அறிவை பயன்படுத்திக் கொண்டால் அப்பனே சற்று தெளிவாகும் என்பேன் அப்பனே!!!! அனைத்தும் கூட.
அப்பனே எவை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட

அதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் மானிடனாக பிறந்து பிறந்து ஏதும் தெரியாமல் வளர்ந்து வளர்ந்து அப்பனே பின் சென்று கொண்டே இருக்கையில் என்ன பிரயோஜனமப்பா?????

அதனால் எதை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் எதை என்று புரிந்தும் கூட அப்பனே பின் நிச்சயமாய் எவை என்றும் புரியப் புரிய அப்பனே சரியாகவே அப்பனே இங்கு பின் தண்ணீரை எதை என்றும் புரிய புரிய அப்பனே சரியாகவே வைத்துக் கொண்டு அப்பனே ஏன் எதற்காக என்றால் அப்பனே!!!

அங்கிருந்து யான் சொன்னேனே!!!! அமர்நாதனிடம் அப்பனே எவை என்றும் அறிய அறிய விழிக்கும் பொழுது பின் கண்ணீர் இங்கு எதை என்று கூட நீராக விழும் பொழுது அப்பனே சரியாகவே அப்பனே ஒரு துளி விழுந்து விட்டால் !!!!!!

அதை அருந்தி விட்டால் அப்பனே...பின் எவை என்றும் அறிந்தும் கூட நோய்களும் கூட பின் பரிசுத்தமாக போய்விடும் அப்பா!!!!

அப்பனே இளமையாக வாழ்ந்து விடலாம்!!!!!

(ஓதி மலையில் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் நான்கு மணிக்கு போகர் மகரிஷி சங்கொலி முழங்கி அந்த சங்குநாதம் அமர்நாத் வரை சென்று அங்கு இருக்கும் ஞானியர்கள் கண்விழிக்கும் பொழுது அவர்களுடைய கண்ணீர் துளி ஓதி மலையில் விழும் பொழுது ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து காத்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த துளி அது விழுந்து அதை பருகினால் நோய்கள் எல்லாம் போய் பரிசுத்தமாகிவிடலாம்

ஆனால் அதற்கும் புண்ணியம் வேண்டும் முருகனுடைய அனுமதி வேண்டும்)

ஆனாலும் அப்பனே அதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே எதை என்று கூட சாதாரணமாக வைத்துவிட்டால் அப்பனே எதை என்று கூட சரியாக விழ வேண்டுமே !!!! அது!!!!!!!

எதை என்றும் புரியப் புரிய அப்பனே!!!!

எதை என்றும் அறியாமல் கூட அப்பனே புரிந்து கொண்டு எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே இன்னும் இன்னும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே!!!!!

நிச்சயம் இதையெல்லாம் எவை என்றும் அறிய கலியுகத்தில் சொல்லி வைப்பேன் அப்பனே!!!

இதை நிச்சயம் எதை என்று அறிய அறிய சந்ததிகளுக்கு அதாவது பின்வரும் சந்ததிகளுக்கு!!!!

நிச்சயம் பயன்படுத்தி அப்பனே நல் மாற்றத்தை காணத்தான் போகின்றது இவ்வுலகம் !!!!

அதனால் தான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்தான் உலகில் எதை என்று அறிய அறிய யான் கண்டுபிடிக்க எவை என்று அறிய அறிய இல்லை அப்பா எதை என்று அறிய அறிய கண்டு உணர்ந்தேன் என்பேன் அப்பனே 

அனைத்திலும் முதன்மை பெற்றேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய என்னால் நிச்சயம் அனைத்தும் செய்ய முடியும் என்பேன் அப்பனே

ஆனாலும் பின் செய்து எதை என்று அறிய அறிய உந்தனுக்கு கொடுத்து விட்டாலும் அதை சரியாகவே பயன்படுத்த பின் சரியாக பயன்படுத்த மாட்டாய் அப்பா நீ!!!!!

இதுவும் கலியுகத்தில் அப்பனே கெடுத்து விடுவாய் அப்பனே

அதனால்தான் அப்பனே எதை என்று அறிய  யாங்களே வந்து எதை என்றும் அறிய அறிய அங்கே அங்கே இன்னும் இன்னும் அப்பனே 

இதனால்தான் அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய சக்திகள் படுகின்றதோ அங்கெல்லாம் திருத்தலங்களை கூட யாங்களே எழுப்பினோம்!!!

ஆனால் புத்தி கெட்ட மனிதன் இப்பொழுது எங்கெல்லாம் திருத்தலங்களை எழுப்பி அப்பனே இன்னும் அவந்தனும் கர்மத்தில் நுழைந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! 

அவந்தனும் வாழ்ந்த பாடு இல்லை அப்பனே மற்றவர்களும் வாழ்ந்த பாடு இல்லை அப்பா!!!!

எப்படியப்பா?????

ஓதிமலை ரகசியங்கள் குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த வாக்குகள் பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete