இன்றும் சித்தர்களை வருத்தப்பட வைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மனநிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக் கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள். என்று ஒருவன், தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது. எளிய வாழ்க்கையை போதிப்பதே சித்த மார்க்கம். அப்படி வாழத்தொடங்கிவிட்டால். இருப்பதெல்லாம் அதிகமாக தோன்றத் தொடங்கும். அப்பொழுது பிறரை பற்றிய எண்ணம் வந்தால், கர்மா நன்றாக இருந்தால், அதிகமானதை தானம் செய்ய முடியும். அங்கு, புண்ணிய கார்யம் தொடங்குகிறது. நல்ல எண்ணம் எங்கும் பரவ அவன் காரணமாகிறான். அதனால் தான் திருந்துவதும், தொடங்குவதும் ஒருவன் உள்ளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறோம். அப்படி ஆரம்பித்துவிட்டால், அவன் மனம், எண்ணங்கள், செயல்கள், உடல் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். பஞ்ச பூதங்களின் எந்த பாதிப்பும், அவன் உடல் அளவில் தாங்குவது எப்படி என்று படிக்கத் தொடங்கிவிடுவான். பின்னர் அவன் வாழ்க்கையே, இயற்கையாகிவிடும். இந்த இயற்கை தன்மையே அவனுக்கு, அவனுள் இருக்கும் இறைவனை அறிமுகப்படுத்தி வைக்கும். அதன் பின்னர் அவன் சுத்தமாகிவிடுவதால், யாருக்காக அவன் வேண்டிக்கொண்டாலும், அது உடனேயே அவர்களுக்கு கைவல்யமாகிவிடும்!
அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!
சித்தன் அருள்!
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Thursday, 18 January 2024
சித்தன் அருள் - 1559 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
அகத்தீசாய நம 🙏 நன்றி ஐயா 🙇♂️🙇♂️
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOm Agatheesaya Namah!
ReplyDelete