​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 13 January 2024

சித்தன் அருள் - 1555 - அகத்தியப்பெருமானின் மருத்துவக் குறிப்பு!


[கஸ்தூரி மஞ்சள் பட்டை]
[ஊமத்தை இலை]
[துத்தி இலை]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் அருளுகிற மருத்துவக் குறிப்புகள் (1) நேரடியாக எடுத்துக் கொள்கிற முறையாகவோ, அல்லது (2) நாமே தயாரித்து எடுத்துக் கொள்கிற படியாகவோ இருக்கும். சிலவேளை, இரண்டுமே, ஏதேனும் ஒரு சித்தா/ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். பலவிதமான மூலிகைகளை போட்டு நாமே தயாரித்தால், அதற்கு எப்படி பெயர் சூட்ட முடியும்? ஆதலால், அதற்கு செய்முறைதான் கூற முடியும்.

அடியேனின் ஒரு நண்பர் மதுரையில் நடந்த அகத்தியப்பெருமானின் ஆயில்ய நட்சத்திர பூஜைக்கு வருகிறேன் என்றார். அனைவரும் வாருங்கள், அவர் அருள் பெறுங்கள் என்று கூறினேன். ஆனால், 27/12 அன்று அவரை தொடர்பு கொண்ட பொழுது, உடல் நலமில்லாமல் இருப்பதால் வரமுடியாததை கூறினார். ஆம் அவருக்கு பல வருடங்களுக்கு முன், முதுகு எலும்பில் L4, L5 என்கிற எலும்புகள் அறுவை சிகிர்ச்சை வழி மாற்றப்பட்டுள்ளது. ஆகவே அடிக்கடி வலி வந்து ரொம்பவே படுத்தும். படுத்து விடுவார். இம்முறையும் அதுதான் நடந்தது. படுக்கையில் படுத்துவிட்டார். மதுரைக்கு வரமுடியாது என்று விலகிக் கொண்டார்.

அடியேனுக்கு, அகத்தியப்பெருமான்தான் கடைசி புகலிடம். மனதுள், மிகுந்த விசனத்துடன் அவரிடம் விண்ணப்பித்தேன்.

"அய்யனே! ஏதேனும் ஒரு வழி காட்டக் கூடாதா? ஏன் இப்படி உங்கள் மகனை சிரமப்படுத்துகிறீர்?" என்று கேட்டுவிட்டேன்.

இப்பொழுதெல்லாம். யாரேனும் அடியேனிடம், ஒரு பிரச்சினை என்று கூறினால், அகத்தியப்பெருமானிடம் மானசீகமாக கூறி, "ஏதேனும் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்" என்று கூறினால், அதை திருப்பி, என் தலையில் வைத்து, நீயே பார்த்து இப்படி செய் என்று வைத்து விடுகிறார். ஆகவே, எதையும் யாரிடமும் கேட்பதில்லை.  இந்த பிரச்சினையையும் அதே போல் அடியேன் பக்கமே, தள்ளிவிட்டார். எப்படி?

மறுநாள், பூஜை சாமான்களை வாங்க வெளியே சென்ற பொழுது, அங்கு ஒரு வைத்தியர் வந்திருந்தார். பலவிதமான மருத்துவ குணம் கொண்ட இலைகளை பற்றி அந்த கடை முதலாளியிடம் கூறிக் கொண்டிருந்தார்.

வைத்தியரே! முதுகுத்தண்டில், இடுப்பில் நல்ல வலி இருக்கிறது! அதற்கு ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள், என்றார் அந்த கடைக்காரர்.

முதுகுவலி, கழுத்து வலி, மூட்டுவலி, கால் வலி, இடுப்புவலி, கை/கால் (ஜாயிண்ட்) வலி, போன்ற பலவிதமான வலிகளுக்கும் மிக சிறந்தது ஒரு எண்ணெய் தயாரிக்க வேண்டும். அதை இரவு படுக்க போகும் போது சாதாரணமாக தடவினால் போதும் அடுத்தநாள் காலையில் வலி போயிருக்கும்" என்றார். பின், தன் பையை எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து தெருவில் கூட்டத்துக்குள் கலந்து காணாமல் போனார். கடைக்காரரிடம், இவர் யார் என்று வினவினேன். "வைத்தியர்" என்று கூறி நிறுத்திக் கொண்டார்.

ஏனோ! அந்த நேரத்தில் மனம் அமைதியாக தெளிவாக இருந்ததால், அவர் கூறியது மனதில் பதிந்து நின்றது. அகத்தியப்பெருமானே வைத்தியரை விட்டு தெரிவிக்கிறார் போல என்று தோன்றியது. சரி! பண்ணி பார்த்து பரிசோதித்து விடுவோம் என தீர்மானித்தேன்.

மறுநாள், மதுரை பயணம். வீட்டு வாசலில் கீரை விற்கும் பெண்மணியிடம் கூறி இரு விதமான மூலிகை இலைகள் வேண்டும், நாளை கொண்டு வந்துவிடுங்கள் என்றேன். மறுநாளே வந்தது.

அகத்தியப்பெருமான் (வைத்தியர்) கூறிய எண்ணையை தயாரித்தேன். யாரிடம் சோதிப்பது? நாமே தடவி சோதித்து விடுவோம் என தீர்மானித்து, அன்று இரவு, கழுத்து, நடு முதுகெலும்பு, இடுப்பு என பல இடங்களில் தடவி, உறங்க சென்றேன். மறுநாள் காலை எழுந்த பொழுது, தடவிய எண்ணையும் இல்லை, உடலில் வலியும் இல்லை, நன்றாக இயல்பாக இருந்தது. அதன் பின் இன்றுவரை இடுப்பு வலியும் இல்லை. மிகச் சிறந்த மருத்துவ எண்ணையாக அது உருவாகியுள்ளது. அடுத்த நாள் ஒரு உறவினருக்கு கொடுத்து முதுகில் தடவி பார்க்க, அவருக்கும் வலி ஒரே இரவில் விலகியது. அந்த எண்ணையை மேலும் சிலருக்கு சிறிதளவு கொடுத்துவிட்டு ஊருக்கு கொண்டு வந்தேன், இனிதான் அந்த நண்பருக்கு கொடுத்து பரிசோதிக்க வேண்டும்.

ஆகவே, அனைவரும் தெரிந்து கொண்டு நலம் பெற அதன் செய் முறையை கீழே விளக்குகிறேன்! இந்த எண்ணெய் வெளியே தடவிக் கொள்ள மட்டும் தான்.

விளக்கெண்ணெய் - 1 லிட்டர்
கஸ்தூரி மஞ்சள் பட்டை - ஆறு
ஊமத்தை இலை - 10
துத்தி இல்லை - 10

விளக்கெண்ணையை ஒரு இரும்பு வாணலியில் மிதமான (sim) தீயில் வைத்து சூடாக்க வேண்டும். எண்ணெய் கொதித்து லேசாக ஆவி வரும் பொழுது கஸ்தூரி மஞ்சள் பட்டையை அதில் போட வேண்டும். மஞ்சள் பட்டையிலிருந்து நுரை வரும். 10 நிமிடத்தில் நுரை வருவது நின்ற உடன் ஊமத்தை இலை, துத்தி இலை இரண்டையும் எண்ணெயில் போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் எண்ணெய் குளிரும் வரை காத்திருந்து அதன் பின்னர் (அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறி, போகர் பெருமானை நினைத்து, பிரார்த்தித்து) உபயோகிக்கலாம்.

அனைவரும் வாழ்க நலமுடன், வேதனை இன்றி!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. நன்றி அன்பரே, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Agathiya perumane potri potri potri... agathiyar iyane Mikka nandrigal..Bogar iyanukkum mikk nandrigal...

    ReplyDelete
  3. மிகவும் நன்றி ஐயா 🙏
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

    ReplyDelete
  4. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  5. Gurudhevar thiruvadi Saranam... ammai malaradi saranam...

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete