​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 26 January 2024

சித்தன் அருள் - 1564 - அகத்திய பெருமானின் திருநட்சத்திர விழா 30/12/2023!


"வணக்கம்! பூஜாரி அய்யா! இன்று யாருக்கு திருநட்சத்திர விழா?" என, அகத்தியப்பெருமான் சன்னதிக்குள் இருந்து பிரசாதம் பக்தர்களுக்காக எடுத்துக் கொண்டிருந்த பூஜாரியிடம் கேட்டேன்.

குரல் கேட்டு திரும்பி பார்த்த பூஜாரி, அடியேன் நிற்பதை கண்டு, "என்னங்க அய்யா, இப்படி கேட்டுட்டீங்க? அப்பாவுக்குத்தான்!" என்று சிரித்தபடி பதிலளித்தார்.

சன்னதிக்குள் எட்டிப்பார்த்தால் அப்படி தெரியவில்லையே. இறங்கி வெளியே வந்து இருவரையும் பாருங்கள் என்று கூறி, விலகிச் சென்றேன்.

<===>

நம் குருநாதர் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திர தினம் 30/12/2023 சனிக்கிழமை அன்று, பசுமலை மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருச்சன்னதியில், அகத்தியர் அடியவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

மாலை 5 மணிக்கு தொடங்குவதாக இருந்த அபிஷேக பூஜைகள், அரைமணிநேரம் தாமதமாக தொடங்க வேண்டி வந்தது.

மழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் முன் அறிவிப்பால், சற்று முன்னரே கோவிலை வந்தடைந்தேன். பூஜாரி வந்தடைந்து, அகத்தியர் சன்னதியில், சிலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நிறைய அகத்தியர் அடியவர்கள் வந்திருந்தனர். அதில் பலரும், அம்மாவின் திரு நட்சத்திர பூஜையில் கலந்து கொண்டவர்கள். எனவே அனைவருக்கும் வணக்கம் கூறி, வரவேற்று, அபிஷேக சாமான்கள் இருக்கும் இடத்திற்கு சென்று ஏதேனும் வேலை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தால், பலர் அமர்ந்து அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம், பல பெண்கள் அமர்ந்து, பூக்களை, துளசியை ஆய்ந்து கொண்டிருந்தனர்.

நிமிர்ந்து பார்த்தேன். மழை மேகம் இருந்தாலும், மழை பெய்யாது என்று தோன்றியது. இருந்தாலும், அகத்தியப்பெருமானே! என மனதுள் அழைத்தேன்.

கூட்டம் வந்து கொண்டே இருந்தது. பல அடியவர்களும், முன்னரே அகத்தியர் சன்னதிக்கு முன் அமர்ந்து இடம் பிடித்துக் கொண்டனர். அவர் சன்னதிக்கு முன் ஒரு 25 அடியவர்கள் அமர்ந்த உடனேயே நிறைந்து போய் மற்ற அனைவரும் வேறு பல இடங்களில் அமர வேண்டி வந்தது.

ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்ட ஒரு அடியவர் வந்து, "இம்முறை விட்டுவிட்டோம்! அடுத்த முறை, மிகப்பெரிய திரை முருகன் சன்னதிக்கு பக்கத்தில் வைத்து, கேமரா வைத்து ஒளிபரப்புவோம்! அப்படியானால் வருகிற எல்லோருக்கும் பார்க்க முடியும்!" என்றார்.

அதுவும் உண்மை தான்! இங்கு பக்கத்தில் அரை மணிநேரத்தில் அந்த ஏற்பாட்டை செய்து தருகிற ஆட்கள் இருக்கிறார் என்றால், இப்பொழுதே முயற்சிக்கலாமே என்றேன்.

அது சாத்தியமில்லை. ஆள் கிடைத்தால் கூட எல்லாம் பொருத்தி முடிய இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

ஒரு சுற்று திரும்பி பார்க்க, கூட்டம் கூட்டமாக அடியவர்கள் வந்து கொண்டிருந்தனர். வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு உழவாரப்பணி செய்து கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் பிரசாதம் தயாரிப்பதை, "அகத்தியப்பெருமானின் இறையருள் மன்றம், மதுரை" அடியவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அகத்தியர் மைந்தன் திரு.பரமசிவத்தை அணுகி, அய்யா! நல்ல கூட்டம் வருகிறது, அனைவருக்கும், பிரசாதம் உணவாக கொடுக்க வேண்டும்! பிரசாதம் தயாரிப்பவரை கூப்பிட்டு 500 பேருக்கு சமைக்க கூறுங்கள்" என தெரிவித்தேன். அவரும் திரும்பி ஒரு சுற்று பார்த்து அதற்கான ஏற்பாட்டை கவனித்தார்.

வந்த அகத்தியர் அடியவர்கள் அனைவரும், தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி வந்திருந்தனர். அதுவே நிறைய இருந்தது.

நீரில் கரைக்கப்பட்ட வித விதமான அபிஷேக பொருட்கள் சன்னதிக்கு முன் வரிசையாக வாளிகளில் வைக்கப்பட்டது. ஒவ்வொரு அடியவரும் போட்டி போட்டுக் கொண்டு அகத்தியப்பெருமானின் அபிஷேகத்துக்கு பொருட்களை கொண்டு வந்து வைத்தனர். 

எட்டிப் பார்த்தால் கூட அபிஷேகத்தை முழுவதும் பார்க்க முடியாது, கடைசியில் யாரிடமாவது அனுமதி கேட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று விலகி நின்று விட்டேன்.

இதற்கிடையில், கோபுர விக்கிரகங்களுக்கு போடுவதற்கான பூமாலைகள் வந்து சேர்ந்தது. (அகத்தியர் & லோபாமுத்திரா தாய், திருமூலர், அருணகிரி நாதர், பிரம்மா, தக்ஷிணா மூர்த்தி, பெருமாள் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.) அபிஷேகம் தொடங்குகிற மனநிலையில் பூஜாரி இருந்ததால், அபிஷேகம் முடிந்து, அலங்காரத்துக்கு முன் பூமாலையை சாற்றிக்கொள்ளலாம் என்று பூஜாரி தீர்மானித்தார்.

அகத்தியர் இறையருள் மன்ற அடியவர்கள், மேலும் ஒன்றிரண்டு அடியவர்கள் ஒப்புதலுடன் அபிஷேகத்தை 5.30 மணிக்கு பூஜாரி தொடங்கினார்.

சற்று நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தேன். ஏற்கனவே அறிமுகமான அடியவர்கள், வந்து அபிஷேகம் பார்க்க முடியவில்லை என்று கூறியவுடன், நாம் விலகி நிற்போம், முன்னே அமர்ந்திருப்பவர்கள் அபிஷேகத்தை கண்டு திருப்தி அடையட்டும், பின்னர் நாம் பார்க்கலாம், என கூறி உற்சாக மன நிலையை உருவாக்கினேன்.

மனதுள் என்னனென்னவோ எண்ணங்கள் ஓடியது. வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது, குருநாதரிடம், தாங்கள் வந்திருந்து உங்கள் சேய்களை வாழ்த்தி அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள், ஆசீர்வதியுங்கள் என பிரார்த்தித்திருந்தேன்! ஆனால் இப்பொழுது, கை கூப்பி உங்கள் இருப்பையும் தெளிவு படுத்துங்கள் என பிரார்த்தித்தேன்.

இதற்கிடையில், அடியேனின் ஒரு சில நண்பர்கள் வந்து பேசத்தொடங்கினார். இன்றைய தினம் அமைதியாக பேசாமல் இருக்க முடியாது என்று உணர்ந்த அடியேன், அவர்கள் கேள்விக்கு பதிலளித்து, ஒரு சில அனுபவங்களை பதிலாக கூறினேன்.

இதற்கிடையில், ஒரு அடியவர் வந்து "அய்யா! மாரியம்மன் சன்னதி முன் விளக்கேற்ற வேண்டும்! வாருங்கள் என அழைத்தார். ஒரு சிலருடன் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மற்றவர்களுக்கும் விளக்கேற்ற வாய்ப்பு கொடுத்தேன். திடீர் என நினைவுக்கு வந்ததால், அழைத்து சென்ற நண்பரிடம், "ஏற்கனவே அகத்தியப்பெருமான், நாடியில் வந்து, சும்மா விளக்கேற்றினால் மட்டும் போதாது, இதன் மகத்துவத்தை நீ அனைவருக்கும் உரைக்க வேண்டும், இல்லயேல் உனக்கு கர்மா சேர்ந்து விடும், என கூறியுள்ளார். ஆகவே அனைவருக்கும் இவ்விளக்கேற்றும் முக்கியத்துவைத்தை நீங்கள் விளக்குங்கள்!" என்றேன். அவரும் கூறத்தொடங்கினார்.

என்னவோ, விளக்க முடியாத ஒரு குளிர்ச்சியான உணர்வு எங்கும் நிறைந்தது. குருநாதர் வந்துவிட்டார் போலும் என்று நினைத்தவுடன், நல்ல சந்தன வாசனை, ஜவ்வாது வாசனையுடன் கலந்து காற்றில் மிதந்து சென்றது. இந்த இரண்டு வாசனைகளும் அகத்தியப்பெருமானுக்கு மிக பிடித்தமான வாசனைகள் என்பதால், எங்கு குருநாதரை தரிசிக்க சென்றாலும், வாசனாதி திரவியங்களில் இவைகளை வாங்கி செல்வது அடியேனின் வழக்கம். இம்முறை அவருக்கு கொடுக்க வேண்டும் என கொண்டு வந்ததை கூட பூஜாரியிடம் கொடுக்கவில்லை. தனியாக பையில் வைத்திருந்தேன். ஆகவே, யாம் வந்துவிட்டோம் என்பதை இவ்வாசனைகள் வழி உணர்த்துகிறார் என்று உணர்ந்தேன். மிக்க நன்றி! என மனதுள் கூறி ஆனந்தம் அடைந்தேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!  

26 comments:

  1. ஓம் தத் புருஷாய வித்மஹே சிவபுத்ராய தீமஹீ தந்நோ அகஸ்திய சித்த ப்ரஜோதயாத்
    ஓம் அகத்தியர் திருவடிகளில் சரணம்
    ஓம் அகதீசாய நம

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. அருமை ஐயா அருமை ஓம் அகத்தீசாய நமக ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா சமேத அகத்திசாய நமோ நம🙏

    ReplyDelete
  6. ஐயா 🙏 waiting for Agasthiyar ayyan next arul ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  7. ஐயா தங்கள் பதிவிற்காக காத்திருக்கிறோம். 🙏🙏🙏

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா 🙏
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

    ஐயா எல்லாம் நலமா

    ReplyDelete
  9. Ayya
    How are you?
    No updates these days,I am really worried,I hope ur doing good.
    Take care ayya
    We are waiting for new updates please
    Thanks
    Subha

    ReplyDelete
  10. Ayya vanakkam
    How are you?
    Hope you are doing good,we are really worried about you ayya,there is no new updates in our websites
    Please take care we are all waiting for your updates ayya
    Thanks
    Subha

    ReplyDelete
  11. Anbu aiiya. Pathivigal vendi nirkirom. Arul koorndhu arulavum

    ReplyDelete
  12. ஓம் ஸ்ரீ லோபாமுத்ர சமேத அகத்திசாய நமோ நம

    ReplyDelete
  13. ஏன் இன்னும் புதிய பதிவுகளை இட வில்லை?

    ReplyDelete
  14. I am eagerly waiting for new வாக்கு

    ReplyDelete
  15. Yen ayya innum veru pathivu pathividavillai anbare

    ReplyDelete
  16. Ayya... waiting for next arul om agatheesaya namaha

    ReplyDelete
  17. Om Agatheesaya Namaha! Waiting for next part ayya!

    ReplyDelete
  18. சார் வணக்கம்! பதிவு பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது! தாமதமான காரணம் தெரியவில்லை! குருவருள் வேண்டும்! ஓம் அகத்தீசாய நமஹ!

    ReplyDelete
  19. சார் வணக்கம்! பதிவு பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது!
    தாமதத்திற்கான காரணம் தெரியவில்லை!
    குருநாதர் அருள் வேண்டும்! ஓம் அகத்தீசாய நமஹ!

    ReplyDelete
  20. ஐயா சித்தன் அருள் தொடருக்காக காத்திருக்கிறோம். 🙏🙏🙏

    ReplyDelete
  21. Daily I am checking this page please update

    ReplyDelete
  22. Om Agatheesaya Namaha! Ayya, happy to see all the comments after a long time. Soon, wish we get posts as before. Praying for your good health.

    ReplyDelete
  23. Vanakkam aiya. How are you and janakiraman aiya. Waiting for Agasthiyar vakku. Our namaskaram 🙏

    ReplyDelete
  24. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete