19/1/2024 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு
ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!!
அப்பனே நலன்கள் அப்பனே உலகத்தோர்க்கு !!!!!!!!!!
அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இறைவன் நிச்சயம் அப்பனே பார்த்து பார்த்து ஆனாலும் ராமனுடைய பிறவி அப்பனே சரித்திரமானது!!!!!!!
ஏன்? எதற்கு அப்பனே எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் சொல்கின்றேன் அப்பனே!!!!
இதையென்று அறிய அறிய அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட அப்பனே எடுத்துரைத்து விட்டேன் அப்பனே அதாவது இறைவனே மனித ரூபத்தில் பிறந்தால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல கஷ்டங்கள் அப்பனே அனுபவிக்க வேண்டும் அப்பனே இதுதான் உண்மை!!!!!!!
அப்பனே இதனால் தான் அப்பனே இவை எடுத்து கூறவே அப்பனே நிச்சயம் இறைவன் அதாவது மனித ரூபத்தில் பிறந்து அப்பனே வளர்ந்து பல இன்னல்கள்!!!!
ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வாறு நீதி நேர்மை தர்மம் கடைப்பிடிப்பதன் மூலம் அப்பனே இறைவன் அப்பனே அருகிலே இருந்தான்!! அப்பனே!!!
இறைவன் அனைத்தும் செய்தான் அப்பனே!!!
ஆனாலும் கஷ்டங்கள் வந்தவை ஆனாலும் அதை எதிர்த்து நிற்கும் துணிவையும் அதாவது பின் மன தைரியத்தையும் அப்படி அறிந்தும் கூட இறைவன் அருகிலே இருந்தான் அப்பனே!!! இதுதான் அப்பனே!!!
இவையெல்லாம் சூட்சுமமாகவே வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே!!!
அப்பனே அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே ஒரு பெண்மணி இப்படி வாழ்ந்தால் தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது!!!!
மழை வா!!!!!!!! என்று சொன்னால் வந்துவிடும்!!!
மழை அறிந்தும் போ என்று சொன்னால் போய்விடும் அறிந்தும் இவையெல்லாம் அப்பனே இதனால் நிச்சயம் ஒரு பெண்மணியும் கூட!!!
ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் சீதா தேவியோ !!! இறைவனுடைய குழந்தை!!!
ஆனாலும் அப்பனே இறைவனின் குழந்தைக்கே இவ்வாறு நிலைமை என்றால் அப்பனே நிச்சயம் பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே!!!!
அப்பனே இதுதான் விதி!!!!
அதனால் அப்பனே இதை யாங்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே!!!!!
அதாவது மனிதன் அதாவது எதை என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! பின் புரிந்து வாழ கற்றுக் கொண்டால் அப்பனே எளிதில் அனைத்தும் நிறைவேறும் என்பேன் அப்பனே!!!!
இறைவனுடைய குழந்தையாக இருந்தாலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அப்பனே கவலைகள் அதாவது இப் புவிதன்னில் பிறந்து விட்டால்!!!!!!
ஆனாலும் அப்பனே நலன்கள் அப்பனே பின் நிச்சயம்......பின். அயோத்தியில் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஞானிகளும் ரிஷிகளும் அப்பனே மறைமுகமாக வந்து அப்பனே பல பல பல வழிகளிலும் கூட அப்பனே இதை அதை என்றெல்லாம் அப்பனே யான் இங்கு பின் எதையும் குறிப்பிடவில்லை அப்பனே!!!
இப்படி வாழ்ந்தால் அப்பனே நிச்சயம் பின் உலகத்தில் ஜெயிக்கலாம் வரலாறு பேசுமப்பா !!
அவ்வளவுதான் அப்பனே!!!
மற்றவை எல்லாம் அவை இவை எதை என்றெல்லாம் யான் இங்கு தெரிவிக்கவில்லை!!! அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!!
நீதி நேர்மை தர்மம் அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே உழைப்பு எதை என்றும் புரிய புரிய அப்பனே இவைதன் புரிந்து கொள்ளவே இறைவன் அப்பனே மனிதனாக பிறந்து பல வழிகளிலும் கூட அப்பனே இன்னல்கள் பட்டுப்பட்டு அப்பனே வரலாற்றை அறிந்தும் அறிந்தும் கூட!!!
இதனால் அப்பனே பல ரிஷிமார்களும் குருமார்களும் கூட அப்பனே நிச்சயம் அயோத்தி க்கு வருவார்களப்பா!!!!
அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இன்னும் இன்னும் அப்பனே
வளிமண்டலத்தில் பின் அப்பனே பின் நெருப்பு பிழம்பாகவே அப்பனே கிரகம்!!! அனைவருக்கும் தெரிந்ததே!!!!
ஆனாலும் அப்பனே யாங்கள் ஏன் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது சூரியனும் கூட எப்படி என்று நீங்கள் அறிவீர்கள் அப்பனே
அதாவது அப்பனே பின் எரிந்து கொண்டே இருக்கும் அப்பனே!!! அவைதன் ஒளி அப்பனே அனைத்தும் அப்பனே அதாவது நாம் வசிக்கின்றோமே இப்பொழுது அப்பனே இங்கு படுமப்பா!!!!!
அப்பனே எதை என்றும் கூட அதை தன் ஈர்க்கும் சக்தி அப்படியே வைத்து கொண்டால் நலன்கள் அப்பனே மிக்க மிக்க.... அவைதானப்பா தீபங்கள்!!!!! என்பதெல்லாம் அப்பனே!!!
(சூரியனிடம் இருந்து வரும் ஒளியின் சக்தியை வீட்டில் ஏற்றும் தீபங்கள் ஈர்த்து சக்தியை கூட்டும்)
தீபங்கள் ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே நெருப்பிற்கு அவ்வளவு சக்திகளப்பா!!!!
இதனால் தான் தீபம் அப்பனே அறிந்தும் கூட ஏற்றுங்கள் ஏற்றுங்கள் என்றெல்லாம்!!!!
ஆனாலும் அப்பனே இதன் இன்னும் தத்துவங்களை கூட யான் வரும் காலங்களில் விளக்குவேன் அப்பனே!!!!!
ஏனென்றால் சிறிது சிறிதாக பின் விளக்கம் அளித்தால் தான் அப்பனே அனைத்தும் புரியும் என்பேன் அப்பனே!!!
அனைத்தும் ஒரே பின் அப்பனே எதை என்று கூட வரிசையில் சொல்லி விட்டால் புத்திகள் மங்கிபோகும் என்பேன் அப்பனே!!!!
இதனால் அப்பனே தீபம் ஏற்றினால் அவ் ஒளியானது அப்பனே அதாவது நெருப்பும் நெருப்பும் அப்பனே சேர்ந்தால் அப்பனே ஒரு ஒளி எதிரொலிக்குமப்பா!!!!!!
அப்பா!!!!!! அது தான் அப்பா பின் எதை என்று அறிய அறிய ஆன்மா என்று வைத்துக் கொள்ளலாம் அப்பனே!!!
அது பின் நிச்சயம் அப்பனே அதாவது. உள்ளம் பெரும் கோயில்.. என்கின்றார்களே அப்பனே அது உள்ளத்தில் புகுமப்பா அப்பொழுது நல் எண்ணங்கள் வரும் அப்பனே!!!! அறிந்தும் கூட
அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒளி ரூபமாகவே இறைவனை தரிசிக்கலாம் என்றெல்லாம் அப்பனே இன்னும் சொல்வேன் அப்பனே
ஏனென்றால் அவ் அவ் திருத்தலங்களுக்கு சென்றால் தான் அப்பனே அங்கு செப்பினால் தான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய எவரையும்!!!...........(கர்மா அண்டாது)
பின் இன்னும் புண்ணியங்கள் அப்பனே நலன்களாகவே!!!!!
அதை படிப்பவருக்கும் அப்பனே எவை என்று கூட ஓதுபவருக்கும் அப்பனே நிச்சயம் அவ் அவ் திருத்தலங்களில் கூட படித்தால் அப்பனே அதனால் தான் அப்பனே அவ் அவ் திருத்தலங்களுக்கு செல்ல சொல்லி அப்பனே நீங்கள் செல்லா விடிலும் எதை என்று அறிய அறிய எவை என்று கூட பின் நல்விதமாகவே இவந்தனை அனுப்பி
(அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை திருத்தலங்களுக்கு அனுப்பி)
அப்பனே அதன் மூலம் புண்ணியங்களை உங்களுக்கும் கூட சேர்த்து வைத்து கொண்டிருக்கின்றேன் அப்பனே
இதனால் அப்பனே பின் அனைத்திற்கும் மேலானது அப்பனே எவை என்று கூற அன்பு என்பதை கூட!!!
அதனால் தான் அப்பனே அனைவருக்குமே நல்லதாகட்டும் என்பதே சித்தர்களின் தீர்ப்பு!!!!
அதனால் தான் அப்பனே
கை விடுவதும் இல்லை அப்பனே உங்களையும் கூட
இதனால் தான் அப்பனே இதனால் அன்றைய தினத்தில் தீபம் ஏற்றுங்கள் அப்பனே!!!!
22/1/2024 அயோத்தி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பிராண பிரதிஷ்டை தினம்)
நிச்சயம் அப்பனே அதாவது சுந்தரகாண்டத்தையும் பாராயணம் செய்யுங்கள் அப்பனே நலங்களாகவே!!!
பின் ராம ஜெபத்தையும் கூட அப்பனே ஸ்ரீ ராம ஜெயம் என்றெல்லாம் கூட அப்பனே கூறுங்கள் அப்பனே இப்படி கூறிக் கொண்டு வந்தால் அப்பனே அனுமானுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே ராமன் பிறந்து விட்டான் அப்பனே !!
ஆனாலும் சனியவன் கூட பின் அறிந்து கூட ஒரு ஜென்மத்தில் என்னவென்பது என்பதை கூட ஆனாலும் பின் பிறந்து விட்டானே அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய பின்னாலே சனியவனும் வந்துவிட்டான் அப்பனே!! அறிந்தும் கூட!!!
நிச்சயம் அதாவது நீதி நேர்மை தர்மம் என்றெல்லாம் அவ்வாறு தான் நிச்சயம் சனியவன் கூட எதை என்று நிரூபிக்க கஷ்டங்கள் கொடுக்கவே!!!!
ஆனாலும் இறைவன் கூட அப்படியே ஆகட்டும்!!!
நிச்சயம் உன்னால் முடிந்ததை நீ பார்!!!
என்னால் முடிந்ததை யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று இறைவனும் கூட சரியாகவே!!!
ஏனென்றால் பின் சனியவனும் தயங்கி!!!!!.......
இறைவா!!!!! நீயே இது போல் சொன்னால் எப்படி????????
ஏனென்றால் எந்தனுக்கு இட்ட கட்டளை!!!!
அது போல் நீதி தர்மத்தை எதை என்று அறிய அறிய எவை என்று கூட சரியாகவே நீதிபதியாக இருந்து யான் அறிந்தும் கூட அனைத்தும்!!!!!......எந்தனுக்கு இவ்வாறு தான் விதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம்!!!!
(ஒவ்வொரு கிரகங்களுக்கும் இறைவன் இவ்வாறு தான் செயல் பட வேண்டும் என்ற கட்டளையின் படி சனி பகவானுக்கும் நீதிபதியாக இருந்து செயல் பட வேண்டும் என்ற விதி)
சரி பார்ப்போம் என்று பின் அவதாரமாகவே அறிந்தும் கூட!!!
இவைதன் கூட விளக்கமாக எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!
மூலன் சொன்னான் அப்பனே (திருமூலர்)
அவந்தன் முட்டாள் இல்லை அப்பனே!!!
அறிந்தும் கூட அப்பனே இறைவன் ஒன்றே என்று!!!
அவையெல்லாம் கூட வரும் காலத்தில் நிரூபிப்பேன் அப்பனே!!!
ஆனால் இப்பொழுது சொன்னாலும் அவை பொய் இவை பொய் என்றெல்லாம் என்று சொல்வதற்கு என் பக்தர்களே தயாராக இருக்கின்றார்களப்பா!!!!
அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!
அதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே இறைவன் அருகில் இருந்தும் அப்பனே ஆனாலும் பின் ராமனும் எதை என்றும் அறிய அறிய பின் கிரகம் தான் கிரகங்கள் தான் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று!!!!
ஏனென்றால் மனிதனுக்கு இதை தெரிவிக்க வேண்டும் அறிந்தும் அறிந்தும் கூட!!! எதை என்று அறிய அறிய இதனால் கிரகத்தை வெற்றி கொள்ள நிச்சயம் அறிந்தும் கூட நீதி நேர்மை தர்மம்... இவைதனை கடைபிடித்தால் தான் கிரகங்களை கூட வெற்றி கொள்ள முடியும்!!!
அப்படி நிச்சயம் பின் செயல்படாவிடில் பின் தோல்விகளில் தான் முடியும் என்பவையெல்லாம்!!
நிச்சயம் ஏற்றங்கள் மாற்றங்கள் என்பவையெல்லாம்!!!! இதனால்தான் போராட்டமே நடந்தது என்பேன் அப்பனே சனிகிரகம் எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாத அளவிற்கும் கூட!!!
அதனால் அப்பனே சனியின் தாக்கம் எதை என்று அறிய அறிய எவை என்று பின் தானும் அருகிலேயே இருந்து
பல இன்னல்களையும் கூட எதை என்று அறிய அறிய
ஆனால் இறைவன் விட வில்லை அப்பனே எதை என்று கூட!!!
கடைசியில் அப்பனே நீங்கள் அனைத்தும் உணர்ந்ததே அப்பனே!!!
புதுமையான விஷயங்கள் சொல்வேன் அப்பனே!!!
பழைய விஷயங்கள் தேவையில்லை
இதனால் அப்பனே தீபத்தின் மகிமை அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன்? அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல ஹோமங்கள் செய்கின்றார்கள் அப்பனே!!!!
ஆனாலும் தீபம் ஏற்றுகின்றார்களே அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே சிறிது யோசித்தாலே அப்பனே பலங்கள்!!!! அறிந்தும் கூட !!!
இதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அதே போல் அப்பனே பின் ராம நாமமே எனும் துவங்கும் பாடலை கூட நிச்சயம் பாடிக்கொண்டே இருங்கள்!! அப்பனே!!!
(ராம நாமமே நீ துதி மனமே சீதாராமனை நீ துதி மனமே ஷேமமுறவே நீ தினமே
வாதனைகள் பல சோதனைகள் பல யாவுமே நாதனை நினைந்திடில் நாடுமோ ரகுநாத்தை நினைந்திடில் நாடுமோ??? பிரபு நாதனை நினைந்திடில் நாடுமோ ?? பூமியை பொன்னை பூவையரையும் நீ பூஜித்து பின் புண்ணாகாமலே
ராம நாமமே நீ துதி மனமே சீதாராமனை நீ துதி மனமே!!!)
அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் பஞ்சதீபம் அறிந்தும் கூட ஏன் எதற்கு இவையெல்லாம் ஏற்றுகின்றீர்கள் என்பதை எல்லாம் அப்பனே இப்பொழுது அனைவருமே சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே பின் இவ்வாறு ஏற்றுங்கள் அவ்வாறு ஏற்றுங்கள் என்று அப்பனே
ஆனால் உண்மையை அப்பனே விஞ்ஞானபூர்வமாகவே நிரூபிக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே இன்னும் இன்னும் பல வாக்குகளிலும் கூட.
அதனால் இன்னும் அப்பனே இவை அறிந்தும் அறிந்தும் அதன் ( கும்பாபிஷேகத்திற்கு முன்) முன்னர் இருந்தே அப்பனே தீபங்கள் பின் அறிந்தும் கூட அதனால் பின்னர் ஒரு ஐந்து நாட்கள் வரை அப்பனே நிச்சயம் அன்னத்தை அளியுங்கள் பின் அதாவது பின் இப்படி வாழ்ந்தால் தான் வெற்றி கிடைக்கும் நிச்சயம் தர்மம் நீதி அறிந்தும் பொய் சொல்லாமை இவையெல்லாம் இருந்தால்தான் அதாவது நிச்சயம் பின் வெற்றி காண முடியும் என்றெல்லாம் யோசித்து பின் நிச்சயம் சுந்தரகாண்டத்தை பின் பாராயணம் செய்து வாருங்கள்!!!
நிச்சயம் என்றெல்லாம் எடுத்துக் கூறி அன்னத்தையும் ஈய்ந்து நிச்சயம் பல வழிகளிலும் மக்களுக்கு உண்மை நிலையை தெரிவியுங்கள் போதுமானது அப்பனே!!!!
இதில் எதையும் சம்பந்த படுத்த தேவையில்லை அப்பனே
இதனால் அப்பனே அறிந்தும் கூட இப்படி இருந்தால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே கிருஷ்ணன் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் பல வகையிலும் கூட இத்தனை தெய்வங்கள் எதற்கு என்பவை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே
ஏனென்றால் இறைவன் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய ஒவ்வொரு ரூபமாக வந்து வந்து இப்படி இருந்தால் தான் வெற்றி!!!
இவ்வுலகத்தில் ஜெயிக்க முடியும் என்பதையெல்லாம் நிரூபித்தான் அப்பனே!!!
நிச்சயம் அப்பனே இவ்வுலகத்தில் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் சொல்வோம் அப்பனே நலன்களாக நலன்களாக வெற்றிகள் அப்பனே உண்டு
அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
jai shree Ram
ReplyDeletejai shree Ram
Ja Shree Ram
Om Jai Shree Ram. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete