​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 10 January 2024

சித்தன் அருள் - 1552 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு - பாகம் -1



16/12/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : சபரிமலை மணிகண்டன் சன்னிதானம். 

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே எம்முடைய ஆசிகள் அப்பனே எப்பொழுதும் அப்பனே கிடைத்துக் கொண்டே இருக்கும் அப்பனே நலன்களாகவே!!!!

அப்பனே எவை என்று அறிந்தும் அறிந்தும் கூட இவையெல்லாம் அப்பனே அதாவது இவ் மணிகண்டனுக்கு அப்பனே பல வழிகளையும் கூட யான் காட்டியுள்ளேன் அப்பனே!!!

அதனால் யான் வந்துவிட்டால் நிச்சயம் அப்பனே பல பல வழிகளிலும் கூட இவனால் அனைத்தும் செய்ய இயலும் அப்பனே

ஆனாலும் சோதிப்பதில் வல்லமை உடையவன் அப்பனே

ஆனாலும் அப்பனே சோதித்து சோதித்து தந்து விட்டால் எவரும் அசைக்க முடியாதப்பா சொல்லி விட்டேன் அப்பனே

ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பல வகையிலும் கூட யான் உரைப்பேன் அப்பனே!!!

குறைகள் இல்லை!!!

அப்பனே நலங்களாக அதனால் அப்படி பல வழிகளிலும் கூட இவந்தனுக்கு பல பாடல்களை கூட அப்பனே பல பக்தர்களுக்கு யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே

ஏன் எதற்காக அப்பனே அப் பாடல் வரிகள் அப்பனே ஒவ்வொன்றும் அப்பனே அற்புதமானவை!!!!

அப்பனே அப்படி இருந்தால் தான் இவனுடைய சக்திகள் கிடைத்து அப்பனே உயர் நிலையை பெறலாம் அப்பனே

ஆனாலும் ஒன்றே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே இவந்தன் எதை என்று அறிய அறிய அதிகமாக அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே புரிய வைத்து தான் கொடுப்பானப்பா!!! 

அப்படி கொடுத்து விட்டால் அப்பனே அசைக்க முடியாது அப்பனே!!!! எதை என்று அறிய அறிய

பல ராஜாக்களையும் கூட யான் பார்த்திட்டேன் அப்பனே.... எதை என்று உணர்ந்து உணர்ந்து

அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே யானே எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்தான் அப்பனே இங்கு செல் !! அங்கு செல் !! என்றெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

எப்பொழுது இறைவன் வருவான்??? எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் அப்பனே

ஆனாலும் கருணை மிக்கவனப்பா !!! பாசத்திற்கு அடிமையானவனப்பா!!!!

ஆனாலும் கண்கண்ட எதை என்றும் புரிய புரிய அப்பனே கண்கூடாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே நடந்து வருவானப்பா!!!!

அப்பனே மனிதன் பால் அப்பனே பக்தி சிறந்து அதாவது பக்தியில் சிறந்து விளங்குபவனை முதுகில் தட்டி அப்பனே எதை என்று அறிய அறிய தெரியாமல் போய்விடுவானப்பா எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!!

(கருணைமிக்க ஐயப்பன் பாசமிகுந்த ஐயப்பன் உண்மையான பக்தியை காட்டும் பக்தர்களுக்கு அவர்கள் மீது அன்பு காட்டுவதற்கு நேரடியாக வந்து அவர்களை முதுகில் தட்டி கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தி செல்வார் ஆசிர்வாதம் செய்வார்)

இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒன்றை கூட யான் சொல்லிவிடுகின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது அப்பனே எந்தனுக்குத் தான் சொந்தம் என்று சொன்னானே அப்பனே அப்பொழுதே நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் தான் அவந்தனுக்கு சொந்தமானதை அவனிடத்திலே சேர்க்க வேண்டுமே தவிர அப்பனே அப்படியே எடுத்துக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லையப்பா!!!! 

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து 

(மாமலை சபரியில் மணிகண்டன் சன்னிதானத்தில் மணி எந்தனுக்கே சொந்தம் என்று மனித உருவில் வந்து நடத்திய லீலை

அப்பனே எந்தனுக்கு தான் சொந்தம் என்று சொன்னானே என்று குருநாதர் கூறிய வரிகளை கவனித்தீர்களா

அவந்தனுக்கு சொந்தமானதை அவனிடத்தில் தான் சேர்க்க வேண்டும்.... என்றும் குருநாதர் அகத்திய பெருமான் கூறியதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!!!!

மணிகண்டன் வந்து நடத்திய லீலை!!!!

அதற்கு முன்பாக சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்!!!!

மணிகண்டன்!!!!

கழுத்தில் மணியோடு கண்டெடுக்கப்பட்டவர்.

ஈசனால் கழுத்தில் மணியை அணியப்பெற்றவர்.

ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பன் உத்திர நட்சத்திரத்தில் உதித்த மணிகண்டன் உத்தர நட்சத்திரத்தின் சாதக தாரைகள் முறையே அனுஷம் உத்திரட்டாதி பூசம் ஆகும்.

அனுஷ நட்சத்திரத்தின் வடிவம் மணி!!!!

கானகத்தில் ஐயப்பனின் கழுத்தில் மணியை ஈசன் அணிவித்தார். கழுத்தில் மணியோடு இருந்த ஐயப்பன் மணிகண்டன் ஆனார்.!!!!

சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு இடது புறம் உள்ள மாளிகைபுரத்தம்மன் மஞ்ச மாதா என அழைக்கப்படும் தேவி சன்னதியின் பின்புறம் மணிமண்டபம் உள்ளது.

நம் குருநாதர் அகத்திய பெருமான் ஐயப்பனுக்கு பல உபதேசங்கள் செய்த இடம் இது.

இந்த இடத்தில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்வதோ அல்லது மந்திரங்கள் பாராயணம் செய்வதோ மிகவும் உகந்தது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சிறு சிறு மணிகளை நேர்த்தியாக வேண்டுதலாக நினைத்துக் கொண்டு விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று அதனுடனே இந்த மணியையும் அணிந்தோ அல்லது இருமுடி பையில் வைத்தோ வைத்துக் கொண்டு இந்த மணிமண்டபத்தில் வைத்து ஐயப்பனை நினைத்து மணியை கட்டுவார்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு.

அப்படி ஐயப்ப பக்தர்கள் கட்டும் மணியை மற்ற ஐயப்ப பக்தர்கள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவதும் உண்டு.

அவர்கள் நினைப்பது சபரிமலையில் இருக்கும் மணியை வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று

ஆனால் அது தவறு!!!

சபரிமலையில் ஐயப்பனை நினைத்து ஒருவர் கட்டும் மணியை மற்றவர் எடுத்துச் செல்லக்கூடாது!!!!

அது ஐயப்பனுக்கு சொந்தம்!!

இதை சபரிமலை செல்லும் சில பக்தர்கள் அறியாமல் தெரியாமல் எடுத்து வந்து விடுகின்றனர். 

இனிமேல் சபரிமலை செல்லும் பக்தர்கள் இது போன்ற காரியங்கள் செய்யக்கூடாது.

இதை ஒரு சம்பவம் மூலம் மணிகண்டன் நிகழ்த்திய லீலையை குருநாதர் கூறும் பொழுது மேலும் புரிந்து கொள்ள முடிந்தது.

அகத்தியர் மைந்தன் சுவடி ஓதும் திரு ஜானகிராமன் ஐயா சபரிமலை யாத்திரை சென்றபோது இரு மணிகளையும் கொண்டு சென்றார் மணிமண்டபத்தில் கட்டுவதற்கு!!!

அப்படி நல்லபடியாக ஐயப்பன் சன்னிதானத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இரு முடியை சமர்ப்பணம் செய்து விட்டு மணியை மணிமண்டபத்தில் கட்டலாம் என்று செல்லும் பொழுது உடன் வந்த மாலை அணிந்த ஐயப்ப பக்தர் ஒருவர் இந்த மணியை எனக்கு தாருங்கள் அங்கு கட்ட வேண்டாம் அப்படி கட்டினாலும் நான் எடுத்துக் கொள்வேன் நீங்கள் வைத்திருந்த மணி எனக்கு வேண்டும் என்று கிட்டத்தட்ட அடம் பிடிப்பது போல் நடந்து கொள்ள!!!!!

எங்கேயோ இருந்து விறுவிறுவென மாலை சந்தனம் திருநீறு தரித்து இவர்களை நோக்கி மணிமண்டபத்திற்கு அருகே வந்த ஒரு நபர் இது ஐயப்பனுக்கு சொந்தம் இங்குதான் மணியை கட்ட வேண்டும் என்னிடம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டு நான் கட்டிக் கொள்கின்றேன் என்று மட மடவென வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.

திரு ஜானகிராமன் அய்யாவும் உடன் வந்த நண்பரிடம் கவனித்தீர்களா!!!!

இறைவனுடைய சன்னிதானத்தில் நாமே இறைவனுடைய பொருளாகி விடுகின்றோம்!!!

நம்முடைய பொருள்

நமக்கு எனக்கு என்னுடையது என்று எதுவுமே கிடையாது என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு!!

சரி வாருங்கள் செல்வோம் என்று மணிமண்டபத்தில் இருந்து திரும்பவும் வந்துவிட்டார்.

மணியை எந்தனுக்கு தான் சொந்தம் என மனித ரூபத்தில் வந்து வாங்கிக் கொண்டு சென்றது ஐயப்பன் என்பதை குருநாதர் அகத்திய பெருமான் ஜீவநாடியில் வாக்குகளில் கூறிய பிறகு தான் தெரிந்தது.

உடனே இருந்த அடியவர்கள் அனைவரும் பட படத்து !!! வெட வெடத்து  !!!!

ஐயனே !!! ஐயப்பா!!!! மணிகண்டா !!!!!

சுவாமியே சரணம் ஐயப்பா!!!!

ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா !!!!!

மணிகண்ட பரம்பொருளே சரணம் ஐயப்பா!!!!!

சபரிகிரி சாஸ்தாவே சரணம் ஐயப்பா!!!!

என பக்தி முழக்கமிட்டு பரவசத்தில் ஆழ்ந்து போய் விட்டனர் !!!!!!!

அவந்தனுக்கு சொந்தமானதை அவனிடத்தில் சேர்க்க வேண்டுமே தவிர அப்படியே எடுத்துக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை அப்பா  !!!!!

மாலையிட்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மணியை வேண்டுதலுக்காக நேர்த்திக்காக கொண்டு செல்லும் ஐயப்ப பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்???

என்பதையும் என்ன செய்யக்கூடாது ????

என்பதையும் தெளிவாக குருநாதர் ஐயப்பன் செய்த லீலையின் மூலம் நம் அனைவருக்கும் தெரிவித்து விட்டார் அதை நாம் அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்)

குருநாதருடைய வாக்குகள் தொடர்கின்றது...........

இதனால் அப்பனே நன்றாகவே உண்டு உண்டு ஏற்றங்கள் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய

அனைவரையுமே பார்த்து விட்டான் அப்பனே மணிகண்டன்!!!

எதை என்றும் புரிய  புரிய அப்பனே

இன்றளவில் கூட அப்பனே ஏனைய தினங்களில் கூட அப்பனே அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் அப்பனே

ஆனாலும் சில மனிதர்கள் எதை எதையோ செய்து செய்து வருகின்றார்களப்பா!!!! 

எப்படியப்பா???

அதனால் அப்பனே ஆனாலும் கருணை மிகுந்தவனாக அப்பனே எதை என்றும் அறிய அறிய இக்கலியுகத்தின் உண்மைகளை யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!!

இக்கலியுகத்திலே அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு பெரிய பக்தன் அதாவது அப்பனே மணிகண்டனின் பக்தனப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவந்தன் மிக்க செல்வந்தன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே ஆனாலும் அவந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே அவ் மணிகண்டனை அவந்தன் பின் விட்ட பாடு இல்லை என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே வந்து கொண்டு இருந்தான் அப்பனே.... ஆனாலும் மணிகண்டனும் இவந்தனுக்கு கொடுத்தால் என்ன செய்வான்??? ஆனாலும் இவந்தனை எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இவந்தனை பொது சேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று இவ் மணிகண்டன்

ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் மனக்கவலைகளப்பா!!!

இல்லத்தில் அவன் மனைவியும் கூட அறிந்தும் அறிந்தும் கூட இப்படி செல்கின்றீர்களே பின் அதாவது சபரிநாதனை பார்க்க பார்க்க!!!

அறிந்தும் கூட

ஆனால் குழந்தை பாக்கியம் கிட்டவில்லையே!!!!

எதற்காக ??? அவந்தனை வணங்க வேண்டும் ?? என்று !!!

ஆனாலும் இல்லத்திலே பின் எதை என்று அறிய அறிய சண்டைகள் சச்சரவுகள்!!!

இதனால் ஆனாலும் ஓர் ஆண்டில் எதை என்று அறிய அறிய பின்பு அதையே நினைத்துக் கொண்டு வந்தான்!!!

(வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மண்டலகால நடைதிறப்பு சபரிமலை பயணத்தில் சபரிமலைக்கு வீட்டில் நடக்கும் சண்டையையும் குழந்தை பாக்கியம் இல்லாததையும் நினைத்துக் கொண்டு சபரி மலைக்கு வந்தார்)

குழந்தை பாக்கியம் இல்லையே!!!!!

இவ்வாறு மனைவி எல்லாம் பின் வேண்டாம் என்று

( மலைக்கு செல்ல வேண்டாம் என்று)

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் மன கவலையுடனே!!!

எப்படி இருந்தான் தெரியுமா????

மணிகண்டனே !!!!!!!!!!!! சபரிநாதனே !!!!!!!!!!!!!

அனாதை ரட்சகனே !!!!!!!!!!

எதை என்று அறிய அறிய அனைவருக்கும் அனைத்தும் செய்கின்றீர்கள் ஆனால்  எந்தனுக்கு இப்படி செய்து விட்டீர்களே???? என்று!!!!

ஆனாலும் ஐயப்பன் உணர்ந்தான்!!!!!

ஆனாலும் சரி கொடுப்போம் என்று அறிந்தும் எதை என்று அறிய அறிய இங்கு வந்த தரிசனம் பார்க்க!!!!

ஆனாலும் அப்பனே தரிசனம் பார்த்திட்டு இவந்தன் எதை என்று அறிய அறிய சென்ற உடனே இல்லத்தை அடைந்த உடனே எதை என்று அறிய அறிய மனைவி ஒரு சந்தோஷமான விஷயத்தை சொன்னாளப்பா!!!!!!!

குழந்தை பாக்கியம் கிட்டியது!!!!!!!

(பெண் குழந்தை) 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய உணர்ந்து கொண்டான்!!!

அதாவது ஐயன் தான் கொடுத்தான் என்பதை கூட சரியாக உணர்ந்து கொண்டான்!!!!

அப்பனே தெளிவுகள் தெளிவுகள் பெற்று பெற்று அறிந்தும் அறிந்தும் எதை என்றும் கூட 

இதனால் அப்பனே அக்குழந்தையும் கூட பின் அதாவது மணிகண்டனின் குழந்தை போல !!!

ஆனாலும் மணிகண்டனுக்கு சந்தோசங்கள் அப்பனே

எதையென்று அறிய அறிய அப்பனே அவன் சொன்னான் இக் குழந்தை சபரிநாதன் தான் ஈந்தான்!!!! (கொடுத்தருளினார்)

அதாவது எதை என்று அறிய அறிய அதாவது இக் குழந்தை எதை என்று அறிய அறிய சரியான வழியிலே ஒவ்வொரு ஆண்டும் யான் நிச்சயம் அறிந்தும் கூட எப்படி சென்றாலும் இக் குழந்தையையும் அழைத்து செல்வேன் என்று!!!

( மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை)

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய ஓராண்டு ஆகியது அப்பனே ஈராண்டு ஆகியது அப்பனே!!! 

மூன்றாம் ஆண்டு தொடங்கியது அப்பா!!!!

அப்பனே ஒவ்வொரு ஆண்டும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இங்கு அழைத்து வருவான் அப்பனே!!!!

அக் குழந்தைக்கும் அப்பனே அளவு கடந்த பற்றப்பா!!!!!!!

பற்று!!! பற்று!!!! அப்பனே எதை என்று  உணர்ந்து உணர்ந்து அப்பனே இதனால் பற்றாயிற்று இதனால் அப்பனே அக்குழந்தையும் எப்பொழுது பார்த்தாலும் அறிந்தும் அறிந்தும்

சபரிநாதனே அனாதை ரட்சகனே !!!அனாதை ரட்சகனே  !!! பின் அன்னதான பிரபுவே!!!!!

என்றெல்லாம் நிச்சயம் அழைத்து அழைத்து இதனால் அப்பனே ஆனாலும் சிறுவயது எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் வயது பருவமடையும் வயதும் வந்ததப்பா!!!

( பெரிய பெண்ணாகும் பருவம்)

அதாவது கலியுகத்திலே இதுவும் நடந்ததப்பா!!!!

அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் அப்பனே அதாவது பின் அங்கிருந்து இல்லத்திலிருந்து வந்துவிட்டாள் அப்பா!!!

(சபரிமலைக்கு யாத்திரை தன் தந்தையோடு அந்த பெண் குழந்தையும் வந்துவிட்டது)

ஆனால் அப்பனே ஆனால் பருவமும் அடைந்து விட்டாள்!!!! அப்பனே

( யாத்திரை சமயத்தின் போது பருவமடைந்தாள் அந்த சிறுமி)

சபரிமலை வாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete