17/6/2023 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த பொது வாக்கு!
வாக்குரைத்த ஸ்தலம் : கிரிஜாத்மஜ் கணபதி மந்திர் லேன்யாத்ரி அஷ்ட விநாயகர் குகை கோயில். ஜூன்னார். புனே மகாராஷ்டிரா.
ஆதி அண்ணாமலையானையும் உண்ணாமுலை தேவியையும் மனதில் எழுப்பி வாக்குகளாக ஈகின்றேன் இடையனவன்!!!!
இன்னும் ஏனைய பிறவிகளிலும் கூட பிறந்தாலும் கூட மனிதனுக்கு நிச்சயம் புத்திகள் வராது!!!!!
வராது!!! அதனால்தான் குற்றங்கள் குறைகள் இன்னும் இன்னும் எதனை எதனையோ நோக்கியே மனிதன் நகர்ந்து கொண்டே இருக்கின்றான்
ஆனாலும் எவ் வளம்!!! நல் வளம்!!!! என்பவையெல்லாம் புரிவதில்லை மனிதனுக்கு!!
அதாவது பொன்னவன்!!!
(குரு கிரகம்)
பொன்னவன் என்கின்றவனை பற்றி இங்கு விளக்கமாக விவரிக்கின்றேன்!!!!
பொன்னவனுக்கு முதலில் மற்ற உயிர்களை கொன்று குவித்து நிச்சயமாய் பின் உண்டால் அதை நிச்சயம் குருவானவன் ஏற்க மாட்டான்!!!!
ஏற்கவும் போவதில்லை!!!
ஆனாலும் பல மனிதர்கள் மாமிசத்தை உண்ணுகின்றார்களே!!!!
அவர்களை மட்டும் ஏன் ?? நன்றாக வைத்து உள்ளீர்கள் என்பதை கூட மனிதன் கேட்பான்!!!
இது மனிதனுடைய புத்தி தான்!!!
ஏனென்றால் மனிதனுக்கு எட்டாத அறிவாகவே உள்ளது!!!!
ஆனாலும் மனிதன் புத்தி இதனால் நிச்சயம் ஆனால் அவர்கள் அனுபவிப்பதை எல்லாம் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.
ஏன்? எதற்கு?? என்றெல்லாம் தெரியாது இதனால் பொன்னவனின் முதல் ஆசிகள் பெற பின் அதாவது மாமிசத்தை நிச்சயமாய் விலக்க வேண்டும்!!!!
விலக்கி விட்டால் நிச்சயம் பொன்னவன் அனைத்து அருள்களையும் தருவான் இறைவனிடத்தில் சேர்ப்பான்.
ஆனால் அதை விட்டுவிட்டு அனைத்தையும் கொன்று தின்று வந்து விட்டு இறைவனை நோக்கினாலும் !?!?!?!?!!
இன்னும் சொல்வார்கள் அதாவது குரு பலம் வந்துவிட்டது!!!
அனைத்தும் ஆகுமாம் !?!?!!!?!
இவையெல்லாம் பின் போலி தான்!!!
குருபலம் வந்து கொண்டே தான் இருக்கும் !! பின் எவை என்று அறிய அறிய ஆனால் நல்லது நடக்கவில்லையே ஏன் மனிதா ????
குறை கூறி இன்னும் நினைத்து நினைத்து குறை கொண்டு தான் போகின்றாய் தாழ்ந்து தான் போகின்றாய் !!!
சரி!!!!!! யான் பல பல யுகங்களில் கூட அறிந்தும் அறிந்தும் கூட பார்த்து பார்த்து!!!
ஆனாலும் இதைத்தான் சொல்கின்றார்கள்!!! குரு பலத்தில் பின் திருமணங்கள் செய்தால் நிச்சயம் பின் தோற்காது என்று !!!
ஆனால் தோற்றுவிடுகின்றதே ??
ஏன்? எதற்காக ?? என்று யாராவது சிந்தித்தீர்களா??
ஜோதிடன் சொல்லிவிடுவான் குரு பலம் வந்து விட்டால் திருமணம் செய்யுங்கள் என்று !!!
ஆனால் திருமணம் செய்தவர்களிடம் எக் குற்றங்கள் ?? இருப்பது உங்களுக்கு தெரியாது!!
இதனால் அக்குற்றங்களோடு நீ சொன்னால் உங்களுக்கு அதாவது ஜோதிடம் சொல்கின்றானே அவந்தனக்கு தான் பாவம் பாவம்!!!
அவை மட்டும் இல்லாமல் அவந்தன் பாவத்தை தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் அவை மட்டும் இல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவருமே பாவம் சம்பாதித்து நோய் நொடியில் சிக்குகின்றார்கள்.
ஆனால் பாவம் புண்ணியம் எதை அறிந்து செப்பினாலே நிச்சயம் தோற்காது...
மனிதனின் நிலைமைகள் நிலைமைகள் இன்னும் வீழ்ந்துதான் கொண்டிருக்கின்றது ஏன் எதற்காக என்றெல்லாம் நிச்சயம் நிச்சயம் வரும் காலங்களில் யான் எடுத்துரைக்க போகின்றேன்...
அவை மட்டும் இல்லாமல் இப்பொன்னவனின் குணம் நன்றாகவே பொய் புறம் கூறுதல் பொறாமை இன்னும் அமைதியை காத்தல் அமைதியை காத்தல் என்பது குருவானவனுக்கு மிக்க மிக்க பிடிக்கும் என்பதை கூட யான் அறிவேன்!!!
நிச்சயம் இவ்வாறெல்லாம் இருந்தால்தான் குருவானவன் கூட நிச்சயம் நல்லது செய்வான்!!!
அவை மட்டும் இல்லாமல் குரு பலம் வந்து விட்டது
1 , 5 , 7. ,9. 11 , இவையெல்லாம் குரு பலமாம்!?!?!?!
( ஜாதக கட்டத்தில் ஒன்றில் ஐந்தில் ஏழில் ஒன்பதில் பதினொன்றில் குரு வந்தால் குரு பலமாம் !?!!!)
ஆனாலும் நிச்சயம் எப்பொழுது ஒருவனுக்கு பின் பிறந்த எவை என்று அறிய அறிய அதாவது ஜனனம் ஆகும் பொழுது
3, 6 ,8, 12, இதில் குரு உள்ளதோ அவந்தனுக்கு நிச்சயம் மோட்சகதி தான்.
( ஒருவர் பிறக்கின்ற நேரத்தில் குரு அவருடைய ஜாதக கட்டத்தில் மூன்றில் ஆறில் எட்டில் பன்னிரெண்டில் இருந்தால் மோட்ச கதி யோகம்)
இதனை யாருமே அறிவதில்லை!!!!!
ஆனால் ஆறில் மறைந்து விட்டால் குருவானவன் என்னென்ன பிரச்சனைகள் என்று பொய் கூறிக் கொண்டிருக்கின்றான்
எட்டில் மறைந்தால் இன்னும் வேதனையே என்று பொய் கூறிக் கொண்டிருக்கின்றான்
12 இல் மறைந்தால் இன்னும் கஷ்டங்கள் என்று பொய்கள் கூறிக் கொண்டிருக்கின்றான்
மறைவு என்பதே கிடையாதப்பா!! கிடையாது!!
எவை அறிந்து அறிந்து நீ செய்யும் வினைகளுக்கு ஏற்பவே கிரகங்கள் உன் பின்னாலே வரும்
ஒன்றை சொல்கின்றேன் அறிந்தும் அறிந்தும் கூட
திருந்துங்கள் இனியாவது!!!
பின் ஆனால் எதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பதையெல்லாம் தெரியாமல் மனிதனை ஏமாற்றி ஏமாற்றி சம்பாதித்து சம்பாதித்து கர்மத்தையும் சம்பாதித்துக் கொள்கின்றான் ஏன் எதற்காக என்று!!!!
இதனால் நிச்சயம் குருவானவன் நிச்சயம் எங்கிருந்தால் மோட்சம் என்பதை கூட யான் சொல்லி விட்டேன் நிச்சயம் அவை மட்டும் இல்லாமல் கிரகங்கள் அதாவது நீங்கள் செல்லும் பொழுது உங்கள் நிழல் உங்கள் பின்னே வரும் அதுபோலத்தான் நீங்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்பவே கிரகங்கள் உங்கள் பின்னாலே வந்து செய்கின்றது
ஆனால் அவை எங்களால் தடுக்க முடியும்!!! உண்மை நேர்மை சத்தியம் இறை அன்பு இவையெல்லாம் கடைபிடித்தால் யாங்கள் கிரகங்களை மாற்றி விடுவோம். பின்னாலே விடமாட்டோம் எதை என்று அறிந்து அறிந்து.
இன்னும் ஒரு படி சென்று கிரகங்கள் உச்சமாம் !?!?!?!?!?!!
அனைத்தும் நல்லது செய்யுமாம் !?!?!?!?!?!?
நிச்சயம் நல்லது செய்யாது!!!
நீ!! நீச்சனாக இருந்து பின் ஏன் கிரகங்கள் உச்சமாக இருந்தாலும் நீச்சம்தான் செய்யும்!!
நீ நீச்சம் அதாவது நீச்ச குணம் உன்னிடத்தில் இருந்தால் கிரகங்கள் உச்சம் ஆயினும் நீச்சம்தான் நிச்சயம் நீச்சநிலைக்கு தான் நீ செல்வாய்.
புரிந்து கொள்ளுங்கள்.
இதனால் அவை மட்டும் இல்லாமல் குருவானவன் எதை என்றும் அறிந்து அறிந்து அவனுக்கு ஏற்பவே நிச்சயம் செய்தால் அவந்தன் அதிக பலம் அதாவது உச்சம் பெற்று விடுவான்.
இதனால் அனைத்து நலன்களும் கூட நடக்கும்!!
இது கண் கண்ட உண்மை.
இதை சோதிக்கலாம் நீங்களே கூட இன்றளவும் குருவானவன் இன்னும் இன்னும் ஏனைய ஜாதகத்தில் கூட நிச்சயம் பின் தாழ்ந்தாலும் அதாவது நீச்சம் ஆனாலும் பகை ஆனாலும் நன்றாக இன்னும் கை குவித்து அதாவது பக்தியோடு வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏனென்றால் குருவானவனுக்கு அறிந்தும் அறிந்தும் கூட எப்படி ஆயினும் நல்லது தான் செய்ய வேண்டும் என்று அவனுடைய எண்ணம்.
ஆனாலும் முதலில் மாமிசத்தை நீக்க வேண்டும் நீக்கி விட்டு நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வாறு செய்தால்தான் குரு பகவானும் மனிதர்களுக்கு நல்லதையே செய்வான்.
அப்படி இல்லை என்றால் நிச்சயம் பின் மாறாதது.
அவை மட்டுமில்லாமல் குருவானவன் எதை என்றும் அறிய அறிய கேதுவான உடன் சேர்ந்தால் ஞானங்கள் பொழியும் ஞான பாதைக்கு அழைத்துச் செல்லும்
( குரு கேது சேர்க்கை)
அதாவது இறைவனே முன் நின்று வழி நடத்துவான்!!! ஆனால் கஷ்டங்கள் வருமே தவிர ஆனாலும் அதனையும் கூட இறைவனே நோக்கி நோக்கி அவை மட்டும் இல்லாமல் இறைவனை நேரில் சந்திக்க கூடிய பாக்கியமும் கிடைக்கும்.
ஆனால் இன்றளவில் ஆனாலும் அவையெல்லாம் எதை என்று அறிந்து அறிந்து பொய் கூறி பொய் கூறி இன்னும் இன்னும் பல பல வினைகள் சம்பாதித்து மீண்டும் பிறவிகள் எடுத்து என்ன பிரயோஜனம்???
இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது!!!!
இன்னும் எத்தனை பிறவிகளடா!! பிறப்பீர்கள் ??
பிறந்து பிறந்து வாழ்வீர்கள்???
வாழ்ந்து வாழ்ந்து ஒன்றும் தெரியாமலே போய் சென்று சென்று மீண்டும் வந்து வந்து !!!!!!......... உடனே இன்னும் திருந்தவில்லை என்றால் நிச்சயம் திருத்துவோம் என்றெல்லாம் சித்தர்கள் ஏங்கி!!!
ஆனாலும் இதை என்றும் அறிய அறிய ஆனாலும் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்!!!
ராகு கேதுக்களுக்கு நிச்சயம் கர்மத்தை அழிக்கும் சக்தி உள்ளது
ஆனால் இவை கட்டுப்படுத்தும் அளவிற்கு இன்னும் எதை என்றும் அறிய அறிய இன்னும் விளக்கங்களோடு சொல்கின்றேன்!!!!
இதை கட்டுக்குள்(ராகு கேது) வைக்கும் பின் ஞானி!!!!!!!!!
எவ் ஞானி??!!!!!
கணபதியே!!!!!!!!
நிச்சயம் ராகுவும் கேதுவும் நடக்கின்ற பொழுது கணபதியை அனுதினமும் துதித்து வந்தாலே பின் விநாயகப் பெருமானின் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் பின் விநாயகர் அகவலை ஓதி வந்தாலே போதுமப்பா !!!!!!
போதுமானது நிச்சயம் ராகுவும் கேதுவும் நன்மைகளே செய்யும்.
ஆனால் ராகுவும் கேதுவும் கூட பின் மாயையில் இழுத்து செல்லும்..... ஏன் எதற்காக என்றால் பார்ப்போம் இவந்தனை ஓர் வழி.... மாயையில் நோக்கி அழைத்துச் செல்வோம்!!!
மீறினும் இறைவன் இறைவனைப் பிடித்துக் கொண்டால் விட்டு விடுவோம் என்று!!!!
இதனால் முதலில் மாயை இழுத்துச் செல்லும் பொழுதே நீங்கள் இறைவனைப் பிடித்துக் கொண்டால் ராகுவும் கேதுவும் நிச்சயம் விட்டுவிடும்
அதனால் நீயே உந்தனுக்கு மன்னனாக செயல்படலாம்.
ஆனால் உண்மைகள் இல்லையே!!!! தாழ்ந்து தாழ்ந்து செல்கின்றது. ஆனாலும் அறிந்தும் அறிந்தும்!!
இன்னொருவன் அறிந்தும் அறிந்தும் சனியவன்!!!
அனைத்திலும் """" வில்லன்!!
அறிந்தும் அறிந்தும் கூட எதற்காக வில்லன் என்றால் நன்மை செய்வதற்காகவே வில்லன்...
ஆனால் பின் தவறாக பேசுகின்றார்கள் சனியவனைப் பற்றியும் கூட..... ஆனால் தண்டனைகள் உண்டு!!!
வாய் கூட பேச முடியாமல் போகும்!!! பற்கள் கூட விழுந்து விடும் சனியவனை நிச்சயம் தவறாக பேசி விட்டால்!!!
ஜாதகத்தில் சனியவன் வந்து பிடித்து விட்டான் இன்னும் நல்லது நடக்காது என்று சொல்பவர்கள் வாயில் பின் உண்ண முடியாதப்பா!!!! வயிற்றுக்குள் எல்லாம் புண்கள் வந்து விடுமப்பா!!!
ஏனென்றால் நீதிபதியாகவும் நியாயாதிபதியாகவும் சத்தியத்தை தர்மத்தை காக்கும் தாயாகவும் சனியவன் இருக்கின்றான்.
அவனைப் பற்றி சொல்வதற்கு எவனுக்குமே தகுதி இல்லை!!!
அப்படி சொன்னாலும் அவன் வாய் இன்னும் சொல்கின்றேன் மேலாக நிச்சயம் வாயில் பின் எவை என்று கூற புற்றுநோய் வந்துவிடுமப்பா!!!!!
சொல்லிவிட்டேன்!!!
பின் இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் பல நோய்கள் வந்துவிடுமப்பா!!!!
வேண்டாமப்பா தெரிந்து கொள்ளுங்கள் !!!
நன்மையை புரிந்து புரிந்து பின் எவை என்று தெரிந்து தெரிந்து தெரிந்தால் சொல்லுங்கள்!!
தெரியாவிடில் பின் அமைதியாக இருந்து விடுங்கள் !!
ஏன் கர்மத்தை சம்பாதிக்கிறீர்கள்?????
தர்மத்தை தர்ம தேவதையை பற்றி ஏன் பின் கேவலமாக பேசுகின்றீர்கள்?????
தர்ம தேவதை!!! சனியவன் தர்ம தேவன்!!!! சனியவன்
பின் நீங்கள் சொல்லி அனுப்பலாமே !!!!
(ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்க வருகின்ற மக்களுக்கு)
தர்ம தேவதை சனியவன் ஆனால் இவ் தர்ம தேவனுக்கு இவை எல்லாம் பிடிக்கும் என்று யார் ஒருவன் சொல்கின்றானோ அவன் தான் ஜோதிடன்.
ஆனால் சொல்வதில்லையே!!!!
சனியவன் கஷ்டத்தை கொடுக்கின்றான் அதைச் செய்கின்றான், இதைச் செய்கின்றான் ஆனால் அவன் சரியாக இருக்கின்றான் என்று நீங்கள்!!!!!! ஆனால் பணத்திற்காக எதையெதையோ சொல்கின்றீர்கள் எதையெதையோ செய்கின்றீர்கள்!!!!
இப்பொழுது எதை என்றும் அறிய அறிய பொய் சொல்லி பணத்தைப் பிடுங்கி கொள்ளலாம் நிச்சயம் சேமித்து வைத்துக் கொள்ளலாம்!!!
ஆனால் சேமிப்பு நிச்சயம் இறைவனிடத்தில்.
ஆனால் பாவ சேமிப்பு தான் நீங்கள் சேமித்து வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
மனிதா ஒரு பொழுதும் இரவு இரவாக இருக்காது என்பதை கூட பல சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் பகலும் கூட பகலாக இருக்காது என்பதை கூட!!!
பின் மாறி மாறி தான் வரும்!!!
சொல்லிவிட்டேன்.
சில நேரம் இன்பங்கள் சில நேரம் துன்பங்கள்!!!
இதனால் உங்களிடமே வாழ்க்கை இருக்கின்றது அதை சரியாக யார் ஒருவன் பயன்படுத்துகின்றானோ இறைவன் அருகிலே இருப்பான்!!
இறைவன் சோதித்தாலும் நிச்சயம் நல்லதாகவே செய்வான்.
இன்னும் கிரகங்கள் எதை எதை செய்யும் என்பதை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன் அவற்றை சரியாகவே பயன்படுத்திக் கொண்டால் அப்பனே நோய்களும் அண்டாது எதை என்றும் அறிய அறிய இன்னும் ஒன்றும் அண்டாது!!!
இதை மானிடனே நிச்சயம் சரியாக பயன்படுத்திக் கொண்டு அம்மையே அப்பனே என்று இருங்கள் போதுமானது.
இன்னும் இன்னும் கிரகங்களை பற்றியும் கூட யான் விளக்கமாக கூறி வருவேன்
அதனை நிச்சயம் அதாவது கிரகங்களை நீ ஜெயிக்கலாம் ஜெயித்தும் விடலாம் அப்படி ஜெயித்தால் இவ்வுலகத்தையும் ஜெயித்து விடலாம்
ஆனால் அவையெல்லாம் யான் சொல்வேன்
ஆனாலும் இவ்வாறு செயல்பட்டாலே போதுமானது ஒரு துன்பமும் வராது வராது என்பது நிச்சயம்!! யானும் கண்டுணர்ந்தேன்.
அவை மட்டும் இல்லாமல் நீங்கள் நினைத்ததை பின் நடத்தி விடலாம் என்பது தான் எனது வாக்கு!!!
அதனால் மறைமுகமாக தர்ம தேவதையை கூட அதாவது தர்ம தேவதை என்பவன் சனியவன் இவனைப் பற்றி குறை கூறுவதற்கு மனிதரிடத்தில் நிச்சயம் தகுதிகள் இல்லை
அவ்வாறு குறைகள் கூறினாலும் பின் எவை என்று அறிய அறிய அவந்தனுக்கே தண்டனைகள் உண்டு!!!
தர்மத்தை கடைபிடிக்காமல் தர்ம தேவதையை குறை குற்றம் கூறுவதா????
மனித ஜென்மமே காரியும் துப்பி விடுவேன்!!!! இன்னும் யானும் அடிப்பேன்!!!
எதை என்று அறிய அறிய கிரகங்கள் நல்லதை செய்ய காத்துக் கொண்டிருக்கின்றது!!
ஆனால் மனிதா நீ எவ்வாறு செய்கின்றாய் திருடுவது இன்னும் ஏனைய சில சில கெட்டவை எவை என்று அறிய அறிய பின் பெண்களைப் பற்றி நினைப்பது இன்னும் இன்னும் இன்னும் போட்டி பொறாமைகள் கோபங்கள் யான்தான் உயர்ந்தவன் என்றெல்லாம் இருந்தால் கிரகங்கள் கூட தன் வேலையை காட்டும்!!
காட்டும் அறிந்தும் அறிந்தும் கூட!!
அழிவு காலமடா அழிவு காலமடா அழிவில்லாமல் தேடுங்களடா நிச்சயம் உயர்வுகள் பெறலாம்
பெறலாம் என்பதையும் கூட
அதனால் கிரகங்கள் சமமாகவே இன்னும் இன்னும் பொருத்தங்கள் பார்க்கின்றார்களாம் !?!?!?!?!?!?!?! பொருத்தங்கள்!?!?!?!!!!
ஆனால் இவையெல்லாம் பொய்யே தான்... யானே உரைப்பேன் அறிந்தும் கூட
பொருத்தங்கள் எத்தனை பொருத்தங்கள் பார்த்து பார்த்து பின் திருமணங்கள் நடந்து தான் கொண்டிருக்கின்றது
ஆனால் பின் ஒழுங்காகவா இருக்கின்றார்கள் ????
நிம்மதியுடனா ?? வாழ்கின்றார்கள்??????
எதற்காக ஜாதகம் உண்மை அதனால் மனிதனே பொய் பொய் என்பதை கூட
(ஜோதிட சாஸ்திரத்தை)
சிறிதளவே கற்றுக் கொள்வது...... அதாவது ஒரு துளி அளவே கற்றுக்கொண்டு அதனை பயன்படுத்தி பணங்கள் சம்பாதிப்பது
ஏன் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் நல்லது நடக்கும் என்பதை கூட ஆணித்தரமாக உண்மையாகவே உள்ளது!!
ஏன் எதற்காக இவ் அஷ்ட பின் கணபதியைக் கூட வணங்க வணங்க இன்னும் எதை என்று கூட சுற்றிவர சுற்றிவர கர்மங்கள் நீங்கும் நீங்கும் என்பதை கூட
ஆனாலும் அனைத்தும் கூட பெற்றவன் கணபதி!!!
இவ் கணபதியிடம் ஞானம் பெற்றுக் கொள்வதற்கு தகுதியாக அனைவரும் இருந்தாலே நிச்சயம் மாறும்!!!
முதலில் ஞானத்தை பின் வருந்தி வருந்தி வருந்தி அதாவது புரிந்து கொள்வது எப்படி என்பதை கூட சிந்தித்தாலே வெற்றிகள் அப்படி ஞானத்தை பின் சிந்திக்காவிடில் தோல்விகள்
தோல்விகள் வெற்றிகள் என்பது மனிதனிடத்திலே உள்ளது.
அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி.
சரியாக பயன்படுத்தவில்லை என்றால் தோல்விகள்.
இறைவன் நடந்து கொண்டே தான் இருக்கின்றான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் இன்னும் மனிதர்களை உயர்த்தி கொண்டே தான் இருக்கின்றான்.
ஆனால் மனிதன் நிலைமையோ கீழாகப் போய்க் கொண்டிருக்கின்றது
அழிவின் பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றது
ஏன்??? அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றதென்றால்.... மனிதனே காரணம்!!!!
மனிதனே காரணம்
மனித திருந்திக் கொள் திருந்திக் கொள் என்பவை எல்லாம்
இதனால் வீணாகப் போய் விடாதே!!!!!
மனிதனின் பிறப்பு ஒரு விசித்திரமானது அதில் விசித்திரமானதை செய்து உயர்ந்து நல்லோருக்கு எவை என்று அறிந்து அறிந்து உண்மையாகவே இருந்து பல உதவிகளை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்
ஏன் அனைவரையும் கூட பின் ஒருவன் கேட்பான் கேட்பான் எதை என்றும் அறிய அறிய
ஏன் அனைவருக்கும் எதை என்று அறிந்து அறிந்து இறைவன் பிறப்பு தானே அதாவது படைப்புதானே
ஏன் அனைவருக்கும் கொடுப்பதில்லை என்பது
இவையெல்லாம் வருங்காலங்களில் எடுத்துரைக்கின்றேன் மனிதா நீ செய்யும் வினைகளுக்கு ஏற்ப பிறப்பும் உள்ளது
அதில் கூட இன்னும் இன்னும் எதை எதையோ நினைத்து நினைத்து இன்னும் இளவயதில் காதலாம் !?!?!?!?!!
இன்னும் குடியாம் !?!?!?!?!?!!
இன்னும் எதை எதையோ ஆட்டாங்களாம் !?!?!?!? இன்னும் பாட்டங்களாம்!?!?!?!?! இதையெல்லாம் செய்துவிட்டு முப்பான் (30) வயது மேல் இறைவன் மீது இறைவா இறைவா என்று பின் இறைவனை தேடுவது!!!!
எப்படி மனிதா மானம்கெட்ட புத்தி கெட்ட மனிதா இவையெல்லாம் இறைவன் எவை என்று அறிய அறிய பின் தண்டனைகள் உண்டு
அதனால் சேமிப்புக்கள் அதாவது கலியுகத்தில் சேமிப்புக்கள் அதிகமாகவே சேமித்து வைத்திருக்கின்றனர் ஏற்கனவே சொன்னார்கள் சித்தர்கள் பின் அறிந்தும் அறிந்தும் கூட
பின் சேமித்து வைத்துக் கொண்டே இருக்கின்றான் சூரியன் கூட சந்திரன் கூட அனைத்தும் சேமித்து நிச்சயம் நீ உன் நிலைமைக்கு ஏற்பவே தண்டனைகள் வழங்கிக் கொண்டே வருகின்றார்கள்
இவையெல்லாம் உண்மையே
வரும் வரும் காலங்களில் கூட இன்னும் சூரியன் பார்ப்பான் பின் நிச்சயம் அப்படி மனிதன் திருந்தவில்லை என்றால் நிச்சயம் சூரியன் இன்னும் வெப்பமாக மாறி நிச்சயம் கொன்று விடுவான் சொல்லிவிட்டேன்
ஆனாலும் சந்திரனும் கூட பார்த்துக் கொள்வான் இன்னும் இரவில் கூட பின் எவை என்று அறிய அறிய இன்னும் சூரியன் போல பிரகாசிப்பான் பின் நீங்கள் அழிந்து விடுவீர்கள்.
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் மனிதா
அழிக்காதே நிச்சயம் நிலைமைகள் மாறும் இதனால் நிச்சயம் உண்மை பொருளை தேடுங்கள் பொய்யானவற்றை தேடிக்கொண்டு செல்லாதீர்கள் சுகத்திற்காக அலையாதீர்கள் அனைத்தும் இறைவனே கொடுக்கட்டும் என்று இருங்கள்
நல்லதாக மாறும் அருள்கள் இன்னும் ஞானங்களை பற்றி உரைக்கின்றேன். உரைக்கின்றேன்!!!!
ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல்
விநாயகர் அகவல் பாடல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
கிரிஜத்மஜ் கணபதி கோயிலின் முகவரி லென்யாத்ரி: லென்யாத்ரி கணபதி சாலை, போஸ்ட் கோலேகானில், தாலுகா ஜுன்னார், மாவட்டம் புனே, மகாராஷ்டிரா, 410502
ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ReplyDeleteகுருநாதர் திருப்பாதம் போற்றி.
குருநாதர் அருளால் ஒரு யோகஞான ஆய்வு பதிவு.
https://fireprem.blogspot.com/2024/04/blog-post.html?m=1
பணிவான வணக்கம் இடைக்காடர் சித்தர் கூறியது சரியாக இருக்கலாம் இருப்பினும் பெண்ணாசை கூடாது என்றார்..கல்யாணம் முடிந்தவருக்கு அது சரியாக இருக்கும்.ஆனால் கல்யாணம் முடிக்காமல் ஆன்மீக பக்கமும் செல்ல விடாமல் உடலில் இச்சையை தருவது யாருடைய தவறு அது மனிதருடைய தவறு இல்லையே.மேலும் சைவம் உண்ணுதல் பொய் பேசாமை, பொறாமை இன்றி பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கும் ஒருவருக்கு காரணமின்றி இன்னல் மேல் இன்னல் தந்தால் அது எந்த விதத்தில் நியாயம் இதற்கு இடைக்காடர் சித்தர் என்ன பதில் சொல்கிறார்
ReplyDeleteஐயா நல்வழியை போதிக்கிறீர்கள்...குரு காட்டிய வழியில் வாழ்வதே சிறப்பு...மிக்க மிக்க நன்றிகள் பல🙏🙏🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADU SARANAM
THIRUVADI SARANAM
NANRI AYYANAE
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete