​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 24 April 2024

சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!




22/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் ஓதிமலை அன்னூர்.

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!! சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்! மதுரையில் நடந்த சத்சங்கத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் ஓதிமலை ரகசியங்களை எடுத்துரைத்த பொழுது

அப்பனே இவை என்று கூற நல் முறைகளாக ஆனாலும் இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல் முறையாக விதிகள் மாறும் என்பேன்.

முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன். ஓதிமலை முருகன் அன்னூர்

இரண்டாவதாக பழனி.

மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.பூம்பாறை கொடைக்கானல் 

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

என்று வாக்குகள் உரைத்திருந்தார் அதன்படி அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் குருநாதர் உத்தரவுபடி இந்த சித்ரா பௌர்ணமி திருநாளில் இவ் மூன்று ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார்.... சித்ரா பௌர்ணமிக்கு முந்திய இரவு ஓதி மலையில் தங்குவதற்கு குருநாதருடைய அருளால் நிறைவேறியது ஓதி மலையில் முந்திய இரவு குருநாதர் வாக்குகள் தந்திருந்தார் அவ் வாக்குகள் பின்வருமாறு!!!!

"""""'ஒன்பதாம் படை வீடு ஓதிமலை !!!!!!!!

ஆனைமுகன் அறுமுகன் போற்றியே!!! பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே அனைவருக்குமே என்னுடைய ஆசிகள்!!!

அப்பனே எவை என்று புரியாத அளவிற்கும் கூட மனிதர்கள் வரும் காலங்களில் அப்பனே அப்படி நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே இன்னும் வருவார்களப்பா

அப்பனே ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே அதாவது சொன்னோம் அப்பனே பல வழிகளில் கூட ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே

இதனால் அப்பனே எங்கெல்லாம் திருத்தலங்கள் எதன் மீது அப்பனே அதாவது நவ கிரகங்களையும் கூட அப்பனே சேர்த்து அப்பனே அறிந்தும் கூட அப்பனே இதனால் அனைத்தும் ஒன்றிணைந்து அப்பனே சரியாகவே அப்பனே அதாவது இவன் மீது விழுமப்பா!!!!

(ஓதிமலையப்பன் மீது நவகிரகங்களில் ஒட்டுமொத்த கதிர்வீச்சும் ஒன்று சேர்ந்து விழும்)

அப்பனே அதிலிருந்து அப்பனே நிச்சயம் விழுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் நவகிரகங்களையும் கூட வென்றிடலாம் அப்பனே

நிச்சயம் அப்பனே இதன் ரகசியத்தை வரும் காலத்தில் இன்னும் விளக்கமாகவே பின் சரியாகவே இன்னும் அப்பனே ரகசியத்தோடே உரைக்கின்றேன் அப்பனே சரியாகவே அப்பனே

இதனால் அப்பனே அறிந்தும் கூட காலத்தை வென்றிடலாம் அப்பனே எப்படி எதை என்று புரிய புரிய அப்பனே எங்கெல்லாம் அப்பனே பல சக்திகள் ஒளிந்துள்ளது என்பதை எல்லாம் யாங்களே அறிவோம் அப்பனே!!!!

இதனால் அப்பனே ஆனாலும் பின் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே

அதாவது பாவம் புண்ணியம் சரிபார்க்கப்பட்டதே பிறவி!!!!!!

(ஒவ்வொருவரின் பிறவியை பாவம் புண்ணியத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு தான் நடக்கின்றது பாவம் புண்ணியத்தின் மூலம் தான் பிறவியே ஏற்படுகின்றது)

இதனால் அப்பனே புண்ணிய ஆத்மாக்களுக்கே கிடைக்குமப்பா.. அப்பனே வரத்தை அதாவது வரங்கள் தருபவன் அப்பனே ஓதிமலை அப்பனே அறிந்தும் கூட அறிந்தும் எதை என்று அறிய அறிய

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட சில சோதனைகளை கூட செய்பவன் இவனப்பா!!!! ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் அப்பனே இதன் ரகசியத்தையும் இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே

அறிந்தும் கூட போகனவன் (போகர் சித்தர்) சில ஆண்டுகள் இங்கே தங்கி இருந்தான் அப்பா!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் பக்கத்து கிராமத்தில் அப்பனே அதாவது ஒரு ஏழை வசித்து வந்தானப்பா

அவந்தனுக்கு வேலை அப்பனே ஆடு, மாடு மேய்ப்பதே!!!!!

ஆனாலும் அறிந்தும் கூட ஆடுகள் அனைத்தும் அப்பனே ஒரு நாள் அப்பனே அதாவது முருகனே சோதனைகள் செய்து அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்றும் புரியாமல் இருந்தாலும் அப்பனே (ஆடுகளை)அனைத்தையும் விரட்டி அடித்து விட்டான் அப்பனே

இதனால் அவந்தனக்கு தொழில் இல்லையப்பா தொழில் பாதித்தது!!!

இதனால் முருகன் தான் துணை என்று அப்பனே (மலைமீது) ஏறுவானப்பா!!

அப்பனே அறிந்தும் கூட பின் நல்விதமாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல உண்மைகளோடு முருகா எந்தனுக்கு இருந்த தொழில் அப்பனே பின் ஒன்றே!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அதையும் கூட எங்கே????? எதை என்றும் புரிய புரிய

இதனால் வந்து கொண்டே இருந்தான்!!! இதனால் முருகன் மீது பற்று பற்று!!!

ஆனாலும் பின் ஏற ஏற அதாவது இம்மலை மீது ஏற ஏற கஷ்டங்கள் தானப்பா கஷ்டங்கள் என்று

ஆனாலும் முருகன் சோதனை மேல் சோதனை கொடுத்தான் ஆனாலும் அதாவது மழையை பெய்ய வைத்தான்!!!!! தன் இல்லத்தையும் அடியோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லுமாறு அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அவந்தனுக்கு இல்லங்களும் அதாவது இருந்தும் பயனில்லாமல் போய்விட்டது

இதனால் மீண்டும் ஏறினான் ஆனாலும் முருகன் பார்ப்போம் இவந்தன் என்னதான் செய்கின்றான் என்று

ஆனாலும் அறிந்தும் கூட போகனும் இங்கு தங்கி இருந்தான்!!!

ஆனாலும் போகனும் சொன்னான்!!! பின் முருகா!!!!! குழந்தாய்!!!!..... அறிந்தும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றானே இவந்தனுக்கு இப்படி ஒரு வேதனையா????

ஏதாவது செய்!!! நிச்சயம் அறிந்தும் கூட !!!

போகனே!!!! அறிந்தும் கூட நிச்சயம் செய்கின்றேன்!!! பார்!!!! என்று நிச்சயம் அப்பனே இது போல இங்கு அமர்ந்திருந்தான்... இதுதான் நம் வீடு என்று

ஆனாலும் அறிய போகனே பார்த்துக் கொண்டே இரு கலியுகத்தில் மனிதர்கள் எப்படி எல்லாம் ஆவார்கள் என்றெல்லாம்

இதனால் அறிந்தும் கூட நிச்சயம் உண்மைதனை வெளிப்படுத்த அறிந்தும் கூட ஒரு பெரிய மனிதனை அனுப்பி பின் அவந்தனுக்கு உதவி செய்யுமாறு நிச்சயம் அதாவது முருகனே அறிந்தும் கூட

இதனால் ஒரு பெரிய மனிதன் வந்தான் இங்கு.. ஆனாலும் அறிந்தும் கூட முதலில் இவந்தனை கேட்டான்!!!!

ஏனப்பா இங்கு இருக்கின்றாய்??? உந்தனுக்கு வீடு இல்லையா!!!!!! என்று எதை என்று புரிய புரிய

பின் அதாவது சொந்த பந்தங்கள் யார் என்று!!!

ஆனாலும் அவந்தனும் சொன்னான் நிச்சயம் சொந்த பந்தங்கள் பின் அனைத்தும் வீடும் இவ் முருகனே... அறிந்தும் கூட என்றெல்லாம்

அப்படியா எதை என்றும் அறிய அறிய என்னிடத்தில் வந்துவிடு நிச்சயம் உன்னை உயரத்தில் பின் கொண்டு செல்கின்றேன் என்று

ஆனாலும் அப்பனே சரி என்று அவந்தனும் அப்பனே பின் அறிந்தும் கூட உண்மைதனை அப்பனே புரிந்து அவனிடத்தில் சென்றுவிட்டான் அப்பா

இதனால் அவன் மிகவும் பெரிய செல்வந்தன் ஆகிவிட்டான் அப்பா அறிந்தும் கூட

இதனால் அப்பனே சொல்கின்றேன் அப்பனே (ஓதி மலை)வந்து சென்று கொண்டே இருந்தால் அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் ஆனாலும் இறைவன் சோதிப்பான் அப்பா ஆனாலும் யார் மூலம் எதை தர வேண்டும் என்று எண்ணி அப்பனே நிச்சயம் உயர்த்தி வைப்பானப்பா முருகன் அப்பனே!!!

(இவ்விடத்தில் குருநாதர் வாக்குகள் தரும் பொழுது கௌளி கட்டியம் கூறி ஒலித்தது)

இதனால் காலத்தை வெல்லலாம் அப்பனே

காலத்தை அதாவது எப்படி வெல்ல வேண்டும் என்றால் அப்பனே எப்படி வெல்வது??? அப்பனே நவகிரகங்களை வென்றாக வேண்டுமப்பா!!!

அப்பனே அப்பொழுது தான் காலத்தை வென்று விடலாம் அப்பனே அவ் நவகிரகத்தை வென்றவன் இவன் தானப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட பின் ஒன்பதாம் படைவீடு என்று அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய எதிர்நோக்கி எதிர்நோக்கி இன்னும் கூட்டம் கூடும் அப்பா வரும் அப்பா

ஆனாலும் அப்பனே இதில் தன் அப்பனே அரசு எதை என்று புரியாமல் கூட தடுக்கும் அப்பா

ஆனாலும் அப்பனே முருகன் எதை என்றும் அறிய அறிய அப்பனே தன் பக்தர்களை ஈர்த்து அப்பனே பல வகையிலும் கூட அப்பனே உண்மைகளை போதித்து அப்பனே உயர்த்தியும் வைப்பானப்பா கலியுகத்தில்!!!

அதனால். அப்பனே நம்பிக்கை நம்பிக்கை அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட அப்பனே பெரியோர்கள் அப்பனே நம்பிக்கை நம்பிக்கை என்றெல்லாம் அப்பனே

இதனால் அவந்தனும் மிக்க செல்வந்தனாகவே இருக்கின்றான் அப்பா அப்பனே அறிந்தும் கூட அரசு சார்ந்தே இருக்கின்றான் அப்பா இப்பொழுதும் கூட அப்பனே பெரிய அரசு பதவியில் வகிக்கின்றான் அப்பா

அவந்தனும் அப்பனே வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் உதவிகள் புரிவானப்பா அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அச் ஜென்மத்திலே மிக செல்வந்தனாக ஆகிவிட்டான் அப்பா ஆனாலும் அப்பனே உயர்ந்து விட்டான் அப்பனே

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட பணங்களும் வந்துவிட்டது பல வழிகளிலும் கூட அப்பனே

ஆனாலும் மாயையில் சிக்கிக் கொண்டான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட அப்பனே அதாவது மருத்துவமனைகள் அமைப்பது என்று கூட அப்பனே அதில் கூட அப்பனே பல பல பல வழிகளிலும் கூட அப்பனே அதாவது மருந்துகளை தவறாக உபயோகித்து அப்பனே பல உயிர்களையும்........

அதேபோல் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கல்வி சாலைகளை அமைத்து அதில் கூட அப்பனே பணத்தை சம்பாதித்தான் அப்பனே

முருகன் தான் கொடுத்தான் என்று மறந்து விட்டான் அப்பனே

ஆனாலும் முருகன் சொன்னான் அப்பனே அறிந்தும் கூட போகன் இடத்தில் அப்பனே பார்த்தாயா அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய இப்படித்தான் கலியுகத்தில் மனிதனுக்கு கொடுத்தால் இப்படித்தான் என்று

இதனால் பின் போகனும் தலை குனிந்தான்!!!

பின் குழந்தாய்!!!!! தந்தையே !!!!!அறிந்தும் கூட அனைத்தும் தெரிந்து கொண்டேன் ஆனாலும் ஏதாவது நிச்சயம் ஏற்பாடு செய்ய வேண்டும் இவந்தனுக்கு

இவந்தனை இப்படியே விட்டு விட்டால் அறிந்தும் கூட ஆனாலும் சரி நிச்சயம் இப்ப பாவத்தை அனுபவிப்பதற்காகவே அடுத்த பிறவி எடுப்பான் என்றெல்லாம் நிச்சயம் பின் முருகனும் கூட

இதனால் அப்பனே இப்பிறவியிலும் பிறந்துள்ளானப்பா!!! அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே பல வழிகளிலும் கூட கர்மத்தை அனுபவித்து அப்பனே நிச்சயம் உயர்ந்த நிலையில் அப்பனே இன்னும் இன்னும் வருவானப்பா!!!

அப்பனே அப் பெயரைச் சொன்னாலும் அப்பனே பல வழிகளிலும் கூட தொந்தரவுகள் ஏற்படும் அப்பா

அதனால்தான் சில ரகசியங்களை கூட அப்பனே மறைக்க வேண்டியதாக உள்ளது அப்பனே

நிச்சயம் அப்பனே ஆனாலும் இன்னும் இன்னும் எவை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் சித்திரை அப்பனே அறிந்தும் எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே நிச்சயம் அனைத்து சித்தர்களும் இங்கு வருவார்களப்பா

அதனால்தான் அப்பனே அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய இக்குழந்தையை பார்ப்பதற்கே!!!! அப்பனே!!!

குழந்தையாகவும் காட்சியளிப்பான் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இளைஞனாகவும் காட்சியளிப்பான்!!!! அப்பனே முதியவன் போலும் காட்சியளிப்பான்!!!! அப்பனே ஆணாகவும் காட்சியளிப்பான்!!!! அப்பனே பெண்ணாகவும் காட்சியளிப்பான்!!!!! அப்பனே அனைத்தும் இவனே அப்பனே

காலத்தை வென்றவன் அப்பனே!!!!! முருகன்!!!!

வென்றுவிடலாம் அறிந்தும் கூட அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே இன்னும் அறிவியல் வழியாகவும் எடுத்துரைப்பேன் அப்பனே

பல வழிகளில் கூட பின் சுவடிகளில் கூட பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் அப்பனே சுவடிகளில் எழுதி எழுதி அப்பனே அழகாகவே!!!!....

ஆனாலும் அவையெல்லாம் அப்பனே விற்று விற்று பல பல பொய்களையும் கூட மாற்றியமைத்து விட்டார்கள் அப்பனே

உண்மைதனை அப்பனே ஒளித்து அப்பனே அறிந்தும் கூட பல பொய்யான விஷயங்களை எல்லாம் எழுதி அப்பனே தவறான வழிகளில் அப்பனே பின் செல்வதற்கு அப்பனே வழி வகுத்து விட்டார்கள் மனிதர்களே!!!

இக்கலியுகத்தில் கூட அப்பனே நிச்சயம் பக்தி என்பது தலைகீழாகும் என்பேன் அப்பனே

இதனால்தான் அப்பனே ஒவ்வொன்றாக எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே மாற்றம் அடைய யாங்கள் இருக்கின்றோம் அப்பனே

நிச்சயம் அப்பனே உங்கள் அனைவரையுமே யான் பார்த்துள்ளேன் அப்பனே இங்கே அழகாகவே அப்பனே

இன்னும் பல சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே ஆனாலும் நவகிரகங்களுக்கும் சம்பந்தங்கள் உண்டு என்பதை போல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே நாக வடிவத்தில் அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட இன்று இருக்கின்றது அப்பா

அதற்கும் சம்பந்தங்கள் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ராகு கேது என்றெல்லாம் தோஷங்கள் அப்பனே

கழியுமா ?????

நிச்சயம் கழியாது அப்பனே!!! ஏன் எதற்கு அப்பனே ஆனாலும்!!!!!......

இங்கு இருக்கின்றதே நாக தேவதை அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே.......அவள்தன் ஒரு வைரத்தை அப்பனே வைத்துள்ளாள் அப்பனே அறிந்தும் கூட வயிற்றினில் அப்பனே

அவைதன் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது பின் மறைமுகமாகவே சிலசில ஒளிக்கற்றைகள் (வெளிப்படுத்தும்)  பின் கண்ணுக்குத் தெரியாதப்பா!!!!

அப்பனே ஆனாலும் (ஓதி மலையில் தங்கி உறங்க வேண்டும்) உறங்கினால் புரியுமப்பா !!!!நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் அவள்தனை  பார்த்து விட்டாலும்!!...

(இரவில் நாக தேவதை ஒளிக்கற்றையை வெளிப்படுத்தும் பொழுது)

பயந்து இறந்து விடுவானப்பா மனிதன்!!!

அதனால் தான் அப்பனே அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே ஏன் இரவில் தங்கக் கூடாது?? சில ஆலயங்களுக்கு செல்லக்கூடாது?? ஏன் அப்பனே சில ஆலயங்களுக்கு கூட பெண்கள் அனுமதிப்பதில் அனுப்பாமல் அப்பனே இப்படியே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அனைத்தும் காரணத்தோடு தான் செய்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இதையே அறிந்தும் கூட உண்மைதனை மறைத்து மறைத்து அப்பனே இன்னும் விளக்கங்கள்

இதனால் பயந்து ஓடிடுவார்கள் அப்பனே

ஆனால் அதையும் முருகன் காட்டுவான் அப்பனே இங்கு உள்ள அப்பனே பக்தர்களுக்கு அப்பனே அவர்களும் கூட உணர்வார்கள் அப்பனே அறிந்தும் கூட

இதனால் அப்பனே இங்கிருந்து அப்பனே அவ்வைரமானது அப்பனே நவகிரகங்களை கூட அப்பனே தாக்குமப்பா

அப்பொழுது சாதாரணமாக அதிலிருந்து அறிந்தும் கூட """அம்பாள்"""" அதாவது முருகனின் தாய் அப்பனே அழகாகவே வந்து அமர்ந்து அப்பனே ஆசிகள் தருவாளப்பா.. வைரமாகவே அப்பனே

அனைவரும் ஒளிர்ந்து விடலாம் அப்பனே

கர்மத்தையும் கூட அப்பனே அம்பாள் அமர்ந்திருக்கும் பொழுது அவ் ஒளி அப்பனே அறிந்தும் கூட அங்கும் இங்கும் பின் அலைபாயும் பொழுது அப்பனே அப்படியே அப்பனே பின் ஈர்த்து அதாவது பாவத்தை ஈர்த்து அப்பனே புண்ணியங்களை பெறச் செய்யும் அப்பா

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அனைவரிடத்திலும் புண்ணியங்கள் தேங்கி நிற்கின்றது அப்பனே

ஆனால் பாவங்கள் ஆட்டங்கள் ஆடுகின்றது அப்பனே

அப் பாவங்கள் ஆட்டம் ஆடுகின்ற பொழுது அப்பனே எப்படியப்பா???? கஷ்டங்கள் வராமல் போகும்?????

ஆனாலும் அப்பனே புண்ணியங்கள் ஆட பின் ஆடல் பாடலுடன் அப்பனே ஆட்டுவிக்க வேண்டும் அதற்கு அப்பனே என்ன ரகசியம் என்றால்?? நவகிரகத்தை வென்றாக வேண்டும்...

இதை மீண்டும் மீண்டும் ஏன் தெரிவிக்கின்றேன் என்றால் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் வென்றவன் இவன்தான் அப்பா (ஓதிமலை அப்பன்)

அப்பனே அறிந்தும் கூட அப்பனே இன்னும் எட்டாம் படைவீடு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய அப்பனே

அதாவது ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே

ஆறுபடை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆறாவது அறிவையும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் ஏழாவது அறிவிற்கு அப்பனே பின் எட்ட முடியாது

(ஏழாவது படைவீடாக குருநாதர் அகத்திய பெருமான் மருதமலையை வாக்கில் உரைத்திருப்பதை நினைவு படுத்துகின்றோம்)

எட்டாவது முடிவுக்கு வந்துவிட்டால் அப்பனே அறிந்தும் கூட நவ எதை என்றும் அறிய அறிய அப்பனே இதை நிச்சயம் யான் குறிப்பிடுவேன் அப்பனே பின் அறிந்தும் ஏன் அப்பனே அறுபடை வீடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கக் கூடியது அப்பனே புராணங்களில் கூட அப்பனே எழுதி வைத்திருக்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இன்னும் மூன்று வீடுகள் மறைக்கப்பட்டது அப்பனே

அறிந்தும் கூட ஆனாலும் சிலர் சொல்கின்றார்கள் அப்பனே ஆனாலும் நிச்சயம் பின் ஒன்பதாவது படைவீடு என்பது யான் சொல்வேன் அப்பனே இன்றிலிருந்தை அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட அப்பனே

ஏன் எதற்கு அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தை குறிக்கும் அப்பா

அப்பனே அறிந்தும் கூட அவ் கிரகத்தை பற்றியும் கூட அப்பனே யான் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே

பின் அறிந்தும் அங்கெல்லாம் சென்று வந்தாலே அப்பனே நிச்சயம் முருகன் அருள் கிட்டி அப்பனே எதை என்றும் அறிய அறிய கிரகங்கள் வழி விடும்ப்பா

அதாவது அப்பனே கிரகங்கள் அப்பனே வழி விடும்பொழுது அப்பனே நீ நினைத்தது நடக்கும் அப்பனே

அனைத்தும் உன் கையில் அப்பா!!! அப்பனே நீ தான் அப்பனே மன்னன்!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே இவையெல்லாம் அப்பனே முன்னொரு காலத்திலே அப்பனே பல மன்னர்கள் பயன்படுத்திக் கொண்டார்களப்பா

ஆனாலும் அப்பனே மற்றவர்களும் நம் போல் இருக்கக் கூடாது என்றெல்லாம் அப்பனே அவர்களே யோசித்து திருத்தலம் திருத்தலமாக சென்று அதையும் அழித்துவிட்டு அப்பனே பொய்யான செய்திகளை எல்லாம் பரப்பி பரப்பி அப்பனே மனிதனும் கெட்டிட்டு அப்பனே பக்தியும் கெட்டிட்டு அப்பனே சுவடியையும் கூட அப்பனே அறிந்தும் கூட

இதனால் என்ன பயன்??? அப்பனே!!!

இதனால் அப்பனே வரும் காலத்தில் ஓங்குமப்பா!!! புகழப்பா!!!

அதாவது கலியுகத்தில் அப்பனே அறிந்தும் கூட பின் நிச்சயம் பின் தெய்வங்கள் அப்பனே அறிந்தும் கூட தன் புகழை தானே உயர்த்தி வைக்கும் அப்பா

ஏனென்றால் மனிதன் நம்ப போவதில்லை ஏன் எதற்கு என்றால் அப்பனே பொய்யானவற்றையெல்லாம் மனிதன் அதைச் செய்தால் இவை நடக்கும் எதை என்றும் அறிய அப்பனே இன்னும் இன்னும் பின் தெரியாமல் பேசுகின்றான் அப்பனே

அவை மட்டும் இல்லாமல் சுவடிகளை எடுத்துக்கொண்டு என்னிடத்தில் உண்மையான சுவடி என்னிடத்திலே உள்ளது மற்றவை எல்லாம் பொய் என்றெல்லாம் அப்பனே புறம் பேசிக் கொண்டிருப்பார்கள் அப்பனே

அதனால் சொல்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட இன்னும் இன்னும் என்னென்ன நடக்கின்றது என்பதை கூட தண்டனைகள் உண்டு அப்பனே

அறிந்தும் கூட அதனால் இறைவனிடத்தில் விளையாடுவது சாதாரணமில்லை என்பேன் அப்பனே

அப்பனே மனிதன் அறிந்தும் கூட எதற்காக பிறக்கின்றான் எதற்காக வளர்கின்றான் எதற்காக பின் சாகின்றான் மீண்டும் பிறக்கின்றான் என்பவையெல்லாம் தெரியாமல் தெரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே வீணப்பா.. பிறவியும் வீணப்பா உன்னை சார்ந்தோர்களையும் அப்பனே கர்மத்தில் நுழைத்து அப்பனே அவர்களையும் கூட வீணாக்கி மீண்டும் பிறவி எடுத்து விடுகின்றாய் அப்பனே

ஆனால் அப்பனே உண்மைதனை உணர்ந்தால் அப்பனே வெற்றியாள்!!!!

அப்பனே   பொய்தனை உணர்ந்தால் அப்பனே தோல்வியாள்!!!!!

அறிந்தும் ஏன் எதற்கு அப்பனே வெற்றியை குறிப்பவன் அப்பனே அறிந்தும் கூட அப்பனே

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட

கண்களிலே சனீஸ்வரனை வைத்துள்ளானப்பா இவ் முருகன் அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட விளக்கங்கள் அப்பனே

இதனால் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே சனீஸ்வரனால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்கள் கூட அப்பனே அதனால் சனீஸ்வரன் பிடித்து விட்டால் மனிதன் தப்ப முடியாதப்பா... இங்கு வந்து விட்டால் அப்பனே சனீஸ்வரனும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய

ஓது  !!ஓது  !! என்றெல்லாம் அப்பனே முருகனைப் பார்த்து அப்பனே பின் தயங்கி அப்பனே கைகட்டி நிற்பானப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே

ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் அதாவது கிரகங்களை வென்றவன் என்று சொல்லிவிட்டேன் அப்பனே

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே இதற்கும் சொல்கின்றேன் அப்பனே

அதாவது சிறு குழந்தையாக முருகன் இருக்கின்ற பொழுது அறிந்தும் கூட ஆனாலும் ஈசனிடம் போய் கேட்டான் அப்பனே

யார் சனீஸ்வரனே !!!

அப்பா அறிந்தும் கூட அப்பனே நீங்கள் தான் எந்தனுக்கு பட்டத்தை கொடுத்தவர்...

ஆனாலும் உங்கள் குழந்தை கந்தன் இருக்கின்றானே...அவந்தனை யான் பிடிக்கப் போகின்றேன் ஏனென்றால் இதுவும் விதி தான்

ஈசனே நீங்கள் தான் சொன்னீர்கள் அறிந்தும் கூட உன் கடமையை செய் என்று... அதனால் யான் நிச்சயம் கந்தனை பிடிக்கத்தான் போகின்றேன்.. என்று


ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பின் ஈசனும்

சனீஸ்வரனே!!! பிடித்துக்கொள் முடிந்தால் பிடித்துக் கொள் என்று பின் நகைத்தான் அதாவது பின் எம்பெருமானே!!!! அறிந்தும் கூட

இதனால் நிச்சயம் அதாவது பின் யோசித்தான் அதாவது இப்படி இவ் வயதில் பிடிக்க வேண்டும் ஆனாலும் சிறு வயதாக முருகன் இருக்கின்றானே என்றெல்லாம் யோசித்தான் சனீஸ்வரன்

ஆனாலும் அறிந்தும் உண்மைதனை கூட பின் பார்வதி தேவியும் ஆனாலும் பின் சனீஸ்வரனே நீ நினைத்தது நீ நினைப்பது நிச்சயம் எந்தனுக்கு கேட்கின்றது

அதனால் முருகன் சிறுபிள்ளை இல்லை நீ சாதாரணமாக பிடிக்கலாம்!!!

தேவியே!!! அறிந்து கொண்டாயா!!!!

ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் எந்தனுக்கும் ஒரு மனசாட்சி உள்ளதே... அறிந்தும் கூட 

இவ் வயதில் பிடித்தால் என்ன ஆகும் ?? என்று!!! சனீஸ்வரனும் நினைத்தான்!!!!

ஆனாலும் தேவியோ!!!! நிச்சயம் பிடி!!!

அறிந்தும் கூட நீ முருகனை பிடித்தால் உந்தனுக்கு ஒரு பரிசை வழங்குகின்றேன் என்று அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய தேவியும் கூற!!!

நிச்சயம் தாயே!!!! அதாவது பரிசுக்காகவே முருகனை பிடிக்கத்தான் போகின்றேன் என்று

இதனால் அறிந்தும் கூட எதை என்றும் புரிய  புரிய அதாவது இங்கே பிடிக்க முயன்றான்!!! சனீஸ்வரன்.

ஆனாலும் முருகன் ஓடோடி அறிந்தும் கூட இங்கிருந்து பழனி மலைக்கு தாவினான் முருகா!!! என்று பின்னே ஓடினான் சனீஸ்வரன்!!!!!

அங்கிருந்து பின் முருகன் பூம்பாறை தாவினான்

(பூம்பாறை கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில்)

அறிந்தும் கூட அங்கிருந்து செந்தூரை (திருச்செந்தூர்) அறிந்தும் கூட பல மலைகளில் ஏறி எவை என்றும் அறிய அறிய கடைசியில் இங்கு எதை என்று கூட அலைகளைப் போல் மீண்டும் குழந்தையாக ஓடோடி இங்கு வந்து விட்டான்

ஆனாலும் சனீஸ்வரனால் முடியவில்லை. எதை என்று அறிய அறிய ஆனாலும் சனீஸ்வரனாலே முடியவில்லை அறிந்தும் அறிந்தும் கூட மெதுவாக சென்றான் அறிந்தும் கூட

கடைசியில் பல ஆண்டுகள் அறிந்தும் கூட இங்கு வந்து அறிந்து எதை என்று அறிய அறிய முருகா அறிந்தும் கூட உன்னை பிடிக்க முடியவே இல்லையே அறிந்தும் கூட

ஆனாலும் அறிந்தும் கூட பார்வதி தேவியும் பார்த்துக் கொண்டே இருந்தாள் அருகில் இருந்து கூட

எதை என்று அறிய அறிய சனீஸ்வரனே!!!! அதாவது முருகனை பிடித்து விட்டாயா?? என்று

அய்யய்யோ!!!! முடியவில்லை தாயே!!!

எதை என்றும் புரியாத அளவிற்கும் கூட ஆனாலும் நிச்சயம் அறியும் வண்ணம் எதை என்று புரிய புரிய நிச்சயம் மீண்டும் சொல்கின்றேன் பின் நிச்சயம் முருகனை பிடித்தால் நிச்சயம் பரிசு என்று பார்வதி தேவி!!!

ஆனாலும் சனீஸ்வரன் அறிந்தும் கூட தாயே என்னால் முடியவில்லை !!!அவந்தன் விளையாட்டுகாரனாகவே இருக்கின்றான்....

இதனால் ஆனாலும் யான் சிறு பிள்ளை என்று நினைத்தேன்!!!! ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட என்னால் முடியவில்லை. காலங்களும் கடந்து விட்டது அறிந்தும் கூட

சுற்றி சுற்றி நிச்சயம் அலுத்து விட்டேன்!!!

யான் எங்கெங்கு செல்வது??????

ஆனாலும் சனீஸ்வரன் எதை என்றும் அறிய அறிய முருகா முருகா என்று

ஆனாலும் தேவி பரிசு இல்லை என்று கூறிவிட்டாள் அறிந்தும் கூட

முருகனை பிடித்தால் தான் பரிசு என்று யான் சொல்லிவிட்டேன் என்று பார்வதி தேவியும் அறிந்தும் அறிந்தும் உண்மைதனை கூட

இதனால் நிச்சயம் பரிசு இல்லை என்று

ஆனாலும் சனீஸ்வரனும் தாயே அப்படி எல்லாம் கூறக்கூடாது!!!

நிச்சயம் அன்பே பெரியது என்று நீங்கள் தான் கற்றுக் கொடுத்தீர்கள்!!!

அதனால் பரிசு வேண்டும் என்று!!!! சனீஸ்வரனும்!!!!

அப்படியா!!!!! முருகன் என்ன சொல்கின்றானோ அதைக் கேள்!!! பரிசு தருகின்றேன் என்று தேவியும்!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் உணர்ந்தும் கூட அதனால் முருகனும் ஒரு வார்த்தை விட்டு விட்டான்!!!!
அறிந்தும் உண்மைதனை கூட!!!!


 அதாவது.... அறிந்தும் சனி ஈஸ்வரனே!!!!! நீ என்னிடத்திலே இருந்து விடு... அறிந்தும் அறிந்தும் கூட

எதை என்று புரிய புரிய இதனால் வரும் பக்தர்களுக்கு எல்லாம் அறிந்தும் கூட அதாவது ஒருவர் ஒருவருக்கு கூட ஒரு ஒவ்வொரு வேளையில் சில ஆண்டுகளில் நீ பிடிப்பாய் அல்லவா!!!!!(மனிதர்கள் அனைவருக்கும் அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சனி திசை அல்லது சனி தோஷம் என்று இருக்கும் அல்லவா அதை முருகன் குறிப்பிடுகின்றார்) அவர்கள் என்னிடத்தில் வந்தால் நிச்சயம் அவர்களுக்கு. அவ் (சனி)திசையிலோ நீ பிடித்துக் கொண்டாயோ அவ் நேரத்திலோ நீ அவர்களுக்கு உயர்வை கொடு!!! அப்பொழுது என்னிடத்தில் இருந்து கொள் என்றெல்லாம்.

இதனால் சனீஸ்வரன் தேவியே!!! யான் வென்று விட்டேன் வென்று விட்டேன்!!!! என்று நிச்சயம் பரிசு கொடு !!!என்று

 ஆனாலும் தேவியும் பரிசளித்து விட்டாள்!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட உண்மைதனை சொல்லிவிட்டேன் அப்பனே

இன்னும் நவகிரகங்களை பற்றி எல்லாம் சொல்வேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ராகு கேதுகள் பற்றியும் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே இன்றளவில் ராகு கேது க்களை எதை என்று கூட தோஷங்களாகவே பார்க்கின்றார்கள் அப்பனே

அப்படி இல்லையப்பா

அப்பனே அறிந்தும் கூட இதன் தத்துவத்தை ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே அறிந்தும் கூட

இங்கிருந்தே செயல்படுகின்றது அப்பனே

அதாவது அப்பனே சந்திர கிரகணம் சூரிய கிரகணம் அப்பனே ஏன் எதற்கு அப்பனே

அதாவது அனைவரும் செய்யும் தவற்றை கூட அப்பனே சந்திரனும் சூரியனும் பார்த்து அப்பனே அதாவது முழுமை அடைந்து விட்டால் ராகுவும் கேதுவும் அவர்களை பிடித்து அப்பனே பின் அறிந்தும் கூட அதாவது பின் சேமிப்பு திறனை கூட இவர்கள் வாங்கிக் கொண்டு அப்பனே கஷ்டத்தை அள்ளிக் கொடுக்கின்றார்களப்பா!!!!

அதனால் தான் அப்பனே ராகு கேதுகளுக்கு எப் பரிகாரம் செய்தாலும் உதவாதப்பா உதவாது!!!

ஆனாலும் அப்பனே நன்மைகள் எதை என்று புரியும் அளவிற்கும் கூட

யான் சொன்னேனே நாக தேவதையின் அறிந்தும் எதை என்று கூட அவ் வைரமானது எதிரொலிக்கும் பொழுது அப்பனே அவ் தோஷங்களை கூட பின் உடைந்து போகும் அப்பனே எதை என்றும் அறிய அறிய

 இம் முருகனுக்கு அப்படி ஒரு சக்தியப்பா....

அப்பனே இவன் குழந்தை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் யார் யார் எதைக் கேட்கின்றார்களோ அதை உடனடியாக கொடுத்து விடுவான் அப்பா இதுதான் அப்பனே ஓதிமலையப்பன்!!! அறிந்தும் கூட

குழந்தையாகவே இருக்கின்றான் அப்பனே குழந்தையை அப்பனே நீங்கள் எப்படி பார்க்க வேண்டும்?? தெரிந்து கொண்டீர்களா அப்பனே

அப்படி பார்த்தால் வெற்றியப்பா!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய எதை வேண்டுவது என்பதை கூட ஆராய்ந்து ஆராய்ந்து நீங்கள் கேட்க வேண்டும் அப்பனே

இக் குழந்தை தருவானப்பா

அறிந்தும் உண்மைதனை கூட இன்னும் இன்னும் விளக்கங்களோடு அப்பனே ஏன் எதற்கு அப்பனே கூர்முனையாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனடியில் எதனை என்று கூட உள்ளது என்பதை கூட யாரும் அறிவதில்லை அப்பனே

இதனால் வரும் வரும் காலத்தில் இவை எல்லாம் எடுத்துரைக்கும் பொழுது நிச்சயம் புரியும் அப்பா

இதனால்தான் அப்பனே அங்கிருந்தே (ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரின் இப்பிறவி) வருகின்றேன் அப்பனே
இதனால் அவந்தன் மிக  உயரத்திற்கு சென்று விட்டான் அப்பனே!!! அறிந்தும் கூட

அதனால் முருகனையே மறந்து விட்டான் !!!! ஆனாலும் போகனும் சொன்னான் எதை என்றும் அறிய அறிய

அதாவது அப்பா முருகா அறிந்தும் கூட இவந்தன் ஏழையாக இருந்தான் ஆனாலும் யான் கொடுக்கச் சொன்னேன் ஆனால் இப்படி ஆகிவிட்டானே என்று

ஆனாலும் காலத்தின் கட்டாயம் அப்பா ஆனாலும் அதே போல தான் அப்பனே உங்களுக்கும் அதிக அளவு அனைத்தும் கொடுத்து விட்டாலும் அப்பனே இறைவனை மறந்து விடுவீர்கள் அப்பனே

இறைவனுக்கு யாரப்பா சேவைகள் செய்வது நீங்களே எடுத்துரையுங்கள் அப்பனே

உங்களுக்கு கொடுக்க தயாராகத்தான் இருக்கின்றான் முருகன்

ஆனாலும் போகனும் முருகா உனை எவை என்று அறிய அறிய உந்தனுக்கு சேவை செய்ய வருகின்றவர்களுக்கு கொடுத்து விட்டால் இவர்கள் நிச்சயம் பின் அறிந்தும் உயர்ந்து விடுவார்கள் உன்னை பார்ப்பதற்கு அதாவது குழந்தையை பார்ப்பதற்கு யாரும் பின் வர மாட்டார்கள் என்று உங்களை எல்லாம் அப்பனே ஏதோ ஒரு கஷ்டத்தில் நுழைத்து அப்பனே வைத்துள்ளான் அப்பா

இவையெல்லாம் கஷ்டங்கள் இல்லையப்பா!! சோதனைகளப்பா!!!

இவை நிச்சயம் தெரிந்து கொண்டு ஆக வேண்டும் அறிந்தும் உண்மை நிலைகளை கூட

அப்பனே ஏன் எதற்காக இவ் நேரத்தில் வந்து சொல்கின்றேன் என்றால்

(ஓதி மலையில் குருநாதர் இரவு நேரத்தில் வந்து வாக்குகள் உரைத்தார்)

அப்பனே பல ரகசியங்கள் இவ்வுலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது!!!!

அப்பனே கலியுகத்தில் அப்பனே அழியும் காலம் பின் நோய்கள் காலம் அப்பனே எவை என்று அறிய அறிய மனக்குழப்பத்தின் காலம் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய குழந்தை போல் மனதை வைத்துக் கொண்டாலே போதுமானதப்பா அனைத்தையும் கொடுத்து விடுவானப்பா!!!

இதனால் குழந்தையிடம் என்ன விளையாட வேண்டுமோ எப்படி விளையாட வேண்டுமா அப்படி விளையாடி அப்பனே பெற்றுக் கொள்ளுங்கள் அருள்களை அப்பனே

இதுதான் அப்பனே எதை என்று அறிய அறிய

"""""அப்பனுக்கும் மிஞ்சியவன் அப்பனே!!!!!

(ஐந்து முக ஈஸ்வரன் சிவன் என்றால் ஆறுமுக ஈஸ்வரன் முருகன் !!! அப்பன் ஈசனுக்கும் மேலானவன் முருகன்)


அறிந்தும் கூட!!! ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் சனீஸ்வரனும் அப்பனே அறிந்தும் கூட இங்கேயே இருக்கின்றானப்பா

அப்பனே அருள்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றானப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட அனைவருக்குமே அப்பனே அறிந்தும் அறிந்தும் அதாவது அப்பனே நீங்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றீர்களே!!!

(குருநாதர் அகத்தியர் பெருமான் முருகனுக்கு ஓதி மலையில் பூஜைகள் மற்றும் நித்ய சேவைகள் செய்யும் நபர்களுக்கு கூறிய வாக்கு)


 உங்கள் இல்லத்திற்கெல்லாம் அப்பனே பின் அனுக்கிரகமாகவே குழந்தை போல் வந்திருக்கின்றான் அப்பா அழகாகவே அப்பனே

ஆனாலும் அறிந்து கூட குழந்தைக்கு என்ன தெரியும் அப்பனே பின் சர்க்கரையையும் அப்பனே பின் வாயிலிட்டு சென்றுவிட்டானப்பா!!

அதுதான் கர்மா அப்பா (கர்மாவை எடுத்து சென்று விட்டார்) அறிந்தும் கூட...

இதனால் அப்பனே பாசம் தான் இவ்வுலகத்தில் பெரியது அப்பனே மற்றவை எல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே இறைவன் தான் பெரியவன் அப்பா

ஆனாலும் அப்பனே இறைவன் அழியக்கூடியவன் அல்ல

மனிதன் அழியக்கூடியவன் அப்பனே

அழியக்கூடாதவன் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் அப்பனே அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள் அப்பனே உங்கள் பாவங்களும் அடியோடு அழிந்து விட்டது அப்பனே அறிந்தும் கூட


ஆனாலும் ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்பதை எல்லாம் நீங்கள் கேட்கலாம் அப்பனே

ஆனாலும் அனைவருக்கும் அனைத்தும் கொடுத்து விட்டால் அப்பனே... ஏனப்பா இறைவனையும் மறந்து விடுவீர்கள் நீங்கள் அப்பனே

அதனால்தான் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இப்படியே வைத்துள்ளான் என்பேன் அப்பனே

அதனால் சாதாரணமில்லை அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால் எவருக்குமே தெரிவதில்லை அப்பனே

எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே

அதாவது ஒன்பதாம் படைவீடு அப்பனே

எதை என்று அறிய அறிய இதையும் மறைத்து விட்டார்களப்பா மனிதர்கள்!!!

 ஏனென்றால் அப்பனே இங்கு செல்ல செல்ல அப்பனே பல மனிதர்களுக்கு அப்பனே நன்மையாக ஆகிக் சென்று கொண்டே இருந்ததது அப்பனே உயர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள் என்பேன் அப்பனே

ஆனாலும் பல மனிதர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பொழுதெல்லாம் அப்பனே மிக்க செல்வந்தர்கள் அறிந்தும் கூட அதாவது நாம் தான் இங்கு செல்வந்தர்களாக இருக்க வேண்டும் அனைவரும் நம் பேச்சைக் கேட்டு நடந்தாக வேண்டும் என்றெல்லாம் நம் தனக்கு வேலையாட்கள் பின் இருக்க மாட்டார்கள் அனைவரும் உயர்ந்து விட்டால்... என்று அப்பனே மறைத்து விட்டார்கள் அப்பனே

ஆனால் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் அப்பனே யாங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் அப்பனே

அனைத்தும் உங்களுக்கும் அறிந்தும் கூட அப்பனே காட்சியும் தருவோம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட

அதனால் அப்பனே எதை என்றும் புரிந்து புரிந்து அப்பனே அதாவது எதை என்றும் தெரியாமலும் அப்பனே பின் தெரிந்தும் அப்பனே ஆனாலும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன்

ஏன் எதற்கு எதை என்று அறிய அறிய தெரிந்து வாழுங்கள்

தெரிந்து வாழ்வதற்கும் புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!

புண்ணியம் எதை என்றும் அறிய அறிய இவனை காண்பதற்கும் புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!

(ஓதி மலையப்பன் தரிசனத்தை காண்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும்)

அப்பனே நீங்கள் புண்ணிய ஆட்கள் அனைவருமே அதனால்தான் முருகனை அடியோடு அதாவது குழந்தையை மடியின் மீதே அப்பனே.... வைத்து நீங்கள் தான் பாராட்ட வேண்டுமே தவிர எதை என்றும் அறிய அறிய அக்குழந்தைக்கு எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் தெரியுமப்பா!!!

அறிந்து கூட புரிந்து கொண்டீர்களா அப்பனே

வேதனையும் வரலாம் சோதனையும் வரலாம் அப்பனே அறிந்தும் கூட அனைத்தும் பின் பாவிப்பவன் எதை என்று கூட

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

சூரியன் சந்திரன் அப்பனே இரவு பகல் இன்பம் துன்பம் அப்பனே ஆண் பெண் அப்பனே மாறி மாறி எதை என்றும் அறிய அறிய அதேபோலத்தான் அப்பனே

இன்பமே இருந்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனையும் மதிக்க மாட்டாயப்பா நீ

அதனால்தான் அப்பனே துன்பம் என்று ஒன்று எதை என்று கூட கொண்டு வந்தான் எவை என்று கூட இறைவனே அப்பனே

அப்பொழுதுதான் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் புரிய கவலைப்பட தேவையில்லை அப்பனே

முருகன் பின் அனைவரின் வீட்டிற்கும் வந்து அப்பனே ஆனாலும் ஒவ்வொரு இல்லத்திலும் சில பிரச்சினைகள் தான் அப்பனே

ஆனால் நிச்சயம் தருவானப்பா அப்பனே எவை என்றும் அறிய அறிய (ஆலயத்தில் சேவை செய்யும் ஒருவருக்கு) உன் வாக்குகளும் பலிக்கும் அப்பா  அப்பனே அறிந்தும்  கூட வரும் காலத்தில் நல்லோருக்கெல்லாம் புஷ்பத்தை இடுவானப்பா!!!! அறிந்து உன் சேவையை செய்ய அப்பனே!!!

(ஓதி மலையில் ஓதியப்பர் பூவாக்கு மூலம் அதாவது அவர் சூடிய பூக்களை வலது புறம் விழ வைத்து ஆசிகள் தருவதை குருநாதர் குறிப்பிடுகின்றார்)

எவ்வளவு தொந்தரவுகள் வந்தாலும் அப்பனே அறிந்தும் கூட பல தொந்தரவுகள் வந்தும் விட்டது அப்பனே அவையெல்லாம் குழந்தையாக இருந்து அப்பனே பாதுகாத்தானப்பா!!!!

அதனால் அப்பனே எவை என்று அறிந்து அறிந்து கூட உன் முதுகின் மேலும் வந்தான் அப்பா அறிந்தும் கூட எவை என்று புரியப் புரிய அப்பனே

ஆனாலும் ஏதோ என்று எவை என்றும் அறிய அறிய அப்பனே

இதனால் அப்பனே பின் அன்பே உயர்ந்தது அப்பனே

இறைவனுக்கு ஏதும் தேவையில்லையப்பா

அன்பை செலுத்தினால் அப்பனே பன் மடங்கு அனைத்தும் உயர்வும் கொடுப்பான் அப்பா அனைத்தும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே நன்மைகளாகவே முடியும் அப்பா அதனால் அவை இவை இத் தோசங்கள் அத் தோஷங்கள் என்றெல்லாம் அப்பனே இன்றளவிலே விட்டு விடுங்கள் அப்பனே

அனைத்திற்கும் காரணம் இவனே (ஓதிமலை முருகன்)

காலத்தை வென்றவன் அப்பனே எதை என்று அறிய அறிய ஒன்பதாம் படைவீடு அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே...

இதைத் தன் அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் விளக்கத்தோடு இன்னும் அப்பனே அறிந்தும் கூட பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே

அதாவது தன் ஆறறிவை எவன்  பயன்படுத்துகிறானோ... ஏழாவது அறிவிற்கு வந்துவிடலாம் எட்டாவது அறிவுக்கும் வந்து விடலாம் ஆனாலும் எதை என்று அறிய அறிய இவந்தனை அப்பனே தேடுவது அவ்வளவு சுலபம் இல்லையப்பா

குழந்தை அறிந்தும் கூட

ஒன்பதாவது அறிவு அப்பனே அப்பொழுதே பிறவி முடிந்து விடும் அப்பனே அப்பொழுதே காட்சியளிப்பான் அப்பனே

இங்குதான் அப்பனே காட்சியளிப்பான் அப்பனே

எங்கெல்லாம் திரிந்து பின் அலைந்து வந்தாலும் அப்பனே குழந்தையாக முருகன் இங்கு தான் காட்சியளிக்க போகின்றான் அப்பனே

அனைத்து சித்தர்களும் அப்பனே இங்கு தான் காட்சியும் அளிக்கப் போகின்றார்கள் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே மயில்மீது வந்து அப்பனே விளையாடிவிட்டு சென்று வருகின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

சபரிநாதனும் (ஐயப்பன் )அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று புரிய  புரிய இன்னும் அப்பனே விநாயகப் பெருமானும் வருவான் அப்பா அறிந்தும் கூட

அனுதினமும் இவனை பார்த்துக்கொண்டு தான் கேட்பான் அறிந்தும் கூட பின் எவை என்று கூட கந்தனே எதை என்று அறிய அறிய அனைத்தும் விளையாட்டாகவே போய்விட்டது உந்தனுக்கு என்று

ஆனாலும் இதில் கூட பல அர்த்தங்கள் உள்ளதப்பா

அப்பனே கவலைகள் இல்லை நல் ஆசிகள் இன்னும் ரகசியங்களை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே

ஒவ்வொரு வாக்கிலும் அப்பனே பின் அனைத்தும் சொல்லிவிட்டால் அப்பனே மறந்துவிடுவீர்கள் நீங்கள் அப்பனே

இதனால் பின் அடிக்கடி வந்து வாக்குகளும் செப்புவேன் அப்பனே ரகசியங்களை சொல்வேன் அப்பனே உங்களை உயர்த்தியும் விடுவேன் அப்பனே

நலன்கள் ஆசிகளப்பா!!! கோடிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. குருநாதரின் ஓதியப்பர் வாக்குகள் மிகவும் சிறப்பு ...மிக்க நன்றிகள் பல...ஓதிமலையின் தர்மகர்தா எங்கள் உறவினர்... பங்குனி உத்திரம் தேர் திருவிழாவிற்கு அழைத்திருந்தார் சென்றிருந்தோம்... பங்குனி உத்திரத்திற்கு ஓதிமலையில் சிறப்பு வழிபாடு நடந்தது ...கீழே இரும்பொறை பழைமையான ஈஸ்வரப்பா கோயிலில் அன்று சிறப்பு பூஜைகள் நடந்தது மற்றும் ஓதியப்பார் வள்ளி தெய்வானையுடன் அலங்கரித்தல் அருள்பாலித்தார்கள்...தொடர்ந்து ஓதியப்பரின் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தேரியது...அருமையான நாளாக அமைந்தது ...கடவுளின் கருணையால் மறுபடியும் ஓதியப்பரை தரிசனம் செய்ய வேண்டும்...மிக்க நன்றிங்க ஐயா...மனம் நிறைவு கொடுத்த பதிவிற்கு ...நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  3. 🙏ஓதியப்பர் போற்றி 🙏

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  5. om namashivaya
    om namashivaya
    om namashivaya
    om muruga saranam

    Guruvadi saranam
    Thiruvadi saranam

    Nanri Ayyanae

    ReplyDelete
  6. நன்றி அய்யா, மிகவும் பயனுள்ள வாக்கு! அகத்தியர் திருவடி சரணம்!

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  8. குழந்தையாகவும் காட்சியளிப்பான் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இளைஞனாகவும் காட்சியளிப்பான்!!!! அப்பனே முதியவன் போலும் காட்சியளிப்பான்!!!! அப்பனே ஆணாகவும் காட்சியளிப்பான்!!!! அப்பனே பெண்ணாகவும் காட்சியளிப்பான்!!!!! அப்பனே அனைத்தும் இவனே அப்பனே.... இவைகள் தான் ஐந்து முகங்களா?... ஐயா

    ReplyDelete
  9. அனைத்தும் தரும் ஓதிமலை ஸ்ரீ குமார சுப்பிரமணி ஆண்டவா் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    ReplyDelete