​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 16 April 2024

சித்தன் அருள் - 1589 - அன்புடன் அகத்தியர் - மீர் காட், கங்கை கரை!



8/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு-வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசியில் மீர் காட் கங்கை படித்துறை.

அண்ட பிண்டம் எல்லாம் ஆளுகின்ற இறைவா போற்றி!!!!!!

உந்தனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!!!

அப்பனே மனிதன் இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ செய்வான் அப்பனே!!!! எதனால் பாவம் ஏற்படுத்திக் கொள்வான் என்பதை எல்லாம் விளக்கங்களோடு அப்பனே சித்தர்கள் யாங்கள் நிச்சயம் எடுத்துரைப்போம் அப்பனே!!!!

ஏன் எதற்கு அப்பனே!!!!!

மனிதன் பிறந்து விட்டான் ஆனாலும் அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் வாழ வேண்டும் அதற்குத்தானப்பா!!! இத்தனை முயற்சிகள் அப்பனே!!!

ஆனால் மனிதன் யாங்கள் கஷ்டங்களோடு தான் வாழ்வோம் கஷ்டங்களோடு தான் வாழ்வோம் என்றெல்லாம் அப்பனே.... தானே கஷ்டங்களை ஏற்படுத்தி அப்பனே தானே வாழ்ந்து அப்பனே தானே வீழ்ந்து அப்பனே மீண்டும் பின் பிறக்கின்றான் அப்பனே

அதனால்தான் அப்பனே மனிதனின் பிறப்பு அப்பனே ஓர் விசித்திரப் பிறப்பு என்பதையெல்லாம் எடுத்துரைத்து கொண்டே வருகின்றோம் அப்பனே

இதனால் அப்பனே அதாவது அப்பனே தன்னிடமே வாழ்க்கை உண்டு உண்டு என்பதை எல்லாம் மனிதனுக்கு எடுத்துரைத்து எடுத்துரைத்து!!!!.......,......


 ஆனாலும் அப்பனே........ மனிதனுக்கு இவ்வளவு எடுத்துரைத்தும்.... புத்திகள் இல்லையே!??? அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே முதலில் புத்திகள் வந்துவிட்டால் அப்பனே எதை என்றும் புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இவைதன் உணராவிடிலும் கூட அப்பனே உணர்ந்தும் கூட அப்பனே இதை தன் எடுத்துரைக்கின்றோம்.

அப்பனே இதனால் நன்மைகள் தான்.

இதனால்தான் அப்பனே பின் அறிந்தும் கூட உண்மைதனை பின் வெளிக்கொண்டு வராமல் சில சில ரகசியங்களை கூட சித்தர்கள் காத்து காத்து அருள்வார்கள்.

அப்பனே நன்முறைகளாகவே

இதனால் அப்பனே மாற்றங்கள் இன்னும் இன்னும் ஏராளம்...

ஆனாலும் அப்பனே மனிதன் அப்பனே தீய வழியில் தான் சென்று கொண்டிருப்பான் அப்பனே

அதனால்தான் ஈசன் அப்பனே இன்னும் மனிதனுக்கு கஷ்டங்களை ஏற்படுத்தி நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கின்றான் அப்பனே

அதாவது பின் ஓர் தந்தையானவன் அப்பனே நிச்சயம் பிள்ளையை அப்படியே விட்டு விட்டால் அப்பனே தவறான செயல்களில் ஈடுபட்டு பாவத்தை சேகரித்து அழிந்து விடுவான் என்பது தந்தைக்குத் தெரியும்.

அதேபோலத்தான் அப்பனே இறைவன் படைத்தான் அப்பனே.

இறைவனுக்கு தெரியும் அப்பனே!!!

யாரை எங்கு வைப்பது??? யாருக்கு என்ன தரலாம்!!?!! எதை பின் தந்தால் அவந்தன் சரியாகவே பின் நன்மைகள் செய்வான்.. யாருக்கு எத்தகுதி உள்ளது என்பதையெல்லாம் அப்பனே ஆராய்ந்து தான் கொடுப்பானப்பா!!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!! எங்களுக்கு பணம் இல்லையே???? இன்னும் நிலங்கள் இல்லையே??? இன்னும் பிள்ளைகள் இல்லையே??? இன்னும் அறிந்தும் கூட திருமணம் ஆகவில்லையே?? என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் அப்பனே உந்தனுக்கு தகுதிகள் இல்லையப்பா!!!!!!

அதனால்தான் அப்பனே தகுதி இல்லாமல் அப்பனே இறைவன் கொடுத்தாலும் அதை நீங்கள் சரியாகப் பயன்படுத்த மாட்டீர்கள் என்பேன் அப்பனே

அதனால்தான் அப்பனே இறைவனே தடுத்து நிற்கின்றான் அப்பனே

ஆனாலும் இதற்கும் பரிகாரங்களாம் அப்பனே பரிகாரங்களாம்?!?!?!?!!!?!?!?!?! அப்பனே!!......

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதாவது சரியாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே

ஒருவனுக்கு பின் சரியாகவே பணி வேண்டும்.. ஆனால் பணியை பின் தேடுகின்றான் அப்பனே

ஆனாலும் பின் அப்பனே ஓர் முதலாளி அப்பனே நன் முறையாக அத்தகுதி அவந்தனுக்கு உள்ளதா??? என்று யோசிப்பான் அப்பனே!!!

அப்பொழுதுதான் பணியை கொடுப்பான் அப்பனே. அப்பொழுதுதான் அப்பனே பின் அவன் சரியாக செய்வான் அவன் சரியாக செய்து பின் அனைத்திலும் வெற்றிக்கொள்வான் என்பதை கூட ஒரு முதலாளிக்கு தெரியுமப்பா!!!!

அதே போலத்தான் அப்பனே நீங்கள் இறைவனிடத்தில் கேட்டாலும்... இறைவனுக்கு தெரியுமப்பா!!!!

உங்களுக்கு என்ன தகுதி??? என்ன எதை என்று அறிய அறிய.... அதை கொடுத்தால் நீங்கள் செய்வீர்களா???? என்று!!;

ஆனாலும் அப்பனே இவ் மனிதனுக்கே இவ்வளவு புத்திகள் என்றால்... அப்பனே அதாவது இறைவன் கொடுத்தது புத்திகள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி... ஆனால் அதை சரியாகவே பயன்படுத்திக் கொள்வதில்லை என்பேன். அப்பனே

இதனால் அப்பனே இன்னும் இன்னும் சொல்கின்றேன் சித்தர்களிடத்திலும் இறைவனிடத்திலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதையும் கேட்டு விடாதீர்கள் அப்பனே

அன்போடு வணங்குங்கள் அப்பனே போதுமானது

அனைத்துமே பின் கொடுக்க தயாராக இருக்கின்றோம் அப்பனே யாங்கள்!!!!அப்பனே

ஆனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே ஆனாலும் கோபங்கள் பொறாமைகள் போட்டிகள் இன்னும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இவை எல்லாம் நீக்குங்கள்

பிறரைப் பற்றி குறை கூறுதல் அப்பனே அறிந்தும் கூட யான் பெரியவன் இவந்தன் சிறியவன் என்னிடத்திலே அனைத்தும் உள்ளது என்பவை எல்லாம் அப்பனே வேண்டாமப்பா!!!

அப்பனே அனைத்தும் இறைவனிடத்தில் தான் உள்ளதப்பா!!!!

இதனால்தான் அப்பனே கலியுகத்தில் பக்திகளை கெடுப்பானப்பா... அப்பனே மனிதனே பக்திகளை கெடுப்பானப்பா!!! அதைச் செய்தால் இதைச் செய்தால் என்றெல்லாம் அப்பனே

ஆனால் ஒன்றுமே நடக்காதப்பா அறிந்தும் உண்மைதனை கூட

இதனால் அப்பனே உண்மைதனை உணராமல் அப்பனே நீங்கள் எதைச் செய்தாலும் தோல்விதானப்பா

அப்பனே சொல்லிவிட்டேன்

இதனால் உண்மை நிலையை உணர்ந்து அப்பனே நல் முறையாக வெற்றி கொள்ளுங்கள் அப்பனே

ஏன் எதற்கு அப்பனே ஏன் உங்களுக்கு வெற்றி அதாவது உங்களிடத்திலே உள்ளது என்பேன் அப்பனே

அதை நிச்சயம் அவ் சக்தி எங்கு உள்ளது என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே அதை சரியாகவே அப்பனே நல் முறைகளாக இயக்கி விட்டால் அப்பனே அனைத்திலும் வெற்றியாகும் என்பேன் அப்பனே அதை எப்படி இயக்குவது என்பதை எல்லாம் வருங்காலத்தில் தெரிவிப்பேன் என் பக்தர்களுக்கு!!!

ஆனாலும் அப்பனே சரியாக பயன்படுத்திக் கொண்டால் நன்று!!!!!

இல்லையென்றால் என் பக்தர்களே அதை விட்டுவிடுவார்கள் என்பேன் அப்பனே அப்பொழுது நீங்கள் எண்ணிக் கொள்ளுங்கள் அப்பனே எங்கு இருக்கின்றீர்கள் அப்பனே பாவங்களோடு விளையாடிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே....அவ் பாவத்தை அறிந்தும் உண்மைதனை கூட செப்பினால் கூட அப்பனே அவ் பாவம் உங்களை நிச்சயம் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட நிச்சயம் பின் அதாவது அகத்தியன் அப்பனே அதாவது அகத்தியன் சொன்னாலும் அப்பனே உங்களிடத்தில் பாவங்கள் இருந்தால் அதை (அகத்தியர் வாக்குகள்) படிக்கவும் முடியாது அப்பா சொல்லி விட்டேன் கலியுகத்திலே சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அகத்தியனின் வாக்குகளை கேட்பதற்கும் அப்பனே எவை என்று கூட பின் படிப்பதற்கும் அப்பனே தகுதிகள் வேண்டுமப்பா!!!!!

அப்பனே அத்தகுதிகள் இல்லாமல் என்னுடைய வாக்குகளை நீ படிக்கவும் முடியாதப்பா!!!!

 சொல்லிவிட்டேன் அப்பனே

அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள் அப்பனே

ஏன் ???? ஆனாலும் இதில் ஒருவன் சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே அவ்வாறு தகுதிகள் இல்லையென்றால் நீங்கள் ஏன் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று!!!

ஆனால் அப்பனே இறைவன் அதாவது ஈசன் கஷ்டத்தை பின் கொடுத்து அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே துன்பங்கள் பலமாக நோய்கள் கொடுத்த பிறகு அப்பனே அப்பொழுது தேடுவான் அகத்தியன் என்ன சொன்னான்???? புஜண்டன் என்ன சொன்னான்??????? இன்னும் சித்தர்கள் என்னென்ன சொன்னார்கள் என்று!!!!

அப்பொழுது அப்பனே உபயோகப்படுத்தி அப்பனே மேன்மை காணுவார்கள் அப்பனே

அதாவது அப்பனே எதிரிலே இருந்தால் இறைவன் அப்பனே அதாவது இறைவன் நேராக வந்தாலும் இறைவனை பின் அதாவது இறைவனே யான் இறைவன் என்று சொன்னாலும் நிச்சயம் மனிதன் சிரிப்பானப்பா!!!

இதுதான் கலியுகம் அப்பனே

மாய உலகம் அப்பனே

நோய்கள் காலம் நோய்கள் காலம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

நோய்களுக்கு யார் காரணம் என்பதை கூட உணர்ந்தீர்களா ?? அப்பனே

நீங்கள் தான் என்பேன் அப்பனே

ஆனாலும் அதைக் கூட அதற்கு கூட ஔஷதங்களையும் (மருந்துகள் )சொல்லி விட்டேன் அப்பனே!!! ஆனாலும் அதைக் கூட யாரும் உபயோகப்படுத்தவில்லை

ஏன் உபயோகப்படுத்தவில்லை என்றால் அப்பனே பாவங்களப்பா பாவங்கள்

அப்பனே பாவங்கள் இருந்தால் நிச்சயம் யான் சொல்லியும் செய்ய முடியாதப்பா சொல்லி விட்டேன் அப்பனே

அதனால் நிச்சயம் அகத்தியன் செப்புவதை செய்ய முடியவில்லை என்றால்...... அடுத்தது கஷ்டங்கள் என்று நீங்கள் உணர வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே

இதை நிச்சயம் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

அதாவது அனைவருக்குமே வாக்குகள் வேண்டும் வாக்குகள் வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் ஆனாலும் அப்பனே ஆனாலும் யான் சொல்லியதை சரியாகவே பின் பயன்படுத்துவதில்லையே அப்பனே பின் அப்படி சொல்லியும் பிரயோஜனமில்லை

அதனால் தான் அப்பனே இவன் செய்வானா ??? பின் செய்ய மாட்டானா ?? என்றெல்லாம் யோசித்துத்தான் யாங்கள் வாக்குகள் செப்புவோம் என்பேன் அப்பனே

ஏனென்றால் பின் பல மனிதர்களிடம் சென்று சென்று அவன் மூளையையே கசக்கி விட்டார்கள் என்பேன் அப்பனே... அதைச் செய்தால் இவை நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும் என்பதையெல்லாம்....

ஆனால் கடைசியில் மனிதன் பின் பொய்கள் என்று எடுத்துரைத்து விடுகின்றான் அப்பனே

இதனால் தான் அப்பனே வேண்டாமப்பா!!!!

கலியுகத்தில் அப்பனே நோய்கள் நெருங்கிக் கொண்டே வருகின்றது அப்பனே.....

இன்னும் இன்னும் தீர்க்க முடியாத நோய்கள் எல்லாம் அதாவது மனிதனுக்கு எட்டாத பின் அறிந்து பின் அறியாமல் கூட நோய்கள் வருமப்பா!!!! அவையெல்லாம் நிச்சயம் வரும் காலத்தில் பார்க்கத்தான் போகின்றது

அதனாலதான் சித்தர்கள் நிச்சயம் அப்பனே வந்து வந்து வாக்குகள் செப்பி செப்பி மாற்றி கொண்டிருக்கின்றோம் அப்பனே

இதை நிச்சயம் பயன்படுத்திக் கொண்டோர் அப்பனே நன்று பயன்படுத்திக் கொள்ளாதோர் அப்பனே நிச்சயம் எத்தனையோ பேர்களை பார்த்து விட்டேன் அப்பனே நிச்சயம் பொறாமைக்காரர்கள் அப்பனே

அகத்தியன் அதாவது இவ் அகத்தியனை நம்பி அப்பனே வாக்குகள் வந்தாலும் அது பொய் என்று சொல்கின்றான் அப்பனே.... அப்பொழுது அவன் நிலைமை என்னவென்று??? யோசித்துப் பார் அப்பனே

எதை என்றும் புரிய புரிய அப்பனே இப்படித்தான் மனிதர்கள் இருக்கின்றார்கள் அப்பனே

பின் அதாவது சித்தனா???? பார்க்கப் போகின்றான்!?!?!! இறைவனா பார்க்கப் போகின்றான்?!?;!;! என்றெல்லாம் அப்பனே பின் தான தர்மத்தோடு வாழாமல் அப்பனே தர்மம் தலைகீழாக மாறுமப்பா இக் கலியுகத்தில் அப்பனே சொல்லிவிட்டேன்.

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட

அப்பொழுது உண்மையைச் சொன்னால் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பேன். அப்பனே... பொய் சொன்னால் அப்பனே ஒத்துக் கொள்வீர்கள் அப்பனே இதுதானப்பா கலியுகம்...

ஆனாலும் அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே அதனால்தான் இறைவனே கஷ்டங்களை வைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே

அப்பனே புவி அதிருமப்பா (பூமி அதிர்ச்சி பூகம்பம்) சொல்லிவிட்டேன் அப்பனே அப்பொழுது யாரும் காப்பாற்ற மாட்டார்கள் அப்பா மனிதனை

அதாவது இன்னும் வரப் போகின்றது அப்பா கடும் மழை கடும் போராட்டம் கடும் வறட்சி அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய இன்னும் நோய்கள் அப்பனே பின் அதாவது ரத்த மழையும் பொழியும் அப்பா.... அறிந்தும் கூட அப்பனே

எவை என்றும் அறிய அறிய மனிதன் அப்பனே எதை என்றும் அறிய அறிய மாடுகளைப் போல் பிறப்பானப்பா!!! நாய்களைப் போல் பிறப்பானப்பா!!! கோழிகளைப் போல் பிறப்பானப்பா!!!! பன்றிகளைப் போல பிறப்பானப்பா!!!!

அப்பப்பா!!!!!!! தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

மனிதன் பாவமப்பா!!!!!

அதனால்தான் இறங்கி வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே..... அதாவது இக் காசிதனிலே அப்பனே....

இக் காசி தன்னில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல விஷயங்கள் இருக்கின்றது அப்பனே அவற்றையெல்லாம் எடுத்துரைக்கின்றேன் அப்பனே

அன்பு மகன்களே தெரிந்து கொள்ளுங்கள் பாசத்தோடு இவ் அகத்தியன் மாற்றிக் கொண்டிருக்கின்றான்

புஜண்டன் கூட நிச்சயம் திருந்தப் போவதில்லை ஒரு அடி அடிப்போம் என்று என்னிடத்தில் கூறிவிட்டான் அப்பனே

ஆனாலும் அப்பனே யானே பொறுத்து இருக்கின்றேன்!!!! ஏனென்றால் அகத்தியனை நம்பி அறிந்தும் அறிந்தும் கூட

ஈசன் கட்டளை!!!

இட்ட கட்டளை ஈசன் அப்பனே பின் அகத்தியனே!!!!!! அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அதாவது இப்புவி இருக்கும் வரை உன் சேவையை தொடர்க!!!!!!!

நவகிரகங்கள் இருக்கும் வரை உன் சேவையை தொடர்க!!!!!
அறிந்தும் கூட நட்சத்திரங்கள் இருக்கும் வரை உன் சேவையை தொடர்க!!!! என்றெல்லாம்!!!

ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய என்னால் அனைத்தையும் மாற்ற இயலும்!!!!

அன்பு மகன்களே கேட்டுக் கொள்ளுங்கள் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட!!!

அதனால் முதலில் உண்மைதனை உணராமல் நிச்சயம் அப்பனே பின் என்ன செய்தாலும் கிடைக்காதப்பா சொல்லிவிட்டேன் அப்பனே

அதாவது அப்பனே அறிந்தும் கூட அண்ணாமலையில் ஒருவன் இருந்தானப்பா!!!!

அப்பனே அதாவது தாய் தந்தையர் மனைவி உற்றார் உறவினர் தன் மகன்கள் மகள்களோடு வாழ்ந்து வந்தானப்பா!!!!

ஆனாலும் அப்பனே அவந்தனுக்கு பின் ஈசன் மீது பின் அளவற்ற பிரியமப்பா!!!!
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!!
இதனால் அப்பனே மாற்றங்கள் காண!!!

அப்பனே ஆனாலும் இறைவனை அதாவது நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் அறிந்தும் உண்மை நிலை புரியவில்லை.

இதனால் மகன்களுக்கு திருமணமாக வேண்டும் மகள்களுக்கு திருமணமாக வேண்டும் இன்னும் சொத்துக்கள் குவிய வேண்டும் இன்னும் பணங்கள் குவிய வேண்டும் என்றெல்லாம் ஈசனோடு உரையாடிக் கொண்டிருந்தான்.

ஆனால் ஈசனோ!?!? பார்த்து பார்வதி தேவியிடம் இவன் பைத்தியக்காரன்... ஆனால் நிச்சயம் இவந்தன் நடிக்கின்றான் அதாவது நமச்சிவாயா என்று சொல்லிவிட்டால் அனைத்தும் கொடுப்பேன் என்று நினைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருக்கின்றான்... ஆனால் யான் கொடுக்கப் போவதில்லை என்று

ஆனால் பாசத்தோடு நிச்சயம் பார்வதி தேவியும் அறிந்தும் கூட பார் அறிந்தும் கூட இப்படியா ஆனாலும் நிச்சயம் உன்னை அதாவது பாசத்தோடு வணங்குகின்றானே!!!! ஏதாவது கொடுப்போம் என்பதெல்லாம்...

இதனால் ஈசனும் !!! சரி!!! பார்வதி தேவியே நிச்சயம் கொடுக்கின்றேன் அறிந்தும் கூட....

நீயே பார்!!!! உன் பக்தனை அதாவது என் பக்தன் என்று சொல்கின்றாய் அல்லவா!!!!

நிச்சயம் பார் என்று!!!!

ஆனாலும் அப்பனே நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் (கிரி)வலங்கள் வருவானப்பா!!!!!

ஆனாலும் அப்பனே பின் பார்வதி தேவியிடம் சொல்லிவிட்டு அதாவது ஈசனே புறப்பட்டான்!!!!

பார்வதி தேவியே!!!!! அதாவது மனிதனை பார்!!! எப்படி இருக்கின்றான் என்று!!!!!

ஆனாலும் பின் யான் செல்கின்றேன் அவனிடத்திற்கு என்று!!!

பின் அதாவது மனித ரூபம் எடுத்து ஈசனும் வந்தான்!!!!
அவனிடத்திற்கு.....

அப்பா!!!!!!! நமச்சிவாயா நமச்சிவாயா என்று கூறிக் கொண்டிருக்கின்றாயே!!!!

இவ் மந்திரம் என்ன???

அறிந்தும் கூட ஈசன் பின் ஏதாவது தந்தானா??? என்று!!! அதாவது ஈசனே!!!!(மனித ரூபத்தில் சென்று கேட்டார்)

அப்பனே அறிந்தும் கூட

ஆனாலும் அவன் சொன்னான்!!!!(நமசிவாய மந்திரம்)பின் ஏதோ பின் வாயில் வருகின்றது இதை சொன்னால் நல்லது என்றார்கள் இதைச் சொன்னால் அனைத்தும் தருவான் என்று சொன்னார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் அதை தெரிந்து கொண்டு தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்று!!!!

ஆனாலும் அப்பனே சரி அறிந்தும் கூட அதாவது அறிந்தும் உண்மைதனை ஈசனே பின் அதாவது நீயும் நமச்சிவாயா நமச்சிவாயா என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாய்!!! யானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் உந்தனை பல வருடங்களாக!!!!!!

அதாவது இப்படித்தான் இருக்கின்றாய் உன் குடும்பமும் இப்படித்தான் இருக்கின்றது முன்னேற்ற பாதையும் இல்லை!!!!

இதனால் யான் பிச்சை எடுத்து இருக்கின்றேன் ஏதாவது சில   அறிந்தும் கூட அதாவது  மூட்டை பலமாக
(யாசகம் பெற்று சேர்த்து வைத்த பணமூட்டை)

இவ் மூட்டையை நீயே எடுத்துச் செல் என்று!!!

ஆனாலும் அவன் சொன்னான்!!!!!

சீ. !!!!!!!!!......... பிச்சைக்காரன் நீ !!!........

உன்னிடத்தில் இருந்து இதைப் யான் பெற்றுக் கொள்வதா??????

வேண்டாம்!!!!!!! நீ செல்!!!

என்றெல்லாம் பின் அதாவது ஈசனையே அவமானப்படுத்தினான் என்பேன் அப்பனே

அப்பனே புரிகின்றதா???? அப்பனே!!!!

எப்படி இக்கலி யுகத்தில் பக்திகள் இருக்கின்றது???

அதுவும் அப்பனே பின் இதுவும் சில ஆண்டுகளுக்குள்ளே நடந்தது என்பேன் அப்பனே..

இதனால் ஈசன் மீண்டும் சொன்னான்....

அப்பா!!!!! இது உதவுமப்பா உந்தனுக்கு!!!!! என்று!!!!

ஆனாலும்  அவந்தனோ (மனித ரூபத்தில் வந்த) ஈசனை. பார்த்து!!!!

நிச்சயம் நீ பிச்சை எடுத்த பொருள்.... எமக்குத் தேவையில்லை!!!!

நிச்சயம் பின் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் பின் ஈசனே சொன்னான்!!!!

நீ நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கின்றாயே நிச்சயம் அறிந்தும் கூட அவந்தனே கொடுத்தான் என்று எண்ணிக் கொள்ள வேண்டுமல்லவா!!!

நகை தான் !!!! பலமாக அப்பனே !!!!! 

நகைத்தான் அப்பா அவன் ஏதோ!!!!!!! (நமச்சிவாயா நமசிவாயா என்று)அழைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!

ஈசன் வருவானா?? என்ன!!!

பின் தவறான கணக்கை நீ போட்டு விட்டாய் என்று ஈசனே!!!....... 

அப்பனே ஆனால் கீழ்நோக்கி பின் பார்த்தான் பார்வதி தேவியை அறிந்தும் அறிந்தும் கூட நகைத்துப் பார்த்தான்....

பார்வதி தேவியும் மனம் பின் கலங்கி நேரடியாக வந்து விட்டாள்!!!! மனித ரூபம் எடுத்து!!!!

அப்பப்பா!!!! இவர் முதியவர் அதாவது அறிந்தும் கூட எதையோ கொடுக்கின்றார் அல்லவா வாங்கிக்கொள் என்று!!!!!

ஆனால் இவ் தரித்திரன் சொன்னான்!!!! பின் தகாத வார்த்தையில் திட்டி விட்டான் அப்பனே!!!!

பார்த்தீர்களா அப்பனே!!!

இதனால் தான் அப்பனே இறைவன் எங்கிருக்க வேண்டுமா அங்கு இருந்தால் தான் மதிப்பு என்பேன் அப்பனே!!!!

இறைவன் நேரடியாக வந்தாலும் கலியுகத்தில் ஒத்துக் கொள்ள மாட்டார்களப்பா!!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட மனிதன் யான் இறைவன் என்று சொன்னால் ஒத்துக் கொள்வார்களப்பா!!!!

ஆனால் இறைவன் யான் இறைவன் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்களப்பா!!!

அதனால் தான் அப்பனே அழிவுகள் மிஞ்சி காணப்படுகின்றது என்பேன் அப்பனே

இன்னும் இன்னும் அப்பனே மனிதனுக்கு போராட்டங்களப்பா!!!! தூக்கமின்மை அப்பனே இன்னும் எவை என்று அறிய அறிய அப்பனே பின் உடம்புகள் பலம் இழக்கும் எதை என்று அறிய அறிய!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே

உடம்பில் அப்பனே பல கோடி துகள்கள் எதை என்றும் அறிய அறிய பல துளைகள்(ஓட்டைகள்) உள்ளதப்பா அறிந்தும் கூட அவையெல்லாம் அப்பனே சில வழிகளில் செல்கின்ற பொழுது அடைப்புகள் ஏற்பட்டு அப்பனே கிரகங்களின் சக்திகளும் பின் நட்சத்திரங்களின் சக்திகளும் கூட உள் புகாதப்பா!!!!!!

அப்பனே இவைதனை வெளியே எடுக்க வேண்டும் என்பேன் அப்பனே உடம்பை நன்கு அப்பனே பின் நீராடவும் அப்பனே அதாவது பல பல உபகரணங்களை தேய்த்து நீராடினாலும் அப்பனே நிச்சயம் அருந்தினாலும் முடியாதப்பா!!!!

அப்பனே அதனால் தான் பல புண்ணிய நதிகளை கூட யான் ஏற்படுத்தினேன் அப்பனே!!!!

பலமாக கதிர்கள் (மேலிருந்து விழும் கதிர்வீச்சுக்கள்) விழும் இடத்தில் அப்பனே நிச்சயமாக அப்பனே நீராடினால் அப்பனே பின் அதாவது அக்குழிகள் அப்பனே.... நிச்சயம் அப்பனே அக்குழிக்குள் குவிந்து உள்ளே செல்லும் அப்பா!!!! நல் காற்று வீசும் அப்பா தரித்திரங்கள் நீங்கும் அப்பா!!!!

(கடந்த காசிவாக்கில் புண்ணிய நதிகளில் நீராடும் பொழுது செல்கள் உடம்பிற்குள்ளே செல்லும் பழைய செல்கள் வெளியே சென்று விடும் என்று குருநாதர் கூறியிருந்தார் அல்லவா மேலிருந்து விழும் கதிர்வீச்சுக்கள் அணுக்கள் புண்ணிய நதிகளில் மிதந்து கொண்டே இருக்கும் நம் உடம்பில் உள்ள துளைகள் அதாவது குருநாதர் குறிப்பிடும் குழிகள் வழியாக புதிய செல்கள் உள்ளே செல்லும்)

அதனால்தான் சொன்னேன் அப்பனே!!!!

அதைக் கூட செய்ய மாட்டார்கள் என்பேன் அப்பனே என் பக்தர்கள்!!!!!

எப்படியப்பா????? நல் காலம் பிறக்கும் ??? அப்பனே!!!!

அப்பனே நல்லவை தீயவை அப்பனே நீங்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே அதனால் அப்பனே தீமையாக நீங்கள் எண்ணிக் கொண்டால் பின் தீமையே நடக்கும்!!!!

நீங்கள் நன்மைகளாக எண்ணிக் கொண்டால் நன்மைகளே நடக்கும் அப்பனே

எப்படி என் வாக்குகளை பரப்ப வேண்டும் என்பதையெல்லாம் யானே யூகித்து அப்பனே யானே பரப்புகின்றேன் அப்பனே!!!!

நன் முறைகளாகவே அப்பனே!!!!

இன்னும் இன்னும் அப்பனே உலகத்தில் மாற்றங்கள் ஏற்படுமப்பா!!!!!

எதற்காக என்றெல்லாம் அப்பனே இன்னும் இன்னும் மனிதன் விஞ்ஞானத்தின் மூலம் அப்பனே மனிதனை மனிதன் அதாவது அழிவதைத்தான் பார்ப்பானப்பா!!!

ஆனாலும் யாங்கள் இருக்கின்றோம் அப்பனே!!!

அதாவது உண்மையாக நேர்மையாக அப்பனே பின் நிச்சயம் நீதிமானாக அப்பனே பின் தர்மம் காப்பவனாக இருந்தால் அப்பனே அவர்களை யாங்கள் காத்து நிச்சயம் முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்று  உயர்வான இடத்தில் வைப்போம் என்பேன் அப்பனே

அவன் மூலம் அனைத்தும் செய்து விடுவோம் என்பேன் அப்பனே

ஆனால் அப்பனே மனிதனுக்கு உடனடியாக நடந்து விட வேண்டுமாம் !?!?!?!?!?!?!?!?! அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நீங்களே சிந்தித்துப் பாருங்கள் அப்பனே அறிந்தும் கூட

திருமணத்திற்காக அப்பனே எத்தனை ஆண்டுகள் அப்பனே எவை என்று அறிய அறிய பொறுத்துள்ளீர்கள் அப்பனே குழந்தைக்காக எத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட பணிக்காக கல்விக்காக எதை என்றும் அறிய அறிய வெற்றிக்காக எத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே

ஆனால் கர்மா அப்பனே உடனே விலகி விட வேண்டுமென்றால் அப்பனே அப்பொழுது மனிதனின் புத்தி எங்கு உள்ளதப்பா????

இதனால்தான் அறிவுகளே இல்லை அப்பா மனிதனுக்கு!!!! அறிவுகளே இல்லை!!!!

அப்பனே அறிவுகள் பலமாக இறைவன் கொடுத்து விட்டான் அப்பனே ஆனால் அதை சரியாகவே பயன்படுத்தவே இல்லையே அப்பனே

அப்பனே இன்னும் அமாவாசை திதி பற்றியும் சொல்வேன் அப்பனே இன்னும் அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய பௌர்ணமி திதி அதனைப் பற்றியும் சொல்வேன் அப்பனே

உபயோகித்துக் கொண்டால் நன்று!!! உபயோகிக்கப்படாமல் இருந்தால் அப்பனே நீங்கள் நிச்சயம் கஷ்டங்கள் எவை என்று கூட பட்டுப்பட்டு மீண்டும் அப்பனே எங்களிடத்தில் தான் வரப் போகின்றீர்கள் அப்பனே

அப்பொழுது நிச்சயம் அகத்தியனே என்றால் கூட அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே எப்படியப்பா????

அதற்குள்ளே பாவங்கள் சேர்த்து விடுவீர்கள் என்பேன் அப்பனே நிச்சயம் அப்பனே பாவத்தை சேர்த்துக் கொள்வீர்கள் என்றால் அப்பனே

நிச்சயம்  இவ் அகத்தியனை நெருங்கவும் முடியாதப்பா!!!!!!

அப்பனே அகத்தியா!!! என்று சொல்ல வேண்டுமே தவிர அப்பனே எதை என்றும் அறிய ஐயோ யான் பாவம் என்று தான் சொல்ல வேண்டும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே

அதாவது பாவத்திற்கு பாவம் அப்பனே புண்ணியத்திற்கு புண்ணியம் அப்பனே பணத்திற்கு பணம் அப்பனே!!!!

இதை யூகித்துக் கொள்ளுங்கள் அப்பனே நலன்களாகவே!!!

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் அவ் ஞானியும் அப்பனே.... ஆனாலும் இல்லத்திற்கு வந்து விட்டால் அப்பனே அமைதியாக!!!!!! உட்கார்ந்தான்!!!

ஆனாலும் அறிந்தும் கூட உண்மை கூட அவன் இல்லத்தவள் (மனைவி )எடுத்துரைத்தாள்!!! அறிந்தும் கூட !!!

ஈசன் நிச்சயம் வருவான் ஏனென்றால் என் மனதில் நிச்சயம் திருத்தலத்தை கட்டியுள்ளேன் என்று

ஆனாலும் அப்பனே இவன் சொன்னான் அறிந்தும் உண்மைதனை கூட

இவ்வாறு நிச்சயம் பின் கொடுத்தார்கள் யான் வாங்கவில்லை என்று!!!

ஆனாலும் பின் அவ் மங்கை அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அதாவது அவர்களுக்கும் பின் மங்கை(மகள்) எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று கூட பின் மகன்கள் என்றெல்லாம்...

ஆனாலும் அறிந்தும் கூட தன் மனைவி ஐய்யய்யோ விட்டு விட்டாயே!!!!!! இறைவனை!!!!!!!!!

அவன் ஈசனே அவர்கள் பார்வதி தேவியே!!!

ஆனால் இத்தனை நாட்கள் அங்கு இங்கும் அதாவது சுற்றி திரிந்து எதை என்றும் அறிய அறிய புரிந்து கொள்ளவில்லையே.... அவன் நிச்சயம் ஈசன் தான்!!!

ஏனென்றால் என் மனதிற்குள்ளே திருத்தலத்தைக் கட்டி யான் வழிபட்டுக் கொண்டிருக்கின்றேன் அன்போடும் கூட எதை என்றும் எதிர்பார்க்காமல்...

ஆனால் விட்டு விட்டாயே என்றெல்லாம்!!!!!

ஆனால் அடித்தான் எவை என்றும் அறிய அறிய..... நீ இல்லத்திலே இருக்கின்றாய்!!!! யான் நிச்சயம் திருத்தலம் திருத்தலமாக அலைகின்றேன் எந்தனுக்கு பின் காட்சிகள் கொடுக்காதது!?!?! உந்தனுக்கா!?!?!?! கொடுத்து விடப் போகின்றான்!?!?!?!!! நீயா உணரப் போகின்றாய்!?!?! என்று அடித்தான் அப்பனே!!!!

அப்போது ஈசன் வந்தான் அறிந்தும் உண்மைதனை கூட!!!!!

மீண்டும் மறுபடியும் எடுத்து அப்பப்பா!!!! நீ ஈசன் பக்தியில் இருந்து இவ்வாறு நிச்சயம் இப்படி துன்புறுத்தலாமா?? என்று!!!

ஆனால் ஈசனை அறிந்தும் கூட நிச்சயம் அப்பனே திட்டி தீர்த்தான் கோபத்தோடு!!!!! அப்பனே!!!

அப்பனே இவ்வாறுதானப்பா நன்மைகள் செய்தால் அப்பனே இவ்வுலகத்தில் யாரும் ஏற்க மாட்டார்களப்பா!!!!

இறைவன் நன்மை செய்தால் அப்பனே பொய் என்று சொல்லிவிடுவான் அப்பனே

சொல்லிவிட்டேன் அப்பனே

மனிதன் பின்  நன்மை அதாவது அப்பனே மனிதன் யான் சித்தன் என்றால் நம்புவான் அப்பனே... யான் இறைவன் என்றால் நம்புவான் அப்பனே..... ஆனால் நேரடியாக இறைவன் வந்தால் யான் இறைவன் சொன்னால் சிரிப்பான் அப்பனே!!!! நான் சித்தன் என்றால் சிரிப்பான் அப்பனே!!!

அதனால் தான் அப்பனே நிச்சயம் அழிவினை நோக்கி செல்கின்றது அப்பனே

இன்னும் அப்பனே கடல் கொந்தளிக்குமப்பா... சொல்லிவிட்டேன் அப்பனே

பின் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அப்பனே....

ஆனாலும் காப்பாற்றுவேன் என்பேன் அப்பனே

ஆனாலும் பின் மதி அதாவது மயங்கி விடும் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ....

இதை நிச்சயம் என் பக்தர்களுக்கு நிச்சயம் தெரிவிக்க வேண்டும் உடனடியாகவே சொல்லிவிட்டேன்!!!!

அறிந்தும் கூட

அதனால் அப்பனே உண்மையை உணருங்கள் அப்பனே!!!! உங்களிடத்திலே அனைத்து சக்திகளும் இருக்கின்றது அப்பனே ஒவ்வொருவரும் கூட போராட்டம் பட்டு அப்பனே உயர்ந்து நில்லுங்கள் அப்பனே நிச்சயம் யான் வழி நடத்துகின்றேன் அப்பனே

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இதனால் அவ் ஞானி அப்பனே எதை என்றும் அறிய அறிய

அதாவது ஞானி என்றா !?!?!?!?!?!? சொல்ல வேண்டும் ??????????? அப்பனே !!!!!!

கோபங்கள் தான் வருகின்றது!!!!

ஆனாலும்  அப்பனே யானே அதாவது நீங்கள் என்னென்ன தவறுகள் செய்கின்றீர்கள் என்னை நம்பியே என்னென்ன தவறுகள் செய்கின்றீர்கள்

ஆனாலும் அனைத்தும் பின் எவை என்றும் புரிய புரிய பொறுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்... ஆனால் அப்பனே

மனிதன் அப்பாற்பட்டவன் இல்லை அப்பா..... இதனால் அப்பனே.... பக்தியில் உள்ளவன் ஏனப்பா???? உயர்ந்த நிலையை அடைவதில்லை??????

ஏனென்றால் பொய்களப்பா!!! பொய்கள்!! அவ்வளவு பொய்கள் அப்பனே!!!!

மனிதன் அதாவது எதை என்று கூட பக்திகள் இருந்து அப்பனே உயர்ந்து விடலாமே!!!!

ஏன் பக்தி இல்லாதவன் உயர்ந்து விடுகின்றான் ??? அப்பனே !!!!

சொல்லுங்கள் நீங்களே!!!

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் அப்பனே அறிந்தும் கூட!!!!

இதனால் தான் அப்பனே பக்தியில் இருந்து பொய் சொல்லி கொண்டு நடித்துக் கொண்டிருப்பவனை பார்த்து இறைவன் நிச்சயம் இன்னும் நீ அப்படியே இரு!!!! என்று சொல்லிவிட்டு போய்விடுகின்றான் அப்பனே!!!

ஆனால் நீதி நேர்மை பின் தவறாமல் தர்மத்தை கடைப்பிடித்து அன்போடு வாழ்பவனை அப்பனே பின் எவை என்று அறிய அறிய உயர்த்தி விடுகின்றான் இறைவன்!!!!

அவ்வளவுதான் அப்பா!!!

பின் பொறுத்திருந்து எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சொல்லி சொல்லி அப்பனே அதாவது அப்பனே மனிதன் அழிய வேண்டும் என்றெல்லாம் அப்பனே பொய் கணக்கு இட்டு மனிதன் பரப்பி விட்டான் அப்பனே..... அப்படியே பரப்புகின்றார்கள் என்பேன் அப்பனே

இதனால் தோல்வியில் முடிந்து விடுகின்றது வாழ்க்கை என்பேன் அப்பனே

வெற்றி கொள்ளுங்கள் அப்பனே !!!!  இன்னும்  அப்பனே பின் எவ்வாறு நவகிரகங்களை கட்டுப்படுத்தலாம் என்பதை எல்லாம் அப்பனே எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே

இவ்வாறு பின் கட்டுப்படுத்தினால் அப்பனே நிச்சயம் யான் தெரிவேனப்பா!!! உடனடியாக அப்பனே!!!

அன்பு ஒன்றே போதுமானதப்பா நிச்சயம் வேறொன்றும் தேவையில்லையப்பா!!!

தர்மத்தை பின் கடைப்பிடித்துச் சென்றாலே அப்பனே யாங்கள் வந்து அழகாக அங்கு நிற்போம் அப்பனே!!!

அறிந்தும் அறிந்தும் இன்னும் இன்னும் விளக்கங்கள் இருக்கின்றது அப்பனே

இன்னும் அப்பனே விதியை கூட யான் மாற்றுகின்றேன் என்று சொல்கின்றேன் அப்பனே

ஆனாலும் அப்பனே நீங்கள் அதற்கு பின் எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய கஷ்டங்கள் தான் வேண்டும் என்று கூட அப்பனே

அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே

பிரயோஜனம் இல்லையப்பா

அன்பை எவை என்றும் அறிய அறிய செலுத்துங்கள் அப்பனே

தாயானவள் எதை என்றும் அறிய அறிய அதாவது பிள்ளையை சரியாகவே புரிந்து கொள்வாள் பின் பசிக்கும் பொழுது கூட!!!!

அதேபோலத்தான் அப்பனே உங்களை சரியாக புரிந்து கொண்டவன் இவ் அகத்தியன்!!!!

அதைவிட எவை என்றும் அறிய அறிய என்ன வேண்டும் அப்பனே!!!!

விதியையும் கூட அப்பனே நிச்சயம் மாற்றி எவை என்று கூட அனைத்தும் தருகின்றேன் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன்

ஆனாலும் நீங்கள் அதற்கு தகுந்தார் போல் இல்லையப்பா

அப்பனே சொல்லிவிட்டேன் நோய்கள் வந்து கொண்டே இருக்கும் நோய்கள் வந்து கொண்டே இருக்கும் அப்பனே

எச்சரிக்கின்றேன் அப்பனே மீண்டும்.... மூலிகைகளைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள் அப்பனே

எடுத்துக் கொண்டால் நன்று

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது ஒரு வருடம் இல்லை இரு வருடம் அப்பா இன்னும் அப்பனே அதற்கு மேலே நிச்சயம் இயற்கையை  மருந்துகளையும் உபயோகித்துக் கொண்டால் தான் அப்பனே பின் ரத்தத்தில் ஊறி எந் நோயும் தாக்காதப்பா!!!

ஆனால் ஒரு நாளில் மூலிகை சரியாகிவிடும் ஆனால் எங்கள் மந்திரம் !!!
அது தேவை!!
 புண்ணியம் இருந்தால் தான் அப்பனே 

பின் ஆனால் கலியுகத்தில் பாவங்கள் அதிகமாக உள்ளதப்பா அதனால் பின் வருட கணக்கிலும் அப்பனே (உடலில் ரத்தத்தில்)ஊறுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் ஔஷதங்களை கூட அப்பனே

ஆனால் ஒரு வாரம் பின் பயன்படுத்தி விட்டு சரியாகவில்லை இருவாரம் பயன்படுத்திவிட்டு சரியாகவில்லை மும் மாதம் சரி எவை என்றும் அறிய அறிய.....

ஆனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே அதற்கும் விதி அப்பனே எவை என்று அறிய அறிய வழிகள் உண்டப்பா!!!!

இதனால் அப்பனே அதாவது பின் பத்தாம் வகுப்பு எதை என்று அறிய அறிய அப்பனே அதன் மேலே பின் ஓத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு 4-ஆம் வகுப்பு என்றெல்லாம் அப்பனே செல்கின்றீர்கள் அல்லவா

அதேபோலத்தான் அப்பனே இயற்கை கூட அப்பனே எவை என்று அறிய அறிய

முதலிலே அப்பனே மூன்று மாதங்கள் தேவைப்படுகின்றது அதாவது அப்பனே பின்பு அப்பனே இரண்டு மாதங்கள் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே அதிகரிக்க அதிகரிக்க ஆனாலும் இவ் ஐந்து மாதங்களில் எவை என்று அறிய அறிய யாரும் உண்ண முடியாதப்பா

ஏனென்றால் கர்மத்திற்காகவே அப்பனே எதை என்று அறிய அறிய நோய்கள் வரும் அப்பா

ஆனால் பின் ஈசன் விட்டு விடுவானா என்ன?????

அதனால்தான் அப்பனே முயற்சி செய்யுங்கள்!! முயற்சி செய்யுங்கள் கர்மத்தை அழித்து விடுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே

முயற்சி செய்தால் யாங்கள் கரைத்து விடுவோம் அப்பனே உடனடியாகவே அப்பனே இதனால் உயர்ந்து விடுவீர்கள் அப்பனே

இதனால் வாழ்க்கை உங்களிடத்தில் இருக்கின்றது அப்பனே சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே

இன்னும் அப்பனே தெளிவாகவே தெரிவிக்கின்றேன் அப்பனே

ஏன் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிவிட்டேன் அப்பனே

மீண்டும் மீண்டும் அப்பனே உரைக்கின்றேன் அப்பனே
நல்வழி படுத்துங்கள் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே நல்முறையாகவே வாழ்க்கையை சரியாகவே பயன்படுத்திக் கொண்டு அப்பனே வாழ கற்றுக் கொள்ளுங்கள்

இன்னும் அப்பனே வாக்குகள் பலமாக வரும் அப்பா.... உன் விதியை என்னவென்று சொல்லி விடுவேனப்பா!!!

ஆனாலும் அப்பனே சொல்லிவிட்டாலும் அப்பனே உங்களுக்கு பயங்கள் ஏற்பட்டு விடும் அப்பா.....

அதனால்தான் இவையெல்லாம் தெரிந்து கொண்டால் தான் அப்பனே நிச்சயம் நீங்கள் பின் என் அகத்தியன் இருக்கின்றான் என்று நீங்களே சொல்லிவிடுவீர்கள் அப்பனே

பின் சுலபமாக யான் மாற்றி விடுவேன் அப்பனே

அன்பு மகன்களே ஆசிகள்!!! ஆசிகள்!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!!!!

நம் குருநாதர் இந்த காசிவாக்கில் பெரும் எச்சரிக்கையை நமக்கு கொடுத்திருக்கின்றார்

வரும் காலம் நோய் காலம் அப்பா நோய்கள் மனிதர்களை சுற்றி வளைக்கும் நான் கூறிய மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று குருநாதர் கூறி இருக்கின்றார்

மருந்துகளை ஒரு ஆண்டு இரு ஆண்டு தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் உடம்பில் ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மற்றும் உணவுகளாக நாம் அன்றாட உணவு தேவையில் இயற்கையான மூலிகைகளை கீரை வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கின்றார் இதைப் பற்றி பல வாக்குகளில் இணைப்பாக குருநாதர் எச்சரிக்கை தரும் ஒவ்வொரு வாக்கிலும் இணைத்து தருகின்றோம்

பெரும் நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள எச்சரிக்கையாக இருங்கள் யான் கூறிய மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் இயற்கையை விரும்புங்கள் என்று கூறியிருந்தார்.

குருநாதர் தன்னுடைய ஜீவநாடி வாக்குகளில் மனிதர்கள் வாழும் முறையை தினமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறியதை இங்கே ஒரு தொகுப்பாக வெளியிடுகின்றோம் பயன்படுத்திக் கொள்க!!!!

மக்கள் அனைவரும் வாரம் ஒரு முறை எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு அருகம்புல் சாறு வில்வம் சாறு துளசி சாறு!!!! முருங்கை இலைகளை பச்சையாக சாறாகவோ அல்லது வேகவைத்து அதன் நீரை பருகி வர வேண்டும்.

வில்வ இலை துளசி இலை அருகம்புல் இவற்றுடன் நெல்லிக்காய் சாறு சேர்த்து அருந்தியும் வரலாம்.

அனுதினமும் திரிபலா திரிகடுகு சூரணம்.

நுரையீரல் பாதிப்பு அடிக்கடி ஜலதோஷம்  உள்ளவர்கள் துளசி இலையை நீரில் இட்டு அந்த நீரை குடித்து வர வேண்டும். வில்வ இலைகளையும் இவ்வாறு நீரில் இட்டு அருந்தி வரலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய பேதி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறை கடுக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும் கோரைக்கிழங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனுதினமும் உணவில் பச்சையான கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.

ஆவாரம் பூவை அப்படியே பச்சையாக மென்று தின்ன வேண்டும். ஆவாரம் பூ பொடியாகவும் உண்ணலாம்.

வாழைப்பழம் தேங்காய் வெல்லம் இவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக முருங்கை இலை பொன்னாங்கண்ணிக் கீரை மணத்தக்காளி கீரை கரிசலாங்கண்ணி காசினிக்கீரை முடக்கத்தான் கீரை என தினமும் கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.

மாதுளம் பழச்சாறு அருந்த வேண்டும்.

உப்பு புளி காரம் குறைத்திடல் வேண்டும்.

சுக்கு மிளகு திப்பிலி சீரகம் இவற்றுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து பனங்கற்கண்டு அல்லது வெல்லம் இட்டு பொடியாக்கி வைத்துக் கொண்டு பாலில் அல்லது நீரில் கஷாயமாக அருந்தி வர வேண்டும் இவை சிறிதளவு குழந்தைகளுக்கும் கொடுத்து வர குழந்தைகளுக்கும் நோய்கள் நீங்கும்.
 
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேப்பிலை தளிர். கற்றாழை வாழைத்தண்டு இவற்றையும் உண்டு வரவேண்டும்.

சிறிது நடை பயிற்சி சாந்தி ஆசனம் பிராணாயாமம் தியானம் தினமும் 48 முறை தோப்புக்கரணம். என பயிற்சி முறைகளையும் தனது ஒவ்வொரு வாக்கிலும் கூறியிருக்கின்றார்.

இதை அனைவரும் கடைப்பிடித்து வர வேண்டும்!!!!!

குருநாதர் கூறிய மூலிகைகள் அதை மருந்தாக்கி அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் குருநாதர் உடைய உபதேசப்படி அவருடைய ஆசிகளுடன் மருந்தினை தயாரித்து அடியவர்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார் திரு தனக்குமார் அவர்கள்.

இந்த மருந்துகள் கடையில் எங்கும் கிடைக்காது!!!

ஏற்கனவே திரிபலா திரிகடுகு மற்றும் இந்த 32 மூலிகை கலவைகளான இந்த மருந்தினையும் அடியவர்களுக்கு வழங்கி வருகின்றார் அதனால் அடியவர்கள் இவரை தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்

அவருடைய தொடர்பு எண் திரு தனக்குமார் ஐயா 9566825599....

அந்த மருந்து குறித்து குருநாதர் தந்த வாக்கினையும் இதோடு இணைக்கின்றோம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஜீவநாடி பொதுவாக்கு !

குருநாதர் அகத்தியபெருமான் அகத்தியர் உரைத்த மூலிகைகள் :

1. எலுமிச்சை தோல் (அல்லது பாெடி)
2. சோம்பு 
3. கிராம்பு
4. பட்டை 
5. சுக்கு 
6. மிளகு 
7. ஏலக்காய் 
8. அதிமதுரம் 
9. சித்தரத்தை 
10. ஆடாதொடை 
11. துளசி 
12. மஞ்சள் 
13. கடுக்காய் 
14. இஞ்சி 
15. கரிசலாங்கண்ணி 
16. பொன்னாங்கண்ணி 
17. மணத்தக்காளி
18. கோரைக்கிழங்கு
19. நித்யகல்யாணி 
20. ஆவாரம் பூ (அல்லது பொடி) 
21. குறுமிளகு 
22. கருஞ்சீரகம் 
23. செம்பருத்தி பூ 
24. அவுரி இலை 
25. வெற்றிலை 
26. தூதுவளை 
27. கற்பூரவல்லி
28. நெல்லிக்காய் பொடி
29. காசினி பொடி 
30. வேம்பு பூ (வேப்பம் பூ

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. நன்றி அய்யா, மிகவும் பயனுள்ள வாக்கு! அகத்தியர் திருவடி சரணம்!

    ReplyDelete
  2. மிக்க மிக்க நன்றிகள் ஐயா

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANAE

    ReplyDelete
  5. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  6. மிளகு மற்றும் குறுமிளகு இரண்டும் ஒன்றுதானே ஐயா... தயவுசெய்து விளக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! இரண்டும் ஒன்று தான்.

      Delete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete