​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 22 April 2024

சித்தன் அருள் - 1591 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ விக்நாகர் கணபதி மந்திர்.!




17/06/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்.  ஸ்ரீ விக்நாகர் கணபதி மந்திர். ஓஜர். புனே மாவட்டம் மகாராஷ்டிரா. 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள் கோடிகளப்பா கவலைகள் இல்லை!!!

அப்பனே கணபதியின் அருளும் நல்விதமாகவே அமைந்தது அப்பனே நல்விதமாகவே அமைந்தது என்பேன் அப்பனே

இன்னும் பல வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அப்பனே நல் முறைகளாக அங்கங்கு வந்து யான் ஆசிகள் பெற்று தந்தேன் அப்பனே நலமாகவே.

உங்கள் கூடவே வந்து ஆசிகள் பெற்று தந்தேன் அப்பனே நலன்கள் அப்பனே மற்றொரு முறையும் இங்கு வருவீர்கள் அப்பொழுது யான் வாக்கு சொல்கின்றேன் அப்பனே

அப்பனே அனைவருக்கும் கூட நன்மைகள் அப்பனே எவ் திசையில் இருந்தாலும் அப்பனே..... பக்தி தான் முக்கியம் என்பது விநாயகப் பெருமான் உணர்த்துவான்!!!

வேறு எதுவுமே தேவையில்லை நீ எங்கிருந்தாலும் உண்மையானவனாக இருந்தால் நிச்சயம் அனைத்தும் கிடைக்கும் என்பதே விசித்திரமான உண்மை. அதாவது எங்கு தேடி தேடி அலைந்து அலைந்து உயர்ந்து அதாவது நிச்சயம் எங்கேயாவதானாலும் அலைந்தும் திரிந்தும் கூட நிச்சயம் இறைவனை தேடிக்கொண்டே இருந்தால் கடைசியில் பார்த்தால் உயர்வான இடத்திற்கு நிச்சயம் சென்று விடுவீர்கள் என்பதே என்னுடைய அர்த்தம்.

அதனால் நிச்சயம் திரிந்து அலைந்து கடைசியில் பார்த்தால் மேன்மை அதாவது மேல் நோக்கி இருக்கின்றீர்கள் இதுதான் அர்த்தம்.

இன்னும் இதனைப் பற்றியும் கூட சொல்கிறேன் விவரமாகவே!!!!!!

அப்பனே கணபதியின் பராக்கிரமங்களை பற்றி அறிய அப்பனே மீண்டும் ஏறிக்கொண்டே வாருங்கள் அப்பனே சொல்கின்றேன் அப்பனே அனைத்தும் சுலபமாக அறிந்து கொள்ள முடியாது!!!!

நாளை சொல்கின்றேன் வாக்குகளை!!!

அப்பனே நல்முறையாக இன்னும் அகத்தியன் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் பொறுத்திருந்தால் அப்பனே நாளையும் சொல்கின்றேன் வாக்குகள் அப்பனே ஆசிகள் அப்பா ஆசிகள்!!!!!

குருவே சரணம் இந்த அஷ்ட விநாயகர் திருத்தலங்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்பு உள்ளதா???!!

அப்பனே நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே நிச்சயம் வாக்குகள் சொல்கிறேன் அப்பனே அனைத்தும் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே வாக்குகள்!!!

அவசரம் வேண்டாம் அப்பனே பொறுமை காத்திருங்கள்.  அப்பனே!!!!

ஓசர் விநாயகர் கோயில் முகவரி: நாராயணன், ஓசர் சாலை, ஓசர், தாலுகா ஜுன்னார், மாவட்டம் புனே, மகாராஷ்டிரா, 410504

விக்னஹர் கணபதி கோவில் நேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை

அருகில் உள்ள நகரங்கள்: புனே, நாராயண்கான், நாசிக் (நாசிக்)

அருகிலுள்ள இடங்கள்: சிவனேரி கோட்டை, லென்யாத்ரி குகைகள், லென்யாத்ரி விநாயகர், மல்ஷேஜ் காட், நானேகாட், பீமாசங்கர்.

ஓசர் புனேவிலிருந்து 85 கிமீ தொலைவில் உள்ளது, புனே-நாசிக் நெடுஞ்சாலையிலிருந்து வடக்கே நாராயண்கானுக்கு சுமார் 9 கிமீ.புனே மாவட்டத்தின் ஜுன்னார் தாலுகாவில் உள்ளது. /குகாடி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  அதன் மீது கட்டப்பட்ட யடகான் அணைக்கு அருகில் உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. மிக்க நன்றிகள் ஐயா...🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  3. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANE

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete