​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 27 April 2024

சித்தன் அருள் - 1594 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை கேள்வி-பதில்!




வணக்கம் அகத்தியர்  அடியவர்களே !!!!

22/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் ஓதி மலையில் பொதுவாக்கினை உரைத்து விட்டு அதன் பிறகு ஓதி மலையில் சேவை செய்து வரும் அடியவர்கள் குருநாதரிடம் சில கேள்விகளை எழுப்பினர் குருநாதர் அதற்கு கூறிய பதில் உரை!!!!

குருநாதர் ஏற்கனவே கடந்த ஆண்டு 2/7/2023 அன்று ஓதிமலை அடிவாரத்தில் உள்ள இரும்பொறையில் உள்ள ஈசன் ஆலயத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் கோ பூஜை செய்து வர வேண்டும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அன்னதானங்கள் செய்துவர வேண்டும் என்று கட்டளை இட்டு இருந்தார்

அந்த பதிவு சித்தன் அருள் 1407 இல் வெளிவந்துள்ளது!!!!

அதன் தொடர்ச்சியாக அடியவர்களின் கேள்விகள் இருந்தது!!!

கேள்வி!!!

ஓம் அகத்தீசாய நமக குருநாதருக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்!!

நீங்கள் கூறியபடி பௌர்ணமி அமாவாசை நாட்களில் எங்களால் முழுமையாக அன்னதானங்கள் செய்ய முடியவில்லை

குருநாதர் பதில்

அப்பனே நிச்சயமாய் அதாவது ஒன்றை சொல்கின்றேன் அப்பனே இதையும் யான் செப்பி விட்டேன் அப்பனே!!! அதாவது அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே

இதன் தத்துவத்தை பார்த்தால் அனைத்தும் செய்ய முடியும் அப்பனே

அனைத்தும் யான் கொடுத்திருக்கின்றேன் அப்பனே

அதாவது முருகன் கொடுத்திருக்கின்றான் அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே

செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் சோம்பேறி தனம் என்பேன்!!!!

அப்பனே அறிந்தும் கூட யார் யாருக்கு எத் தகுதி இருக்கின்றதோ பின் அவரிடத்தில் இருந்தே அப்பனே ஈசனும் பெற்றுக் கொள்வான் என்பேன் அப்பனே

ஆனாலும் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு அப்பனே அப்பனே வெளியில் ஒன்று பேசுகின்றார்களப்பா!!!

என்ன செய்வது?? அப்பனே கூறு!!!

ஆனால் அடி விழுந்தால் தான் அப்பனே!!!

ஆனாலும் பின் குழந்தை (ஓதிமலையப்பர்) பொறுத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே அவ்வளவுதான்!!!!

குருவே!!

தங்களுடைய வாக்கினை கேட்டுவிட்டு ஒரு அடியவர் பசுவையும் கோ பூஜைக்காக ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தார்!!! அந்த பசுவிற்கு சரியான உணவு கூட வழங்க முடியாமல் சிரமப்பட வேண்டி உள்ளது

அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய யான் அனைத்தையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதை என்றும் புரிய  புரிய அப்பனே இதனால் அப்பனே அதாவது கஷ்டங்கள் வந்தால் அப்பனே தேடி தேடி தேடு தேடி வருகின்றார்கள் இறைவனிடத்தில்..

ஆனாலும் அப்பனே ஏன் கஷ்டங்கள் வருகின்றது??

யாராவது சிந்தித்துள்ளீர்களா ?? அப்பனே...

இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே

அப்பனே எப்பொழுதும் அப்பனே பாவத்தை எதை என்று அறிய அறிய.... அதாவது பாவங்கள் மனிதனிடத்திலே இருக்கின்றதப்பா எதை என்றும் புரிய ப புரிய அப்பனே...

கவலையை விடு அப்பனே யான் இதற்கு வழி வகுக்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது தன் பிள்ளை இருக்கின்றது அப்பனே அதனால் அப்பனே தன் பிள்ளையை மட்டும் அப்பனே அழகாக அப்பனே பார்த்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே அனைத்தும் செய்வார்கள் அப்பனே

ஆனால் மற்றொரு பொருள் அப்பனே அதுதான் இறைவனுடையது!!!!!

(அவரவர் தம்முடைய பிள்ளைகள் நம்முடைய பொருள்கள் என்று நாம் அதில் கவனத்துடனும் அக்கறையுடனும் பார்த்து பார்த்து செய்து கொள்கின்றோம் ஆனால் மற்ற விஷயங்களில் அடுத்தவருடைய காரியங்களில் கவனம் செலுத்துவது இல்லை

ஆனால் அதுதான் இறைவனுடையது என்று குருநாதர் குறிப்பிடுகின்றார்!!!

இதற்கு என்ன அர்த்தம் என்றால் நம் வீட்டில் பசுக்கள் இருந்தால் நம்முடைய பசுக்களுக்கு தீவனம் புல் என அதற்கான உணவை வழங்குவோம் ஆனால் கோயிலில் மற்ற இடங்களில் இருக்கும் பசுக்களை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை ஆனால் அதுதான் இறைவனுடையது என்று குருநாதர் இங்கு குறிப்பிடுகின்றார் அப்படி அர்த்தம் என்னவென்றால் மற்றவைகளுக்கு செய்யும் சேவைகள் அது இறைவனுடைய சேவையாக மாறிவிடும் ஏனென்றால் இறைவனுக்கு சொந்தமானவை அவையெல்லாம் என்று குருநாதர் மறைமுகமாக குறிப்பிடுகின்றார்)

(கோமாதாவிற்கு உணவு அளிக்கும் விஷயத்தில் இதைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக அதாவது அடியவர்கள் மூலம் கோமாதாவிற்கு உணவு வழங்குவதற்காக சில தகவல்களை கேட்டறிந்த பொழுது வெளியில் இருந்து யாராவது கொடுத்தால் வாங்குவதற்கு தயாராக இல்லை ஆலய நிர்வாகத்தில் சில உள் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றது அதனால் இது இப்படியே தொடர்கின்றது

ஆனால் குருநாதர் இதற்கு யானே வழி வகுக்கின்றேன் என்று கூறி இருக்கின்றார்... அதனால் நாம் அனைவரும் குருநாதரிடம் வேண்டிக் கொள்வோம்)

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருக்குமே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே

அப்பனே பாவம் புண்ணியம் சரிபார்க்கப்பட்டது தான் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே மனிதன்... பின் எதை என்று கூற எதை என்று அறிய அறிய அப்பனே ஆனால் பாவத்தையும் இறைவன் எதை என்று அறிய அறிய புண்ணியத்தையும் பின் இவ்வாறு செய்கின்றது இவ் ஆன்மா என்று அழகாகவே பிரம்மன் எழுதி அனுப்பி.....

இதனால் அப்பனே பின் எழுதி அனுப்பியவனே இறைவன் !!!

அதாவது எழுதி அனுப்பியவனே பின் அவ்வளவு சுலபமாக பாவத்தை தீர்த்து விடுவானா ????  என்ன!!!!

அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள்!!!!

குருவே இரும்பொறையில் இருக்கும் அந்த ஈசன் ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்ய வேண்டும்

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதை முருகனே செய்து கொள்வான் என்பேன் அப்பனே

பார் !!! வேடிக்கையை மட்டும் பார்!!!

குருவே அந்த ஆலயத்திற்கு சேவை செய்ய வருபவர்களுக்கு முன்னிருந்து செய்தால் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றது ஒரு சில விபத்துகளும் ஏற்படுகின்றது என்று சந்தேகங்களும்  வதந்தியுடன் இங்கே இருப்பவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள் அதற்கு தீர்வு என்ன???

அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பல பாவங்களை செய்து விட்டு அப்பனே எதை என்றும் அறிய அப்பனே..... அப்படி பல பாவங்களை செய்திட்டு முன் நின்றால் அப்படித்தான் அப்பா

(ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு திருப்பணி செய்பவர்கள் ஆலயத்திற்கு சேவைகள் செய்பவர்கள் ஆலய விஷயங்களில் பரிசுத்தமாக நடந்து கொள்ள வேண்டும் அனைவரும் அசைவ உணவு ஒரு உயிரைக் கொன்று தின்பது இப்படிப்பட்ட பாவங்களை செய்து விட்டு ஆலயத்திற்காக  வந்தால் இப்படித்தான் நடக்கும் )

அப்பனே ஒரு உயிரைக் கொன்று எதை என்றும் அறிய அறிய ஈசன் மீது அப்பனே ஈசன் ஆலயத்தின் மீது.... கை வைக்கலாமா????? அப்பா???

ஓதிமலையப்பனுக்கு சேவை செய்யும் அடியவர்

குருவே எனக்கு ஆசிர்வாதம் தாருங்கள்!!!

அப்பனே அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் அப்பனே உந்தனுக்கும் அப்பனே நடுவில் கூட

(ஓதிமலை பொதுவாக்கில் நடுவில் சேவை செய்யும் அடியவருக்கு ஏற்கனவே வாக்கு தந்து விட்டார்)

அப்பனே அறிந்தும் கூட உன் கடமையைச் செய் அப்பனே அவ்வளவுதான்
அவரவர் அவரவர் கடமையைச் செய்தாலே அப்பனே போதுமானதப்பா
இறைவன் வந்து எதை என்று அறிய அறிய!!.......

எதையும் நினைக்காதீர்கள் அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே அதனால் அப்பனே இதை பல மனிதர்களும் சொல்லிவிட்டார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய ஞானிகளும் சொல்லிவிட்டார்கள் அப்பனே பின் கடமையை செய் !! கடமையை செய்!!! என்று!!!

அப்பனே அறிந்தும் கூட அவரவருக்கு தனி தனி திறமைகள் உண்டப்பா அப்பனே உன் போலும் மற்றவர் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது உன்னைப் போன்று எவை என்று புரிய அவந்தனும் (மற்றவர்கள்) செய்ய மாட்டார்கள்!!! அவர்களைப் போன்று மற்றவர்களும் செய்ய மாட்டார்கள்!! அப்பனே அவனவனுக்கு ஏற்பவே இறைவன் திறமைகள் கொடுத்திருக்கின்றான் அப்பனே... எதை என்று புரிய புரிய அப்பனே

இறைவனுக்கு எப்படி?? யார் மூலம்?? எதை செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் அப்பா...

கவலையை விடுங்கள் அப்பனே!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே இன்பத்தை எவை என்று அறிய அறிய அப்பனே துன்பத்தை அப்பனே துன்பம் மூலமே விலக்க வேண்டும் அப்பனே

இதற்கு என்ன அர்த்தம்??? கூறுங்கள்!!!

அப்பனே அறிந்தும் கூட அப்பனே அனைவருமே துன்பப்பட்டுத்தான் உயர்ந்து உள்ளீர்கள் என்பேன் அப்பனே

சொல்லிவிட்டேன் இதன் அர்த்தம் இதுதான் அப்பா

(துன்பத்தை அனுபவித்து தான் துன்பத்தை விலக்க முடியும் நீங்கள் எல்லோரும் துன்பத்தை அனுபவித்து தான் இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ளீர்கள்)

அப்பனே இன்னும் விளக்கங்கள் சொல்கின்றேன் அப்பனே கவலையை விடுங்கள் அப்பனே

என்னுடைய ஆசிகளும் அப்பனே!!!

நீங்கள் குழந்தையை (ஓதியப்பனுக்கு சேவை) அழகாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா!!!

அதனால் யானும் உங்களை அழகாக பார்த்துக் கொள்வேன் அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!

குருவே.... இங்கு ஆலயத்திற்கு வரும் சில அடியவர்களுக்கு திருமணம் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது திருமணமாகாமல் இருக்கின்றார்கள் அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்

அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே அதாவது எதை என்றும் புரியாமல் கூட அப்பனே இருக்கின்றீர்கள் அப்பனே

இப்பொழுது புரிய வைத்தாலும் அப்பனே பின் விளங்காதப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே அதாவது ஏன் எதற்கு ஆனாலும் முருகனுக்கு பின் திருமணம் நடந்தது எதை என்று அறிய அறிய அனைவரும் உணர்ந்ததே

ஆனால் இக்குழந்தைக்கே நடத்த ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எவை என்று புதிய புய நீங்கள் நடத்துவீர்கள் என்பேன் அப்பனே... அனைவரையும் சிறப்படையும் என்பேன் அப்பனே

(ஓதி மலையில் தைப்பூசம் சமயத்தில் முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் அதில் கலந்து கொள்ள வேண்டும்)

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இன்னும் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே அவரவர் வினை எதை என்று புரிய புரிய அப்பனே

அவ் ஆன்மா வேண்டிக் கொள்வதெல்லாம் அப்பனே அதாவது ஒரு ஆன்மா எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது பின் புண்ணிய ஆன்மாக்களை எதை என்றும் அறிய அறிய பின் பிரம்மனே நெருங்குவான் அப்பா

அவ் ஆன்மாவிடத்தில் அப்பனே அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன தேவை என்று கேட்பான் அப்பா

ஆனாலும் அறிந்தும் கூட உலகத்தில் பின் எவ் சுகங்களும் தேவையில்லை அறிந்தும் கூட புரிந்தும் கூட எதை என்று அறிய அறிய இறைவன் பாதை அதாவது இறைவன் பாதமே போதும் என்றெல்லாம் அப்பனே ஆன்மாக்கள் கேட்கும் அப்பா.... இதனால் அப்பனே அப்படியே எழுதி வைத்து விடுவான் அப்பா எதை என்று அறிய பிரம்மன் அனுப்பி விடுவானப்பா அறிந்தும் கூட

ஏன் அதனைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே எங்கு எதை என்று அறிய அறிய அப்பனே அவையெல்லாம் சொல்லிவிட்டு மீண்டும் விளக்கங்கள் கூட சொல்கின்றேன் அப்பனே

அதனால் தாம் தன்  என்ன கேட்டு வந்தீர்களோ அதுதான் இங்கு நடக்கும் அப்பா

ஆனாலும் விதியையும் கூட இவனால் மாற்ற முடியும் அப்பா (ஓதிமலை அப்பர்) நிச்சயம் மாற்றுவான் அப்பா இதற்கும் சம்பந்தங்கள் உண்டப்பா!!!

(அதாவது திருமணம் இந்த பிறவியில் ஆகவில்லையே என்று நினைப்பவர்கள் கடந்த பிறவியின் முடிவில் புண்ணிய பலத்தால் பிரம்மனிடம் வரம் பெறும் பொழுது எனக்கு எதுவும் தேவையில்லை சொத்து சுகம் திருமணம் பாசம் பந்தம் எதுவும் தேவையில்லை இறைவன் காலடியில் போதும் என்று வரம் வாங்கிவிட்டு பிறவி எடுத்து வந்த பிறகு உலகத்தில் அனைவரின் வாழ்க்கையையும் பார்த்து நமக்கும் இப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்து சில பல மாயைகளில் சிக்கி ஒன்றும் நடக்கவில்லையே என்று வருந்தி கொண்டிருக்கின்றோம்..

இதே ஓதி மலையில் வைத்து கடந்த முறை குருநாதர் இதைப் பற்றி மேலும் கேள்வி பதில் கூறியிருந்தார் இப்படி வரம் பெற்று வந்திருக்கையில் நம்மளுடைய விதியில் என்ன இருக்கின்றது என்பதை நமக்கு தெரியாது நம்முடைய விதியில் என்ன இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள் அப்படி சித்தர்கள் வந்து நம் விதியில் உள்ளதை உரைப்பதற்கும் நமக்கு புண்ணியங்கள் வேண்டும்.. உங்களிடம் புண்ணியங்கள் இருந்தால் உங்கள் விதியை யானே வந்து செப்புவேன் அந்த விதியையும் மாற்றி தருவேன் என்பது குருநாதர் உரைத்த வாக்கு!!!

உதாரணத்திற்கு ஒருவருக்கு சன்னியாசி யோகம் வேண்டுமென வரம் வாங்கி இருப்பார் ஆனால் இந்த உலகத்தில் பிறவி எடுத்து பிறந்தவுடன் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் பார்த்து நாம் கேட்டு வாங்கி வந்த வரத்தை மறந்து நடக்கவில்லை அது வேண்டும் இது வேண்டும் என ஆசைப்பட்டு விடுகின்றோம்...

குருநாதர் சில வாக்குகளில் விதியில் இல்லாததை எல்லாம் கேட்கின்றீர்களப்பா என்று வாக்கு தருவதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்க!!!!

விதியில் என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து தான் பார்த்து செய்ய முடியும்.

விதியையும் மாற்றி புதிய விதியை செயல்படுத்த வேண்டும் என்றால் அது சித்தர்களால் மட்டுமே முடியும் இதற்கு சித்தர்கள் வந்து வாக்குகள் தருவதற்கு நம்மிடம் புண்ணியம் இருக்க வேண்டும்

எங்கு சுற்றினாலும் என்ன செய்தாலும் கடைசியில் புண்ணியம் மட்டுமே நம்மளுடைய வாழ்க்கையை நம்முடைய விதியை மாற்றுவதற்கான வழி என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.)

ஒரு அடியவர் குருவே சரணம் என்னுடைய தொழிலை விரிவு படுத்தலாம் என்று இருக்கின்றேன் ஆசீர்வாதம் வேண்டும்

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே நீயா விரிவுபடுத்துகின்றாய் அப்பனே அவையெல்லாம் பொய்யப்பா!!!!!!

(அனைத்தையுமே முருகன் தான் செய்து கொண்டிருக்கின்றார்)

மற்றொரு அடியவர் குருவே சரணம் என்னுடைய மகனுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது எதை என்றும் புரிய புரிய அப்பனே பழனி ஆண்டவன் எதை என்றும் புரிய புரிய எதை என்றும் அறிய அப்பனே அழகாகவே நிற்கின்றான் அப்பா உன் இல்லத்திலே நிற்கின்றான் அப்பா அறிந்தும் கூட அப்பனே இதையும் கேட்கின்றாய் அப்பனே.... அப்பொழுது முருகன் மீது நம்பிக்கை இல்லையா????

மற்றொரு ஓதிமலை அப்பனுக்கு சேவை செய்யும் அடியவர் குருவே எனக்கும் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுங்கள்

அப்பனே எதை என்றும் அறிய அறிய சொல்லி விட்டேன் அப்பனே குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே உன்னையும் அவன் பார்த்துக் கொள்வான் அப்பனே கவலையை விடு!!!!

அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிய புரிய அப்பனே பல முறையும் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே நலன்கள் ஆகவே

அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதன் ரகசியத்தையும் சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே

இதனால் அப்பனே எதை என்றும் அறிய நீயும் முருகனுக்கு அதாவது அப்பனே முருக பக்தனாக இருந்து பல சேவைகள் செய்து அப்பனே நீயும் சிறப்படைந்து அப்பனே செல்வந்தனாக இருந்து அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் சில வகையிலும் கூட அப்பனே இது கடைபிறப்பு அப்பா உந்தனுக்கு!!!

ஆனாலும் அறிந்தும் கூட முருகனிடமே பின் செந்தூரிலே அறிந்தும் கூட எதை என்றும் கூட பின் குழந்தைவடிவ  ரூபத்தில் தோன்றி அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன தேவை??? என்று முருகன் கூற!!!

பின் முருகா!!!! எப்பொழுதும் உந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. அப்படியே பிறவியின் முடித்துக் கொள்ள வேண்டும் என்று நீ தான் கேட்டாய் அப்பா!!!

அப்பனே அதனால் அறிந்தும் கூட முருகன் திரும்பவும் கேட்டான் அப்பா

அப்பா கலியுகத்தில் பிறக்கப் போகின்றாய் அறிந்தும் உண்மைதனை கூட... நிச்சயம் பின் அதாவது கலியுகத்தில் எதை என்று அறிய அறிய சுற்றார் இன்னும் உற்றார் இதற்கும் கூட சம்பந்தம் சுற்றார் உற்றார் என்பதற்கெல்லாம்...

ஆனாலும் பின் அதாவது திருமணங்கள் பின் குழந்தை பாக்கியங்கள் என்றெல்லாம்!!!

ஆனால் நீ என்ன சொன்னாய் தெரியுமா??? முருகனிடத்தில்!!!

அப்பப்பா முருகா அவ எல்லாம் வேண்டாம் அப்பா அவையெல்லாம் அற்ப சுக வாழ்க்கை அப்பா என்று சொல்லிவிட்டாய் அப்பனே

விதியில் அப்படியே ஆகட்டும் என்று முருகன் கூறிவிட்டான்

ஆனால் நீ இப்பொழுது கேட்பதை பார்த்து நகைத்துக் கொண்டிருக்கின்றான் முருகன்!!!!

என்ன சொன்னோம்!!! இவ் ஆன்மா என்ன கேட்டது என்று!!!!

எதை என்று அறிய அறிய முருகனே பார்த்துக் கொள்வானப்பா விதியும் மாறும் அப்பா

அப்பனே எதை என்றும் அறிய அறிய மயில் வாகனத்தை சுமந்து வா அப்பனே தெரியுமப்பா அப்பொழுது!!!!!

(மயில் காவடி எடுத்தல்)

குருவே நான் காவடி எடுக்கின்றேன். காவடி எடுத்து வந்தால் என்னுடைய கடன் பிரச்சனையும் தீர்ந்துவிடும் அல்லவா குருநாதா!!!!

அப்பனே பிறந்த கடனையே தீர்க்க முடியவில்லை மனிதனால் அப்பனே தற்பொழுது மனிதனால் கையால் வாங்கப் போவது அப்பனே இவையெல்லாம் சுலபம் அப்பா!!!!

மற்றொரு அடியவர் சுவாமி எனக்கும் ஆசீர்வாதங்கள் வேண்டும்

அப்பனே அறிந்தும் கூட அப்பனே கவலையை விட அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே கந்த சஷ்டி கவசத்தை ஓதி வரச்சொல் அப்பனே சிறப்பாகும்

மற்றொரு அடியவர்

குருவே எந்தனுக்கும் ஆசிர்வாதங்கள் வேண்டும்

அப்பனே  முருகனுக்கு பின் அடியவனாக இருந்து விடு அப்பனே அனைத்தும் நல்குவான் அப்பனே

அப்பனே கவலைகள் இல்லை அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே நல்விதமாக அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே முதலில் அப்பனே எழுவானப்பா சித்திரகுப்தனும் இங்கு பின் அதிகாலையிலே அறிந்தும் உண்மைதனை கூட இங்கு வணங்கிட்டு அப்பனே நிச்சயம் ஏனென்றால்!!!!!!

காலத்தை வென்றவன் அல்லவா!!!!!!

(ஓதிமலை அப்பன்)

அப்பனே நிச்சயம் பின் அதிகமாகும் நீங்கள் செய்த புண்ணியங்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் நாளை பொழுதில் சித்திரகுப்தன் எழுதுவான் அப்பா

நிச்சயம் மாற்றங்கள் உண்டு மாற்றங்கள் உண்டு!!

அப்பனே அறிந்தும் கூட அருள்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய செய்வான் அப்பனே எதை என்றும் புரிய அப்பனே சித்தர்களின் ஆசியும் கூட அப்பனே போகனின் அன்பும் கூட இருப்பதால் அப்பனே நிச்சயம் சில மூலிகைகளை எடுத்துக் கொண்டே வாருங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் மாற்றமடையும் வாழ்க்கை என்பேன் அப்பனே கவலையை விடு அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே போதும் அப்பா போதும் அப்பனே எம்னுடைய ஆசிகள் இன்னும் சொல்கின்றேன் ரகசியங்களை அனைவரின் ரகசியங்களை கூட யான் சொல்லுகின்றேன் அப்பனே அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் அப்பனே

பின் ஏன் எதற்கு பிறவிகள் என்றெல்லாம் அப்பனே ஆசிர்வாதங்கள் அப்பனே அனைவரையுமே முன் ஜென்மத்தில் பின் பார்த்தவன் தானப்பா யான் நீங்கள் எல்லாம் என்னிடத்தில் வந்து ஆசிகள் பெற்றவர்கள் தான் அப்பா

அதனால்தான் இப்பிறவியிலும் கூட தேடி வந்து உங்களுக்கு வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே ஆசிகளப்பா!!! ஆசிகள்!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. மிக்க நன்றிகள் ஐயா...🙏🙏🙏

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு இருப்பினும் ஒரு ஐயம் எழுகின்றது திருமணம் ஆகாதவர்கள் எல்லாம் முற்பிறவியில் இந்தப் பிறவிக்கு விவாகம் வேண்டாம் என்று சொல்லி இறைவனுக்கு தொண்டு செய்ய வேண்டியிருந்தால் அவர்களுக்கு பக்தியை கொடுப்பதற்கு பதிலாக ஆசையை அதிகமாக கொடுப்பதின் தாத்பரியம் என்னவோ அதை அறிய அடியேன் விழைகிறேன் ✍️

    ReplyDelete
    Replies
    1. எல்லா செவ்வாய்க்கிழமையும், முருகனை நினைத்து உப்பில்லாமல் உணவருந்தி, விரதமிருக்க, நீங்கள் கேட்ட விஷயங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்!

      Delete
  3. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANAE

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete