​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 1 May 2024

சித்தன் அருள் - 1595 - அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு!


இறைவா!!! அனைத்தும் நீ”

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

29/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் கோயமுத்தூரில் முல்லை நகர் வடவள்ளியில் அமைந்திருக்கும் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் ஆலயத்தில் வைத்து பொதுமக்கள் கலந்து கொண்ட சத்சங்கத்தில் குருநாதர் நல் உபதேசங்கள் செய்தார்

அதாவது பொதுமக்கள் பெருமளவு கூடி இருந்தாலும் யார் யார் என்னென்ன தான தர்மங்கள் செய்தார்கள் என்பதை கேட்டறிந்து கேட்டறிந்து புண்ணியத்தின் தான தர்மத்தின் மகத்துவத்தை அனைவரும் உணரும்படி உபதேசம் செய்து நல்வாக்குகள் தந்தருளினார்

அதில் முக்கியமாக ஒரு கட்டத்தில் ஒரு அடியவரை எழுப்பி யான் கூறுவதை அப்படியே மக்களிடம் உறுதி மொழியாக சொல்லும்படி அனைவரையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வைத்தார்.

இந்த உறுதி மொழி அனைத்து அடியவர்களும் சாஷ்டாங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோயம்புத்தூரில் நடந்த முழு சத்சங்கமும் பொதுவாக்கில் விரைவில் வெளிவரும் அதற்கு முன்பாக அவசர உத்தரவாக இந்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குருநாதர் அகத்திய பெருமான் தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய

உறுதிமொழி 

வாக்குரைத்த ஸ்தலம்:- ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயில் வடவள்ளி முல்லை நகர் மருதமலை அடிவாரம் கோயம்புத்தூர்.

அகத்திய மாமுனிவர் வாக்கு:- 

எதை என்று அறிய அறிய யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்களிடத்தில் சொல்.
  1. தர்மம் செய்வேன்
  2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
  3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
  4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
  5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
  6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
  7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும். 
  8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
  9. பிறருக்காக உழைக்க வேண்டும்
  10. பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே

( அகத்திய மாமுனிவர் பக்தர்கள், அடியவர்கள் இதனைத் தினமும் அதி காலையில் ஒரு மந்திரம் போலச்சொல்லுங்கள். அனைவரிடத்திலும் சொல்லுங்கள். அன்ன சேவை , வழிபாடுகள் மற்றும் அனைத்துபொது இடத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். செயல் படுத்துங்கள். இந்த வாக்குகள்உங்கள் எண்ணமாகட்டும். உங்கள் எண்ணங்கள் சொல்லாகட்டும். உங்கள் சொல் அனைத்தும்குருநாதர் காட்டிய வழியில், செயல்களாகட்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் அடுத்த முறைபிரச்சினை என்று இறை அருளால் வராது)

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன் நீங்கள் பிரச்சினை பிரச்சினை என்றுஎன்னிடத்தில் வந்து பின் அப் பிரச்சினை நீக்கு , இவ் பிரச்சினை நீக்கு என்று ( கேட்கின்றீர்கள் ). ஆனாலும் அப்பனே ( உங்களின் ) அவ் பிரச்சினை ( எல்லாம் ) நீக்குவதற்கு அப்பனே உன்னிடத்தில்என்ன உள்ளது என்பதைக்கூட அப்பனே கூறுங்கள் அப்பனே? 

சிறு புண்ணியங்கள் இருந்தால்தான் அப்பனே அதையும் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அப்பனேஉயிரே போகின்றது என்ற கண்டம் வருகின்றது ( என்றாலும் கூட ) ஆனாலும் அப்பனே அறிந்தும்கூட அதை நீக்குவதற்கும் புண்ணியங்கள் அவசியமாகின்றது. ( நீங்கள் செய்யும் ) அப்புண்ணியங்களை வைத்து பிரம்மாவிடம் பேசுவேன் அப்பனே யான்!!! அறிந்தும் கூட இவ்வாறு அவன்புண்ணியங்கள் செய்திருக்கின்றான் என்று. 

ஆனால் நீங்கள் செய்யவே இல்லை அப்பனே. அப்பொழுது எப்படியப்பா பிரம்மாவிடம்எடுத்துக்கூறி  ( யான் செய்ய இயலும்?)

அப்பனே பிரம்மன் கேட்கின்றான் அப்பா “அகத்தியனே, அறிந்தும் கூட உன்னை ஏதோ ஒருஅறிந்தும் கூட சுய நலத்திற்காகவே வணங்குகின்றார்கள். புண்ணியமே செய்வதில்லை. ஆனால்மக்களுக்காக விதியை மாற்று, மாற்று என்று நீங்கள் சொல்கின்றீர்கள்” என்று. 

அப்பனே யான் தலை குனிய வேண்டியதாயிற்று அப்பனே!!!!!!!

( நமது அன்பு குருநாதர் இப்படி நமக்காகப் பிரம்மனிடத்தில் தலை குனிய வைக்கலாமா? அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி  வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். இந்த உறுதிமொழிப்படி இனி நாம் அனைவரும் நடந்து நம்அன்பு குருத் தந்தையின் பெருமையைக் காப்போம். உலகில் தர்மம் செழிக்க உத்வேகத்துடன்உழையுங்கள். அகத்திய மாமுனிவர் அருளால். உங்கள் பிரச்சினைகள் தவிடு பொடியாகிவிடும். வாருங்கள் அன்பு அடியவர்களே, உறுதிமொழி வழி நடந்து அன்பு அகத்தீசருக்கு பெருமைசேர்ப்போம்.)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் லோபாமுத்ரா சமேத அகத்திசாய நமோ நம

    ReplyDelete
  2. மிகவும் சிறப்பான பதிவு ஐயா...குருநாதரின் பொற்பாதம் பணிந்து உறுதிமொழி ஏற்று குருநாதரின் மனம் குளிர நேர்மையாக அவர் சொற்படி வாழ்ந்திடுவோம்...மிக்க மிக்க நன்றிகள் ஐயா

    ReplyDelete
  3. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANAE

    ReplyDelete
  4. அப்பா நமது இந்து கோவிலில் ஆடு சேவல் பலி இடுகிறார்கள். இதை தடுக்க நீங்கள் உதவுங்கள் அப்பா. சொந்த வீட்டில் உள்ளவர்கள் கூட கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்து...... வேதனையாக உள்ளது உதவி செய்யுங்கள் அப்பா

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete