​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 25 May 2024

சித்தன் அருள் - 1613 - அன்புடன் அகத்தியர் - அம்பாஜி சக்தி பீடம்!






16/5/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: அம்பாஜி 51 வது சக்தி பீடம்.பானஸ்கந்தா மாவட்டம் குஜராத். ராஜஸ்தான் எல்லை!!!

தேவியின் இதயம் இருக்கும்  சக்தி பீடம் !!

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எம்முடைய ஆசிகள்!!!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட வரும் காலங்களில் அப்பனே கிட்டுமப்பா அனைவருக்குமே!!!!

இதனால் அப்பனே என் பக்தர்கள் சரியாகவே அப்பனே பின் தர்மத்தை நிலைநாட்டினால் அப்பனே எங்கெங்கு சக்திகள் பின் தங்கியிருக்கின்றதோ !? அங்கெல்லாம் யானே அழைத்துச் செல்வேன் அப்பனே!!!

அதாவது பின் தன்னால் முடியாது என்று சொன்னாலும் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட உண்மையான பக்தியும் கூட அப்பனே நேர்மையும் கூட தர்மத்தையும் கூட அப்பனே கடைப்பிடித்தாலே அப்பனே!!! (தேவியை)அம்மையையே யான் அழைத்து வருவேன்!!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!! அறிந்தும் கூட!!!

அப்பனே இதனால் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே பின் காலங்கள் காலங்களாக தர்மத்தை கடைப்பிடித்து அப்பனே தர்மத்தை எல்லாம் பின் மனிதர்களுக்கு எடுத்துரைத்தோம் அப்பனே!!!

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் மாறுதப்பா!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் அப்பனே பல பல வழிகளாக கூட்டங்களை சேர்த்து அப்பனே நிச்சயம் பல சம்பந்தங்களை பின் ஏற்படுத்தி அப்பனே உயர்த்தி வைப்போம்...

இதனால் அப்பனே சுவடி தன்னில் அப்பனே நிச்சயம் அப்பனே இன்னும் அப்பனே யார் யாருக்கு எவை செப்ப வேண்டும்?? என்று பின் செப்பி செப்பி அவர்களையும் உயர்த்தி அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வுலகத்தை அப்பனே எங்கள் அருளால் காக்க முடியுமப்பா!!!!

அவை மட்டும் இல்லாமல் காத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!!! 

அழிவுகள் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது மனிதன் மாறிவிட்டான் அப்பனே....

மனிதன் ஆனாலும் அப்பனே பின் ஈசன் அமைதியாக பொறுத்து கொண்டிருந்தான் அப்பனே!!!!

அப்பனே மனிதன் மாறினால் அப்பனே நிச்சயம் இயற்கையும் மாறுமப்பா!!!!

அப்பனே பின் பருவம் அப்பனே மாறி மாறி அப்பனே வருமப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே 

மனிதன் தான் பெரியவன் என்று எண்ணி கொண்டிருக்கும் பொழுது அப்பனே இறைவன் காட்டுவான்... தன் புத்தியை கூட!!!!......

இதனால் அப்பனே சரியாக தர்மத்தை கடைப்பிடித்தாலே அப்பனே போட்டி பொறாமைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் இருந்தால் கூட அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனை எவ்வளவு தியானங்கள் செய்தாலும் அப்பனே நிச்சயம் அப்பனே பின் எதை என்றும் புரிய புரிய!!!!!......

இதனால் அப்பனே மாற்றங்கள் அப்பனே யான் கொடுக்கின்றேன் அப்பனே 

எங்கெங்கு?   என்று அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!! நிச்சயம் அங்கெல்லாம் திரிய வேண்டுமா என்று அப்பனே அறிந்தும் கூட...

இதனால் அப்பனே மேற்கல்விக்கு தன் பிள்ளை அங்கங்கு சென்று நிச்சயம் பின் அப்பனே ஓதுதல் வேண்டும்... அவை மட்டும் இல்லாமல் பின் அதாவது பின் பல பல பின் எதை என்று அறிய அறிய தூர தேசங்களுக்கெல்லாம் சென்று தன் மகன் பணம் ஈட்ட வேண்டும் இன்னும் அறிந்தும் கூட பின் நல் மனைவி பின் அறிந்தும் கூட அதாவது பின் சுற்றி சுற்றி அப்பனே...

ஆனாலும் தெய்வத்தை சுற்றி!!!..... அப்பனே முதலில் பாதுகாக்கும் திறன் எங்கு உள்ளது என்பதை எல்லாம் மறந்து விடுகின்றான் மனிதன். 

இதனால்தானப்பா துன்பங்கள் அப்பனே!!!

இயக்கும் திறன் பின் எங்கு ?உள்ளது என்பதை ஆராய்ந்து அப்பனே முதலில் அப்பனே பின் சரணடைந்து விட்டாலே போதுமானதப்பா...

அனைத்தும் மாயை நீங்கள் நிச்சயம் விரும்பியவாறே இறைவன் பின் உங்களுக்கு கொடுத்து மீண்டும் பிடுங்கிக் கொள்வான் அவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே 

இவ்வுலகத்தில் அப்பனே என்னுடையது உன்னுடையது அப்பனே எதை என்று அறிய அறிய யாரும் எதை என்று அறிய அறிய சொந்தம் கொண்டாட முடியாதப்பா!!!

அப்பனே இறைவன் கொடுப்பான் அப்பனே 

சரியான வழியில் பயன்படுத்தினால் இன்னும் உயர்த்துவான் என்பேன் அப்பனே.. பின் அறிந்தும் கூட தவறான வழியில் அப்பனே சென்றால் அப்பனே அனைத்தும் பிடுங்கி கொள்வான்!!!!

அதாவது சிறு வயதிலிருந்து அப்பனே வளர்ந்து அப்பனே அறிந்தும் கூட இறைவனுக்கு தெரியுமப்பா!!

எவ் வயதில் கொடுக்க வேண்டும்??? அப்பனே எவ் வயதில் எடுக்க வேண்டும்?? என்று!!!

ஆனால் கடைசியில் மனிதன் அவையெல்லாம் பிடிங்கி எதை என்று அறிய அறிய பின் இப்படி ஆகிவிட்டோமே என்று....

அப்பனே நிச்சயம் அதாவது மனிதன் நினைத்தார் போல் வாழ்க்கை இல்லையப்பா!!!

இறைவன் நினைத்தார் போல் தான் வாழ்க்கை என்பேன் அப்பனே!!!

அதற்கு நிச்சயம் நீங்கள் சரியான புத்தியைப் பெற்று இருந்தால் போதுமானதப்பா... அப்பனே வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் என்பேன் அப்பனே!!!

இவ் தேவியின் அருள் அனைவருக்குமே பரிசுத்தமாக இருப்பதால்தான் அப்பனே அழைத்தாள் என்பேன் அப்பனே!!!

இத் தேவி நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே கேட்டதை பின் கேட்கும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் அனைவரும் கூட அப்பனே வந்தவர்களை எல்லாம் அப்பனே நல் முறையாகவே மனதில் வைத்து பின் அறிந்தும் கூட பின் நீங்கள் கேட்டாலும் சரி!! கேட்காவிடிலும் சரி!! பின் நீங்கள் அறிந்தும் அறிந்தும் கூட வந்துவிட்டால்!!!!!

"""""""தன் இதயத்தில் பதித்துக் கொள்வாள் என்பேன் அப்பனே!!! ஒவ்வொரு மனிதரையும் கூட!!! ஒவ்வொருவரின் மனதில் இருப்பதைக் கூட!!!!!!

இதனால் அப்பனே சில நேரங்களில் கண்டங்கள் வரலாம்!! சில நேரங்களில் கஷ்டங்கள் வரலாம்!!!

ஆனாலும் இத் தாய்!!!! நிச்சயம் பின் மனதில் அதாவது நீங்கள் அறிந்தும் கூட பின் அதாவது உங்கள் அனைவரையுமே மறைமுகமாக பின் பார்த்து கொண்டே இருக்கின்றாள்... நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் !!!...

இதனால் மனதில் அறிந்தும் கூட பின் அறிந்தும் கூட உங்கள் பிம்பத்தை சேகரித்துக் கொண்டே இருக்கின்றாள்.

இதனால் தீங்கு விளையாதப்பா!!!!

அப்பனே எண்ணற்ற திருத்தலங்கள் அப்பனே எதை என்று கூட இத் தேசத்தில் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே மனிதன் அங்கெல்லாம் செல்கின்றானா?????????????? என்றால்..... இல்லையப்பா!!!!!!!!!

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் உடனடியாக வந்து விட வேண்டும் உடனடியாக நடக்க வேண்டும் என்றால் அப்பனே.... எப்படியப்பா????

அப்பனே எதை என்று அறிய அறிய பிறப்பும் உடனடியாக இல்லை அப்பனே கல்வியும் உடனடியாக இல்லை அப்பனே தொழிலும் உடனடியாக இல்லை இறப்பும் உடனடியாக இல்லை அப்பனே பின் திருமணமும் உடனடியாக இல்லை.... உடனடியாக இல்லை அப்பனே.. பின் அனைத்தும் உடனடியாக கேட்டால் எப்படியப்பா??? ஆகும்????

நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள் அப்பனே!!!

இதனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே 

தெரியாமல் இறைவனை வணங்கினாலும் ஒன்றும் கிட்டாதப்பா 

தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே 

இக்கலியுகத்தில் அப்பனே அழிவுகள் தான் பலம் என்பேன் அப்பனே!!!!

ஈசன் மாறி மாறி பருவ காலங்களை அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பருவ காலம் அதை மாற்றி மாற்றி அமைப்பான் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

எப்பொழுது எதை என்று அறிய அறிய எதிர்பார்க்காமல் இன்னும் இன்னும் அப்பனே மனிதனுக்கு கஷ்டங்கள் தோன்றி தோன்றி அதனால் அப்பனே நிச்சயம் தர்மத்தை கடைப்பிடித்தால் அப்பனே இறைவனுக்கு பிடிக்குமப்பா!!! தர்மத்தை அப்பனே நியாயத்தை அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே 

அப்பனே யார் ஒருவன் உண்மைதனை நிச்சயம் அப்பனே உண்மைதனை கடைப்பிடிக்கின்றானோ அவந்தன் இடத்தில் அப்பனே இறைவன் வந்து அனைத்தும் செய்வானப்பா அனைத்து தெய்வங்களும் கூட அவன் பின் காலடியில் என்பேன் அப்பனே 

சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் கூட. 

அப்பனே நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அதற்கு தகுந்தவாறே அனைத்தும் அமையுமப்பா!!! இதை யான் நிச்சயம் ஏற்கனவே முன் உரைத்தும் விட்டேன் அப்பனே பல சித்தர்களும் கூட பெரியோர்களும் கூட அப்பனே நிச்சயம் உரைத்து விட்டனர் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே மாற்றங்கள் ஏற்பட அப்பனே நிச்சயம் அலைந்து திரிந்தாக வேண்டும் என்பேன் அப்பனே 

ஓரிடத்தில் அமர்ந்து விட்டால் அப்பனே அறிந்தும் அறிந்தும் அப்பனே...

எறும்பை பார் அப்பனே!!!! எப்படி உழைக்கின்றது என்பதை அப்பனே!!! எப்படி எல்லாம் அறிந்தும் கூட அவை தன் எப்பொழுது அப்பனே தூங்குகின்றது?? என்பதை எல்லாம் பார்த்தால் அப்பனே உங்களுக்கு புரியுமப்பா!!!

அப்பனே அதுபோல் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஓரொரு உயிரும் பின் நம் தனக்கு எடுத்துக்காட்டாகவே விளங்குகின்றது என்பேன் அப்பனே 

அதனால்தான் அதற்கெல்லாம் உணவளியுங்கள் அப்பனே பின் அதற்கு உணவளித்து வந்தால் பின் நிச்சயம் அதன் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

இன்னும் சில பேர் அப்பனே உடனடியாக கிடைக்க வேண்டும் என்றால் அப்பனே... எப்படியப்பா????

அத்தகுதிகள் இல்லையே அப்பா!!!!!

அத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்பனே!!! அத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் தான் பின் அப்பனே கொடுத்தாலும் நிச்சயம் அப்பனே நீ தக்க வைத்துக் கொள்வாய் அப்பனே 

தக்க வைத்துக் கொண்டும் அப்பனே பிறர் நலனை விரும்புவாய் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே தகுதி இல்லாதவனுக்கு அப்பனே இறைவன் நிச்சயம் கொடுக்க மாட்டான் அப்பா 

அத்தகுதியை வளர்த்துக் கொள்வதற்கு அப்பனே நன் முறைகளாகவே அப்பனே திருத்தலங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன்......இவ் அம்மை அறிந்தும் கூட பல திருத்தலங்கள் ஏன் இறைவன் அங்கங்கு குடிகொண்டிருக்கின்றான் என்றால் அப்பனே புரிகின்றது என்பேன் அப்பனே...

பாசத்தோடு இறைவன் படைக்கின்றான் அப் பாசத்தோடு நம்தனை தேடி வருகின்றானா என்றால் அப்பனே இல்லையப்பா இல்லை!!!!!!

(இறைவனால் பாசத்தோடு படைக்கப்பட்ட நாம் அதே பாசத்தை இறைவன் மீது வைத்து தேடி தேடி இறைவனை காண செல்கின்றோமா என்றால் இல்லை) 

அதனால் தாய் தந்தையர் தான் நம் தனை தேடி வர வேண்டும் என்று எண்ணுகின்றான் மனிதன் அப்பனே!!!

மனிதன் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை இதில் இருந்து தெரிகின்றது என்பேன் அப்பனே!!!!!

அப்பனே தந்தையைக் காண!!!!! தாயைக் காண!!!! ஓடோடி அப்பனே....... மகன் வந்தால் அப்பனே...!!!!!

நிச்சயம் எனை காண அப்பனே ஓடி வந்து விட்டானே... என்றெல்லாம் அப்பனே!!!!

ஆனாலும் மாய உலகில் அப்பனே   அப்படி எல்லாம் அப்பனே மனிதன் சிந்திக்க மாட்டானப்பா!!!

அப்பனே பின் இறைவன் படைப்பு அப்பனே விசித்திரமானது...அவ் விசித்திரமானது அப்பனே அனைத்தும்  யான் நிச்சயம் அருள்வேன் அப்பனே...

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ... சிறிய மனிதர்கள் அப்பனே இருக்கின்றார்களப்பா 

(சித்திர குள்ளர்கள்)

மேல் நோக்கி அப்பனே அறிந்தும் அறிந்தும் இச்சித்திரையிலும் கூட வைகாசியிலும் கூட இங்கு மறைமுகமாக வருவார்கள் அப்பா.... வந்து அப்பனே பின்.... மண்ணாக இருக்கின்றதே அங்கு அமர்ந்து அப்பனே யாருக்கும் தெரியாமல் அப்பனே உணவு எல்லாம் சமைத்து அப்பனே உட்கொண்டு சென்று விடுவார்களப்பா 

அப்பனே இவ் ரகசியம் யாருக்கும் தெரியாதப்பா!!!!

(அம்பாள் இருக்கும் இடம் என்று குருநாதர் வாக்குகளில் கூறிய அம்பாஜி தேவியின் ஆலயம் தேவியின் இதய பகுதி விழுந்த இடம்!!! இந்த தேவியை அம்பாளை குஜராத்தில் அம்பாஜி என்று அழைக்கின்றார்கள். இந்த தேவியின் கோயில் குஜராத் ராஜஸ்தான் எல்லையில் இருக்கின்றது சிறிது தூரத்தில் மவுண்ட் அபு மலை தொடர் பாலைவனம் ஆரம்பம் ஆகின்றது குருநாதர் வாக்குகளில் குறிப்பிட்டுள்ள சித்திர குள்ளர்கள் பாலைவன மணற் பகுதிகளில் அமர்ந்து தியானங்கள் செய்கின்றார்கள் அது ஆலயத்திற்கு சிறிது தொலைவில் தான் ஆரம்பம் ஆகின்றது)

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்.... அதாவது  அப்பனே மேலே பார்த்தால் !!!.........அப்பா.... அறிந்தும் கூட அதாவது மணலாகவே இருக்கின்றதே......(பாலை வனம்) அது அப்படியே நீண்டு கொண்டு அப்பனே இன்னும் இன்னும் சென்று விட்டால்... அப்பனே அதன் வழியாக நேரடியாகவே சென்றால் அப்பனே நிச்சயம் மேல் நோக்கி சென்றால்... அப்பனே அருமையாக... அறிந்தும் கூட எவை என்றும் புரிந்தும் கூட அப்பனே... மேல்நோக்கி சென்று விடலாம் அப்பனே!!!!

இதன் ரகசியத்தை இன்னும் விளக்குவேன் அப்பனே!!!!!

அப்பனே மனிதன் அப்பனே எவ்வளவு அறிவு அப்பனே இறைவன் கொடுத்திருந்தாலும் அதை சரியாகவே உபயோகப்படுத்துவதில்லை என்பேன் அப்பனே 

அழிவுக்குத்தான் உபயோகப்படுத்துகின்றான் என்பேன் அப்பனே 

அதனால்தான் இறைவனே இப்படி எதை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே அதாவது தற்பொழுதும் கூட பாலைவனம் என்றே... அப்பனே அதன் நாமத்தையும் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே அப்படியே அதன் மேலே அதன் நேரே குறுக்கே அப்பனே அப்படியே அப்பனே பின் எதை என்று அறிய அறிய பார்த்தால் அப்படியே மேல் சென்று விடலாம் என்பேன் அப்பனே 

அதாவது அவள் ஊர் இருக்கின்றதப்பா!!!!

(காயத்ரி -ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரி சக்தி பீடம் புஷ்கர் ராஜஸ்தான்

காயத்ரி மந்திரம் , நமக்குக் கிடைத்த இடம், அம்பிகையின் மணிக்கட்டு விழுந்த புஷ்கர் சக்திபீடம் )

அர்புதா தேவி சக்தி பீடம் - இது  ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் அமைந்துள்ளது.

மா அம்பிகா சக்திபீடம், பாரத்பூர், ராஜஸ்தான்.

என குருநாதர் பாலைவனம் வழியாக செல்லும் பொழுது தேவியின் சக்தி பீடங்கள் இருக்கின்றது!! ஒரு தகவலுக்காக இதைத் தெரிவிக்கின்றோம்)

இன்னும் ரகசியத்தை யான் விளக்குகின்றேன் அப்பனே எப்படியெல்லாம் செல்லலாம் என்று அப்பனே!!!

யானும் (அம்பாஜி)இங்கு வந்தேனப்பா தியானங்கள் செய்து கொண்டிருந்தேன் அப்பனே... பின் அதாவது அப்பனே காசி தன்னில் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட.. அதாவது அப்பனே பின் உலோபா முத்திரையும் அப்பனே எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய இங்கு செல்லலாம் என்று!!!

பின் நிச்சயம் யாங்கள் இங்கு வந்து விட்டோம்!!!!

(குருநாதர் அகத்திய பெருமானும் லோப முத்திரை அன்னையும் அம்பாஜி வந்தார்கள்)

ஆனாலும் அறிந்தும் கூட குள்ளர்களாகவே இங்கு திரிந்தார்களப்பா... அறிந்தும் அறிந்தும் எதை என்று புரிய புரிய எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் அவர்கள் உணர்ந்து கொண்டனர் அப்பனே அவர்கள் சக்தி மிக அதிகமப்பா!!!!

அப்பனே ஒரு நொடியில் எதை என்று புரியப் புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே.. பின் அங்கும் இங்கும் அலைவார்களப்பா!!! அப்பனே அவர்களுக்கென்று தனி விமானமும் இருக்கின்றதப்பா!!! அறிந்தும் கூட அவர்கள் வருவார்கள் பின் செல்வார்கள் என்பேன் அப்பனே!!

அவர்கள் பின் அதாவது பின் சொர்க்கலோகம் நரகலோகம் என்றெல்லாம் இருக்கின்றது அப்பனே அவையெல்லாம் யான் வெளிக் காட்டுவேன்!!! அப்பனே 

ஆனால் கலியுகத்தில் மனிதன் அப்பனே எதை என்று கூட சொர்க்கத்தை யாங்கள் தருகின்றோம் என்றால் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே 

நரகத்தில் வாழ்ந்தால் எப்படியப்பா???  கஷ்டங்கள் வராமல் போகும்!!????

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் சொர்க்கத்தை எதை என்று அறிய அறிய அப்பனே... என்பால் அப்பனே நிச்சயம் அதாவது காட்ட முடியுமப்பா!!! இக்கலி யுகத்திலே அப்பனே 

ஆனால் யான் சொல்லியதை நீங்கள் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே 

இவ்வாறு கடைப்பிடித்தாலே அப்பனே மாபெரும் வெற்றி உண்டப்பா 

அப்பனே அனைவருக்கும் அப்பனே வெற்றிகள் அப்பனே காத்து கொண்டிருக்கின்றது 

ஆனாலும் அதற்கு தகுந்தாற்போல் இல்லையப்பா 

பின் அம்பாளும் 16 கைகளுடன் இன்னும் அப்பனே எத்தனை எத்தனையோ கைகள் அப்பனே பின் அள்ளி கொடுக்கின்றாள்...

ஆனால் வாங்குவதற்கு உங்களுக்கு அப்பனே தெம்பில்லையே!!????

அப்பனே கைகள் இல்லையே ஒரு கை தான் இருக்கின்றதப்பா   அப்போது நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள் உங்கள் தகுதி எங்கு உள்ளது என்பதை கூட அப்பனே 

இதனால் அப்பனே பின் மாயையை அகற்ற வேண்டும் அப்பனே... யார் ஒருவன் மாயையை அகற்றி நிச்சயம் இறைவன் பாதத்திலே இருக்கின்றானோ அவந்தனுக்கு அனைத்தும் இறை கொடுக்கும்!!!

இறை எதை என்று அறிய அறிய!!! தர்மத்தின் பால் சென்று கொண்டிருந்தால் இறை தேடி வருமப்பா!!!

அறிந்தும் கூட அனைத்தும் கொடுக்குப்பா!!!

ஆனால் நீ அப்பொழுது இவையெல்லாம் வீண் என்று நினைத்து விடுவாய் என்பேன் அப்பனே 

இவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே!!!

அப்பனே வாழ்க்கையை பார்த்தால் ஒன்றும் இல்லையப்பா!!! அப்பனே அறிந்தும் வாழ்வதும் ஒன்றும் இல்லையப்பா ஆனாலும் கிடைப்பதும் ஒன்றும் இல்லையப்பா

அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே கடைசியில் அப்பனே எதை என்று அறிய அறிய எங்கு செல்கின்றாய் என்று பார்த்தால் அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே யாரும் அப்பனே மதிக்காத அளவிற்கு எங்கேயோ சென்று விடுகின்றாய் அப்பனே 

அப்பொழுது இறைவன் தான் அப்பனே தன்னிடத்தில் இருந்து அப்பனே அறிந்தும் கூட பாவம் புண்ணியம் என்பதையெல்லாம் அப்பனே தேர்ந்தெடுத்து அப்பனே பின் அறிந்தும் கூட  அவ் ஆன்மா பிறப்பெடுக்கும் என்பேன் அப்பனே 

இவ்வளவுதான் வாழ்க்கை!!!

இதிலே அப்பனே யான் உயர்ந்தவன் யான் பெரியவன் அறிந்தும் கூட அனைத்தும் எந்தனுக்கே தெரியும் யான் தான் அப்பனே அறிந்தும் கூட என்றெல்லாம் அப்பனே பித்தலாட்டங்கள் அப்பனே 

இன்னும் இன்னும் அப்பனே தன்னை எதை என்று அறிய அறிய ஏற்று இவைதன் என்று உணர்ந்து ஆனாலும் அப்பனே அனைத்தும் அறிந்தவன் அமைதியாக தான் இருப்பான் என்றெல்லாம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட. 

இதனால் இவ் அம்மை அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிய அறிய தேடி வருபவர்களுக்கெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே உயர்த்தி உயர்த்தி அனைத்தும் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றாள் அப்பனே

இன்னும் இன்னும் அப்பனே கொடுக்கத்தான் போகின்றாள் என்பேன் அப்பனே 

அதனால்தான் பின் அறிந்தும் அறிந்தும் கூட தாயே!!!! அம்மா!!!!! என்றெல்லாம் எதை என்று புரியப் புரிய அப்பனே பின் அன்போடு இவள் தனை அழைத்து விட்டால்!!!!!!!!!!

மகன் வந்துவிட்டானே!!!!!..... மகள் வந்து விட்டாளே!!!!!!... என்றெல்லாம் அன்போடு பின் இதயத்தில் நிச்சயம் பூட்டி வைத்து அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய தக்க சமயத்தில் அதாவது கண்டங்கள் கஷ்டங்கள் வந்தாலும் இவள் தன் நிச்சயம் !!...ஐயோ... நம்மிடத்தில் ஓடி வந்து விட்டானே இவந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் செய்வாள் அப்பனே அறிந்தும் கூட. 

ஆனால் சில பேரும் அறிந்தும் கூட பின் ஏன் அங்கு என்னால் வர முடியவில்லையே என்று சொன்னாலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட யான் சொல்வதை நிச்சயம் கேட்க வேண்டும் அப்பனே!!!

அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஒன்றும் இல்லையப்பா!!!

தர்மத்தை கடைப்பிடி!!!! போதுமானது!!!!!

தர்மத்தைப் பற்றி பின் விளக்கமாக எடுத்துரை!!! போதுமானது என்பேன் அப்பனே 

அவ்வளவுதான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட 

புண்ணியம் அப்பனே!!!!

அப்பனே தர்மம் புண்ணியம் எதை என்றும் அறிய அறிய அப்பனே புண்ணியத்தை அப்பனே கடைப்பிடித்தாலே அப்பனே அறிந்தும் கூட எது புண்ணியம்? எது பாவம்? என்பதையெல்லாம் அப்பனே இறைவன் எண்ணிக் கொள்வான் அப்பனே... இதனால் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே 

புரிந்து கொண்டு இறையை வணங்குங்கள் அப்பனே 

புரியாமல் வணங்கினால் அப்பனே மீண்டும் மீண்டும் கஷ்டங்கள் வந்து அப்பனே எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் வந்து வந்து இறைவன் இல்லை என்று தான் நீ சொல்வாய் என்பதை எல்லாம் யாம் அறிவோம் அப்பனே 

இப்படித்தான் இக்கலி யுகத்தில் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே மாயை தன்னையே அழித்துவிடும் அப்பனே. தன்னை மட்டும் அழிக்காமல் தன் குடும்பத்தையே அழித்துவிடும் என்பேன் அப்பனே!!!

இது தேவையா????

அதனால் முதலில் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட உண்மை பொருள் எதுவென்றால் இறைவனே!!!!! அப்பனே!!

யார் ஒருவன் முழு மனதோடு இறைவனை தேடுகின்றானோ அப்பனே நிச்சயம் அவந்தன் உத்தமன் என்பேன் அப்பனே. 

அதுமட்டுமில்லாமல் அப்பனே இறைவன் படைக்கின்றான் மனிதர்களை...

ஆனாலும் பின் பாசத்தோடு தான் படைக்கின்றான். 

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப் பாசப்பிணைப்பு அப்பனே ஓடி விடுகின்றது சில காலத்திற்கே!!!!

அப்பனே... பின் இறைவன் வருந்துகின்ற பொழுது அப்பனே நீயும் கஷ்டப்படுவாய் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

இதுதான் வாழ்க்கை அப்பனே. 

அதனால் கஷ்டங்கள் படாமல் நீ பின் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இறைவன் மனதை கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும் அப்பனே

இறை என்பது என்ன???

அப்பனே இறைவன் எங்கு இருக்கின்றான்?? என்பவை எல்லாம் அப்பனே பின் யானே சொல்வேன் அப்பனே!!!...

ஆனாலும் அப்பனே பின் எங்கும் இருக்கின்றான்!!! இறைவன்!! அப்பனே எதிலும் இருக்கின்றான் இறைவன் !!!!

ஆனாலும் அப்பனே அதற்கு தகுந்தார் போல் அப்பனே நீ மன தைரியத்தையும் கூட மனோ பலத்தையும் கூட அப்பனே வளர்த்துக் கொண்டால் அப்பனே இறைவன் தெரிவானப்பா!!! உன் மனதிலே அப்பனே 

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வாழ்க்கையில் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய......

இத் தேசத்தில் அப்பனே இவ் அம்மை எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட சக்தியாக குடி கொண்டிருக்கின்றாள். 

இதனால் அப்பனே பின் முன்னொரு காலத்தில் அப்பனே பெண்கள் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே பெண்களை அதட்டி அதட்டி வாட்டி வாட்டி பெண்கள் என்றால் நிச்சயம் எதற்கும் உதவ மாட்டார்கள் என்றெல்லாம் அறிந்தும் அறிந்தும் கொடுமைப்படுத்தி அப்பனே எதை என்றும் அறிய அறிய ராஜாக்கள் எதை என்றும் புரிய புரிய...

(இவ் தேசத்தை ஆண்ட அரசர்கள் பெண்களுக்கு சரியான மதிப்புகள் தராமல் பெண் என்றால் பேய் என்றும் ஆலயத்திற்கு கூட செல்ல கூடாது என்றும் பெண்களை கொடுமைப்படுத்தி அடக்கி வைத்தனர்)

இதனால் பெண்களே பின் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய பின் இவ்வுலகத்தில் எதை என்று கூட பெண்கள் எல்லாம் தீயவர்கள் பேய்கள் என்றெல்லாம் நிச்சயம் மனிதன் நினைத்து நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தான் அப்பனே

இதனால் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் திருத்தலங்களுக்கு கூட செல்லக்கூடாது பெண்கள் என்பார்கள். 

ஆனாலும் பின் தெய்வம் பெண் என்பதுதான் என்பதை மறந்து விட்டார்கள் என்பேன் அப்பனே. 

அப்பொழுது எப்படியப்பா??? ஆசிகள் கிட்டும்????

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய ஆனாலும் ஒரு பெண் மட்டும் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல் கூட 

தாயே !!!!! நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட!!!! எங்களை இவ்வாறெல்லாம் நடத்துவதா?????

தாயே நீயும் ஒரு பெண்ணாகத்தான் இருக்கின்றாயே!!!!

அறிந்தும் எதை என்றும் அறிய அறிய ஏதாவது நீ நிச்சயம் நடத்து!!!

பெண்கள் இவர்கள் எல்லோருக்கும் நீ விடுதலை கொடு என்றெல்லாம் அப்பனே!! எதை என்றும் அறிய அறிய! 

இதனால் பின் இவ் அதாவது அப் பெண்மணி வேண்டி கேட்டதை நிச்சயம் இத் தேவி அதாவது அம்மா அம்பாள் உணர்ந்தாளப்பா!!!!!!

அப்பனே கேட்கின்றதா அனைவருக்குமே!!!!

அப்பனே அதே போலத்தான் அப்பனே எங்கிருந்தாலும் என்னால் முடியவில்லையே என்று பின் சொன்னால் இறைவா என்று நினைத்துக் கொண்டாலே போதுமப்பா 

இவ் அம்மை நினைப்பாளப்பா!!!! அப்பொழுது பார்த்துக் கொள்வாள் என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே 

அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் வாழ்க்கையின் தத்துவத்தை கூட அப்பனே இதனால் பின் சரியாகவே ஆனாலும் இவ் அம்மை பின் நிச்சயம் செல்வோம் என்னதான் நடக்கிறது என்பது நிச்சயம் மன்னனாக இருந்தாலும் நிச்சயம் என்று. 

அப்பனே உண்மை ஒரு பெண் வடிவமாக மறு உருவம் எடுத்துச் சென்றாள்!!

செல்லும்பொழுதெல்லாம் அப்பனே மனிதன் பார்த்தான்..

ஏன் எவை என்றும் அறிய அறிய பார்த்துட்டு இவள்தன் என்ன எதை என்று அறிய கேலியாக பேசினார்கள். 

ஆனாலும் நேரடியாக மன்னனிடம் சென்று!!!!

மன்னா!!!!!!!!!!!!

அறிந்தும் உணர்ந்தும் கூட இப்படியெல்லாம் ஏன் பெண்களை!!..... எதை என்று அறிய அறிய 

ஆனாலும் பின் அவ் மன்னன்!!!

அடி பெண்ணே!!!!! அறிந்தும் கூட உன்னை யார் ?இங்கு விட்டது??? அறிந்தும் கூட நிச்சயம் எவை என்று அறிய அறிய பெண் என்றால் அறிந்தும் கூட பின் அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய தாழ்வானவர்கள் தான்!! பேய்கள் தான்!! அறிந்தும் கூட !!

இதனால் பின் தளபதிகளே!!!!!! அறிந்தும் கூட !!  இவள் யார்??!!!!! இவளை யார்? இங்கு உள்ளே விட்டது? என்றெல்லாம் நிச்சயம் அடித்து இவள்தனை கொல்லுங்கள் என்று அறிந்தும் எதை என்று புரியப் புரிய..

ஆனால் நிச்சயம் அறிந்தும் கூட அனைவரும் ஓடோடி வந்து இவள்தனை கையைப் பிடிக்க நிச்சயம் பிடிக்க முடியவில்லையே...

அறிந்தும் கூட ஆனாலும் அனைவரும் இவளை பிடி!! பிடி!!! என்றெல்லாம் மன்னன்! 

ஆனால் யாருமே இவள்தனை பிடிக்க முடியவில்லை... என்று எதை என்றும் அறிய அறிய ஆனாலும்... மன்னன் ஜோதிடர்களை அழைத்தான் எதை என்றும் அறிய அறிய 

ஜோதிடர்களை அழைத்து அறிந்தும் உண்மைதனை கூட இன்னும் வாக்குகளை செப்புபவர்களை அழைத்து அறிந்தும் கூட இவளிடத்தில் என்ன??? உள்ளது என்பதை எல்லாம் அறிந்தும் கூட செப்புங்கள் என்று!!!

ஆனாலும் அறிந்தும் கூட இவள்தனை எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய யாருக்குமே தெரியவில்லையப்பா!!!!!

அதாவது அறிந்தும் உண்மைதனை கூட 

ஏனென்றால் பின் உயர்ந்த அன்பு அறிந்தும் கூட இதனால் பின் எதை என்று புரிய புரிய அப்பனே ஆனாலும் உணர்ந்து கொண்டாள்...

அப்பனே வேண்டிக் கொண்டாளே ஒருவள்...அவள் தன் உணர்ந்து கொண்டாள்!!!

நிச்சயம் வந்திருக்கின்றது என் அன்னை தான் என்று ஓடோடி வந்தாளப்பா!!!!

என் அன்னை வந்திருக்கிறாள்!!!! யாராலும் ஒன்றும் செய்ய முடியாது!!!

பின் முடிந்தால் என்னை கொன்று பாருங்கள் என்று ஓடோடி அப்பனே வந்தாளப்பா!!!

ஆனாலும் அப்பனே அனைவருமே அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமல் இருந்தாலும் அப்பனே இவள் தன் ஓடுகின்றாளே!!!!

யார் வந்திருக்கின்றார்கள் என்று பின் இவள் பின்னே ஓடினார்கள் சாகடிக்க....

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓடோடி வந்து அப்பனே பின் அம்மையின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் அப்பனே

தாயே!!!!!!!

அறிந்தும் கூட பின் இப் பிள்ளை உன்னை நினைத்தது ஓடோடி அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட எதை என்றும் புரிய புரிய அப்பனே பின் உயர்ந்து தாயே!!!! பின் மனதில் நினைத்ததை அப்படியே அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய எவை என்று கூட வந்துவிட்டாய்!!!!

பின் மோட்சம் கொடு அனைவருக்குமே!!! பெண்கள் இவ்வாறெல்லாம் கஷ்டங்கள் படுகின்றார்கள் ஏன் இந்த வாழ்க்கை???

நிச்சயம் யாங்கள் என்ன தவறு செய்தோம்??????? பெண்கள் என்றால் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட. 

இவ் அம்மை அறிந்தும் கூட இதனால் அரசனும் பார்த்தான் பின் யார் இந்த பெண்??? எதை என்று அறிய அறிய யார் எவை என்று அறிய அறிய யாரென்று எவருக்குமே தெரியவில்லை. 

ஆனாலும் அப் பெண்மணி உரைத்தாள்!!!!

இவள் என் தெய்வம் என் அம்மை என்றெல்லாம்...

ஆனாலும் யாருமே நம்பவில்லை அப்பனே 

அப்பனே கலியுகத்தில் இப்படித்தான் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே 

அப்பனே இறைவன் நேரடியாக வந்தாலும் அப்பனே நம்ப போவதில்லை என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே அவை இவை என்று பேசிக்கொண்டு இருப்பார்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

அப்பனே இவை தான் கலியுகம் என்பேன் அப்பனே 

இதனால் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் எதை என்று அறிய அறிய ஆனாலும் அப் பெண்மணி சொன்னாள்!!!

நிச்சயம் எம் அம்மை உங்களை அழிப்பாள் என்று !!!

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்றும் புரியப் புரிய கோபத்தால் அம்மை அனைவருக்கும் நோயை கொடுத்து உண்டாகும் படி செய்தாள் என்பேன் அப்பனே

அப்பொழுதுதான் தெரிந்தது எதை என்று கூட அவ் மன்னனும் அறிந்தும் கூட...

அனைவருக்குமே மோட்சம் எதை என்று அறிய அறிய பெண்களும் நிச்சயம் அனைத்து விஷயங்களிலும் செயல்பட முடியும் என்று!!!

அதனால் அப்பெண்மணியும் தாயே!!! அறிந்தும் கூட போராடி எதை என்று அறிய அறிய தாயே நீயே வந்து விட்டாய்!!!!

நிச்சயம் பெண்களுக்கு வாழ்க்கை இப்படி எல்லாம் இருக்கின்றது!!! நிச்சயம் பெண்கள் உயர்ந்து வாழ வேண்டும் நிச்சயம் அவ் அருளை கொடு என்று!!!!அப்பனே அவ் பெண்மணி

தேவி!!!! நிச்சயம் அதாவது பின் நிச்சயம் கொடுக்கின்றேன் இவ் தேசத்தில் பெண்கள் நிச்சயம் அவர்கள் விருப்பப்படி நிச்சயம் உயர்ந்து நிற்பார்கள் கல்வியிலும் உயர்ந்து நிற்பார்கள் நிச்சயம் அறிந்தும் கூட தொழிலிலும் உயர்ந்து நிற்பார்கள்!!!

(பெண்களின் மதிப்பு மரியாதை கல்வி வேலை வாய்ப்பு அனைத்து துறையிலும் வெற்றி பெற தேவி வரம் தந்து விட்டார்)

ஆனாலும் அறிந்தும் கூட அதில் ஒழுக்கம் இல்லையென்றால் நிச்சயம் கஷ்டங்கள் வந்துவிடும் என்றெல்லாம் நிச்சயம் 

அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட அப்பனே தற்பொழுது கீழ் நோக்கி போகும்பொழுது அப்பனே ஒழுக்கம் இல்லாமல் வாழ கூடாது என்பேன் அப்பனே 

நிச்சயம் உண்மைதனை தாய் தந்தையரை மதித்து பின் தாய் தந்தை சொல்லை கேட்டு பெண்கள் பின் நிச்சயம் நடத்தையிலும் சரியாக இருந்தாலே இன்னும் இவ்வுலகத்தில் மாற்றங்கள் ஏற்படுமப்பா!!!!

அப்பனே ஒரு பெண் தலை குனிவாக நடந்து சென்றாலே.. அப்பனே அக்குடும்பமே தலை நிமிர்ந்து வாழுமப்பா

அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

அப்படி இல்லை என்றால் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்துவிட்டால் அப்பனே பின் குடும்பம் தலைகுனியும் என்பேன் அப்பனே. 

இதுதானப்பா வாழ்க்கை அறிந்தும் அறிந்தும் கூட!!!

அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே பெண்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுங்கள் அப்பனே சிறு வயதில் இருந்தே!!!!! அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட 

இதனால் அப்பனே (பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சித்தன் அருள் 1602 திருப்பதி வாக்கில் குருநாதர் ஏற்கனவே வாக்குகள் தந்திருக்கின்றார்)

எதை என்று அறிய அதனால் அப்பனே வாழ்க்கை பெண்களுக்கு நல் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுங்கள் அப்பனே சிறு வயதில் இருந்தே அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட!!!

இதனால் அப்பனே பெண்

தெய்வங்களாக. 

(பெண் குழந்தைகள் பெண் தெய்வங்களுக்கு சமம் அவர்கள் தவறுகள் செய்வதால் ஈசனுக்கு கோபம்)

எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால்தான் ஈசனும் கோபமுற்றான் என்பேன் அப்பனே!!!!!

அழிவும் எதை என்று அறிய அப்பனே.... இன்னும் இன்னும் சாபங்கள் எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் இருக்கின்றது என்பதை எல்லாம் அப்பனே 

இதனால் அறிந்தும் கூட அப்பெண்மணி அப்பனே வாக்குகள் எதை என்று அறிய அறிய பின் பெண்கள் உயர்ந்திட வேண்டும் என்றெல்லாம் !!!!!

ஆனாலும் இப்பொழுது மனம் வருந்துகின்றாள்!!!அப் பெண்மணி!!!!

இன்று இப்படி எல்லாம் இருக்கின்றார்களே பெண்கள்!!!! எதை என்று அறிய அறிய ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இல்லையே தாயே!!!!

நீ எப்படியாவது திருத்து!!! என்றெல்லாம்!!!!

பின் அனுதினமும் இவள்தனை அறிந்தும் அறிந்தும் கூட வேண்டிக் கொண்டே இருக்கின்றாள் அப்பனே!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே அழிவுக்கு காரணமாகாதீர்கள் என்பேன் அப்பனே 

நிச்சயம் அப்பனே எதை என்று கூட தாய் தந்தையர் வளர்தார்கள் என்பேன் அப்பனே அதாவது பெண்களை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய 

ஆனாலும் நீங்கள் நிச்சயம் அனைத்தையும் பின் தாய் தந்தையர்  குழந்தைகளுக்கு எடுத்துரையுங்கள் போதுமானது

(ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளிடம் இவ்வாறு கஷ்டப்பட்டு வளர்க்கின்றோம் என்று சொல்லி வளர்க்க வேண்டும்)

பின் அறிந்தும் கூட அனைத்தையும் செய்வார்கள்

ஆனால் நீங்கள் மறைமுகமாக தவறுகள் செய்தால் அனைத்தும் பறிபோய்விடும்... நீயும் பறிகொடுப்பாய் பறிகொடுத்து விடுவாய் வாழ்க்கையை எதை என்று கூட உன்னை சார்ந்தோரும் எதை என்று கூட அதனால் உன்னால் எதை என்று அறிய அறிய அனைவரும் கெட வேண்டுமா??? என்பதைக் கூட!!! தாயே !!மகன்களே!!! பிள்ளைகளே!!!! எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய புரிந்து கொள்ளுங்கள்!!!!

அதனால் நிச்சயம் பின் ஒவ்வொன்றாக சொல்கின்றேன் எப்படி வாழ வேண்டும்? என்று 

அப்படி வாழ்ந்து விட்டால் நீங்கள் நிச்சயம் திருத்தலத்திற்கு அலைய தேவையே இல்லை!!!!

இறைவனை உங்கள் இல்லத்திற்கு யான் அழைத்து வந்து காட்டுவேன். 

தாயே!!!! அறிந்தும் கூட பிள்ளைகளே!!!!

எதை என்றும் அறிய அறிய தந்தையே !!! என்றெல்லாம் உங்களை அழைத்து வணங்குகின்றேன்!!! அறிந்தும் கூட!!!!

(இந்த இடத்தில் குருநாதருடைய வார்த்தையை வாக்குகளை கவனிக்கவும்!!! இந்த  பிரபஞ்சத்தின் அதிபதி நம்மை வாழவைக்கும் தெய்வம் அகத்திய பெருமான் நம்மை தாயே தந்தையே பிள்ளைகளே என்று அழைத்து வணங்குகின்றேன் என்று சொல்வது எவ்வித எத்தகைய வார்த்தை!!!!! அப்பப்பா மெய்சிலிர்க்கின்றது!!!!!

ஒரு வாக்கில் யானும் உங்களைக்  கைவிட்டு விட்டால் என்ன ஆவது என்று கூறியிருந்தார் உண்மையில் எவ்வளவு கருணை இருந்தால் மனிதர்கள் இவ்வளவு பாவங்கள் கர்மங்கள் செய்திருந்தாலும் மனம் இறங்கி நம் வாழ்க்கை நிலையை மாற்றி நம்மை நல்வழிக்கு அழைத்துச் செல்ல நம் தந்தை ஆனவர் எப்படியெல்லாம் வாக்குகள் தந்து அதுவும் நம்மை வணங்குகின்றேன் என்று கூறுவது அப்பப்பா தந்தையின் கருணைக்கு அளவு ஏது??? என்ன சொல்வதென்றே தெரியவில்லை அகத்தியப்பனின் கருணைக்கு ஈடு இணையாக இந்த பிரபஞ்சத்தில் எதுவும் கிடையாது.... என்றும் வாழ வேண்டும் நம் அப்பன் அகத்திய பெருமான் என்றும் நம் அப்பனோடு நாம் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் மனித குலம் தழைத்தோங்க அகத்திய பெருமானை விட்டால் கதி ஏது)

இப்புவிதனில் நிச்சயம் ஒருவர் செய்யும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய கெடுதல் கூட பல பேர்களை தாக்கும்(அழிக்கும்) சொல்லிவிட்டேன் 

அதேபோல் ஒருவர் செய்யும் புண்ணியம் கூட பல பேர்களை தாக்கும் (காக்கும்) சொல்லிவிட்டேன்

அதனால் நிச்சயம் பின் அதாவது எப்படி இவ்வுலகம் அழியப் போகின்றது என்பதெல்லாம் மனிதரிடத்தில் தான் இருக்கின்றது மனிதர்கள் திருந்தி விட்டால் போதும் அறிந்தும் அறிந்தும் கூட 

அதனால்தான் ஈசனிடத்திலும் கூட!!!!!

ஈசா!!!!  அறிந்தும் கூட நீ தான் படைத்தாய்!!!

ஆனால் நீயே இப்படி செய்யலாமா!!!! என்றெல்லாம் பின் கெஞ்சி!!! அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய!!!!  அவந்தனை பிடித்து பிடித்து!!!!!

ஈசன் 

அகத்தியனே!!!! யான்தான் சொன்னேன் உலகத்தை காப்பாற்று!!! அனைத்து இடங்களிலும் சென்று தர்மத்தை நிலை நாட்டு என்று!!!!

ஆனாலும் இப்பொழுது தர்மம் எங்கே??? போய்விட்டது??? நீயே பார்!!! என்றெல்லாம்!!! அப்பனே ஈசன் என்னை கேட்கின்றானப்பா!!!

அதனால்தான் என் பக்தர்களுக்கு எடுத்துரைக்கின்றேன். அப்பனே அறிந்தும் கூட 

அப்பனே தர்மத்தை நிலை நாட்டுங்கள் அப்பனே போதுமானது!!!!

மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே !!!!

எதை என்றும் புரிய  புரிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் அழிவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது அப்பனே அதனால் அப்பனே நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் மனிதர்கள்  இன்னும் அப்பனே காற்று கூட அப்பனே பின் எதை என்று கூட விலைக்கு வாங்கும் காலம் பின் வந்து விட்டது அறிந்தும் கூட 

அதனால் அப்பனே பின் அறிந்தும் கூட உங்களால் எதை என்றும் அறிய அறிய அறிய மனிதனால் கண்டுபிடித்தவை எல்லாம் அப்பனே புதிது புதிதாக அழிவுக்கு செல்லக்கூடியது 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே அறிந்தும் கூட இன்னும் அப்பனே... அறிந்தும் அறிந்தும் உண்மைதனை கூட அதாவது அப்பனே வாயில்லா ஜீவராசிகளும் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன 

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே காற்றுகள் மாசுபட மாசுபட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய ஒரு படலம் எதை என்றும் அறிய அறிய இருக்கின்றதப்பா 

(மனிதர்களால் ஓசோன் படலம் என்று அழைக்கப்படுவது) 

இதை தன் அங்கு தாக்க அறிந்தும் கூட அங்கு அப்பனே அறிந்தும் கூட மிகப் பெரிய வெடிப்பு ஏற்படுகின்ற பொழுது அப்பனே அறிந்தும் அறிந்தும் காற்று கூட அப்பனே சுவாசிக்க முடியாதப்பா!!!!

அப்பனே அப்பொழுது மூச்சும் உள்ளிழுத்து வெளியே விட முடியாதப்பா!!!

அதனால் அப்பனே செடி கொடிகளையும் கூட மரங்களையும் நடுங்கள் அப்பனே!!!!!

போதுமானது என்பேன் அப்பனே தன்னால் முடிந்தவரை அப்பனே நிச்சயம் அப்பனே 

இவையெல்லாம் செய்து கொண்டே வந்தால் தாம் தன் வீட்டிற்கு யான் அகத்தியனே வருவானேப்பா வந்து நன்மை செய்வேன் அப்பனே!!!

அப்பனே தர்மத்தை நிலை நாட்டுங்கள் அப்பனே போதுமானது என் பக்தர்களுக்கு அப்பனே!!!

அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சித்தர்களே அடிப்பார்கள் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

இதனால்தான் அப்பனே யாங்கள் நல்லோர்களை தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து வழிநடத்தி வழி நடத்தி உயர்த்தி உயர்த்தி அப்பனே நிச்சயம் இன்னும் மாற்றுவோம் என்பேன். அப்பனே 

நலன்கள் ஆகவே!!!

இதனால் அப்பனே அனைவருக்கும் தெரிவியுங்கள் அப்பனே இன்னும் இன்னும் 

அப்பனே ஈசன் இன்னும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய ஈசனின் மனம் குளிரும்படி செய்திடுங்கள் அப்பனே!!!

அதாவது இயலாதவர்களுக்கு வாயில்லா ஜீவராசிகளுக்கு அப்பனே உணவுகள் அளித்துக் கொண்டே வந்தாலே அப்பனே நிச்சயம் ஈசன் மனம் மகிழ்வான் !!!!!

அவை மட்டுமில்லாமல் அப்பனே பின் வாயில்லா ஜீவராசிகளுக்கு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் சேவை செய்யுங்கள் அப்பனே என் பக்தர்கள் அறிந்தும் கூட

நீங்களும் சேவைகள் செய்யுங்கள் அப்பனே அறிந்தும் கூட உங்களுக்கு அத்திறமை இருக்கின்றது என்பேன் அப்பனே

(வாக்குகள் கேட்டுக் கொண்டிருந்த வட இந்திய பக்தர்களுக்கும் சேர்த்து கூறிய வாக்கு)

(அகத்தியர் பக்தர்கள் மரம் நட்டு வளர்க்க வேண்டும்)

அப்பனே அறிந்தும் கூட நீங்கள் நட்டு வைக்கும் அவ் மரம் எவ்வாறு வளர்கின்றதோ!!!!!! அவ்வாறே உங்களையும் யான் வளரச் செய்வேன் செப்பி விட்டேன் நலங்களாக நலன்களாக அப்பனே 

அதாவது அப்பனே பின் பிறந்தால் ஏதாவது புண்ணியம் செய்ய வேண்டும் அப்பனே 

புண்ணியம் இல்லை என்றால் அப்பனே இறைவனை மட்டும் பின் வணங்கி சென்றால் என்ன லாபம்?????????

அப்பனே லாபம் இல்லை என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே வந்ததற்கு (பிறப்பெடுத்து) அப்பனே ஒரு செடி கொடியையாவது மரமாவது பின் எவை என்று கூட வைத்து வளர வைத்து அப்பனே 

(மரம் வெளியிடும் உயிர்வளி) 

அக்காற்று பல கோடி மக்களை அப்பனே காப்பாற்றும் என்பேன் அப்பனே...

எவை என்று அறிய அறிய அவை எப்பொழுதும் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் அவ்வாறு எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் உன் சந்ததியையே (பரம்பரையை) காப்பாற்றும் என்பேன் அப்பனே 

சொல்லிவிட்டேன் அப்பனே !!!

இறையை எப்படி வணங்குவது? என்று கூட தெரியாமல் வணங்கி விடாதீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

தெரியாமல் வணங்கி விட்டால் அப்பனே பின் நாளைய பொழுதில் கஷ்டங்கள் வந்து வந்து அப்பனே பின் வருபவர்களும் கூட இறைவன் இல்லை இறைவனை எவ்வளவு வணங்கினாலும் அப்பனே எதை என்று அறிய அறிய

எதையுமே இறைவன் செய்ய மாட்டான் என்றெல்லாம்!!!!! அப்பனே இறைவன் பெயரையே எதை என்று அறிய நீங்கள் கெடுக்க பார்க்கின்றீர்களா ??

அப்பனே சொல்லுங்கள் மனதை தொட்டு!!!!!! அப்பனே

அதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அதன் முன்னே அதனால் தான் அப்பனே இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவான் என்பது இறைவனுக்கு தெரியும் அப்பனே....

அதனால்தான் அழிவுகள் பலமாக வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே 

எதை என்று அறிய அறிய பிற உயிர்களை கொல்லாமை என்று எதை என்று அறிய அனைவரிடமும் எடுத்துரையுங்கள் அப்பனே 

நிச்சயம் அப்பனே தண்டனைகள் உண்டு அப்பனே!!!

எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே எப்படி என்று கூற....அவ் உயிர்கள் எப்படி துடித்து!!!!! துடித்து சாகின்றதோ!!!!!!!!...

அதேபோல் மனிதனும் பயத்தில் துடிதுடித்து அப்பனே அவை நடக்குமோ இவை நடக்குமோ!!! எதை என்று அறிய அறிய நாளை சாவோமா!?!? இன்று பணம் வருமோ??? வேலை கிடைக்குமோ??? என்றெல்லாம் அப்பனே பயந்து ஏங்கிக் கொண்டிருப்பான் அப்பனே 

இதனால் அப்பனே தன்னம்பிக்கை தன் மீது நம்பிக்கை வராதப்பா!!! அவ் வேலை செய்தால் அப்பனே (பிற உயிர்களை கொல்வது)

அதனால்தான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அனைவரிடத்திலும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே(பரிகாரங்கள் )அவை செய்யலாமா?? இவை செய்யலாமா?? என்று 

எதை என்று அறிய அறிய புத்தி எல்லாம் மங்கி போய்விடும் என்பேன் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே 

எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே அவற்றால் (பிற உயிர்களால் ஜீவராசிகளால்) உந்தனுக்கு கெடுதல் இல்லை!!!

ஆனால் அப்பனே அவை தன் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய இதனால் அப்பனே பின் நன்முறைகளாக அப்பனே இன்னும் அப்பனே இவ் தேசத்தில் அப்பனே எதற்காக பிறந்துள்ளீர்கள்?? என்பேன் அப்பனே 

அறிந்தும் கூட இதனால் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

இவ் அம்மையை பற்றியும் கூட இன்னும் சக்தி பீடங்கள் பல பல அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அங்கெல்லாம் அப்பனே நிச்சயம் சென்றிட்டு வந்தாலே அப்பனே அறிந்தும் கூட பின் ஆயுள் ஆரோக்கியம் அப்பனே நீங்கள் நினைத்தபடியே நடக்குமப்பா!!!!

ஆனாலும் பின் அதாவது தெய்வம் வழி விடுமா????????? என்ன ????

அப்பனே அதனால் தான் அப்பனே பின் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து அப்பனே நல்லோருக்கு உதவிகள் செய்து அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு அப்பனே நிச்சயம் அப்பனே எடுத்து அப்பனே நல்லதை பின் செய்து கொண்டு வந்தாலே நிச்சயம் பின் அதாவது......அம்பாளை யானே உங்கள் இல்லத்திற்கு அழைத்து வந்து அப்பனே உங்களுக்கு என்ன தேவையோ? அப்பனே பின் அனைத்தும் தருவேன். 

அப்பனே ஏன் இந்த நிலைமையில் இருக்கின்றோம்?? என்று யாராவது யோசித்தீர்களா????  அப்பனே????

நிச்சயம் அப்பனே யோசித்தால் அப்பனே நிச்சயம் பின் விடை கிடைக்குமப்பா!! நீங்களே என்ன செய்தீர்கள்? அப்பனே எப்படி செய்தீர்கள்? என்னென்ன தவறுகள் செய்தீர்கள்?? என்றெல்லாம் யோசித்தால் அப்பனே புரியுமப்பா !!!

தன் நிலைமைக்கு தானே காரணம் என்று!!!!

சொல்லிவிட்டார்கள் அப்பனே இதுதான் உண்மை அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே உயர்ந்து எதை என்று அறியறிய நில்லுங்கள் அப்பனே இறையாசிகளால். 

இவ் அம்மை அனைத்தும் கொடுப்பாள் என்பேன் அப்பனே..‌ நல்விதமாக அப்பனே!!!

இறைவனை எதையும் கேட்கத் தேவையில்லை அப்பனே ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய மனிதர்கள் கேட்கின்றார்கள் அப்பனே ஆனால் இறைக்குத் தெரியும் அப்பனே நலன்களாக!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட தர்மத்தை செய்யுங்கள் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய புரிய புண்ணியங்கள் காத்து நிற்க அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே தர்மத்தை கடைப்பிடித்தால் இறைவன் நேரில் தெரிவானப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் பொய் சொல்லுதல் ஏமாற்றுதல் பிறரை குறை கூறுதல் பின் பொறாமைகள் யான் பெரியவன் என்றெல்லாம் அப்பனே இன்னும் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே இறைவன் அதாவது நிச்சயம் கண்களுக்கு தெரிய மாட்டானப்பா!!!!

அப்பனை எத் திருத்தலத்திற்கு சென்றாலும் வீணப்பா!!!!!வீண்!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எப்படி தன் அதனால் தான் அப்பனே சிறு வயதிலே இறைவனை காதலிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே.... சிறு வயதில் இருந்தே அப்பனே யார் ஒருவன் பின் எதை என்று அறிய அறிய ஆணோ!!!! பெண்ணோ!!!  இறைவனை பின் காதலித்தால் அப்பனே.... அவர்களுடைய வாழ்க்கை இவ்வுலகத்தில் அப்பனே நிச்சயம் பெரும் புகழோடும் நிச்சயம் அவர்கள் விரும்பியதை அடைந்திடலாம் என்பேன் அப்பனே... விரும்பியதையும் அடைந்திடுவார்கள் என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே மாயையில் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கின்றான் அப்பனே 

ஆனாலும் அவ் மாயையில் சிக்கிக் கொண்டிருக்க ஆனால் தடுப்பதற்கும் யாங்கள் ஏதாவது ஒரு மனிதனை ஏற்படுத்தி  தடுத்துக் கொண்டே இருக்கின்றோம் 

ஆனாலும் அதையும் கேட்காமல் அப்பனே வீழ்ந்து விடுகின்றார்கள் எதை என்றும் அறிய அறிய .. அதனால் அப்பனே இதற்கு யார் காரணம்??? அப்பனே!!!

யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே மாயையில் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

மாயை அதாவது அப்பனே இதுவும் சொல்வேன் அப்பனே!!!!

சாக்கடை என்று தோன்றுகின்றதே அறிந்தும் கூட அதில் மட்டும் ஏனப்பா அறிந்தும் கூட சாக்கடையில் கால் வைக்க அப்பனே எதை என்று அறிய அறிய மனம் வராது 

ஆனாலும் அப்பனே பின் தவறு மாயை என்று தெரிகின்றது ஆனாலும் அங்கே தான் கால் வைப்பார்கள் அப்பனே 

இதுதான் மாயை !!!

அறிந்தும் எதை என்று அறிய அறிய இதையெல்லாம் யான் ஏற்கனவே பின் செப்பி விட்டேன் அப்பனே.... ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே 

இதனால் அப்பனே பின் என்னுடைய பக்தர்கள் இதை செய்து வர !!!!

(மரம் செடி கொடிகள் நட்டு வளர்க்க வேண்டும் காற்றை மாசு படுத்தாமல் சுத்தமான காற்று இருக்கும்படி செய்ய வேண்டும்)

அப்பனே நிச்சயம் யான் நன்முறைகளாகவே ஆசிகள் தருவேன் என்பேன் அப்பனே 

நிச்சயம் அப்பனே பின் நன் முறைகளாக அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை யான் செப்புகின்றேன் அப்பனே!!!

இவை நீங்கள் செய்ய அப்பனே புண்ணியங்கள் அறிந்தும் அறிந்தும் கூட இப்போது சொல்கின்றீர்களே தன் பிள்ளைகள்  எப்படி எதை என்று அறிய அறிய அப்பனே  நீடூழி வாழ்வார்களப்பா!!!

எவை என்று அறிய அறிய இப்புண்ணியத்தை செய்யுங்கள் அப்பனே 

இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே இன்னும் மந்திரங்களையும் சொல்வேன் அப்பனே ஔஷதங்களையும் (மூலிகை மருந்துகள்)சொல்வேன் அப்பனே!!!

இன்னும் திருத்தலத்தை பற்றியும் பின் அதாவது வர முடியவில்லை என்றாலும் யானே அழைத்து வருவேன் என்பேன் அப்பனே என் பேச்சைக் கேட்டால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட !!!

நிச்சயம் என் பக்தர்கள் அப்பனே அறிந்தும் அறிந்தும் பல பேர்கள் அப்பனே பின் கேட்டு கேட்டு அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே !!!!!

நலன்கள் ஆசிகள்!!!! இன்னொரு திருத்தலத்திலும் இவ் அம்மையைப் பற்றி பேசுகின்றேன் அப்பனே!! 

நலன்கள்!! ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஆலய முகவரி மற்றும் விவரங்கள் 

குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள அம்பாஜி நகரம் பிரசித்தி பெற்ற அபு மலைப் பகுதியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இத்திருக்கோவிலின் தெய்வமான அம்பாஜி மாதா அம்பாஜி நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கப்பார் எனும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார்இக்கோவில் மிகவும் பழமையானது. அம்பாஜி கோவில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. ஏனெனில் கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்தபோது அவரது மூன்றாவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை கொடுக்கப்பட்டதாகவும், நந்தகோபனும் யசோதையும் இவரை கோவிலுக்கு கூட்டி வந்து மொட்டை அடித்ததாகவும் கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை கோவிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் மொட்டை அடிக்கிறார்கள். பெரியவர்களுக்கோ பெண் குழந்தைகளுக்கோ இங்கு மொட்டை அடிப்பதில்லை.அம்பாஜி என்று அழைக்கப்படும் அம்பா பவானி கோவிலில் உருவச்சிலை ஏதுமில்லை. பீடத்தின் மீது அம்மனின் உடையும், ஆபரணங்களும் அவர் இருப்பதைப் போலவே வைக்கப்பட்டு ஆராதனை நடத்தப்படுகிறது.இங்கு விநாயகர் சித்தி, புத்தி என்ற மனைவியருடனும் சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், அவர்களது மகன்களான குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது. விநாயகருக்கு வட மாநில பாணியில் செந்தூரம் பூசப்பட்டுள்ளது.

இங்கு குங்குமம், லட்டு பிரசாதமாக தரப்படுகிறது. கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அம்பாஜி சக்தி பீடம் திருக்கோயில் அம்பாஜி கிராமம், குஜராத் ராஜஸ்தான் எல்லை பனாஸ்காண்டா மாவட்டம், குஜராத்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. இறைவா அகத்திய மாமுனியே நன்றி நன்றி!

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete