​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 18 May 2024

சித்தன் அருள் - 1606 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!



சூரத் சத்சங்கம் பாகம் 3

ஐயனே ராசிகளை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள் கோச்சாரம் என்கின்றார்கள் இந்த ராசிகள் என்பது உண்மையானதா?????

அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே இதையென்று ஆனாலும் இதனைப் பற்றி பின் அறிவியல் வழியாக தான் உரைப்பேன்... அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய இவையெல்லாம் எங்கள் அருகில் வந்து விட்டால் அப்பனே தேவையே இல்லை அப்பா தேவையே இல்லை அப்பா!!!

ஐயனே ஆலயங்களுக்கு நாங்கள் செல்கின்றோம் ஆனால் அங்கு இறை ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்தது என்பதை எப்படி உணர்வது???

இறைவனின் சித்தர்களின் ஆசிர்வாத சக்திகளை அந்த பாசிட்டிவ் எனர்ஜியை எப்படி நாங்கள் உணர்வது???

உடலளவிலும் மனதளவிலும் எப்படி எங்களுக்கு ஒரு ஆசீர்வாதம் கிடைத்தது என்பதை ஸ்பரிசமாக எப்படி எங்களுக்கு கிடைக்கும்????

அப்பனே எதை என்றும் புரிய புரிய இல்லத்தில் சண்டைகள் இட்டு இட்டு அப்பனே ஆலயத்திற்கு வந்தால் எப்படி அப்பா???...

எதை என்று அறிய அறிய ஒவ்வொரு மனநிலையும் அப்பனே வேறு வேறாக இருந்தால் அப்பனே ஆசிகள் கிடைப்பதில்லை அப்பனே அதனால்தான் அப்பனே இறைவனை ஒன்று பரிபூரணமாக வணங்க வேண்டும் இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே மனதில் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே யானும் பார்த்துக் கொண்டே தான் வருகின்றேன் அப்பனே இவையெல்லாம்

அப்பனே அன்றெல்லாம் போவார்களப்பா திருத்தலங்களுக்கு அப்பனே பின் அதாவது பயபக்தியுடன் அப்பனே இறைவன் எதை என்று கூட ஏதாவது செய்து விடுவான் என்ற எண்ணம் அப்பனே அதனால் இறைவனையே நினைத்துக் கொண்டு செல்வார்கள் ஆனாலும் இப்பொழுது நிலை அப்படி இல்லையப்பா!!!! 

திருத்தலங்களுக்கு செல்வதற்கு முன்பும் தான தர்மங்களை முடிந்த வரை இயலாதவர்களுக்கும் செய்து கொண்டே செல்ல வேண்டும் அப்பனே இதைப்பற்றி யான் முன்பே பலமுறை உரைத்து விட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

அப்பனே இறை சக்திகளை உணர்வதற்கு இதற்கு தகுந்தார் போல் அப்பனே எதை என்று அறிய அப்பனே திருத்தலங்களுக்கு அப்பனே செல்ல வேண்டுமென்றால் பல வகையான இயற்கை உணவுகளையும் உண்டு செல்ல வேண்டும் !!

அவை மட்டும் இல்லாமல் ஒரு மண்டலம் அப்பனே(48 நாட்கள்) எதை என்று அறிய அறிய அப்பனே நெல்லிக்கனியை இன்னும் இன்னும் எலுமிச்சை சாறு எதை என்றும் அறிய அறிய இவற்றையெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய உட்கொண்டு உட்கொண்டு அப்பனே பல கீரை வகைகளையும் உட்கொண்டு உட்கொண்டு சென்றால் அப்பனே அப்படியே இறை சக்தியை எதை என்றும் அறிய உள்ளிழுக்கும் என்பேன் சக்திகளை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. அப்பா நன்றி! இன்று Facebook YouTube என்று எதை திறந்தாலும் ஜோதிட பதிவுகள் தான் வருகிறது.... இந்த கூட்டங்கள் யாரால் இயக்கபடுகிறது என்று தெரியவில்லை....கோவில்கள் மெய் அடியார்களால் நிர்வகிக்க அகத்தியர் சித்தர்கள் அருள வேண்டும்.

    ReplyDelete
  2. மிகவும் சிறப்பு ஐயா...நன்றிகள் பல🙏🙏🙏

    ReplyDelete
  3. நன்றிகள் பல ✍️🙏

    ReplyDelete
  4. குருநாதருக்கும் இதை பகிர்ந்த அன்பருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete