வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நம் குருநாதரிடம், நாம் ஆன்மீகத்தில் கேள்வி கேட்டு, அதற்கு அவர் பதில் சொல்லி நிறைய நாட்களாகிவிட்டது. அகத்தியப்பெருமானின் ஜீவ நாடியை சந்தித்தும் வெகு நாட்களாகிவிட்டது.
சற்று யோசித்த பொழுது, நேரடியாக நாடியை சென்று தரிசித்து அணுக முடியவில்லை என்றாலும், யார் வழியாகவேணும் கேள்விகளை கொடுத்தனுப்பி கேட்க வைத்து அதற்கான பதிலை பெறலாம் என்று ஒரு எண்ணம்.
ஆகவே, உங்களின் ஆன்மீக கேள்விகளை, தமிழில் தட்டச்சு செய்து, agnilingamarunachalam@gmail.com என்கிற ஈமெயிலுக்கு அனுப்பி தரும்படி கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் போல அடியேன் கூறிக்கொள்ள நினைப்பது என்னவென்றால், தனிப்பட்ட வாழ்க்கையின் கேள்விகளை தவிர்க்கவும். கோவில்களை பற்றி கேட்காதீர்கள், பதில் வராது.
அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என வேண்டிக்கொண்டு,
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
aiyyavidam kelvi ketka migavum bayama irukiradhu iyya:) anubhavam dhaan:):)
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete