​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 13 May 2024

சித்தன் அருள் - 1603 - அன்புடன் அகத்தியர் - பூம்பாறை குழந்தை வேலப்பர் சன்னதி கொடைக்கானல்!


23/4/2024 சித்ரா பௌர்ணமி திருநாள் அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் பூம்பாறை குழந்தை வேலப்பர் சன்னதி கொடைக்கானல்.

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்

அப்பனே அனைவருக்கும் என்னுடைய ஆசிகளப்பா!!!

கந்தனுடைய அனுக்கிரகங்கள் கூட பலம் அப்பனே... அவரவர் வாழ்க்கையில் வெற்றியும் பெறுவீர்கள் என்பேன் அப்பனே நலன்களாக அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது முருகனை மனதில் நினைத்து இங்கே எதை என்று புரிய புரிய அப்பனே என்னென்ன வேண்டுமோ அதை கேட்டிட்டு செல்லுங்கள் அப்பனே

அதை நிச்சயம் பின் அதாவது அப்பனே கேட்காவிடிலும் அப்பனே முருகனுக்கு என்ன எவை என்று அறிய அறிய உங்களுக்கு தேவை என்று நிச்சயம் கொடுத்து விடுவான் அப்பா!

ஆசிகள் ஆசிகள் அப்பனே!

இன்னும் அப்பனே பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் உண்டு அப்பனே அவைதனை உணர்த்தி வைக்கவே அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே பின் நல்லோர்களை பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய பல சேவைகளை ஏற்படுத்தி அப்பனே முருகன் அனைத்தும் செய்வான் அப்பனே

அனைத்தும் பின் அறிந்தும் உண்மைகளை கூட பல பல வழிகளில் கூட இதனால் நன்மைகள் தான் ஏற்படும் என்பேன் அப்பனே

அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் அப்பனே

மீண்டும் அப்பனே ஒரு முறை இங்கு வந்து விவரிக்கின்றேன் அப்பனே

அனுதினமும் பின் அறிந்தும் கூட மனதில் எண்ணி முருகா!!!! முருகா!!!! என்று தீபம் ஏற்றி அப்பனே பின் வழிபாடு இல்லத்திலே செய்ய அப்பனே அவரவர் குறைகள் நீக்கி அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுமப்பா!!!!

கவலைகளை விடுங்கள் அப்பனே நன்முறைகளாக ஆசிகள் அனைத்துமே வாங்கி தந்து விட்டேன் அப்பனே!

எந்தனுக்கும் பின் பல வேலைகளப்பா இன்று அப்பனே சித்திரை பௌர்ணமி தன்னில் அதாவது அப்பனே அதனால் தான் வாக்குகளையும் கூட நிறுத்தி வைக்கின்றேன் அப்பனே நலன்களாக இப்போதைய நிலைமைக்கு!!!

மீண்டும் வந்து வாக்குகள் செப்புவேன்!!! அப்பனே

எம்முடைய ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. முதல் படத்தில் இருப்பது அயோத்தி ராமர்தானே ஐயா.அதன் விளக்கம் தெரியப்படுத்துங்களேன்

    ReplyDelete
  2. நன்றி இறைவா 🙏
    ஓம் அகத்தீசாய நமக.

    ReplyDelete
  3. உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

    ReplyDelete
  4. மிக்க நன்றிகள் ஐயா

    ReplyDelete
  5. நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  6. ஓம் கந்தா போற்றி
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete