​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 20 May 2024

சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!






சூரத் சத்சங்கம் பாகம் 4

ஐயனே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து எங்களை பாடாயப்படுத்துகின்றது இதற்கு நாங்கள் இதிலிருந்து தப்பிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்?????

அப்பனே எவை என்றும் அறிய அறிய யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

இவை நோயே அல்ல அப்பனே எதை என்றும் புரிய புரிய சரியாகவே அப்பனே எதை என்று அறிய அறிய

ஏற்கனவே யான் உரைத்து விட்டேன் அப்பனே யான் கூறிய மூலிகைகளை சரியாகவே எடுத்துக் கொண்டு வந்தால் அப்பனே எதை என்று கூற அனைத்தும் மாறிவிடும் என்பேன். அப்பனே ஆவாரம்பூ சுடுகாட்டு பூ என்கின்றார்களே நித்திய கல்யாணி எனும் மூலிகையையும் உபயோகித்துக் கொள்ள நன்று!!!!

யான் பல வாக்குகளிலும் உரைத்து விட்டேன் அப்பனே எதையென்று கூட பல மூலிகைகளையும் சொல்லிவிட்டேன் அப்பனே அதை முறையாக எடுத்துக் கொண்டு வந்தாலே இவை எல்லாம் மாறுமப்பா!!!

நீங்களும் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும் அப்பனே

(சர்க்கரை இனிப்புகள் உண்பதை கட்டுப்படுத்த வேண்டும்)

அப்பனே எதை என்று அறிய அறிய சர்க்கரையை ஒரு மாதம் இரு மாதம் அப்பனே சிறிது நிறுத்த வேண்டும்!!!

ஐயனே!!! வெள்ளை சர்க்கரையை நிறுத்திவிட்டு நாட்டு சக்கரை வெல்லத்தை பயன்படுத்தலாமா???

அப்பனே ஆனாலும் அதில் கூட அப்பனே அவையும் இல்லாமல் நீங்கள் இருக்க முடியாது ஆனால் அதுவும் இனிப்பு அப்பனே அளவாக உபயோகித்துக் கொள்ளலாம்.

ஐயனே சுத்தமான தேனையும் பயன்படுத்தலாமா??? இனிப்பிற்காக!!!

இதையும் பயன்படுத்தலாம் அப்பனே!!!

அவை மட்டுமில்லாமல் வாயில் சுரக்கும் உமிழ் நீரை அடிக்கடி விழுங்கிக் கொண்டே இருக்க வேண்டும் அப்பனே!!!!!

ஐயனே!!!!.... நீரிழிவு நோய் இருக்கும் பொழுது அரிசி சாதம் உண்ணலாமா அல்லது சப்பாத்தி போன்றவை உண்ணலாமா இதில் சர்க்கரை அதிகம் உடலில் சேர்கின்றது????

அப்பனே கோதுமை இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய நல் விதமாகவே ராகி என்கின்றார்களே இதைக் கூட பயன்படுத்த நன்று அப்பனே!!!!!

அரிசி சாதத்தை உண்ணலாமா??? ஐயனே 

அப்பனே இவைதன் உங்களுடைய இஷ்டமே!!!!

ஐயனே சர்க்கரையின் அளவால் உடலில் கெட்ட கொழுப்புகளும் கூடிவிட்டது இவற்றை எப்படி நாங்கள் நீக்குவது????? நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள் தினமும் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆனாலும் கெட்ட கொழுப்புகள் கரையாமல் அப்படியே இருக்கின்றது ஐயனே

அப்பனே எதை என்று புரிய புரிய பல நாள்களில் சேர்ந்ததை ஒரே நாளில் நீக்க முடியாதப்பா !!! இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!!

உணவு கட்டுப்பாடுகள் வேண்டும் அப்பனே இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் பச்சை காய்கறிகளையும் கீரை வகைகளையும் உட்கொள்ள வேண்டும் என்பதை யான் கூறிக் கொண்டே வருகின்றேன் ஆனாலும் யாருமே கேட்பதே இல்லையப்பா!!!!

ஐயனே காலையில் மாலையில் டீ, காபி அருந்தும் வழக்கம் இருக்கின்றது இதிலிருந்து விடுபட்டு இதற்கு பதிலாக நாங்கள் எதை குடிக்க வேண்டும்!???

டீ காபிக்கு மாற்றாக நாங்கள் எந்த பானத்தை அருந்த வேண்டும்??? ஐயனே வழிகாட்டுங்கள்

அப்பனே இதை தான் சொன்னேன் அப்பனே நல்விதமாகவே எலுமிச்சை சாற்றை அப்பனே பின் எதை என்று அறிய அறிய அதாவது நீரை சரியாக சரி முறையாகவே சூடேற்றி அப்பனே தேனை அப்பனே நல்விதமாகவே எதை என்று அறிய அறிய பின் அருந்தி வந்தாலே போதுமானதப்பா!!!

(சுடுநீரில் எலுமிச்சைச்சாறு தேன் கலந்து கலக்கி இதை பானமாக குடித்து வர வேண்டும்)

அப்பனே அவை மட்டும் இல்லாமல் சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய... சில சில வழிகளில் ஏன் இறைவனை ஏறி அதாவது மலையின் மீது ஏறி எதை என்று அறிய அறிய பார்க்க வேண்டும் என்பதை எல்லாம் வருங்காலங்களில் அதாவது ஏனைய வாக்குகளிலும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய மாதத்திற்கு ஒரு முறையாவது மலையின் மீது ஏறி இறைவனை காணச் செல்ல வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே உடலில் இருந்து சில நீர்கள் அப்பனே போகும் என்பேன் அப்பனே
(வியர்வை வழியாக)

அந்த பின் நீரில் அப்பனே சில சில நீங்கள் சொல்கின்றீர்களே நோய்கள் சர்க்கரை எதை என்று புரிய புரிய என்றெல்லாம் அப்படியே பின் உடல் உமிழ்நீராக (இங்கு உடலில் இருந்து உமிழ் நீர் என குருநாதர் குறிப்பிடுவது வியர்வை) அப்படியே வெளியேற்றி விடும் அதனால் தான் அப்பனே நிச்சயம் மாதத்திற்கு ஒரு முறையாவது அப்பனே மலையேற வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே!!

(சர்க்கரை நோய் உள்ளிட்ட சில சில வியாதிகள் இருப்பவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது மலை மீது படிக்கட்டு வழியாக ஏறிச் செல்லும் கோயில்களுக்கு சென்று பார்க்க வேண்டும் மலை ஏறி செல்லும் பொழுது மலையில் இருக்கும் மூலிகைகளின் காற்றும் உடலுக்கு கிடைக்கும்!!
உடலில் இருந்து வியர்வை வழியாக உடலில் இருக்கும் கழிவு நீர்கள் வெளியேறும் பொழுது சில நோய்கள் குணமாகும் என்று குருநாதர் தெரிவித்திருக்கின்றார்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. அருமையான மருத்துவ குறிப்புகள்...மிகவும் சிறப்பு..நன்றிகள் பல ஐயா

    ReplyDelete
  2. நன்றி அப்பா

    ReplyDelete
  3. நன்றி ஐயா, அகத்தியர் ஐயா மருத்துவ குறிப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடும் முறை மிகவும் சிறப்பு.

    ReplyDelete
  4. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete