9/12/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு-வாக்குரைத்த ஸ்தலம். திரிபுரசுந்தரி ஆலயம் சக்தி பீடம். மாதபரி. உதய்பூர். திரிபுரா மாநிலம்.
ஆதி பகவானின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் !!!!!
அப்பனே எதை என்றும் இன்னும் இன்னும் அப்பனே ஞானங்கள் அப்பனே மனிதனுக்குத் அப்பனே தோன்றும். ஆனாலும் அப்பனே அவைதனை உணர உணர அப்பனே ஆனாலும் அப்பனே எதை என்று உணராமலே உணர்ந்து உணர்ந்து விட்டாலும் அப்பனே இதற்கு பதில்கள் இல்லையப்பா.
அப்பனே உணர்ந்தும் எதை என்றும் அறியாமல் கூட மாய வலையில் சிக்கிக்கொண்டு தவிப்பார்கள் அப்பனே. இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஞானங்கள் அப்பனே பின் எதை என்று புரிந்தும் புரிந்தும் கூட புரியாமல் கூட அப்பனே யாங்கள் கொடுப்போம்.
ஆனாலும் மனிதனிடம் பின் அதை ஏற்றுக் கொள்ளும் சக்தி இல்லையப்பா.
ஏனென்றால் மாயை எதை என்றும் புரியப் புரிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் எங்களை எதை என்றும்
அறிய அறிய அப்பனே என்றும் புரிய புரிய அதாவது இறைவனை நோக்கி நோக்கி புறப்பட்டாலே போதுமானது.
அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யாங்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைத்தும் கொடுப்போம் அப்பனே.
ஆனாலும் சோதனையில் அதாவது சோதனையில் தவிக்கவிட்டு அப்பனே அப்பொழுதுதான் எதை என்றும் அறிய அறிய அப்பனே சோதனை கொடுத்தால்தான் அப்பனே இன்னும் எவை என்றும் அறிய அறிய அனைத்து திறமைகளும் வருமப்பா.
அத்திறமைகள் மூலம் மனிதன் ஜெயிக்கலாமே தவிர அப்பனே உடனடியாக கிடைத்து விட்டால் அப்பனே அவந்தன் மட்டும் நன்றாக வாழ்ந்திட்டு அப்பனே யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் அப்பனே.
இதைத்தான் அப்பனே பல யுகங்களில் கூட அப்பனே இறைவன் கொடுத்து கொடுத்து சலித்து விட்டான் அப்பனே.
அதனால்தான் அப்பனே சோதனைக்குப் பிறகே வரும் எதை என்று அறிய
அறிய அனைத்தும் சாதனையாகட்டும்.
அப்பனே நலமாகவே இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய.
அப்பனே ஏன் இறைவன் எங்கெங்கும் குடி கொண்டிருக்கிறான். ஆனாலும் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கின்றான் அப்பனே. நீ எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே இதனால் அங்கும் இங்கும் அப்பனே எதை என்றும் புரியாமல் கூட அப்பனே திரிந்து அப்பனே பின் இறை ஆசிகள் அப்பனே அங்கேயே கிடைத்துவிடும் என்பேன் அப்பனே.
பின்பு பின் அங்கும் இங்கும் திரிந்தோமே!!!........
பின் இறைவன் அருள் எங்கும் கிட்டவில்லையே !??????
என்று இருக்கும் பொழுது அப்பனே உள்ளத்திலே அமர்ந்து விடுவானப்பா.
அப்பனே அனைத்தும் தெரிந்துவிடும் அப்பனே. இதனால்தான் அப்பனே இறை ஆசிகள் கிடைப்பதற்கு அப்பனே எதை என்றும் அறிய அப்பனே பல கஷ்டங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய படவேண்டும் அப்பனே.
ஏனென்றால் அப்பனே, அப்பனே எது என்றும் புரியப் புரிய அப்பனே இறை ஆசிகள் மட்டும் அல்ல அப்பனே அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய அறிந்தும் கூட அப்பனே இதனால்தான் அப்பனே .
வினை எதை என்று அறிய அறிய வினையை மாற்றப்பட வேண்டும் அப்பனே. எதை என்றும் புரியும் அப்பனே பின் புண்ணியத்தால்தான் அப்பனே. அதனால்தான் அப்பனே பாவம் புண்ணியம் எதை என்றும் அறிய அறிய இங்கு அனுபவிப்பதற்காகவே பின் எதை என்று கூட நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே எப்படி? எவை என்று கூற புண்ணியங்கள் தேங்கி நிற்கும்பொழுது பாவத்தை அழிக்கப்படவேண்டும். அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
அதனால் எதை என்று புரியும் அளவிற்கும் கூட அப்பனே அதாவது புண்ணியங்கள் எப்பொழுதுமே தேங்கி நிற்குமப்பா.
ஏன் எதற்காக என்றால் அப்பனே ஆனாலும் அனைவருமே ஒருவிதத்தில் புண்ணியம் செய்து கொண்டே,!!!..........
ஆனாலும் இதனால் எதை என்றும் புரியாமல் அளவிற்கும் கூட பாவங்கள் கூட அப்பனே. அப் பாவத்தை எப்பொழுது எதை என்று அறிய அறிய அதாவது குளத்தில் தேங்கியிருக்கும் நீரை எவை என்று அறிய அறிய எடுத்திட அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று புரியப் புரிய அப்பனே மீண்டும் புதிதாக இறைவன் அருளால் அப்பனே பின் வருவதே எதை என்று கூறப் பின் வருவதே எதை என்று கூற புண்ணியம் அப்பனே. இதை நன்கு புரிந்து கொண்டால் எவை என்றும் புரியும். புரியும் அப்பனே
புரியாமல் இருக்கும் விஷயத்தை கூட அப்பனே புரிய வைப்போம்.
இதனால் அப்பனே நிச்சயம் மனிதனுக்கு பல வழிகளில் கூட யாங்கள் நன்மை செய்யக் காத்திருக்கிறோம்.
ஆனாலும் அப்பனே
மனிதன் அதாவது புத்தி கெட்டவன் அப்பனே.
அதாவது பின் எதை எதையோ என்று அறிய அறிய யான் பெரியவன் எதை என்று அறிய அறிய பின் என்னிடத்தில் இருக்கின்றான் இறைவன் பின் மற்றொரு இடத்தில் இல்லை என்பவை எல்லாம் அப்பனே பொய்களப்பா.
இறைவன் அனைவருக்குமே சமம்.
ஆனாலும் அப்பனே போட்டி எதை என்று அறிய அறிய மனிதனுக்குள் மனிதனாகவே(மனிதருக்குள் மனிதர்கள்) அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய
இறைவனும் சிரித்துக்கொண்டிருக்கின்றான் அப்பனே.
இப்படி பின் எதை என்று கூற பொறாமைகள், போட்டிகள் இவ்வாறு படுத்திக்கொண்டு அப்பனே!!!
ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
ஏற்கனவே தெரிவித்தும் விட்டேன் அப்பனே. எதை என்றும் அறிய அனைத்தும் தெரிந்தவன் அமைதியாக இருப்பான் அப்பனே.
எதை என்று அறிய அறிய பொய்யாக இருப்பவன்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே பின் எதை என்றும் அறியாமலே கோபங்களும் கூட, பொறாமை கூட அப்பனே. தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே !!!
எவை என்றும் அறியாமல்!!!
அதனால் அப்பனே ஒன்றும் தெரியாதவனுக்கு அப்பனே எதை என்றும் அறிய அறிய தெரிந்ததெல்லாம் பொய்களாம் !?!?!?!?!?!?!?! அப்பனே.
எதை என்று அறிய அறிய ஆனால் அனைத்தும் தெரிந்தவனுக்கு அப்பனே எவை என்று அறிய அறிய பின் பார்ப்பதெல்லாம் உண்மையாம் !?!?!?!?!?!?!?!?!? அப்பனே.
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. ஞாபகத்தில் எதை என்று அறிய அறிய அதாவது இப் பதிகத்தை
எதை என்று கூற அதாவது அப்பனே எவை என்று அறியாமல் கூட அப்பனே ஒவ்வொரு நாளும் நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது மாணிக்கவாசகன் எதை என்று அறிய அறிய அருமையாகவே அப்பனே இதனால் நிச்சயம் அப்பனே பதிகத்தை (திருவாசகம் )ஒவ்வொரு நாளும் அப்பனே
பாடிக்கொண்டே வந்தாலே எதை என்று அறிய அறிய புரியுமப்பா.
அப்பனே நிச்சயமாய் அவரவர் இல்லத்தில் கூட
எதை என்றும் அறிய அப்பனே நிச்சயம்
அதாவது சிவராத்திரி எதை என்றும்
புரியாமல் கூட அப்பனே பின் எதை என்று கூற இப்பொழுது கூட பின் அழைத்து அழைத்தே இதனால் அப்பனே அதனால்
எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே ஒவ்வொரு இல்லத்திலும் கூட அப்பனே பின் பதிகங்களைப் பாடி பாடி துதித்துத் துதித்து ஈசனை போற்றிப் போற்றி அப்பனே வருபவருக்கெல்லாம் அன்னத்தை ஈய்ந்தால் அப்பனே பல தரித்திரங்கள் நீங்குமப்பா. சொல்லி விட்டேன் அப்பனே.
(மாதாந்திர சிவராத்திரியில் திருவாசகம் முற்றோதுதல் செய்துவிட்டு அன்னதானம் செய்துவர பல தரித்திரங்கள் விலகும்)
எதை என்றும் அறிந்தும் எவை என்றும் அறியாமலும் இருந்தாலும் அப்பனே இதைச் செய்து கொண்டே வாருங்கள் அப்பனே.
தான் நன்றாக இருக்க வேண்டும்.இன்னும் தன் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும். இன்னும் எதனை எதனையோ !!??.............
அப்பனே பின் பிரித்து வைத்து பார்க்கும் மனிதனுக்கு அப்பனே
பக்தியின் ஆழத்தைத் தெரியவில்லையே அப்பா.
இதனால் அப்பனே ஒவ்வொரு இல்லத்திலும் இதை நிச்சயம்
( திருவாசகம் பதிகங்களைப் பாட வேண்டும்).
பின் எவை என்றும் அறிந்தும் கூட !!!!!
அவை மட்டும் இல்லாமல்
அப்பனே வழிபாடுகள் எதை என்று கூற அனைவரும் பின் இணைந்து எதை என்றும் அறிந்தும் அறிந்தும் ஈசன்
இருக்கின்றான், இறைவன் இருக்கின்றான். இப்படித்தான் வாழ வேண்டும் என்றெலாம் அப்பனே கூட்டுப் பிரார்த்தனையைச் செய்யுங்கள்!!!! அப்பனே
இறைவன் நிச்சயமாய் இறங்கி வருவான் அப்பனே அவ் பிராத்தனைக்கு பின் இறங்கி வருவானப்பா.
அவை இல்லாமல் பின் யான் பெரியவன், நீ சிறியவன் என்றெல்லாம் எதை என்றும் அறிய அறிய
அப்பனே சொல்லிக்கொண்டிருந்தாலே ............
அப்பனே எவை என்றும் அறியாமலே அழிந்து அழிந்து அப்பனே!!!!
எப்படியப்பா????? (சொல்வது)
எதை என்று அறிய அறிய சொன்னாலும் சாபங்களாக…................
( அனைத்து ஈசன் அடியவர்களுக்கும் இதனை அவசியம் எடுத்துச் சொல்லவும். குருநாதர் அகத்திய பெருமான் முன்பே உரைத்த வாக்கின் படி
“நான் என்ற வார்த்தைகள் ஈசனடியில் இருக்கக் கூடாது என்பேன்.
நல் முறைகளாக ஈசனை வணங்குபவர்கள்....
நான் !!!
என்னுடையது!!!!
நான்தான் !!!!
என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பேன்.”
(சித்தன் அருள் - 1030).
ஈசன் அமைப்புக்களை, ஈசன் பாடல்களை, திருவாசகம் இதனை முன்னின்று நடத்துபவர்களுக்கு நான் பெரியவன் என்ற எண்ணம் வரக்கூடாது. அப்படி வந்தால் அழிய நேரிடும் என்று பூடகமாகச் சாபம் கொடுக்காமல் இங்கு குருநாதர் உரைத்து உள்ளார். . அதி கவனம் வேண்டும்.
திருவாசகம் முற்றோதுதல் செய்யும் அடியவர்கள் கவனிக்கவும்.)
இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே, உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இதனையே பல வழிகளிலும் கூட யான் உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே.
உண்மை நிலை தெரியாமல் நீ எதை வணங்கினாலும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா.
எதை என்றும் அறிகின்ற பொழுதும், அறியாவிடிலும் கூட!!......
இதனால் அப்பனே உண்மையான பக்தி உள்ளவர்களுக்கே எதை என்று கூற
இவ் தேவியும் (பால திரிபுரசுந்தரி)
பரிசுத்தமான அப்பனே தன் இடத்தில் எதை என்று அறிய அறிய இடம் கொடுத்து அப்பனே அனைத்தும் தந்து கொண்டேதான் இருக்கின்றாள் அப்பனே.
ஏராளம் அப்பனே மக்கள் வருகிறார்கள் இங்கு.
ஆனாலும் அனைவருக்குமே ஆசிகள் கிடைக்கிறதா என்றால்??? அப்பனே நிச்சயம் இல்லையப்பா!!!! சொல்விட்டேன் அப்பனே.
எதை என்று கூட அப்பனே அதாவது
எதை என்று அறிய அறிய உண்மையான எவை என்று கூற எப்படி உண்மையாக உள்ளவர்களை எல்லாம் அப்பனே
இவ் தேவி
எதை என்று அறிய அறிய முதலில் அழைப்பாள் என்பதைக் கூட அப்பனே!!!
பிற உயிர் கொல்லாமை எதை என்றும் அறிய அறிய அப்பனே
அப்படிப்பட்டவர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்படிப்பட்டவனை எதை என்றும் கூற பின் வரும் பொழுதே!!!!!
இவந்தன் எதை என்றும் அறியாமலேயே வந்திருக்கின்றான் என்று கூட !!!!
அப்பனே அங்கே பார்ப்பதைவிட இங்கே அமர்ந்து கொண்டாலே போதுமானது அப்பனே உடனடியாக ஆசிகள் கிட்டிவிடும் என்பேன் அப்பனே.
(பிற உயிர்களை கொல்லாமல் கொன்று உண்ணாமல் ஜீவகாருண்ய முறையை கடைப்பிடித்து பக்தியை செலுத்தும் பக்தர்கள் திரிபுரா ஆலயத்திற்கு செல்லும் பொழுது தேவி இருக்கும் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை அருகில் இருக்கும் கோயிலை சுற்றி இருக்கும் இடங்களில் வந்து அமைதியாக அமர்ந்தாலே தேவியின் ஆசிர்வாதம் கிடைத்துவிடும்
தேவி இங்கு பால திரிபுரசுந்தரி.. பாலாம்பிகை வாலை தேவி இருக்கின்றாள்.. உள்ளூர் மக்கள் திருபுரேஸ்வரி என்று அழைக்கின்றார்கள்.
பால திரிபுரசுந்தரி தேவியின் இப்பெயரிலே இந்த மாநிலத்தின் பெயர் அமைந்துள்ளது திரிபுரா)
எதை என்று அறிய அறிய இறைவனை அனைவருமே வணங்குகின்றார்கள் ஆசிகள் கிட்டி விடுமா?????என்ன அப்பனே!!!... நிச்சயம் இல்லையப்பா.
அப்பனே அதற்காகத்தான் அப்பனே போராட வேண்டும். போராடி ஜெயிப்பது அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்திலும் கூட அப்பனே!!!!!
அதனால்தான் போராடி வெற்றி பெறுவது பக்தியே.
எதை என்று கூற பின் அதாவது முக்தி நிலைக்கும் கூட அப்பனே எதை என்று அறிகின்ற பொழுது கூட இதனால்தான் அப்பனே இவ் தேவியின் அருள் எதை என்றும் அறிய அறிய அப்பனே தேவி சாதாரணப்பட்டவள் இல்லை என்பேன் அப்பனே.
எதை என்று அறிய அறிய பின் கஷ்டங்களைபடுவோருக்கு எவை என்று அறிய அறிய பின் அதாவது ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அப்பனே தாயாகவும் தந்தையாகவும் இருந்து நிச்சயம் அப்பனே அணைத்துக்கொள்வாள் என்பேன் அப்பனே. அனைத்தும் கொடுப்பாள் என்பேன் அப்பனே.
இதை நீங்கள் உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே எவை என்றும் அறியாமல் கூட இருந்தாலும் கூட அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின்
உறங்கும் பொழுதும் பின்
எழும் பொழுதும் அப்பனே!!!
நிச்சயம்!!!......
“ஓம் ஐம் கிலீம் சௌம்” !!!!!!
(பாலாம்பிகை மந்திரம்)
நிச்சயம் அப்பனே இவ் மந்திரத்தை அப்பனே 1008 முறை நிச்சயம் அப்பனே உங்களால் முடிந்தவரை பின் அப்பனே சொல்லிவிட்டு அப்பனே நலன்களாகவே அப்பனே இயலாதவருக்கு உணவு அளித்துக் கொண்டே வந்தால் அப்பனே வாழ்க்கை மாறுமப்பா.
அப்பனே நல் எண்ணங்கள் அப்பனே முதலில் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பின் (மனதில்) நிறுத்த வேண்டும். அப்பனே பின்புதான் மந்திரத்தைக் கூற வேண்டும் என்பேன் அப்பனே.
அதாவது நல்லெண்ணமே !?!?!?!?!?!?! இல்லை அப்பனே
எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல் கூட போட்டி, பொறாமைகள் பிறர் மீது பின் குறை கூறுதல் இவை எல்லாம் இருந்தால் அப்பனே எவ் மந்திரத்தை ஜெபித்தாலும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா. பிரயோஜனம் இல்லை.
அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே
மனமது செம்மையானால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப்புரிய பின் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்.
எதை என்று அறிய அறிய எதற்காக ???? யான் சொன்னேன் அப்பனே!!!!!!
எவை என்றும் அறிய அறிய அதாவது துன்பங்கள் பட்டு பட்டு அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது துன்பங்கள் பட்டு பட்டு அப்பனே பின் அடி எதை என்று அறிய அறிய அப்பனே பல வகைகளில் கூட இன்னல்கள் பட்டுப் அப்பனே நொந்து எதை என்று அறிய அறிய பின் சாகும் நிலைக்கு அப்பனே சென்று விட்டால் அங்கு எதை என்று அறிய அறிய அவந்தன் இனிமேலும் அப்பனே எப்படித்தான்!?!? எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்திலும் கூட அப்பனே தோல்விகள் ஏற்பட்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய அவ்வளவுதான் வாழ்க்கை என்கின்றானே அப்பனே அவனுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே
பின் மந்திரங்கள் எது?
அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே ஏற்கெனவே அத்துன்பத்திலே அவந்தன் எதை என்று அறிய அறிய
அனைத்தும் கற்றுக்கொள்கின்ற பொழுது!!!.........
அப்பனே மந்திரங்கள் அப்பனே இங்கு ஏதப்பா ?????? எப்படியப்பா?? வேலை செய்யும்.
அப்பனே எதை என்று புரிய புரிய
இதனால் உயர்ந்த நிலை அப்பனே எதை என்றும் புரியப்புரிய இதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே எண்ணங்கள் எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே உயர் உடையவர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது உயர் எண்ணங்கள் உடையவர் உயர் அப்பனே குலத்தோர் எதை என்றும் அறிய அறிய தாழ்வு எண்ணங்களில் உள்ளோர் அப்பனே தாழ்ந்து தாழ்ந்து இன்னும் இன்னும் அப்பனே தரித்திரனே.!!!!
(இரண்டே குலம் தான் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்கள் உயர் குலத்தோர் தாழ்ந்த எண்ணம் கொண்டவர்கள் தாழ்ந்த குலத்தோர்)
எதை என்றும் புரிய புரிய இதனால்தான் அப்பனே எவை என்றும் புரியாமல் கூட எவை என்றும் அறியாமல் கூட அப்பனே பின் யாங்கள் நிச்சயம் திட்டித் தீர்த்தால் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய
அதிலும் அப்பனே அர்த்தம் உண்டு என்பேன் அப்பனே. அடித்தாலும் அதிலும் அர்த்தம் உண்டு அப்பனே.
எவை என்றும் புரிந்தும் கூட !!!
இதனால் பல கர்மங்கள் அப்பனே போகுமப்பா.
அதனால் பின் அதாவது பின் சித்தன் திட்டுகின்றான் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமல் இருந்தாலும் அப்பனே!!!!!!!
அதனால் அப்பனே ஒரு தந்தையானவன் நிச்சயம் தன் பிள்ளையை அப்பனே (சொல் பேச்சு கேட்காவிடில்)
மதிக்காவிடில் திட்டித்தீர்ப்பான் என்பேன் அப்பனே.
அதே போலத்தான் எதை என்றும் அறிய அறிய அப்பனே எனை நம்பி வந்தோர்கள் அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய என் பிள்ளைகளே!!!!!! என்பேன் அப்பனே.
எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே பொய்யானவை கூட ( பக்தி இல்லாத பொய்யான பக்தர்களை) அங்கேயே அடிப்பேன் அப்பனே.
ஆனாலும் எதை என்றும் அறிய அறிய எவை என்று கூற உண்மையுள்ளவர்கள் அப்பனே இருக்கிறார்களப்பா. அப்பனே ஏதும் தெரியாமல் அமைதியாக வாழ்கிறார்களப்பா.
ஆனாலும் அப்பனே பொய்யானவர்களே அப்பனே அதைச் செய்து இதைச் செய்து அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே பின்.....
அகத்தியன் எவை என்று கூற இப்படி இருக்கின்றான்!!!!!
சித்தர்கள் இப்படி இருக்கின்றார்கள்!!!!!
முருகன் இப்படி இருக்கின்றான்!!!..
என்பதை எல்லாம் அப்பனே பொய் கூறி அப்பனே பணங்கள் சம்பாதித்து கர்மத்தை வரவழைக்கின்றான் அப்பனே.
என்னிடத்தில் கேட்டாலே யானே
கொடுப்பேனப்பா. எதன் மூலமாகவோ!!!!
எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே நம்பிக்கை இல்லையப்பா. அவ்வளவுதான்.
அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே பின் அதாவது இதைச் சொன்னால் எவை என்று அறிய அறிய என் குடும்பம் எப்படி எதை என்று அறிய அறிய எவை என்று கூற யானும் !!!!!!அதாவது வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே என்று இன்னொருவன் கூட சொல்லிக்கொண்டிருக்கின்றான் அப்பனே.
எப்படியப்பா?
யான் இருக்கும்பொழுது அப்பனே !!!!
எதை என்று அறிய அறிய உயிரையே அப்பனே பிச்சை போட்டிருக்கின்றேன் அப்பனே!!!!!
பல மனிதருக்கு அப்பனே. எதை என்று அறிய அறிய அப்பனே!!!!
அப்பனே!!!......சாதாரண பணமப்பா!!!!!!! யான் கொடுக்க மாட்டேனா என்ன???? அப்பனே?
அப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே பக்தி எங்குள்ளது??? என்பதைக்கூட அப்பனே.
அதனால் அப்பனே ஓடோடி வாருங்கள் அப்பனே எதை என்று கூற இறைவனைக் காண. !!!!
அப்பனே மீண்டும் மீண்டும் இதைத்தான் தெரிவிப்பேன் அப்பனே. அனைத்து சித்தர்களும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.
எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே அங்கு காசுகள் இருக்கிறது என்றால் ஓடோடி விடுகின்றான் அப்பனே. எவை என்று அறிய அறிய அங்கு தொழில்கள், எதை என்று அறிய அறிய பணிகள் அதாவது பின் இருக்கிறது என்றால் ஓடோடி அப்பனே எவை என்று கூற அரசு சார்ந்த பின் வேலைகள் (government job) அப்பனே ஓடோடி !!!..................
ஆனாலும் அப்பனே பின் இறைவனை வணங்கு !!!!! என்று சொன்னால் அப்பனே எதை என்றும் அறிய அறிய கஷ்டங்களப்பா மனிதனுக்கு கலியுகத்தில் அப்பனே.
ஆனால் எவை என்று கூற இவ் கஷ்டங்கள் இப்பொழுது தெரியாதப்பா.
ஆனாலும் அப்பனே அவை கிடைத்துவிடும். அதாவது போலியானவை , அதாவது மாயை கிடைத்துவிடும் அப்பனே. !!!..
ஆனால் கடைசியில் அப்பனே அவை காக்காதப்பா !!!! உங்களை.
ஆனால் அப்பனே இப்பொழுது கஷ்டம் என்று அதாவது இறை பலத்தை யான் கஷ்டம் என்று சொன்னேனே, அதுதான் கடைசியில் காக்குமப்பா. அது மனிதனுக்குத் தெரிவதே இல்லையே அப்பா.
அதனால்தான் அப்பனே முட்டாளாகவே இருக்கின்றான் என்பதைக் கூட யான் நிச்சயம் எதை என்றும் புரியப் புரிய
அப்பனே இதனால் புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே.
புரியாவிடில் அப்பனே அதாவது புரியாமல் வாழ்ந்தாலும் அப்பனே ஒரு பிரயோஜனம் இல்லையப்பா. பின் புரியாமல் வாழ்ந்திட்டால் அப்பனே நீயும் கெடுத்திட்டு , அப்பனே பின் இல்லத்தவளையும் கெடுத்து விட்டு ,அப்பனே இல்லறத்தோனையும் ( கணவன் ) கெடுத்துவிட்டு , அப்பனே எதை என்று அறிய அறிய தன் குழந்தைகளும் எவை என்று கூற கெடுத்து விட்டு அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது இவ்வுலகத்தையே கெடுத்து விட்டு சென்று மீண்டும் பிறவி எடுத்து அப்பனே என்ன லாபமப்பா??????
அதனால் இருக்கும் பொழுதே!!!.....
இறைவனைத் துதி. !!!!!
அப்பனே பரிசுத்தமான மனதில் இறைவனை வை!!!!! அப்பனே.
போதுமானது என்பேன்.
நலமாகவே மீதியெல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே நலமாகவே.
அப்பனே இறைவனிடத்தில் அப்பனே வந்துவிட்டாலே, அப்பனே அதாவது ஒரு வேலைக்கு எதை என்றும் அறிய அறிய அங்கும் இங்கும் சென்றால் அப்பனே எவை என்றும் அறிய அறிய இவ் பின் காசுகள் பற்றவில்லை (காசுகள் போதவில்லை)அப்பனே!!!!
(வேலை செய்யும் பொழுது சம்பளம் பணி உயர்வு கிடைக்காவிட்டால் அடுத்த வேலை தேடுவது அல்லது வேலை செய்யும் இடத்தில் வேறு ஒரு துறைக்கு மேலே செல்ல பார்ப்பது அதற்காக மேற்கொண்டு படித்தல் மேற்கொண்டு முயற்சி செய்தல்)
எவை என்று அறிய அறிய மீண்டும் உயர் நிலைக்குச் செல்வதற்கு இன்னும் அப்பனே பாடங்கள் பின் படிக்க வேண்டும் என்றெல்லாம் மனிதன் எண்ணுகின்றான் அல்லவா?!!...
அதே போலத்தான் அப்பனே பின் இறைவன் எதை என்று அறிய அறிய இங்கு இருக்கின்றான். மீண்டும் ஓடோடி அங்குச் செல்வோம் இங்குச் செல்வோம் என்று ஓடோடி எவன் வருகின்றானோ?!!!!! அவந்தனக்குத் தானப்பா ஞானங்களும் தித்திக்கும் அப்பனே. எதை என்று அறிய அறிய அனைத்தும் கிடைக்கும்.
ஆனால் எதை என்று கூற ஒரு முட்டாள் மனிதன் எனை நம்பிக்கொண்டே பின் பக்கத்தில் இருக்கும் ஆலயத்திற்கே செல்ல முடியவில்லை.!!!......
ஆனால் வெளியில் இருக்கும் ஆலயங்களுக்குப் பின் செல்ல வேண்டுமாம்?????????????
அப்பனே யான் உன்னை பார்த்து ஒன்று கேட்கிறேன் அப்பனே!!!!.
பின் பக்கத்தில் உள்ள ஒரு பெண்ணையே உன்னால்!!!!?????? நீ மணக்கவில்லை அப்பனே தூரத்திலிருந்து ஒரு பெண்ணை மணக்கின்றாய் அப்பனே எப்படியப்பா ??? நியாயம் அப்பனே?
எதை என்று அறிய அறிய அகத்தியனிடம் கேட்டால் அப்பனே , எவை என்று அறிய அறிய
அகத்தியனிடம் கேள்விகள் கேட்டால்!!!!!! எதை என்று கூட தப்பிக்க இயலாது என்பேன் அப்பனே.!!!!!
ஆனால் எதை என்று கூற உங்கள் கேள்விக்கு அப்பனே எதை என்று கூட ஒரு பதிலிலே!!!!!!......
ஒரு பதில் அளித்தால் அப்பனே நீங்கள் மீண்டும் பேசமாட்டீர்கள் என்பேன் அப்பனே.
அதனால் யோசித்துப் பேச வேண்டும்.
அகத்தியனிடத்தில் என்பேன் அப்பனே.
சொல் என்றால் அகத்தியன் அப்பனே !!!!!
அகத்தியனை வெல்வதற்கு அப்பனே யாரும் இல்லையப்பா இவ்வுலகத்தில்.!!!!
எவை என்று கூற பெருமைப் பட்டு சொல்லவில்லையப்பா யான் இங்கு. !!!!
எதை என்று அறிய அறிய எவை என்று புரியப் புரிய, புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. சொல்கின்றேன் அப்பனே. எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று தெரியாமல், தெரியாமல் அப்பனே
தெரிவதில்லை. அப்பனே
சித்தன் யார்??? என்பதைக் கூட தெரியாமல் அப்பனே வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. எதை என்று கூட!!!
எவ்வளவு கஷ்டங்கள் என்பதையெல்லாம் அப்பனே கொடுத்துக் கொடுத்து எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமல் கூட
அதனால் எதை என்று கூற சித்தர்களை நெருங்க வேண்டும் என்றால் அப்பனே புண்ணியத்தோடு நெருங்குங்கள் அப்பனே.
அப்படி இல்லை என்றால் யாங்களே எதை என்று கூற துன்பத்தில் ஆளாக்கி அப்பனே பின் நல்வழிப்படுத்தி எதை என்று கூற பின் அனைத்தும் கொடுப்போம் அப்பனே.
இதில் தவறில்லையப்பா!!! எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய
இதனால் அப்பனே இன்னும் இன்னும் விட்டுக் கொண்டே இருந்தால் அப்பனே எதை என்று கூற பின் அதாவது கலியுகத்தில் சித்தர்களே பொய் என்று சொல்லி வி்ட்டு இருப்பார்கள் என்பேன் அப்பனே.
எவை என்று அறிய அறிய ஆனால் யாங்கள் மாற்றுவோம் அப்பனே. எவை என்றும் அறிய அறிய
அப்பனே கூடு விட்டுக் கூடு பாய்தல் கூட எவை என்று கூற இவ் கலியுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் உயிரைக் காக்கவும் அதாவது அப்பனே எதை என்று அறிய ஏன் காக்க வேண்டும் அப்பனே??????
யாரால் எவை என்று கூற மற்றவர் எவை என்று புரிந்து புரிந்து
அப்பனே மற்றவர் உயர்வதற்குக் காரணம் ஆகின்றானோ அவந்தன் நிச்சயம் எதை என்று கூற அனைத்தும் பின் எதிர்கொண்டு அப்பனே பின் விதியையும் கூட எவை என்று கூற மதியால் எவை என்று கூற பின் எதை என்றும் அறியாமல் கூட
இதனால் அப்பனே
விதி!!
மதி !!
கதி !!
எதை என்றும் அறிய அறிய இதற்கெல்லாம் யான் விளக்கங்கள் ஏற்கனவே அளித்துள்ளேன் அப்பனே.
(வணக்கம் அகத்தியர் அடியவர்களே இந்த இடத்தில் ஒரு குருநாதர் இந்த வாக்கினை கூறியிருக்கின்றார் அல்லவா
மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றி எடுத்துக் கூறுகின்றோம்.
அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை வைத்து முருகப்பெருமானும் அகத்தியர் பெருமானும் ஒரு விளையாட்டு விளையாடினார்கள்.
இந்த வாக்கில் மற்றவர்கள் உயர்வுக்கு யார் காரணமாக இருக்கின்றார்களோ அவர்களுடைய விதியில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் அதை இறைவன் அருள் என்ற மதியால் வெல்லலாம் என்பதற்கு உதாரணமாக அந்த சம்பவம் நடந்தது.
ஒரு பெண்மணி அவர் சிறு வயதில் இருக்கும் பொழுதே அதாவது அவர் ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்திலே அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தினர் பெண் குழந்தை அவர்களுக்கு பிறந்து விட்டது என்று சில பல காரணங்களால் அந்த குழந்தையை வெறுத்து ஒதுக்கி கைவிட முயற்சி செய்த பொழுது இந்த ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பெண்மணி எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த குழந்தையை என்னிடம் கொடுங்கள் நான் வளர்த்திக் கொள்கின்றேன் என்று வாங்கி வளர்த்தி அதாவது மிகவும் கஷ்டப்பட்டு கை குழந்தையாக இருந்த குழந்தையை தற்பொழுது கல்லூரி படிக்கும் அளவிற்கு வளர்த்தி அந்த பெண் குழந்தைக்கு ஒரு நல்ல நிலையை அடைய செய்து விட்டார்.
அந்தப் பெண்மணிக்கும் காலாகாலத்திலும் திருமணம் நடந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகள் எடுத்து வளர்த்திய குழந்தையோடு சேர்த்து மொத்தம் மூன்று பேர் ஆனால் மூன்று பேருக்கும் இடையே ஒரு பாகுபாடும் இல்லாமல் இந்த பெண்மணி மூவருக்கும் ஒரே அன்பை காட்டி வளர்த்தி இப்பொழுது ஒரு நல்ல ஒரு நிலைக்கு அந்த பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி விட்டார்.
எடுத்து வளர்த்திய பெண்மணிக்கு விதியில் ஒரு மரண கண்டம். அதாவது சில பல காரணங்களால் மனம் வெறுத்து அந்த துன்பத்தையே நினைத்துக் கொண்டு செல்லும் பொழுது ஒரு கிணற்றில் தவறி விழுந்து மரணிக்க வேண்டும் என்பது விதி.
ஆனால் இந்தப் பெண்மணி சிறுவயதாக இருந்த பொழுதே ஒரு உயிரைக் காப்பாற்றி அதை வளர்த்தி நல்ல கல்வியை கொடுத்து ஒரு உயர்ந்த நிலைக்கு ஆளாக்கிய புண்ணியத்தால்.... குருநாதர் ஒரு நாடகத்தை நடத்தி காப்பாற்றினார்...அந்த பெண்ணின் விதியையும் மாற்றி தந்தார்.
இவருடைய இரண்டு குழந்தைகளும் அனாதையாக போய்விடும் விதி இப்படியே நடந்து விட்டால் என்று குருநாதர் கருணையோடு திரு ஜானகிராமன் ஐயா மூலம் ஒரு நாடகத்தை நடத்தி அந்த பெண்மணியின் உயிரை காப்பாற்றினார்!!!!
அதாவது விதியை அந்த எடுத்து வளர்த்திய பெண்மணிக்கு விதியில் இருந்ததை அந்தப் பெண்மணி செய்த புண்ணியத்தால் இறைவனுடைய அருளால் இதுதான் மதி அந்த மதியால் வெல்ல வைத்து விட்டார் அதற்கு ஒரு உதாரண சம்பவமே இது.....
(விதியை மதியால் வெல்லலாம் என்பதை பற்றி குருநாதர் ஏற்கனவே வாக்குகள் தந்திருக்கின்றார் சித்தன் அருள் - 1066 - அன்புடன் அகத்தியர் - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு! ல் வெளிவந்துள்ளது.
இறை பலங்கள் அதிகரிக்க அதிகரிக்க தொந்தரவுகள் நீங்கும். நீங்கும் என்பேன். அனைவரும் யான் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையை எடுத்து கொள்வார்கள் இது உண்மை.
அப்பனே ஆனாலும் பிரச்சினை எதிலிருந்து வருகின்றது என்பதை சிறிது யோசித்துக் கொள்ளுங்கள்.
பிரச்சனைகள் உங்களிடமிருந்து தான் வருவதே. அப்பனே சிறிது யோசித்துக் கொள்ளுங்கள். அப்பனே விதியைக் கூட மதியால் வென்று விடலாம் அவ் மதி என்னவென்றால் இறைவனின் அருள் என்பேன். இறைவனருள் இருந்தால் அப்பனே நல் முறைகள் ஆகவே விதி என்ன ?
மதி என்ன?)
ஆனாலும் இன்றளவு கூட எதை என்றும் அறிய அறிய
அதனால் அப்பனே ஓடுங்கள் !! ஓடுங்கள் !!! இறைவனிடத்தில் ஓடுங்கள்!!! அப்பனே.
இறைவன் அனைத்தும் கொடுக்க தயாராக இருக்கின்றான் அப்பனே.
எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய
இதனால் அப்பனே அதாவது அப்பனே சிறு வயதாக இருக்கும்பொழுது சில கல்விகள் அப்பனே.
பின்பு உயர் கல்விகள் அப்பனே. இன்னும் மேற்கல்விகள் அப்பனே. இன்னும் மேற்கல்விகள் அப்பனே கற்றால்தான் உயர் நிலையே அடைய முடியும். என்பேன் அப்பனே
அப்படி இல்லையென்றால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
( உயர் கல்வி நிலையை அடைவது எட்டாக்கனியே)
அதே போலத்தான் அப்பனே பின் ஓடி எதை என்று கூற திருத்தலங்கள் , திருத்தலங்கள் அப்பனே ஓடி ஓடி அப்பனே பின் எதை என்று அறிய அறிய அனைத்தும் எவை என்று அறிய அறிய அப்பனே இப்படிப் பார்த்தால்தான் ( படித்தால்தான் ) உயர் நிலையும் அப்பனே அதாவது ஞானத்தின் உச்சத்துக்கே செல்ல முடியும் என்பேன் அப்பனே
இதனால். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே!!...... அவை இவை என்று பிதற்றிக் கொண்டாலும் ஒன்றும் கிடைக்காதப்பா. கஷ்டங்கள் மட்டும் கிடைக்குமப்பா.
எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அப்பனே சாதாரண மாயையைதான் அப்பனே உலகத்தில் தேடிக்கொண்டிருப்பான் மனிதன்.
உண்மைப் பொருளை அப்பனே யாருமே அப்பனே பின் தேடுவதில்லை என்பேன் அப்பனே.
அவ் உண்மைப் பொருளைத் தேடி விட்டால் அப்பனே நிச்சயம் உயர்வுகளப்பா. மாயப் பொருள்கள் எளிதில் கிடைத்து விடும் இறைவன் அருளால் அப்பனே. பின்பு எவை என்று அறிய அறிய இறைவனே பிடுங்கிக் கொள்வான். அவ்வளவுதான் அப்பனே.
எதை என்று அறிய அறிய அப்பனே இவ் உடம்பிற்கு உயிர் தேவை. அப்பனே இவ் உயிர். எதை என்று அறிய அறிய இறைவன் கொடுத்தப்பா. பின்பு இறைவனே எடுத்துக்கொள்வான் அப்பனே !!!!
நடுவில் எதை என்றும் அறிய அறிய ஆடுகிறான், பாடுகிறான். அப்பனே இறைவன் அனைத்தும் கொடுக்கின்றான்.
ஆனால் இறைவனுக்குச் சொந்தமானவை, இறைவனே எடுத்துக்கொள்வான் அப்பனே.
ஆனால், இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய எந்தனுக்கு அவை போய்விட்டது,!!!! இவை போய்விட்டது!!!!! எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய பொய்களப்பா பொய்கள்.
உந்தனது பின் இங்கே ஏதுமே இல்லை அப்பா. அப்பனே, (இவ்வுலகில் மனிதனுக்கு சொந்தமானது என்று எதுவுமே இல்லை)
நீ ஓர் வழிப்போக்கனே என்பதை கூட
அப்பனே பல சித்தர்கள் தெரிவித்து விட்டார்கள் அப்பனே. எதை என்றும் அறிய அறிய
அதனால் அப்பனே எவை என்றும் புரியப் புரிய உயிர் கூட உந்தனுக்குச் சொந்தமில்லாத போது அப்பனே அனைத்தும் சொந்தமென்று அப்பனே பின் நீங்கள் பிதற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே.
இதனையும் கூட பல பல வாக்குகளில் கூட யான் தெரிவித்து விட்டேன். அப்பனே நலன்களாகவே!!!
அதனால் தெரிந்து கொண்டு வாழுங்கள். தெரிந்து கொண்டு வாழுங்கள் என்பதை எல்லாம் அப்பனே தெரிவித்துக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே.
எவை என்றும் அறிந்தும் கூட இதனால்தான் நன்மைகளாக எம்முடைய ஆசிகள் அப்பனே.
இன்னும் இன்னும் எவை என்றும் அறிய அறிய மக்களுக்கு யாங்கள் எவை என்றும் அறிய தெளிவு படுத்துகின்றோம் அப்பனே.
தெளிவாக இருங்கள் அப்பனே.
நல்முறைகளாக காத்துக்கொண்டு அப்பனே எவை என்று அறிய அறிய இல்லங்களையும் காத்துக்கொண்டு,
சந்தோசமாக வாழ்ந்திட்டு, அப்பனே இறைவன் கொடுத்த உயிரை
அப்பனே எவை என்றும் அறிய அறிய எதை என்றும் புரியப் புரிய இறைவன்பாலே அப்பனே பின் வைத்திருங்கள்
(உங்கள் உயிரை இறைவனிடம் வையுங்கள்)
அப்பனே. எவை என்றும் புரியப் புரிய
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனால் பின் இறைவன் பின் எவை என்று அறிய அறிய!!!
மகிழ்வார்களப்பா. குழந்தை பிறந்தவுடன் குழந்தை பிறந்தவுடன் அனைவருமே மகிழ்வார்களப்பா. சிறிது காலம் செல்லச் செல்ல அப்பனே அதனால் வருத்தங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் கடைசியில் அழுகின்றார்களப்பா.
ஆனாலும் அப்பனே அவ் ஆன்மா பின் சந்தோஷமாக அடையுமப்பா எதை என்று கூட இறைவனிடத்தில்.
ஆகா!!!!!!
எதை என்று அறிய அறிய
இவ் உலகத்தை விட்டு அதாவது மனிதனையே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் அறிய அறிய கஷ்டங்களை விட்டு விடுபடுகின்றோமே என்று பின் சந்தோஷமாக இறைவனிடத்தில் சேர்ந்துவிடும்!!!!
ஆனாலும் அதாவது அங்கு சென்றாலும் எதை என்று அறிய அறிய பின் பாவங்கள் எதையென்று கூட புண்ணியங்கள் என்றெல்லாம் பின் சரிபார்க்கப்படும்.
அப்பொழுது புண்ணியங்கள் இருந்தால் பின் எதை என்று கூட இறைவனிடத்தில்!!!!!
(புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் இறைவன் என்ற காந்தகத்தில் ஒட்டிக் கொள்ளலாம் என்று குருநாதர் வாக்குகள் தந்ததை நினைவில் வைத்துக் கொள்க)
பின் எதை என்று அறிய அறிய, பாவங்கள் இருந்தால் மீண்டும் பின் அழுது கொண்டே பிறக்குமப்பா!!!!!!
எதை என்று கூற!!!!
ஆ!!!!!!!!!!! என்பதைக் கூட எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய உலகத்தில் பிறந்து விட்டோமே என்று அப்பனே!!!!!!!
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!!
அனைத்திற்கும்!!!!!
இன்னும் ஆன்மா எப்படி எல்லாம் செயல்படுகின்றது?
மனிதன் எப்படியெல்லாம் வாழப் போகின்றான்? அப்பனே எவை என்று கூற பின் எதை என்று அறிய அறிய என்று அறிகின்றபொழுது ஒன்றுமில்லையப்பா.
இதனால் அப்பனே அறிந்து கொள்ளுங்கள். அப்பனே இன்னும் வாக்குகள் இருக்கின்றது அப்பனே நலன்களாகவே.
ஆசிகளப்பா!!! ஆசிகள்!!!!
ஆலய முகவரி மற்றும் விவரங்கள்
திரிபுர சுந்தரி கோயில் என்பது திரிபுர சுந்தரி தேவியின் கோயிலாகும், இது உள்ளூரில் தேவி திரிபுரேஸ்வரி என்று அழைக்கப்படுகிறது. அகர்தலா, திரிபுராவில் இருந்து சுமார் 55 கிமீ தொலைவில் உள்ள பழங்கால நகரமான உதய்பூரில் உள்ள இந்த கோவிலை அகர்தலாவில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக அடையலாம். இது இந்தப் பகுதியில் உள்ள புனிதமான இந்து ஆலயங்களில் ஒன்றாக இருக்கின்றது. மற்றும் அசாமில் உள்ள காமாக்யா கோயிலுக்குப் பிறகு, வடகிழக்கு இந்தியாவில் உள்ளது.
திரிபுரா மாநிலம் இந்தக் கோயிலின் பெயரால் அழைக்கப்படுகிறது. மாதாபரி என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஆலயம் ஆமையின் கூம்பைப் போன்ற சிறிய குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது (குர்மா). கூர்மபிருஷ்டி என்று அழைக்கப்படும் இந்த வடிவம் ஒரு சக்தி பீடம் ஆகும்.
திரிபுரசுந்தரி மந்திர்.
மாதாபரி, உதய்பூர்
கோமதி மாவட்டம், திரிபுரா மாநிலம் 799013
ஆலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
குருநாதர் சிறந்த வழி காட்டியுள்ளார்....மிக்க மிக்க நன்றிகள் பல
ReplyDeleteஅப்பா அகத்தீசா🙏..
ReplyDeleteலோபா முத்ரா சமேத ஸ்ரீ அகசதீசா நமோ நம
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete