​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 11 May 2024

சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி!



8/5/2024  அமாவாசை கிருத்திகை அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்.திருமலை திருப்பதி.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே!!! அருளாசிகள் அம்மையே எம்முடைய அருளாசிகள் இருக்கும் பொழுது கவலையை விடு!!!!

இன்னும் சொல்கின்றேன் உந்தனுக்கு வாக்குகள் !!!

அப்பனே ஏன் எதற்கு எதை என்றும் புரிய புரிய நாராயணன் பின் அப்பனே வரம் அளிப்பதில் சிறந்தவன்!!!!

ஆனாலும் அப்பனே மனிதன் தான் அப்பனே எதை எதையோ .....!?!?!?!?!?!?!?!

ஆனாலும் நாராயணனுக்கே தெரியும்!!!!!! மனிதனுக்கு எதை கொடுத்தால் பக்குவங்கள் ஆக பின் செயல்படுத்தி பின் பக்குவங்களாகவே அதையும் கூட நன் முறைகளாகவே மாற்றுவான் என்பதையெல்லாம்!!!!

ஆனாலும் மனிதர்கள் அதாவது கலியுகத்தில் நிச்சயம் அறிந்தும் கூட இறை பலத்தை நிச்சயம் நம்பப் போவதில்லை.... அறிந்தும் கூட!!!!!

ஏனென்றால் நிச்சயம் அறிந்தும் கூட பல பல வகைகளும் கூட பொய்களை சொல்லி நிச்சயம் இழுத்துச் சென்றால்தான் நம்புவார்கள் என்பதையெல்லாம் இதை என்றும் புரிய புரிய!!!!

அறிந்தும் கூட எவை என்றும் புரியாமல் புரிந்தும் கூட உண்மைதனை கூட நிச்சயம் உண்மைதனை எடுத்துரைத்தால் கூட!!!!

இதனால் நிச்சயம் இப்போது ஒரு ரகசியத்தை எடுத்துரைக்க போகின்றேன்!!!

தற்பொழுது அறிந்தும் உண்மைதனை கூட நிச்சயம் பார்த்தசாரதி 

(திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் சென்னை)

எனும் தலம் நிச்சயம் அறிந்தும் கூட!!!! இப்பொழுதே அவ் நகரம் கூட அதாவது மாநகரம் என்று கூட  பின் சென்னை என்றே!!!!!........

அறிந்தும் உண்மைதனை கூட அங்கே பின் அழகாகவே பின் நாராயணனும் குடி கொண்டிருக்கின்றான் அழகாகவே!!!

கேட்டதெல்லாம் அள்ளித் தந்து கொண்டே தான் இருக்கின்றான்!!!!!

ஆனாலும் அறிந்தும் கூட இவைகளை கூட புரியாமலும் எவை என்று அறியாமலும் எதை என்றும் புரிந்தும் இதற்குப் பிறகும் பின் உண்டு என்பது என்று எதிர்பார்த்தால் அங்கும் இங்கும் கூட!!!!!!!!!

(அங்கும் இங்கும் எங்கும் நாராயணன் அருள்)

இதனால் நிச்சயம் பின் நாராயணனுக்கு சிறுவயதிலிருந்தே பின் ஒருவன் அதாவது அறிந்தும் கூட பின் உண்மைதனை கூட இதனால் அவன் நாமத்தையும் கூட எடுத்துரைத்தேன் எதை என்று கூட

வேதாந்தன்!!!!!

வேதாந்தன் அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய சிறு வயதில் இருந்தே நாராயணனின் பக்தன் இதனால் பின் அதாவது ஒரு பத்து வயதிலிருந்தே பின் எதை சிறப்பான அறிந்தும் கூட பின் புஷ்பங்களை எடுத்து வருவது இன்னும்  அதாவது நாராயணனுக்கு அங்கேயே சேவை செய்து கொண்டிருந்தான்.

இதனால் நிச்சயம் அவந்தனுக்கு வயது ஆக ஆக ஆனாலும் தாய் தந்தையரோ????? அறிந்தும் உண்மைதனை கூட ஆனாலும் எங்கோ ஏன் என்பதையெல்லாம் இதனைப் பற்றியும் ரகசியங்களில் பல பல  உரைக்கின்றேன்

இதனால் அவந்தனுக்கும் திருமண பாக்கியத்தை ஆனாலும் நாராயணனே ஏற்படுத்தினான்!!!!!

ஏற்படுத்தி அறிந்தும் உண்மைதனை எதை என்றும் புரிந்து புரிந்து கூட ஆனாலும் பின் அவந்தனுக்கு வருகின்ற மனைவி மிகவும் செல்வாக்குப் படைத்தவள்.அவ் மாநகரில்!!!! (சென்னையில்)

ஆனாலும் அறிந்தும் கூட பின் அவ் திருத்தலத்திற்கு (பார்த்தசாரதி கோயிலுக்கு) வந்து கொண்டே இருந்தாள்!!!!!

இதனால் அறிந்தும் கூட இவனைப் பார்த்து காதலும் கூட மலர்ந்து !!!! அறிந்தும் கூட இதனால் நிச்சயம் இவனிடத்தில் நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன் என்றிணங்க!!!!

நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட இவந்தனும் எந்தனை நீ திருமணம் செய்தால் நிச்சயம் அறிந்தும் கூட.... எந்தனுக்கு நாராயணன் தான் முக்கியம் இவ்வுலகத்தில் நிச்சயம் அறிந்தும் ஏதும் எந்தனுக்கு தேவையில்லை!!!!!

இதனால் அறிந்தும் உண்மைதனை கூட உன்னுடைய சொத்துக்கள் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் கூட நிச்சயம் அனைத்து திருத்தலங்களுக்கும் கூட எழுதி!!!!!!....... அறிந்தும் அனைத்தையும் கொடுத்து விட்டு வா !!! பின்பு திருமணம் செய்து கொள்கிறேன் நிச்சயம் என்று!!!!! அறிந்தும் கூட!!!

இதனால் அவள் தாய் தந்தையரும் கூட அப்படியே!!!! செய்து அதாவது இருப்பது ஒரு பிள்ளையே!!!! என்று நிச்சயம் இதுவும் கூட நிச்சயம் தானங்களாகத்தான் ஆகிப்போகும் என்று அனைத்தும் கொடுத்து விட்டு அவள்தன் நிச்சயம் வந்தாள்.

நிச்சயம் இவந்தனும் ஏற்றுக் கொண்டான்!!!!

இதுவும் பெருமானின் பின் லீலைகள் என்பதே!!!!

இதனால் நிச்சயம் அவர்களும் கூட பின் அதாவது பின் அறிந்தும் கூட பின் அதாவது தற்பொழுது நிலைமையில் அதாவது நாராயணனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தார்கள்.

பின் பார்த்தசாரதி (கோயிலில்) அறிந்தும் கூட!!! 

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அவர்களுக்கும் பின் வயது ஆக!!!! ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லை!!!

ஏன் எதற்கு எவை என்றும் புரிய புரிய ஆனாலும் அவந்தனும் மனம் வருந்தினான்.

நாராயணனே!!!!! 

யான் அமைதியாக இருந்தேன் அறிந்தும் கூட!!!

உந்தனுக்கே சேவைகள் செய்து கொள்ள!!! அதனால் என் மனதில் எந்த ஆசைகளும் இல்லை!!!!

பின் நீயே இவள்தனை அதாவது மனதில் ஆசைகளை உருவாக்கி அறிந்தும் கூட பின் திருமணம் செய்து வைத்தாய்!!!!!! ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லையே!!!!

ஆனாலும் அங்கு வருபவர்களும் பின் போவோர்களும் அறிந்தும் கூட... இவந்தன் பின் அதாவது பெருமாள் அருகில் இருக்கக் கூடாது!!!

இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.... இவந்தனை இங்கேயே வைத்து விட்டால் பின் பெருமானின் ஆசிகளும் கிடைக்காது!!! என்று நிச்சயம் பின் அதாவது அறிந்தும் எதை என்றும் கூட!!!! இருவரையும் கூட பின் நீங்கள் வெளியே சென்று விடுங்கள் எங்கேயாவது!!! நிச்சயம் பின் அறிந்தும் உண்மைதனை எதை என்றும் எதிர்த்து எதிர்த்து நீங்கள் இங்கு இருந்தால் எங்களுக்கும் ஆசிகள் கிட்டாது என்று நிச்சயம் பின் இவர்களை துரத்தி!!!!

ஆனாலும் இப்படித்தானப்பா!!!!

அப்பனே அறிந்தும் கூட இது அப்பனே நடந்து அப்பனே இன்னும் ஒரு 150 வருடங்கள் கூட ஆகவில்லை!!!!! அறிந்தும்!!

(ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது)

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே உண்மைதனை கூட அப்பனே இதனால் அவர்களும் பின் தலை குனிந்து நிச்சயம் அறிந்தும் கூட நாராயணனை இவ்வாறு வணங்கி கொண்டே......

நாராயணா ஏன்? எதற்கு? இவ்வாறெல்லாம் கஷ்டங்கள்...!!!!! அறிந்தும் கூட!!!! இதனால் நாராயணனுக்கு அனைத்தையும் ஈந்தேனே!!!!!!(கொடுத்தேனே) ஆனாலும் எதை என்றும் புரிய புரிய 

ஆனாலும் அறிந்தும் கூட பின் அவ்வாறே நிச்சயம் பின் நம்தன் நிச்சயம் அதாவது மலைதனில் ஏழு மலைதனில் (திருமலை திருப்பதி) தங்கிவிடலாம் என்று அங்கிருந்து நடை பயணமாக (சென்னை பார்த்தசாரதி கோயிலில் இருந்து திருப்பதி) அறிந்தும் உண்மைதனை கூட!!!! எடுத்தும் இங்கே வந்தார்கள்!!!

இதனால் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட ஆனாலும் நாராயணனும் நிச்சயம் இவர்களுக்கு ஏதோ தர வேண்டும் என்று எண்ணி நிச்சயம் அறிந்தும் கூட 

இவர்கள் (மலை)மேலே ஏறி இங்கே அறிந்தும் கூட படுத்து உறங்கினர்.

இதனால் நாராயணன் இவர்கள் படுத்திருக்கும் பொழுது மறைமுகமாக ஒரு பெண் குழந்தையை பின் இவர்கள் அருகில் வைத்து விட்டு பின் சென்று விட்டான்.

ஆனாலும் அக்குழந்தையின் அழுகுரல் கேட்டுக்கொண்டே!!!! பின் இவர்கள் எழுந்து அறிந்தும் கூட அதாவது அக்குழந்தையை தூக்கி நிச்சயம் இக்குழந்தை யாருடையது????? குழந்தை யாருடையது???? என்றெல்லாம் கேட்க!!!

நிச்சயம் அறிந்தும் கூட பின் அவரவர் அறிந்தும் கூட பின் பெண் குழந்தை பிறந்து விட்டதால்!!!!!?

(இங்கு விட்டு விட்டு சென்று விட்டார்களோ என்று எண்ணி)

இவள்தன் (குழந்தை )யார்? யாருக்கோ ? அதாவது யாருக்கு சொந்தம்???? என்றெல்லாம்!!!!!! இவள்தனை பின் யாராவது  கேட்டால் ஒருவரிடத்தில் கொடுத்து விடலாம் என்றெல்லாம்..!!!!

தவறான அப்பனே இப்படித்தானப்பா கலியுகத்தில் அறிந்தும் கூட!!!!!!!

ஆனாலும் பின்  கடைசியில் அதாவது அக்குழந்தையை பின் நிச்சயம் நாராயணன் தான் நம் தனக்கு கொடுத்திருப்பான் என்று எண்ணி இவர்களே வளர்த்தனர் அப்பனே!!!

அறிந்தும் எதை என்றும் புரிய புரிய!!!!

ஆனாலும் அதாவது நம்தனை எவ்வாறு என்பதையும் கூட நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட இவ்வாறு அங்கு (பார்த்தசாரதி ஆலயத்தில்) சொன்னார்களே!!!!! நிச்சயம் மடையன்கள்.... அவர்கள் எதிரில் குழந்தையை நாராயணனை கொடுத்தான் என்று அறிந்தும் உண்மைதனை கூட நிச்சயம் அங்கே சென்று விடலாம் என்று சந்தோஷம்!!!!

அதனால் அறிந்தும் கூட மீண்டும் அங்கே  சென்றார்கள்!!!

(திருப்பதியில் இருந்து சென்னை பார்த்தசாரதி கோயிலுக்கு)

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய ஆனாலும் அங்கு (பார்த்தசாரதி கோயிலில்)அனைவரும் பின் இவந்தன்.... எங்கேயோ இருந்து குழந்தையை திருடி வந்து விட்டான்!!!

இதனால் அறிந்தும் இவர்கள் எதை என்றும் புரிய புரிய எதை என்றும் அறிய அறிய இதனால் தான் அங்கு சென்றான்!!!....(குழந்தையை திருடி வருவதற்கு) எதை என்றும் புரியாமலே!!!

அதாவது அவந்தனுக்கு நாராயணன் மீது பற்று அறிந்தும் கூட!!!!

ஆனாலும் இவனை இங்கேயே கொல்லுங்கள்!!!! என்று மக்கள் ஒன்றாக இணைந்து அறிந்தும் கூட எதை என்றும் புரியாமலும் கூட பின் கற்களை வீசி அவர்கள் இருவரையும் கொன்று குவித்து விட்டனர் இங்கே!!!

(பார்த்தசாரதி கோயிலில்)

அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட இப்படித்தான் கலியுகத்தில் மனிதர்கள் இருப்பார்கள்!!!! அறிந்தும் கூட.

பின் மனசாட்சி இருக்காது!!!!!!

அறிந்தும் எவை என்றும் கூட நிச்சயம் அதனால் தான் மனிதனை நிச்சயம் அழிக்கத்தான் போகின்றான் இறைவன்..!!!!!

சொல்லிவிட்டேன்...!!!!

அதில் கூட தான தர்மங்கள் நிச்சயம் நல் மனது நிச்சயம் நல் எண்ணங்கள் நல் எண்ணங்களாக இருந்தால் நிச்சயம் தப்பித்துக் கொள்ளலாம் இக்கலி யுகத்தில்!!!

ஆனாலும் அறிந்தும் கூட இல்லையே!!!!!

அறிந்தும் கூட!!!!

ஆனாலும் அச் சிறு குழந்தையும் கூட!!!!! அழுது கொண்டே!!!!

ஆனாலும் எதை என்று புரிய புரிய ஆனாலும் அனைவருமே சொன்னார்கள் எதை என்று கூட!!!

இக்குழந்தையும் அறிந்தும் கூட இவர்களுடையதே!!!! அறிந்தும் எதை என்று புரிய புரிய எதை என்றும் கூட ஆனாலும் இவள்தனும் கூட (இந்தக் குழந்தையும் கூட) இப்படித்தான் இருப்பாள் என்று!!!!!! (பெற்றோரைப் போல்)

ஆனாலும் இவள்தனை பின் ஒரு சங்கிலியால் கட்டி வைத்து அதாவது......... மனிதன் ஒரு சிறு குழந்தை என்று கூட நினைக்கவில்லை..

இங்கு அறிந்தும் கூட இதனால் பின் அவள் கால்களில் பின் கொலுசுகளாக கட்டி அறிந்தும் கூட பின் வருபவர்களுக்கு எல்லாம் இவள்தனை  எதை என்று புரிய புரிய அனைவருமே எதை என்று கூட இக் குழந்தையை யாரும் கவனிக்க கூடாது என்று ஒருவன்!!!! அதாவது நாராயணனுக்கு சேவை செய்பவனே!!!

(பார்த்தசாரதி ஆலயத்தில் நாராயணனுக்கு சேவை செய்யும் ஒருவர் அந்த குழந்தையை யாரும் கவனிக்க கூடாது என்று கூறிவிட்டார்)

அறிந்தும் கூட இப்படித்தானப்பா இருக்கின்றார்கள் அப்பனே அறிந்தும் கூட

இதனால் பின் அறிந்தும் கூட தூக்கியிடுவான் அப்பனே...ஒரு சோறு!!!! அதாவது அப்பனே ஒரு வயிற்று!!!! சோறு!!! அறிந்தும் கூட

சிறிதளவே அப்பனே!!!

(அக்குழந்தையை சங்கிலியால் கட்டி வைத்து ஒருவேளை கொஞ்சம் சோற்றை மட்டும் தூக்கி எறிவார்கள் அந்த குழந்தையிடம்)

அது அக்குழந்தை தின்னுமப்பா!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய..... இப்படி எல்லாம் பக்திக்குள் இருந்திருக்கின்றார்கள் அப்பா!!!!!

பார்க்கும்பொழுது!!!!!

ஆனாலும் அப்பனே அவந்தனும் இப்பொழுது பிறந்து தான் இருக்கின்றானப்பா!!!

அவன் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறான் என்பதை எல்லாம் யானே அறிவேன் அப்பனே!!! வரும் காலத்தில் சொல்கின்றேன் அப்பனே!!!

(அந்தக் குழந்தையை சங்கிலியால் கட்டிப்போட்டு ஒருவேளை சோற்றை மட்டும் தந்து கொடுமைப்படுத்திய கோயிலில் சேவை செய்த நபர் இந்த பிறவியிலும் பிறந்திருக்கின்றார் அவர் என்ன எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை குருநாதர் வரும் கால வாக்குகளில் தெரிவிக்க போகின்றார்!!!

நமக்கான பாடங்கள் இவை!! 

எதை விதைத்தால் எவை முளைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் அனைவரும்!!! முற்பிறவியில் நாம் என்ன செய்தோம் என்பதை நம்மால் கணிக்க முடியாது!!!! 

ஆனால் இந்த பிறவியில் நாம் செய்வதும் செயல்படுவதும் நம் கையில் இருக்கின்றது!!

அடுத்த நற் பிறவிக்கான வழியும் முக்திக்கான வழியும் நாம் இந்த ஜென்மத்தில் நடந்து கொள்ளும் செயல்களிலே தான் இருக்கின்றது.. 

இதை இந்த இடத்தில் குருநாதர் அழகாகவே எடுத்துரைக்கின்றார்.

ஆலயம் ஆலயமாக எழுப்பி பணத்தை கொள்ளை அடித்தவர் திருப்பதி அடிவாரத்தில் இந்த ஜென்மத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதும் பீமேஸ்வரர் ஆலயத்தை கொள்ளை அடித்த மனிதர்கள் இந்த ஜென்மத்தில் காளகஸ்தி ஆலய வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதும் கிருஷ்ணகிரி பூமலை வாக்கில் ஒரு ஏழை சிறுவனை கொடுமைப்படுத்திய மனிதர்கள் இந்த ஜென்மத்தில் எவ்வாறு தண்டனைகள் பெற்று வாழ்ந்து வருகின்றார்கள் என்பதைப் பற்றியும்

சபரிமலைக்கு ஐயப்பனை பக்தியோடு காண சென்ற சிறுமியை கல்லால் அடித்தவர்கள் இந்த ஜென்மத்தில் சபரிமலை ஆலயத்தில் கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருப்பதும்

திருப்பதி மலையில் அனாதையாக இருந்து பூ பூஜை பொருள்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு சிறுமியை துன்புறுத்தி அவர்களுக்கு குருநாதர் கொடுத்த அடுத்த பிறவியையும்

கொல்கத்தா காளி கோயில் வாக்கில் சிறுமியை அடித்துக் கொடுமைப்படுத்திய பூஜை செய்பவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை பற்றியும் நம் குருநாதர் தெளிவாக நமக்கு வாக்குகள் தந்து நாம் செய்யும் பாவம் புண்ணியம் இரண்டு தான் நம்மை நடத்திச் செல்லும் புண்ணியம் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் பாவ செயல்கள் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் ஒவ்வொரு வாக்கிலும் ஒரு உண்மை சம்பவத்தை கூறி நம்மை ஒரு நல் ஆசிரியனாய் இருந்து வழிநடத்துகின்றார்!!!!

குருநாதர் சில பல வாக்குகளில் குறிப்பிட்ட விஷயங்கள் என்னவென்றால் நீ பக்திக்குள் வராமல் கூட இருந்து விடு இறைவனை நம்பாமல் கூட இருந்து விடு ஆனால் பக்திக்குள் நுழைந்து விட்டு உண்மையாக இல்லாமல் பக்திக்குள் நுழைந்து அதர்ம வழியில் நடந்தால் உயரவே முடியாது என்று குறிப்பிடுவதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பக்திக்குள் நுழைந்து விட்டு போட்டி பொறாமைகள் தீய எண்ணங்களை வைத்துக் கொண்டால் ஒரு பிரயோஜனமும் இல்லை.... பல வாக்குகளில் ஆலயத்தில் இறைவனுக்கு சேவை செய்யும் நபர்களே உண்மையான பக்தியை உணராமல் பல உண்மை பக்தர்களுக்கு கொடுமை செய்த உண்மை சம்பவங்களை எத்தனை எத்தனை வாக்குகளில் கூறியிருக்கின்றார். இதையெல்லாம் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் பக்திக்குள் நுழைந்து விட்டு அதர்ம வழியில் செல்லக்கூடாது பக்தி என்பது கத்தி என்று காகபுஜண்டர் மகரிஷி கூறியதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

ஒவ்வொரு வாக்குகளும் நமக்கான பாடங்கள் நம் வாழ்க்கைக்கான பொக்கிஷங்கள்)

அதனால் இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே.... அவ்வாறே அதாவது பின் அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிய சங்கிலியால் கட்டி எதை என்றும் அறிய அறிய

நீர் வேண்டுமென்றாலும் கூட தூக்கி... எறிந்து!!!!!....

இவளை தொட்டாலே பாவம் என்று அனைவரும் நினைத்தனர் அப்பனே.. அறிந்தும் கூட

இதனால் அக்குழந்தைக்கும் அதாவது சிறிது வயது மாறியது... ஆனாலும் தெரிந்தது அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய

ஆனாலும் நாராயணனும் பார்த்துக் கொண்டே இருந்தான்!!!!

யாராவது குழந்தைக்கு உதவுகின்றார்களா? என்று பார்ப்போம்!!!! அப்படி உதவுபவர்களை தூக்கி விடுவோம் என்று!!!

ஆனாலும் யாருமே அங்கு வரவில்லை அக்குழந்தையிடம் !!!

குழந்தையை பார்த்தாலே பாவம் என்று யாருமே அக்குழந்தையை பார்க்கவில்லை!!! அறிந்தும் கூட!!!

இதனால் எதை என்றும் புரிய புரிய நேராக வந்து பின் நாராயணனை வணங்குவது பின் அம்பாளை வணங்குவது பின் சென்று விடுவது!!!(பார்த்த சாரதி வேதவல்லி தாயார் தரிசனம்) அறிந்தும் கூட.

இதனால் நிச்சயம் மனம் வருந்தினான் பின் நாராயணனே!!!!

இவரெல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்களே!!!! இவர்களுக்கு எப்படி தருவது ??? என்று !!!!

இதனால் அப்பனே பின் அறிந்தும் கூட தெரிந்து கொள்ளுங்கள்!!!

ஆனாலும் உண்மை நிலையை கூட இவ்வாறெல்லாம்!!!

ஆனாலும் அக் குழந்தையும் அறிந்தும் கூட வளர, வளர ஆரம்பித்தது!!!!

ஆனாலும் அறிந்தும் கூட அவந்தன் சங்கிலியால் கட்டி வைத்தானே!!!!!....... அவந்தனுக்கும் மனம்!!!!

!(அவருக்கு மனதில் ஒரு எண்ணம் இந்தப் பெண் கொஞ்சம் வளர்ந்து விட்டாள் இந்தப் பெண்ணை வேலைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று)

ஆனாலும் வயதும் பின் ஆகிவிட்டதே நிச்சயம் இப் பெண்மணிக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுப்போம் என்று..

இதனால் நிச்சயம் அப்பெண்மணியை பின் அறிந்தும் எதை என்று கூட அதாவது அவள் சிறு குழந்தையே... அறிந்தும் கூட.

ஆனாலும் பின் மனதில் பெரும்.... அறிந்தும் கூட பெண் குழந்தை என்று யான் சொல்கின்றேன் இங்கு!!!!

(சிறு குழந்தையாக இருந்தாலும் மனதளவில் பெரிய மனது கொண்ட குழந்தை என்று குருநாதர் குறிப்பிடுகின்றார்)

அறிந்தும் கூட பின் மனதில் அதாவது பெரிய கெட்டிக்காரியாக திகழ்ந்தாள்!!!! அறிந்தும் கூட.

இதனால் அனைத்து செயல்களும் செய்தாள் பெருமாளுக்கு... அறிந்தும் எதை என்றும் அறிய அறிய ஆலயத்தில் கூட்டுவது சுத்தம் செய்வதே இன்னும் பெருமாளுக்கு தண்ணீர் ஊற்றுவது இன்னும் என்னென்ன என்று அபிஷேகங்கள் எல்லாம் பின் புஷ்பங்களை பறித்து வருவது... அனைவரும் எதை என்று  புரிந்து புரிந்து கூட!!!!

இதனால் எதை என்று கூட நிச்சயம் அங்கு செழிப்புகள்!!!!

ஆனாலும் வருவது எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அங்கு மக்கள் வந்து கொண்டே இருந்தனர் ஆனாலும் அனைவருமே இவள் நாமத்தை தான் சொன்னார்கள் பின் நித்தியமாகவே!!!

""""""இவள்தன் பெயரே நித்தியவதி !!!!!!!! என்றே பின் அறிந்தும்!!!! உண்மைதனை கூட

இதனால் அனைவருக்குமே பாசமாக ஆகிவிட்டாள் இவள்தன்!!!!

நித்யாவதி நித்தியவதி எங்கே ? எங்கே? என்றெல்லாம் ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாரும் கேட்க கேட்க அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய....

ஏனென்றால் அனைவருக்கும் நல்முறையாக சேவைகள் செய்து பின் என்னென்ன வேண்டுமோ தண்ணீர் வேண்டுமோ? அறிந்தும் கூட பின் பசிக்கு எதை என்று அறிய அறிய அனைத்தும் கொடுத்து பின் அறிந்தும் கூட

(ஆலயத்திற்கு வரும் மக்களுக்கு நீர் மற்றும் பசிக்கு உணவை வழங்கும் சேவை செய்து வந்தார் நித்தியவதி)

இதனால் ஆனாலும் அங்கு பூசை செய்பவர்கள் அறிந்தும் கூட... இவள் மேல் பொறாமை அறிந்தும் கூட!!!!

இவளை இப்படியே விட்டு விட்டால் இவள் இங்கே உயர்ந்து விடுவாள் அறிந்தும் எதை என்றும் அறிந்தும் கூட

இதனால் எதை என்றும் புரிய புரிய எவை என்றும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் பின் உயர்ந்து விடுவாள் அறிந்தும் கூட

இதனால் இவள் நாமத்தையே !!!..........

(அனைவரும் இவள் நாமத்தை உச்சரித்து இவள் பெயர் மட்டும் புகழ் பெறுகின்றது நம்மை யார் என்று தெரியாமல் போய்விட்டது என்று ஆலயத்திற்கு சேவை செய்பவர்கள் பொறாமை எண்ணம் கொண்டனர் நித்தியவதி மேல்)

இதனால் அறிந்தும் கூட அதாவது அனைவருமே பின் தலைகுனிய வேண்டி இருக்கும் என்று நிச்சயம் அனைவருமே கூடி அறிந்தும் கூட அங்கு அறிந்தும் அதாவது பக்கத்தில் கிராமத்தில் இருப்பவர்களையும் கூட எதை என்றும் புரியாமல் இருந்தாலும் இவள் தன் நிச்சயம் அறிந்தும் கூட அதிகாலையில் பின் அனைவரையும் அழைத்து!!!

இவள்தன் கற்பை இழந்து விட்டாள் இங்கு..... அறிந்தும் கூட!!!!

இதனால் எவை என்று புரியாமல் இருந்தாலும் நிச்சயம் இவள்தன் இனிமேலும் நாராயணனை பார்க்கவே வரக்கூடாது!!!!

இவளுக்கு தண்டனை வெளியே நிற்க வேண்டும் என்றெல்லாம் அறிந்தும் கூட

(ஆலயத்திற்கு வெளியே தான் நிற்க வேண்டும் உள்ளே வரக்கூடாது என்று)

இதனால் இவள் பின் வெளியே நின்று நின்று இவள் தனக்கு  பின் அதாவது யாரும் உணவுகளும் இடக்கூடாது!!! யாரும் தண்ணீரும் தர கூடாது என்று..... அறிந்தும் எதை என்றும் புரிய புரிய!!!

அவளும் வெளியே பின் நின்று!!!!

பின் ஆனாலும் இவள்தன் வெளியே இங்கே நின்று சாக வேண்டும் என்று

இதனால் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் வெயிலும் அப்பனே மழையும் அப்பனே காற்றும் அறிந்தும் எதை என்று புரிய புரிய ஆனாலும் பின் அறிந்தும் கூட பின் அனைவரும் வந்தனர் அப்பனே!!!

ஆனாலும் பின் அனைவரும் பாசமாக இருந்தனர். ஆனாலும் நல் பிள்ளையாக எவை என்றும் அறிந்தும் கூட எவை என்றும் புரிந்தும் கூட அனைவருமே சொல்லிச் சொல்லி!!!!!!!!!!

(இவள் நல்ல பிள்ளை என்று அனைவரும் பாசமாக இருந்தவர்கள் மனதில் இந்த பெண்ணை பற்றி கற்பை இழந்தவள் என்று தவறாக கூறி அவர்கள் அன்பையும் பெற முடியாமல் செய்துவிட்டார்கள்)

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணராவிடில் எதை என்று புரிந்து கொண்டு ஆனாலும் அவள்தனும் கூட.... எதை என்று கூட அனைவருமே அனைவருக்கும் பின் அதாவது பறைசாற்றப்பட்டது  அறிந்தும் கூட...

(அனைவரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது)

இவள் தன் கற்பை இழந்தவள்... இவளிடத்தில் யாருமே பேசக்கூடாது என்று!!!!!

ஆனாலும் மனிதர்களும் கூட ஆனாலும் நிச்சயம் யாராவது ஒருவன் நினைத்திருந்தால் அறிந்தும் கூட அப்பெண்மணியை காப்பாற்றி இருக்கலாம்!!!!!!!........

ஆனாலும் இறைவனே கூட காப்பாற்றி இருக்கலாம்!!!.... ஆனால் இறைவன் மௌனம் காத்தான்!!!!!

அனைத்திற்கும் காரணம் உண்டு என்பதை எதை என்று அறிய அறிய

நாராயணனும் தன் பக்தர்கள் இப்படியா????? இக்கலியுகத்தில்....!!!!! என்றெல்லாம் அறிந்தும் கூட!!!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் வெயில் அடித்தது.... அறிந்தும் கூட பின் மழையும் !!!.....எதை என்றும் அறிய அறிய!!!! அவள் எதற்கும் தாங்கினாள்!!!!

அறிந்தும் கூட

ஆனாலும் அவள்தன் கற்பை இழக்கவில்லை அறிந்தும் எதை என்றும் புரிய புரிய!!!

ஆனாலும் மற்றொரு நாள் அறிந்தும் கூட ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் மழையும் பெய்தது!!!! வெயிலும் அடித்தது!!!! இன்னும் அறிந்தும் கூட ஆனால் நாராயணன் அழகாக பார்த்து பார்த்து பார்த்து அறிந்தும் கூட இவள் உயிரை பின் நீட்டி!! நீட்டி!!!

(வெயில் மழையால் வெளியே நின்ற பெண்மணியின் உயிரை காப்பாற்றி ஆயுளை நீட்டிக்க செய்தார் நாராயணன்)

(வீண் பழி பழி சுமத்தியவர்கள்)

இவர்களும் கூட நிச்சயம் ஒரு மறைமுகமான எண்ணத்தைக் கூட!!!!

ஆனாலும் இவள் சாகப்போவதில்லை இதனால் கற்களை வீசி... கொல்லலாம்!! கற்களை வீசலாம் என்று எண்ணி அறிந்தும் எதை என்றும் புரிய புரிய.... ஆனாலும் பின் நாராயணன் வாக்கு கொடுத்து விட்டான் அறிந்தும் கூட... இவள் தன் கற்பை இழந்து விட்டாள்.... இவள் இருந்தால் இங்கு பின் அதாவது பின் நரகமும் பின் எதை என்று அறிய அறிய... நரகமாக மாறிவிடும் சொர்க்கமாக இருந்ததெல்லாம்... என்றெல்லாம் சொல்லி  அனைவரும் ஒன்று கூடி பின் கற்களை ஒருவருக்கொருவர் பின் கற்கள் அதாவது பின் வரிசையில் நில்லுங்கள் பின் அறிந்தும் கூட கற்களை கொடுக்கின்றேன் ஒவ்வொரு கற்களாக எடுத்து இவள் மீது வீசுங்கள் என்று!!!

அப்பனே பக்தர்கள் இப்படித்தானப்பா இருக்கின்றார்கள் அப்பனே எப்படியப்பா?? அருளாசிகள் கொடுப்பது???

இதனால் அவள் மேலே வீசினார்கள்... முதல் கல்லை வீசினாள்!!!!! ஒரு பெண்ணவளே!!!

அவளும் ஒரு பெண் என்றெல்லாம் எண்ணாமல் பெண்ணே வீசினாளப்பா முதல் கல்லை!!!!

யான் வீசுகின்றேன் என்று யான் வீசுகின்றேன் என்று கூட்டம் கூட்டமாக அப்பனே!!! அறிந்தும் கூட

ஏனென்றால் ஒருவன் சொல்லி விட்டான்....

பின் கற்களை வீசினால் இவள்தன் இங்கு பின் இறந்துவிட்டால் நாராயணனின் ஆசிர்வாதங்கள் கிடைத்துவிடும்!!! பணங்களும் பெருகிவிடும்!!!! அனைத்தும் பின் அறிந்தும் கூட... திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகிவிடும் என்றெல்லாம் பின் பொய்யானவற்றையெல்லாம் சொல்லிவிட்டான்.. அப்பனே அதனால் முந்திக்கொண்டு அப்பெண்மணியை அப்பனே அனைவரும் கல்லால் அடித்தனர் அப்பனே!!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய அடி தாங்க முடியவில்லை!!!

பின் ஓடினாள்!!! அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய ஓடினாள் அப்பனே அப்பொழுது கூட விடவில்லை அப்பனே...

அப்பனே எங்கப்பா மனசாட்சிகள்???????

இப்பொழுதும் கூட இல்லையப்பா!!!!! அறிந்தும் கூட!!!

இதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய கடலும் கூட அப்பனே... ஆனாலும் அறிந்தும் கூட

(அடி தாங்காமல் அப் பெண்மணி அருகில் இருக்கும் கடலை நோக்கி ஓடினார். திருவல்லிக்கேணி அருகே இருக்கும் வங்காள விரிகுடா கடல்)

கடலே!!!!!!!!!!!!! கடல் தாயே!!!!!

நீ கூட காப்பாற்ற மாட்டாயா????? அறிந்தும் கூட!!!

நாராயணனே !!!!! என்னை காப்பாற்ற இங்கு யாரும் இல்லையா?????????

அறிந்தும் எதை என்றும் புரிய புரிய என்றெல்லாம்.... நிச்சயம் அறிந்தும் கூட... கடலும் பின் கொந்தளித்து அறிந்தும் எதை என்று அறிய அறிய

கடலே நீயாவது காப்பாற்று!!!!! அறிந்தும் கூட..... அனைவருக்கும் அதாவது அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அதாவது நீ இருந்தால் தான் அதாவது உயிர் வாழ முடியும் என்றெல்லாம் உன்னை சொல்கின்றார்கள்.

ஆனால் உன்னை நம்பியே அறிந்தும் கூட இங்கு வந்து விட்டேன் என்று!!!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்று கூட.... அவர்களும் துரத்தி க்கொண்டு ஓடோடி வந்தார்கள் எதை என்று கூட.. எவை என்றும் புரிய  புரிய

நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் அவள்தான் அனைவரைக்குமே சொன்னாள்!!!!

நிச்சயம் அறிந்தும் கூட என்னை நீங்கள் கொல்கின்றீர்களா????!!!!

யான் எந்தத் தவறும் செய்யவில்லை!!!!! பெருமாளை பின் மனதில் நினைத்தேனே தவிர அறிந்தும் கூட... இதைத் தவிர வேறொன்றும் நிச்சயம் செய்யவில்லை!!

கடலே!!!!!!!!.........

அறிந்தும் கூட நீ உண்மையாகவே எதை என்றும் அறிய அறிய நீயும் ஒரு பெண்மணிதான்!!! அறிந்தும் கூட !!!

நீ நிச்சயம் இருந்தால் நிச்சயம் இதை முதலில் இவர்களை அடியோடு அழித்து அறிந்தும் கூட பின் எப்பொழுதாவது நீ நிச்சயம் அழித்திட வேண்டும்!!!!

ஆனாலும் எனை கற்பு!!!!

யான் கற்போடு தான் இருந்தேன்!!!!!

ஆனால் அனைவரும் என் மேல் பழி சுமத்தி அறிந்தும் கூட ஆனால்.... அறிந்தும் எதை என்று புரிய புரிய அதனால் இவ் தோஷமும் இங்கு செல்லட்டும்!!!

நிச்சயம் அறிந்தும் கூட யார் ஒருவர் பின் நாராயணனின் அன்பும் ஆசியும் நிச்சயம் ஒரு உயிரையும் கொல்லாது.......

(ஏனென்றால் நாராயணன் பக்தர்களாக இருந்தும் கல்லால் அடித்து ஒரு கொலை செய்ய துணிந்த செயல்)

அறிந்தும் கூட நல் நடத்தையாக இருந்தால் அவர்கள் மட்டும் இவ் நகரத்திற்கு வரும் பொழுது உயர வையுங்கள்.

மற்றவரை எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட என்னை என் மீது பொய் பழி சொல்லி அறிந்தும் கூட பின் கற்பு இழந்தவள் என்று சொன்னார்களே!!!!! அவ்வாறு தான் நிச்சயம் இங்கு தீயவர்கள் வந்தால் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பக்தி இல்லாமை நிச்சயம் நேர்மை இல்லாமை நிச்சயம் தாய் தந்தையரை மதிக்கவில்லை என்றால் நிச்சயம் அவர்களின் வாழ்க்கையையும் கூட நிச்சயம் அறிந்தும் கூட...

பின் கடலே!!!! அறிந்தும் கூட அவர்களை நீயே!!!! வாழ்க்கை அறிந்தும் கூட நீயே பார்த்துக்கொள்!!!!

இதனால் அநியாயம் கூட அதிகம் கூட!!!! அப்பனே எதை என்று அறிய அறிய எப்பொழுதெல்லாம் இவ்வாறு நடக்கின்றதோ!!!!

அப்பொழுது கடலே !! நீ வா !!! அறிந்தும் கூட.......

அனைவரையும் அழி!!!!!!

என்றெல்லாம் அப்பனே அறிந்தும் கூட

நிச்சயம் அவ் கடலும் காத்துக் கொண்டிருக்கின்றதப்பா!!!!

அறிந்தும் கூட நிச்சயம் அப்பனே இன்னும் அப்பனே பின் அதாவது....................!!

""""""""சில மாதங்களே எஞ்சியுள்ளது என்பேன் அப்பனே!!!!!

ஏன்!???? அக் கடலும் பின் எவை என்று கொந்தளித்தால் அப்பனே முதலில் அப்பனே பின் அழிய போகின்றது  சொல்லிவிட்டேன் அப்பனே

(சித்தன் அருள் - 1429 - அன்புடன் அகத்தியர் - அருள்மிகு ஆனந்த வள்ளி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.நும்பல்.சென்னை..... இந்த வாக்கில் குருநாதர் ஏற்கனவே நகரத்திற்கு வரும் அழிவை பற்றி எடுத்துரைத்திருக்கின்றார்!!!!

நல்முறையாகவே உண்டு உண்டு ஏற்றங்கள் என்பதற்கிணங்க அதனால் இன்னும் சொல்லப்போனால் எதை எதை என்று கூட யானும் ( அகத்திய பெருமான்) பல மாதங்களாக இங்கு தங்கி தங்கி பின் இருந்தேன்!!!பின் இவ்வூரிலே!!!! எப்படி எல்லாம் அநியாயங்கள் நடக்கும் என்பதை கூட முன்பே கணித்து விட்டேன்!!!

முதலில் அழிவுகள் வருவது இங்கிருந்து தான் வரும் என்பேன் சொல்லி விட்டேன்.

அழிவுகள் பின் கடந்து வந்து கொண்டே இருக்கின்றது நிச்சயம் அழிவுகள் வரும் வரும் என்பதை கூட ஆணித்தரமான ஒன்று!!!

ஒன்று!!! ஆனாலும் பக்திகள் இல்லையப்பா இவ் ஊரில் கூட!!!!!

இன்னும் கீழ்நோக்கியே செல்கின்றது!!!!! பொய்யான பக்திகள் உண்மையில்லை!!!!

உண்மையில்லை என்பதற்கிணங்க..... ஏதோ எதை என்று இறைவனை வணங்கினால் என்று கூட பின் இறைவனை வணங்கினால் எதை என்று அனைத்தும் கொடுத்து விடுவோம் என்ற எண்ணம்.

ஆனாலும் நிச்சயம் செல்லாது என்பேன்!!!

இது சித்தர்களின் ஆட்சி வரப்போகின்றது எதையென்று கூற யாங்களே பின் வழியும் நடத்துவோம்!!!! நிச்சயம் இவ்வுலகத்திற்கு பின் விடிவெள்ளி உண்டு!!!!

என்று வாக்குகள் தந்திருந்தார்!!!!)

இதனால் அப்பனே அனைவருக்கும் தெரிவியுங்கள்!!!!

நல் ஒழுக்கமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்!!! அப்பனே அதாவது பெண்கள் எதை என்று அறிய அறிய அம்மையையும் கூட அப்பனையும் கூட மதித்து நடங்கள்!!!! அம்மை எதை என்று அறிய அறிய பின் பக்தியில் சிறந்தவளாக இருந்தால் நிச்சயம் தப்பித்துக் கொள்ளலாம் கடலில் இருந்து (கடல் கொந்தளிப்பில் இருந்து) அறிந்தும் கூட!!!!

இதனால் கடல் தாயே நிச்சயம் அனைவரையும் அழிப்பாள்.... சொல்லிவிட்டேன்!!!

இதை இங்கிருந்தே சொல்கின்றேன் (திருமலை திருப்பதி)

இதனால் இவையெல்லாம் பின் நாராயணனின் விளையாட்டே....

இதனால் தான் நாராயணனின் லீலைகள் பின் அறிந்தும் உண்மைதனை கூட....

இதனால் அப்பெண்மனியும் அறிந்தும் எவைதனையும் உணர்ந்தும் கூட நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது கடலே!!!!! அறிந்தும் கூட.... நிச்சயம் அழகாகவே காத்து பின் ஏற்றுக் கொண்டாள்!!! கடல் தேவி!!!!!

(நித்தியவதியை கடல் அன்னை ஆட்கொண்டு ஏற்றுக் கொண்டாள்)

அறிந்தும் கூட ஆனால் இப்பிறப்பும் அப்பெண்மணி பிறந்துள்ளாளப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

இதனால் பின் அறிந்தும் கூட அங்கே தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றாளப்பா!!! அறிந்தும் கூட

(சென்னை திருவல்லிக்கேணி பகுதிகளில்)

அவளுக்கு நாராயணனின் அருள் பரிபூரணம் அப்பனே

அறிந்தும் கூட அறிந்தும் எதை என்று கூட இப்பிறப்பில் நாராயணனின் அருகிலே இருந்து உயர் பதவிலும் கூட அவள் தனக்கு கொடுத்து கொடுத்து அப்பனே......

இவள்தனை பற்றி கூட இப்பொழுது யான் சொல்வதற்கு இல்லை என்பேன் அப்பனே!!!!!

(இப் பிறவியில் இவர் யார் என்ற விவரங்களை சொல்வதற்கில்லை ரகசியம்)

இதனால் அப்பனே அநியாயங்கள் அங்கே (மாநகரத்தில் )ஓங்கி நிற்கின்ற பொழுது அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் கடல் கொந்தளிப்பு இன்னும்  அப்பனே பின் அறிந்தும் கூட பின் வருகின்ற பொழுது அப்பனே பின் அழிவார்கள்... அப்பனே என் மடிவார்கள்!!! அப்பனே இன்னும் அறிந்தும் கூட

பின் அப்பனே மழை வெள்ளம் அறிந்தும் கூட பின் எதை என்றும் புரிய  புரிய!!!

(அடியவர்களே கலியுகத்தில் பாவங்கள் அதிகமாகிக் கொண்டே போய்க்கொண்டிருக்கின்றது!!!

ஈசனும் சூரியனுக்கு கட்டளையிட்டு விட்டார் !!!

சூரியன் நெருங்குவான் இன்னும் சுட்டரிப்பான் என்று குருநாதர் ஏற்கனவே வாக்கில் கூறியபடி இந்த கோடை காலத்தில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சூரியன் நெருங்கி வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருக்கின்றார்!!! இதனால் மனிதர்கள் செய்யும் தவறுக்கு இந்த உலகத்தில் உள்ள மற்ற ஜீவராசிகளுக்கும் பாதிப்புகள்!!!

இவற்றிலிருந்து இந்த உலகத்தை காப்பாற்ற தான் நீர்மோர் இயலாதவர்களுக்கு வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட தானதர்மம் செய்து புண்ணியத்தை அதிகப்படுத்துங்கள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்.

அதேபோலத்தான் இப்பொழுது மாநகருக்கு இன்னும் சில மாதங்களில் மழை வெள்ளம் கடல் கொந்தளிப்பு பாதிப்பு ஏற்படும் என்று கூறி இருக்கின்றார்... இதற்குக் காரணம் அநியாயங்களும் அக்கிரமங்களும் அதிகரிப்பதே....

ஒவ்வொரு ஆண்டும் மாநகரத்திற்கு நவம்பர் டிசம்பர் காலங்களில் மழை வெள்ளம் வந்து பொதுமக்களுக்கு பெருத்த சேதம் ஏற்படுவதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்... இதிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள புண்ணியம் செய்வது ஒன்றுதான் வழி... தர்மத்தை மேலோங்க செய்ய வேண்டும்!!! அதர்மங்கள் அக்கிரமங்கள் குறைய வேண்டும் இதற்கு அடியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்)

இதனால் அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் அங்கு அழகாகவே அப்பனே பின் காத்துக் கொண்டிருக்கின்றான் நாராயணனே...

(பார்த்தசாரதி) அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட

அதனால் அப்பனே கர்மங்கள் அப்பனே தாம் தான் செய்த கர்மங்கள் அப்பனே பின் தன்னையே வந்து பின் அழிக்கும் என்பதையும் கூட அப்பனே யாரும் சிந்திப்பதே இல்லை என்பேன் அப்பனே

அதனால் அப்பனே தர்மத்தை அப்பனே!!!!!! எங்கப்பா?????? தர்மம் சென்று விட்டது??? அப்பனே!!!

இப்பொழுது கூட அப்பனே பெண்கள் அங்கும் இங்கும் அப்பனே தாய் தந்தைக்குத் தெரியாமல் அப்பனே எதை எதையோ செய்து வருகின்றார்கள் அப்பனே!!!!

நிச்சயம் அப்பனே நீ மட்டும் கெடாமல்!!!! அதாவது அப் பெண்களும் கெடாமல்.......!!?????

கெட்டு எதை என்று அறிய அறிய அவர் தாய் தந்தையையும் கூட கெட்டு.......

ஏனென்றால் சிறு வயதிலிருந்தே அறிந்தும் கூட அனைத்தும் பின் தாய் தந்தையர்...அவள் தனுக்கு கொடுத்து அனைத்தும் செய்து.......!!!!!!

(பெற்று வளர்த்தி கல்வி என அனைத்தும் கொடுத்து)

ஆனால் கடைசியில் தாய் தந்தையருக்கே துரோகம் செய்தால் அது மன்னிக்க முடியாத குற்றம்!!!

இதனால் வரும் காலத்தில் அவள்தன் (இப்படிப்பட்ட பெண்கள்) கஷ்டமும் படுவாள்!!!! அறிந்தும் கூட அப்பனே!!!! இது அனைவருக்கும் பொது என்பேன். அப்பனே!!!

(ஆண் பெண் இருவருக்குமே பொது !!! ஆண் பெண் குழந்தைகள் தாய் தந்தையருக்கு துரோகம் செய்தால் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும்)

நலன்களாகவே அறிந்தும் கூட!!!!

இதனால் அப்பனே தர்மத்தைப் பற்றி எடுத்துரைக்காமல் அப்பனே எப்பரிகாரம் சொன்னாலும்!!!!??????....... அப்பனே

ஏற்கத்தகுந்தது அல்ல!!!

(ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல)

(முதலில் அனைவரிடமும் தர்மத்தை கடைபிடிக்க கூற வேண்டும்)

அப்பனே முதலில் ஒழுக்கத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும்... இறைவன் மேல் அன்பால் இருக்க வேண்டும்... நம்தனிடம் என்ன குறைகள் இருக்கின்றதோ!? அதையெல்லாம் நீக்க வேண்டும்.... அப்பொழுது தான் திருத்தலத்திற்கே செல்ல வேண்டும் அப்பனே!!!!!!

இப்படி எல்லாம் இல்லாமல் அப்பனே

அப்படி வேறு அனைத்தும் மனதில் வைத்துக் கொண்டு திருத்தலத்திற்கு சென்றால்!!..... அப்பனே அழிவுகள் தான் அப்பனே அறிந்தும் கூட பின் பெரிய அழிவுகளாக வருமப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!

கலியுகத்தில் அப்பனே அறிந்தும் கூட!!!

இதனால் அனைத்து கிரகங்களும் கூட பின் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட மனிதர்களுக்கு அப்பனே அதாவது அறிந்தும் கூட இதனால் அப்பனே பூகம்பமும் அங்கங்கு அப்பனே நிச்சயம்!!!!! நீர்நிலைகளால் தான் அப்பனே அறிந்தும் கூட அழிவுகள்  கூட நிச்சயம் அப்பனே திடீரென்று அப்பனே கடல் வெளியே வந்துவிடுமப்பா!!!!

(கடல் கொந்தளிப்பு சுனாமி போன்று)

அதாவது அறிந்தும் கூட பின் எல்லை தாண்டி வந்து விடுமப்பா!!!

அப்பனே அதாவது சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

முடிந்தவரை அப்பனே நல்லோருக்கு அப்பனே தெரிவியுங்கள்!!!!

இப்படித்தான் வாழ வேண்டும்!!!

இப்படித்தான் இருக்க வேண்டும்!!!

அதை முதலில் யார் சொல்கின்றார்களோ.... அவர்களுக்கு இறைவன் அருகிலே இருப்பான்!!! அனைத்தும் செய்வான்!!!

அதை விட்டுவிட்டு அப்பரிகாரம் இப்பரிகாரம் இதனையும் இறைவனையும் நம்பினாலும் என்றாலும் கூட அப்பனே ஒன்றும் லாபம் இல்லை என்பேன் அப்பனே

முதலில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அதாவது..... இறைவனே தலைகுனிந்தானப்பா!!! இக்கலியுகத்திலே!!!!! மனிதனைப் பார்த்து அப்பனே!!!!

பின் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே சாதாரணமில்லை என்பேன் அப்பனே மனிதனின் லீலைகள் எவை என்றும் புரிய புரிய!!!

இதனால் அப்பனே அழிவுகள் காத்துக் கொண்டே தான் இருக்கின்றது அப்பனே

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் அப்பனே தடுத்து நிறுத்திக் கொண்டே தான் இருக்கின்றோம்...

நிச்சயம்!!!!

ஏனென்றால் மனிதன் திருந்துவான் திருந்துவான் என்று!!!

ஆனாலும் திருந்திய பாடு இல்லை என்பேன் அப்பனே

அதனால்தான் அப்பனே மாறி மாறி அப்பனே காலங்களும் மாறுமப்பா!!!

அப்பனே சொல்லிவிட்டோம் மனிதர்களும் மாறுவார்களப்பா!!! இயற்கையும் மாறுமப்பா!!

(மனிதன் மாறினால் இயற்கையும் மாறும் இயற்கையும் இறைவனும் ஒன்று என்று குருநாதர் ஏற்கனவே பல வாக்குகளில் குறிப்பிட்டுள்ளார்)

மனிதன் மாறி விட்டான் அப்பனே... நிச்சயம் இயற்கையும்..........!!!!!! இறைவன் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே..

நிச்சயம் அப்பனே நீங்கள் மாறினால் சூரியனும் மாறுவான் !!சந்திரனும் மாறுவான்!! அப்பனே பின் அதாவது மாதங்களும் மாறும்!! அப்பனே கிரகங்களும் மாறும்!!! நட்சத்திரங்களும் மாறும்!!! என்பேன் அப்பனே

இதனால் அப்பனே உங்களைவிட அப்பனே பெரியவன் ஒருவன் இருக்கின்றான் அவன் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றான் என்று எண்ணிக் கொண்டால் அப்பனே இந்த உலகத்தில் தவறுகள் நடக்காதப்பா!!!!

அப்பனே அறிந்தும் இன்னும் இன்னும் அப்பனே மனிதருக்குள்ளே மனிதர்கள் நாடுகளுக்குள்ளே நாடுகள் சண்டைகள் அப்பனே சச்சரவுகள் அப்பனே அதாவது யாங்கள் சித்தர்கள் அனைத்துமே தடுத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே...

ஆனாலும் மனிதர்களோ !!!.................. சித்தர்கள் பின் அமைதியாக அப்பனே அறிந்தும் கூட எங்கோ சென்று விட்டார்கள்!!!! மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தார்கள்!!!! என்பதைக் கூட.....

(சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள்)

முட்டாள் மனிதர்களே!!!! அனைத்தும் உங்களுக்காக தான்!!!

எப்படி உலகத்தை காப்பது ? என்பதை தியானத்தின் மூலம் அமைதியாகவே !!!!!! உண்மைதனை கூட அப்பனே தியானங்கள் செய்து கொண்டே இருக்கின்றோம்!!!!!! அப்பனே வந்து விட்டோம் அப்பனே நலன்களாகவே!!!!

(யாங்கள் காடுகளிலும் மலைகளிலும் தவங்கள் மேற்கொள்வது மனிதர்களை இந்த உலகத்தை காப்பதற்காகத்தான் என்று குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் குறிப்பிட்டுள்ளார்)

அப்பனே நிச்சயம் பின் தர்மத்தை யார் நிலை நாட்டுகின்றார்களோ அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்போம் அப்பனே...

அதாவது பொய் சொல்லி எதை எதையோ சொல்லி அப்பனே அவை இவை என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தால்!!?!?!?!?!?!

அப்பனே முதலில் தர்மத்தை!!! உண்மையை!!!

அப்பனே நேர்மையை !!!அப்பனே பின் சொல்லிக் கொடுத்தாலே அப்பனே அதாவது ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்று சொல்லிக் கொடுத்தாலே!!!!! அப்பனே அனைத்தும் மாறுமப்பா!!!!

அப்பனே இவ்வுலகத்தை எப்படியாவது யாங்கள் மாற்றி விடுவோம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அப்பனே அதாவது நிச்சயம் அப்பனே பின் கஷ்டங்கள் கொடுத்து மீட்டால்தான் அப்பனே உண்மை நிலைகள் எவை என்றும் அறிய அறிய அப்பனே...

இன்னும் அப்பனே இவ்  மலைகளைப் பற்றியும் எல்லாம் சொல்கின்றேன் அப்பனே (நாராயணன் குடிகொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.)

எவை என்று புரிய புரிய அப்பனே எங்கெங்கு சென்றால் உயர்வுகள் ஏற்படும் என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருவேன் அப்பனே!!!!

அங்கு சென்றாலே அனைத்து தோஷங்களும் அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று கூட பாவங்களும்..... நீங்கிவிடும் அப்பனே!!!

ஆனாலும் முதலில் நேர்மையுடன் வாழ வேண்டும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்..

தர்மம் !!! தர்மம் !!என்பதே எங்களுடைய மூலாதாரம் என்பேன்.... சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அவை இல்லாமல் பின் திருத்தலங்களுக்கு சென்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை... கஷ்டங்கள் தான் அப்பனே பின் அதாவது சீற்றம் போல் வருமப்பா சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

நலன்கள் அப்பனே இதனால் நாராயணனின் லீலைகள் இன்னும் இன்னும் அப்பனே எங்கெல்லாம் அறிந்தும்  எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே பின் இறைவன்கள் அப்பனே எதை என்று அறிய அறிய இறை பலத்தை எப்படி பெறுவது எங்கெல்லாம் அப்பனே ஒவ்வொரு சக்தி இருக்குமப்பா!!! அப்பனே ஒவ்வொரு இடத்திலும்!!!!!

அங்கு சென்று கால்களை வைத்தாலே போதுமானதப்பா உன் உடம்பில் அப்பனே அழுக்குகளும் தங்காது!!!

அதனால்தான் அறிந்தும் கூட இதை என் பக்தர்களுக்கு வரும் வரும் வாக்குகளில் யான் சொல்வேன் அப்பனே!!!!

அதாவது இப்பொழுது சொல்கின்றேன் அதாவது அப்பனே கால் பாதத்தில் அதாவது பெருவிரல் அப்பா அங்குதான் மூலாதாரமே இருக்கின்றதப்பா!!!

அறிந்தும் கூட ஆனாலும் ஒரு ஒரு இடத்தில் ஒரு ஒரு சக்திக்கள் உள்ளதப்பா

( திருத்தலம்)

அவ்விடத்திற்கு சென்று 

அங்கு அழுத்திக்கொண்டாலே!!!!!!!

(கால் பெருவிரலை தரையோடு சேர்த்து)

அப்பனே உங்கள் உடலில் மாறுதல்கள் அப்பனே நரம்புகளில் அறிந்தும் கூட பல சக்திகள் ஏறுமப்பா!!!

ஆனாலும் அத் திருத்தலம் கூட அங்கங்கு உள்ளதப்பா!!!!

முதலில் தர்மத்தை கடைப்பிடித்து வாருங்கள் அப்பனே!!!!

அத் திருத்தலத்தை பற்றி சொல்கின்றேன்... அப்பனே!!!!

அங்கு போய் கால் வைத்தாலே போதுமானதப்பா!!!!!

அப்பனே நீங்கள் விரும்பும்படியே வாழலாம்...

ஆனாலும் முதலில் அப்பனே யாங்கள் விரும்பியபடி நீங்கள் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே... அறிந்தும் கூட

அப்பொழுதுதான் அனைத்தும் யாங்கள் செய்வோம்... அப்பனே சொல்லிவிட்டோம் அப்பனே!!!

இன்னும் அப்பனே இத்திருத்தலம் (திருமலை திருப்பதி பற்றி)எதை என்று அறிய அறிய சிறப்புமிக்க !!!!ஏன்? இங்கு இருக்கின்றது? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் யான் சொல்வேன் அப்பனே... மாதம் மாதம் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தையும் தெரிவிப்பேன் அப்பனே!!!!

ரகசியங்களை கூட அப்பனே நிச்சயம் பெருமானின் ரகசியங்கள் அப்பனே மிக உயர்ந்ததப்பா!!!

அடுத்த வாக்கிலும் அப்பனே இன்னும் நீண்டு சொல்கின்றேன் அப்பனே!!!

ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிககளே சரணம்
    ஓம் மஹான் சேஷாத்திரி சுவாமிகள் திருவடிகளே சரணம்
    sarva-dharmān parityajya
    mām ekaṁ śaraṇaṁ vraja
    ahaṁ tvāṁ sarva-pāpebhyo
    mokṣayiṣyāmi mā śucaḥ
    எல்லா வகையான சமய மற்றும் தொழில் சார்ந்த கடமைகளையும் துறந்த
    பிறகு, பரம புருஷ பகவானான என்னிடம் வந்து அடைக்கலம் அடைந்தால்,
    வாழ்வின் அனைத்து பாவ வினைகளிலிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன்.
    கவலைப்படாதே
    Bg. 18.66

    ReplyDelete
  2. பார்த்தசாரதி நின் பாதமே கதி
    ஆர்க்கும் அலைகள் பாட்டு பாடும்
    திருஅல்லிக்கேணி பிள்ளை பெருமாள்
    காக்கும் கரங்கள் சங்கம் முழங்கும்
    காலில் வீரக் கழல்கள் சிலம்பும்
    வாக்கு கீதை வாரி வழங்கும்
    வண்ணத்தேரில் கண்ணன் விளங்கும்
    பார்த்தசாரதி உந்தன் பாதமே கதி

    ReplyDelete
  3. நாராயணா நன்றி. நல்லோர் வாழவும் தீயோர் திருந்தவும் அருள் செய்ய வேண்டும். சித்தர்கள் ஆட்சி மலர வேண்டும்.

    ReplyDelete
  4. பக்தன் கொடுமைகளை அனுபவிக்கும் போது உடனே வந்து காப்பவனே பகவான் அதை விடுத்து வேடிக்கை பார்த்து விட்டு மறு பிறவியில் தண்டிப்பதும் நன்மை செய்வதும் தவறான செயல் ஆகும்.

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete