​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 3 May 2024

சித்தன் அருள் - 1596 - அன்புடன் அகத்தியர் - வீரபத்திர சோமேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயில். பவானிசாகர்!






22/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: வீரபத்திர சோமேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயில். பவானிசாகர் சத்தியமங்கலம் ஈரோடு.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!!!

அப்பனே தெரியாதது மனிதனுக்கு பல விஷயங்கள் உள்ளதப்பா!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட உண்மைகள் தெரியாமல் இறைவனை வணங்கினாலும் பிரயோஜனம் இல்லை என்றெல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

ஆனால் உண்மைகளை யாருமே உணர்வதில்லையப்பா!! உண்மையை உணராமல் நிச்சயம் அப்பனே சந்தோசம் கிட்டாது.. அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

உண்மைதனை உணர வேண்டும் அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்!!

 ஏன் எதற்காக பிறந்தோம்?? என்று!!!

அப்பனே பின் அதன் அர்த்தத்தை தெரியாமல் இருந்தால் அப்பனே நிச்சயம் பிறவி மீண்டும் நீண்டு கொண்டே போகுமப்பா!!!!

அதனால் அப்பனே பிறப்பு அப்பனே முற்றுப்பெற்றதாக இருக்க வேண்டும்.

அதனால் அப்பனே அனைத்தும் தெரிந்து கொண்டு வாழ வேண்டும் அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே பெரியோர்கள் அப்பனே நல்விதமாக தன் வாழ்க்கை தன் கையிலே என்று சொல்லிவிட்டார்கள்

ஆனாலும் அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் பின் சிந்திப்பதே இல்லையப்பா அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அப்பனே தாம் தன் தன் எண்ணங்களுக்கு ஏற்பவே வாழ்க்கை அமையுமப்பா!!!! சொல்லி விட்டேன் இதை எப்பொழுதும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் அப்பனே அறிந்தும் கூட

அதேபோல் நல்மனதாகவே இருந்து விட்டாலே அப்பனே நிச்சயம் இறைவன் வந்து குடி கொள்வான் அப்பா

ஆனாலும் அப்பனே இவைதன் உணர......... ஆனாலும் அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் பக்தன் பக்தன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அப்பனே பின் அழுக்குகள் மனதில் நிறைந்திருக்குமப்பா!!!

ஆனால் உண்மையானவைகள் இல்லையப்பா.. அப்பனே பொய் பொறாமை இன்னும் அப்பனே கபடு திருட்டு எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே பக்தியே கெடுமப்பா

இறைவன் பெயரையே மனிதன் கெடுப்பானப்பா!!!

இறைவன் பெயரைச் சொல்லி அப்பனே அறிந்தும் கூட பாவம் செய்துவிட்டு இறைவன் மீது பழி போடுவானப்பா!!!
அப்பனே இதுதான் கலியுகமப்பா!!!

கலியுகத்தில் வாழ வேண்டுமென்றால் அப்பனே நல் மனதே!!! நல் மனதை போதுமானதப்பா!!!...

இறைவன் தேடிக் கொண்டிருக்கின்றானப்பா!!!! ஒவ்வொருவரையும் கூட அப்பனே நல் மனது யாருக்காவது இருக்கின்றதா அவனை உயர்த்தி விடுவோம் என்று!!!

ஆனாலும் அப்பனே பேராசைகளப்பா!!! பேராசைகள்.. அப்பனே மனிதனுக்கு அவை இவை என்றெல்லாம் அப்பனே
ஆனாலும் அவையெல்லாம் எவை என்று எதிர்பார்க்காத அளவிற்கு கூட மாயையில் சிக்கிக் கொண்டு அப்பனே நிச்சயம் மீள முடியாத அளவிற்கு கூட வருத்தங்கள்...

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே தன் நிலைமைக்கு தானே காரணமே என்கின்றார்களே அதனால் சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே... நாம் யார்??? அறிந்தும் கூட எதை செய்தோம் பின் அறிந்தும் கூட எதைச் செய்யாமல் இருந்தோம் என்றெல்லாம் அப்பனே தன் கடமையை சரியாக செய்தாலே போதுமானதப்பா!!! அப்பனே முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் அப்பனே ஆசை தான் அனைத்திற்கும் காரணம் என்று அப்பனே அறிந்தும் அறிந்தும் ஞானிகள் கூட!!!

ஆனாலும் அதைத்தான் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்... ஆசைகளை அப்பனே அறிந்தும் கூட

இதனால் அப்பனே நல்வழி அப்பனே நல் எண்ணங்கள் அப்பனே நல் எண்ணங்கள் இருந்தாலே போதுமானதப்பா.. இறைவன் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இன்னும் அப்பனே கலியுகத்தில் வருத்தங்கள் தானப்பா நோய்கள் தான் அதிகமாகுமப்பா அப்பனே கண்டங்கள் கஷ்டங்கள் அப்பனே வறட்சிகள் இன்னும் தோன்றுமப்பா!!!

ஆனால் அப்பனே மனிதன் திருந்திய பாடு இல்லை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அப்பனே மனிதன் திருந்தினால் மட்டுமே அப்பனே கிரகங்களும் நன்மை செய்யும் அப்பனே நட்சத்திரங்களும் நன்மை செய்யும் அப்பனே அனைத்து ஜீவராசிகளும் நன்மை செய்யுமப்பா

ஆனால் மனிதன் திருந்தவில்லை என்றால் அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே மனிதன் தான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே

அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் மனிதன் தான் அதாவது அனைத்திற்கும் காரணம் யான் தான் இறைவன் என்று கூட அறிந்தும் கூட யானே என்று சொல்லி கொண்டு இருப்பான் அதாவது இது கலியுகத்தில் நடக்கத்தான் போகின்றது அதனால் தான் அப்பனே இறைவன் நிச்சயம் மனிதர்களை விட்டு விட்டால் நிச்சயம் நல் எண்ணங்கள் இல்லாமல் பொய் பொறாமைகள் இன்னும் பின் உலகத்தையே அழித்துவிடுவான் என்று தான்.. அப்பனே நிச்சயம் இறைவனே கஷ்டத்தை அப்பனே ஏற்படுத்துகின்றான் அப்பா

அதை தெரியாமல் மனிதன் அவை இவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தான் திருந்தாமல் அப்பனே ஒன்றும் நடக்கப்போவதில்லை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே

இதனால் அப்பனே அனைத்திற்கும் காரணம் இறைவன் அப்பனே இறைவனே அனைவரையும் படைத்தான்

ஆனால் அப்பனே படைத்தவனுக்கே.. வேதனையப்பா அதாவது இறைவன் சந்தோசமாக அதாவது அப்பனே ஒரு தாய் தந்தைக்கு பிள்ளை அதாவது பிறக்கும் பொழுதே அறிந்தும் கூட நிச்சயம் பின் சந்தோசம் அடைவார்கள்!!! நிச்சயம் அறிந்தும் கூட !!

பல வழிகளில் கூட இவந்தனுக்கு (தன் குழந்தைக்கு)உயர்வுகள் உண்டு நிச்சயமாய் நல்வாழ்வு வாழ்வான் என்றெல்லாம்

அதேபோலத்தான் அப்பனே இறைவனும் மனிதனை படைக்கின்றான் நிச்சயம் நல்வாழ்வு வாழ்வான் என்றெல்லாம் எண்ணி எண்ணி...

ஆனாலும் மனிதன் போக்கை பார்த்தால் அப்பனே இறைவனே ஏன் ?? மனிதனை படைத்தோம்??? என்றெல்லாம் அப்பனே வேதனை!!!! 

இதனால் அவ் வேதனை உங்களுக்கே இன்னும் கஷ்டங்கள் ஏற்படுத்துகின்றது என்பேன் அப்பனே

இதனால் அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே கிரகங்களையும் கட்டுப்படுத்தலாம் நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தலாம் எப்படி என்றால் அப்பனே

நிச்சயம் அப்பனே மனது மனது தூய்மையாக இருத்தல் வேண்டும் என்பேன் அப்பனே முதலில்...அவ் மனத்தூய்மை இல்லை என்றால் அப்பனே எதைச் செய்தாலும் தோல்விகள் ஏற்படுமப்பா அப்பனே அறிந்தும் கூட

இதனால் அப்பனே நல் மனதாக அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் கலியுகத்தில் அப்பனே அதாவது கலியுகம் என்பதை விட நோய்கள் யுகம் !! அழியும் யுகம் என்றெல்லாம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

ஆனால் திருந்திய பாடு இல்லை அப்பனே

அவ்வாறு திருந்தாவிடில் அப்பனே நிச்சயம் அப்பனே யாங்களே கஷ்டங்களைக் கொடுத்து அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் அதாவது ஒரு வகுப்பில் ஆசிரியன் பாடம் நடத்திக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம் ஆனாலும் ஒருவன் ஒருவன் நன்றாக படிப்பான் ஆனால் மற்றொருவனோ இன்னும் இன்னும் எதனை எதனையோ நோக்கி நோக்கி !!??!....

 ஆனாலும் அப்பனே அவனை திருத்த ஒரே வழி தானப்பா.... அப்பனே இதனால் அடித்து அப்பனே திருத்தி அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய நிச்சயம் பின் முன்னுக்கு வந்து விடுவான்

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் திருந்தவில்லை என்றால் அப்பனே பின் கஷ்டங்களைக் கொடுப்பதை தவிர வேறொன்றும் இல்லையப்பா

சொல்லி விட்டேன் அப்பனே

இதனால் அனைவருக்குமே அதாவது இறைவனே கஷ்டங்களை கொடுக்கின்றான் அப்பனே

ஏன் எதற்காக என்று சிந்தித்துள்ளீர்களா??? அப்பனே!!!

அவ் கஷ்டங்களுக்கு என்ன காரணம் என்று யாருமே அறிவதில்லை என்பேன் அப்பனே

ஆனால் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று இறைவனிடத்தில் அப்பனே

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் தாம் தாம் செய்த வினைக்கு அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் வருகின்றதப்பா

அப்பனே இதன் தன்மையை உணர்ந்து தான் அப்பனே ஞானி ஒருவன் இருந்தான் அப்பா

அதாவது (ஓதி)மலையின் அருகே அப்பனே நிசிஷ்ட சுவாமிகள் என்றே!!!!

ஆனாலும் அப்பனே அவந்தனும் அறிந்தும் அறிந்தும் கூட தற்போது ஓதிமலை என்றே!!!! ஆனாலும் அதன் அடியிலே கூட (அடிவாரத்தில்) அப்பனே ஆனாலும் அவந்தன் சொல்லிக் கொண்டே வந்தான் அப்பா கலியுகத்தைப் பற்றி!!!!

ஆனாலும் ஊர் ஊராகச் சென்றானப்பா!!! ஆனாலும் கலியுகத்தில் அறிந்தும் அறிந்தும் இப்படி நடக்கப் போகின்றது அறிந்தும் கூட திருந்துங்கள் திருந்துங்கள் என்று...

ஆனாலும் மனிதர்கள் அவனைப் பார்த்து இவன் பைத்தியக்காரன் நிச்சயமாய் நம் தன் இடத்தில் (நம்மிடம்) பணம் இருக்கின்றது இவனை வைத்து வாழ்ந்திடுவோம் என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் அவன் அங்கும் இங்கும் செல்வானப்பா அப்பனே இங்கிருந்து பழனி தன்னிற்கும் அப்பனே இன்னும் பல பல மருதமலைக்கும் அப்பனே இன்னும் பல வழிகளிலும் கூட அறிந்தும் கூட அப்பனே அறிந்தும் உண்மைகள் கூட அதாவது மலைகளில் ஓடி ஓடி அதனால் அப்பனே அவந்தன் பின் அதாவது நிர்வாணமாகவே (முற்றும் துறந்த நிலை) ஆகிவிட்டான் அப்பனே

ஏன் எதற்கு என்றால் நிச்சயம் கலியுகத்தில் இவ்வாறெல்லாம் கஷ்டங்கள் வருகின்றது என்பதை எல்லாம் சொல்ல மனிதர்களுக்கு நிச்சயம் இப்படி சொன்னாலும் நிச்சயம் கேட்பார்களா என்று

ஆனாலும் அப்பனே ஓடோடி அனைவருக்கும் சொன்னானப்பா

ஆனால் யாருமே திருந்திய பாடு இல்லை

ஆனாலும் அப்பனே இவந்தனை பைத்தியக்காரன் இவன் அறிந்தும் கூட பின் அதாவது இவன் சொல்லிய வார்த்தைகள் எவ்வாறு என்பதை எல்லாம் காறியும் துப்பினர் மனிதர்கள் அப்பனே.... இதனால்தான் அப்பனே இவ்வுலகத்தில் நல்லதை சொன்னால் அப்பனே காறியும் துப்புவார்கள் அப்பனே

இப்பொழுது அப்பனே இறைவனே நேரடியாக இறைவனே அறிந்தும் கூட ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன் அப்பனே இறைவனே நேரில் வந்து யான் இறைவன் என்று சொன்னாலும் அப்பனே நிச்சயம் இறைவனா நீ என்றெல்லாம் அப்பனே நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்களப்பா!!!!!

அதனால்தான் மறைமுகமாகவே இருக்கின்றான் அப்பனே இறைவன் அப்பனே எங்கெங்கு எப்பொழுது எப்படி இருக்க வேண்டும் என்று மனிதன் இருந்து விட்டாலே போதுமானதப்பா அப்பனே நிச்சயம் வெற்றிகள் தானப்பா

அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதனால் பின் மனிதனிடத்திலே அனைத்து சக்திகளும் உண்டப்பா அனைத்து சக்திகளுடன் தான் அப்பனே இறைவன் கூட அப்பனே பிறக்க வைக்கின்றான் அப்பனே

ஆனாலும் அவ் சக்திகளை வீணடித்து விடுகின்றான் அப்பனே மனிதன்... ஆனாலும் வீணடித்து பின்பு அப்பனே பின் சக்திகள் போய்விடும் பொழுது அப்பனே கஷ்டங்கள் நிரம்பி வழியுமப்பா

அப்பொழுது மீண்டும் வருகின்றான் இறைவனிடத்தில்!!!!

இறைவன் என்ன செய்வான்???

அப்பனே  நிச்சயம் சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!! தன்னிடம் சக்திகள் அப்பனே நிச்சயம் அப்பனே அது தன் நிச்சயம் ஓர் 13 வயதிலிருந்தே ஆரம்பமாகிவிடும் என்பேன் அப்பனே

நிச்சயம் அப்பனே அதில் ஒரு பின் அறிந்தும் கூட முப்பான்  இரு வரை ( 32 வயது வரை) அப்பனே அவ் சக்தி அதி வேகமாகவே அப்பனே அதாவது நெற்றியின் அருகே சுற்றிக்கொண்டே இருக்கும் அப்பனே

அப்பொழுது நீ என்ன நினைக்கிறாயோ அது தான் அப்பா வாழ்க்கையின் பிற்பகுதி சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

இதனால் அவ் வயதுகளில் அப்பனே இறைவனை தியானித்தல் அப்பனே இறைவன் சிந்தனையில் இருத்தல் அப்பனே பின் உதவி செய்தல் அப்பனே இவ்வாறாக இருந்தால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே அடுத்த வாழ்க்கையும் கூட அப்பனே சரியாகிவிடும் என்பேன் அப்பனே

அப்படி இல்லாமல் அப்பனே எதை எதையோ செய்து கொண்டு வந்தால் அப்பனே அதற்கு தண்டனையாக முப்பானுக்கு மேல் (30 வயதிற்கு மேல்) அப்பனே நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும் அப்பனே... இதனால் தான் அப்பனே கஷ்டங்கள் அப்பனே

சிறுவயதில் இருந்தே முப்பான் வரை அப்பனே அதாவது பின் அறிந்தும் கூட 13 வயதிலிருந்து அவ் சக்தியானது அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ஆனால் கஷ்டங்கள் எதை என்று கூட கஷ்டங்கள் படுகின்றவர்கள் அப்பனே நிச்சயம் எதன் மீதும் நாட்டம் செல்லாதப்பா நிச்சயம் அறிந்தும் கூட

இதனால் அப்பனே அதி வேகமாக சுழல்கின்ற பொழுது அப்பனே அப்படியே சேமித்து வைத்து அப்பனே அறிந்தும் கூட முப்பான் மேல் அப்பனே அது தன் அப்பனே அமைதியாக விடும் அப்பா

பின்பு இவந்தன் உயர்ந்து விடுவானப்பா... இப்படித்தான் நடக்குமப்பா

இதனால் அப்பனே அறிந்தும் கூட ஆனால் அதற்கும் பின் அதாவது நெற்றியில் இருக்கும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே.. அதற்கும் இறைவனுக்கும் பல சம்பந்தங்கள் உண்டப்பா!!!!

இன்னும் இறைவனை நோக்கி நோக்கி போகும்பொழுது அது அதிவேகமாக சுற்றுகின்ற பொழுது அப்பனே இன்னும் அப்பனே பின் உடம்பில் உள்ள அப்பனே அறிந்தும் கூட பல வகைகளில் கூட ஆரோக்கியங்கள் இன்னும் இன்னும் பெறுமப்பா 

இதனால் அப்பனே சக்திகள் மனிதரிடத்திலே.... ஆனாலும் அதை வைத்துக் கொண்டு வீணாக்கி விடுகின்றான் மனிதன்... இதனால் தான் அப்பனே முப்பான் மேல் பல வகையிலும் கூட கஷ்டங்கள் அப்பனே யான் பல மனிதர்களை பார்த்து விட்டேன் அப்பனே

ஆனாலும் இவந்தன் (ஓதி மலை ஞானி)பல மனிதர்களுக்கு எடுத்துரைத்தான் அப்பனே வீடு வீடாக சென்று அப்பனே ஆனாலும் நல்லதையே உபதேசித்தான் என்பேன் அப்பனே

ஆனாலும் யாருமே கண்டு கொள்ளவில்லை என்பேன் அப்பனே இவன் பைத்தியக்காரன் இவன் வந்தாலே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட பின் அதாவது கதவை அப்படியே மூடி விடுவார்கள் என்பேன் அப்பனே

இதுதானப்பா கலியுகத்தில் நல்லோர்களை பார்த்தால் அப்பனே நிச்சயம் இப்படித்தான் அப்பா ஏளனம் செய்வார்கள் அப்பனே

ஆனால் தீயோர்களை பார்த்தால் அப்பனே அப்படியே ஏற்றுக் கொள்வார்களப்பா அறிந்தும் கூட இப்படித்தான் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே

இன்னும் அப்பனே தன் சுயநலத்திற்காக அப்பனே பணங்கள் சம்பாதிப்பதற்காகவே அப்பனே இன்னும் இன்னும் அப்பனே மனிதன் பொய் சொல்வான் அப்பா பக்திக்குள் வந்து அதாவது அப்பனே இன்னும் கூட இறைவன் பார்க்கவா போகின்றான் ?? என்று அப்பனே பக்திக்குள் நுழைந்து அதை இதை என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்வானப்பா

ஆனால் ஒன்று கூட உண்மை இல்லையப்பா

அதை அவர்களை நம்பி நம்பி போனவர்களுக்கும் கூட அப்பனே நிச்சயம் அவனே ஒரு தரித்திரன் அப்பனே!!!!....  அதனால் அப்பனே நீங்களும் சிக்கிக் கொள்வீர்கள் கர்மத்தில் அப்பனே!!!!

இதனால் அப்பனே உண்மை பொருளை அப்பனே உண்மை பொருள் இறைவன் தானப்பா இவ்வுலகத்தில்!!!

இறைவனை நம்பினால் நிச்சயம் அவ் சக்தி அப்பனே  நிச்சயம் அப்படியே தேங்குமப்பா எப்பொழுது மனிதன் அதாவது அப்பனே எப்பொழுது ஒருவன் பக்தன் ஆகின்றான் என்றால் அப்பனே அறிந்தும் கூட அதாவது பின் காதலித்து திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று அப்பனே அறிந்தும் கூட இவையெல்லாம் பின் இறைவனை அதாவது அறிந்தும் கூட ஏதாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று அப்பொழுதுதான் வருகின்றானப்பா

அப்பொழுது என்ன தெரியுமப்பா முதலில்!!!!

தெரியாதப்பா!!!

ஆனாலும் தன் சுயநலத்திற்காக எதை எதையோ செய்வான் அப்பனே எழுதுவான் அப்பனே இன்னும் பொய் பிரச்சாரத்தை!!!

இப்படித்தான் அப்பனே பல சுவடிகளையும் அழித்து விட்டான் அப்பனே காசுகளுக்காக!!!

யாங்கள் எழுதி வைத்தோம் அப்பனே இன்னும் சிறப்பாகவே தஞ்சை (தஞ்சாவூரில்) தன்னில் கூட அப்பனே நிச்சயம் தஞ்சை பின் பெரிய கோயிலில் கூட அப்பனே பல வகையிலும் கூட!!!!(தஞ்சை பெருவுடையார் பிரகதீஸ்வரர்  ஆலயம்)

ஆனாலும் அங்கு இருக்கும் பின் அடியவர்களே அப்பனே அதை தன் எங்கேயோ விற்றுவிட்டு அப்பனே காசுகளாக்கி இப்பொழுது அப்பனே அறிந்தும் கூட அவர்கள் கூட உச்சத்தில் இருக்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே இதனால்தான் அப்பனே மனிதனை கண்டாலே சித்தர்கள் எதை என்றும் அறிய அறிய காறியும் துப்புகின்றார்கள் அப்பனே

ஏன் எதற்கு என்றால் அப்பனே..... மனிதன் அப்படியப்பா!!!!

அறிந்தும் கூட எப்படி வாழ்வது என்பதைக் கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே இதனால் தெரிந்து வாழ வேண்டும் அப்பனே

அதாவது தாய் தந்தையை மதியுங்கள் என்று அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் ஆனால் மதிப்பதே இல்லை அப்பனே

எப்படியப்பா??? அறிந்தும் கூட அதுவே ஒரு பாவம்தானப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட அவை மட்டும் இல்லாமல் அப்பனே தன் கடமையை செய்யுங்கள் அப்பனே அது மட்டும் இல்லாமல் அப்பனே பின் அறிந்தும் கூட கணவன் அப்பனே எவை என்று கூட மனைவிமார்கள் அப்பனே ஒற்றுமையாக இருங்கள் என்று கூட சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் அப்பனே

அப்பொழுது கூட இல்லையப்பா சண்டைகள் தானப்பா

அப்பனே முதலில் அப்பனே குடும்பத்தை மறந்து விட்டீர்கள் அப்பனே

அதை முதலில் காக்க வேண்டும் என்பேன் அப்பனே அதை காக்காமல் அப்பனே நீ சென்றாலும் அப்பனே அதாவது பின் ஒளிந்து கொண்டாலும் அப்பனே நீ எவை என்று கூட அறிந்தும் கூட பின் பக்தனாக வந்தாலும் அப்பனே இறைவன் ஏற்பதில்லையப்பா!!!!

ஒருவன் அப்பனே சன்னியாசி ஆகின்றான் அப்பனே அதாவது பிள்ளைகளை விட்டு அப்பனே பின் குடும்பத்தை விட்டு தாய் தந்தையரை விட்டு அப்பனே இறைவன் தான் என்று அப்பனே அனைத்தையும் செய்து விட்டு!!!!

இது எவ்வாறப்பா நியாயம்??????? அப்பனே!!!!

அப்பனே அவையெல்லாம் இறைவன் ஏற்க மாட்டானப்பா

அப்பனே இறைவனுக்கு தேவை நல் மனதே என்பேன் அப்பனே

ஆனாலும் இவை தன் கூட பின் அதாவது அவ் ஞானியை கண்டாலே யாருக்கும் பிடிக்கவே இல்லையப்பா!!! ஏன் எதற்காக அப்பனே ஆனால் இறைவன் அங்கு தான் இருக்கின்றானப்பா

அப்பனே பார்த்தாயா அப்பனே எதை என்றும் அறிய அறிய கலியுகத்தில் அப்பனே இறைவன் வந்து அப்பனே பின் நடமாடினாலும்  அதாவது அப்பனே நிச்சயம் பிடிக்காமல் போகுமப்பா

இதுதான் கலியுகமப்பா

அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அனைத்தும் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது மனிதனால் தான் உலகம் அழிந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே

நிச்சயம் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

மனிதன் எப்பொழுதெல்லாம் மாறுகின்றானோ அப்பொழுதெல்லாம் இயற்கை மாறும் என்பேன் அப்பனே.... இயற்கையை இறைவனாகவும் வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

என்னென்ன எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள் அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே இன்னும் விஞ்ஞானிகள் கூட பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே கண்டு கொள்ள முடியவில்லை!!!(பல ஆராய்ச்சிகள் செய்தாலும் கண்டுபிடிக்க முடியாது)

ஏன் எதற்காக அப்பனே அதாவது புவியின் அருகே வந்து கொண்டே இருக்கின்றான் சூரியன் என்பேன் அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் சொல்வேன் அப்பனே பல தத்துவங்கள் பல ரகசியங்கள் என்பேன் அப்பனே

அப்படி(சூரியன் நெருங்கி வர) வர வர வருத்தங்கள் தானப்பா எவை என்று அறிய அறிய இது ஈசன் கட்டளையப்பா

அப்பனே ஈசன் அப்பனே இன்னும் கூட அதாவது அப்பனே நிச்சயம் இயங்கிக் கொண்டே இருக்கின்றது அதாவது பூமி அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அதில் கூட அப்பனே அதாவது நிச்சயம் பின் இன்னும் அப்பனே நீங்கள் இப்படியே செய்து கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் ஈசன் சூரியனை தள்ளி விடுவான் அப்பனே.... நிச்சயம் அது அதாவது அருகே வரும் பொழுது அப்பனே பின் சூரியன் பூமியோடு உராய்ந்தால் அப்பனே... அவ்வளவுதான் அப்பனே!!! அறிந்தும் எதை என்று புரியப் புரிய அப்பனே!!!

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே ஆங்காங்கு அழிவுகள் அப்பனே இன்னும் அப்பனே அறிந்தும் கூட அக்னி மழையும் கூட அப்பனே பொழியும் அப்பா... அப்பனே வர வர!!!!

முதலில் இதை அதாவது பின் தன்னை தான் பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள் முதலில் பின்பு கஷ்டங்களை போக்கிக் கொள்ளலாம் அப்பனே

தன்னையே பார்க்க முடியவில்லை என்பேன் அப்பனே பின்பு குறைகளை கேட்கின்றீர்கள் அப்பனே எப்படிப்பா ??நியாயம் ???? அப்பனே

இதனால் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நடிப்பானப்பா அப்பனே அதாவது பக்திக்குள் நுழைந்து நடிப்பானப்பா அனைத்தும் என்னால் முடியும் என்பானப்பா

ஆனால் அப்பனே முடியாதப்பா!!! அவனுடைய வாழ்க்கையையே அவனால் பார்க்க முடியாதப்பா!!! இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் தான் அப்பனே அனைத்தையும் பின் பொய்களாக்கி கொண்டு வந்து விட்டானப்பா இறைவன் பெயரை சொல்லி சொல்லி!!!!

அப்பனே அறிந்தும் கூட இறைவன் பெயரைச் சொல்லியே அப்பனே பலியிடுவார்களப்பா... ஆனால் அறிந்தும் கூட இறைவன் தான் பலியிட சொன்னான் என்று இறைவன் மேலே பழி போட்டு விட்டால் பின் பாவம் எதை என்று கூட எந்தனை எப்படி சாரும் ??? என்பது மனிதனுடைய கணக்கப்பா!!!

இப்படியே நகர்ந்துவிட்டதப்பா!!!

ஆனால் பின் மனிதனோ பின் பலியிட்டு அதை தன் எடுத்து வந்து உட்கொள்வானப்பா

ஆனால் பழியோ இறைவன் மீது...

அப்பனே எப்படியப்பா இது நியாயமாகும்????? அப்பனே

அனைத்தும் இனி மேலும் அதாவது அப்பனே இப்படித்தான் நடக்கப் போகின்றது

ஆனாலும் அவ் ஞானி அப்பனே வலம் வந்து கொண்டே இருந்தானப்பா பல வழிகளிலும் கூட அப்பனே பல மலைகளில் ஏறி ஏறி ஆனாலும் அப்பனே ஒருவர் கூட நம்பவில்லை அதாவது ஏற்கவில்லை மனது அறிந்தும் கூட

இதனால் உண்மைகள் சொன்னாலே அப்பனே இவ்வுலகத்தில் கோபங்கள் தானப்பா இன்னும் இன்னும் அப்படியே எதை என்றும் அறிய அறிய அறிவியல் வழியாகவே உரைக்கின்றேன் அப்பனே

எப்படி எல்லாம் நிச்சயம்  அப்பனே அதாவது கஷ்டங்கள் ஏன் வருகின்றது என்றால் அப்பனே அதாவது அப்பனே 24 அப்பனே அறிந்தும் கூட அறிந்தும் உண்மைதனை கூட ஏன் என்று

ஆனாலும் அப்பனே 24 இல் ஒன்றை அப்பனே அதாவது ஒன்றை நிச்சயம் அப்பனே 24 துகள்கள் அடியோடு அறிந்தும் கூட உண்மைதனை கூட அப்பனே நிச்சயம் கண்களில் ஒரு ஓரத்தில் இருக்கும் அப்பா கருவிழியில் அப்பனே!!!!

அதைதன் நிச்சயம் அப்பனே பின் அதாவது சக்திகள் பின் அதாவது அறிந்தும் கூட உண்மைதனை கூட அப்பனே அதாவது யான் சொன்னேனே சக்திகள் அது பின் பலமாக சுற்றிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே நெற்றியில்

ஆனாலும் அப்பனே அது சக்திகள் எதை என்றும் அறிய அறிய நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அப்பொழுது பின் சுலபமாகவே அப்பனே பின் சுற்று பின் அதி வேகமாக சுற்றாதப்பா!!!!

(கண்ணின் கருவிழி இருக்கும் 24 அணு துகள்கள் 13 வயதிலிருந்து 32 வயது வரை அந்த சக்தி சரியாக சுற்ற வேண்டும் எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த நெற்றியை சுற்றும் சக்தி சுற்றாது அதனால் அதன் விளைவாக கண்ணின் கருவிழியில் இருக்கும் 24 துகள் சக்தி ஒன்றை இழந்து விடும்... அப்படி 24 இல் ஒன்று போய்விட்டால் 23 துகள்கள் மட்டுமே இருந்தால் கஷ்டங்கள் அதிகம் ஆகிவிடும் கண்ணின் கருவிழியில் 24 துகள் சக்திகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் அதற்கு சித்தர்கள் அமைத்த திருத்தலங்களுக்கெல்லாம் சென்று கொண்டே இருக்க வேண்டும் இறை சிந்தனையிலே இருக்க வேண்டும்)

அப்பொழுது அறிந்தும் கூட ஒன்று விலகிப்போகுமப்பா இருபான் மூன்று ஆகிவிடுமப்பா (23)

 அப்பொழுது நிச்சயம் கஷ்டங்கள் தானப்பா சொல்லிவிட்டேன் அப்பனே

ஆனால் மீண்டும் அதை எடுக்க அப்பனே எப்படி போராட வேண்டும் எப்படி அப்பனே!!!!

பக்திகள் காண்பிக்க வேண்டும் அப்பனே எங்கெல்லாம் எதை என்று கூட சக்திகள் உள்ளதோ (சித்தர்கள் உருவாக்கிய திருத்தலங்கள் சக்தி உள்ள திருத்தலங்கள்) என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே

ஆனாலும் அப்பனே இவ்வளவு பாழடைந்த திருத்தலங்கள் இருக்கின்றது அப்பனே இவ்வுலகத்தில்

ஆனாலும் அப்பனே புதிய புதிய திருத்தலங்களை எல்லாம் ஏற்படுத்தி அப்பனே காசுகளுக்காகவே அப்பனே.... அதாவது அப்பனே பின் என்னை கூட !!!!!......??????????????

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூறிய புரிய இங்கு யான் என்ன சொன்னேன் என்றால் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே அனைத்தும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இருப்பதை வைத்துக் கொண்டு அப்பனே இன்னும் உயர்வாக வாழத் தெரியாமல் அப்பனே புதிது புதிதாக மனிதன்....

ஆனாலும் கண்டுபிடிப்புகள் அழிவை நோக்கியே செல்கின்றது அப்பா...

ஆனாலும் அப்பனே யாங்கள் திருத்தலங்களை அமைத்தோம்!!!!! எங்கெல்லாம் சக்திகள் நவகிரகங்கள் பின் நட்சத்திரங்கள் அப்பனே இன்னும் அப்பனே எங்கெல்லாம் உள்ளது என்பதை கூட ஆனாலும் இப்பொழுது அவையெல்லாம் அத் திருத்தலங்கள் எல்லாம் அழிவு நிலைகளில் செல்கின்றதப்பா

(சித்தர்கள் அமைத்த திருத்தலங்கள்)

அவை ஏன் மனிதனுக்கு எட்டவில்லை???? அப்பா ???

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே

ஆனாலும் அப்பனே அங்கு தான் அப்பனே கர்மா வினைகள் நீங்குமப்பா அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் புதுப்புது திருத்தலங்கள் எதற்காக ???? அப்பனே!!......

ஆனாலும் அப்பனே ஒரு எவை என்று கூட பூசைகள் கூட நடக்காத அளவிற்கு அப்பனே திருத்தலங்கள் உள்ளது என்பேன் அப்பனே

(ஒருவேளை ஒருகால பூஜை கூட நடக்காத திருத்தலங்கள் இருக்கின்றது)

அவற்றை எல்லாம் யார் ??? காப்பார்கள்????? அப்பா !!!!!

அதனால்தான் மனிதனின் நாட்டமோ !? பித்தலாட்டமப்பா!!!!

 பொய்களப்பா வரும் காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே

அதாவது அப்பனே பின் ஏற்கனவே அப்பனே அமைத்து விட்டார்கள் திருத்தலங்கள் அப்பனே ஆனால் அதை சரி செய்யாமல் ஏனப்பா ???? புதிதாக கட்டுகின்றீர்கள் அப்பனே???

யாராவது விளக்கங்கள் கூறுங்கள் அப்பனே!!!!!

நிச்சயம் கூற முடியாதப்பா

எங்களுக்கே அறிந்தும் கூட அறிந்தும் உண்மைதனை கூட இதனால் அப்பனே எப்படியப்பா ???

அதனால் திருத்தலத்தை கட்டி விடுவான் அப்பனே கஷ்டங்கள் வந்து விடும் அப்பனே

ஏனப்பா கஷ்டங்கள் வந்து விடுகின்றது என்றெல்லாம் அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே மீண்டும் என்னை கேட்பான் அப்பனே

கஷ்டங்கள் அதாவது!!!.......

உந்தன் மீது அன்பு என்பேனே... அதனால்தான் கட்டினேனே!!! என்று

அப்பனே அவையெல்லாம் பொய்களப்பா

எந்தனுக்கு போதுமானதப்பா மனம் ஒன்றே போதுமப்பா அன்பு ஒன்றே யாங்கள் எதிர்பார்க்கின்றோம் அப்பனே....அவ் அன்பை நிச்சயம் இறைவனிடத்தில் வைத்தாலே போதுமானதப்பா

முதலில் அப்பனே மனதில் அப்பனே திருத்தலங்கள் கட்டுங்கள் கட்டுங்கள் அப்பனே

பின்பு பார்ப்போம் அப்பனே

யாங்கள் இருக்கின்றோம் அப்பனே அறிந்தும் அறிந்தும்!!!!!

எங்களை அப்பனே அதாவது யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே!!!!!

ஆனால் உங்களைத்தான் பார்க்க ஆளில்லை !?!?!?!?!?!?!?!?! என்பேன் அப்பனே

ஆனாலும் எங்களை வைத்து அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே. யாங்கள் தான் அதாவது திரும்பத் திரும்பச் சொல்கின்றேன் அப்பனே..

"""""""".யாங்கள் தான் உங்களுக்கு ஈய (கொடுக்க) வேண்டுமே தவிர!!!!............

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எவை என்று கூட எங்களுக்கு பிச்சை இட அப்பனே எவை என்று புரிய புரிய... பின் யாங்கள் எதையும் கேட்பதில்லை உங்களிடத்தில் என்பேன் அப்பனே!!!

ஆனால் அவரவர் அப்பனே எதை என்று அறிய அறிய அன்புக்குரியவற்றை செய்தால் நிச்சயம் அப்பனே ஏற்றுக்கொள்வோம் அப்பனே

ஆனாலும் அறிந்தும் கூட இதனால் அப்பனே அதாவது தற்பொழுது ஓதிமலை அறிந்தும் கூட அதன் அருகே அவந்தன் உட்கார்ந்து கொண்டான்

முருகனை நோக்கி முருகா நியாயமா????

அறிந்தும் கூட உனையே நினைத்துக் கொண்டு அதிபலமாகவே மக்களுக்கு பரப்பினேன்...

ஆனால் யாருமே நம்பவில்லை அறிந்தும்  எதை என்று புரிய புரிய இதனால் ஏன் ? எதற்கு? என்னை படைத்தாய் ??

நிச்சயம் ஏதோ ஒன்றை அறிந்தும் கூட எதை என்று கூட என்ன பயன்???

ஏதோ உண்ண உணவையும் கொடுத்தாய்
ஆனாலும் அறிந்தும் கூட என்ன பயன்??? மனிதனாக எடுத்து வந்ததற்கு

ஆனால் அவன் சொன்னான் அறிந்தும் கூட முருகா!! நீ முருகன் இல்லை சொல்லிவிட்டேன்!!! அறிந்தும் கூட!!! யான் என்ன தவறு செய்தேன்?? அறிந்தும் கூட!!!

இவ்வளவு கஷ்டங்களா இவ்வுலகத்தில் என்று

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே இன்னும் அதாவது கஷ்டங்கள் எப்பொழுதெல்லாம் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் உயர்வான இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்!!!!

ஆனாலும் அப்பனே அதைக் கூட மனிதனுக்கு தெரியவில்லையே அப்பனே இதுதான் மனிதனின் முட்டாள்தனம் என்பது அப்பனே

அதாவது அப்பனே பின் கஷ்டங்கள் வருகின்ற பொழுதெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவன் பின் உன்னை அதாவது இறைவனை நோக்கி சென்று கொண்டிருக்கிறாய் என்பது அர்த்தமப்பா

ஆனாலும் அப்பனே கஷ்டங்கள் வருகின்ற பொழுது அவை இவை என்று கூட அப்பனே அப்பொழுது நீங்களே பார்த்தீர்களா

அப்பனே இறைவனிடத்தில் போகின்றதற்கு நீங்களே தடுப்புச் சுவரையும் ஏற்படுத்தி க் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே

ஆனால் இது புரிவதே இல்லையப்பா மனிதர்களுக்கு அப்பனே

அப்பனே எதையும் எதிர்பார்க்காமல் அப்பனே அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய இறைவனை வணங்க வேண்டுமப்பா!!

எதிர்பார்த்து எதிர்பார்த்து பின் அறிந்தும் கூட அப்பனே இறைவனை வணங்கினால் அப்பனே நிச்சயம் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா

இதனால் அவ் ஞானியோ முருகா அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய கடைநாளும் வந்துவிட்டது எந்தனக்கு...

ஆனால் எந்தனுக்கு ஆள் கூட இல்லை.. எதை என்று புரிய புரிய அதாவது சொந்த பந்தங்களும் இல்லை அனாதையாகவே யான்

ஆனாலும் நீயும் இருக்கின்றாய் என்று நினைத்தேன் ஆனாலும் இல்லை முருகா அறிந்தும் கூட

ஆனால் யான் சுற்றியது வீண்!! அங்கும் இங்கும் அலைந்தது வீண் அறிந்தும் கூட!!! இதனால் அறிந்தும் நீ பொய்யே!! இறைவன் பொய்யே என்று!!

ஆனாலும் ஓடோடி வந்தானப்பா முருகன் குழந்தை ரூபம் எடுத்து!!!!

ஆனாலும் அறிந்தும் கூட ஞானி ஆனாலும் வந்தது முருகன் என்று புரிந்து கொண்டானப்பா

ஆனாலும் அறிந்தும் கூட முருகா என்று அழைத்தான் அறிந்தும் கூட!!!

ஆனாலும் அக் குழந்தையோ முருகாவா??!!!?!?!?!? அறிந்தும் கூட!!!யார்??? அறிந்தும் உண்மைதனை கூட முருகா என்பது நிச்சயம் என் பெயர் இல்லை என்று...அக் குழந்தை கூட...

ஆனாலும் அவன் தெரிந்து கொண்டானப்பா இதுதான் அப்படி அறிந்தும் கூட பல கஷ்டங்கள் பட்டு பட்டு எதை என்றும் அறிய அறிய இறைவனையே நினைத்து கொண்டவர்களுக்கு அப்பனே இறைவனே வந்தாலும் பின் தெரியுமப்பா இறைவன் தான் என்று

ஆனாலும் அப்பனே நிச்சயம் மாயையில் சிக்கிக் கொள்கின்றான் அப்பனே அதாவது மனிதனுக்கு அப்பனே அதாவது இறைவன் நேரில் காட்சி தந்தாலும் அப்பனே இறைவன் பேசினாலும் அப்பனே நிச்சயம் கேட்காதப்பா...

பின் அறிந்தும் கூட பின் அதாவது இதனால் அப்பனே முருகன் நிச்சயம் இவன் தெரிந்து கொண்டான் என்று இதனால் அப்பனே மதியை மயக்கி அப்பனே அறிந்தும் கூட எதை என்று கூட செய்துவிட்டான் அப்பனே அவ் ஞானியை கூட!!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய புரிய ஆனாலும் மதி மயக்கியும் கூட முருகா!!! முருகா !!!!என்று அழைத்தான்

அப்பனே புரிந்து கொண்டீர்களா????

(இறைவன் மீது உண்மையான பக்தியையும் நல்ல எண்ணங்களையும் சதா இறைவனுடைய நினைப்பிலேயே இருந்தால் இறைவன் எத்தனை மாறு வேடங்கள் போட்டுக் கொண்டு வந்தாலும் இறைவனை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் இறைவன் நம்மை மதி மயக்கினாலும் இறைவனை நாம் பார்க்கவும் முடியும் அவருடன் அன்பு பாராட்டி விளையாடவும் முடியும்)

அப்பனே !!! எப்படி என்று அறிந்தும் கூட பக்தனாகலாம் என்பது!!! இது தானப்பா பக்தி!!!!!

இறைவன் மீதே அப்பனே அறிந்தும் கூட இறைவன் மீது பக்தி கொண்டு அப்பனே எப்பொழுதும் பின் இறைவன் நினைப்பு இருந்தால் தான் அப்பனே  பின் என்ன செய்தாலும் அப்பனே இறைவன் நிச்சயமாய் கண்ணுக்குத் தெரிவானப்பா!!! இதை இறைவனிடம் விளையாடலாமப்பா இறைவனிடத்தில் நீங்கள் சண்டைகளும் இடலாமப்பா!!!!!

ஆனால் இறைவனிடத்தில் சண்டையிடும் அளவிற்கு உங்களிடத்தில் தகுதிகள் இல்லையப்பா!!!

அப்பனே இடுங்கள் பார்ப்போம்..யான் நியாயம் நீதி தர்மத்தை கடைபிடித்தேன் அனைவருக்குமே சேவை செய்தேன் என்று

ஏன் எந்தனுக்கு இந்த நிலைமை என்று..

ஆனால் அவ் பக்தன் கேட்டான் அதாவது அவ் ஞானி கேட்டான் முருகா நிச்சயம் யான் எதுவுமே அறிந்தும் எதை என்று அறிய அறிய தவறுகள் செய்யவில்லை ஏன் இந்த பிறப்பு என்று

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட ஏதாவது அப்பனே அப்பொழுதெல்லாம் அரசன்!!(அப்போதைய காலகட்டத்தில் அரசர்கள் ஆட்சி காலம்)

இதனால் சரி என்று இவந்தனுக்கு கடைசியில் ஒரு வாய்ப்பைக் கொடுப்போம் என்று முருகன் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் (அவ் நாட்டை ஆண்ட)அரசன் கனவில் பின் அறிந்தும் கூட முருகன் என்று நிச்சயம் அதாவது என் (ஓதி)மலைக்கு அருகே வா அப்பொழுது அங்கு ஒரு ஞானி இருப்பான் அவன் என்ன சொல்கின்றானோ அதைக் கேள் என்று அரசனுடைய கனவில் சென்று முருகன் கூறி விட்டான்!!!

ஆனாலும் அரசனும் வந்தானப்பா அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவனைப் பார்த்து ஆனாலும் பின் எதை என்றும் புரிய புரிய...

இவந்தனையா முருகன் சொன்னான் !!...நிச்சயம் இல்லை அறிந்தும் என்பதையெல்லாம்

ஆனாலும் நிச்சயம் மக்கள் கூடி விட்டனர் அங்கு!!!

ஆனாலும் அறிந்தும் கூட ஒருவன் சொன்னான் இவன் பிச்சைக்காரன் அறிந்தும் கூட இவன் பைத்தியம் எதை என்று புரிய புரிய ஆனாலும் புரியாமல் அறிந்தும் கூட அனைவரிடத்திலும் கூட எதை எதையோ சொல்லி இவந்தன் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றான் என்று!!!

ஆனாலும் அரசனோ அறிந்தும் கூட அப்பனே அப்பொழுது மனிதர்கள் பேச்சை கேட்டானப்பா

ஆனாலும் அறிந்தும் கூட பின் ஆனாலும் அறிந்ததும் உண்மையென கனவில் வந்ததைக் கூட மறந்துவிட்டு ஆனால் மனிதர்கள் சொன்னதை கேட்டானப்பா...

இது போலத்தான் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே நல்லோர்கள் சொல்வார்களப்பா இறைவன் அங்கு இருக்கின்றான் என்று இங்கு இருக்கின்றான் என்று ஆனால் மற்றவர்கள் அப்பனே கெடுத்து விடுவார்களப்பா

இதுதான் உண்மை அப்பனே!!!!!

(முருகனே அதாவது இறைவனே வந்து கனவில் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் மனிதர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்த அரசன் அந்த தவறை செய்தார் இதிலிருந்து நமக்கும் ஒரு பாடம் மறைமுகமாக உள்ளது அதாவது குருநாதர் சித்தர்கள் வந்து தம் தன் வாக்குகளில் எத்தனையோ விஷயங்களை கூறினாலும் மனிதர்கள் மனிதர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்த பரிகாரம் செய்யலாம் இந்த பரிகாரம் செய்யலாம் என்று உண்மையை உணராமல் நடந்து கொண்டால் மேலும் கஷ்டங்கள் தான் வரும் என்பதை நமக்கு இந்த இடத்தில் உணர்த்துகின்றார்)

இதனால் அவ் ஞானியும் அறிந்தும் உண்மைதனை விளக்க நிச்சயம் அறிந்தும் கூட பின் அரசன் இவனை பிடியுங்கள் இவனை கொன்று விடுங்கள் என்று

ஆனாலும் அறிந்தும் கூட அவ் ஞானி தெரிந்து கொண்டான்.... முருகா எதை என்று புரியப் புரிய முருகனா நீ எதை என்று புரிய புரிய இவ்வளவு பக்தி உள்ள அதாவது கடைநாள் கூட நிம்மதியாக சாகலாம் என்று நினைத்தேன்
ஆனாலும் அறிந்தும் கூட

அதாவது அப்பொழுது சொன்னான் அவ் அரசன் அறிந்தும் உண்மைதனை கூட நிச்சயமாய் முருகனையே நீ ஏசுகின்றாயா??!!! நிச்சயம் பின் இப்பொழுதே உன்னை சாகடிக்கின்றேன் என்று அறிந்தும் உண்மைதனை கூட

ஆனாலும் அப்பனே நிச்சயம் சிறைபிடித்தனர் அவந்தனைக் கூட

அப்பனே ஆனாலும் அறிந்தும் உண்மைதனை தெரியாமல் அப்பனே இப்படித்தான் அப்பனே அழிந்து போகின்றனர் அப்பனே மனிதர்கள் அப்பனே

அழிந்து போகாமல் அதாவது தான் மட்டும் அழிந்து போகாமல் மற்றவர்களையும் அழித்து அப்பனே மறு பிறவியாகவே அப்பனே கொண்டு வந்து விடுகின்றார்கள் அப்பனே

இதனால் அவ் ஞானியோ அமைதியாக ஆனாலும் பின் சாவுதான் ஆனாலும் இவ் அரசன் மூலமாகவே சாகின்றோம் என்பதை கூட அறிந்தும் எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் அப்போது அப்பனே அதாவது எதிர் நாட்டு அரசன் அப்பனே படையெடுத்து வந்து அனைத்தும் அழித்து எதை என்றும் புரிய புரிய அப்பனே அதாவது இவந்தனை எதை என்று கூட அப்பனே அப்பொழுது எவை என்றும் அறியாமல் கூட நிச்சயம் உண்மைதனை கூட நிச்சயம் அவ் ஞானி சொன்னான்

அதாவது அனைவரையும் அழித்து விட்டான் அதனுள்ளே (அதற்குள்ளே)
ஆனாலும் அரசன் குடும்பத்தைக் கூட பின் அழித்து எதிர் நாட்டு அரசன் அனைத்தையும் பிடிக்க பார்த்தான்...

ஆனாலும் அவ் ஞானி இருந்தான்.....

அரசே யான் சொல்வதைக் கேள்!!!!

யாரும் அறிந்திடாது அறியும் முறையில் கூட யாருமே இதுவரை கேட்கவில்லை!!! நீ கேட்டால் நிச்சயம் அறிந்தும் கூட பல உண்மைகளைச் சொல்கின்றேன் நிச்சயம் உன் நாமம் நிச்சயம் அதாவது புண்ணியங்களாகி நிச்சயம் நீடூழி வாழ்வாய் என்பவை எல்லாம்!!!
மீண்டும் அரசாட்சி!!!

ஆனாலும் அதாவது எதை என்று உணர்ந்து உணர்ந்து உன் உன்னுடைய சாவு எதை என்றும் அறிய அறிய தீர்மானிக்கப்பட்டு விட்டது ஆனாலும் அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிய அறிய ஓர் நிலை இருக்கின்றது...

யான் ஒரு கல்லை வீசுகின்றேன் அங்கு போய் நிச்சயமாய் அமர்ந்து அமைதியாக தியானம் செய்!!!

ஆனாலும் நீ புண்ணியங்கள் பல செய்தவன் தான் பல வழிகளிலும் கூட அனைவருக்குமே நன்மைகள் செய்தவன் தான் ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் பல வழிகளிலும் கூட உன்னை அதாவது எதை என்றும் புரியாமல் கூட உன்னிடத்தில் உள்ள அரச சபையில் கூட தீமையை செய்து விட்டு பாவத்தை சம்பாதித்துக் கொண்டனர்

இதனால் அனைவருமே அழிந்து விட்டனர் இதனால் நிச்சயம் அறிந்தும் கூட ஏதாவது ஒன்றை ஏற்படுத்து என்று கூட நிச்சயம் அறிந்தும் கூட பின் கல்லை வீசினான் நிச்சயம் அறிந்தும் கூட ஒரு பெரிய நீர் நிலையில் அறிந்தும் கூட அங்கே விழுந்தது அக் கல்!!!

ஆனாலும் அவ் அரசன் அதை தன் பார்த்து அங்கே எல்லாம் செல்ல முடியாது நிச்சயம் அறிந்தும் கூட எப்படி அங்கு செல்ல முடியும் ??என்று

(பவானிசாகர் ஆறு குருநாதர் இங்கு நீர்நிலை என்று குறிப்பிடுவது அந்த ஞானி அனுப்பிய இடம் நடு ஆற்றுக்குள் இருக்கும் இடம் அங்கு அவருடைய தவ வலிமையால் கோட்டையாக கோட்டை கோயிலாக மாறி இருக்கின்றது)

ஆனாலும் அவ் ஞானி நிச்சயம் என் தவவலிமை எல்லாம் உந்தனுக்கு கொடுக்கின்றேன் தானமாக என்று நிச்சயம் பிழைத்துக்கொள் என்று நிச்சயம் அனுப்பினான் அறிந்தும் கூட

எதை என்றும் புரிய புரிய இதனால் பின் அறிந்தும் உண்மைதனை கூட அவ் நீர் நிலைகள் அவந்தனுக்கு (அரசனுக்கு) வழியும் விட்டது!!!!  அறிந்தும் எதை என்று அறிய அறிய நடுவில் சென்றான் தியானங்கள் செய்தான் நிச்சயம் பிரம்மாவும் விஷ்ணுவும் ஈசனும் இன்னும் பின் லட்சுமியும் அறிந்தும் கூட பல தேவாதி தேவர்களும் கூட அவனை ஆசீர்வதித்தார்கள்!!!
அறிந்தும் கூட அவர்கள் எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் பின் எதிர் நாட்டு அரசனோ எதை என்று புரிய புரிய எவை என்றும் ஆனாலும் அவன் இவ் நீர்நிலையில் சென்று விட்டான் ஆனாலும் இவ் நீர் நிலையில் கூட நிச்சயம் அனைத்தும் அழியச் செய்யுங்கள் அவை இவை என்றெல்லாம் அங்கேயே அறிந்தும் கூட

இதனால் அங்கேயே அறிந்தும் கூட ஆனாலும் நிச்சயம் அவந்தன் (அரசன்) பின் எண்ணங்களாகவே மனதில் நிச்சயம் இவ்வாறு இருந்தால் யாருமே அழிக்க முடியாது என்பது நிச்சயம் மனதில் கோட்டை கட்டினான் அதாவது இல்லம் போலே

இல்லம் போலவே அமைந்தது நிச்சயம் இதுதான் அப்பா தவ வலிமை!!!! அறிந்தும் கூட

(கோட்டை கோயில்)

இதனால் பிழைத்துக் கொண்டான் அப்பனே

ஆனால் மறுநாளே அறிந்தும் கூட நிச்சயம் எதை என்று புரிய  புரிய அப்பனே இதனால் எதை என்றும் அறிந்தும் கூட தன் ராஜ்ஜியம் நிச்சயம் அப்பனே இவந்தனுக்கே!!! வந்ததப்பா

இதனால் அப்பனே நிச்சயம் அவை எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அவ் ஞானியை நிச்சயம் அறிந்தும் கூட எதை என்றும் புரிய  புரிய பின் வந்து அடைந்தவுடன் நிச்சயம் அவ் ஞானியின் எதை என்று அறிய அறிய பின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு.... உன்னை யாருமே உணரவில்லையே எதை என்றும் புரிய புரிய..

அவ் அரசன் கேட்டான் ஞானியிடம் உந்தனுக்கு என்னதான் வேண்டும் என்று கேட்க

நிச்சயம் எதுவும் தேவையில்லை அறிந்தும் கூட

இதனால் என் சாவும் நெருங்கி விட்டது நிச்சயம் பார்ப்போம் என்று அடுத்த பிறப்பில் எதை என்றும் புரிய புரிய

இதனால் அப்பனே இப்பொழுதும் அவ் ஞானி நிச்சயம் ஓதி மலையின் அருகே அப்பனே தவம் செய்து கொண்டே இருக்கின்றானப்பா

பின் நல் எண்ணங்கள் பின்  அதாவது வருபவர்களுக்கெல்லாம் அப்பனே ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றானப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் தவவலிமையால் அவ் அரசனுக்கும் அறிந்தும் கூட பல சித்தர் ரகசியங்கள் தெரிந்ததப்பா இதனால் பல சித்தரகசியங்களையும் கூட அப்பனே அறிந்தும் கூட பரப்பினானப்பா!!!
இவ்வாறுதான் கலியுகத்தில் என்பவை எல்லாம் அப்பனே

அதுவும் கூட அப்பனே அறிந்தும் உண்மைதனை வெளிப்படுத்தினான் அப்பா

இதனால் அப்பனே மனதினுள்ளே என்னையும் அமைத்தானப்பா!!! பல சித்தர்களையும் அமைத்தானப்பா

அதனால் அப்பனே அப்படியே எதை என்றும் கூட தவ வலிமையால் அது தான் திருத்தலம் ஆகிவிட்டது அடியின் உள்ளே!!!

 (பவானிசாகர் ஆற்றின் அடியில் நீர்நிலை மட்டம் குறையும் பொழுது அந்த கோட்டை வெளியே தெரியும்) 

அப்பனே இது போலத்தான் அப்பனே நிச்சயம் இருக்க வேண்டுமே தவிர அப்பனே நிச்சயம் அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே பொய் சொல்லி ஏமாற்றி அப்பனே பிழைக்கலாகாது என்பேன் அப்பனே

அப்பனே பின் தான் தான் அதாவது ஐந்து அறிவு உள்ள ஜீவராசிகளும் தம் தன் வேலையை சரியாகவே செய்கின்றது என்பேன் அப்பனே

ஆனால் அப்பனே மனிதனே செய்வதில்லை என்பேன் அப்பனே

அப்பனே ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கும் அதாவது இவ்வுலகத்தில் பிறந்துள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கஷ்டங்கள் என்று ஒன்று இருக்கின்றது என்பேன் அப்பனே

ஆனால் மனிதன் மட்டுமே சோம்பேறி என்பேன் அப்பனே

மனிதன் மட்டுமே அப்பனே இறைவனிடத்தில் வாதாடுவான் அப்பனே எந்தனக்கு கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று

ஆனாலும் அப்பனே வாயில்லா ஜீவராசிகள் அப்பனே யாரிடம் கேட்கும் அப்பா?????

சிறிதளவாவது யோசித்தீர்களா??? அப்பனே

அதாவது மனிதன் இங்கு முட்டாள் ஆகின்றான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே

தன் கடமையை செய்யாமல் அப்பனே இறைவனிடத்தில் வந்து கை ஏந்தினால் எப்படியப்பா இறைவன் தருவான்??? அப்பனே

அதாவது தன் கடமையை செய்து கொண்டே இருந்தால் அப்பனே இறைவன் வருவானப்பா நிச்சயம் அப்பனே சித்தர்கள் யாங்கள் வருவோம் உங்கள் இல்லத்திற்கே வந்து அப்பனே நிச்சயம் ஆசிகள் தந்து உயர்த்தியும் வைப்போம் அப்பனே

இதனால் இத் திருத்தலத்திலும் எதை என்று அறிய அறிய யான் அழகாகவே நிற்கின்றேன் அப்பனே!!!!!!!!

(இந்த ஆலயத்தில் குருநாதர் இருக்கும் திருமூர்த்தம் புகைப்படமாக இணைக்கப்பட்டுள்ளது)

நிச்சயம் அப்பனே ஆனாலும் கண்டுகொள்ள ஆளே இல்லையப்பா!!!

அறிந்தும் கூட உண்மைதனை உணர்த்த ஆளே இல்லையப்பா!!!!

அப்பனே என்னுடைய பக்தர்களும் இருக்கின்றார்களப்பா ஆனாலும் அப்பனே அவை இவை என்று பெயருக்காக வாழ்கின்றார்களப்பா

அப்பனே பணத்தை சுருட்டுகின்றார்களப்பா அதுமட்டுமில்லாமல் புகழ் சேர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றார்களப்பா

ஆனாலும் அப்பனே இத்திருத்தலத்தை பற்றி எண்ணி பாருங்கள் அப்பனே

அதாவது மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே
பல பல பழமை வாய்ந்த திருத்தலங்கள் எல்லாம் இருக்கின்றது அப்பனே அதை எல்லாம் யார் ஒருவன் சரி செய்கின்றானோ அவனுக்கு இக்கலி யுகத்திலே அப்பனே நிச்சயம் இறைவன் காட்சி தருவான் அப்பனே நிச்சயம் இனியும் இப்படித்தான் செய்யப் போகின்றோம் அப்பனே!!!
ஆட்களை உருவாக்கி!!!

மனிதனை நம்பப் போவதில்லை!!!! பழைய திருத்தலங்களை எல்லாம்  யாங்களே அப்பனே வடிவமைத்து புதுப்பொலிவுடன் அப்பனே மனிதர்களை அப்பனே நிமிர்த்துவோம் அறிவுகளை கொடுப்போம் அப்பனே பின் எம்மை நம்பி வந்தவர்களை கூட மோட்ச கதியையும் கொடுப்போம் அப்பனே

அருள்கள் ஆசிகளப்பா !!! ஆசிகள் !!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

குருநாதர் நல்வாக்குகள் தந்த இந்த ஆலயம் பவானிசாகர் ஊருக்குள் கோட்டை கோயில் என்ற பெயரில் அமைந்துள்ளது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் இந்த ஆலயம் இயங்கி வருகின்றது.

இந்த ஆலயம் பவானிசாகர் ஆற்றில் அணை கட்டும் பொழுது குருநாதர் வாக்கில் குறிப்பிட்ட அந்த அரசன் சென்று தவம் இருந்த இடம் ஆற்றுக் கொண்டிருக்கின்றது அங்கு பழங்கால ஆலயம் இருந்திருக்கின்றது பவானிசாகர் ஆற்றில் நீர்வரத்து குறையும் பொழுது அந்த ஆலயம் வெளியே தெரியும் அணையில் நீர் நிரம்பி இருந்தால் இந்த கோயிலும் மூழ்கி இருக்கும்.

1950 ஆம் ஆண்டு வாக்கில் பவானிசாகர் ஆற்றில் அணைகட்டும் பொழுது பழைய ஆலயத்தில் உள்ள இறை மூர்த்தங்களை எடுத்துக் கொண்டு வந்து ஊருக்குள் கோயில் கட்டியுள்ளனர்.

தற்போது திரு சோமசேகர குருக்கள் என்பவரும் அவருடைய மகன் திரு கௌரிசங்கர் என்பவரும் அந்த ஆலயத்திற்கு நித்ய பூஜைகள் கைங்கரியங்கள் செய்து வருகின்றனர் அவர்களால் முடிந்தவரை.

குருநாதர் அகத்திய பெருமான் இந்த வாக்கில் யான் இங்கு இருக்கின்றேன் அப்பா ஆனாலும் கண்டுகொள்ள யாருமே இல்லையப்பா என்று வாக்கில் கூறியிருந்தார். இதற்கு என்ன அர்த்தம் என்றால் சில பூஜைகள் கைங்கரியங்கள் செய்வதற்கு ஒரு சரியான வசதி வாய்ப்பு இல்லாத காரணம் ஒன்று சோமேஸ்வரர் மங்களாம்பிகை அபிஷேக பூஜை கூட சில சமயம் சிரமமாக இருக்கின்றது.

குருநாதர் நமக்கு ஒரு உத்தரவு போல பழைய கோயில்கள் பாழடைந்த கோவில்கள் எத்தனையோ இருக்கின்றது அதையெல்லாம் கண்டு கொள்ள யாரும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதனால் பக்தர்கள் அடியவர்கள் இப்படிப்பட்ட ஆலயங்களுக்கு நித்திய பூஜைகள் நடைபெறுவதற்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

கோயில் முகவரி

கோட்டை கோயில்
அருள்மிகு வீரபத்திர சோமேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயில். பவானிசாகர் சத்தியமங்கலம் வட்டம் ஈரோடு மாவட்டம்

S. சோம சேகர குருக்கள்

தொடர்பு எண்
9965021281.
S. கௌரி சங்கர்
9942522818
State Bank of India
GOWRI SHANKAR  S
Account number
67362084197
IFSC code. SBIN0071197
SATHYAMANGALAM BRANCH
9942522818 gpay number.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. மிக்க நன்றிகள் ஐயா...கண்டிப்பாக கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு...பூஜை செய்வதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்...வழிகாட்டியதற்கு மிக்க நன்றிகள் பல...🙏🙏🙏...இப்பதிவு மூலமாக குருநாதரை இங்கே கோயிலில் தரிசிக்க செல்வது மனம் நிறைவாக உள்ளது...

    ReplyDelete
  2. Thank you Sir for the information.

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. I donated in May and June. I will try to donate on every month with the blessings of my parents.
    Thank you.

    ReplyDelete