18/6/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்.பல்லாலேஷ்வர் கணபதி மந்திர். ராய்காட் மாவட்டம் பாலி மகாராஷ்டிரா
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அனைத்து இடத்திலும் கூட என்னுடைய ஆசிகள் கிடைத்து!!!!!
ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் கணபதியின் அருளும் கிட்ட கிட்ட அப்பனே நிச்சயம் நினைத்த காரியங்கள் அப்பனே நிறைவேறும் என்பேன் அப்பனே கணபதி கொடுப்பான் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே நல்விதமாக கர்மம் சேராமலே கொடுப்பான் என்பதுதான் நிச்சயம் அப்பனே நல்விதமாகவே!!
இதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
ஞானங்கள் வேண்டும் ஞானங்கள் வேண்டும் என்றெல்லாம் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள் அப்பனே
ஆனாலும் எப்படி ஞானங்கள் பெற முடியும்??? என்பேன் அப்பனே !!!
தேடி அலைந்து அப்பனே அலைந்து அப்பனே கடைசியில் நின்று விட்டால் அப்பனே அப்பொழுதுதான் புரியும்!!!
தேடினேன் தேடினேன் எங்கெல்லாம் தேடினேன் இறைவனை !!! கிட்டவில்லை ஆனால் கடைசியில் பார்த்தால் உன் மனதிலே தங்கி விடுவான் அப்பனே இதுதான் ஞானம் என்பேன் அப்பனே!!!
அப்பனே பல பேர்கள் இருக்கும் இடத்திலே இறைவன் வருவான் வருவான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே
நிச்சயம் வரமாட்டான் என்பேன் அப்பனே
எதை என்றும் அறிய அறிய அப்பன தேடி அலைந்து திரிந்து அப்பனே இறைவன் என்ன எதை என்று அறிய அறிய அப்பனே முட்டாள் இல்லை என்பேன் அப்பனே
ஏன் எதற்காக அப்பனே இன்னொரு முறையும் இதைத்தான் அகத்தியன் செப்புகின்றான் என்று அப்பனே நீங்களும் நினைத்து விடலாம்
ஆனாலும் அப்பனே ஓர் தொழில் வேண்டும் என்றால் ஓடோடி ஓடோடி உழைத்து உழைத்து அப்பனே பணம் சம்பாதித்து பணம் சம்பாதித்து ஆனாலும் அப்பனே அதன் மூலமே உடம்பில் கூட நோய்கள் அப்பனே!!! அவ் பணம் அப்படியே நோய்களாக போய்விடுகின்றது அப்பனே
எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் அப்பனே ஒரு பெண் வேண்டுமென்றாலும் அப்பனே இதையெல்லாம் ஏற்கனவே யான் உரைத்து விட்டேன் அப்பனே
ஆனால் தேடி தேடி அலைகின்றீர்கள் என்பேன் அப்பனே
ஆனால் பணத்திற்காக தேடித் தேடி அலைகின்றீர்கள் அப்பனே
ஆனால் இறைவனை பார்க்க நேரமில்லையா ????? அப்பனே !!!!
அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே
அனைத்தும் வேண்டுகின்றீர்கள் அனைத்தும் வேண்டும் என்கின்றீர்கள்... ஆனால் அப்பனே இறைவனை தேடி அலைகின்றீர்களா??????
அலை!!! அலை!! அலைந்து திரிந்தால்தான் அப்பனே எங்கும் மனிதன் அப்பனே இறைவனை தேடி அலைந்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே
அப்படி அலைந்தால்தான் அப்பனே நிச்சயம் ஞானங்கள் கிடைக்கும் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அப்பனே பணங்கள் வேண்டும் என்றால் நீ உழைக்கின்றாய் அல்லவா அப்பனே தெரிந்து கொள் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே
இதனால் அனைத்திற்கும் காரணம் உழைப்பு!!!
இதையே காரணமாக காட்டி அப்பனே சொல்லிக் கொண்டே தான் வருகின்றேன் அப்பனே வாக்குகள் எதன் மூலம் என்று கூட அப்பனே
அதனால் அமைதியாக இருப்பவனை ஓரிடத்திலேயே இருப்பவனை பின் இறைவன் கூட பார்த்து அப்பா நீ அங்கேயே இருந்து விடு!!!!!
உன்னால் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று!!!
அங்கேயே உட்கார்ந்து விடுவான் அப்பனே ஏதோ உண்ணுவது எவை என்று அறிய அறிய ஏதோ பொய் சொல்வது நடிப்பது நாடகம் ஆடுவது.... அவ்வளவுதான் வாழ்க்கை அங்கேயே போய் விடுகின்றது..
மீண்டும் பிறப்பான் வந்து!!!
மீண்டும் அதே போல தான் செய்து கொண்டிருப்பான் அப்பனே!!!
இவையெல்லாம் ஒரு வேலையா?? அப்பனே !!
தெரிந்துகொள் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அதனால் நீ அமைதியாக இருந்தால் அப்பனே கிரகங்களும் கூட அமைதியாக இருந்து விடும் அப்பனே செப்பி விட்டேன் அப்பனே
நீ முயன்றால் அப்பனே கிரகங்களும் அப்பனே இவந்தனக்கு எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட சில சோதனைகளை கொடுத்து முன்னோக்கி செல்ல விடும் என்பேன் அப்பனே!!!!
ஆனால் அதில் தான் மனிதன் தோல்வியடைகின்றான் அப்பனே
எதை என்றும் அறிய அறிய அப்பனே முன்னோக்கி சில கஷ்டங்கள் படும்பொழுது கிரகங்களும் சில கஷ்டங்களை கொடுக்கும் ஆனால் பின் இறைவன் இல்லை என்று மனிதன் நிலைமைக்கு வந்து விட்டு மீண்டும் இப்படியே வேண்டாம் என்பதைக் கூட எவை என்று அறிய அறிய இறைவன் இல்லை.... எவ்வளவு கஷ்டங்கள் பட்டோம் என்று நினைக்கும் பொழுது தான் கிரகங்களும் பின்வாங்கி விடுகின்றன அப்பனே
அப்பொழுது எப்படியப்பா ?? வெற்றி உண்டாகும் ???
அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே
மனிதன் அப்பனே அதாவது உன்னிடத்திலே திறமைகள் இருக்கின்றன அப்பனே அதை சரியாக பயன்படுத்த தெரியவில்லை அப்பனே
உன்னிடத்திலே இறைவன் இருக்கின்றான் அப்பனே அதை சரியாக பயன்படுத்த தெரியவில்லை அப்பனே
எவை என்றும் அறிய அறிய அப்பனே ஒரு அணுவானது எதை என்று அறிய அறிய அப்பனே சரியாகவே இரு கண்களில் இருக்குமப்பா!!!
இதை நிச்சயம் யான் அறிந்தேன் அப்பனே
இவைதன் நோக்க நோக்க அப்பனே எதை நோக்கி இவைதன் போய்க் கொண்டிருக்கின்றதோ அதனாலே கர்மங்கள் சேருமப்பா!!!!
ஈர்க்கும் அப்பா கண்களாலே!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் இறைவனை நோக்கி நோக்கி சென்றால் அப்பனே அதன் சக்தி ஈர்க்கும் அப்பா இரண்டு கண்களில் உள்ள அணுவானது!!!
அப்பனே நீ எதை நோக்குகின்றாயோ அதனால் இறைவனை நோக்கி சென்று கொண்டே இருந்தால் இறைவன் சக்திகள் உன்னுள் வரும் என்பேன் அப்பனே
அனைத்து மாயத்திரைகளும் கிழிந்து விடும் என்பேன் அப்பனே
தூய்மை பெறலாம் அப்பனே
இறைவன் ஆசிகள் சக்திகள் கிடைக்கும் என்பேன் அப்பனே
இது போலத்தான் அப்பனே தொழிலும் கூட
நீ தேடி தேடி அலைந்தால் நிச்சயம் கிடைக்கும் என்பேன் அப்பனே ஆனால் அது அங்கங்கு உள்ள கர்மாக்களை எல்லாம் திரும்பவும் ஈர்க்கும் என்பேன் அப்பனே
திரும்பவும் அப்பனே கடைசியில் நோய்கள் ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் பணத்தை சம்பாதித்தாய் அல்லவா அவ் பணம் எதை என்று அறிய அறிய மீண்டும் அங்கே போய்விடும் நோய்களாக
அப்பனே அதாவது பெண்ணை தேடி போகின்றாய் அப்பனே கண்களால் பார்க்கின்றாய் அல்லவா அப்பனே எதை என்று அவ் அணுவானது அதையே ஈர்க்கும்!!! ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி!!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து ஈர்க்கும் என்பேன் அப்பனே
அதனாலே அப்பனே தோல்விகள் வருத்தங்கள் என்பேன் அப்பனே
இதுதான் உண்மை அப்பா
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
உங்களுக்கு மகனோ மகளோ இருக்கின்றார்கள் எப்பொழுதும் கண்களால் பார்க்கின்றீர்கள் பாசங்களை பொழிகின்றீர்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே அதுவும் ஈர்க்கும் அப்பா அவ் அணுவானது இரண்டு கண்களில் அப்பனே
ஆனால் கடைசியில் பார்த்தால் அவர்களாலே உங்களுக்கு தொல்லைகள் அப்பா
அப்பனே எதிலிருந்து தொல்லைகள் வருகின்றது என்று பார்த்தால் அப்பனே மனிதனின் இன்னும் குணங்கள் மாறவில்லை அப்பனே உன்னாலே அனைத்தும் உருவாகின்றது அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அணுக்கள் சேர்ந்து சேர்ந்து அப்பனே எங்கிருந்து எவை என்று அறிய அறிய பின்பு மாற்றிக் கொண்டே இருக்கின்றாய் நீ அப்பனே
இதனால் உன் அணுக்கள் மற்றவை எவை என்று கூட எங்கு சென்றாலும் உன் புத்தி தான் வரும் அப்பா
அதனால்தான் ஒரு பழமொழியும் உண்டு அப்பனே
நீ எதை செய்கின்றாயோ நிச்சயம் அவை தான் நடக்கும் அப்பனே அவை மீறி ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே!!!
இதையும் மீறி முதல்வன் இறைவன் இருக்கின்றான் அப்பனே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே தண்டனை கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே
அதனால் நீ என்ன நிலைமையில் இருக்கின்றாயோ அதற்கு நீயே தான் காரணம் சொல்லி விட்டேன் அப்பனே
இன்னும் வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓரோர் பெண்ணும் ஓரோர் ஆணும் என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றார்கள் என்பதை வருங்காலங்களில் நிச்சயம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே
சொல்லிவிட்டேன் அப்பனே
ஆனால் யான் செய்யவில்லை... யான் தப்புகள் செய்யவில்லை யான் உத்தமன் என்று கூட அப்பனே நிச்சயம் சொன்னால் அங்கேயே மிதிப்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
யார் எதை என்று அறிய அறிய நிச்சயம் அகத்தியனிடம் அதாவது நாடகம் ஆடாதீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு எல்லைக்கு தான் அப்பனே யானும் எதை என்று அறிய அறிய
நீ எவ்வளவு தப்புக்கள் செய்திருக்கின்றாய் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே
ஏன் என்னையே நம்பிக் கொண்டிருப்பவர்கள் கூட எவ்வளவு தப்புகள் செய்திருக்கின்றார்கள் என்பதை கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய
என்னை கேட்டாயா ??? அப்பனே பெண்களைப் பற்றியும் கூட சுகங்கள் வேண்டும் என்று அப்பனே
மனைவியை விட்டுவிட்டு அப்பனே பிறர் மனைவியை விரும்புதல் அப்பனே...
அப்பனே பின் பொறாமை கொள்ளுதல் அப்பனே இன்னும் என்னென்ன விஷயங்கள்
என்னை கேட்டுத்தான் செய்தாயா??? என்ன ?? அப்பனே!!!!
மீண்டும் கஷ்டங்கள் வந்தால் என்னை கேட்பதா?? அப்பனே
எவ்வாறு நியாயம் அப்பனே!!
நீ என்னென்ன தவறுகள் செய்கின்றாய் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் யான் சொல்லிவிட்டேன் அப்பனே
உன் மூளையில் எதை என்று அறிய அறிய அப்பனே அணுவானது சரியாக தங்கி உள்ளது என்பேன் அப்பனே எவை என்று கூட அது சத்தியமாய் அப்பனே சேமித்து வைத்துக் கொண்டே தான் இருக்கின்றது அப்பனே அதன்படியே தான் நீ உயர்வும் தாழ்வும் ஏற்படும் என்பேன் அப்பனே
அதை மீறி ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே
அதனால் வாழ்க்கை தத்துவத்தை புரிந்தவனே உத்தமன்
அப்படி வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ளாவிடில் தரித்தரன் அப்பனே
நீ தரித்திரனாக இருந்து கொள்ள விரும்புகின்றாயா? இல்லை உத்தமனாக இருக்க பின் விருப்பப்படுகின்றாயா??
அப்பனே கேளுங்கள் அப்பனே ஞானங்கள் அப்பனே யான் தருகின்றேன் ஒரு நொடியில் எந்தனுக்கு அனைத்தும் தர தெரியும் ஆனால் அப்பனே நீங்கள் அதிகமாக அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனால் அதை சரியாக பயன்படுத்த உங்களுக்கு தெரியாது அப்பனே
அதனால் நீங்களும் அழிந்து விட்டு உங்கள் குடும்பங்களையும் அழித்துவிட்டு பிள்ளைகளையும் அழித்துவிட்டு சென்று விடுவீர்கள் அப்பனே
அதனால்தான் ஒவ்வொன்றும் இவ்அகத்தியன் யோசித்து யோசித்து தான் கொடுப்பான்
அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
எந்தனுக்கு பணங்கள் வேண்டும் இன்னும் என்னென்ன வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே நடக்காது அப்பனே எதை என்றும் அறிய அறிய
என்னை நம்பி விட்டால் அப்பனே யான் தான் கொடுப்பேன்!!! கர்மா நிலைக்கு எடுத்துச் செல்ல மாட்டேன் இது சத்தியம் சத்தியம் அப்பனே
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் இது அனைவருக்குமே பொருந்தும் என்பேன் அப்பனே
எதை என்று அறிய அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் இன்னும் பணங்கள் அதிலிருந்து இவை வருகின்றதா இதிலிருந்து அவை வருகின்றதா இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே
என்னை நம்பி வந்தால் அப்பனே முதலில் ஞானத்தை கொடுப்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஞானத்தை கொடுத்தால் தான் அதன் மூலம் வெற்றி கொள்ள முடியும் என்பேன் அப்பனே
பின்பு அனைத்தையும் கொடுத்துவிட்டு அப்பனே ஞானத்தை கொடுக்கவில்லை என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய தோல்வியில் முடிந்துவிடும் அப்பனே
உன் நிலைமைக்கு நீயே காரணமாகி விடுவாய், நீயும் காரணமாகி விட்டு அப்பனே உன் பிள்ளைகளையும் காரணமாகி விட்டு உன் மனைவியையும் கூட அப்படிய கீழ்தரமாக எடுத்துச் சென்று விடுவாய் அப்பனே கர்மத்தில் சேர்த்து விடுவாய் என்பேன் அப்பனே
எதை என்றும் அறிந்து அறிந்து மீண்டும் மீண்டும் பிறப்புக்கள் எடுத்து எடுத்து வந்து அப்பனே பிரயோஜனம் இல்லை அப்பனே
அதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே குருவை நம்புகின்றீர்கள் அப்பனே நீங்கள் என்றால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய யானே கொடுப்பேன் அப்பனே அவ்வளவுதான்
அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நீங்கள் எங்கு எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்திருந்தால் யானே உங்கள் கைகளை பிடித்து அழைத்துச் சென்று எங்கெங்கோ விட்டு இருப்பேன் அப்பனே
அப்பனே பொய்களப்பா பொய்கள்
சுவடிகளை வைத்துக்கொண்டு அதை செய் இதை செய் இவ் மந்திரங்கள் சொல் என்பதெல்லாம் பொய்களப்பா.
முதலில் உன்னை நீ உணர் அப்பனே உன்னை நீ உணரா முடியாவிட்டால் அப்பனே ஏதும் நடக்கப் போவதில்லை அப்பனே
சொல்லிவிட்டேன் அப்பனே
நோய்களையும் கூட குணப்படுத்த முடியாது அப்பனே வரும் கலியுகத்தில் அப்பனே சொல்லிவிட்டேன்
எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் தான் என்பதை கூட துன்பங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே அழிவுகள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே
அதனால் அப்பனே ஒழுங்காகவே சரியாகவே இருப்பது அப்பனே இறைவன் கொடுத்தான் என்று நடந்து சென்று கொண்டே இருங்கள் அப்பனே நடை பாதையிலும் கூட புண்ணியங்கள் ஏதோ ஒரு ரூபத்தில் யாங்கள் செய்ய வைப்போம் அப்பனே
இதனால் பொய் கூறாதீர்கள் அப்பனே வருத்தப்படாதீர்கள் அப்பனே
அவனவன் கர்ம வினைக்கு ஏற்பவே அவனவன் தண்டனைகள் பெற்றுக் கொண்டே இருக்கின்றான் அப்பனே
அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே....
நலமாகவே இவ் கணபதியின் ஆசிகளும் அப்பனே ஏன் எதற்காக அப்பனே எவை என்றும் அறிய அறிய... ஓரிடத்தில் பிள்ளையோனுக்கு இருக்க தெரியாதா ???? என்ன அப்பனே???
எங்கெங்கு ?? இருக்கின்றான் அப்பனே தெரியுமா ?? அப்பனே
ஆனால் மனிதன் என்னவோ ஓர் இடத்திலே இருந்து கொண்டு ஞானம் வேண்டுமாம்!?!?!?!?!?!?!?!?!
முட்டாள் மனிதன் தரித்திர மனிதன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
அதனால் எவை என்று அறிய அறிய பிள்ளையோன் எங்கெங்கோ இருக்கின்றான் அப்பனே
ஆனால் மனிதனுக்கு பின் ஞானங்கள் வேண்டுமாம் !?!?!?!?!?!?!!!
ரிஷிகள் பட்டம் வேண்டுமாம்!?!?!?!?!?!!!!!!!
சித்தர்கள் பட்டம் வேண்டுமாம்!?!?!?!?!?!?!!?
அப்பனே காரி துப்பி விடுவேன் அப்பனே
நிச்சயம் கிடைக்காது அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!
ஆனால் பொய்கள் அப்பனே அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்று அப்பனே
நம்பி விடாதீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் கர்மா நிலைக்கு அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன்
அப்பனே எதை என்று கூட நம்பி விடாதீர்கள் அப்பனே உன்னை நீ நம்பு அப்பனே யான் வருகின்றேன் அப்பனே
உன் மனதில் குடி கொண்டு அனைத்தும் செய்து விடுகின்றேன் அப்பனே
அதனால் அங்கே அப்படி சொல்கின்றார்கள் இங்கே இப்படி சொல்கின்றார்கள் எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஒழுங்காக அப்பனே பின் அனைவரும் கூட்டு பிரார்த்தனை இவை எல்லாம் உதவாது உதவாது உதவாது
அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
ஏன் ஈசன் அப்பனே ஓரிடத்தில் இருக்க தெரியாதா என்ன
அப்பனே அண்ணாமலை இன்னும் அப்பனே கேதார் (நாத்) இன்னும் காசி அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன் அவந்தனுக்கு அண்ணாமலையிலேயே இருக்கத் தெரியாதா என்ன???????
அப்பனே இறைவனே அப்படி!!!
ஆனால் மனிதன் ஓரிடத்தில் இருந்து கொண்டு ஞானம் வேண்டுமாம் !?!?!?!?!! அப்பனே????????????
எப்படியப்பா கிடைக்கும்? அப்பனே????????
புத்திகள் இல்லையப்பா அறிவுகளே இல்லையப்பா
அதனால்தான் இறைவன் மனிதனிடத்தில் கொடுத்து விட்டால் பின் அழித்து விடுவான் என்பது தெரியும் அதனால்தான் கொடுப்பதே இல்லை அப்பனே
அதனால் யாரிடத்தில் என்ன என்ன தகுதி உள்ளது என்பதை ஆராய்ந்து தான் இறைவன் கொடுப்பான் அப்பனே
நிச்சயம் அதனால் அவன் பெரியவன் ஆகிவிட்டானே என்று புறம் கூறுவது தவறு தவறு!!!
அப்பனே அவ்வாறு பின் அவன் எதை என்று கூட இப்படியே குறை கூறிக் கொண்டிருந்தால் அப்பனே அக்குறையானது உந்தனுக்கு வரும்பொழுது நீ இன்னும் கீழே சென்று விடுவாய், அப்பனே
தெரிந்து கொள்...
அன்பு மகன்களே வேண்டாம் அப்பனே எதை என்று அறிய அறிய அகத்தியனுக்கு கோபம் வராது!!! வந்துவிட்டால் அப்பனே அனைத்தையும் நொறுக்கி விட்டு சென்று விடுவேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
என் பக்தர்கள் ஆயினும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே வரும் காலங்களில் இன்னும் வாக்குகள் உரைக்கப் போகின்றேன் அப்பனே
முதலில் மூட நம்பிக்கையை ஒழியுங்கள் ஒழியுங்கள் அப்பனே அப்பொழுதுதான் இறைவன் காட்சி தருவான் அப்பனே அப்பொழுதுதான் ஞானத்தை பெற முடியும் அப்பனே
அப்படி இல்லை என்றால் எங்கு சென்றாலும் அப்பனே தரித்திரம் தான் அப்பா உங்களால் ஒன்றும் செய்ய முடியாது அப்பனே
இறைவனை வணங்கினேனே இறைவனை வணங்கினேனே இவை செய்தேனே அவை செய்தேனே என்றெல்லாம் அப்பனே நீங்கள் பிதற்றிக் கொள்ளத்தான் வேண்டும் அப்பனே!!!
முதலில் உண்மை நிலையை அறியுங்கள் நிச்சயம் என் வாக்குகள் வரும் காலங்களில் யானே எடுத்துச் செல்வேன் அப்பனே எங்கெங்கு செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் அப்பனே!!!
முதலில் திருந்துங்கள் திருந்துங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே ஏன் எதற்காக என்னிடத்தில் வருபவர்கள் எல்லாம் இனிமேல் அப்பனே பதிலடி கொடுப்பேன் நீ இந்த தவறு செய்திருக்கின்றாய் சொல்லிவிடுகிறேன் அப்பனே அதனால் அப்படியே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே
எதை என்றும் அறிய அறிய யோசித்து கேளுங்கள் அப்பனே பெண்களைக் கெடுப்பது இன்னும் எதை என்றும் அறிய அறிய ஏமாற்றுவது அப்பனே இன்னும் எதையெதையோ செய்து கொண்டு தான் என்னிடத்தில் வருகின்றீர்கள் அப்பனே
அவையெல்லாம் வரும் காலங்களில் விளக்கமாக எடுத்துரைப்பேன் அப்பனே அப்பொழுது தெரிந்து கொள்வீர்கள் உந்தனுக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை!??? ஏன் உந்தனுக்கு பிள்ளைகள் பிறக்கவில்லை???
ஏன் எதற்காக என்பவை எல்லாம் யான் நிச்சயம் ஆணித்தரமாக சொல்வேன் அப்பனே இன்னும் ஏராளமான சித்தர்களும் சொல்வார்களப்பா
உண்மை நிலைகளை சொல்லிவிட்டால் அப்பனே அமைதியாகி விடுவான் அவ்வளவுதான்
அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் என்னிடத்தில் வருபவர்கள் கூட அப்பனே நிச்சயம் நேர்மையாக வாருங்கள் அப்பனே போதுமானது
யான் மாற்றி விடுவேன் !!
ஒரு நொடியில் மாற்ற முடியுமப்பா உன் விதியை!!
ஏன் மாற்ற முடியவில்லை? அப்பனே நீ செய்த தரித்திரங்கள் உந்தனுக்கு அனைத்தும் கொடுத்தாலும் அதை வைத்துக் கொண்டு வாழ தெரியாதப்பா தெரியாது
அப்பனே நீயும் கர்மத்தை நோக்கி செல்வாய் மற்றவர்களையும் இழுப்பாய் அப்பனே அதனால் தான் யோசித்து யோசித்து அகத்தியன் அப்பனே
அகத்தியன் கொடுத்தால் அப்பனே என்றைக்கும் அழியாது அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
ஆனால் யாருக்கும் கொடுக்கப் போவதில்லை என்பேன் அப்பனே
யாருக்கு தகுதி இருக்கின்றதோ அவர்களுக்குத்தான் கொடுப்பேன் அப்பனே
இன்னும் வாக்குகள் பரப்புகின்றேன் ஆசிகள் நலன்கள் நலன்கள்!!!
பல்லாலேஷ்வர் கோவில் விநாயகப் பெருமானின் எட்டு "அஷ்டவிநாயகர்" கோவில்களில் ஒன்றாகும். இது ராய்காட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள பாலி கிராமத்தில் அமைந்துள்ளது. இது சரஸ்கட் கோட்டை மற்றும் அம்பா நதிக்கு அருகில் அமைந்துள்ளது.
பல்லாலேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதற்கு முன் துண்டி விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும். இது ஒரு பாரம்பரியம்.
பாகுல் சாலை, பாலி, ராய்காட்-மகாராஷ்டிரா - 410205 (அஷ்விநாயக க்ஷேத்ரா, பாலி கிராமத்திற்கு அருகில்)
திறந்திருக்கும் நேரங்கள்: காலை 5:00 - இரவு 10:30
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மிக்க நன்றிகள் ஐயா
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக, நன்றி இறைவா 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete