​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 31 May 2024

சித்தன் அருள் - 1617 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


ஐயனே நமஸ்காரங்கள்!!!!

மாறிவரும் கால சூழ்நிலையில் மனிதர்கள் ஆகிய எங்கள் உடம்பில் சத்துக் குறைபாடு ஏற்படுகின்றது குறிப்பாக விட்டமின் B12 குறைவாகவே உள்ளது நாங்கள் எந்த உணவை உண்டால் இந்த விட்டமின் சக்தி கிடைக்கும்???

ஏனென்றால் ஆங்கில மருத்துவர்கள் விட்டமின் பி12 இந்த சக்தி கிடைப்பதற்கு மீனிலிருந்து கிடைக்கும் மீன் எண்ணெய் மருந்தை பரிந்துரை செய்கின்றார்கள்

ஜீவ காருண்ய முறையில் வாழும் நாங்கள் என்ன செய்வது???

அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் அப்பனே பின் சூரிய ஒளியில் இருந்து வரும் அப்பனே எதை என்று அறிய அறிய சக்தி அப்பனே எண்ணிலடங்காதது அப்பனே!!!!

(அதிகாலை வேளையிலும் மாலை வேளையிலும் சூரிய ஒளியில் நாம் இருந்தால் உடலுக்கு தேவையான விட்டமின் சக்திகளை பெற முடியும்)

ஐயனே ஆனால் சூரிய வெளிச்சத்தில் இருந்து விட்டமின் டி3 தான் கிடைக்கின்றது விட்டமின் பி12 விட்டமின் டி3 இவை சூரிய வெளிச்சம் இல்லாமல் ஏதாவது மூலிகை ஏதாவது தாவரத்தில் கிடைக்கின்றதா????

அப்பனே நிச்சயம் எதை என்றும் புரிய புரிய... இதுவரை யான் சொல்லிக் சொல்லிக் கொண்டிருந்தது என்ன அப்பனே!!!! அனைத்தும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே மீண்டும் இதைத்தான் கேட்கின்றீர்கள் அப்பனே!!!

கீரை வகைகளை உட்கொள்ள உட்கொள்ள அப்பனே உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்குமப்பா!!!

என்னென்ன மூலிகைகள் உண்ண வேண்டும் என்பதை யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே

ஐயனே உடலில் எலும்புகள் எலும்புகள் பலம் பெறுவதற்கு அதாவது கால்சியம் சக்தி பெறுவதற்கு சிறிதளவு சுண்ணாம்பை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்கின்றார்கள் அதன்படி செய்யலாமா????

எதை என்று அறிய அறிய அப்பனே அதனுடன் வெற்றிலை அப்பனே எவை என்று கூட பாக்கு என்கின்றார்களே இதை தன் அனுதினமும் உபயோகித்துக்கொள் போதுமானது என்பேன்!!!!

ஐயனே!!! வெற்றிலை பாக்கையை மென்றால் தடிமன் ஆகிவிடுகிறது சிறிது நேரத்திற்கு !!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய  புரிய அப்படித்தான் ஆகும்!!!

(வெற்றிலை பாக்கு இவை மென்னும் பொழுது சிறிது நேரத்திற்கு வாய் அப்படித்தான் இருக்கும்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments: