​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 1 June 2024

சித்தன் அருள் - 1618 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!








சூரத் சத்சங்கம் பாகம் 8

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

சூரத் சத்சங்க நிகழ்வில் நம் குருநாதர் அகத்திய பெருமானிடம் நான்கைந்து அடியவர்கள் தங்களுடைய குழந்தைகள் அவர்களுக்கு படிப்பு எதிர்வரும் பரீட்சைகள் மற்றும் எப்படி தயார் செய்வது என்பது குறித்து குருநாதரிடம் தனித்தனியாக கேட்ட பொழுது குருநாதர் அனைவருக்கும் கல்வி பயிலும் குழந்தைகள் அனைவருக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் குருநாதர் உபதேசம் செய்து நல்வாக்குகள் தந்தருளினார்!!!!

பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பு சம்பந்தமாக குருநாதரிடம் உபதேசம் கேட்ட பொழுது நம் குருநாதர் இதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்!!!!

அப்பனே எவை என்று அறிய அறிய யான் சொல்கின்றேன் அப்பனே அனைவருக்குமே!!!!

எதை என்று அறிய அறிய இப்பொழுது யான் சொல்லியதை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்
முதலில் அதிகாலையில் 3:00 மணி அளவில் பிள்ளைகளை எழச் சொல்லுங்கள்!!!

யார் ஒருவன் அப்பனே அதாவது பின் மூன்று மணி அளவில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஓதுகின்றானோ அவன் வெற்றியாளாக சத்தியமாக வருவானப்பா!!! இதை அனைவருக்கும் தெரிவித்துவிடு அப்பனே!!!!!!

பின் அனைவருக்கும் இறைவன் நன்றாகத்தான் கொடுத்திருக்கின்றான்!!!! ஆனாலும் அம்மையே அப்பனே பின் வளர்ப்பதில் தாய் தந்தையர் இவர்களும் தவறு செய்கின்றார்கள் அப்பனே இவை எவை என்றும் அறிய அறிய பல புத்தகங்கள் கூட எழுதி எதை என்று கூட பிரம்ம முகூர்த்தத்தில் யார் ஒருவன் எழுந்து பின் படித்துக் கொண்டிருக்கின்றானோ அவந்தனுக்கு இறைவனே ஆசிகள் கொடுத்து உயர் நிலைகள் அடைவார்கள் அம்மா!!!

இதை நிச்சயம் உங்கள் பிள்ளைகளுக்கு கற்பியுங்கள்!!!

பின் எதை என்று அறிய அறிய உங்கள் பிள்ளைகள் அதாவது பின் அனைவருமே பிள்ளைகள் நன்றாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள் ஆனால் எவை என்று அறிய புரிந்து கொள்ளுங்கள்!!!

பிள்ளைகளும் தவறு செய்கின்றார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எந்த பிள்ளைகள் தாய் தந்தையரை மதித்து ஒழுக்கமாக நடந்து வருகின்றார்களோ இளம் வயதிலிருந்தே ஒழுக்கத்துடன் நடந்து வந்தால் அப்பனே!!!! சரஸ்வதி தேவியின் அருளும் எதையென்று கூற பரிபூரணமாக கிட்டும் அப்பனே!!!

பிள்ளைகள் இவ்வாறு ஒழுங்கில்லாமல் நடந்து கொண்டால் அப்பனே எதை என்று கூட சரஸ்வதி தேவியின் அருளும் கிடைக்காமல் போய் அப்பிள்ளைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டு அப்பனே மேற்கொண்டு படிக்க முடியாமல் போய் விடும் என்பேன்  அப்பனே!!!!

பெற்றோர்கள் தம் தன் பிள்ளைகளை ஒழுக்கமாக கவனித்து வளர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

அப்பனே அனுதினமும் நல்விதமாகவே பிள்ளைகளுக்கு கீரை வகைகளை கொடுத்து வளர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!! யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே

நல்விதமாக நெல்லிக்கனியையும் அடிக்கடி பின் வல்லாரை எனும் மூலிகையையும் அப்பனே பின் பொன்னாங்கண்ணி என்னும் மூலிகையையும் கூட கொடுத்துக்கொண்டு வரவேண்டும் அப்பனே

நல்விதமாகவே அமையும் என்பேன் அப்பனே அதுமட்டுமில்லாமல் அப்பனே அதிகாலையிலே பின் நல் முறைகளாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து வேப்பிலை எனும் அப்பனே இலைகளை கூட சூடேற்றி அதாவது எண்ணெயில் இட்டு சூடேற்றி நல் முறைகளாகவே அப்பனே பின் தலைக்கு எவை என்று அறிய அறிய அப்பனே சிறிதளவு தேய்த்து வரவேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய... அதுமட்டுமில்லாமல் அப்பனே நன் முறைகளாகவே தேய்த்து அப்பனே பின் நீராட நீராட இன்னும் இன்னும் மாற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே நலன்களாகவே இதை செய்திட்டு வந்தாலே போதும் அப்பா!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. சிறந்த பதிவு...மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  2. இறைவா நன்றி

    ReplyDelete
  3. நன்றி இறைவா, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete