அகிலத்தை காக்கின்ற ஐயனே போற்றி போற்றி அகஸ்திய குருவே போற்றி போற்றி!!!!
ஐயனே!!!!!
பெண்களுக்கு இயற்க்கையாக மாதம் தோறும் நடைபெறும் மாதவிலக்கு சரியாக ஆவதில்லை!!! அப்படி ஆனாலும் வயிற்றிலும் உதிரப்போக்கிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றது உடலில் ரத்த ஓட்டமும் சரியாக இருப்பதில்லை அதீத சோர்வும் ஏற்படுகின்றது! இதற்கு குருநாதர் தீர்வு தாருங்கள்!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே பல வகையான இயற்கை உணவுகளை உட்கொண்டாலே போதுமானதப்பா!!!!!
ஏனென்றால் அப்பனே செயற்கையை இவ்வுலகத்தில் உட்கொண்டு!!! உட்கொண்டு!!! அப்பனே எவை என்று புரிய புரிய அதனால் நிச்சயம் அப்பனே பல வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் அப்பனே மூலிகைகள் என்னென்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி ஏற்கனவே யான் உரைத்து விட்டேன் அப்பனே!!!!
அப்பனே மாதுளை என்கின்றார்களே அப்பனே அனுதினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பனே!!!! மணத்தக்காளி!! பொன்னாங்கண்ணி!!! கரிசலாங்கண்ணி!! முருங்கை!!! எதையென்று கூட ஏற்கனவே உரைத்திட்டேன் அப்பனே....(அருகம்புல் சாறு நெல்லிக்காய் சாறு வில்வம் துளசி சாறு வகைகள்)
எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே அதிகாலையிலே அப்பனே நல்விதமாக மூச்சுப் பயிற்சியை செய்து வர வேண்டும் அப்பனே.
அதுமட்டுமில்லாமல் அப்பனே பின் நல் முறைகளாகவே அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆலமரம் இன்னும் அரசமரம் வேப்பமரம் இவைதனை அப்பனே அடிக்கடி சுற்றிவர சுற்றிவர அப்பனே நல் அப்பனே எதை என்று கூற அதாவது காற்று நல் காற்று அப்பனே உள்ளே போக (சுவாசிக்க)...
அப்பனே இன்று எல்லாம் நல் காற்றுகள் இல்லை அப்பா!!!
இவையெல்லாம் (பெண்கள் உடல் பிரச்சினைகள்) ஏன் வருகின்றது என்றால் அப்பனே பின் நல் சுவாசம் இல்லையப்பா!!!!
ஆனாலும் அப்பனே சில உடம்பு ஏற்றுக்கொள்ளும் சில உடம்புகள் ஏற்றுக்கொள்ளாதப்பா!!!
எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே செயற்கையான உணவுகளை நிச்சயம் உட்கொள்ள கூடாதப்பா!!!
எவை என்று கூட இவையெல்லாம் ஏற்காது அப்பா!!
இதனால் அப்பனே இதனால் தான் பிரச்சனைகள் அப்பா
மூச்சுப் பயிற்சிகள் செய்தாலே அப்பனே பல வகையிலும் கூட நன்மைகள் ஏற்படும் என்பேன் அப்பனே.. நல்வகையான அப்பனே கீரை வகைகளை உட்கொண்டாலே போதுமானதப்பா!!!
அப்பனே நல் முறைகளாகவே அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் கற்றாழை எனும் மூலிகையை எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது பாலில் அப்பனே எதை என்று அறிய அறிய இவைகளில் இருந்து கடைசியாக பிரித்தெடுக்கும் பொருளைக் (மோர்) கூட அதில் இட்டு!!!
(சோற்றுக் கற்றாழையை நன்றாக சுத்தம் செய்து துண்டு துண்டுகளாக வெட்டி மோரில் கலந்து அரைத்தோ அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கலந்தோ குடித்து வரவேண்டும்)
இவை தன் நிச்சயம் அப்பனே பின் அருந்தி வர சிறப்பு!!! எவை என்று கூட அப்பனே சிறிதளவிலே நீங்கும் அப்பனே எவை என்று புரிய புரிய... இதனால் அப்பனே இவற்றுக்கெல்லாம் இன்னும் இன்னும் காரணங்கள் உண்டு!!!! யான் சொல்லியதை செய்முறையாக கடைப்பிடித்து வந்தாலே அப்பனே மாற்றங்கள் உண்டு அப்பனே!!!!
(தற்போதைய சமய காலகட்டத்தில் உணவே மருந்து மருந்தே உணவாக இருந்த நம்முடைய உணவு கலாச்சாரம் மேற்கத்திய ஆணியை கடைப்பிடித்து உணவு பழக்கத்தை மாற்றி இயற்கை உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தி எதை எதையோ கொண்டு வருகின்றோம் இதனால் தான் நம் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது!!! மிளகு, சீரகம், மஞ்சள் ,கீரை வகைகள் சுத்தமான எண்ணெய் வகைகள் முளைகட்டிய தானியங்கள் என இருந்த உணவு முறை என்று நாகரீகம் என்ற பெயரால் செயற்கையை நாடி நாடி மனித இனத்திற்கு பல விதமான நோய்களையும் உடலில் ஹார்மோன்கள் பிரச்சனையையும் ஏற்படுத்தி மனித குலம் நோயோடு நிரந்தரமாக இருக்கும்படி செய்து விட்டது இதை அனைவரும் உணர்ந்து மீண்டும் இயற்கை பாதைக்கு திரும்ப வேண்டும் இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும்)
(ஆலமரம் அரசமரம் வேப்பமரம் இன்று முன்பெல்லாம் வீட்டை சுற்றிலும் மூலிகை மரங்கள் மூலிகைச் செடி கொடி வகைகள் இருந்தது ஆனால் இன்றைய யுகத்தில்!!! நாகரீகம் அழகு என்பதன் பின்னால் சென்று மூலிகை செடிகளை அழித்துவிட்டு செயற்கை பூச்செடிகளை வளர்ப்பது மரங்களை எல்லாம் விட்டுவிட்டு காங்கிரீட் காடுகளாக மாற்றி விட்டு அசுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்!!!!
நம் குருநாதருடைய வாக்குகளில் ஒன்றை இந்த இடத்தில் குறிப்பிடுகின்றோம்!!!
இங்கு இயற்கையும் இறைவனும் ஒன்றுதான்!!
இயற்கையை எந்த அளவிற்கு நேசித்து அதை போற்றி பாதுகாக்கின்றோமோ அந்த அளவிற்கு இயற்கை நம்மை பாதுகாத்து நம்மை வழி நடத்தும்!!!
ஏற்கனவே திருவனந்தபுரத்தில் நடந்த சத் சங்கத்தில் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் மூலிகை மரங்களை ஒரு அடியவருக்கு நட்டு வளர்க்க சொல்லி வாக்குகள் தந்திருந்தார் அது மட்டுமில்லாமல் அம்பாஜி சக்தி பீடம் ஆலய வாக்கில்
(சித்தன் அருள் 1613)
காற்றை தூய்மையாக்க வேண்டும் அனைவரும் மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும் என்று உத்தரவு இட்டு உள்ளார்
முடிந்தவரை விதைகளை சேகரித்து மூலிகை மரங்கள் மூலிகைச் செடிகள் இவற்றை வளர்த்து பராமரித்து வந்தாலே வரும் தலைமுறையினர் குருநாதருடைய வழிகாட்டுதல் படி நோயின்றி வாழும் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்!!!
இந்த கடமை நம் அனைவரிடத்திலும் இருக்கின்றது நாம் அனைவரும் அகத்தியர் பக்தர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து மூலிகை செடிகளை வளர்ப்பது மூலிகை மரங்களை வளர்ப்பது இதை செய்து வந்தாலே குருநாதருடைய அன்பிற்கு நாம் பாத்திரம் ஆக முடியும்)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete