​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 13 June 2024

சித்தன் அருள் - 1628 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!

 

பெங்களூர் வாக்குகள் குருநாதர் நல் உபதேசங்கள் 3

ஒரு பெண்மணி அகத்தியர் பக்தை தன் வீட்டிற்கு பூமி பூஜை செய்வதற்கு குருநாதரிடம் அனுமதி கேட்கும் பொழுது!!!

குருநாதர் 

அறிந்தும் எதை என்று அறிய அறிய தாராளமாக செய்யலாம்!!!!

குருவே எங்கள் வீட்டில்  குழந்தை மகளுக்கு ஒரு சுப நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வீட்டில் ஒரு இறப்பு நிகழ்ந்தது!!!

அதன் பிறகு பூமி பூஜையும் வீட்டு சுப நிகழ்ச்சி செய்வதற்கும் தடைகள் உள்ளது ... என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை 

நீங்கள் வழி காட்ட வேண்டும்!!!!

குருநாதர்!!! 

 அறிந்தும் கூட அம்மையே  இவை எல்லாம் கேட்கக்கூடாது என்பேன்!!!

எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய

பக்தி செலுத்து!!!! 

எதை என்றும் புரிய புரிய!!!

ஆனாலும் எவை என்று அறிய அறிய சில சில உயிரினங்களை கொல்லாதிருத்தல் அதிசிறப்பு!!!!!

(வீட்டில் அசைவ உணவு பழக்கத்தை நிறுத்த வேண்டும்!!! எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லக்கூடாது ஜீவகாருண்ய முறையில் வாழ வேண்டும்)

வீட்டில் கல்வியில் தொழிலில் தடை தாமதங்கள் தரித்திரங்கள் விலக வேண்டும் என்றால் அசைவத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்!!!

உயிர் பலியிடுவது ஒரு உயிரைக் கொண்டு தின்பது இதை நிறுத்தினால் வீட்டில் சுபிட்சங்கள் ஏற்படும்) 

தாயே அறிந்தும் எதை என்று அறிய அறிய அனைவரிடமே ஒன்றை கேட்கின்றேன்!!!

பின் வாயில்லா ஜீவராசிகள் இறந்தால் யாருமே கேள்வி கேட்பதில்லை !!!!!!

ஆனாலும் மனிதன் இறந்தால் மட்டும் பின் அவன் செத்து விட்டான் இவன் செத்து விட்டான் என்றெல்லாம் 

இது நியாயமா????

பின் அறிந்தும் கூட மனிதன் சுயநலத்திற்காகவே வாழ்பவன்!!!

சுயநலமில்லாமல் யார் எப்பொழுது வாழ்கின்றானோ அவன் உயர்ந்து நிற்பான்!!!

ஆனால் சுயநலம் இல்லாத மனிதன் இங்கு இல்லையப்பா!!!!

அப்பனே அறிந்தும் கூட அம்மையே!!!! எதை என்று அறிய அறிய எங்கள் வழியில் பின் வருபவர்களுக்கு அம்மையே... கஷ்டங்கள் அதிகம் தான். 

ஆனாலும் வந்துவிட்டால் சொர்க்கத்தை காட்டுவோம் யாங்கள்!!!!

ஆனால் இப்பொழுது மனிதர்கள் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவ்வளவுதான் விஷயம். 

நரகம் எவை என்று கூட சொர்க்கம்...

சொர்க்கம் என்பது என்னிடத்தில் (அகத்தியரிடத்தில்)

நரகம் என்பது மனிதரிடத்தில்.... அவ்வளவுதான் வாழ்க்கை. 

அறிந்தும் கூட இதனால் பின் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு பின் என்ன சொல்லியும் பிரயோஜனம் இல்லையே!!!!!

அறிந்தும் கூட அதனால் பின் நரகத்திலிருந்து யாங்கள் சொர்க்கத்தில் அழைக்க தயாராக இருக்கின்றோம்...

ஆனால் மனிதனோ யாங்கள் நரகத்தில் தான் இருப்போம் என்று நிச்சயம் பின் அழுது புலம்பி கொண்டிருக்கின்றான். 

பின் எப்படி தாயே??

யாராவது சொல்லுங்கள்!!

அப்பனே அறிந்தும் கூட இறந்த பிறகு சொர்க்கம் நரகம் என்று எண்ணுகின்றார்கள் மனிதர்கள் !!!ஆனாலும் அது தவறு என்பேன் அப்பனே

இப்பொழுது நரகத்தில் தான் இருக்கின்றான் மனிதன். 

அப்பனே அறிந்தும் கூட அப்பொழுது கஷ்டங்கள் வராமல் இருக்குமா??

யாராவது சொல்லுங்கள்!!!

ஏனென்றால் பின் உங்களுக்கு எதை என்றும் அறிய அறிய பின் என்னுடைய ஆசிகள் பலமுறையும் கொடுத்து விட்டேன் பின் பல பல திருத்தலங்களில் கூட உங்களை யானே ஆசிர்வதித்து விட்டேன். 

அதனால்தான் இதை யான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இப்பொழுது. 

பக்குவங்கள் பட்டுவிட்டால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அனைத்தையும் யான் சொல்லி விடுவேன்.

அதனால்தான். அப்பனே இதனால் எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய மூடர்கள் சொல்வார்கள்.... அவை இவை என்றெல்லாம் !!!.......

அனைத்தும் பொய்யப்பா !!!!

மொத்தத்தில் அப்பனே மனிதன் பின் எவை என்று அறிய அறிய நரகத்தில் தான் பிறக்கின்றான். 

அப்பொழுது நரகத்தில் பிறக்கின்ற பொழுது எப்படி அப்பா கஷ்டங்கள் வராமல் இருக்கும்??

சொல்லுங்கள்!!!

ஒரு அடியவர் குறுக்கிட்டு!!!!

ஐயனே அகத்தியப்பா நமஸ்காரங்கள் இந்த நரகத்திலிருந்து நாங்கள் விடுபட நீங்கள் தான் வழி காட்ட வேண்டும்!!!

அறிந்தும் கூட அப்பனே இவை யான் முதலிலேயே சொல்லிவிட்டேன் அப்பனே 

என் பின்னால் வா!!!! வா!!!!! என்று இழுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.... 

ஆனால் யாங்கள் நரகத்தில் தான் இருப்போம்!!!! நரகத்தில் இருப்பது தான் நல்லது என்று மனிதன் யோசித்துக் கொண்டிருக்கின்றானப்பா!!!

இப்படி இருக்கையில் எப்படியப்பா???

மற்றொரு அடியவர்!!!

குருவே நாங்கள் மனிதர்கள் மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். 

குருநாதர்!!!

அப்பனே அறிந்தும் கூட மாயை என்று சொல்லாதே அப்பனே பின் நரகம் என்று சொல்!!!

ஒரு பெண் அடியவர்...

என்னுடைய பெண்ணிற்கு சில லட்சணங்களில் குறைவு உள்ளது !!!! குறிப்பாக கூந்தல் இழப்பு உடலும் சில சரும பிரச்சனைகள் உள்ளது ஐயனே கருணை காட்டி தீர்வு தாருங்கள்!!!

அம்மையே எதை என்றும் அறிய அறிய நிச்சயம் இவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் செயற்கை உணவை மேற்கொள்வதால் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவை தன் பின் உடலில் சேர்ந்து விட்டது .

(செயற்கை உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்து விடும்)

ஆனாலும் அதை யான் சிறிது சிறிதாக அகற்றுகின்றேன்... இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள சொல்!!!!போதுமானது!!!!

அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஏதாவது பின் செயற்கை எவை என்றும் அறிய அறிய உடம்பில் இருந்தால் நிச்சயம் அவை தன் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய சில சிலவற்றைக் கூட பின் கெடுத்து விடும் என்பேன். 

(Side effects)

அவை மட்டும் இல்லாமல் எதை என்றும் அறிய அறிய அம்மையே எவை என்று அறிய அறிய எதை என்றும் புரியப் புரிய !!!!

(சில செய்வினை கோளாறினாலும் பாதிப்புகள் அதிலிருந்தும் குருநாதர் மீட்டு எடுத்து விட்டார்)

அறிந்தும் கூட ஆனாலும் பின் மீட்டெடுத்தேன் யான்!!! 


கவலை விடு யான் பார்த்துக் கொள்கின்றேன் தாயே....இவை என்னிடத்தில் விட்டுவிடு.

தாயே!!!! அறிந்தும் ஆனாலும் மனிதன் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!

அதனால்தான் எங்களுக்கே கஷ்டமாக இருக்கின்றது.

மனிதனுடைய வினைகள் பொல்லாதவை. 

இப்பொழுது சொன்னானே!!! மாயை என்பது அறிந்தும் கூட பின் மனிதன் நினைப்பதெல்லாம் மாயை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. வணக்கம் இறந்த பிறகு சொர்க்கம் & நரகம் இல்லையென்று கூறுகிறார்.ஆனால் கருட புராணத்தில் சொர்க்கம் & நரகம் பற்றி விரிவாக எடுத்துரைத்து உள்ளது.மேலும் புராண இதிகாசங்களிலும் மற்றும் அபூர்வமாக இறந்து பின் பிழைத்து வந்த எத்தனையோ மானிடர்கள் மேலும் புண்ணிய ஆன்மாக்கள் எல்லாம் சொர்க்கம் நரகம் பற்றி விரிவாக எடுத்துரைத்து உள்ளனர் ஆனால் நாடியில் குறிப்பிடுவதைப் பார்த்தால்.........🤷🧘

    ReplyDelete
  2. இறைவா நன்றி! அகத்தியா நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete